Tag Archives: சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்

மோகனம்தமிழ் திரை இசையில் அதிகம் பயன் பட்ட ராகங்களில் மோகன ராகம் முதன்மையான ஒன்று.இந்த ராகத்தைப் பயன்படுத்தாத திரை இசையமைப்பாளர்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு அதிகம் பயன் படுத்தப்பட்ட அழகான ராகம் மோகனம்.

உலகெங்கிலும் உள்ள இசை வகைகளில் இந்த ராகத்தின் சாயல்களை நாம் கேட்டு வியக்கின்றோம்.இனம் ,மதம் ,மொழி என பலவிதமான வேறுபாடுகளால் மனிதன் பிரிந்து காணப்பட்டாலும் உணர்வு நிலைகள் ஒன்றாக இருப்பதால் இசையிலும் சில பொதுமைகள் இருப்பது தவிர்க்க முடியாததாகும்.அப்படிப்பட்ட பொதுமையில் இந்த உன்னத ராகத்தின் மெட்டுக்களை உலகம் முழுதும் வாழும் மக்கள் பாடி வருவதும் ஒன்று எனலாம்.

எனினும் தமிழர்கள் இசையில் காட்டிய ஈடுபாடு வியக்கத்தக்கது.ராகம் என்ற ஒரு வடிவத்தை அவர்கள் பன்னெடுங் காலத்திற்கு முன்பே கண்டடைந்ததது என்பது அவர்களது நுண் ஆற்றலுக்குச் சான்றாகும்

மோகனம் தொன்மையான தமிழ் ராகங்களில் முதன்மையான ஒன்று. பல் வேறு காலங்களில் ,பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த ராகம் பற்றிய ஆதிக் குறிப்பை தருவது சிலப்பதிகாரமே.ஆச்சியர் குரவை என்ற பகுதியில், கூத்துள் படுதல் [ ஆடத் தொடங்குதல் ] 17 வது பாடலில்

” அவர் தம்
செந்நிலை மண்டிலத்தால் கற்கடகக் கைகோ ஒத்து
அந்நிலையே ஆடல்சீர் ஆய்ந்துளார் – முன்னைக்
குரல்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்பு உற்ற
கொல்லைப் புனத்துக் குருத்து ஒசித்தான் பாடுதும்
முல்லைத் தீம்பாணி என்றாள் “

வட்டமாக நின்று ஆயர் மகளிர் கூத்து ஆடும் பொழுது ” பாடுதும் முல்லைத் தீம்பாணி என்றாள் ” என இளங்கோ
பாடுகின்றார்.

இசை அறிஞர் எஸ்.ராமநாதன் மோகன ராகம் பற்றிய விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.அவரின் ஆய்வுகள் முல்லைத் தீம்பாணி தான் இன்றைய மோகனம் என நிறுவியுள்ளன.மேற்குறித்த பாடலை மேற்கோள் காட்டியது மட்டுமல்ல பல்வேறு சான்றாதாரங்களையும் தருகின்றார்.

மிகப் பழக காலத்திலேயே சாதாரண மக்கள் இன்புற்று மிக இயல்பாக பாடிப் பயின்ற ராகம் மோகனம் ஆகும்.

“குழல் வளர்முல்லை ” [ அந்திமாலை சிறப்புச் செய் காதை – வரி 15 ] என்றதாலும் ,ஐந்து தலையுள்ளதான குழல் ; இருந்ததாக கூறப்பட்டிருந்தாலும் , இந்த மோகனமாகிய முல்லைப்பண்ணை ஐந்து துளையுள்ள குழலில் வாசித்தனர் என்று தெரிகின்றது.
” முல்லைப்பண் தற்போது வழங்கும் மோகனம் என்னும் கருத்தை வலியுறுத்தும் குறிப்பொன்று சேக்கிழாரின் ஆனாய நாயனார் புராணத்தில் உள்ளது.

” வள்ளலார் வாசிக்கும் மணித்துளைவாய் வேய்ங்குழலின்
உள்ளுறை அஞ்சு எழுத்தாக ஒழுகியெழு மதுரவொலி ” – [ ஆனாயநாயனார் புராணம் – 29 ]

SRamanathan“வேய்ங்குழலின் உள்ளுறை அஞ்சு” என்றமையால் ஐந்து சுரங்கள் என்ற பொருள் .என்கிறார் டாக்டர் எஸ்.ராமநாதன் [ சிலப்பதிகாரத்து இசைத் தமிழ் ]

இசை ஆய்வாளர் திரு மம்மது பின்வருமாறு விளக்குவார்.
“குரல் மந்தமாக இளி சமனாக…” என்றது சிலம்பு. ஆய்ச்சியர் குரவை வெண்பாவில் குறிப்பிடப்படும் சுரநிரல் (சரி2 க2 பத2) இன்றைய மோகனப் பண்ணிற்கு உரியதென முனைவர் எஸ். இராமனாதன் நிறுவியுள்ளார். எனவே சாதாரி என்றும் முல்லைத்தீம்பாணி என்றும் நம் முன்னோர் கூறியது இன்றைய மோகனப் பண்ணே. ” – [ தொல்காப்பிய தினைப் பண்கள் – நா.மம்மது ]

தொன்று தொட்டு மாணிக்கவாசகரின் திருவாசகம் மோகனராகத்திலேயே பாடப்படுகிறது.விருத்தபாடல்கள் பாடுவதற்கும் பொருத்தமான ராகம் எனக் கருதப்படுகின்றது.

இது ஒரு மூர்ச்சனா ராகமாகும். மூர்ச்ச்சனா ராகம் என்றால் கிரகபேதத்தால் புதிய ராகங்களை உருவாக்கக் கூடிய ராகம் என்று பொருள் படும்.

மோகன ராகத்தின் சுரங்கள் : ஸ ரி2 க3 ப த2 ஸ் – ஸ் த2 ப க3 ரி2 ஸ

மோகனத்தின் ரிஷபம் – மத்தியமாவதி ராகத்தையும்
காந்தாரம் – ஹிந்தோள ராகத்தையும்
பஞ்சமம் – சுத்த சாவேரி ராகத்தையும்
தைவதம் – சுத்த தன்யாசி ராகத்தையும்

கொடுக்கும் என்கிறார் இசையறிஞர் பி.சாம்பமூர்த்தி [ கர்நாடக் சங்கீத புஸ்தகம் – 3ம்பாகம் ]
இது 28 வது மேளகர்த்தா ராகமாகிய ஹரிகாம்போதியின் ஜன்யராகம்.

தமிழ் செவ்வியல் இசையில் மோகன ராமா [ தியாகராஜர் ] , நன்னு பாலிம்பா [ தியாகராஜர் ] , ஏன் பள்ளி கொண்டீரய்யா [ அருணாசலக் கவிராயர் ] , நாராயண திவ்விய நாமம் [ பாபநாசம் சிவன் ] , நின்னுகோரி [ துரைசாமி ] போன்ற பாடல்கள் பிரபல்யம் பெற்றன.

மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்திற்கான பண் ” முல்லைப்பண் ” [மோகனம் ] என வகைப்படுத்தப்பட்டாலும் முல்லை நில பண்ணாகவும் கருதப்பட்டது.

சுபகரமான ராகம் ,வர்ணனைக்கேற்ற ராகம் என்றும் எந்த வேளையிலும் பாடக்கூடிய ராகம் என்றும் , இசை நாடகங்களிலும் , நிருத்திய நாடகங்களிலும் பிரசித்த ராகம் என்று போற்றப்படுகின்ற ராகமாகும்.ராகங்களில் ஆண் , பெண் என்ற வகைப்படுத்தலில் மோகனம் பெண் ராகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் [ பொதுவாக எல்லா மொழி திரைப்படங்களிலும் ] மிகவும் சர்வ சாதாரணமாகப் பயன் படக்கூடிய ராகங்களில் முதன்மையான ராகம் மோகனம் ஆகும்.வட இந்தியாவில் இந்த ராகத்தை ” பூப் ” , என்றும் பூபாளி என்றும் அழைக்கின்றனர்.

மோகனம் , ஹிந்தோளம் , சிவரஞ்சனி ,சுத்தசாவேரி போன்ற ராகங்கள் 5 சுரங்களைக் கொண்ட ராகங்களாகும்.பொதுவாக ஐந்து சுரங்களைக் கொண்ட ராகங்கள் [ Pentatonic Scale ragas ] இனிமைமிக்க ராகங்கள் ஆகும்.இன்று இந்தியா எங்கிலும் ஒலிக்கின்ற ராகமாகவும் உள்ளது.

அதுமட்டுமல்ல மோகன ராகம்.ஐரோப்பா , ஆபிரிக்கா , அரேபியா போன்ற நாடுகளிலும் ஒலிக்கின்ற ராகம்.

ஐரோப்பிய இசையால் உந்துதல் பெற்ற ரவீந்தரநாத் தாகூர் மோகனத்தின் சாயலைக் கொண்ட ஸ்கொட்லாண்ட் நாட்டுப்புற மெட்டில் அமைந்த பாடலை [ Auld Lang Syne ] தனது இசை நாடகத்தில் பயன்படுத்தியுள்ளார்.அதனை அவர் Scotland pupaali என்று அழைத்தார்.

thaiமுக்கியமாக தென் கிழக்கு ஆசிய நாடுகளான சீனா , ஜப்பான் ,கொரியா ,தைவான் ,வியட்னாம் , கம்போடியா , தாய்லாந்து , பிலிப்பைன்ஸ் , நேபாளம் , பூட்டான் , பர்மா போன்ற நாடுகளில் மிகவும் சர்வ சாதாரணாக கேட்டக்கூடிய ராகமாகும்.தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் மோகனம் தான் ஒலிக்கும் என்று கூறக்கூடியளவுக்கு இந்த மோகனம் பயன் பாட்டில் உள்ளது எனலாம்.இந்த நாடுகளின் தேசிய ராகம் என்று சொல்லுமளவுக்கு மோகனம் ஆதிக்கம் செலுத்துகிறது.

மேற்க்குறிப்பிட்ட நாடுகளின் நாட்டுப்புற இசைவடிவங்களில் , பாடல்களில் இந்த ராகத்தின் சாயல் தூக்கலாத் தெரியும்.ராகம் என்ற அமைப்பில் அவர்கள் பயன்படுத்தாவிட்டாலும் மெட்டுக்கள் இந்த ராகத்துள் அவை அடங்கும் எனலாம்.

ஆபிரிக்காவில் சூடான் நாட்டின் நாட்டுப்புற இசையில் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ள ராகங்களில் இதுவும் ஒன்று.

மக்களை மிக எளிதில் கவரக்கூடிய தன்மை இந்த ராகத்தில் இருப்பதால் சினிமா இசையமைப்பாளர்களும் இந்த ராகத்தால் கவர்ந்திளுக்கப்பட்டது இயல்பே. தங்கள் ஆளுமைக்கு ஏற்ப பல இசை வடிவங்களாக் பின்னி தந்திருக்கிறார்கள்.

வானத்தில் நட்சத்திரங்கள் நிறைந்திருப்பது போல தமிழ் சினிமாவில் மோகன ராகத்தால் பாடல்கள் நிறைக்கப்பட்டுள்ளன.மெல்லிதான திரையை விலக்கினால் மின்னி ஜொலிக்கின்ற வைரங்கள் போல ஏராளம் பாடல்கள் விரவிக் கிடக்கின்றன.

ILAYARAJAஇந்த ராகத்தை எல்லா இசையமைப்பாளர்களும் தங்கள் திறமைக்கு ஏற்ப தனித் தன்மையுடன் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.அவர்கள் இசையமைக்கும் படங்களில் மற்ற ராகங்களை விட அதிகமான எண்ணிக்கிகையில் மோகனத்தில் பாடல்களைத் தந்திருக்கின்றார்கள்.அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர்களான மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் , இசை ஞானி இளையராஜா போன்ற இசை மேதைகள் அதிகப்படியான பாடல்களை இந்த ராகத்தில் தந்திருகின்றார்கள்.இவர்கள் இருவரையும் ” மோகனக்கள்ளர் ” என்று அழைக்கும் அளவுக்கு மிக ஈடுபாட்டோடு மிக நல்ல பாடல்களைத் தந்திருக்கின்றார்கள்.

உணர்வு நிலைகளையும், காலத்தையும் குறியீடாகக் காண்பிப்பதில் இசைக்கலை மற்ற எல்லாக் கலைகளையும் விடவும் முதலிடத்தில் இருக்கின்றது.எல்லாக் காலத்திலும் பாடக் கூடிய ராகமாக மோகனம் திகழ்கின்றது.

காலை வேளையின் குறியீடாக பூபாள ராகம் அடையாள பெற்றுள்ளது.தேவாரபாடல்கள் மோகனத்திலும் பாடப்படுவதால் , இறைவனைப் புகழ்ந்து , இனிமையாகப் பாட மோகனமும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

கேட்பவர்களை உருக வைக்கும் இந்த ராகம் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தன்னிகற்றற்றது.மென்மையின் மேன்மையை உணர்த்தும் அதே நேரம் வீர உணர்வையும் வெளிப்படுத்தக் கூடிய சிறப்பு வாய்ந்த ராகம்.மன உணர்வுகளை மாண்புறச் செய்யும் ராகம்.எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும் ராகமாதலால் திரையில் பல்வேறு சூழ் நிலைக்கு பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.

சிலப்பதிகாரத்தில் முல்லைத் தீம்பாணி என்றழைக்கப்படுவது இன்றைய மோகனமே என்று நிறுவிய எஸ்.ராமநாதன் அந்த ஆய்வின் முடிவில் எழுதியுள்ளமை மிக முக்கியமானதாகும்.அவர் பின் வருமாறு எழுதுகிறார் ,

” மேற்காட்டிய சான்றுகளால் எந்நாட்டிசையிலும் காணப்படும் இந்த மோகனம் எனும் முல்லைப்பண்ணை , இசைத்துறையில் முறைபோகிய நம் முன்னோர் – ஏன் குரவை ஆடிய இடைச் சிறுமியரும் அறிந்திருந்தனர் என்பதை நிலை நிறுத்தவே இவ்வளவு கூறினோம்.”

ஆக , மோகனம் எங்கள் கொள்ளுப் பாட்டியின் கொள்ளுப்பாட்டி ஆவாள்.அருமை மோகனம் எங்கள் சொத்து.அதைக் கொண்டாடுவோம்.

தமிழ் சினிமாவில் வைகறைப்பாடலாக , காதல் பாடலாக , எழுச்சிப்பாடலாக , சோகப்பாடலாக , நகைச்சுவைப் பாடல்கள் என நவரசங்களையும் வெளிப்படுத்தும் ஏராளமான பாடல்களைத் தந்து பிரமிக்க வைத்திருக்கின்றார்கள்.
மோகனம் list
01 . கிரி தர கோபால – படம் :மீரா 1945 – பாடியவர் :எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை:எஸ்.வீ .வெங்கட் ராமன்
1940களில் வெளிவந்த மிகப் பிரபல்யமான பாடல்.

02 . வெற்றி எட்டு திக்கும் – படம் :பராசக்தி 1952 – பாடியவர்கள் :T.S.பகவதி

03 . ஆகா இன்ப நிலாவினிலே – படம் :மாயா பஜார் 1956 – பாடியவர்கள் :கண்டசாலா பி.லீலா இசை:கண்டசாலா
மோகனத்தின் இனிமையை மிக எளிமையாகக் காட்டும் பாடல்.நிலவின் அலையில் இரவின் அமைதியில் தென்றல் சுகம் தரும் பாடல.மெல்லிசைக்கு சிறந்த எடுத்துக் காட்டான பாடல்.

04 . மோகன புன்னகை ஏனோ – படம் :பத்தினி தெய்வம் 1959 – பாடியவர்கள் : TMS + பி.சுசீலா இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி

மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த செவ்வியல் இசை பாங்காக அமைந்த ஆரம்பகாலப் பாடல்.மோகனத்தின் உள்ளொளியை செம்மையாக காட்டும் அழகான பாடல்.

05 . பருவம் பார்த்து அருகில் – படம் :மருதநாட்டுவீரன் 1960 -பாடியவர் :TMS இசை: எஸ்.வீ.வெங்கட்ராமன்

கலைநயம் மிக்க மோகனத்தின் எழிலை காட்டும் அழகான எளிமையான சங்கதிகள் கொண்ட பாடல். எஸ்.வீ .வெங்கட்ராமனின் ஆற்றல் மிக்க கலைத்திறனை வெளிப்படுத்தும் பாடல்.”வாடை என்னும் காற்று வந்து வதைத்திட கண்டாயோ சென்றாயோ ” என்னும் வரிகளில் மோகனம் உச்சம் பெரும்.அற்புதமான சங்கதிகள் கொண்ட பாடல்.

06 . ஒ ..ஒ ..நிலாராணி உளமே கவர்ந்தாய் நீ – படம் :சித்தூர் ராணி பத்மினி 1963 – பாடியவர் :சீர்காழி இசை:ஜி.ராமநாதன்

gramanathan 2செவ்வியல் தழுவிய மெல்லிசை இசைப்பாங்கில் [ SemiClassical ] அமைக்கப்பட்ட பாடல்.மரபு சார்ந்த செவ்வியல் இசை தழுவிய மெல்லிசை என்ற தனி உலகத்திற்கு நம்மை அழைத்து மகிழ்வித்த இசை மேதை ஜி.ராமனாதனின் அபாரக் கற்பனைத் திறன் மிக்க பாடல்.மிகவும் கஷ்டமான சங்கதிகளைக் கொண்ட இந்தப் பாடலை தனது தேனினும் இனிய குரலால் சீர்காழி கோவிந்த ராஜன் உயிர்த்துடிப்புடன் பாடி இருக்கின்றார்.இப்படி எல்லாம் கஷ்டமான சங்கதிகளைப் பாட முடியுமா என்று பிரமிக்க வைக்கும் பாடல்.இந்தப் பாடலில் சீர்காழியும் ,ஜி.ராமநாதனும் வானுயர்ந்து நிற்கின்றார்கள்.#

07 . காற்று வெளியிடை கண்ணாம்மா – படம் :கப்பலோட்டிய தமிழன் 1960 – பாடியவர்கள் :பி.பி.ஸ்ரீநிவாஸ் +பி.சுசீலா – இசை:ஜி.ராமநாதன்

பாரதி எழுதிய அமைப்பழகும் சொல்லினிமையும் மிக்க கவிதையை ஆண் ., பெண் பாத்திரங்களுக்கு ஏற்ப அவர்களின் மனப்போக்கிற்கு பொருத்தமாக வகை பிரித்து , அதற்குப் பொருத்தமாக நெஞ்சங்களில் ஊறித் திளைக்க் வைக்கும் ,அந்த உணர்ச்சிகளுக்குஎழில் தரும் ஒரு மெட்டை அமைத்த இசை மேதை ஜி.ராமநாதன் தந்த மோகன விருந்து.

