Tag Archives: பேரினவாதம்

உதயன் மீதான தாக்குதல் : ஐக்கிய தேசியக் கட்சியும் கண்டனம்

uthayan1இன்று அதிகாலை யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாத மூவர் கொண்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விடுத்துள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
சாந்தி, சமாதானம் ஏற்படுத்தும் தமிழ்-சிங்கள புதுவருடம் பிறக்கவுள்ள நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை யாழ், உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த சிலர் அதன் அச்சுயந்திரத்திற்கு துப்பாக்கிச்சூடு நடாத்தி, கட்டடத்திற்கு தீ வைத்துள்ளனர்.
இது சிறுகுணம் படைத்தவர்கள் செய்த செயல் இது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த தாக்குதலில் முழு பொறுப்பையும் மகிந்த ராஜபக்ச அரசு பொறுப்பேற்க வேண்டும்.
புலிகளை ஒழித்தது போன்று அரச தீவிரவாதத்தை தோற்கடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
குறுகிய காலத்தில் உதயன் பத்திரிகை மீது நடாத்தப்படும் 4வது தாக்குதல் இதுவாகும். இவ்வாறு திஸ்ஸ அத்தநாயக்கவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் மற்றொரு பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை அரச இராணுவத் துணைக்குழுக்கள் ஊடாக குறைந்தபட்ச ஜனநாயாக உரிமைகளையும் சிதைக்கும் நிலைக்கு இலங்கை அரச அதிகாரம் வளர்ச்சியடந்துள்ளமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல ஜே.வி.பி, மற்றும் அதன் பிளவுற்று குழுவின் உறுப்பினர்கள் அனைவருமே பிரதான பாத்திரம் வகித்துள்ளனர்..

இலங்கை தேசிய கீதம்: இழந்து போன வசந்தத்தின் குறியீடு : T.சௌந்தர்

ananda1இலங்கை பாராளுமன்றத்தில் இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியுடன் தமிழையும் இணைக்க வாசுதேவ நாணயக்காராவால் கொண்டு வரப்பட்ட கோரிக்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயால் நிராகரிக்கப்பட்டது.

“ஒரு நாட்டின் தேசிய கீதம் எனபது ஒரு மொழியில் தான் பாடப்படுகிறது .இரு மொழியில் பாடப்படும் ஒரு நாட்டைத் தமக்குக் காட்டும்படி ” கேட்டு நாணயக்காராவின் “நாணய”த்தையும் பரிசோதித்திருக்கிறார். ஜனாதிபதி கேட்ட கேள்விக்கு நாணயக்காரா என்ன பதிலி றுத்தார் என்பது எந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை.அல்லது பதிலளிக்க முடியாத நாணயக்காரா , ஜனாதிபதியின் உள்நோக்கத்தை அறிந்து ” நாணயமாக ” பதிலளிக்காமல் விட்டாரா என்பதை “பத்திரிகாதர்மத்திடம்” விட்டு விடுவோம்.

ஒரு நாட்டின் தேசிய கீதம் என்பது எல்லா நாடுகளிலும் ஒரு மொழியில் மட்டும் தான் பாடப் படுகிறதா ? இல்லை என்ற பதில் சொல்லி பல நாடுகளை உதாரணம் காட்டலாம் .

சுவிஸ் ,கனடா ,தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றன.

ஒரு நாட்டின் இன , மத நல்லிணக்கத்தை அரசே ஏற்ப்படுத்த வேண்டும்.ஆனால் வலிந்து ஒரு மொழியை நீக்குவது பல்லின மக்களிடையே முரண்பாடுகளை வளர்க்கவே உதவும்.ஆட்சியாளர்களின் நோக்கம் அதுவே என்பதை சமீபத்திய சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.அதில் ஒரு அங்கமாகவே தேசிய கீத விவகாரம் பயன்பட்டுள்ளது.ஆனால் இந்த தேசிய கீதம் பிறந்த பொழுதிலிருந்து பல நெருக்கடிகளை சந்தித்ததுடன் அரசியல்வாதிகளின் தலையீடுகளால் தொந்தரவுக்கும் ஆளாகியே வந்துள்ளது.

அவர்களின் அளவுக்கதிகமான தலையீடு இலங்கை தேசிய கீதத்தை எழுதிய இசைக்கலைஞரான ஆனந்த சமரக்கோன் [ 13.01.1911 – 05.04.1962 ] அவர்களின் மரணத்திற்கும் காரணமாகியது.

” நமோ நமோ மாதா ” என்று ஆனந்த சமரக்கோன் எழுதிய வரிகள் ” ந ” என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் நாட்டிற்கே துரதிஸ்டம்,அமங்கலம் என்ற சாஸ்த்திர நம்பிக்கையின் அடிப்படையில் ” நமோ ” என்பதற்குப் பதிலாக ” ஸ்ரீ லங்கா மாதா “என்று ஆனந்த சமரக்கோன் அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே மாற்றினார்கள்…இந்த சம்பவம் அவரது மரணத்திற்கும் காரணமாகியது எனலாம்.

இதனால் மனமுடைந்த அவர் அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரைகளை உட் கொண்டு மரணமடைந்தார்.இறப்பதற்கு முன் அவர் டட்லி சேனாநாயக்காவுக்கு எழுதிய கடிதத்தில்

” என்னுடைய குரலை நசுக்கி விட்டார்கள்.என்னுடைய மரணம் மட்டுமே என் வேதனையைப் போக்கும் ” என்று எழுதினார்.

” அரசும் ,அரசு சார்ந்த பண்டிதர்களும் சமரக்கோனைக் கொன்று விட்டார்கள் ” என்று சிங்களப் பத்திரிகைகள் எழுதின.

ஆனந்த சமரக்கோன் எழுதிய இலங்கைத் தேசிய கீதம் எந்த இனத்தையும் புகழாலாமல் ,இனவாத கருத்துக்களை விதைக்காமல் எழுதப்பட்டமை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.சாந்திநிகேதனம் என்கிற தாகூரின் கலை கல்லூரியில் கலை பயின்ற ஆனந்த சமரகோனிடம் தாகூரின் தாக்கம் இருந்தது.

தாகூரின் ” ஜன கண மன ” என்ற இந்திய தேசிய கீதத்தின் சாயல் இலங்கை தேசிய கீதத்தில் கடுமையாகத் தெரிவதை நாம் காணலாம்.எனினும் இந்திய தேசிய கீதத்தை விட இனிமையானது இலங்கைத் தேசிய கீதம் என்பது மறுக்க முடியாத உணமையாகும்.

இந்தியாவெங்கும் ஒலிக்ககூடிய ராகமான பிலகரி ராகத்தில் இந்திய தேசிய கீதத்தை தாகூர் அமைத்தார்.வட இந்தியாவில் இந்த ராகத்தை பிலவால் என்று அழைப்பர்.தமிழ் செவ்வியல் இசையில் இந்த ராகம் [ பிலகரி ] வசந்த காலத்திற்கு உரிய ராகமாக போற்றப்படுகின்றது.இருந்தாலும் வங்காள நாட்டுப்புற இசையிலும் மிக அதிகமான அளவில் பயன்படுகின்ற ராகம் என்பதால் தான் தாகூர் இதைப் பயன்படுத்தியிருக்கின்றார்.

tagoreவசந்தத்தை எதிர் பார்க்கும் ஒரு வறிய குடும்பத்தின் கதையைச் சொன்ன சத்யஜித்ரே அவர்களின் படமான ” பாதர் பாஞ்சாலி ” என்ற கிராமிய படத்தின் பிரதான இசையாக [Theme Music ] இந்த பிலகரி ராகத்தையே , பல் வேறு சூழ் நிலைகளுக்குப் பொருத்தமாக அந்த படத்தின் இசையமைப்பாளர் இசைமேதை ரவிசங்கர் அமைத்திருப்பார்.

தமிழ் படத்திலும் இந்த ராகத்தின் ரீங்காரத்தை , கிராமப்புற அழகின் பின்னணியில் புல்லாங்குழல் இசையாக கவிக்குயில் படத்தில் இளையராஜா பயன்படுத்தியிருப்பார்.

தெலுங்கு விவசாயிகளின் அவல நிலையைஉண்மையாகப் படம் பிடித்துக்க் காட்டிய படமான ” மாபூமி “[ 1979 ] [எங்க நிலம் ] என்ற கிராமிய படத்தில் Title பாடலான ” பல்லே தூரி பில்ல காடா ” என்ற சோகம் ததும்பும் பாடலும் பிலகரி ராகத்திலேயே அமைக்கப்பட்டது.அந்த படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான Goutam Ghosh என்பவர் வங்காளத்தைச் சேர்ந்தவர்.

இனிமையும் ,சோகமும் ,அழகும் ததும்பும் ஓர் அருமையான ராகத்தில் அமைந்த இனிய இசை கொண்டது இலங்கை தேசிய கீதம்.

இன்று தமிழ் மக்களின் இழந்து போன வசந்தத்தின் குறியீடாக இலங்கையின் தேசிய கீதமும் அமைந்து விட்டது.

பொதுபல சேனாவிற்கு எதிராக நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம்

bothupalaகோத்தாபய ராஜபக்சவினால் இலங்கை அரசின் முழு ஆதரவோடு உருவாக்கப்பட்டுள்ள பௌத்த துறவிகளின் நாஸி அமைப்பான பொதுபல சேனா என்ற அமைப்பிற்கு எதிராக நாளை 12.05.2013 அன்று இரவு கொழும்பு 5 ஹவலக் வீதியில் அமைந்துள்ள சிறீ சம்புதாத்வ ஜெயந்தி சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சிங்கள முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளர்கள் அனுப்பிவைத்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேவையேற்படும் போது இன வன்முறையை தோற்றுவிக்கும் நோக்கோடு பொதுபல சேனா என்ற நாஸி அமைப்பை இலங்கை அரசு பின்னணியில் நின்று நடத்திவருகிறது.

இலங்கையின் இன உணர்வின் தொடர்ந்த நீடிப்பு:குமாரி ஜெயவர்த்தனா

kumariகட்டுரையாளரின் கருத்துக்கள் இனியொருவின் கருத்துக்கள் அல்ல! இக் கட்டுரை    ETHNIC  AND CLASS  CONFLICTS  IN  SRI LANKA என்ற ஆங்கில நுhலின்  தமிழாக்கமான “இலங்கையின் இன வர்க்க முரண்பாடுகள் ” என்ற நுhலிருந்து   விவாத நோக்கில் மீள் பதிவு செய்யப்படுகின்றது.

இலங்கையில் 1983 ஜுலையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலையின்போது சிங்களவரிடையே உள்ள பரந்த மனப்பான்மை உள்ளவர் அப்பயங்கர கொடுமைகள் கண்டு குற்ற உணர்வும் வெட்கமும் அடைந்தனர். சில அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மகளிர் குழுக்களும் சமய இயக்கங்களும் மனித உரிமை இயக்கங்களும் இப்பயங்கரச் செயலைக் கண்டு வெட்கமும் துக்கமும் அடைந்தனர். பிஷப் லக்ஸ்மன்  விக்கிரமசிங்கா  மட்டுமே சிங்கள மக்கள் அனைவரினதும் குற்ற உணர்வை ஓர் உணர்வு பூர்வ கடிதம் மூலம் தெரிவித்தார். அக்கடிதம் பரவலான விளம்பரம் பெற்றது. இவ்வாரம்ப நடவடிக்கையைத் தொடர்ந்து பல்வேறு உயர்மட்டங்களிலும் அண்மைய வருடங்களில் வளர்ந்து வரும் இன வன்முறைக்குரிய காரணங்களை விபரித்தனர். அத்தோடு வர்க்க உணர்வின் வீழ்ச்சி பற்றியும் இனவுணர்வின் மேலாதிக்கம் எல்லா வர்க்கத்தினரிடையேயும் வளர்ந்திருப்பது பற்றியும் பலரிடையே பேசப்பட்டு வந்தது.