ஏற்க்கனவே எழுதப்பட்ட பாடலுக்கு இசையமைப்பது என்பது இசையமைப்பாளர்களுக்கு சவாலான விசயமாகும்.பாரதியின் பல பாடல்களுக்கு ஜி.ராமநாதன் ஆழ்ந்த ஈடுபாட்டோடு இசையமைத்த முன்னோடியாவார்.கப்பலோட்டிய தமிழன் படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் இசையின் கலங்கரைவிளக்கங்கள் எனலாம்.

08 . அன்பே உந்தன் முன்னாலே – படம் :ஆரவல்லி 1957 – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + ஜிக்கி -இசை:ஜி.ராமநாதன்
இந்தப் பாடலின் ஆரம்ப துள்ளல் இசையிலேயே மோகனத்தின் அற்ப்புத்தத்தை காட்டி நம் மனங்களைக் கனிய வைத்து விடுவார் ராமநாதன்.கேட்கக் கேட்க ஓயாத இனிமையை தரும் பாடல்.ஏ.எம் ராஜாவும் , ஜிக்கியும் இணைந்து பாடிய பாடலகளில் குறிப்பிடத் தக்க பாடல்.

09 . நிலவும் மலரு பாடுது – படம் :தேன் நிலவு 1960 – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா+ பி.சுசீலா – இசை:ஏ.எம்.ராஜா

” மெல்லிசையின் நாயகன் ” ஏ.எம்.ராஜா இசையமைத்து சுசீலாவுடன் இணைந்து பாடிய இனிமையும் மென்மையும் மிக்க பாடல. காதல் உணர்வை அற்ப்புதமாகப் பிரதிபலிக்கக் கூடிய மோகனத்தில் பல பாடலகளை பாடியுள்ள ஏ.எம்.ராஜா இசையமைப்பதிலும் வல்லவர் என நிரூபித்தவர்.தமிழில் மெல்லிசைப் பாடல்களைத் தந்த முன்னோடியானஏ.எம்.ராஜா மோகனத்திற்க்கு புதிய ஒளியை காண்பித்த பாடல்.தமிழில் வெளிவந்த சிறந்த காதல் பாடல்கள் வரிசையில் இடம் பெரும் இந்தப் பாடல் தமிழர் வாழ்வோடு பிணைந்த பாடல்.

10 . பழகத் தெரிய வேண்டும் – படம் :மிஸ்ஸியம்மா – ஏ.எம்.ராஜா+ பி.சுசீலா – இசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
எஸ்.ராஜேஸ்வரராவ் இசையமைத்த பகழ் பெற்ற பாடல். 1950 களில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஆரம்ப கால மோகனராகப்பாடல்.மோகனம் என்றதும் சினிமாவில் இந்தப் பாடலை இலகுவாக அடையாளப்படுத்தும் அளவுக்கு பிரபல்யமான பாடல்.கருத்து ஒன்றை எடுத்து இயம்புவதர்க்குப் பொருத்தமான ராகம் மோகனம் என்பதை மெய்ப்பிக்கும் பாடல்.சாகாவரம் பெற்ற பாடல்.

11 . துள்ளாத மனமும் துள்ளும் – படம் :கல்யாணப் பரிசு 1959 – பாடியவர் :ஜிக்கி – இசை:ஏ.எம்.ராஜா
ஏ.எம்.ராஜாவின் அழகான மெல்லிசைவார்ப்பு.பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் இசையின் உன்னதை எளிமையான தமிழில் தந்த பாடல்.பாடல் வரியா இசையா என்று போட்டி போடும் பாடல்.இரண்டும் இணைந்து ஒன்றுக்குள் ஒன்றாகி நின்று அழகியல் உணர்வை மேம்படுத்தும் பாடல்.எப்பொழுதும் கேட்டககூடிய பாடல்.காலத்தால் இந்த பாடலைக் கொல்ல முடியாது.

12 . நான் வாழ்ந்ததும் உண்னாலே – படம் :விடிவெள்ளி 1962 – பாடியவர் :ஜிக்கி – இசை:ஏ.எம்.ராஜா
இன்ப ரசம் தரும் ராகம் மோகனம் என்ற விதியை மாற்றி சோக ரசத்திலும் சோபிக்கக் கூடிய ராகம் என்று ஏ.எம்.ராஜா இசையமைத்த பாடல்.எளிமையான இசை நம்மை வாட்டி வதைக்கும்.ஜிக்கி நன்றாகப் பாடிய பாடல்.

13. அமுதைப் பொழியும் நிலவே – தங்கமலை ரகசியம் – பி.சுசீலா – இசை:T.G.லிங்கப்பா
மோகன ராகத்தின் கிளைகளில் ஒன்று இந்த அற்ப்புதமான பாடல்.தமிழில் வெளியான இந்தப் பாடல் ஹிந்தியிலும் மிகப் புகழ் பெற்றது.கன்னட பதிப்பில் ” அமர மதுரா பிரேமா ” என்று தொடங்கும் இந்தப் பாடல் , ஹிந்தியில் ” சமகோ பூனம் சந்தா ” என்று ஆரம்பிக்கும்.இந்தப் பாடலைப் பாடியவர் ஆஷா போஸ்லே.அந்தக் காலத்தில் ஹிந்தியிலிருந்து தழுவல்களாக பல பாடல்கள் வெளிவந்த நிலையில் , இந்தப்பாடலும் ஹிந்தியின் தழுவல் என்றே பேசப்பட்டது.இலங்கை வானொலியின் ஹிந்தி பாடல் நிகழ்ச்சியில் அதிகம் ஒலிபரப்பட்ட பாடல்களில் இதுவும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.இந்தபாடல் தமிழில் இருந்து ஹிந்தி சென்ற பாடல்.சில வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் T.G.லிங்கப்பா இதனை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இன்றும் இந்தப்பாடலை இசை நிகழ்ச்சிகளில் சிறுவர், சிறுமிகள் பாடி நம்மை மகிழ்விக்கின்றனர்.அதன் இசை அவ்வளவு வசீகரமானது.

14 . ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் – பாலும் பழமும் – பி.சுசீலா இசை:விஸ்வநாதன் -ராமமூர்த்தி

இந்தப் பாடல் “அமுதைப் பொழியும் நிலவே ” பாடலின் எதிரொலி என்று சொல்லுமளவுக்கு சாயல்களில் ஒற்றுமை நிறைந்துள்ள பாடல்.ஆனாலும் வாத்திய இசையில் மறைக்க பிரயத்தனம் காட்டப்பட்டிருப்பினும் , ஆங்காங்கே சாயல்கள் தலை தூக்கி நிற்கின்ற பாடல்.இரண்டு பாடலையும் மாறி , மாறிப் பாடிப்பார்த்தால் எது எது தெரியாத மயக்கம் தந்து விடும் பாடல்.இருந்தாலும் தனித் தனியே கேட்கும் போது இரண்டு இனிமையான பாடல்கள் என்பதில் சந்தேகமில்லை.

காலையில் பாட பொருத்தமான ராகம் என்று கருதப்படுகின்ற பூபாளம் என்ற ராகத்திற்கு ஈடாக மோகனத்தில் அமைத்த மெல்லிசைமன்ன்ர்களின் இசைமுனைப்பைப் வியக்கலாம்.சுசீலாவின் தேனினும் இனிய குரலால் பாடல் அமரத்துவம் அடைந்து விடுகிறது.

15 .மலர்கள் நனைந்தன பனியாலே – படம் :இதயக்கமலம் 1965 – பி.சுசீலா – இசை:கே.வி.மகாதேவன்
மீண்டும் காலையில் பாடப்படும் பாடலுக்கு மோகனம் பயன்பாடுள்ள பாடல்.துல்லியமாக மோகன ராகம் தெரியக் கூடிய வகையில் அமைக்கப்பட்ட இனிமையான பாடல்.மனதை நெகிழ வைக்கின்ற பாடல்.பாடல் ஆரபிக்கும் போதே கதிர்கற்றைகளை விரித்தெளுப்பும் கதிரவனின் பேரழகை கண்முன்னால் கொண்டு வரும் வாத்திய அமைப்பு வியக்க வைக்கும்.
இசைமேதை கே.வீ.மகாதேவன் இந்த ராகத்தில் எவ்வளவு தோய்ந்திருந்தால் இப்படியாக நம் இதய ஆழத்தில் தங்க வைக்கும் ஒரு பாடலைத் தந்திருப்பார் என எண்ணி ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை. பாடியவரைப் பற்றி சொல்லவே தேவை இல்லை.
மோகனராகம் என்னவெற்று ஒருவர் அறிய வேண்டும் என்றால் இந்தப் பாடலைப் பத்துத் தடவைகள் கேட்டால் போதும்.

16 . கண்மணியே உன் இதய வீணையின் – படம் :மனிதன் மாறவில்லை 1962 – பாடியவர் :உதயபானு – இசை:கண்டசாலா

சிறந்த பாடகரும் இசையமைப்பாளருமான கண்டசாலாவின் இனிய வார்ப்பு.அருந்தலாக சில பாடல்களை மட்டும் பாடிய உதயபானுவின் இனிமையான பாடல்.இந்தப் பாடலை ஏ.எம். ராஜாவில சாயலில் பாடியிருப்பார் உதயபானு.
மனிதன் மாறவில்லை படத்தின் ஆரம்பக் காட்சியிலயே வரும் பின்னணி இசை மோகன ராகத்தில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.கலைக்குரிய ராகம் பூபாளம் என்று சொல்லப்பட்டாலும் திரை இசையமைப்பாளர்கள் மோகனததையும் மிக அதிக அளவில் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கின்றார்கள்.

16 . வெள்ளிக்கிழமை விடியும் வேளை -படம் : நீ 1969 – பாடியவர் :பி.சுசீலா – இசை:விஸ்வநாதன்
இந்தப் பாடலும் அதிகாலைப் பாடல் வரிசையில் வருகின்ற பாடல்.மிகவும் இனிமையான பாடல்.

17 . ஒரு நாள் யாரோ – படம் :சர்வர் சுந்தரம் 1969 – பாடியவர் :பி.சுசீலா – இசை:வி.குமார்
இசையமைப்பாளர் வி.குமார் இசையமைத்த இனிமையான மோகனப் பாடல்.விஸ்வநாதனின் பாடல் என்றே எண்ணத் தோன்றுகின்ற பாடல்.கே.வீ.மகாதேவன்,விஸ்வநாதன் போன்ற இசையமைப்பாளர்களின் காலத்திலேயே அறிமுகமாகி பல இனிய பாடலக்ளைத் தந்த வி.குமார் தனித்தனமையுடன் இசையமைக்கும் ஆற்றல் மிக்கவர்.அவரின் மிக அருமையான மோகனம் தான் இந்தப்பாடல்.

18 . எழில் ஜோதி வானவா – படம் :விப்ரநாராயணா 1958 – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + ஆண்டாள் – இசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
காலைக் கதிரவனாம் ஆதவனை போற்றி புகழும் பாடல்.காலையின் அமைதியையும் , உறங்குபவர்களை மென்மையாக தட்டி எழுப்புவது போன்ற பாடல்.ஏ.எம்.ராஜா இந்த வகைப் பாடல்களை மிகச் சிறப்பாக பாடக் கூடியவர்.ஆண்டாள் என்ற பாடகி ஒரு சில் பாடல்களே தமிழ் சினிமாவில் பாடியிருக்கின்றார்.அந்த வகையில் இந்த பாடல் அவரது பெயரை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தும் பாடல் எனலாம்.

19 . மலரின் மதுவெல்லாம் இன்னிசை தானே – படம் :விப்ரநாராயணா 1962 – ஏ.எம்.ராஜா + பி.பானுமதி – இசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
ஏ.எம்.ராஜா அதிகமான மோகன ராகப் பாடலகளை பாடியிருப்பதால் அவருக்கும் மோகனராகத்திர்க்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பது போல ஒரு வித எண்ணம் ஏற்ப்படும். இந்தப் பாடலை கேட்கும் போது அதனை உணரலாம்.மென்மையான அவரது குரல் மனத்தில் இன்ப சுகத்தை தரும் .அந்த மென்மைக்கு ஈடு கொடுத்து , பி.பானுமதி தனது கம்பீர குரலை மென்மையாக்கி ஒன்றித்து பாடி உளமகிழ்ச்சி தரும் பாடலாக்கியிருப்பார்
பல இனிமையான பாடல்களைத் தந்த எஸ்.ராஜேஸ்வரராவ் அவர்களின் அழகிய மோகன வார்ப்பு.

20 . துணிந்தால் துன்பமில்லை – படம் :கோடி வாழ்ந்தால் கோடி நன்மை – பி.சுசீலா இசை: T.சலபதிராவ்
பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளுக்கேற்ப துள்ளல் இசையில் அமைந்த பாடல்.மோகனராகப் பாடல்.மெல்லிசைப் பாங்கில் துரித கதியில் பாடப்படுவதால் ராகத்தின் சங்கதிகள் குறைத்து பாடப்படுகின்ற பாடல்.
T.சலபதிராவின் இனிமையான மோகன ராகப்பாடல்.

22 . சல சல ராகத்திலே – படம் :கோடி வாழ்ந்தால் கோடி நன்மை – பி.சுசீலா இசை: T.சலபதிராவ்
T.சலபதிராவின் இனிமை குன்றாத இன்னுமொரு மோகன வார்ப்பு.பாடலுக்குப் பாடல் புதிய கோணங்களில் திரை இசையமைப்பாளர்கள் தரும் விநோதங்கள் நம்மை வியக்க வைக்கும்.இந்த பாடலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்.இசையின் சிறப்பை எடுத்து இயம்பும் பாடல்.அதற்குப் பொருத்தமான இசையும் கலந்து சாகா வரம் பெற்று நிலைத்த பாடல்.

22 . உள்ளம் கொள்ளை போகுதே -படம் : நீலமலைத் திருடன் 1959 – பாடியவர் :ஜிக்கி – இசை:கே.வி.மகாதேவன்
மிகவும் பிரபல்யமான அழகான பாடல்.அருமையான சங்கதிகள் விழுகின்ற மெல்லிசைப்பாடல்.இந்த பாடலின் துல்லியம்மான பாதிப்பில் சில வருடங்களுக்கு முன்னே வெளி வந்து புகழ் பெற்ற பாடல் தான் ” பிரியா ..
பிரியா ..பிரியா ஒ பிரியா ” என்ற தேவா இசையமைத்த பாடல்.

23 . வந்த நாள் முதல் – படம் :பாவமன்னிப்பு 1961 – பாடியவர் : TMS – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
மோகனத்தை புதுமையாக கொண்டு அமைத்த பாடல்.மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய இந்த ராகத்தின் கமகங்களை மறைத்து மிக , மிக அருமையாக , அற்ப்புதமான மெல்லிசையாக அமைத்த படைப்பாற்றல் மிக்க மெல்லிசைமன்னர்களின் ஒப்பற்ற பாடல்.T.M.சௌந்தரராஜன் தனது பாணியிலே மிகவும் கம்பீரமாகப் பாடிய பாடல்.இப்படி ஒரு கற்பனையா என்று இந்தப் பாடலைக் கேட்கும் தோறும் ஆனந்த அதிர்ச்சியும் , வியப்பும் தருகின்ற பாடல்.

24 . பாவலன் பாடிய புதுமை பெண்ணை – படம் :முகமது பின் துக்களக் 1973 – பாடியவர் :TMS – இசை:MS.விஸ்வநாதன்
1970 களில் வெளிவந்த இந்த பாடலில் நகைச்சுவை உணர்வு மிகுந்திருக்கும்.
MS.விஸ்வநாதனின் அழகான கற்பனை.பாடல்களுக்கிடையே Happy Birthday to You என்று பாடும் போது மோகனம் இனிக்கும்.

25 . சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை – படம் :எங்கள் செல்வி 1959 -பாடியவர் :பி.சுசீலா – இசை:கே.வி.மகாதேவன்
மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் பாடல் மெது மெதுவாக மாறி சோக உணர்வையும் தருகின்ற பாடல். இன்பத்தில் துன்பத்தை இழைத்து வருகின்ற அழகுப் பாடல்.

26 . நிலையாக என் நெஞ்சில் ஒழி வீசும் தெய்வம் – படம் :ஆடவந்த தெய்வம் 1959 – பாடியவர் :பி.சுசீலா – இசை:கே.வி.மகாதேவன்
குதூகலமிக்க மோகனராகத்தில் இன்பம் போல துனபதையும் இணைத்து இசைமேதை கே.வி.மகாதேவன்தந்த
சிறப்பான பாடல்.இழப்புக்களையும் , சோகங்களையும் ,ஆசைகள நொடிப் பொழுதில் மறைத்து போனாலும் உள்ளம் தாங்கும் தைரியத்தையும் தரும் ஆற்றல் மிக்க பாடல்.மோகனத்தில் இந்த எல்லாம் கலந்த உணர்வை தந்த இந்த பாடல் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்த பாடலாகும்.

27 . ராதா மாதவ வினோத ராணி – படம் :பத்தினி தெய்வம் 1959 – பாடியவர்கள்: TMS +பி.சுசீலா -இசை:T.G.லிங்கப்பா
மோகனம் பளீச் எனத் தெரியும் இனிமையான காதல் பாடல்.T.G.லிங்கப்பாவின் அழகான மோகனக் கற்பனை.எல்லையற்று விரிந்து செல்லும் இசையமைப்பாளர்களின் கற்பனைக்கு அளவில்லை.எனினும் பாடல்களின் சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக அவர்கள தரும் பாங்கு வியக்கத் தக்கது.கர்க்கண்டாய் இனிக்கின்ற காதல் கீதம்.