1883- 1983 வரலாற்றுக் காலகட்டத்தில் இனமுரண்பாடு காரணமாக சிங்கள பௌத்தர்களிடையே ஏற்பட்ட வன்முறை பற்றி ஆராயும் முயற்சியே இதுவாகும். முன்னைய   ஆய்வுகளில் கூறப்பட்டபடி இக்காலகட்டத்தில் சிங்கள பௌத்தர்களின் கருத்தியல் தவறான நினைவட்டல்களில்  திரித்துக் கூறப்பட்டுள்ளது.

அவற்றின் முக்கிய அம்சங்களை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:

1.   வரலாற்று பணிக்காகத் தேர்ந்த மக்கள் தாமே எனவும் பண்டைய           சிறப்புக்களைக் கொண்ட இனத்தவர் எனவும் தம்மைக் கூறிக்கொண்டமை.

2.   சிங்களவர் இப்பிரதேசத்தில் சிறுபான்மையினர் பூகோளப் பரப்பில் இங்கு மட்டுமே வாழ்பவர். அதற்கும்  ஆபத்து வந்துள்ளது எனவும் எண்ணக் கொண்டனர்.

3.   சிங்களவர் நீண்டகாலமாகவே கிராமியப் பொருளாதாரத்தில் தாம் சாதாரண விவசாய உற்பத்தியாளர் எனவும் பூமியின் மைந்தர் எனவும் உண்மையான மதம் , ஒழுக்கம் ,சமாதானத்திலும் நம்பிக்கையுடையவர் எனவும் பிற இனத்தவர் பல்வேறு விதமாக ஒடுக்கவும் சுரண்டவும் இடமளித்த அப்பாவிகள் எனவும் தன்னுணர்வு கொண்டமை.

4.   சிங்களவர் அல்லாதவரும் பௌத்தரல்லாதவரும் எதிரிகள் என்ற பார்வை பிறர் இரத்தத்திலும் மதத்திலும் அந்நியர் , தந்திரசாலிகள் , பேராசையான உலோபிகள் , எல்லாத் துறைகளிலும் அதர்ம முறையில் போட்டியிடுவோர் , அப்பாவி சிங்கள மக்களின் வேலை வாய்ப்புக்கள் , வாணிபம் , கல்வி வாய்ப்புக்களை பறித்தெடுப்போர் என்ற பார்வை.

மேற்கூறப்பட்ட சில அம்சங்கள் வழமையான கூக்குரல்களே ஆயினும் இப்பொய்மையான கருத்துக்கள் பல்வேறு தவறான விளக்கங்களைப் பெற்று சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை நீதிப்படுத்தப் பயன்பட்டன. பல சிங்களவர் இவ்வினக்கலவரங்களை எதிர்பாராத நிகழ்வாகக் கண்ட போதும் சிறுபான்மையினரின் தீவிர எதிர்ப்புக்கு பெரும்பான்மை இனத்தவரின் பதில் நடவடிக்கை என சமாதானம் கூறினர். சிங்களவர் , முஸ்லிம்களிடையே 1915 இல் நடைபெற்ற கலவரம் பற்றி அனாகரிக தர்மபாலா கூறினார்.  அமைதியை விரும்பும் சிங்கள மக்கள் அந்நியர்களின் அவமதிப்பை இனிமேலும் பொறுக்கமுடியாது எனக் காட்டினார். நாடு முழுவதும் ஒரே நாளில் முஸ்லிம்களுக்கு எதிராக திரண்டெழுந்தனர். இதற்கு மேலாக சிங்களவர்களில் ஒரு பகுதியினர் இனப்போராட்டத்தை பண்டையப் போராட்டத்தின் தொடர்ச்சியாகக் கண்டனர். சிங்களவரும் தமிழரும் சரித்திர காலத்து எதிரிகள். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் சிங்கள தமிழரிடை ஏற்பட்ட அரசியல் போராட்டம் , சோழ படையெடுப்பை எதிர்த்த சிங்கள மன்னர்கள் அண்மைய பிரச்சாரத்தில் மீண்டும் உயிரூட்டப்பட்டு புகழப்பட்டனர். 1983 ஜுலைக்குப் பின்னர் சிங்கள கட்சிகளின் தலைவர்களும் குருமாரின் பல அங்கத்தவரும் விடுத்த அறிக்கைகள் இதற்கு சான்றாகும். சுருங்கக் கூறின் இவ்விளக்கம் தற்பாதுகாப்பு வன்முறையென நீதிப்படுத்துகின்றது.

kumari5தலைமறைவாகவும் நகரின் குடிசைப் பகுதிகளில் வாழும் குற்றவாளிகள் , கேடிகள் , உதிரிப்பாட்டாளிகள் (லும்பன்கள்) ஆகியோரே கலவரங்களுக்கு காரணமானவர்கள் என்பது தவறான நம்பிக்கையாகும்.இவர்கள் பரந்துபட்ட சிங்கள மக்களைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறப்பட்டது. தசாப்தங்களாக இலங்கையில் நடைபெற்ற கலவரங்களுக்கு இத்தகைய விளக்கங்கள் கூறப்பட்டன. 1915 இல் நடைபெற்ற கலவரம் கொழும்பிலுள்ள குற்றவாளிகள், பிறபகுதிகளில் வாழ்ந்து வரும் இத்தகையோர் சார்ந்த இயக்கமே கொடுமைகள் புரிந்தன என்று உத்தியோகத்தரால் கூறப்பட்டது. 1958ல் நடைபெற்ற கலவரம் குண்டர்களால் நடத்தப்பட்டது என்று பொலிசார் கூறினர். இவற்றைப் போலவே 1983 ஜுலையில் நடந்த தாக்குதல் குண்டர்களாலும் குற்றவாளிகளாலும் நடத்தப்பட்டது என்று கூறினர். இத்தகைய விளக்கங்களால் சிங்கள இனத்தவர் இக்கலவரத்திற்கு பொறுப்பில்லை. சட்ட ஒழுங்கை கடைப்பிடிக்காத சமூகவிரோதிகளே காரணம் என்றும் கூறினார்.

சதிச்செயல் என்ற கோட்பாடு.

முன் கூறியவை போன்று இனக்கலவரத்திற்கு காரணம் இடதுசாரிகளே எனக் குறை கூறி மற்றொரு வாதமும் வைக்கப்பட்டது. 1958 இலும் பின்னர் 1983 இலும் கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இடதுசாரி தீவிரவாதிகளால் (கிளர்ச்சியாளர்கள் , நக்சலைட்டுக்கள் , பயங்கரவாதிகள்) அரசை வன்முறையால் வீழ்த்துவதற்கு தூண்டிவிடப்பட்டனர் என்றும் கூறப்பட்டது. மேலும் 1958 கலவரம் சர்வதேச கம்யூனிச இடதுசாரி கூலிகளால் கிளப்பிவிடப்பட்டது போலவே 1983 இலும் நடைபெற்றது என்றனர். இனக்கலவரத்தின் நோக்கம் ஆளும் வர்க்கத்தின் நிலையை ஈடாட்டம் செய்வது என்ற முடிவுடன் இத்தகைய இனவன்முறை முரண்பாடுகளின் போது அரசிற்கு எதிராக சதி செய்யும் பல்வேறு கோட்பாடுகள் முன் வைக்கப்பட்டன. முதலாவது உலக யுத்த வேளையில் 1915 இல் நடைபெற்ற கலவரம் ஜெர்மனியரால் தூண்டிவிடப்பட்டதாக பிரித்தானியர் சந்தேகித்தனர். இலங்கையிலும் வெளிநாட்டுச் சக்திகள் 1983 ஜுலையில் இலங்கை அரசை நிலைகுலையச் செய்யமுயன்றதாகக் கூறப்பட்டது.

இத்தகைய தவறான விளக்கங்களை நாம் எளிதில் ஒதுக்கிவிடலாம். ஆனால் நாம் மேலாதிக்க வெறிக்கும் பலமான சமூக பொருளாதார காரணங்களுக்கும் காரணமான கருத்தியல் ரீதியான உட்பொருளைக் காணவேண்டும்.; அப்பொழுதே சென்ற நூறு ஆண்டுகள் காலமான இனமுரண்பாடுகளின் பின்னணி அமைப்பைப் புரிந்து கொள்ள முடியும். ஆயினும் இவ்வேளையில் சமூக பொருளாதார யதார்த்தங்களுடன் கருத்தியல்கள் இணைந்திருப்பதையும் கருத்தியல்கள் எவ்வாறு தானியங்கியாக நிலைபெற முடியுமென்பதையும் ஆராயமுடியும்.

சமூக பொருளாதார கருவிகள்

பொருளாதார சமூக பின்னணிப் பார்வை மூலம் இனவன்முறைக்கு முழுமையான விளக்கம் கூறமுடியாது. ஆயினும் இதுவே பிரச்னையை ஆராய்வதற்கு சில முக்கிய ஆதாரங்கள் தரமுடியும்.காலனித்துவ நவகாலனித்துவ சூழலில் உருவாகும் புறச்சூழலிலுள்ள நாடுகளில் முதலாளித்துவம் அதன் சமனற்ற அபிவிருத்தியும் பிற்போக்குத் தன்மையும் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை சீராக மாற்றமுடியாத தன்மையையும் ஆராய்வது இன முரண்பாட்டை நன்கு தெரிந்து கொள்வதற்கு உதவக்கூடிய முக்கிய அம்சங்களாகும். அத்துடன் ஒவ்வொரு வர்க்கத்தினதும் அரசியல் பொருளாதார உணர்வுகளையும் குறைபாடுகளோடு வர்க்க அமைப்பையும் புரிந்து கொள்வது அத்தியாவசியமாகும். இவர்கள் அரசியல் செல்வாக்கு பெறமுடியாது நிலைகளிலும் நாட்டுவளம் ஏற்றத்தாழ்வாக பகிர்ந்தளிக்கப்பட்ட சூழலிலும் உள்ளனர். இலங்கையின் காலனித்துவ காலத்திலும் பின்னரும் உள்ள பிரதான பிரச்னை,குறை அபிவிருத்தியும் நிலையற்ற பொருளாதாரமுமாகும். வறுமை ,குறைந்தவசதி  , துரிதவளர்ச்சியின்மை , வேலையில்லாத் திண்டாட்டம் , பணவீக்கம் ஆகியன சமூக அமைப்பை பல்வேறு வகையில் அச்சுறுத்திய யதார்த்த நிலைகளாகும். இந்நிலையால் பெரும்பகுதி மக்களுடைய அடிப்படைத் தேவைகளையும் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது. பொருளாதார பாதுகாப்பும் சமூக அந்தஸ்தும் மக்கள் தேவையைப்  பூர்த்தி செய்யமுடியாத நிலையில் வாய்ப்பற்ற மக்கள் முழுச்சமூக அமைப்பையும் எதிர்க்காது தமது துன்ப நிலைக்கு சிறுபான்மையினர் பெற்ற வாய்ப்புக்களே காரணமென்று உணர்ச்சி வசப்பட்டனர். பௌத்தர்களுக்கு வாய்ப்புக் கிட்டாமைக்கு கிறிஸ்தவர்களைக் குற்றம் சாட்டினர். சிங்கள கடைக்காரர் , வணிகர்,சிறுவியாபாரிகள் ஆகியோர் தமது தொல்லைகளுக்கு முஸ்லிம்களும் இந்திய போட்டியாளருமே காரணம் என்றனர். வங்கிக் கடனைப் பெறமுடியாத கஷ்டத்திற்கு செட்டியார்களையும் பட்டாணியர்களையும் குறைகூறி வெறுத்தனர். வேலை வாய்ப்பின்மைக்கு (குறிப்பாக பொருளாதாரமற்ற காலகட்டங்களில்) பெருந்தோட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் வேலை செய்த இந்தியத் தொழிலாளரை வெறுத்தனர். கல்விக்கும் கௌரவமான தொழில்களுக்கும் ஏற்பட்ட முரண்பாட்டு அடிப்படையில் இலங்கைத் தமிழர்களை எதிர்த்தனர். சகல விடயங்களிலும் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் ஏற்பட்ட வாய்ப்பின்மைக்கு சிங்கள மக்களின் சில வகுப்பினர் சிறுபான்மையினரையே கருங்காலிகளாகக் கண்டனர். இம்முறை பிரித்தானியருக்கும் சுதந்திரத்திற்கும் பின்னர் வந்த ஆட்சியாளருக்கும் பிரித்தாளும் கொள்கையை தொடர்வதற்கு இவ்வாறான கருத்துக்கள் எளிதாகப் பயன்பட்டது.

இத்தகைய பின்னணியில் இனக்கலவரத்திற்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்பட்டன. குடித்தொகையில் ஒரு பகுதியினரின் பொருளாதார சமூக அதிருப்தியினதும் விரக்தியினதும் வெளிப்பாடே இக்கலவரங்கள் என்றும் கூறப்பட்டது. இதற்கு மதம் அல்லது இனவேறுபாட்டு பிரச்சாரம் தூண்டிவிடப்பட்டது.

1915 ஆம் ஆண்டு கலவரத்தை ஆராயும் போது அது முற்றிலும் சமய சண்டையல்ல , பொருளாதார சீர்குலைவு , பண்டங்களின் விலையேற்றம் , அக்கால அரசியல் நிலை ஆகியவற்றின் பிரதிபலிப்பு என்றே கூறவேண்டும். இதே போலவே 1930 களில் நடைபெற்ற மலையாளி எதிர்ப்பியக்கத்திற்கு அவ்வேளை நிலவிய பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டமே காரணமாகும். 1983 ஜுலை கலவரத்திற்கும் இவ்வாறே சிலர் காரணம் கண்டனர்.1975-1980 காலகட்டத்தில் தனியார் பகுதியின் மெய்கூலி ஏறக்குறைய இரு மடங்காயிற்று. ஆனால் பணவீக்கத்தினால் 1980-1983 காலகட்டத்தில் நாலில் ஒரு பங்காக இது குறைந்தது. இந்நிலையில் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் திறந்தபொருளாதாரக் கொள்கையால் தமிழ் மக்களே பலன் பெறுகின்றனர் என ஆத்திரமுற்றனர். மேலும் அரசுப் பகுதியில் நுழைய முடியாது தடுக்கப்பட்ட தமிழர் தனியார் பகுதியில் நுழைந்து சுயவேலையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையால் நிலையான கூலி உழைப்போர் ,விலையேற்றத்தால் பாதிக்கப்படுவது போல சுயதொழில் செய்வோர் பாதிக்கப்படவில்லை.இவ் ஒப்பீடும் வேலை வாய்ப்பின்மையுமே சிங்கள மக்கள் 1983 இல் இனவன்முறைக்கு தூண்டிய ஒரு காரணியாக காணப்பட்டது.

1977 பின் ஏற்பட்ட இனக்கலவரம் பகைமை நிலை ஆகியவற்றுக்கு பொருளாதார முறையில் நியூட்டன் குணசிங்கா அவர்கள் விளக்கம் கூறும்போது திறந்த பொருளாதாரக் கொள்கை பல்வேறு குழுக்களையும் சமனற்ற நிலையில் முன்னேறச் செய்தது என்றார்.மேலும் இன அடிப்படையில் வளர்ச்சியும் தேய்வும் ஏற்பட்டதே இனப்பகை வெடித்ததற்குக் காரணமென்றார். இவ்வாய்வில் அரசால் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரம் திறந்த பொருளாதாரத்திற்கு மாறியதும் அமைப்பியல் மாற்றத்திற்கு வழிவிட்டது என்றார்.

முக்கியமானது என்னவென்றால்… பொருளாதாரத்தில் ஏற்பட்ட அமைப்பியல் மாற்றமாகும்… அத்தோடு பல்வேறு இன , மத , வகுப்புக்கள்  வெவ் வேறு சமூக மட்டத்தில் நின்று போட்டியிடுவதாகும். இப்போட்டா போட்டி கருத்தியல் நிலையில் அரசியல் ஆதரவும் அரசாங்கத்தின் தலையீடும் பெறுகிறது. இந்நிலையில் திடீர் என போட்டா போட்டி விதிகள் முறிவடைய வன்முறை வெளிப்படையாகத் தோன்றுகிறது (குணசிங்கா:1984)

இந்நிலையில் கலவரத்திற்கு காரணமானவர்கள் பட்டினத்தில் வாழும் நகர்ப்புற ஏழைகளும் லும்பன் பகுதியினருமாவார். இவர்கள் நாட்டின் அமைதியின்மையை பயன்படுத்தி தற்காலிக பயனடைபவர்களே. இவர்கள் தமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி , தெருவுக்கு வந்து முதலாளித்துவ சமூகததின் சட்ட ஒழுங்கு முறைகளை உடைத்து ஓரிரு நாள் தமது சட்டவிதிகளின்படி செயலாற்றுபவர்களே. செல்வர்கள் மேல் தமக்குள்ள சீற்றத்தைக் காட்டி பிறர் சொத்துக்களை தம்முடையதாக்குபவர் ஆவர். இந்நிலை தெற்கு ஆசியாவில் அடிக்கடி அதிகரித்து வரும் செயலாகும். ஏனெனில் இங்கேயே பணக்காரருக்கும் ஏழைக்குமிடையில் பெரும் இடைவெளி உள்ளது.வாய்ப்பு கிட்டாது , ஒதுக்கப்பட்ட பகுதியினர் வகுப்பு வாதப் பிரச்சாரத்தால் கொள்ளை அடிப்பதற்கு லைசென்சு வழங்குகின்றனர்.இக்காலகட்டங்களில் எதிரியாகக் காட்டப்பட்ட சிறுபான்மையினரைக் கொள்ளையடிக்கும் வாய்ப்பை ஏழைகள்  பயன்படுத்துகின்றனர். பாதிக்கப்படும் சிறுபான்மையினர் இந்தியாவில் முஸ்லிம் அல்லது சீக்கியராக இருக்கலாம் அல்லது இலங்கையில் தமிழர் அல்லது முஸ்லிம்களாக இருக்கலாம்.

சமூக பொருளாதார காரணிகளே இனமுரண்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன என பொதுவாக கூறப்பட்ட போதும் இனவன்முறை அளவில் கருத்தியலினுடைய பங்கு கவனத்திற் கொள்ளப்படவேண்டும். கருத்தியல் என்பதற்கு வரைவிலக்கணம் கூறுமிடத்து அவை ஒருங்கமைக்கப்பட்ட முக்கிய நம்பிக்கைகளும் குறியீடுகளும் ஆகும்.இவை ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் சமூக வாழ்வின் யதார்த்த சாரமாகும். சிங்கள  பௌத்தர்களின் நம்பிக்கைகளையும் குறியீடுகளையும் பண்டைய வரலாற்றுக் காலத்து சிங்கள பௌத்தர்களின் உணர்வுகள் ,பண்பாடுகளின் அமைப்பையும் வளர்ச்சியையும் அத்துடன் காலனித்துவ காலத்திற்கு பிற்பட்ட காலத்திற்கும் உள்ளவற்றை ஆராய்வது இலங்கையின் அண்மைய இனக் கலவரத்தைப் புரிந்து கொள்வதற்கு மிக முக்கிய அம்சங்களாகும்.

சிங்கள மக்களின் உணர்வின் கூற்றுக்களை காண்பதற்கு விழிப்பாக வரலாற்று ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வேளையே அவர்கள் சிந்தனையில் மறைத்திருக்கும் பொய்மை , தவறான விளக்கங்கள் , புராணிகப் போக்குகளை அம்பலப்படுத்த முடியும். ஆனால் பொய்மைக் கதைகளும் வரலாறும் ஒன்றையொன்று இறுகப் பிணைக்கப்பட்டுள்ளன. கல்வி கற்ற அறிஞர்கள் அண்மையில் இரண்டையும் பிரித்து இலங்கை வரலாறுக்கு விஞ்ஞான ஆராய்ச்சி வழங்க முற்பட்டபோது துரோகிகளாக, பிற்போக்காளர்களாலும் பழமை விரும்பிகளாலும் கண்டிக்கப்பட்டனர். இவர்கள் முதலாளித்துவ நலன் விரும்பிய வகுப்புவாத அரசியல்வாதிகளாக வரலாற்றை தவறாக தம் செயல்களை நீதிப்படுத்தப் பயன்படுத்துபவர்களாவர். (இனவாதமும் சமூக மாற்றமும் பார்க்க) , இந்நூல் பற்றி அக்டோபரிலிருந்து டிசம்பர் 1984 வரை ஞாயிறு ,திவைன  என்ற பிரபல இதழில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது.

இதேநிலையே அண்டைய நாடுகளின் அனுபவமாகவும் இருந்தது. இந்தியாவில் வரலாற்று அறிஞர்களான ரோமிலா தாப்பர் , எச் முக்கியா , பி சந்திரா ஆகியோர் இந்திய வரலாற்றுக்கு வகுப்புவாத விளக்கம் தருவதை எதிர்த்து பள்ளிப்பாட நூல்களைத் திருத்தி எழுதினர். அவ்வேளை இந்து வெறியர்களும் பழமை விரும்பிகளும் அவை முஸ்லிம்களையும் கம்யூனிஸ்டுகளையும் சார்ந்து எழுதப்பட்டதாக கூறி அப்பாட நூல்களை நீக்கும்படி பிரச்சாரம் செய்தனர். இதே போலவே தமிழ்நாட்டிலும் முற்போக்கான அறிஞர்கள் வரலாற்றுப் பொய்மைகளான பாண்டிய , சோழ ஆட்சிகளை புகழாரம் சூட்டியும் வீரச்செயலாக்கிய பொய்மைகளைக் களைந்தனர். (வரலாற்று உண்மைகளில் நின்று புராண இதிகாசத் தன்மையை பிரித்தல்): அத்தோடு திராவிட இயக்கத்தின் அடிப்படையை சமூகப் பொருளாதார ரீதியில் ஆராய்ந்தனர். இவர்கள் எதிரிகளாக கண்டிக்கப்பட்டனர். இலங்கையிலும் க. கைலாசபதி போன்ற தமிழறிஞர்கள் சங்க காலத்தை  “பொற்காலம்” எனக் கூறுவதை மறுத்தபோது பிரித்தானிய ஆட்சியை சார்ந்து சாதி மனோபாவமும் கொண்டு நின்ற ஆறுமுகநாவலர் போன்றோரை நலனாய்வு நோக்கில் க.சிவத்தம்பி மீளாய்வு செய்தபோதும் எதிர்ப்புக்கு உள்ளாகினர். ஆன்மீகத் தலைவர் நலனாய்வுக்கு அப்பாற்பட்டவர் என தமிழ் பண்டிதர்களின் கண்டனத்திற்கு உள்ளாகினர். இவ்வாறு இனவாதம் சிங்களவரோ  , தமிழரோ , பௌத்தரோ , இந்துவோ பழமையிலேயே ஊறி நிற்கிறது.