28 . இன்பமான இரவிதுவே – படம் :மனிதன் மாறவில்லை – பாடியவர்கள் :ஏ.எல் ராகவன் +பி.சுசீலா – இசை:கண்டசாலா
இந்த பாடல் கண்டசாலாவின் கற்பனை அரிதாக பாடிய ஏ.எல்.ராகவன் பாடிய இனிமையான பாடல்.சிந்தை மயக்கும் வெண்ணிலா ஒளியில் காதலர் தனிமையில் பாடும் மதுரமான இரவுப்பாடல்.இசையும் பாடியவர்களும் இனிமை சேர்த்திருக்கிறார்கள்.இனிமையான நினைவு அலைகளை நெஞ்சில் எழுப்பும் இனிமையான பாடல்.

29 . இன்ப லோக ஜோதி ரூபம் போல – படம் :தூய உள்ளம் – பாடியவர்கள் :TMS + பி.சுசீலா –
இசைமேதை பெண்டலாயா நாகேஸ்வரராவ் இசையமைத்த பாடல்.மோகனத்தில் பல விதமாக இசையமைத்தாலும் இந்த பாடலில் தனித் தனமையாக ஒலிக்கும் பாடல்.

30 . தில்லையம்பல நடராஜா -படம் : சௌபாக்கியவதி – பாடியவர் :TMS – இசை: பெண்டலாயா நாகேஸ்வரராவ்
மிக அழகான பாடல். மோகனராகத்தில் அமைந்த இந்தப் பாடல் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற பாடல். இந்தப் பாடலின் தொடக்கத்திலும் , முடிவிலும் இசைத் தட்டில் இல்லாத அருமையான இசை சேர்ப்புக்களை படக காட்சியில் நாம் ரசிக்கலாம். பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்.காலை நேரத்தில் பாடபடுவதாக அமைக்கப்பட்ட பாடல்.

31 . ஆண்கள் குணமே அப்படித்தான் – படம் : நான் வளர்த்த தங்கை,1958 – பாடியவர்கள் :TMS + பி.சுசீலா இசை:- பெண்டலாயா நாகேஸ்வரராவ்
எள்ளலும் துள்ளலும் கேலியும் கிண்டலும் ஒன்றாக இணைந்த இனிமையை மோகனத்தில் மிக அழகாக வடிக்கப்பட்ட பாடல்.மிக , மிக இனிமையான பாடல். இந்த பாடலை எழுதியவர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.

32 . இக லோகமே இனிதாகுமே – படம் :தங்கமலை ரகசியம் – பாடியவர்கள் :TMS + பி.லீலா இசை:T.G.லிங்கப்பா
மோகன ராகத்தில் ஆரம்பித்து பின் ராக மாலிகையாக முடியும் பாடல்
33 . உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே – படம் :புனர்ஜென்மம் – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + பி.சுசீலா – இசை : T.சலபதிராவ்
தமிழ் திரையில் சில படங்களுக்கு இசையமைத்தவர் T.சலபதிராவ்.மோகனராகத்தில் தன பங்குக்கு பல நல்ல பாடல்களைத் தந்த இசையமைப்பாளர்.எத்தனயோ பாடலகளைக் கேட்டாலும் , அதிலும் ஒரு புது ரகமாக யாவர் இசையமைத்த இனிமையான காதல் பாடல்.தென்றல் வீசும் சுகம் தரும் பாடல்.பாடியவர்களால் இன்னும் இந்த மேலோடி இனிமை பெற்றிலங்குகிறது.

34 . கேட்டுப் பார் கேட்டுப்பார் – படம் :மாடி வீட்டி மாப்பிள்ளை – பாடியவர்கள் :TMS + பி.சுசீலா – இசை : T.சலபதிராவ்
T.சலபதிராவ் கடைசியாக இசையமைத்த பாடலகளில் ஒன்று. மிகவும் விறுவிறுப்பான பாடல் என்றாலும் மனதை ஈர்க்கும் வசிய பண்ணும் மெல்லிசைப்பாடல்.

35 . வந்து வந்து கொஞ்சுவதேன் – படம் : பெண்ணின் பெருமை – பாடியவர் :ஜிக்கி இசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
மிடுக்கான குரலில் ஜிக்கி பாடிய அற்ப்புதமான மோகனராகப் பாடல்.மோகனத்தின் இனிமையை ,அதன் துடிப்பை இசையமைப்பாளர் அழகாக வடித்திருப்பதை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.

36 . கையும் கையும் கலந்திடவா – படம் :கடன் வாங்கிக் கல்யாணம் – ஏ.எம்.ராஜா +பி.லீலாஇசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
காதல் பாடல்களில் ஜொலிக்கும் மோகன ராகத்தின் சிறப்புக்கு உதாரணம் மிக்க பாடல்.

37 . எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல் – படம் :கடன் வாங்கிக் கல்யாணம் -ஏ.எம்.ராஜா+பி.லீலாஇசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
இசையமைப்பாளர்களின் கற்பனையை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த பாடல்.ஒரே படத்தில் ஒரே ராகத்தை வைத்துக் கொண்டு அவர்கள காட்டிய வித்தைகளை எண்ணி எண்ணி வியக்கலாம்.

38 . திருவே என் தேவியே வாராய் – படம் :கோகிலவாணி – சீர்காழி + ஜிக்கி இசை:ஜி.ராமநாதன்
ஜி.ராமனாதனின் ஈடிணையற்ற படைப்பு. செவ்வியல் பாணியில் மெல்லிசைக்கு அவர் தந்த இடம் அபாரமானது.ராமனாதனின் தனித்துவம் மிளிரும் பாடல்.பாடியவர்களும் அர்ப்புதமாகப் பாடிய பாடல்.

39 . சிரித்துச் சிரித்து என்னை – படம் :தாய் சொல்லைத் தட்டாதே – TMS + பி.சுசீலா இசை:கே.வீ .மகாதேவன்
1960 களின் மெல்லிசை யுகத்தில் நுழைந்த மோகனம் இந்தப் பாடல்.இந்தப் பாடலில் மோகனம் முழுமையாக மறைத்து வைக்கப் பட்டது போன்று அமைக்கப்பட்ட பாடல்.

40 . கொடுத்துப் பார் பார் உண்மை அன்பை – படம் :விடிவெள்ளி 1960 – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + பி.சுசீலா + திருச்சி லோகநாதன் ஜிக்கி – இசை:ஏ.எம்.ராஜா
விறு விறுப்பான நடையில் மோகனம் நடை பயிலும் பாடல்.வாத்திய இசையும் , பாடிய பாடகர்களும் ராகத்தின் உயிர் நிலையத்தை காட்டியிருக்கின்றனர்.எல்லாவிதமான சூழ்நிலைகளுக்கும் வளைந்து கொடுக்கும் ராகம் எனதை சினிமா இசையமைப்பாளர்கள் நிலைநாட்டிய ராகம் மோகனம்.

41 . வெள்ளிமணி ஓசையிலே -படம் : இருமலர்கள் – பாடியவர் :பி.சுசீலா – இசை: MS.விஸ்வநாதன்
தன்னுடைய தனித்துவத்தை காண்பிக்கும் மெல்லிசை மன்னரின் அழகான மோகனராகப்பாடல். சூப்பர் மோகனம்.மகிழ்ச்சிப் பாடலிலும் செனாய் என்ற அற்ப்புத வாத்தியத்தை உணர்ச்சி ததும்பும் வகையில் பயன்படுத்தியுள்ளமை பாடலின் உச்சம் என்று சொல்லலாம்.அங்கே மோகனம் நம் உயிரைத் தொடுகின்றது.இதுவும் காலையில் பாடும் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது.திரையில் பாடல் முடிவில் வரும் வீணை இசையும் அருமையாக ஒலிக்கும்.

42 . வெள்ளிக்கிழமை விடியும் வேளை -படம் : நீ 1969 – பாடியவர் :பி.சுசீலா – இசை:விஸ்வநாதன்
இந்த பாடலும் காலை நேர பாடலாக அமைக்கப்பட்டுள்ளது.எத்தனை வகையாக இசையமைத்தாலும் இனிக்கும் ராகம் மோகனம்.

43 . செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் -படம் : நான்கு கில்லாடிகள் – பாடியவர்கள் :TMS + பி.சுசீலா – இசை:.வேதா
மெல்லிசையின் சிகரத்தில் நிற்கும் பாடல்.வேதா என்கிற அற்ப்புதமான இசையமைப்பாளர் இசையமைத்த பாடல்.மிகவும் நேர்த்தியான வாத்திய இசையில் மோகனம் நம்மைச் சிலிர்க்க வைக்கின்ற பாடல்.எளிமையும் இனிமையும் உச்சம் பெற்ற பாடல் என்றால் மிகை இல்லை.

44 . கொடியில் இரண்டு மலர் – படம் :உயிரா மானமா -பாடியவர்கள் : TMS + பி.சுசீலா – இசை:.விஸ்வநாதன்
மேல் சொன்ன பாடலின் பாதிப்பு உள்ளது போன்ற ஒரு உணர்வு . அது தெளிவாகப் புலனாகாமல் மறைக்கப் பட்டு விட்டாலும் இனிமையில் சோடை போகாத பாடல்.

45 . யோகிகளே நீர் யார் – படம் : ரிஷ்யசிங்கர் 1946] – பாடியவர்கள் :ரஞ்சன் + வசுந்தரா
1940 களில் வெளிவந்த மோகனராகப் பாடல்.அந்தக் காலத்தை ஒட்டிய இசை.மோகனத்தில் கிடைக்கின்ற மிகப் பழைய பாடல்களில் ஒன்று.

46 . பாடும் போது நான் தென்றல் காற்று – படம் :நேற்று இன்று நாளை 1973 – பாடியவர் :SPB – – இசை:விஸ்வநாதன்
1970 களில் வந்த மோகன ராகப் பாடல்களில் ஒன்று. மக்கள் விரும்பும் வகையில் இசையமைக்கப்பட்டுள்ள ” மெல்லிசைமன்னர் விஸ்வநாதனின் ” பாட்டு என்று சொல்லக்கூடிய முத்திரைப்பாடல்.வாத்திய அமைப்பிலும் மோகன இணக்கம் சிறப்பாக இருக்கும்.

47 . நீலக் கடலின் ஓரத்தில் – படம் :அன்னை வேளாங்கன்னி 1959 – TMS – இசை:G.தேவராஜன்
வேளாங்கன்னியின் புகழ் பாடும் G.தேவராஜனின் அற்ப்புதமான இசை வடிவம்.TMS ஓங்கி குரல் எடுத்து தன்னுடைய பாணியில் பாடிய பாட்டு.மோகனம் அற்ப்புதமாக ரீங்காரமிடும் பாடல்.

48 . பன்சாயி.. காதல் கவிதைகள் -படம் : உலகம் சுற்றும் வாலிபன் 1973 – TMS + LR ஈஸ்வரி – இசை:MS.விஸ்வநாதன்
உலகம் சுற்றும் வாலிபன் , உலகின் பல பாகங்களிலும் படமாக்கப்பட்ட திரைப்படம்.உலக இசையில் மோகனராகம் உள்ளது என்ற வகையில் அதற்குப் பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தில் அமைக்கப்பட்ட பாடல்.
ஜப்பானிய பாடலான ” ” தழுவலாக அமைக்கப்பட்ட பாடல்.

49 . தங்கத் தோணியிலே – படம் :உலகம் சுற்றும் வாலிபன் – பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ் + பி.சுசீலா – இசை:.விஸ்வநாதன்
தென் கிழக்கு ஆசியாவில் பரவலாக அறியப்படும் மோகன ராகம் மீண்டும் அதே படத்தில் பயன்படுத்தப்பட்டது தற்ச்செயலான சம்பவம் அல்ல.

50 . புதிய வானம் புதிய பூமி – படம் :அன்பே வா 1967 – பாடியவர் :TMS – இசை:MS.விஸ்வநாதன்
தனது விடுமுறையை கழிக்க சிம்லா வரும் நாயகன் [ எம்ஜிஆர் ] , சிம்லாவின் இயற்க்கை அழகில் லயித்துப் பாடும் பாடல்.மலையும் குன்றுகளும் நிறைந்த காட்சிகளைக் கண்டதும் நாயகன் உற்சாகம் பொங்க பாடும் இந்த சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாக மோகனம் பயன்பட்டுள்ளமை கனகச்சிதமானதாகும்குறிஞ்சி நிலத்திற்கு மிகவும் பொருத்தமானது மோகனம்.தன்னெளுச்சியும் ஆனந்தமும் விளைந்த பாடல்.

51 . ஒரு ராஜா ராணியிடம் – படம் :சிவந்த மண் 1968 – பாடியவர் : TMS +பி.சுசீலா – இசை:MS விஸ்வநாதன்
ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படத்திலும் அழகான இந்த மோகனம் இந்த இனிய பாடலாக வடித்துத் தரப்பட்டுள்ளது.இது மெல்லிசைமன்னரின் மேதமைக்குச் சான்று.

52 . கட்டழகுத் தங்க மகள் திருநாளோ – படம் :காவல்காரன் 1967 – பாடியவர் :பி.சுசீலா – இசை:MS.விஸ்வநாதன்
மெல்லிசைமன்னரின் இன்னுமொரு இனிய மோகன வார்ப்பு.பின்னணி இசை மிக அழகாக மோகனத்தை இசைக்கும்.

53 . மஞ்சளும் தந்தாள் மறைகள் தந்தாள் -படம் : தேனும் பாலும் 1971 – பாடியவர்கள் :பி.சுசீலா+ ஜிக்கி – இசை:MS.விஸ்வநாதன
கலைநயம் மிக்க அற்ப்புதமான இசை வார்ப்பு.அத்தி பூத்தது போல ஜிக்கியும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய மனதை மயக்கும் மெல்லிசைமன்னரின் சாகாவரம் பெற்ற பாடல்.கேட்கும் பொது ஆனந்தக் களிப்பு மேலிடும் பாடல்.

54 . கம்பன் ஏமாந்தான் – படம் :நிழல் நிஜமாகிறது – பாடியவர் :SPB – இசை:.விஸ்வநாதன்
விரக்தி மனப்பான்மை உணர்விலும் அற்ப்புதமாக ஜொலிக்கும் மோகனத்தை இவ்விதம் பல பல ரகமாய் தந்த மெல்லிசை மன்னரை எண்ணி எண்ணி நாம் வியக்கும் பாடல்.

55 . திருச் செந்தூரின் கடலோரத்தில் -படம் : தெய்வம் – பாடியவர்கள் :TMS + சீர்காழி – இசை:.குன்னக்குடி வைத்தியநாதன்
தனித்தனமையுடன் இசையமைக்கும் குன்னக்குடியின் வேகமான மோகனராகப் பாடல்.பாடியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு பாடிய அழகான பாடல்.

56 . ஒரு காதல் சாம் ராஜ்ஜியம் கண்ணில் – படம் :நந்த என் நிலா – பாடியவர்கள் :ஜெயச்சந்திரன் + T.K.கலா இசை:V.தட்சிணாமூர்த்தி
ஆற்றல் மிக்க இசையமைப்பாளரான V.தட்சிணாமூர்த்தயின் அழகான ,இனிமையான மோகனராகப்பாடல்.

57 . அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா -படம் : எதிர்நீச்சல் – பாடியவர்கள் :பி.சுசீலா+ TMS – இசை:V .குமார்
மோகனத்தில் நகைச்சுவை உணர்வை மிக அழகாக வெளிப்படுத்தய பாடல்.ஆச்சர்யமிக்க வகையில் மோகனத்தை பயன்படுத்திய பாடல்.

58 . வளை யோசையும் கை வளையோசையும் – படம் :அந்த ராத்திரிருக்கு சாட்சி இல்லை – பாடியவர்கள் :SPB +எஸ்.ஜானகி
1980 களில் வெளிவந்த மோகன ராகப்பாடல்.இசை : கே.வீ.மகாதேவன்
59. கண் வழியே கண் வழியே – ஜஸ்டிஸ் விஸ்வநாத் – TMS + பி.சுசீலா – இசை: வேதா
ஹிந்திப்பாடலான ” Panchhi Banu Udti ” என்று தொடங்கும் Chori Chori என்ற படத்தில் சங்கர் ஜெய்கிசன் இசையில் லதா மங்கேஸ்கர் பாடிய பாடலின் தமிழ் வடிவம்.
60 . அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் – TMS இசை : V.குமார்
61 . போறாளே பொன்னுத்தாயி – படம் : கருத்தம்மா – சுஜாதா + உன்னிமேனன் – இசை : ஏ.ஆர்.ரகுமான்
மேலே உள்ள ஏ.ஆர்.ரகுமானின் அழகான பாடலும் V.குமாரின் பாடலும் O.. Neele Gagen Ke Tele Film: Hamraaz [ 1967] Singer : Rafi Music: Ravi …. என்ற பாடலின் தழுவலாகும்.

62 . உலகம் எங்கும் ஒரே மொழி – நாடோடி – TMS + பி.சுசீலா – இசை: MS விஸ்வநாதன்
மிகவும் இனிமையான பாடல்.உலகமெங்கும் ஒலிக்கும் மோகனத்தில் காதால் என்ற பொது மொழியை பற்றிய அற்ப்புதமான பாடல்.எப்போது கேட்டாலும் திகட்டாத பாடல்.

63. ஒரு பக்கம் பார்க்கிறா ஒரு கண்ணை சாய்க்கிறா – படம் :மாட்டுக்கார வேலன் – பாடியவர் :TMS – இசை:கே.வி.மகாதேவன்
கேலியும் , கிண்டலும் நிறைந்த அழகிய மோகனம் மிளிரும் பாடல்.

64. வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்காய் – படம் :காதல் கோட்டை – பாடியவர் :கிருஷ்ணராஜ் – இசை:தேவா
கேலியும் , கிண்டலும் நிறைந்த தேவாவின் பாடல்.இந்தப் பாடல் சில வருடங்களுக்கு முன் இளையராஜா இசைமைத்த ” எங்க ஊரு பாட்டுக்காரன் ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன் ” என்ற பாடலை நினைவூட்டும்.