இத்தகைய ஆய்வு முறையும் புதுமை விளக்கங்களும் காலனித்துவ சுதந்திர காலகட்டங்களுக்கு விரிவாக்கப்பட வேண்டும்: பிரித்தாளும் ஏகாதிபத்திய தந்திரங்கள் மீளாயப்படவேண்டும்: ஆளும் வர்க்கங்கள் பரவலான ஆதரவு பெறுவதற்காக இனவேறுபாடுகளைப் பயன்படுத்தும் யுக்திகளும் மீளாயப்படவேண்டும். முரண்பாட்டின் கருத்தியல் மூலங்களை ஆராயும்போது கருத்தியலின் தன்னியக்கமும் உணர்வின் வடிவங்களும் பொருளாதார அடிப்படையோடு எவ்வாறு இணைந்துள்ளன என்பதும் விவாதத்திற்கு உரியதாகும்.  சிலரின் கூற்றுப்படி வேறுபாடு கருத்தியலின் ஒரு கூறாக காணப்படவேண்டும் என்பதாகும். இது பொருளாதார மாற்றத்திற்கு அப்பாற்பட்டதும் பழமையில் வேரூன்றியதும் என்கின்றனர் சிலர்.

ericதேசீயம், இன வேறுபாடுகள் ஆகிய சொற்கள் பற்றிய கோட்பாடுகள் மாக்ஸிய அறிஞர்களது கவனத்தை தற்போது ஈர்த்துள்ளது. மார்க்ஸினதும், லெனினதும் தேசீயம் பற்றிய ஆய்வுகள் இன்றைய நிலையில் போதிய விளக்கம் தருவன அல்ல என்கின்றனர். உதாரணமாக எரிக் ஹோப்ஸ்வம்  (ERIC  HOBSBAWM) பின்வருமாறு கூறுகின்றார் :

மார்க்ஸீஸ இயக்கங்கும், அரசுகளும் வடிவத்தில் மட்டுமல்ல சாரத்திலும் தேசியமாக மாறியுள்ளனர். அதாவது தேசியத் தன்மை.

பெனடிக் அன்டர்சன்  என்பவர் சோசலிசம் சாராத உலகத்தில் பொருளாதாரம் அல்லது கருத்தியல் பண்பாட்டு காரணிகளுக்கு ஒருவர் எத்தனை அழுத்தம் கண்டபோதும் இன, வர்க்க உணர்வுகளும் அவற்றிடையே ஏற்படும் பொருளாதார அரசியல் காரணங்களும் கருத்தியல்களும் ஆழமாக ஆராயப்படவேண்டும். முதலாளித்துவத்திற்கு முற்பட்ட காலத்துக்குரிய கருத்தியல்கள் சாதி , மத , இன வேறுபாடுகளின் அடிப்படையானது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் இவை மறைந்துவிடும் அல்லது குறைந்துவிடும் என்ற கருத்தும் கவனிக்கப்படவேண்டும்.அபிவிருத்தி அடையும் காலகட்டத்தில் இனவுணர்வு நிலை பெற்று மேலும் வளர்ச்சி அடைவதற்குரிய முக்கிய காரணத்தை அறிந்து கொள்ளவேண்டும். முதலாளித்துவ காலகட்டத்தில் நாட்டில் கல்வி ஊடுருவி நிற்கிறது. விஞ்ஞானம்,தொழிநுட்ப அறிவு பரவலாகி கோட்பாட்டளவில் பகுத்தறிவு பொருளாதாரத்தை மீறி நிற்கிறதா? இலங்கையிலுள்ள இடதுசாரிகள், பரந்துபட்ட தொழிலாளி வர்க்கம் பற்றி புரிந்து கொள்ளவேண்டியது ஒன்றுண்டு, அனைத்து இனங்களையும் சார்ந்த தொழிலாள வர்க்கத்தினர் ஐக்கியப்பட்டு தீவிர வர்க்கப் போராட்டத்திற்கு தலைமை தாங்குமளவில் வர்க்க உணர்வின் மட்டம் வளர்ந்தபோதும் இப்போதும் இனவேறுபாடுகளுக்கு ஏன் அடிமையாயினர்?

இனவேறுபாட்டில் மக்கள் பிரிவது தொழிலாள வர்க்கத்தின் நலனைச் சார்ந்ததல்ல. இனப்பகையை வளர்ப்பதும் வன்முறை வெடிப்புக்களும் முதலாளிகளுக்கும் நலன் தருவதில்லை. இன்றைய திறந்த பொருளாதார தேவைகளிலும் அவற்றின் வெற்றிகளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சி தருவதாகும். ஆனால் இதே திறந்த பொருளாதார கொள்கையின் பின்னால் நிற்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் சில பகுதியினரே இனவுணர்கை தூண்டி விடுதற்கு பொறுப்பானவர் மட்டுமல்ல, இனப்பிரச்னைக்கு அமைதியான தீர்வு காண்பதற்கும் எதிர்ப்பாக உள்ளனர்.இந்நிலையில் முதலாளி , பாட்டாளிகளான இருவர்க்கத்தவரும் இதே நிலையே பிரதிபலிப்பதாகக் கூறுகின்றனர். பழைய பல தேசங்கள் , ஒரு காலத்தில் ஒன்றிணைந்தவை தற்போது தமது எல்லைகளுக்குள்ளேBen Andersonயே பிற தேசீயங்கள் எதிர்ப்பதைக் காண்கின்றனர்- தேசீயங்கள் இயல்பாக வளர்ந்து ஒரு நல்ல நாளில் பிரிந்து செல்வதைக் கனவு காண்கின்றனர். உண்மையில் இத்தேசீய உணர்வு எமது கால அரசியல் வாழ்வில் உலகம் முழுவதும் மதிப்புப் பெறுவதை அன்டர்சன் காண்கிறார்.

தேசீயம் , இனவேறுபாடு பற்றி தற்போது நிலவும் பல்வேறு ஆய்வுகளின் குறைபாடு பற்றி அன்டர்சன் கூறும்வேளை தேசீயம் என்ற கோட்பாடு கற்பனையில் தோன்றிய அரசியல் சமூகம் என்றும் ஒருவரை ஒருவர் நன்று அறிந்த குடும்பம், குலக்குடி மாறுபட்டது என்றும் கூறினார்.

சிறிய தேசத்தில் வாழ்பவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கமாட்டார். நேரில் கண்டோ , கேட்டிருக்கமாட்டார் என்பதினாலலேயே கற்பனையானது ஆயினும் சிந்தையில் மட்டும் ஒரே சமூகத்தில் வாழ்பவர் என்ற படிவம் ஒவ்வொருவரது நினைவிலும் உள்ளது. உண்மையில் சமனின்மையும் சுரண்டலும் ஒவ்வொரு சமூகத்திலும் நிலவிய போதும் தோழமையாக வாழ்வதாக எண்ணிக் கொள்கின்றனர். இறுதியில் இத்தகைய சகோதரத்துவமே சென்ற இரண்டு நூற்றாண்டுகளிலும் பல கோடி மக்கள் இத்தகைய கற்பனையான எண்ணங்களுக்காக உயிரை விடுவதற்கு தூண்டியுள்ளது.

அன்டர்சன் மேலும் கூறினார்:

இத்தகைய மரணங்கள் தேசீயம் எழுப்பிய முக்கிய பிரச்னையை நேருக்கு நேராகக் கொண்டு வருகின்றது: அண்மைய வரலாற்றின் (இரு நூற்றாண்டுகளில்) சுருங்கிய கற்பனைகள் இத்தகைய மிகப் பெரிய தியாகங்கள் ஏற்படுத்துவதற்கு காரணம் என்ன?

இதற்குரிய விடை தேசீயத்தின் பண்பாட்டு வேர்களிலேயே ஆரம்பமாகின்றது என அன்டர்சன் நம்புகின்றார்.

(அன்டர்சன் 1983:15-16)

இனவுணர்வை தூண்டிவிடக்கூடிய பலம் பெற்றிருப்பது ஏன்?இவ்விரு வர்க்கத்தவரும் தமது வர்க்கப் பகையினையும் மறந்து ஒரு இனத்தவர் மற்றைய இனத்தவருடன் மோதுவது ஏன்? நாம் விடைகாணவேண்டிய அடிப்படை வினாக்கள் இவையாகும்.

இனவுணர்வு  வேறுபாடுகள் இலங்கைக்கு மட்டும் விசித்திரமானது என்று நாம் எண்ணிக் கொள்ளமுடியாது. இனமுரண்பாடுகள் காலத்திற்குக் காலம் இந்தியாவின் பல பகுதிகளில் வெடிக்கின்றனர். மலேசியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும் 1969 இல் மோசமான வகுப்பு கலவரங்கள் ஏற்பட்டன. இன்று  “பூமியின் புதல்வர்கள் ” என்ற கோட்பாடு அவர்கள் வெறுத்த சீனர்களை ஏற்றுக்கொள்ளச் செய்துள்ளது. புதிதாக சுதந்திரம் பெற்ற பிறநாடுகளில் சிலவற்றை பொல இலங்கையிலும் காலனித்துவத்தின் பின்  தேசத்தைக் கட்டியெழுப்பும் பணி ஆரம்பமாகின்றது. இக்கால கட்டத்தில் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் தம்முடைய இனத்தின் தனித்துவத்தையே தேசத்தின் தனித்துவ இனமாக காட்ட முயல்கின்றனர். இலங்கையில் சிங்களவர் போல சூடானில் அராபியரும் கென்யாவில் கிதவுமும் சிம்பாவேயில் சேரனாவும் நைஜீரியாவில்,  பூலானி இனத்தவரும் தம்மின மேலாதிக்கம் மூலம் தேசீய ஒருமைப்பாட்டை நிலைநாட்ட முயலுகின்றனர். இந்நிலை பிற சிறுபான்மை இனங்களின் விரக்தியை வெளிப்படுத்திய அதன் மூலம் பெரும்பான்மையினரின் இனவுணர்வு மட்டத்தை உயர்த்தி விடுகின்றது. இத்தகைய போக்கு காலனித்துவ ஆட்சியின் வேளை அடங்கியிருந்த பகைமை , கலவரங்களுக்கும் கொரில்லா யுத்தத்திற்கும் மட்டுமல்ல உள்நாட்டு யுத்தத்திற்கும் இட்டுச் செல்கிறது

இவ்வாய்வின் முற்பகுதிகளில் இலங்கையில் இனப்பகைமை சென்ற ஒரு நூற்றாண்டில் பல்வேறு காலகட்டங்களிலும் தோன்றியதற்கு சில விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இன தேசிய உணர்வுகளின் தோற்றம் அவற்றிடையே ஏற்படும் மோதல் உணர்வுகளிலும் கருத்தியலிலும் பொருளாதார அரசியல் காரணிகள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி ஆழமாகக் கற்பது அவசியமாகும். பெரும்பான்மை வகுப்பினரிடை ஏற்படும் இனவாதம் பற்றியும் இத்தகைய இனவெறி சிறுபான்மையினர் மேல் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் சகல இனத்தவரிடையேயும் உள்ள அறிஞர்களால் ஆராயப்படவேண்டும்.இவர்கள் நல்நோக்கமும் பகுத்தறிவு கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும். உயர்கல்வியாளரும் ஆராய்ச்சியாளரும் தாக்குதலுக்கும் ஐயப்பாட்டுக்கும் பொய்ப்பிரச்சாரத்திற்கம் உட்படாத சூழலிலேயே இத்தகைய ஆய்வுகள் பயன்தரத்தக்க முறையில் நடைபெற முடியும்.

இனவாதம் பரந்துபட்ட தொழிலான வர்க்கத்திற்கோ இடதுசாரி கோட்பாட்டின் நலனுக்கோ உகந்ததல்ல என முடிவாக அழுத்தமாக கூறவேண்டும். இலங்கைத் தொழிலாளர்கள் (1890-1930) ஆகிய நாற்பது ஆண்டுகளில் அவர்களது இயக்கங்கள் ஒன்றுபட்ட வர்க்கப் போராட்ட கொள்கையையே கொண்டிருந்தன. மறுமலர்ச்சியாளர்கள் சிறுபான்மையினத்திற்கு எதிரான பகைமையை வளர்க்க முற்பட்டபோது தொழிலாளர் ஐக்கியம் குறைக்கப்படவில்லை. 1920 களில் இருந்த தொழிலாள வர்க்க தலைவர்கள் 1930 களில் வகுப்புவாதிகளாய் மாறியபோதும் அடுத்த தசாப்தங்களில் தொழிலாளர் இனவேறுபாடுகளை மறந்து இடதுசாரிகளின் தலைமையில் பல்வேறு தீவிர போராட்டங்கள் மூலம் தமது வர்க்க உணர்வை வெளிப்படுத்தினர். இன்றும் தொழிலாள வர்க்கத்தின் முற்போக்கான பகுதியினரும் விவேகம் மிக்க பகுத்தறிவாளரும் இனப்பகையால் வீழ்ச்சியடையும் நாட்டை மேலே உயர்த்தி முன்னேறுவதில் உதவ முடியும். தற்போது பகுத்தறிவு தாழ்நிலையில் உள்ளது. ஆரிய இனத்தவர் என்ற ஐதீகமும் விஜயன் வம்சத்தவர் என்ற பொய்மையும் துட்டகைமுனு போல இன வீரபுருஷர்களை உருவாக்குகிறோம் என்ற கூற்று ஆகியவை இன்று புத்துயிர் பெற்றுள்ளன. இவை மீண்டும் இனவெறியைத் தூண்டும் பலமிக்க குறியீடுகளாக உள்ளன.

பத்திரிகைகள் எல்லாம் இனவாதமும் பகட்டான தேசீயக் கொள்கையும் கொண்டவையாக உள்ளன.அதேவேளை சோதிடப் பலாபலன் கூறுவதோடு பேய் பிசாசு கதைகளையும் வெளியிடுகின்றன. குழப்பமேற்பட்ட இக்கால கட்டத்தில் அமைதியின்மையையும் உறுதியின்மையையும் பிரதிபலிப்பதாக தெய்வாம்சம் பொருந்திய மனிதர்களும் பொய்மையான ஆயர்களும் பௌத்தசாமிமாரும் ஆசிரியர்களும் பழமையை போற்றுபவர்களும் சுறுசுறுப்பாக செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே போராட்டம் நீண்டதாகவும் கடுமையானதாகவும் இருக்கும். ஆயினும் நீதி விரைவாகவோ அல்லது சிறிது காலம் தாழ்த்தியோ நிலைபெறும் என நம்புகின்றேன்.

கட்டுரையாளரின் கருத்துக்கள் இனியொருவின் கருத்துக்கள் அல்ல! இக் கட்டுரை    ETHNIC  AND CLASS  CONFLICTS  IN  SRI LANKA என்ற ஆங்கில நுhலின்  தமிழாக்கமான “இலங்கையின் இன வர்க்க முரண்பாடுகள் ” என்ற நுhலிருந்து   விவாத நோக்கில் மீள் பதிவு செய்யப்படுகின்றது.

பெப்பிலியான வர்த்தக நிலையம் மீதான தாக்குதல்! :முஸ்லிம் இடதுசாரி முன்னணி

pothupalasenaபெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் தாக்கப்பட்டது சிங்கள பௌத்த இனவாத, மதவாத சதிகாரர்களின் திட்டமிட்ட செயலாகும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச்செயலாளர் மொகமட் பைசால் தெரிவித்தார்.
பெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்களின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் மத வழிபாட்டு மார்க்கத்தையும், இஸ்லாமிய கலாசாரத்தையும் தடுத்து நிறுத்தவோ அல்லது திருத்தவோ யாரையும் அனுமதிக்க கூடாது.

எமது மதத்தையும், கலாசாரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம் பெருமகனுக்கும் உரிய கடமையாகும்.

இந்த நாட்டில் சிறுபான்மை என்றொரு சமூகம் இருக்க கூடாது. அப்படி இருந்தாலும் அவர்கள் பெரும்பான்மை சமூகத்தின் மொழியையும், மதத்தையும், கலாசாரத்தையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற ஒருவித விதாண்டா வாதத்துடன் அப்பாவி சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் இனவாதத்தை ஊட்டி வளர்க்க நினைக்கும் பொதுபல சேனா போன்ற அமைப்புகளை அரசாங்கம் உடனடியாக தடுத்து கட்டுப்படுத்த வேண்டும்.

இல்லையேல் அன்று தொட்டு இன்றுவரை இலங்கையின் இறையாண்மைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட முஸ்லிம் சமூகம் தங்களையும் சமூகத்தையும் மதத்தையும் பாதுகாத்துகொள்ள வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை தோன்றலாம்.

ஒரு நாடு ஜனநாயகத்தை மதிக்கும் நாடாக இருக்கும் பட்சத்தில் அங்கு வாழும் சிறுபான்மை சமூகம் மத, மொழி சுதந்திரம் உரிமையுடன் வாழ வேண்டும். அவ்வாறான நேரத்தில் அந்நாட்டின் மதிப்பும் அந்தஸ்தும் சர்வதேச மட்டத்தில் மதிக்கப்பபடும். உயர்வடையும், ஆனால் இங்கு நிலைமை வேறாக இருக்கிறது.

ஏற்கனவே மனித உரிமை மீறல், போர்க்குற்றம் என்றெல்லாம் சர்வதேச மனித உரிமை சபையாலும், ஐக்கிய நாடுகள் சபையாலும் குற்றம் சுமத்தப்பட்டு திணறிக்கொண்டிருக்கும் நிலையில் இதை உறுதிப்படுத்தும் வகையில் சிங்கள இனவாத அமைப்புகளும். குழுக்களும் அறிக்கைகள் விடுவதும். பேரணிகள் நடத்தி தாக்குதல்கள் நடத்துவதும் நாட்டிக் இறையாண்மையை பாதிக்கும் என்பதால் கண்டிக்கப்பட வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி, உலகத்திற்கு முன்னுதாரணம் : சபா நாவலன்

உலகத்தில் இன்று என்ன நடைபெறுகிறது என்பது குறித்த குறைந்தபட்ச புரிதல் ஈழப்போராட்டத்தின் இராணுவரீதியான தோல்விலிருந்து தமிழக மாணவர் எழுச்சி வரைக்கும் மதிப்பீடு செய்வதற்கு அவசியமானது. இன்றைய தமிழக மாணவர் போராட்டஙகள் ஈழப் போராட்டத்திற்கும் இந்திய மக்களுக்கும் மட்டுமன்றி உலகம் முழுவதற்குமே முன்னுதாரணமாக உருவாகக்கூடிய சூழலைத் தோற்றுவித்திருக்கின்றது. ஐ.நா தீர்மானத்தோடும் ஜெயலலிதாவின் தீர்மானம் நிறைவேற்றி நாடகம் நடத்திய கையோடும் மாணவர் போராட்டங்கள் அது ஆரம்பித்த வேகத்தில் அழிந்துபோய்விடும் என்று அங்கலாய்த்த அதிகாரவர்க்கம் தோற்றுப்பானது.

thunisia_protestதுனிசியாவில் மையான அமைதியைக் கிளித்துக்கொண்டு மேலெழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டோம். அங்கு சாரிசாரியாக மக்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்தெல்லாம் நகரங்களுக்குப் படையெடுத்து போராடும் மக்களோடு இணைந்து கொண்டார்கள். துனிசியாவில் மூட்டிய நெருப்பு அரபு நாடுகள் முழுவதும் பரவியது. மக்கள் வெள்ளம் அரபு நாடுகளின் ஆயுதப்படைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இறுதியில் ஒரு சர்வாதிகாரிக்குப் பதிலாக மற்றோரு சர்வாதிகாரி பிரதியிடப்பட்டார்.

ஒடுக்குமுறை இயந்திரம் முன்னிலும் பலமாக்கப்பட்டது. இனக்குழுக்களிடையே மோதல்கள அதிகரித்தன. பல்தேசிய கொள்ளைக்காரர்கள் மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்காக முகாமிட்டுக்கொண்டார்கள்.

இதே போன்று,  அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உருவான தன்னெழுச்சியான போராட்டங்கள் அந்த அரசுகளைக் கேள்விகேட்டன. உலகில் போராட்டங்களை ஒடுக்கும் அமரிக்க அரசின் முற்றத்திலேயே வால் ஸ்ரீட் போராட்டம் தோன்றி உலகின் அதியுயர் அதிகாரத்தின் வேர்களை விசாரணை செய்தது. ஐரோப்பிய நாடுகள் முழுவதும் அப்போராட்டங்கள் பரவிப்படர்ந்தன. எழுச்சி முழக்கங்கள் என்பதற்கு அப்பால் மேல் வளர்ச்சியடைய முடியாமல் அப்போராட்டங்கள் அனைத்தும் செயற்பாடற்று செத்துப்போயின.

neo_liberalism1970 களில் ஆரம்பித்த உலக ஒழுங்கு இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. நவ தாராளவாத உலகமயமாதல் என அறியப்பட்ட உலக ஒழுங்கு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்ட தசாப்தங்களுக்கு உள்ளாகவே அது மீட்சியடைமுடியாத நெருக்கடியைச் சந்த்துள்ளது. 1990 ஆம் ஆண்டு இந்தியாவிலும் லத்தீன் அமரிக்க நாடுகளிலும் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவித்த பின்னர் அந்த நாடுகளில் நவதாராளவாத உலகமயமாதல் தனது கோரக்கரங்களை இறுக்க ஆரம்பித்தது. முன்னெப்போதும் இல்லாதவாறு ஊழல், சதி, போர் ஆகியவற்றை உலகமயமாக்கியது. பல் தேசிய நிறுவவனங்கள் அமரிக்காவிலும் ஐரோப்பாவிலுமிருந்து அந்த நாடுகளில் சென்று குடியேறிக்க்கொண்டன. அங்குள வளங்களையும் தொழிலாளர்களைம் ஒட்டச் சுரண்டின.

உள் நாட்டில் நேரடியாகத் தமக்குச் சேவையாற்றும் அரசுகளை மக்களின் எதிர்ப்பின்றி உருவாக்கிக்கொள்வதே பல்தேசிய நிறுவனங்களுக்காகச் செயற்படும் அமரிக்க ஐரோப்பிய அரசுகளின் பிரதான அரசியல் ஆயுதமாகத் திழழ்ந்தது. இதற்காக உள் நாட்டில் பொருளாதர பலம் மிக்க விரல்விடுக் கணக்கிடக்கூடிய பணக்கார வர்க்கத்தை உருவாக்கினர். இவர்கள் உள்ளூரில் மக்கள் எதிர்ப்பின்றிய ஏகாதிபத்திய சார்பு அரசு ஒன்று செயற்படுவதை ஜனநாயகம் எனக் கருதினர். உள் நாட்டைச் சந்தைப்படுத்தக் கூடிய சூழலில் வைத்திருப்பதைச் சமாதானம் என மக்களின் பொதுப்புத்தியாகினர்.
சந்தைப்படுத்தும் சூழல் என்பது பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்கான சூழல் என்பதே.

imfஇத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக அமரிக்கா தலைமையில் பல இராட்சத நிறுவனங்கள் உருவாகின. உலக வர்த்தக மையம்(WTO), உலக நாணய நிதியம், உலக வங்கிIMF), வட அட்லான்டிக் உடன்படிக்கை அமைப்பு (NATO) போன்ற நிறுவனங்கள் நேர்த்தியான திட்டமிடலுடன் உலகை அமரிக்கா தலைமையிலான ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தன.