65. பிரியா பிரியா ஒ பிரியா – படம் :கட்டபொம்மன் – பாடியவர் :SPB +சித்ரா – இசை:தேவா
அழகான பாடல்.” உள்ளம் கொள்ளை போகுதே உண்மை இன்பம் காணுதே ” என்ற ஜிக்கியின் பாடலை ஞாபகப்படுத்தும் பாடல்.

வீர உணர்வைப் பிரதிபலிக்கவும் , ஒன்றைப் பறைசாற்றவும் பயன்படுத்தப்பட்ட பாடல்கள் சில:

66 . எல்லாம் இன்ப மயம் – படம் :எல்லாம் இன்ப மாயம் 1956 – பாடியவர்கள் :கண்டசாலா + குழுவினர் – இசை:கண்டசாலா
உற்சாகம் பொங்க புதுவருடத்தை வாழ்த்தி வரவேற்கும் பாடல்.இன்ப உணர்ச்சியும் உறுதியும் இணைந்த பாடல்.

67 . வரும் பகைவர் தனை வென்று – படம் :அம்பிகாபதி 1957 – பாடியவர் :TMS – இசை:ஜி.ராமநாதன்
படத்தின் கதாநாயகன் அமபிகாபதி , மன்னனை வாழ்த்தாமல் , அவனின் வெற்றிக்காகப் போர் புரிந்த வீரர்களையும் ,அவர் தம் பெற்றோரையும் ,மனைவிமக்களையும் வாழ்த்தும் பாடல்.வீர உணர்வு பாடலில் கொப்பளிக்கிறது.ஜி.ராமநாதனின் கம்பீரமான் இசையமைப்பு.T.M.சௌந்தரராஜன் ஓங்கிக் குரல எடுத்து அர்ப்புதமாக்ப் பாடிய பாடல்.

68 . சத்தியமே லட்சியமாய் செல்லடா – படம் :நீலமலைத் திருடன் 1959 – பாடியவர் :TMS – இசை:கே.வி.மகாதேவன்
தமிழ் திரையில் குதிரையில் சவாரி செய்யும் போது பாடும் பாடல் மரபைத் தொடக்கி வைத்த பாடல் என்று எண்ணுகின்றேன்.மெல்லிசைப்பாங்காகவும் வீர உணர்வு ததும்பும் வகையிலும் அமைக்கப்பட்ட திரை இசைத்திலகம் கே.வீ. மகாதேவனின் அழகான கற்பனை.கமபீரமான பாடல்.

69 . அச்சம் என்பது மடமையடா – படம் :மன்னாதி மன்னன் 1960 – பாடியவர் :TMS – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
கம்பீரம் ,நெஞ்சுறுதி ,இன உணர்வு , விழிப்புணர்ச்சி போன்றவற்றை ஒன்றாகத் திரட்டித் தரும் லட்சியப்பாடல்.இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் இனம் புரியாததும் விவரிக்க முடியாததுமான ஒரு உணர்வு எழும்.அந்த அளவிற்கு மோகனம் ஆட்சி செலுத்தும் பாடல்.இது போன்ற இசை அற்ப்புதங்கள் சினிமா என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் நமக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!
இல்லாத ” திராவிட நாட்டை ” மீட்கப் போவதாக தி.மு.க வினர் நடாத்திய நாடகங்களை இது போன்ற பாடல்கள் வீச்சுடன் பிரச்சாரம் செய்தன என்பது அன்றைய அவலம்.

70 . வலியோர் சிலர் எளியோர் தமை – படம் :மணிமகுடம் – பாடியவர் :TMS – இசை:R.சுதர்சனம்
பாரதிதாசனின் கருத்தாழமிக்க பாடலுக்கு பிரிக்கவியலா நல்ல இசை வடிவம் கொடுக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது.
“கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே ” என்ற கவி மூலத்தை இசை மிக அழகாக எடுத்துச் செல்லும் பாடல்.

71 . காலத்தை வென்றவன் நீ – படம் :அடிமைப்பெண் 1969 – பாடியவர்கள் :பி.சுசீலா + எஸ்.ஜானகி – இசை:கே.வி.மகாதேவன்
அடிமைகளாக இருந்த மக்களை விடுதலை செய்த ஒருவனின் பெருமையைப் பெண்கள் போற்றி புகழும் பாடல்.நெகிழ்சியும் ,உருக்கமும் , மிக அழகான சங்கதிகளும் நிறைந்த கே.வீ.மகாதேவனின் மோகனக் கொடை இந்தப்பாடல்.கேட்கும் போதெல்லாம் பரவசப்படுத்தும் பாடல்.

72 .நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் – படம் :உலகம் சுற்று வாலிபன் – பாடியவர்:சீர்காழி இசைவிஸ்வநாதன்
புலவர் வேதாவின் சிறப்பான பாடல்.சீர்காழி கோவிந்தராஜன் அர்ப்புதமாகப் பாடிய பாடல்.மோகனத்தின் இந்த வகைப் பாடல்களால் பயன் அடைந்தவர்கள் நடிகர்களே!குறிப்பாக எம்ஜிஆர் தனது அரசியல் கருத்துக்களை எடுத்துச் செல்ல பயன்படுத்திக் கொண்டார்.

73 . புது வெள்ளம் புது வெள்ளம் – படம் :புது வெள்ளம் 1975 – பாடியவர்:TMS – இசை:M.B.ஸ்ரீநிவாசன்
இசைமேதை M.B.ஸ்ரீநிவாசனின் மோகனப் படைப்பு.அடக்கப்பட்டவனின் உரிமைக்குரலாக ஒலிக்கும் பாடல்.

74 .சமாதானமே தேவை – படம் :மருத நாட்டு வீரன் – பாடியவர் :TMS இசை:எஸ்.வீ .வெங்கட் ராமன்
சமாதானத்தை வலியுறுத்தும் பாடலுக்குப் பொருத்தமான மோகன இசை.

75 .நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு – படம் :என் அண்ணன் – பாடியவர்:TMS இசை:கே .வீ .மகாதேவன்
மீண்டும் கே .வீ .மகாதேவனின் விடுதலை உணர்வைத் தூண்டும் பாடல்.வித்தியாசமான கற்பனை.

76 . வாழ்க நள ராஜனே – படம் :கடன் வாங்கிக் கல்யாணம் 1959 – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + சீர்காழி + பி.லீலா – இசை:எஸ்.ராஜேஸ்வரராவ்

இந்த திரைப்படத்தில் வரும் நாடகத்தில் பாடும் பாடல்.ஏ.எம்.ராஜா + சீர்காழி + பி.லீலா போன்றோர் இணைந்து பாடிய அபூர்வமான பாடல்.கர்னாடக இசைப்பணியில் அமைந்த நாடகப் பாடல்.

77 . மன்னவர் பொருள்களை – படம் :கர்ணன் 1964 – பாடியவர் :TMS – இசை:.விஸ்வநாதன் ராமமூர்த்தி
கர்ணனை புகழ்ந்து இந்திரன் வாழ்த்தும் விருத்தப் பாடல்.

75 . வெற்றி மீது வெற்றி வந்து – படம் :தேடி வந்த மாப்பிள்ளை – பாடியவர் :SPB – – இசை:விஸ்வநாதன்
பெண் குரல் சாயலில் SP பாலசுப்ரமணியம் பாடிய ஆரமபகாலப் பாடல்.மோகனத்தின் இனிமை குன்றாத இசையமைப்பு

78 . அகில பாரத பெண்கள் திலகமாய் – படம் :பெண் – பாடியவர் :எம்.எஸ்.ராஜேஸ்வரி – – இசைமேதை ஆர்.சுதர்சனம் இசையமைத்த பெண் விடுதலையை வெளிக்கொணரும் மோகன ராகப்பாடல்.

இவை போன்று இன்னும் நிறைய பாடல்கள் இருக்கலாம்.

.இளையராஜாவின் மோகனம் .

தமிழக நாடுப்புற இசை உள்ளுணர்விலும் ,செவ்வியல் இசைராகங்களிலும் புதிய ஒளி பாய்ச்சிய திரை இசையமைப்பளர்களில் முதன்மையானவர் இசைஞானி இளையராஜா.நாடுப்புற இசையின் இதய ஒலியும் ,ராகங்களின் நுண் அலகுகளும் ஒன்றிணைந்த பாடல்களைத் தந்து தமிழக மக்களின் இதயஒலியை இசைச் சனாதனிகள் கைகளிலிருந்து விடுவிதது தன்னுடைய இசைத்திறத்தால் தமிழக மக்களின் உள்ளங்களில் கலந்த இசைமேதை ஆவார்.

அவரது வருகை.தமிழ் சினிமாவில் நிகழ்ந்த இசை நூதன நிகழ்வு [ Music phenomenon ] . மண் சார்ந்த இசை செல்வத்தை வழங்கும் ஒரு பேராற்றல் மிக்க கலைஞனை மக்கள் அடையாளம் கண்டு கொண்டாடினர்.

இளையராஜா தமிழக நாட்டுப்புற இசையின் ஆன்மாவை காட்டிய விதம் பன்மடங்கு நாட்டுப்புற பாடல்கள் , இசைப்பாடகர்கள் வெளிவரக் காரணமாயிற்று.” எல்லாம் வெறும் தன்னானே தானே ” என்று இகழ்ந்த நாட்டுப்புற இசைக்கு மவுசு ஏற்ப்பட்டது.

ராகப் பயன் பாட்டிலும் தனித் தன்மையை காட்டிய இசைஞானி தனக்கு முன்பிருந்த இசை மேதைகளைப் பின்பற்றிச் சென்றாலும் , அதிலும் ஓர் புதுமையை [ Novelty ] காட்டி வெற்றி பெற்றவராவார்.மோகனத்தில் அவர் முன்னோடிகளான பல இசை யயமைப்பாளர்க்ளின் பாடலகளைப் பார்த்தோம்.அவற்றில் பெரும்பாலான பாடல்களின் மெட்டுக்கள் கிட்டத்தட்ட யார் அதைப் போட்டார்கள் என்பதை இனம் காண முடியாத வண்ணம் [ ஒரேமாதிரியாக ]அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.இசையமைப்பாளர்கள் யார் என்று அந்தப் பாடல்களை வைத்துக் கண்டு பிடிக்க முடியாதளவு க்கு ஒரே தன்மை இருக்கும்.

இசை மேதைகளான பெண்டிலாய நாகேஸ்வரராவ் , எஸ்.ராஜேஸ்வரராவ் ,T.சலபதிராவ் , R.சுதர்சனம் , கண்டசாலா , TGலிங்கப்பா ,

சில சமயம் விஸ்வநாதன் ராமமூர்த்தி , கே.வீ .மகாதேவன் , R.கோவர்த்தனம் , வேதா ,GK வெங்கடேஷ் இன்னும் பிற இசைய்மைப்பாளர்களின் பாடல்கள் இன்னார் தான் இசையமைத்தார்கள் என்று கண்டு பிடிக்க முடியாதளவு இருப்பதையும் அவதானிக்கலாம்.

KVமகாதேவன் இசையமைத்த ” மயக்கும் மாலை பொழுதே நீ போ போ ..” என்ற குலேபகாவலி திரைப்படப் பாடலை உதாரணம் கூறலாம்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான ” கூண்டுக்கிளி ” படத்திற்காக KVமகாதேவன் அவர்களால் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலை , தன்னுடைய மற்றொரு படமான குலேபகாவலி யில் பயன்படுத்திக் கொண்டார்.குலேபகாவளிக்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்.

இன்றுவரை இந்தப் பாடலை இசையமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்களே என்று வானொலிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.பின்னர் 1960 களில் தனித் தன்மை புலப்பட்டாலும் அதிலும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் குறைந்த அளவிலேயே வெளிப்பட்டன.நடிகர்களின் பெயர்களை வைத்து அடையாளம் காட்டபட்ட அளவிற்கு இசையமைப்பாளர்களின் படைப்புக்கள் என்று பரந்து பட்ட மக்கள் மத்தியில் புகழ் பெறவில்லை.

ஆனால் இந்தக் குறையை நிவர்த்தி செய்தது இளையராஜாவின் இசையே.அவருடைய பாடல்களைப் பாடும் எந்த பாடகரோ பாடகியோ , அல்லது நடிகரோ யாராக இ ருந்தாலும் அங்கே இளையராஜா இசை என்றே அறியப்படும்..அந்த அளவுக்கு அவரது இசை அவரை அடையாளம் காட்டி இருக்கிறது.

இளையராஜாவுக்கு முந்தைய இசைமேதைகள் எல்லோரும் மரபு வழி நின்றும் , மீறியும் மோகனத்தில் நல்ல பாடல்களைத் தந்தாலும் ,அவர்களை விட மேலைத்தேய ஹார்மொனி இசையை விஸ்தாரமாக நமது மரபு இசையுடன் இணைத்த பெருமை இளையராஜாவின் இசைச் சாதனை ஆகும்.இம்மாதிரியான இசைக்கலவை இசை எனபது தமிழுக்கு மிகவும் புதியது.இப்படிப்பட்ட ஹார்மொனி கலந்த இசையை இந்தியாவில் வேறெங்குமே கேட்க முடியாது.இந்தவகை இசையை பெரும்பாலும் ஒவ்வொரு பாடலிலும் கேட்டு மிகிழலாம்.

01. கண்ணன் ஒரு கைக் குழந்தை – படம் :பத்திரகாளி – பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ்+ பி.சுசீலா – இசை:இளையராஜா

தம்பதிகளின் அன்னியோனியத்தை விளக்கும் உன்னதமான பாடல்.வாத்தியங்களின் இணைப்பு மோகனத்தின் தன்னிகரில்லா இனிமையைக் காட்டிய இன்னுமொரு உச்சமான பாடல்.பொருத்தமான பாடகர்களின் தெரிவும் பாடலை இனிமைக்கு முக்கியமான காரணம்.

எப்போது கேட்டாலும் என்னையறியாமல் ஆஹா என்று சொல்ல வைக்கின்ற தேனினும் இனிய பாடல்.
ராஜாவின் ஆரம்பகால இந்தப்பாடல் இசைமேதைகளின் வரிசையில் அவரை அமர்த்திய பாடல்.

“ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா “

“அன்னமிடும் கைகளிலே ஆடி வரு பிள்ளை இது
உன்னருகில் நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லை அது “

என்ற வரிகளை பாடும் போது உருகாதவர்களையும் உருக வைத்து விடுகிறது இசை.மோகனத்தின் இனிமையின் எல்லை இதுவோ என எண்ண வைக்கும் பாடல்.

02. மீன் கொடித் தேரில் மன்மதராஜன் – படம் :கரும்புவில் – பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ்+ ஜென்சி – இசை:இளையராஜா

03. கண்மணியே காதல் என்பது – படம் :ஆறிலிருந்து அறுபது வரை – பாடியவர்கள் :எஸ்.பி.பி + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
புதுமையான் பின்னனி இசை ,ஹம்மிங் என்று இளையராஜா அமர்க்களம் செய்த பாடல்.முன்னைய சந்ததியினரும் ரசித்த பாடல்.

04. நிலவு தூங்கும் நேரம் – படம் :குங்குமச் சிமிழ் – பாடியவர்கள் :எஸ்.பி.பி + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
இசைஞானியின் இசை நெசவுகளில் தான் எத்தனை ஜாலங்கள் , எத்தனை வினோதங்கள் ! இன்பமும் ,துன்பமும் தரும் உணர்வலைகளில் நம்மை மிதக்க வைக்கும்.

“வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே “

என்ற இந்தப் பாடலின் சரணம் மிக கனிவானது .

05. பூவில் வண்டு கூடும் – படம் :காதல் ஓவியம் – பாடியவர் :எஸ்.பி.பி – இசை:இளையராஜா
செவ்வியல் இசை பாணியில் அமைந்த பாடலிலும் வாத்திய இசைக் கலப்புகளில் புது வியாக்கியானம் செய்யும் இசை ஞானியின் மோகனம்.என்னுடைய 13 வயது மகன் திரும்ப திரும்ப கேட்கும் பாடல்.

06. நான் ஒரு பொன் ஓவியம் கண்டேன் – படம் :கண்ணில் தெரியும் கதைகள் – பாடியவர்கள் :எஸ்.பி.பி + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா

ஒரு ராகத்தை அப்படியே திருப்பி திருப்பி சலிப்புத்தரும் ஒரே முறையில் போடுவதால என்ன பயன் ?

இந்த ராகத்தை புதிய திசையில் இழுத்து இழுத்து ஒவ்வொரு கணமும் இசையில் புதிய சப்தங்களால் புதிய கிளர்ச்சியை நமக்குள் கிளர்த்தும் அர்ப்புதத்தை செய்து காட்டிய இசைஞானியின் ஆழ்ந்த படைப்பாற்றலுக்கு எடுத்துக்காட்டான பாடல்.

இந்தப்பாடல் அணு அணுவாக ரசிக்க வைக்கும் அளவுக்கு புதிய புதிய திருப்பங்களைக் கொண்ட பாடல்.இசைக்குயில்கள் சுசீலாவும் ஜானகியும் இணைந்து பாடிய ஆனந்தம் இணைந்தெளும்பும் புதுமைப் பாடல்.

மலிவான தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு பாடலா..?

07. நான் உந்தன் தாயக வேண்டும் -படம் : உல்லாசப் பறவைகள் – பாடியவர் :எஸ்.ஜானகி- இசை:இளையராஜா

எளிமையான மேலோடி .விறுவுருப்பான தாளம்.அனுபல்லவிக்கு பின் வருவது பொலிவு தரும் இடையிசை.சரணத்திக்கு முன் வரும் இடையிசை மோகன பேரொளியை வீசி நிற்கும்.

08. வந்ததே ஆகா குங்குமம் – படம் :கிழக்கு வாசல் – பாடியவர் :சித்ரா – இசை:இளையராஜா

” விட்டு விடுதலையாகி நிற்ப்பாய் சிட்டுக் குருவி போல ” என்பதற்கு ஏற்ப நம்மை வானில் மிதக்க வைக்கும் பாடல்.மிருதங்கம் என்ற வாத்தியத்தை கோரசுடன் இணைத்தது மட்டுமல்ல வயலின் இசை மகிழ்ச்சிப் பெருக்கால் துள்ள வைக்கின்ற பாடல்.சித்திராவின் குரலில் பாடல் மின்னி ஜொலிக்கறது.சங்கீதம் சந்தோசம் உல்லாசம் என்றால் அது மோகனத்தில் வரும் போது மடை திறந்த வெள்ளம் அல்லவா.

09. ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு – படம் :தர்மயுத்தம் – பாடியவர் :மலேசியா வாசுதேவன் – இசை:இளையராஜா

தங்க ரதத்தில் மோகனராகத்தை ஏற்றி வைத்த ராஜாவின் ஏகாந்தமும் ,அன்புணர்ச்சியுமிக்க பாடல்.மேலைத்தேய ஹார்மொனி இசையின் நுண் இன்பத்தை பாரம்பரிய தமிழ் இசைச் செல்வமாகிய மோகனத்தில் இணைத்த சாதனைப்பாடல்.

10. தேன் மல்லிப் பூவே – படம் : – பாடியவர்கள் :T.M.சௌந்தரராஜன் + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
மோகனத்தின் சாரலலால் இசை நாதத்தை அள்ளி வீசும் எளிமையான பாடல்.காற்றலையில் கலந்த தேனமுதுகளில் ஒன்று இந்தப் பாடல்.

11. கீதம் சங்கீதம் நீ தானே – படம் :கொக்கரக்கோ – பாடியவர்கள் :எஸ்.பி.பி + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா

பாரம்பரிய ராகத்தினை நவீன இசைக்குள் இடையே நடை பயிற்றி வந்த இசைஞானியின் பரீட்சாத்தப் பாடல்.ஹம்மிங்கில் ராகத்தின் உயிர்நிளைகளைத் தொடும் பாடல்.

12. எங்கும் நிறைந்த இயற்கையில் – படம் : இது எப்படி இருக்கு – பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ் +எஸ்.ஜானகி – இசை:இளையராஜா

மலையில் இருந்து இறங்கும் குளிர் மேகம் நம் தோள்களைத் தழுவும் சுகம் தரும் பாடல்.குறிப்பாக ஜேசுதாஸ் குரலில்

“வெண்பனி போல் அவள் தேகம் – அள்ளும்
செங்கனி போல் இதழ் மோகம் தேனாக “

என்ற வரிகளைப் பாடும் போது நெஞ்சை அள்ளும்.அத்துடன் வரும் குக்குகூ ..குக்குகூ..குக்குகூ என்ற ஹம்மிங் மோகனத்தைக் கூவும்.

13. பொன்னாரம் பூவாரம் -படம் :பகலில் ஒரு இரவு – பாடியவர் :SPB – இசை:இளையராஜா
நாட்டுப்புற இசையின் தாள அமைப்பில் உள்ள மெட்டுக்கு நுண்மையாக மேலைத்தேய ஹார்மோனி இசையின் ஒட்டுறவை மிக லாவண்யமாக இணைத்து இனிமை ததும்ப தந்த இசைஞானியின் பாடல்.

14. இரு பறவைகள் மலை முழுவதும் – படம் :நிறம் மாறாத பூக்கள் – பாடியவர் :ஜென்சி – இசை:இளையராஜா

இது மோகனம் தந்த அதிசயப்பாடல்.எத்தனை ,எத்தனை வண்ணங்களை அள்ளி வீசிய இசைஞானியின் இசை ஓவியம்.மேற்கு இசையின் கவுண்டர் பாயிண்ட் [ மெடுக்குள் மெட்டு இணையும் இசை ] என்ற இசைத் துணுக்குகளை வாத்திய இசையில் கொட்டி இன்பத்தின் வியனுலகில் நம்மை மிதக்க வைத்த பாடல்.

15. நின்னுக் கோரி வர்ணம் – படம் :அக்னி நட்சத்திரம் – பாடியவர் :சித்ரா – இசை:இளையராஜா

நவீன தொழிலில் நுட்பத்தில் வந்த நவீன மோகன இசை வடிவம்.Programming என்ற வகையில் இளையராஜா பரீட்சாத்த இனிமையான பாடல்.செவ்வியல் இசை கீர்த்தனையான ” நின்னுகோரி ” யை அடியாகக் கொண்டு ஆரம்பிக்கும் பாடல்.ஒலியமைப்பிலும் , பாடல் இசையமைப்பிலும் விதந்து பேசப்பட்ட பாடல்.சித்ரா மோகனம் ததும்பப் பாடிய பாடல்.

16. வான் மேகங்களே வாழ்த்துங்கள் – படம் :புதிய வார்ப்புக்கள் – பாடியவர்கள் :மலேசியா வாசுதேவன் + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
மென்மையான புல்லாங்குழல் இசையுடன் ஆரம்பிக்கும் ஆச்சரியம் தரும் மோகனத்தை தனது இசை ஆளுமையால இனிமையும் ,எழிலும் பின்னிப்பிணைத்து இசைஞானி நெய்த இசை நெசவு.இது தனித்துவமான மோகனச் சிற்பம்.

17. கஸ்தூரி மானே கல்யாண தேனே – படம் :நல்லவனுக்கு நல்லவன் -பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ்+ உமாரமணன் – இசை:இளையராஜா

கைத்தட்டு ஓசையும் ,அதிரடியான ,ஆச்சர்யமிக்க மிருதங்க இசையுடன் தொடங்கும் புதுமையான கோணத்தில் மோகனத்தை அணுகிய பாடல்.குறிப்பாக செனாய் என்ற [ பெரும்பாலும் அழுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ]வாத்தியத்தை துள்ளும் இனிமைக்கும் மகிழ்ச்சிக்கும் பயன் படுத்திய பாங்கும் பெண்குரலில் ஹோர்ஸ இசையும் அமர்க்களம் செய்த பாடல்.

18. ஒரு கணம் ஒரு யுகமாக – படம் :நாடோடித் தென்றல் – பாடியவர்கள் :இளையராஜா + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா

1990 களில் வெளிவந்த சிறந்த பாடலகளைக் கொண்ட
நாடோடித் தென்றல் படத்தில் வெளியான நல்ல பாடல்களில் ஒன்று.இன்பமான வலி என்று சொல்வார்களே அந்த உணர்வை மிக அழகாக வெளிப்படுத்தும் காதல் ராகம்.இடையே மென்மையாக ஓடிச் செல்லும் பின்னனி இசை புதுமையானதாக இருக்கும்.

19. மலரே நலமா – படம் :உரிமை – பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ்+ எஸ்.ஜானகி- இசை:இளையராஜா
கோடி தரம் கேட்டாலும் மோகனம் சலிக்காது எனபதற்கு இந்தப்பாடலும் சாட்சி. நயன பாசை பேசும் காதலர்களின் மதுரப்பாடல்.

20. வான் போலே வண்ணம் கொண்டு – படம் :சலங்கை ஒலி – பாடியவர்கள் :எஸ்.பி.பி + எஸ்.பி.ஷைலஜா – இசை:இளையராஜா

மீண்டும் செனாய் இசையை மகிழ்ச்சிக்கு பயன்படுத்திய ராஜாவின் வண்ணம் கொண்டு வந்த மோகனம்.வீணாய் போகும் ஒரு காட்சிக்கு இந்தப்பாடல் பய்னபட்டிருக்கிறது.

21. இதயம் ஒரு கோயில் – படம் :இதயகோயில் – பாடியவர் :இளையராஜா – இசை:இளையராஜா
உயிரை பிசையும் பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் ஒன்று என்று துணிந்து கூறலாம்.உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே என்பதற்கேற்ப பாடபட்ட பாடல்.இசைத் தாய் தவமிருந்த பெற்ற மகனின் ஆதம்ராகம் இந்த மோகனமான பாடல்.

இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் பொங்கி பெருகி வரும் உணர்வின் உன்னதமான நிலைகளை தொட்டு ,சிலிர்க்க வைப்பதுடன் , இனம் புரியாத சோகத்தையும் ஏற்ப்படுத்தும். செனாய் வாத்திய இசை உயிர் நிலைகளை தொடும்படியாக இசையமைக்கப்பட்ட பாடல்.

22. தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் -படம் :பகலில் ஒரு இரவு – எஸ்.ஜானகி – இசை:இளையராஜா

ஒரு தாளத்தையும் ,பெண்களின் கோரஸ் இசையையும் கொண்டே முழுப் பாடலையும் அமைத்த் இசைஞானியின் பரிசோதனைப் பாடல்.மோகனம் கனியாய் இனிக்க்றது.

23. காத்திருந்தேன் தனியே – படம் :ராசா மகன் – பாடியவர்கள் :சந்திரசேகர் + லேகா – இசை:இளையராஜா
அழகும் இனிமையும் மிக்க மோகனத்தை வளப்படுத்த இசைஞானி தந்த மேனமையான மேலோடிப் பாடல்.புதிய பாடகர்கள் மிக அருமையாகப் பாடிய பாடல்.

24. என்ன சமையலோ – படம் :உன்னால் முடியும் தம்பி – பாடியவர்கள் :எஸ்.பி.பி + குழு- இசை:இளையராஜா

மோகனத்தில் எல்லாவிதமான பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம் எனபதற்கு மோகனத்தில் ஆரம்பிக்கும் இந்த நகைச்சுவைப் பாடலும் நல்ல உதாரணமாகும்.பின் ராகமாலிகையாகும் இந்தப் பாடலில் நாதஸ்வர இசை அமோகமாக இருக்கும்.

25. ஆசை நெஞ்சின் கனவுகள் – படம் :முகத்தில் முகம் பார்க்கலாம் – பாடியவர்கள் :மலேசியா வாசுதேவன் + பி.சுசீலா – இசை:இளையராஜா

இளையராஜவின் ஆரம்பகாலப் பாடல்.மரபு ராகங்களில் புதிய இசையை சலிக்காது இணைக்கும் தனிப்பாங்கு காட்டும் நல்ல பாடல்.

26. மாலை நிலவே மன்மதன் – படம் :பொண்ணுக்கேற்ற புருஷன் – பாடியவர்கள் :மனோ + சித்ரா – இசை:இளையராஜா

” ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் ” என்ற பாடலைப் போன்ற , குதிரை வண்டியில் போவது போல ஒரு சூழ்நிலைக்கு போடப்பட்ட பாடல்.அந்தப் பாடலின் சாயல் சிறி துமில்லாத பாடல்.மோகனராகம் கம்பீரமாக வீறுநடை போடும் அருமையான சங்கதிகள் நிறைந்த பாடல்.

27. மல்லிகை மாலை கட்டி – படம் :புதிய ராகம் – பாடியவர் :இளையராஜா – இசை:இளையராஜா

தவறான ஒருவனை மணந்த பெண் ஒருத்தியின் வேதனையை வெளிப்படுத்துவதும் ,அவளை தேற்றுவதுமான் பாடல்.மோகனத்தில் மனதை வருடும் இசை நம்மை வசப்படுத்துகிறது.

28. சமையல் பாடமே – படம் :மணிப்பூர் மாமியார் – பாடியவர்கள் :SPB எஸ்.பி.சைலஜா – இசை:இளையராஜா
மோகனத்தில் வெளி வந்த நகைச்சுவைப் பாடல்.மோகனத்தில் ஆரம்பித்து ராக மாலிகையாக தொடரும் பாடல்.இந்தப் பாடலை உன்னால் முடியும் தம்பி படத்தில் சற்று மாற்றத்துடன் மீண்டும் பயன்படுத்தினார்கள்.

29. தெரியாமல் மாட்டிக்கொண்ட – படம் :மாமியார் வீடு – பாடியவர்கள் :இளையராஜா + எஸ்.என்.சுரேந்தர் + குழு – இசை:இளையராஜா

இதுவும் ஆண் குரல்களில் ஒலித்த நல்ல இனிமையான நகைச்சுவைப் பாடல்.மோகனத்தின் சிறப்பான சங்கதிகளை நகைச்சுவையாக பாடியிருப்பார்கள்.

30. அடி அரைச்சு அரைச்சு – படம் :மகாராசன் – பாடியவர்கள் :மனோ + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா

நாட்டுப்புற இசைத் தாளத்தில் துள்ளிக் குதித்து ஓடும் மோகனத்தை மிக அருமையாக குழைத்து நம்மை பிணைத்த இசைஞானியின் குதூகலப்பாடல்.

31. மாலை சூடு மாலை நேரம் – படம் :புதிய ராகம் – பாடியவர் :சித்ரா- இசை:இளையராஜா

மேற்கத்தேய இசைத் தாளத்தில் கட்டப்பட்ட இனிமையான மோகனம்.

32. அழகான நம் பாண்டி நாட்டினிலே – படம் :புதுபட்டி பொன்னுத்தாயி – பாடியவர் :இளையராஜா

ஒவ்வொரு பாடலிலும் வெவ்வேறு விதமாக பாடல் அமைப்பைத் தரும் இசைஞானி மதுரை மீனாளைப் புதுமையாக புகழ்ந்து பாடும் பாடல்.உறுமி , செனாய் வாத்தியங்கள் பாடல் இயக்கத்தில் அழகு சேர்க்கின்றன..பின்னணி பாடியவர்களும் இனிமை சேர்கிறார்கள்.

33. கேளடா மானிடா இங்கு -படம் :பாரதி 2000 – பாடியவர் :ராஜ்குமார் பாரதி – இசை:இளையராஜா

ஒரு விசயத்தைப் பறை சாற்ற மோகனம் மிகவும் உகந்த ராகம் என்ற வகையில் மிகவும் கம்பீரமாக இசையமைக்கப்பட்ட பாடல்.

பாடலில் ” பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் ” என்ற சரணத்திற்கு முன்பாக இடை யிசையாக வரும் நாதஸ்வர இசையும் அதனுடன் இணைந்த நாட்டுப்புற இசைத் தாளமும் மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும்.

இந்தப் பாடலை பாடிய ராஜ்குமார் பாரதி [ பாரதியாரின் பேரன் ] மிகவும் எழுச்சி பொங்கப் பாடியிருப்பது வெகு சிறப் ப்பு எனலாம்.

34. கூட வருவியா என்னோடு – படம் : வால்மீகி – பாடியவர் :சாயா ஷிண்டே – இசை:இளையராஜா

மிகச் சமீபத்தில் வெளிவந்த இந்தப்பாடல் ஆரம்ப இசையிலேயே மோகனத்தைச் சொரிந்து இயற்க்கை வனப்பின் அழகை நம் மனத்திரையில் ஓவியமாக்கி விடும் அர்ப்புதப் பாடல்.
” என்னை வென்று ” என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் ஹம்மிங் மோகனத்தை மீட்டெழுப்பி நம்மை இசையில் பெரும் செல்வந்தராக்கி , நம் வாழ்வை விலைமதிப்பற்றதாக்கி விடுகிறது.ஒரு தேவதை நம்மை அனைத்துக் கொண்டு வானவீதியில் பறப்பது போன்ற உணர்வை தரும் பாடல்.இசைஞானியின் முத்திரைப்பாடல்.

35. ஒரு ராகம் பாடலோடு காதில் – படம் :ஆனந்த ராகம் – பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ்+எஸ்.ஜானகி- இசை:இளையராஜா

எத்தனை விதமான கோணத்திலிருந்து புதியதாக பாடல்களைத் தந்தாலும் அதிலும் ஒரு தனித்துவத்தைக் காட்டும் இசைஞானியின் இனிமையான பாடல்.அதிசயக்கத்தக்க வகையில் எழுச்சியூட்டும் தாள லயத்துடன் ஆரம்பிக்கிறது பாடல். இது போன்ற ஒரு கற்பனை எழ மனதில் அந்த ராகத்தில் அவர் எவ்வளவு மூழ்கியிருப்பார் என எண்ணாமல் இருக்க முடியவில்லை!இது போன்ற கற்பனை இசைஞானி போன்றோருக்குத்தான் சாத்தியமோ என எண்ண வைக்கும் பாடல்.
எங்கள் வாழ்வோடு இணைந்து விட்ட பாடல்.

36. ஏ.பி.சி .. நீ வாசி சோ ஈசி – படம் :கைதியின் டயரி – பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ்+ வாணி ஜெயராம் – இசை:இளையராஜா

L’Arlésienne Suite Number One, 4th movement, called ‘Carillon’ என்ற சிம்பொனி இசைவடிவத்தின் ஆரம்ப இசையை வைத்துக் கொண்டு இளையராஜா செய்த மோகன விளையாட்டு.மேலைநாட்டிசையின் மோகனத்தை நமக்குக் காட்டிய பாடல்.

37. உன்னாலே நான் பெண்ணானேனே – படம் :என்னருகில் நீ இருந்தால் – பாடியவர்கள் :மனோ + உமாரமணன் – இசை:இளையராஜா

மோகனத்தின் செழுமையும் ராஜாவின் கற்பனை வளமும் ஒன்றிணைந்து இனிமை கொட்டும் பாடல்.மோகனம் என்றால் இனிமை. அதற்க்கு சிறந்த உதாரணம் இந்தப் பாடல்.

38. ஆலோலங் கிளி தோப்பிலே – படம் :சிறை சாலை – பாடியவர்கள் :எஸ்.பி.பி + சித்ரா – இசை:இளையராஜா

மோகனம் என்ற மூலத்திலிருந்து எத்தனை விதமான கற்பனைகள் தந்த சினிமா இசையை தரம் குறைந்த இசை என்று கூற முடியுமா? என் வியக்க வைக்கும் இசைஞானியின் இன்னுமொரு அழகான மோகன வார்ப்பு.

39. இந்த அம்மனுக்கு எந்த ஊரு – படம் :தெய்வ வாக்கு – பாடியவர் :இளையராஜா – இசை:இளையராஜா

நாடுப்புற இசைச் சந்தப் பரிவாரங்களுடன் நகைச்சுவை கலந்து கம்பீரமாய் நிறைவு தரும் மோகனம்.

தன மனம் லயித்த விதங்களில் எல்லாம் வாடாத அழகிய மலர்களைப் போன்ற மோகன மலர்களை அள்ளியிறைத்த இசைஞானியின் கற்பனை வளம் பிரமிக்கத் தக்கது. நம் வாழ்வின் ஏதாவது நிலையில் நாம் கேட்டுக் கேட்டு வியக்க வைக்கும் இன்புறத் தக்க இளையராஜாவின் இன்னும் சில பாடல்கள் இதோ :

40. குண்டு மல்லி குண்டுமல்லி -படம் :மாயா பஜார் – பாடியவர்கள் :ஹரீஸ் ராகவேந்தரா + பவதாரணி – இசை:இளையராஜா

41. ராதே என் ராதே வா ராதே – படம் :ஜப்பானில் கல்யாண ராமன – பாடியவர் :ரமேஸ் + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா

42. இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன் – படம் :பூவரசன் – பாடியவர்கள் :எஸ்.பி.பி + சித்ரா – இசை:இளையராஜா

43. எனக்கொரு மகன் பிறப்பான் – படம் :அண்ணனுக்கு ஜெ – பாடியவர்கள் :எஸ்.பி.பி + குழு – இசை:இளையராஜா

44. நாள் தோறும் எந்தன் கண்ணில் – படம் :தேவதை – பாடியவர்கள் :இளையராஜா + கவிதா கிருஷ்ண மூர்த்தி – இசை:இளையராஜா

45. எந்த ஆத்து பையன் அவன் – படம் :மணிப்பூர் மாமியார் – பாடியவர்கள் :மலேசியா வாசுதேவன் எஸ்.பி.சைலஜா – இசை:இளையராஜா

46. வேல் முருகனுக்கு மொட்டை – படம் :புயல் பாடும் பாட்டு – பாடியவர்:மலேசியா வாசுதேவன்- இசை:இளையராஜா

47. வா வா வஞ்சி இள மானே – படம் :குரு சிஷ்யன் – பாடியவர்கள் :மனோ + சித்ரா- இசை:இளையராஜா

48. கன்னித் தேனே இவள் மானே -படம் : – பாடியவர்கள் :தினேஷ் + எஸ்.ஜானகி

49. வயசுப் புள்ளே வயசுப் புள்ளே – படம் : அண்ணன் – பாடியவர்கள் :இளையராஜா + சுஜாதா – இசை:இளையராஜா

50. ராதே என் ராதே வாராதே – படம் : யப்பனில் கல்யாணராமன் – பாடியவர்கள் :தினேஷ் + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா

51. கேட்கலியோ கேட்கலியோ -படம் :கஸ்தூரிமான் – பாடியவர்கள் :ஹரிகரன் + – இசை:இளையராஜா

52. கேட்குதடி கூ ..கூ கேட்கலியோ – படம் : கட்டுமரக்காரன் – பாடியவர்கள் :SPB + சித்ரா – இசை:இளையராஜா

53. அடடா இங்கே விளையாடும் -படம் : மாயா பஜார் -பாடியவர்கள் : ஜோலி ஏப்ரகாம்+ பவதாரணி – இசை:இளையராஜா

54. குக்கூ கூ கூவும் குயிலக்கா – படம் :வள்ளி – பாடியவர் :லதா ரஜனிகாந்த் – இசை:இளையராஜா

55. சாய்ந்து சாய்ந்து நீ – படம் :நீ தானே என் பொன் வசந்தம் – பாடியவர்கள் :சங்கர் ராஜா + NSK ரம்யா – இசை:இளையராஜா

பக்திப்பாடல்கள் சில:

திரு முருகா ஒரு முறை வா திருவடி சரணம் கந்தா – சீர்காழி
தங்கத்தாமரைத் தொட்டிலிலே – சூலமங்கல சகோதரிகள்
மாணிக்க வீணை ஏந்தும் – பி.சுசீலா
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் – ராதா மாணிக்கம்

உலக இசையில் மோகனத்தை கேட்டுப்பாருங்கள்.Youtube இல் இந்தப்பாடல்கள் கிடைக்கின்றன.

lea

01 auld lang syne – lea michele
02 Traditional Thai Music
03 Sukiyaki—Kyu Sakamoto
04 Kong Ling – Sukiyaki 196x
05 tai orathai thailand
06 Sukyaki – Yasmin Lucas
07 Blue Diamonds – Sukiyaki 1963
08 Sukiyaki (Live) – English Version

09 Sukiyaki and Edelweiss

தமிழர்களின் வாழ்நிலையிலிருந்து உருவான தொல்லிசையின் உன்னதத்தையும் ,அது தருகின்ற அழகியலையும் பறை சாற்றி வருபவள் தொல் மூதாட்டியான எங்கள் மோகனம்.

நம் மரபுரிமையான இந்த ராகத்தை , அவளின் அழகை , வனப்பை காலத்திற்க்குக் காலம் இடையறாது ,சலிப்பின்றி அவளை என்றென்றும் இளம் குமரியாக நம் முன் உலவவிட்ட இசைமேதைகளான திரை இசையமைப்பாளர்களைப் பெருமையுடன் நினைவு கூருதல் தகுந்த செயலே.

தென் கோடித் தமிழகத்தில் தொல் மக்களான இடைக்குல சிறுமிகள் துள்ளிக் கூத்தாடிப் பாடி மகிழ்ந்த ” முல்லைத் தீம்பாணி ” யான மோகனத்தைத்தான் இன்றளவும் அதன் ஆதார சுருதியுடன் பாடி மகிழ்கின்றோம்.அதை காப்பாற்றி வருகின்ற இசைக் கலைஞர்களின் , மக்களின் நுண் ரசனை போற்றத்தக்கது.
தமிழ் மக்களின் பெருமைகளில் ஒன்று இந்த மோகனம்.

[ தொடரும் ]

முன்னைய பதிவுகள்:

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்

 

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்

gramanathan 2நாடகங்களில் தியாகராஜ பாகவதருக்கு மட்டுமல்ல வேறு சில கலைஞர்களுக்கும் பின்பாட்டு பாடியவர் ஜி.ராமநாதன். கனத்த குரல் என்றாலும் இதமாமகப் பாடக்கூடியவர். நாடகங்களில் இருந்தே தியாகராஜபாகவதரின் நண்பரானவர்.அதற்க்கு முன் அண்ணன் சுந்தர பாகவதரின் ஹரிகதா காலட்சேபங்களில் பின்பாடு பாடி வந்தவர்.அந்தத் தொடர்பால் நாடகத்திற்கும் , பின் சினிமாவுக்கு வந்து சேர்ந்த மேதை தான் ஜி.ராமநாதன்.

தமிழ் சினிமாவில் கனமான ராகங்களில் , சாஸ்திரீய இசை கெடாமல் மெல்லிசைப் பாங்கான பாடல்களை அமைத்து மக்களை பேரின்ப வெள்ளத்தில் மூழ்கடித்தவர்.கர்நாடக இசை வித்துவான்களின் வாய்களில் நுளையாத ராகங்கள் என்று அழைக்கப்பட்ட ராகங்களில் பாடல்களை அமைத்து பாமரர்களையும் அந்த பாடல்களை , அந்த ராகங்களைப் பாட வைத்த
வர் இசைமேதை ஜி.ராமநாதன் .

” சங்கீத விஷயம் ” என்ற தலைப்பில் பாரதி மிக நொந்து கூறுவான்..

” நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் ‘வாதாபி கணபதிம்’ என்று ஆரம்பஞ் செய்கிறார். ‘ராமநீ ஸமான மெவரு’, ‘மரியாத காதுரா’, ‘வரமுலொஸகி’ ஐயையோ, ஐயையோ, ஒரே கதை.

எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்திற்குப் போ, எந்த ‘வித்வான்’ வந்தாலும், இதே கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டு பாட்டுக்களை வருஷக் கணக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தோற் காது உள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.”

சங்கீத வித்துவ சிரோன்மணிகள குறிப்பிட்ட சில ராகங்களைப் பாடி மக்களை அலுத்துப் போக வைத்த காலத்தில் சிரோன்மணிகளே அறியாத , அவர்கள் பாட விரும்பாத சாருகேசி என்ற ராகத்தை பாமர மக்களிடமும் கொண்டு சேர்த்த மாமேதை ஜி.ராமநாதன்.ஹரிதாஸ் என்ற படத்தில் ஜி.ராமநாதன் இசையமைத்து தியாகராஜ பாகவதர் பாடிய மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடல் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.இந்தப் பாடலின் புகழே சாருகேசி என்ற ராகத்தை சங்கீத வித்துவான்களைப் பாட வைத்தது.இந்த பாடலால் ஈர்க்கப்பட்ட செம்மங்குடி சீனிவாஸ் ஐயர் , ஜி.ராமநாதனைஅவரது வீடு சென்று பாராட்டியது வரலாறு. ” கிருபைய பாலையா சௌரே ” என்ற தியாகைய்யரின் சாருகேசி ராகப் பாடல் தூசி தட்டிப் பாடப்பட்டது. ” கிருபைய பாலையா சௌரே ” என்ற சாருகேசி ராகக் கீர்த்தனையை செம்மங்குடி சீனிவாஸ் ஐயரே பாடி புகழ் பெற வைத்தார்.

ராகங்களில் அற்ப்புதமான பாடல்களைத் தந்த ஜி.ராமநாதன் கர்நாடக இசையை முறையாகப் பயின்றவர் அல்ல. தனது கேள்வி ஞானத்தாலேயே இந்த சாதனையை நிலை நாட்டினார்.இசை இலக்கணங்களை அடிப்படையாக வைத்து கொண்டு பாடலகளை உருவாக்கிய அதே வேளை , அதனையும் தாண்டி தனது படைப்புக்களை மக்களின் ரசனைக்குரியதாக்கியும் கொடுத்தார்.

இந்தப் பண்பை கவிதை பற்றி தாகூர் கருத்துடன் ஒப்பு நோக்கலாம்.

” இலக்கண சூத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தால் கவிதை இனபமளிக்காது.” – தாகூர்

எம்.எஸ்., ஜி.என்.பாலசுப்ரமணியம்,’சகுந்தலை’
எம்.எஸ்., ஜி.என்.பாலசுப்ரமணியம்,’சகுந்தலை’

நவீன கலைவடிவமாக கிடைத்த சினிமாவை சனாதனிகள் தீண்டத்தகாததாகவே கருதி வந்தனர்.புகழ் பெற்ற சங்கீத வித்துவான் ஜி.என்.பாலசுப்ரமணியம் சினிமாவில் நடித்த போது “பெரிய “கர்னாடக இசை வித்துவான்கள் கடுமையாக எதிர்த்ததுடன் , அவரது கச்சேரிக்கு பக்கவாத்தியம் வாசிக்கவும் மறுத்தனர்.பின்னர் எதிர்ப்புக்களையும் மீறி GNP படங்களில் நடித்தார்.

அதே போல் செம்மங்குடி சீனிவாசய்யர் சினிமாவில் நடிக்கும் தனது ஆசையை தந்தையாரிடம் கூறிய போது ” நீ சினிமாவில் நடித்தால் கிணற்றில் விழுந்து சாவேன்” என தந்தை சொன்னதால் சினிமா ஆசையைக் கைவிட நேர்ந்தது.

1990 களில் மெல்லிசை மன்னர் எம்.விஸ்வனாதனின் வாத்திய இசையுடன் இணைந்து , புகழ் பெற்ற கர்னாடக இசை கலைஞர் மஹாராஜபுரம் சந்தானம் நடாத்திய ” சங்கமம்” இசை நிகழ்ச்சிக்கு ‘ கர்னாடக இசையின் உரிமையாளர்’ என்று கருதப்பட்ட சங்கீத விமர்சகர் சுப்புடு பார்வையாளராகக் கூட வர மறுத்தார்.

இவை ஒரு ஒரு புறமிருக்க தமிழ் திரைப்படத்தால் விளைந்த ஒரே ஒரு நன்மைஎன்பதே அதன் இசை தான்.இசையில் தமிழருக்கு இருந்த நீண்ட மரபும் , அதன் அறுபடாத தொடர்ச்சியும் மற்றகலைகளை விட சிறப்பான இடத்தை இசை பிடித்துக் கொள்ள உதவியது. இசையில் பல புதிய முயற்ச்சிகளுக்கும் வழி ஏற்ப்பட்டது.

radioceylonஆனால் சினிமாப்பாடல்களை ஒலிபரப்புவதை இந்திய வானொலி நிலையங்கள் இருட்டடிப்புச் செய்தன.இந்த அருமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட இலங்கை வானொலி பல கோடிமக்களைக் கவர்ந்தது.பாடகர்களும் தமது பாடலகளை வானொலியில் கேட்டுஆனந்தித்தனர்.பின்னாளில் உருவான பல பாடகர்கள் இலங்கை வானொலியை கேட்டு வளர்ந்தவர்களே.   1965 இலிருந்து தான் இந்திய வானொலிகள் திரைப்படப்பாடல்களை ஒலிபரப்ப தொடங்கின.ஆனால் மக்களில் அதிகப் பெரும்பான்மையினர் ரசிக்கும் மெல்லிசையை ஒடுக்கவும் , மக்களில் அற்ப தொகையளவில் ரசிக்கும் கர்னாடக இசைக்கு தேவைக்கு அதிகமான சலுகைகளையும் ,விளம்பரங்களையும் பார்ப்பனீய ஆதிக்க அரசுகளால் கொடுக்கப்பட்டன. இந்த சலுகைகளை பெற்றுக்கொண்டு மனம் போன போக்கில் குரல் வளமில்லாதவர்களும் பாடி தொலைத்தனர். இவ்விதம் நல்ல குரல் வளமற்ற பாடகர்கள் நமது காலத்தில் மட்டுமல்ல தன் காலத்திலும் இருந்ததை மேற்ப்படி கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றான் பாரதி!.

” இங்கே ஓரிரண்டு பேரைத் தவிர மற்றப்படி பொதுவாக வித்வான்களுக் கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மிகவும் வியப்புண்டாயிற்று. ஒன்று போல எல்லோருக்கும் இப்படித் தொண்டை வலிமை குறைந்தும் நயங் குறைந்தும் இருப்பதன் காரணமென்ன?இதைப் பற்றிச் சில வித்வான்களிடம் கேட்டேன்.” – பாரதி

அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற அகங்காரம் தான் காரணமாக இருக்கமுடியும்.இந்த சேஸ்டைகளுக்கு நாடக மேடைப் பாடல்களும் , பின் வந்த சினிமா பாடல்களும் முடிவு கட்டின. நாடக . சினிமா பாடல்களை மக்கள் கொண்டாடினார்கள். எஸ்.ஜி .கிட்டப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர்.பி.யூ.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள் ,டி.ஆர்.மகாலிங்கம் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றார்கள்.

இசை வகைகளிலும் ஏற்றத்தாழ்வு காட்டிய சனாதனிகள் வாத்தியங்களிலும் அதனை கடைப்பிடித்தார்கள்.மிருதங்கம் “வாசிப்பது ” , பறை ” அடிப்பது ” [ வாசிப்பதல்ல ] போன்ற நடைமுறைகளைக் குறிப்பிடலாம். நாடக மேடைகளில் பயன்படுத்தப்பட்ட ஹார்மோனியம் மீது அவர்கள காட்டிய விரோதம் அதன் உச்சம் எனலாம்.அகில இந்திய வானொலிகளில் இன்று வரை ஹார்மோனிய இசைக்கு என தனியே ஒரு கச்சேரி நிகழ்ச்சி ஒதுக்குவது கிடையாது.தான் வாழ்ந்த காலத்தை மீறிய புதுமையான பல கருத்துக்களை கூறிய பாரதியும் சனாதனிகளின் குரலை ஒலிப்பது போல ஹார்மோனியத்தை இகழ்ந்து பின்வருமாறு எழுதுகிறான்.

“..ஹார்மோனியம் தெரு முழுவதையும் ஹிம்சைப் படுத்திவிடுகிறது. ஒரு தேசத்தாரின் செவியைக் கெடுத்து ஸங்கீத உணர்ச்சி குறையும்படி செய்ய வேண்டுமானால், கிராமம் தோறும் ‘நாலைந்து ஹார்மோனியம்’ பரவும்படி செய்தால் போதும்.” – பாரதி

harmoniumஇவ்வாறு ஒதுக்கப்பட்ட , இழித்து பழிக்கப்பட்ட ஹார்மோனியத்தால் நாடக இசை வளம் பெற்றது என்பது தான் நடைமுறை உண்மையாக இருந்தது. கேவலமாகப் பேசப்பட்ட இந்த வாத்தியத்தில் பாண்டித்தியம் பெற்றவர்தான் இசைமேதை ஜி.ராமநாதன்.மிகவும் வேகமான தனது வாசிப்பால் ” பாஸ்ட் பிங்கர் ” [ Fast Finger ] ராமநாதன் என புகழ் பெற்றார். ஹார்மோனியத்தில் நளினமாடிய அவரது விரல்களிலிருந்து பிறந்தவை தான் அற்ப்புதமான அவரது பாடல்கள். அவர் மட்டுமல்ல திரை இசைத் திலகம் கே.வீ. மஹா தேவன் , மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி , இசைஞானிஇளையராஜா போன்ற பல இசைமேதைகள் உருவாக்கிய பாடல்களும் ஹார்மோனியத்தின் உதவியுடன் பிறந்தவையே!

நாடகங்களில் ஒலித்த பல ராகங்கள் சினிமாவிலும் ஒலித்தன. இன்றும் மிகவும் பரவலாக பயன்படும் ராகங்களில் மிக முக்கியமாக ஆபேரி என்கிற ராகம் இருந்து வருவதைக் குறிப்பிடலாம். இந்த ராகம் நாடக மேடையால் மிகவும் புகழ் அடைந்தது. ஜனரஞ்சகமாகப் பயன் படுத்தப்பட்ட ராகங்களில் வசீகர ராகமாகும்.

இந்த ராகத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் வெவ்வேறு விதமான சூழ் நிலைகளுக்கும் பொருத்தமாக பல பாடல்களை அமைத்து முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.பலராமன் பாடுவதாக அவர் அமைத்த ஒரு பாடல்

” பதி போற்றும் துதி ஏற்றும்
பலராமன் நானே “

இந்த பாடலை தியாகைய்யரின் மிகவும் புகழ் பெற்ற செவ்விசைப்பாடலான

” நகுமோ மோ கனலேனி
நாதாலி தெலிசி “

என்ற ஆபேரி ராக மெட்டை தழுவி அமைத்தார்.அந்த வர்ண மெட்டை அப்படியே பயன்படுத்தினார்.அதே ராகத்தில் மீண்டும் , வேறு ஒரு கோணத்தில் கோவலன் நாடகத்தில் கண்ணகி கோவலனுக்கு எழுதும் உருக்கமான கடிதப் பாடலாக கீழ் உள்ள பாடலை அமைத்தார்.