பொருளாதார வார்த்தைகளில் சொல்வதானால், இந்தக் கட்டுப்பாட்டின் அடிப்படை நோக்கம் என்பது மூன்றாம் உலக நாடுகளிலிருந்து குறைந்த விலையில் இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் சுரண்டி ‘உபரி உற்பத்தியை’ உறிஞ்சிக்கொள்வதாகும்.

இவ்வாறான சுரண்டலால் உருவாகக் கூடிய வறிய மக்களும் உழைப்பாளிகளும் ஒரு நேர உணவிற்கே கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். வாழ்வதற்காகப் போராட ஆரம்பித்தனர். இவர்களது போராட்டம் சுதந்திட சந்தைக்கு அதாவது பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்குத் தடையாக அமைந்தது. இவர்களைது போராட்டங்களைத் தற்காலிகமாகத் உறங்கு நிலையில் வைத்துக்கொள்ளும் நோக்கோடு தன்னார்வ நிறுவனங்களை (NGO) மேற்குறித்த இராட்சத நிறுவனங்களின் பண வழங்கலின் கீழ் உருவாக்கினர். தன்னார்வ நிறுவனம் என்ற கருத்துருவாக்கம் பின்னர் விரிவாக்கப்பட்டு பல அமைப்பு வடிவங்களைப் பெற்றது.

இவை அனைத்திற்கும் அப்பால் மக்கள் தாம் எதிர் நோக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட ஆரம்பித்தனர். அவ்வாறான போராட்டங்கள் ஆயுதப்போராட்டமாகத் தோன்றிய போது பல வழிகளில் அழிக்கப்பட்டன.

ஈழத்தில் சந்தைப்படுத்தும் சூழலைத் தோற்றுவிப்பதற்காகவே விடுதலைப் புலிகளும் மக்களும் இரவோடிரவாக அழிக்கப்பட்டனர்.

தவிர, திட்டமிட்ட அரசியலோடு அரசியல் அமைப்புக்கள் தோன்றுவதை ஆரம்பத்திலிருந்தே அழிப்பதற்கு இந்த இந்த ராட்சத நிறுவனங்களின் உதவியோடும் அரசுகளின் நேரடிக் கண்காணிப்பிலும் புதிய முறைகள் கையாளப்பட்டன. மக்கள் போராடுகின்ற போது அப்போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு நகர விடாமல் தடுத்தனர். போராட்டங்களைத் தாமே தமது உள்ளூர் முகவர்களுக்கு ஊடாகவும் சந்தர்ப்பவாத-பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கு ஊடாகவும் கையிலெடுத்துச் சிதைத்தனர்.

otpor_until_victory_belgradஅரபு நாடுகளில் போராட்டங்களின் பின்னணியில் ஒட்பொர் (OTPOR) என்ற அமைப்பு செயற்பட்டது. அதே அமைப்புத் தான் வால் ஸ்ரீட் போராட்டத்தையும் கையகப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் தடுத்தது. சில வேளைகளில் போராட்டங்கள் உருவாகாமல் தடுப்பதற்காக தாமே போராட்டங்களை உருவாக்கி அழித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு 50 இற்கும் மேற்பட்ட போராட்டங்களை தோற்றுவித்து அழித்ததாக அமரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையகத்தின் (NSA) பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒட்போர் அமைப்பு வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டுள்ளது.

இனப்படுகொலைக்கு சகல வழிகளிலும் பின்புலத்தில் செயற்பட்ட அமரிக்காவே மனித உரிமைஅமைப்புக்களின் துணையோடு ஐ.நா போர்க்குற்ற விசாரணை குறித்த தீர்மானத்தையும் முன்வைத்தது .
இலங்கையில் ராஜபக்சவை இன்னொரு இனவாதியால் பிரதியிடும் முயற்சியை மேற்கொள்ளும் அமரிக்க அரசு அதற்கான முன் நிபந்தனைகளை இப்போதே உருவாக்க ஆரம்பித்துவிட்டது. திடீர் எழுச்சிகளை உருவாக்குவதும், புலம் பெயர் அமைப்புக்களை உள்வாங்கிக்கொள்வதும். தன்னார்வ நிறுவனங்களை நாடு முழுவதும் விதைப்பதும். இனவாதக் கட்சிகளை எழுச்சிக் கட்சிகளாக மாற்றுவதும் அவர்களின் உடனடிச் செயற்பாடுகள். அடுத்த தேர்தலுக்கிடையில் ராஜபக்ச அரசு அமரிக்கா எதிர்பார்பதற்கு மேலாக இலங்கையின் வளங்கள் முழுமையையும் சீனவிடமிருந்து பறித்தெடுத்து அமரிக்காவிற்கு வழங்கினால் எழுச்சிகள் நிறுத்தப்படும். இல்லையெனின் இலங்கையில் பேரினவாதம் எதிரியல்ல ராஜபக்சவே எதிரி என்று தேர்தலுக்கு முன்னதக அறிவிக்கப்படும்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கோடு அவ்வப்போது தோன்றும் திடீர் எழுச்சிகளுக்குப் பின்னணியில் ஒட்போர் போன்ற அமைப்புக்கள் செயற்படுகின்றனவா என்பற்கான ஆதாரங்கள் இன்னும் இல்லை என்றாலும் அதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது. ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களின் அடிப்படை உரிமையான சுய நிர்ணைய உரிமையைக்கூட அங்கீகரிக்க முடியாத இனவாதக் குழுக்கள் திடீர் மாணவர் எழுச்சிகளைத் தோற்றுவிப்பதன் பின்னணி குறித்த அரசியல் அவதானமாக நோக்கப்பட வேண்டும்.

அரபு நாடுகளிலெல்லாம் அரசியலற்ற திடீர் தனெழுச்சிகளை உருவாக்கி அவற்றை அழிப்பதற்கு ஆட்சி மாற்றம் எனபது கருவியாகப் பயன்பட்டுள்ளது.

balachandtanசனல் நான்கு பிரபாகரனின் மகன் உயிரோடிருக்கும் படத்தையும் கொல்லப்பட்ட படத்தையும் வெளியிட்டபோது மனிதாபிமானிகளைக்குற்ற உணர்வுக்கு உட்படுத்தியது. இந்திய மற்றும் தமிழ் நாட்டுத்தொலைக் காட்சிகளில் மீண்டும் மீண்டும் அது குறித்த காட்சிகள் திரையிடப்பபட்டன.
ஈழத் தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று தேடித்தேடி வேட்டையாடிய ஜெயலலிதாவும் இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்துவதற்கு நேரடி ஆதரவு வழங்கிய கருணாநிதியும் புதிய வேகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்துப் பேச ஆரம்பிக்கின்றனர்.

துனிசியப் போராட்டத்திற்கு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட புறச் சூழலைப் போன்றே தமிழ் நாட்டிலும் போராட்டத்திற்கான சூழல் உருவாக்கப்பட்டது.

இவ்வேளையில் லயோலா கல்லூரி மாணவர்கள் தமது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கின்றனர்.

இனப்படுகொலையின் திரைமறைவுச் சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கருதப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளரும் முன்னை நாள் புலிகளின் தமிழகத் தொடர்பாளர்களில் ஒருவருமான ஜகத் கஸ்பர் என்ற பாதிரி இப்போராட்டத்தின் பின்புலத்தில் செயற்பட்டார் என்ற நம்பத்தகுந்த தகவல் பல் சந்தேகங்களை ஏற்படுத்தியது.

ஜெகத் கஸ்பர் போன்ற உயர் குடிப் பாதிரிகளுக்கு ஏகாதிபத்திய நிறுவனங்களுடனான தொடர்பு குறித்து விளக்குப் பிடித்துத் தேட வேண்டிய அவசியமில்லை. வன்னி இனப்படுகொலையில் இவர்களின் பங்கே இதற்குப் போதுமான ஆதரங்களை வழங்கியுள்ளன.

layolaலயோலாக் கல்லூரியில் ஜெகத் கஸ்பரால் தூண்டிவிடப்பட்ட போராட்டம், திராவிட இயக்கங்களின் சீர்திருத்தப் பாரம்பரியத்தில் வளர்ந்த தமிழ் நாட்டு மாணவர்களை குறித்த எல்லைக்குள் முடக்கிவிடவில்லை. அப்போராட்டம் அவருக்கு எதிரானதாகத் திரும்ப, அது கல்லூரி நிர்வாகத்தாலும் ஜெயலலிதா அரசாலும் அழித்துச் சிதைக்கப்பட்டது. பின்னதாக மாணவர் போராடங்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாகத் தோன்றின. போர்க்குணம் மிக்க உணர்வுபூர்வமான போராட்டங்களாக தெருக்களில் மாணவர்கள் போராட ஆரம்பிக்கின்றனர். உலக மயம் உருவாக்கிய நுகர்வுச் சிந்தனைக்குள் முடங்கியிருந்த மாணவர்கள் தெருக்களில் புத்தகங்களையும் காவிக்கொண்டு போராட வெளிவந்தது ஆளும் வர்க்கம் எதிர்பார்க்காத அதிர்ச்சியை வழங்கியது.

திருஞான சம்பந்தர் என்ற பிராமணர் ராமேஸ்வரத்திலிருந்கு இலங்கையை நோக்கித் தேவாரம் பாடியதாக ஐதீகக் கதைகள் உண்டு. தமிழ் நாட்டிலிருந்து ஈழத் தமிழர்களுக்காக ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் வாழும் புலம்பெயர் நாடுகளை நோக்கித் தேவாரம் பாடும் ‘தமிழ் உணர்வாளர்கள்’ தன்னெழுச்சியான போராட்டங்களை பயன்படுத்திக்கொள்வதற்காக போட்டிபோட ஆரம்பித்த போது அது மாணவர்களிடையே பிளவுகளைத் தோற்றுவித்தது.

frontஇவ்வேளையில் ஏகாதிபத்தியத் தலையீட்டை நிராகரித்தும், போராட்டங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்வைத்தும் ‘ஈழத் தமிழர் தன்னுரிமைக்கான மாணவர் அமைப்பு’ எழுச்சி மிக்க போராட்டத்தை சென்னை விமான நிலையத்தில் நடத்தியது. தமிழகம் முழுவது இவ்வமைப்பினர் நடத்திய போராட்டங்கள் தொடர்கின்றன. தெளிவான உறுதியான முழக்கங்களோடு எதிர்காலத்திற்கான அரசியல் திட்டமிடலுடன் இம்மாணவர் அமைப்பு நடத்தும் போராட்டங்கள், அரபு எழுச்சிகள் கடத்தப்பட்டு அழிக்கப்பட்டது போன்றும், வால் ஸ்ரீட் வகைப் போராட்டங்கள் மடிந்துபோனது போன்றும் தற்காலிகத் தன்னெழுச்சிப் போராட்டங்களாக அன்றி உறுதியான வெகுஜன அரசியல் பலத்தோடு முன்னெடுக்கப்படுகின்றன.

ஈழத்தில் ஒடுக்கப்படும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்கக் கோரியும், ராஜபக்ச என்ற மனித குல விரோதிக்கு அதிகபட்ச தண்டனை கோரியும் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்தும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்வைக்கும் அரசியலை ஒட்போர் போன்ற அமைப்புக்கள் கையகப்படுத்தி சீர்குலைக்க முடியாது. அவர்கள் தெளிவாகத் தமது அரசியலையும் அதன் தலைமையையும் முன்வைக்கிறார்கள்.