“மதியிலுயர் வணிகர்குல மதனில் வரு துணைவரடி
மலர்தொழுது கண்ணகை யெனும்
மாதெழுது மோலைமொழி யாதெனின்மனத்தினிய
வாசமிகு மோத விரிவாய்
அதிகமயல் கணிகைதர அவளுடைய சுகமடைய
அனுதினமு மரியகலவி
ஆசைபெற நாடியவள் வீடுகுடி யானபடி
யாலெனது தேக மெலிவாய்
கொதிசுரமு மிகவடைய வலிகுறுதி யுமதுடைய
குளிர்வதன மலரி னழகின்
கோலமது காணும்வரை தானநிலை யாகுமுயிர்
கூறுவது வோபி சகிலை
ததியதனில் வரவுமன மிசியவிலை யெனிலெனுடல்
தனையுமினி அறிய வசமோ
சற்றுகிருபா நோக்கம் வைத்துவர லிங்கனெழு
தத்துணிவு பட்ட திதுவே..”

கேட்பவர்களை உருக வைக்கும் பாடல்.

மீண்டும் சத்யவான் சாவித்திரி நாடகத்தில் ஒரு காட்சியில் காட்டில் சிங்கத்திடம் இருந்து சாவித்திரியை காப்பாற்றிய பின் , களைப்பில் உறங்கும் சத்தியவானை சாவித்திரி எழுப்பும் காட்சியில் பாடப்படும் ஒரு பாடல்..

சத்தியவான் : ஏனோ என்னை எழுப்பலானை மடமானே
எனக்கதனை உரைத்திடுவாய்
இசைந்து கேட்பேன் நானே

சாவித்திரி : சிங்கத்தால் நான் அடைந்த துன்பம் தீர்த்ததாலே
செய்த நன்றி எண்ணி வந்தேன் தேர்ந்த அன்பினாலே

சத்தியவான் : எந்த ஊரோ இருபது ஏது பேர் யார் தந்தை
என்றெனக்கு நீ உரைத்தால் இன்பம் கொள்ளும் சிந்தை
இன்பம் கொள்ளும் சிந்தை

சாவித்திரி : அழகிய மதுராபுரி அஸ்வபதி புத்திரி
அக்கம் பக்கம் பேர்கள் என்னை
அழைக்கும் பெயர் சாவித்திரி

இனிமையாகப் பாடப்படும் இந்தப்பாடல் மேல் சொன்ன ராகத்திலேயே [ஆபேரி ] அமைக்கப்பட்டாலும் , அதில் நாட்டுப்புற இசையின் தாக்கம் துல்லியமாகத் தெரியும்.நாட்டுப்புற இசையும் , செவ்வியல் இசையும் இணைந்த ஒரு அற்ப்புதப் பாடலாக இந்தப் பாடலை சுவாமிகள் அமைத்து பின் வந்த சினிமா இசையமைப்பாளர்களுக்கு வழி காட்டியாக இருந்தார் எனலாம்.

மேல் சொன்ன பாடலை ஏ.பி.நாகராஜன் தான் இயக்கிய நவராத்திரி [1963 ] என்ற படத்தில் பயன்படுத்தி கொண்டார்.அந்த படத்தின் இசையமைப்பாளர் கே.வீ.மகாதேவன் ,ஏ.பி.நாகராஜன் போன்றோர் பாய்ஸ் கம்பனி நாடக மேடை பரம்பரையிலிருந்து வந்தவர்கள்.படத்தில் இந்தப் பாடலை நகைச்சுவை கலந்த பாடலாக அமைத்தார்கள். ஆனால் நாடக மேடையில் அவ்வாறு பாடப்படுவதல்ல.

தமிழ் சினிமாவின் பழம் பெரும் இசையமைப்பாளர்கள் பலரும் சங்கரதாஸ் சுவாமிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாய்ஸ் கம்பனி [ Boys Company ] பரம்பரையில் இருந்து வந்தவர்கள் என்பதால் அது அவர்களுக்கு இயல்பாயும் அமைந்தது.

ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு , எஸ்.வீ.வெங்கட்ராமன்,சி.ஆர்.சுப்பராமன் ,ஆர் .சுதர்சனம் , கே.வீ மகாதேவன் , சி .என்.பாண்டுரங்கன் ,எஸ்.என்.பாலசுப்ரமணியன் ,பி.எஸ்.திவாகர்,எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற இசையமைப்பாளர்களை முக்கியமாகக் குறிப்பிடலாம்.

நாடகமேடையில் புகழ் பெற்ற இந்த ஆபேரி ராகம் நாட்டுப்புற இசை வேர்களில் இருந்து கிளர்த்த ராகங்களில் முக்கியமான ராகமாகும்.பழமையும் ,பெருமையும் வாய்ந்த ராகங்களில் முதன்மையான ராகமும் கூட.ராஜ கம்பீரத்தையும் ,வசீகரத்தையும் மனத்தில் உத்வேகத்தையும், உருக்கத்தையும் , இனிமையையும் ஒன்று சேர குழைத்துத் தருவது இந்த ராகத்தின் இயல்பு.

nadaswaramநாதஸ்வரத்தில் மிக விரிவாக வாசிக்கக்கூடிய இந்த ராகம் நம்மை பரவச நிலைக்கு இட்டுச் செல்லும். ஆபேரி ராகம் எடுப்பிலேயே நம் மனதை பிணிக்கும் வண்ணம் பாடல்களை அறிமுகம் செய்யும்ஆற்றல் கொண்டது. இயற்க்கையின் பேரழிலை நாள் முழுவதும் ரசிப்பது போல , நாள் முழுவதும் கேட்கத் தூண்டும் இந்த ராகம் உள்ளத்தில் மிக இலகுவாக இருக்கை போட்டு அமர்ந்து விடக் கூடிய வல்லமை கொண்டது.

தமிழ் செவ்வியல் இசையில் 22 வது மேளகர்த்தா ராகமான கரகரப்பிரியா ராகத்தின் சேய் ராகமாகும்.உணர்வு நிலைகளின் உன்னதங்களை எல்லாம் வெளிக்கொணரக் கூடிய ராகங்களில் மிக முக்கியமானதாக இருப்பதால் சினிமா இசையமைப்பாளர்கள் மிக நேர்த்தியாகப் பல விதமான பாடல்களைத் தந்து மக்களை பரவசப்படுத்தியிருக்கிறார்கள்.இந்தியா எங்கும் ஒலிக்கின்ற ராகங்களில் இதுவும் ஒன்று.

ஹிந்துதானி இசையில் இதை பீம்பிளாசி என்று அழைக்கின்றனர்.கர்நாடகதேவகாந்தாரி ,தேவகாந்தாரி என தமிழிலும் வேறு சில பெயர்களாலும் அழைக்கப்படுவதால் இந்த ராகம் குறித்து சில மயக்கங்களும் இருந்து வருகின்றன.

சினிமாவில் இந்த ராகத்தில் பலவிதமான பாடல்களை [என்னுடைய கேள்வி ஞானத்தில் ] கேட்கும் போது ஒரே ராகமாக இருப்பதை அவதானித்திருக்கின்றேன்.ஆனால் விஷயம் அறிந்தவர்கள என அறியப்பட்ட சிலரிடம் சில பாடல் குறித்து என்னுடைய சந்தேகங்களை கேட்ட போது அவர்கள் ,அது பீம்பிளாஸ் அல்ல , ஆபேரி என்றும் , இல்லை , இது கர்னாடகதேவகாந்தாரி என்றும் குழப்பியிருக்கின்றார்கள்.அது அவர்கள் தவறும் அல்ல என்பது மட்டுமல்ல. இது முறையாக கர்நாடக இசை தெரிந்த சிலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பதும் புரிந்தது.

இசைக்கலைஞர்களின் செவ்விகளாலும் ,என்னுடைய அவதானிப்புகளாலும், தேடுதலாலும் இவை எல்லாம் ஒரே ராகம் என் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி.

இந்த குழப்பங்களுக்கு முக்கிய காரணம் ஹிந்துஸ்தானி இசையாகவும் இருக்கலாம். தமிழ் ராகங்களை கடன் வாங்கும் வட இந்திய சங்கீத நூலாசிரியர்கள் அதற்க்கு தாமே ஒரு பெயர் வைத்து அழைப்பதும் முக்கிய காரணமாகும். எல்லாம் வட மொழியிலிருந்து தான் வந்தது என்று சொல்ல விரும்புகின்ற , அது போன்ற கருத்தை ஒப்பிக்கின்ற பார்ப்பன இசைக்கலைஞர்களும் இதுபோன்ற கருத்துக்களுக்கு வலு சேர்த்து வருகிறார்கள்.

ஆபேரி போன்றே இன்னும் பல ராகங்களும் இது போன்ற குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளன.இதைப் போன்றே சுத்த

சாவேரி என்கிற அற்ப்புதமான தமிழ் ராகமும் வடக்கே துர்க்கா என்ற பெயர் பெற்று வருகிறது.

தமிழ் ராகங்களை ஆராய்ந்த ஆபிரகாம் பண்டிதர் , தனது நூலில் பின்வருமாறு கூறும் கருத்து கவனத்திர்க்குரியது.

Abraham_Pandithar” தென்னாட்டில் பிரதி மத்திமத்துடன் பாடப்படும் கல்யாணி ராகம் வட நாட்டுக்குப் போய் கிரமம் மீறி பிரதி மத்திமத்தோடு வேறு இரண்டு மத்திமங்களையும் , அப்படியே காந்தார நிசாதங்களையும் இரண்டு இரண்டு சுரங்களைச் சேர்த்துக் கொண்டு தென்னாட்டுக்கு வர, தென்னாட்டில் உள்ளோர் அதை மிகவும் அழகாக இருக்கிறது என்று பழகுகிறார்கள்.இப்படியே ஆனந்த பைரவி , காம்போதி,தோடி முதலிய இராகங்களும் வர வர கலப்புற்றதாய் மார்க்க முறையைஇழந்து , முற்றிலும் தேசிகமாகி கர்னாடக சங்கீதத்தின் உயர்வைக் கெடுக்கும் நிலைக்கு வந்துள்ளன.” – ஆப்ரகாம் பண்டிதர்

பல நூற்றாண்டுகளாக வேற்று மொழியினர் ஆட்சிக்கு உட்பட்ட தமிழ் இசை தன் வளர்ச்சியை இழந்தது. இது குறித்து இந்திய கலைகளை உலகத்திற்கு அறிமுகம் செய்த கலாமேதை ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் பின்வருமாறு எழுகின்றார்.

“The neglect of centuries, as in so many analogous cases, has proved less disastrous than the renewed patronage of a few decades.” – Anandha Kumaraswamy

“மற்ற வித்தைகளைப்பற்றிச் சொல்வது போலவே அநேக நூற்றாண்டுகளாய்ச் சங்கீதத்தைக் கைவிட்டதால் அதற்கு உண்டான இடையூறைவிட சென்ற கொஞ்ச வருஷங்களாய் அது அநேகரால் ஆதரிக்கப்பட்டதினால் உண்டான இடையூறு அதிகம்.” – ஆனந்தகுமாரசாமி

கலாமேதை ஆனந்தக் குமாரசுவாமி அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டி ஆப்ரஹாம் பண்டிதர் மிக முக்கிய குறிப்பொன்றையும் பின்வருமாறு எழுதுகின்றார்.

” இவர் இந்தியாவின் பல இடங்களுக்குச் சுற்றுப் பிரயாணம் செய்கையில் இந்தியாவின் சிற்ப வேலைகளைப் பற்றியும் சங்கீதத்தைப் பற்றியும் விசாரித்துக் கொண்டிருந்ததை நான் நேரில் அறிவேன். சங்கராபரண இராகத்தில் வழங்கிவரும் ரிஷப தைவதங்கள் கூடுதலாய் வருகிறதைப் பலரிடத்திலும் விசாரித்தும் சரியான பதில் கிடைக்காமையினால் என் வீட்டிற்கு வந்து நேரில் விசாரித்தார்கள். ரிஷபதைவதங்கள் கூடுதலாய் வருகிறதென்று சொல்லக் கேட்ட மாத்திரத்தில் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள்.” – ஆப்ரகாம் பண்டிதர்

காலத்திக்கேற்ப நடைபெறும் மாற்றங்கள் மூலம் கலை வடிவங்களும் தம்மை புனருத்தாரணம் செய்யும் போது புது வடிவங்கள் பெற்றும் ,புது பெயர்கள் தாங்கியும் வருவதுண்டு. தமிழரான முத்துச்சுவாமி தீட்சிதர் சில ராகங்களுக்கும் தனது இஸ்டப்படி பெயர் வைத்து அழைத்திருக்கின்றார்.அவற்றை அவரது சீடர்கள் ” முத்துச்சுவாமி தீட்சிதர் பாரம்பரியம் ” என்ற அடை மொழியுடன் அழைப்பது வழக்கம்.அவர் ஆபேரி ராகத்திற்கு இட்ட பெயர் தேவகாந்தாரி என்பதாகும்.

ஆனாலும் இந்த ராகங்களின் மகோன்ன

melakartha_ragas

தத்தை உணர்ந்த இசையமைப்பாளர்கள் இந்த பிரச்சனைக்குள் நுழையாமல் தமது காரியத்தில் மட்டும் கண்ணாயிருந்தார்கள்.

அந்தக்கால சினிமா இசையமைப்பாளர்கள் இசை இலக்கணங்களை நன்கு தெரிந்து கொண்டும் ,தேவைக்குஏற்ப இலக்கண வரம்புகளை எல்லாம் கடந்தும் நல்ல இசை தந்தார்கள்.

இசையின் இலக்கணங்களிலும் , தாள கணக்குகளிலும் மக்களை அல்லலுற வைக்காமல், இந்த செப்படி வித்தைகளில் மக்களை சிக்க வைக்காமல் இசையின் சிறப்பை புலப்படுத்தி ,அதன் இனிமையின் ஆற்றலை வெளிப்படுத்தினார்கள். இந்தக் கோளாறைத் தான் சுப்ரமணிய பாரதி கணக்கு , பிணக்கு , ஆமணக்கு என்று கிண்டல் செய்தாரோ ..?.

நமது இசையின் உயிர் நாடியே ராகங்கள் பாடுவதே என்பதை மறந்த அல்லது அந்த ராகங்களை இனிமையாகப் பாட முடியாதவர்கள் , குறிப்பாக இலங்கையிலும் பல வித்துவான்கள் இந்தக் கணக்கில் தான் இசை இருக்கிறது என்று விரல்களை முறிப்பது வேடிக்கையானது.

ராக இசையின் நுண் கூறுகளை ,அதன் உள்ளார்ந்ந்த திரட்சியை ,அதன் ரகசியங்களை , அதன்மகிமையை , அதன்அழகுகளைத் திரட்டி நமக்கு அள்ளித் தந்திருப்பவர்கள் சினிமா இசையமைப்பாளர்களே! அவர்கள் இசையமைத்து தந்த பாடல்கள் ” மேலான இசை ” என்று போற்றப்படும் கர்நாடக இசைக்கு எந்த விதத்திலும் ,எள்ளளவும் குறைந்ததல்ல.பல சந்தர்ப்பங்களில் மிகச் சிறப்பான கமகங்களை ஒரு சில நிமிடங்களிலேயே காண்பிக்கும் ஆற்றலையும் சினிமா இசையமைப்பாளர்கள் வெளிப்படுத்தினார்கள்.

கணக்கு வழக்குகளில் நின்று மல்லுக்கட்டாமல் , பகட்டைக்காட்டி , பிரமிக்க வைத்து ” மக்களை ஓட “வைக்காமல் மன நிறைவான , இனிமையான இசையைத் தந்தார்கள்.

[ தொடரும் ]

முன்னைய பதிவுகள்:

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்

Shakunthala_1940_filmபெரும்பான்மை மக்களால் விரும்பபட்ட தெருக்கூத்துக்களிலும் , நாடகங்களிலும் பல் வகை இசைகள் பயன்பட்டு வந்திருக்கின்றன.எத்தனையோ தலைமுறை வாழ்க்கை அனுபவங்களால் மக்களின் அகமனத்தில் ஊறிய இசை வடிவங்களை நாடகங்களிலும் , பின் வந்த , நவீன கலைவடிவமான சினிமாவிலும் கேட்டு களிப்புற்றார்கள்.அதன் உயிர்ப்பகுதியாக நாட்டுப்புற இசை எல்லையற்ற ஆனந்தம் வழங்கியது.அவை உற்சாகம் ஊட்டுபவையாகவும் ,அவற்றின் தனித்தன்மை , மக்கள் சிந்தையில் பொதிந்த நகைசுவை உணர்வு பாடல்களிலும் பயன்பட்டு அவர்களை ஈர்த்தது.இது ஒருபுறமிருக்க பரந்துபட்ட மக்களிடமிருந்து அன்னியப்பட்ட , இல்லாத ஊருக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த பக்தி இசையான செவ்வியல் இசையை விட சினிமா இசை அவர்களுக்கு நெருக்கமானதாகவும் இருந்ததும் முக்கிய காரணமாகும்.பொதுவாக நாட்டுப்புற இசை நகைச்சுவை காட்சிகளில் பயன்படுத்தப்பட்டமை ரசிகர்களுக்கு களிப்பூட்டுவதாக இருந்தது..1940 களில் நகைச்சுவை பாடல்களாகவும் , தர்க்கப்பாடல்களாகவும் பல பாடல்கள் வெளி வந்தன.