பிரான்ஸ், கனடா, ஸ்பெயின், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்த மறுகணமே அசைவின்றி நின்றுபோன போராட்டங்களைப் போலன்றி தெளிவான அரசியலை முன்வைக்கும் இவர்களின் உறுதி ஏகாதிபத்தியங்களால் கையகப்படுத்தி அழிக்கப்பட்ட போராட்டங்கள் போன்றதன்று.
ஈழத் தமிழர் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் வெற்றி என்பது தமிழகத்திற்கு மட்டுமன்றி, ஈழத்திற்கு மட்டுமன்றி உலகத்திற்கே முன்னுதாரணத்தை வழங்கவல்லது.

தன்னார்வ நிறுவனங்களும் .புரட்சி வியாபார’ அமைப்புக்களும் போராட்டங்களை மிக இலகுவில் கையகப்படுத்தி அழிக்கும் புதிய ஏகாதிபத்திய அரசியலின் முன்பு அதற்கு எதிரான புரட்சிகர அரசியலை முன்வைப்பது குறித்து உலகம் முழுவதும் பேசப்படும் நிலையில் தமிழக மாணவர்கள் அதற்கு முன்னுதாரணமானத் திகழ்கின்றனர்.

நன்கு திட்டமிடப்பட்ட ஏகாதிபத்திய அழிவு நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாத இவர்களின் போராட்டத் தந்திரோபாயமும் உறுதியான நீண்ட மக்கள் போராட்ட அனுபவம் மிக்க அரசியல் தலைமையும் தமிழகத்தின் பிழைப்புவாதிகளையும் கூட மிரட்டியிருக்கிறது.

2009 ஆம் ஆண்டு வன்னிப்படுகொலைகள் நடைபெற்ற போது தமிழகத்தில் இரத்த ஆறு ஓடப்போகிறது என்று படம்காட்டிய இந்த இனவாதிகள், எல்லாம் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் பிரபாகரன் திரும்பி வருவார் என போலி நம்பிக்கை வழங்கி மக்களைப் போராடவிடாமல் தடுத்தனர். திட்டமிட்ட நிறுவனமயப்பட்ட மாணவர்களின் எழுச்சியின் வெம்மை தாங்காது தெருவிற்கு வந்த இந்த இனவாதிகள் மாணவர் போராட்டங்களுக்க அரசியல் வேண்டாம் என வெளிப்படையாகவே கூற ஆரம்பித்துவிட்டனர்.
உதிரிகளாக புலம் பெயர் தமிழர்களின் கடைகண் பார்வைக்காகவும், பொழுது போக்கு வியாபார விழாக்களையும், சினிமாக்களையும் விற்பனை செய்வதற்காகவும் ஈழ விடுதலை பேசும் பலர் மாணவர் போராட்டங்கள் குழுவாதத்திற்கு சிக்கியுள்லதாகக வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.

அழிக்கப்படும் மக்களின் அவலத்தில் அரசியல் வியாபாரம் நடத்தும் புலம் பெயர் அமைப்புக்கள் மாணவர் போராட்டத்தின் போர்குணத்தை அறிந்ததும் மௌனித்துப் போயினர். புலம் பெயர் ‘தேசிய’ இணையங்கள் போராட்டங்கள் குறித்த செய்திகளை முற்றாகப் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்தப் புள்ளியில் உலகின் போராட்டங்களுக்கே முன்னுதாரணத்தை வழங்கிய தமிழக மாணவர்கள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரிகளையும் நண்பர்களையும் இனம்காட்டியுள்ள்னர்.

ngoஐரோப்பிய நாடுகள் நிதி வழங்கும் தன்னார்வ நிறுவனங்களின் நேரடியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் பெரும்பாலானவை இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு என்ற முடிவிற்கு வந்துள்ளன. ராஜபக்ச அரசிற்கு மாற்றாக சந்திரிக்கா தலைமையிலான அரசை இலங்கையிலுள்ள பல்தேசிய தரகுகளின் ஆதரவோடு நிலை நாட்டுவதே அவர்களின் அடிப்படை நோக்கமாகக் காணப்படுகிறது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அடிப்படை முழக்கமாகக் கொண்ட தமிழக மாணவர்களின் போராட்டங்களை இலங்கையில் வாழும் தமிழர்கள் உன்னிப்பாக அவதானிக்கிறார்கள்.

முப்பது வருட ஆயுதப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக முதல் தடவையாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக எழுந்த மாணவர்களின் குரல் சந்தர்ப்பவாத அரசியலால் சிதைந்துபோகாது பாதுகாக்கப்பட வேண்டும்.

2013 – இலங்கை குறித்து அமரிக்காவின் திட்டங்கள் என்ன ? : நிவேதா நேசன்

எப்பிஐ தலைவர்களைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருந்தது

NGO களால் கடத்தப்பட்ட வால் ஸ்டிரீட் போராட்டம் – ஓராண்டு நிறைவு-கற்றுக்கொள்ளல் : சபா நாவலன்

இன அழிப்புக்கு இந்திய அரசு எவ்வைகையில் உதவுகின்றது? : S.G.ராகவன்

manmohanபோரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான இந்தியாவின் வீடமைப்புத் திட்டம், வன்னியில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதை, இலங்கை இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான “இந்தியாவின்” போரைத்தான் தாம் நாடத்தியதாக இலங்கை அதிபர் ராஜபக்சே பகிரங்கமாக கூறியிருக்கிறார் இவை செய்திகள்தான்.
தற்போது வடகிழக்கில் நடப்பவை என்ன? இலங்கை அரசு மிகத் தீவிரமாக இன அழிப்பை நடாத்தி வருகின்றது, இவ்வின அழிப்புக்கு இந்திய அரசு எவ்வைகையில் உதவுகின்றது என்பதை பார்ப்போம்

1. இலங்கை அரசு வடகிழக்கில் தமிழர் தாயகத்தில் அரச காணிகள் , தனியார் காணிகள் என்பவற்றை அபிவிருத்தி என்ற போர்வையில் பறிமுதல் செய்து இராணுவத்தினரையும் சிங்கள மக்களையும் குடிஏற்றுகின்றனர்

2. வலுக்கட்டயாமாக தமிழர்களை அவர்களின் வாழ்விடங்களில் இடம் பெயரச் செய்து, அவர்களின் காணிகளை கைப்பற்றுகின்றனர் .

3. இலங்கை அரசு செய்த, செய்து கொண்டிருக்கின்ற இனப் படுகொலை, இன ஒதுக்கல் கொள்கை காரணமாக நாட்டை விட்டு புலம் பெயர்ந்து சென்ற, சென்று கொண்டிருக்கின்ற தமிழர்களின் காணிகளை இலங்கை அரசு, மற்றும் சிங்களப் படைகள் அடாத்தாகவும் , இலங்கை அரசின் தமிழர் விரோத சட்டங்கள் மூலமாகவும் பறிமுதல் செய்கிறது.

4. தமிழர் காலம் காலமாக வழிபட்டு வந்த கோவில்கள் கலாச்சார வாழ்விடங்கள் திட்டமிட்ட வகையில் தமிழர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப் படுகிறது.

5. வடக்கு கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரித்து வெலிஓயா எனும் புதிய மாவட்டத்தை தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவு திருகோணமலை போன்ற மாவட்டங்களை இணைத்து அங்குள்ள பெருவளவு தமிழர்களை விரட்டி அடித்தும் (முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் 1984 இல் முல்லைத்தீவு மணலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இனப் படுகொலையில் இப்பகுதிகளில் பூர்விகமாக வாழ்த்த தமிழ் மக்கள் பெருமவளவில் கொல்லப் பட தற்போது எஞ்சி இருக்கும் தமிழ் மக்களின் காணிகளையும் சிங்கள அரசு பறிமுதல் செய்கிறது. அங்கு சிங்கள குடியேற்றங்களை செய்து வருகிறது.

6. இப்பொழுது தீவிரமாக தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றம் நிகழந்துவரும் பிரதேசங்கள் மாவட்ட அடிப்படையில் தருகிறேன்.#

sri_Lanka_mapயாழ்ப்பாண மாவட்டம் – மாதகல், தெள்ளிபலை, பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி, வளலாய் , மாவிட்டபுரம், கைதடி , ஆனையிறவு, வடமராச்சி கிழக்கு, போன்ற பகுதிகளில் சிங்கள மக்கள் இரவோடு இரவாக நிரந்திரமாக் குடியேற்றப் பட்டு விட்டார்கள் இவர்களில் பெருமளவில்இராணுவத்தினரின் குடும்பங்களாகும் , இவ்வாறு குடியேற்றப்பட்ட சிங்கள குடியிருப்புகளில் சிங்களப் பாடசாலைகள் , பௌத்த கோவில்கள் , தபால் அகங்கள் உட்பட்ட சகலவசதிகளும் அடங்கும் . இப்பகுதிகளில் பூர்விகமாக வாழந்த மக்கள் அனைவரும் விரட்டப் பட்டு அகதிகளாக அநாதரவான நிலையில் உள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம்– கிளிநொச்சி நகர், முழங்காவில், முறிகண்டி , மற்றும் சிங்களப் படைகள் நிலை கொண்டுள்ள முகாம்களில் நிரந்தர வீட்டுத் தொகுதிகள் அமைக்கப் பட்டு அங்கும் சிங்களவர்கள் குடியேற்றப் படுகின்றனர்.

மன்னார் மாவட்டம் – மடு , திருக்கேதீசுவரம் (சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற 2500 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழர் பிரதேசம்) மன்னார் மேற்கு பிரதேசம் என்பன தற்போது வேகமாக சிங்களக் குடியேற்றம் நிகழும் பிரதேசங்களாகும்.

வவுனியா மாவட்டம் – நெடுங்கேணி , மாமடு, கனகராயன் குளம், உட்பட இன்னும் பல பிரதேசங்கள் அரச ஆதரவுடன் தீவிரமாக சிங்கள மக்கள் குடியேற்றப் படுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம்: கொக்கிளாய் , நாயாறு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு,முள்ளியவளை , தண்ணீரூற்று, இரணைமடு, மற்றும் முல்லைத்தீவு கடலோரப் பிரதேசங்கள் போன்ற தமிழர் பிரதேசங்கள் சிங்களவர்கள் குடியேற்றங்கள் அரச ஆதரவோடு நடைபெறுகின்றன.

திருகோணமலை மாவட்டம் : மாவட்டத்தின் பெரும்பான்மை பிரதேசங்கள் ஏலவே ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டன, ஏனைய பகுதிகளிலும் தொடர் குடியேற்றங்கள் நடை பெறுகின்றன.

மட்டக்களப்புமாவட்டம் : வாகரை, குடும்பி மலை போன்ற பிரதேசங்கள் மிகத் தீவிரமாக சிங்கள குடியேற்றம் நடைபெறுகின்றது. இங்கு ஏலவே தமிழர் பிரதேசம் ஓன்று புனானை என சிங்கள பெயர் மாற்றப் பட்டு அங்குள்ள தமிழர்கள் கொள்ளப் பட்டு துரத்தி அடிக்கப் பட்டு விட்டனர்.

அம்பாறை மாவட்டம் : இம்மாவட்டம் முழுவதுமே தற்போது திகாமடுல்ல என சிங்கள பெயராக மாற்றப் பட்டு எஞ்சி இருக்கும் தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் பறிக்கப் பட்டு கொண்டிருக்கிறது. அதில் தற்போது பொத்துவில் என்ற தமிழ் தொகுதி சிங்கள மயமாக மாற்றப் படுகிறது . ஏலவே பாணமை எனும் தமிழ் பிரதேசம் சிங்கள மயமாக்கப் பட்டு விட்டது அங்குள்ள தமிழர்கள் பயத்தின் காரணமாக வலுகட்டாயமகா சிங்களவர்களாக மூன்று தலைமுறைக்கு முதல் மாற்றப் பட்டுவிட்டனர் இங்குள்ள தமிழர்களில் வயது முதிந்தவர்களுக்கு மாத்திரம் தமிழ் தெரியும். அவர்களது பிள்ளைகள் சிங்களப் பெயரோடு தமிழ் தெரியாதவர்களாக மாறிவிட்டனர்.

· இவ்வின அழிப்புக்கு இந்திய அரசு எவ்வைகையில் உதவுகின்றது?

இந்தியாவின் புகழ் 50000 வீட்டுத் திட்டம், இலங்கை, இந்திய கூட்டு சதித் திட்டம் என்பதே உண்மை ஏனெனில் இவ் வீட்டுத் திட்டத்தில் 75 சதவீதமானவை சிங்கள ராணுவ குடியிருப்புகளுக்கும், சிங்கள குடியிருப்புகள் கட்டவுமே பயன் படுகின்றன. இதில் வெளிப் படையாக மடு , நெடுங்கேணி, மணலாறு மற்றும் வவுனியா என்பவற்றில் சிங்கள வடமாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில் சிங்கள குடியேற்றம் இந்திய அரசின் வீட்டுத்திட்ட நிதி உதவியுடன் நடை பெறுகின்றது. இவ்விடயம் தமிழ் அரசியல் வாதிகளால் இந்திய தரப்புக்கு தெரியப் படுத்தியும் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை இந்தியாவின் தூதுவர், உதவி தூதுவர் என்போருக்கு இவ்விடயம் முறைப்பாடு செய்யப்பட்டும் எந்த மாறுதலும் இல்லை.

இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து இலங்கை வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர் பெரும் பான்மையை அழித்து அவர்களை சிறுபான்மை ஆக்கும், அல்லது முற்றாகவே தமிழர்களை இலங்கையில் இருந்து ஒழிக்கும், திட்டம் இவர்களிடம் இருப்பதாகவே தெரிகிறது.

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் தமிழர் விரோத போக்கு காரணமாக ஒரு இனத்தை அழிக்கும் கொடிய செயல் திட்டத்தை இலங்கை அரசுடன் சேர்ந்து இந்திய அரசு செய்கிறது. இதன் மூலம் இந்திய அரசு அடையப் போகும் நன்மை எதுவும் இல்லை. இவை எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். இந்தியா நினைப்பது ஓன்று மாத்திரமே! தமிழ் நாட்டுக்கு அருகில் இலங்கையில் தமிழர் பலம் பொருந்தி இருப்பதை விரும்பவில்லை. இந்த தெளிவற்ற தமிழர் விரோத மனப் பான்மையே இலங்கையில் தமிழர்களை இன அழிப்பு செய்ய இந்திய அரசு தூண்டுகிறது.

இதனை தமிழ் நாட்டு தமிழர்கள் எவ்வித அரசியல் சாயமும் அற்று ,வன்முறையற்று ,தமிழ் நாட்டையும் தாண்டி இந்தியா முழுவதும் முன்னெடுத்துச் சென்று இலங்கையில் தமிழ் இனப் படுகொலை இந்திய அரசின், பூரண உதவியுடன் நடைபெறுகின்றது என்பதை அம்பலப் படுத்தி அதனை நிறுத்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமையை வாங்கி கொடுப்பதே சிறந்த செயல் பாடாக அமையும்.

மாணவர் போராட்டம் தீர்மானகரமான வெற்றியைத் தருமா? : இராமியா

rsyf-4

கட்டுரையாளரின் கருத்து இனியொருவின் கருத்தல்ல; விவாத நோக்கில் பதிவிடப்படுகிறது.

ஈழத் தந்தை செல்வா அவர்கள் பொ¢யாரைச் சந்தித்து ஈழ மக்களின் விடுதலைக்காக (தமிழ் ஈழம் அமைவதற்காக அல்ல; ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்படாமல் இருப்பதற்காக) உதவி செய்யும்படி கேட்ட பொழுது “நாமே இங்கு இந்திய பார்ப்பன அரசுக்கு அடிமைகளாக இருக்கிறோம். ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி அய்யா உதவ முடியும்?” என்று தமிழகத் தமிழர்களின் இயலாமையைக் கூறினார். அதாவது நாம் பார்ப்பனர்களின் அடிமைகளாக இருக்கும் வரை நம்மால் யாருக்கும் உதவ முடியாது என்று தெளிவாகக் கூறினார்.

இன்று ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யப் புறப்பட்டு இருக்கிறவர்கள் பார்ப்பன அடிமைத் தளையில் இருந்து விடுபட்டு விட்டார்களா? அல்லது பொ¢யா¡¢ன் கருத்தை மறுக்கிறார்களா?

பெரியாரின் கருத்தை மறுப்பது என்றால், அது இரு விதங்களில் இருக்க முடியும்.

(1) நாம் ஒன்றும் பார்ப்பனர்களுக்கு அடிமைகள் இல்லை; சுதந்திரமாகத் தான் இருக்கிறோம் என்றும்

(2) ஈழத் தமிழர் நலப் போராட்டத்திற்கும் பார்ப்பன அடிமைத் தளையில் இருந்து விடுபடுவதற்கும் சம்பந்தம் இல்லை; இன்றைய சூழ்நிலையிலேயே போராடி வெற்றி பெற முடியும் என்றும் இரு விதங்களில் வாதங்களை வைக்க முடியும்.

இன்றைய சூழ்நிலையில் போராடி வெற்றி பெற முடியும் என்று கூறுபவர்கள், இந்திய மக்களில் 80%க்கும் அதிகமானவர்கள் இலங்கை அரசுக்கு எதிராகவும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலையையும் கொண்டிருந்த / கொண்டிருக்கும் பொழுது, அதீதப் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்திய அரசு எவ்வாறு செயல்பட முடிந்தது / முடிகிறது? அதுவும் இலட்சக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதற்கு உதவியும் வழிகாட்டுதலும் அளிக்க இந்திய அரசினால் எப்படி முடிந்தது? அதிகார மையங்களில் 90%க்கும் அதிகமாகப் பார்ப்பனர்களும், மிகுந்த சொற்பமான இடங்களிலும் ஆசையினாலோ அச்சத்தினாலோ பார்ப்பனர்களுக்கு அடிபணிபவர்களும் மட்டுமே இருப்பதால் தான் இவையெல்லாம் முடிகின்றன என்று தோன்றவே இல்லையா? இப்படி இருக்கையில் பார்ப்பன அடிமைத் தளையில் இருந்து விடபடாமல், இன்றைய சூழ்நிலையிலேயே போராடி வெற்றி பெற முடியும் என்பதற்கு ஏதாவது முகாந்திரம் இருககிறதா?

“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை; நாம் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாக இல்லை, அதிகார மையங்களில் பொதுப் போட்டியில் தேர்வு பெறும் திறமைசாலிகள் தான் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். மற்ற சமூக மக்களில் திறமைசாலிகள் இல்லாவிட்டால், அதற்குப் பார்ப்பனர்கள் என்ன செய்ய முடியும்?” என்று நினைக்கிறீர்களா?

இது பார்பப்னர்கள் நம் மீது சுமத்தி இருக்கும் கருத்தியல் வன்முறை. மனிதர்களை எந்த ஒரு அடிப்படையில் குழுக்களாகப் பி¡¢த்தாலும், அனைத்து குழுக்களிலும் மிக அதிகமான திறமை உடையவர்கள் முதல் மிகக் குறைவான திறமை உடையவர்கள் வரை இருக்கவே செய்வார்கள் என்பது மறுக்க முடியாத இயற்கை நியதி. ஆகவே பார்ப்பனர்களிலும் மற்ற வகுப்பு மக்களிலும் திறமையானவர்களும் திறமைக் குறைவானவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இது பகவத் கீதை, மனு ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி முதலிய இந்து மத சாஸ்திரங்கள் அனைத்திலும் வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளது. நாமும் நமது அனுபவத்தில் இவ்வுண்மையை உணராமல் இருக்க முடியாது. அப்படி என்றால், பொதுப் போட்டி (open competition) முறையில் அனைத்து வகுப்பு மக்களலிலும் உள்ள திறமைசாலிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் / தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் அல்லவா? அப்படி இல்லாமல் பார்ப்பனர்களே தேர்ந்து எடுக்கப் படுகிறார்கள் என்றால், அம்முறையில் அயோக்கியத்தனம் பின்னிப் பிணைந்து உள்ளது என்று உறுதிப்படவில்லையா?

பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்கள் இருக்கும் பொழுது, பார்ப்பனர்கள் மட்டுமே தேர்ந்து எடுக்கப் பட்டால், திறமைக் குறைவானவர்களும் தேர்ந்து எடுக்கப் படுகிறார்கள் என்பது உறுதி ஆகிறது அல்லவா?

இவ்வாறு, திறமை இருந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தேர்ந்து எடுக்கப் படாமல் இருப்பதும், திறமை இல்லாவிட்டாலும் பார்ப்பனர்கள் தேர்ந்து எடுக்கப் படுவதுமான நிலை நடப்பில் இருக்கும் பொழுது மற்ற வகுப்பு மக்கள் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகத் தான் இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தொ¢கிறது அல்லவா? ஆகவே உங்கள் வாதம் தவறு என்று பு¡¢கிறதா

இந்த அடிமைத் தளையை எப்படி உடைப்பது? அதிகார மையங்களில் பார்ப்பனர்கள் மட்டும் அன்றி, அனைத்து வகுப்பு மக்களும், மக்கள் தொகையில் அவரவர் எண்ணிக்¨யின் விகிதத்தில் தேர்ந்து எடுக்கப் பட்டே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டாமா? அவ்வாறு அதிகார மையங்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பன அயோக்கியத்தனங்களைத் தவிடு பொடி ஆக்கும் அளவு எண்ணிக்கையில் இருந்திருந்தால் / இருந்தால், இந்திய அரசு இலங்கை அரசின் அடக்கு முறைகளுக்குத் துணை போயிருக்க / போக முடியுமா?

இவ்வளவு சிந்தனைகளயும் ஒன்று திரட்டி, இரத்தினச் சுருக்கமாகப் பொ¢யார் கூறியதைச் சிறிதும் மனதில் கொள்ளாத மாணவர்களின் போராட்டம் எதவரை செல்ல முடியும்?

உணர்ச்சி வேகத்தில் போராடுவதோடு, அறிவு பூர்வமாகவும் சிந்திப்பது தேவை அல்லவா?

அதிகார மையங்களில் பார்ப்பன ஆதிக்கச் சிந்தனைகளை உருத்தொ¢யாமல் அழிப்பதற்குத் தேவையான அளவிற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை அதிகா¢ப்பதற்கும், கருத்தியலில் உறுதி பெறுவதற்குமான போராட்டத்தைத் தொடங்குவது அவசியம் அல்லவா? இப்படிச் சொல்வது வேறு எல்லா வேலைகளையும் மூட்டை கட்டி வைத்து விடச் சொல்வதாகப் பொருள் அல்ல. ஏல்லாவற்றையும் விட, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பிற்குத் தான் முன்னு¡¢மை கொடுக்கப்பட வேண்டும் என்று தான் பொருள். இப்போராட்டத்தைத் தொடங்கினாலே நம்மிடையே உள்ள, நமக்கு எதிரான சக்திகள் வெளியே தொ¢ய ஆரம்பித்து விடும். அவர்களைக் களை எடுத்து விட்டால், புதிய வேகத்துடன் போராட்டங்களை எடுத்துச் செல்ல முடியும்.