கதாநாயகர்களுக்கு மட்டும் பாடல்கள் என்றில்லாமல் நகைச்சுவை நடிகர்களுக்கும் பாடல்கள் கொடுக்கப்பட்டன.கதாநாயகர்களின் தோழனாக நகைச்சுவைபாத்திரங்கள் அமைக்கப்பட்டு நகைச்சுவை நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.இதுவும் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் தான் இருந்து எடுக்கப்பட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து.இந்த மரபு தொல்காப்பிய காலத்திற்கு பின் வந்த அகத்துறைப் பாடல்களில் , நகைச்சுவையை தோழியர் கூற்றாக அமைத்த மரபின் தொடர்ச்சி எனலாம்.தொல்காப்பியத்தின் 175 வது சூத்திரம் நாடகத்தில் நகைமொழி செவிலிகூற்றாக வரும் என்று விளக்குகிறார் பேராசிரியர் அ.சா.ஞானசம்பந்தன்.[ தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும் – பேராசிரியர் அ.சா.ஞானசம்பந்தன்]

ஆரம்பகால தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பேச்சு மொழியிலேயே நகைச்சுவைப் பாடல்கள் மிகுதியாக இருந்தன.கதாநாயகப் பாத்திரங்களின் பாடல்கள் தமிழ் செவ்வியல் சார்ந்த அல்லது அதனைச் சார்ந்த மெல்லிசை வடிவமாக இருக்க நகைச்சுவைப் பாடல்கள் நாட்டுப்புற இசை சார்ந்ததாகவே இருந்தன. இவை மக்கள் நேரடியாக புரியக் கூடிய , அதிகம் சிந்தனைக்கிடமில்லாத வகையில் கொண்டு செல்லும் ஒரு உத்தியாகும்.. இன்று வரை அந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை எனலாம்.

ஆரம்பகால தமிழ் சினிமாவில் வெளி வந்த நாட்டுப்புறப்பாங்கில் அமைந்த நகைச்சுவைப் பாடல்கள் :

01 கட்டி கரும்பே முத்தம் கொடுத்திடு – ஸ்ரீவள்ளி 1945 – டி.ஆர்.ராமசந்திரன்- இசை : R.சுதர்சனம்
02 அம்மான் மகனை உன்னை மாட்டி வைக்கிறேன் – ஸ்ரீவள்ளி 1945 – இசை : R.சுதர்சனம்
03 தாகம் தீர்ந்ததல்லால் – ஸ்ரீவள்ளி 1945 – டி.ஆர்.மகாலிங்கம் + பி.ஏ.பெரியநாயகி இசை : R.சுதர்சனம்
04 தங்குத டிங்காலே – இன்பவல்லி 1949 – N .S .கிருஷ்ணன் + T.A. மதுரம் – இசை : ஜி. ராமநாதன்
05 சம்பளமே … எலுமிச்சம்பளமே – இன்பவல்லி 1949 – N .S .கிருஷ்ணன் + T.A. மதுரம் – இசை : ஜி. ராமநாதன் [ தர்க்கப்பாடல் ]
06 நம்ம வாத்தியார் – சபாபதி 1941 -T .R .ராமச்சந்திரன் – இசை : R.சுதர்சனம்
07 வருவார் என் மணவாளன் – சபாபதி 1941 -T .R .ராமச்சந்திரன் – இசை : R.சுதர்சனம்
08 மயிலைக்காளை மாடுகளா – சபாபதி 1941 – – இசை : R.சுதர்சனம்
09 கட்டாயம் கல்யாணம் பண்ணிக்க – சபாபதி 1941 – – இசை : R.சுதர்சனம் [ தர்க்கப்பாடல் ]
10 தெருவில் வாராண்டி – பக்த கௌரி 1945 – U.R ஜீவரத்தினம் – இசை :
11 பாட்டைக் கேட்கோணும் – பாதுருஹரி 1945 – T .A மதுரம் இசை :
12 நாடகத் தமிழ் பாட – ஔவையார் – K .P .சுந்தராம்பாள்

ஜி.ராமநாதன் இசையமைத்த நாட்டுப்புறப்பாங்கான பாடல்கள் சில :

01. குன்றுதோர் ஆடிவரும் குமாரவடி வேலன் – படம்: மதுரைவீரன் – பாடியவர் 😛 .லீலா -இசை:ஜி.ராமநாதன்
02. காட்க்குள்ளே கண்ட பூவு கண்ணைப் பறிக்குது படம்: நான் பெற்ற செல்வம் – பாடியவர் :TMS -இசை:ஜி.ராமநாதன்
03. ஏறாத மலைதனிலே – படம்: தூக்குத் தூக்கி – பாடியவர் :TMS – இசை:ஜி.ராமநாதன்
04. வாங்க மச்சான் வாங்க – படம்: மதுரைவீரன் – பாடியவர் :TMS -இசை:ஜி.ராமநாதன்
05. சும்மா இருந்த சொத்துக்கு நட்டம் – படம்: மதுரைவீரன் – பாடியவர் 😛 .லீலா +குழு – இசை:ஜி.ராமநாதன்
06. ஏச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா – படம்: படம்: மதுரைவீரன் – பாடியவர் :TMS + ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
07. அத்தானும் நான் தானே – படம்: சக்கரவர்த்தி திரும்கள் – பாடியவர் :S.c .கிருஷணன் + TV ரத்தினம் – இசை:ஜி.ராமநாதன்
08. சங்கத்துப் புலவர் பலர் – படம்: சக்கரவர்த்தி திரும்கள் – பாடியவர் :sc.கிருஷணன் + சீர்காழி – இசை:ஜி.ராமநாதன்
09. தந்தான தந் தானத் தந்தானே – படம்: காத்தவராயன் – பாடியவர் :J.P.சந்திரபாபு + ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
10. ஜிகு ஜிகு ஜிகுவென – படம்: காத்தவராயன் – பாடியவர் :J.P.சந்திரபாபு + ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
11. ஆலோலம் ஆலோலம் – படம்: அரசிளங் குமரி – பாடியவர் :P.சுசீலா – இசை:ஜி.ராமநாதன்
12. மாட்டு வண்டி பூட்டிகிட்டு – படம்: வீரபாண்டிய கட்ட பொம்மன் – பாடியவர் :TMS + TV ரத்தினம் – இசை:ஜி.ராமநாதன்
13. ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி – படம்: வீரபாண்டிய கட்ட பொம்மன் – பாடியவர் :T.லோகநாதன் + A ரத்தினமாலா + ஜமுனாராணி -இசை:ஜி.ராமநாதன்
14. மாட்டு வண்டி பூட்டிகிட்டு – படம்: வீரபாண்டிய கட்ட பொம்மன் – பாடியவர் :TMS + TV ரத்தினம் – இசை:ஜி.ராமநாதன்
15. வாராண்டி வாராண்டி குட்டி சாத்தான் – படம்: காத்தவராயன் – பாடியவர் :J.P.சந்திரபாபு + A ரத்தினமாலா – இசை:ஜி.ராமநாதன்
16. எத்தனையோ கை பார்த்தேன் – படம்: காத்தவராயன் – பாடியவர் :TMS + ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
17. தந்தான தந் தானத் தந்தானே – படம்: காத்தவராயன் – பாடியவர் :J.P.சந்திரபாபு + ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
18. கண்ணே உன்னால் நான் அடையும் – படம்: அம்பிகாபதி – பாடியவர் :N .S .கிருஷணன் + மதுரம் – இசை:ஜி.ராமநாதன்
19. கன்னித் தமிழ் கண்டெடுத்த காவிய சோலையடி – படம்: அம்பிகாபதி – பாடியவர் :சீர்காழி + கோமளா – இசை:ஜி.ராமநாதன்
20. ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா – படம்: அம்பிகாபதி – பாடியவர் :P.சுசீலா – இசை:ஜி.ராமநாதன்
21. பிறக்கும் போது பிறந்த குணம் – படம்: சக்கரவர்த்தி திருமகள் – பாடியவர் :- சீர்காழி – இசை:ஜி.ராமநாதன்.
22. டக்கு டக்கு டக்கு – படம்: வீரபாண்டிய கட்டபொம்மன் – பாடியவர் :எஸ்.வரலட்சுமி + P.சுசீலா + A.ரத்னமாலா – இசை:ஜி.ராமநாதன்
23. அஞ்சாத சிங்கம் என் காளை – வீரபாண்டிய கட்டபொம்மன் – பாடியவர் :P.சுசீலா – இசை:ஜி.ராமநாதன்
24. கறந்த பாலையும் காகம் குடியாது – வீரபாண்டிய கட்டபொம்மன் – பாடியவர் :TMS – இசை:ஜி.ராமநாதன்

இசை மேதை ஜி.ராமநாதன் மட்டுமல்ல பிற இசையமைப்பாளர்களும் நாட்டுப்புற இசையில் பல பாடல்களை தந்திருக்கிறார்கள். அவற்றுள் மிகச் சில உதாரணங்கள் :

25 அக்கா மகளே – சுமங்கலி – S.C .கிருஷ்ணன் + A. ரத்னமாலா – இசை : K.V.மகாதேவன்
26 வாங்க எல்லோரும் சேர்ந்து – கூண்டுக்கிளி – T.M.S +P.லீலா – இசை : K.V.மகாதேவன்
27 ஆத்தாடி தள்ளாத – பெரிய கோவில் -K.ஜமுனாராணி + L.R.ஈஸ்வரி – இசை : K.V.மகாதேவன்
28. உன் திரு முகத்தை – மகாதேவி – பாடியவர் :J.P.சந்திரபாபு + A.ரத்னமாலா – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
29. தந்தானா பாட்டு பாடி – மகாதேவி – பாடியவர் :J.P.சந்திரபாபு + A.ரத்னமாலா – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
30. ஏரு பூட்டுவோம் – மகாதேவி – பாடியவர் :TMS + P.லீலா+ ஜமுனாராணி – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
31. குறுக்கு வழியில் – மகாதேவி – பாடியவர் :TMS – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
32. மணப்பாறை மாடு கட்டி – மக்களைப் பெற்ற மகராசி – பாடியவர் :TMS – இசை:K.V.மகாதேவன்
33. தாராபுரம் தாம்பரம் – மக்களைப் பெற்ற மகராசி – பாடியவர் :S.C.கிருஷ்ணன் + A.ரத்னமாலா – இசை:K.V.மகாதேவன்
34. தர்மம் என்பார் நீதி என்பார் – பதி பக்தி – பாடியவர் :TMS + J.P.சந்திரபாபு – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
35. அம்பிகையே முத்து மாரியம்மா – பதி பக்தி – பாடியவர் :TMS + P.சுசீலா – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
36. பிள்ளையாரு கோவிலுக்கு – பாகப்பிரிவினை – பாடியவர் :TMS + P.லீலா – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
37. தேர் ஓடும் எங்கள் சீரான மதுரையிலே – பாகப்பிரிவினை – பாடியவர் :TMS + P.லீலா – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
38. தேர் ஓடும் எங்கள் சீரான மதுரையிலே – பாகப்பிரிவினை – பாடியவர் :TMS + P.லீலா – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
39. நல்ல காலம் வருகுது – புதையல் – பாடியவர் :TMS – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
40. சின்ன சின்ன இழை பின்னி பின்னி வர – புதையல் – பாடியவர் :P.சுசீலா – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
41 . ரீ ..ரீ …ரீ .. ரீ வாங்க ரீ ..ரீ …ரீ – கல்யாணப்பரிசு – பாடியவர் :சீர்காழி – இசை:A.M.ராஜா
42. சும சும சம் சம் சம் – புனர் ஜென்மம் – பாடியவர் :எஸ்.ஜானகி – இசை:T.சலபதிராவ்
43. ஓகோ .. நீ சும்மா சும்மா – இதயகீதம் – குழுவினர் – இசை : T.G.லிங்கப்பா

பின்னாளில் மெல்லிசைப்பாங்கான காதல் பாடல்களிலும் மிக அற்ப்புதமாக நாட்டுப்புறத் தாளத்தை பயன் படுத்தியாவர் K.V.மகாதேவன் அவர்கள்.

பார்வையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் கலைவடிவமான நாடகக் கலையில் நவரச உணர்வுகளை வெளிக்கொணரும் பல் வகை பாடல்கள் நாடகத் தேவையை ஒட்டி பயன்பட்டும் வந்தன.

சோழர் ஆட்சியின் வீழ்ச்சியோடு நாடகத்தின் வளர்ச்சியும் குன்றியது. பின் 13 ஆம் நூற்றாண்டில் புத்துயிர் பெற்ற தமிழ் நாடக வளர்ச்சி பலவிதமான இசைகளை உள்வாங்கி வந்துள்ளது. பள்ளு நாடகம் ,குறவஞ்சி நாடகம் , குழுவ நாடகமும் ,நொண்டி நாடகம் , அருணாசலக் கவிராயர் [ 1712 – 1799 ] எழுதிய கீர்த்தனை நாடகம் என்பன இசையுடன் இணைந்தனவாக இருந்தன.

இவை மட்டுமல்ல , கரகாட்டம் போன்ற கலை வடிவங்களும் மக்களின் வரவேற்ப்பை பெற்றிருந்தன. லாவணி , வில்லுப்பாட்டு ,கதாகலாட்சேபம் போன்ற கதை சொல்லும் முறைகளும் பாடல் வடிவிலேயே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

” ஒரு சிறந்த படைப்பாளி தன மரபில் நின்று படைப்பதும், சில சமயம் அவனது படைப்பால் அந்த மரபே செழுமைப்படுவதும் உண்டு. தனியே பழைய மரபை ஒட்டி படைப்பது மட்டும் அவனது திறமையை வெளிப்படுத்தாது. பழமையிலிருந்து உதிக்கும் புதிய மரபில் நின்று அவன் படைக்கும் கலையில் தனித்தன்மையை காட்டும் போது கலையில் அவனுக்கு ஒரு நிரந்தர புகழையும் வழங்கி விடும.”

இந்த கருத்தை வலியுறுத்தும் மாபெரும் கலைஞராக சங்கரதாஸ் சுவாமிகள் விளங்கினார் என்றால மிகையில்லை.தமிழ் நாடக வளர்ச்சி அவர் வரவால் புத்துயிர் பெற்றது என்பர். அவருடைய நாடகங்களில் இசையே மிகுந்துதிருந்தது.அவருடைய இசை நாடகங்களில் பயன்பட்ட முக்கிய இசைக் கூறுகளாக

1. தென்னக இசை [ கர்னாடக இசை ]
2.. தமிழ்திருமுறை இசை [ தேவார இசை ]
3. நாட்டுப்புற இசை
4.. ஹிந்துஸ்தானி இசை
5.. மேலைத்தேய இசை

எனப் பல்வகை இசை அமைந்ததென ஆராய்ச்சியாளர் அரிமளம் .எஸ்.பத்மநாபன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.இந்த இசை வகைகளுடன் அவர் காலத்தில் புகழ் பெற்றிருந்த கீர்த்தனை நாடக இசையையும் பயன்படுத்தினார்.
நாடுப்புற கலைவடிவங்களில் உள்ள இசை வடிவங்கள் பலவற்றையும் உள்வாங்கியதாக நாடகப்பாடல்கள் அமைக்கப்பட்டன.குறிப்பாக ஒப்பாரி இசை , தெம்மாங்கு , சிந்துப் பாடல்கள் அவரது நாடகங்களில் பயன்படட்டுள்ளன.

“சாகப் போகும் தருவாயிலும் பாட்டு , செத்துக்கிடந்தாலும் பாட்டு , அழும் போதும் பாட்டு , எந்தச் சந்தர்ப்பத்திலும் பாட்டு என்பது அன்றைய நாடகம் பற்றிய கருத்தாக இருந்தது.”
இது அன்றைய நாடகத்தில் இசை வகித்த முக்கியத்துவத்தை உணர்த்தி சொல்லிய கருத்தாகும்.இந்த பாடல் படுத்திய பாடு பெரும்பாடு என்றே எண்ணத் தோன்றுகிறது.

தமிழ் செவ்வியல் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த சங்கரதாஸ் செவ்வியல் அரங்குகளில் புகழ் பெற்ற ராகங்களை தனது நாடகங்களில் பயன்படுத்தி பரந்து பட்ட மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார்.

தமிழ் செவ்வியல் இசையில் கீர்த்தனைகளின் வர்ண மெட்டுக்களை , ராகங்களை எடுத்துக் கொண்டு தனது நாடக பாத்திரங்கக்ளுக்குப் பொருத்தமாக அவற்றை அமைத்தார்.அதன் மூலம் அந்த வர்ண மெட்டுக்களை பிரபலப்படுத்தினார் . அவற்றை செவ்வியல் பரீச்சயம் இல்லாத பாமர மக்கள் , செவ்வியல் இசைக் கலைஞர்கள் பாடும் போது , ” சுவாமிகளின் நாடக பாடல்களை பாடுகிறார்கள் ” என்று சொல்லும் அளவுக்கு அவற்றை பிரபலப்படுத்தினார் என்பார் ஆய்வாளர் அரிமளம் .எஸ்.பத்மநாபன்.

hindustani_picஅவர் வாழ்ந்த காலத்தில் பார்சி நாடகக் குழுவினரால் பிரபல்யப்படுத்தப்பட்ட ஹிந்துஸ்தானி இசை , இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.ஹிந்துஸ்தானி இசையில் ஆர்வம் காட்டிய சங்கரதாஸ் குலாம் முகமது அப்பாஸ் என்ற ஹிந்துஸ்தானி இசைக்கலைஞரிடமிருந்து இசை நுட்பங்களை அறிந்து கொண்டார். ஹிந்துஸ்தானி ராகங்களான ஜோன்புரி , ஜமுனாகல்யாணி ,சிந்துபைரவி ,பெகாக் அக்கால நாடகங்களில் அறிமுகமாயிருந்தன.

அதுமட்டுமல்ல ஆங்கிலேய ஆட்சியில் கிறிஸ்த்தவ மத பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட பாடல்களை, எட்வேர்ட் போல் [Edward Poul ] என்பவர் தொடர்பால் தமிழில் சுரப்படுத்துவதில் பங்களித்த சங்கரதாஸ் சுவாமிகள் ஆங்கில வர்ண மெட்டுக்களின் அமைப்புக்களையும் அறியும் வாய்ப்பையும் பெற்றுகொண்டார்.இந்த இசையின் கூறுகளை ஞான சௌந்தரி என்ற தனது நாடகத்தில் அங்கங்கே பயன்படுத்தியுள்ளார்.

பாடல் வடிவினைக்கொண்ட தெருக்கூத்து , காவடிச்சிந்து ,கீர்த்தனை ,கதாகாலட்சேபம் ,விருத்தங்கள், தருக்கள் என்ற பாடல் வடிவம் ,[ இதில் ஓரடிக்கீர்த்தனை , ஈரடிக்கீர்த்தனை வகைகள் உள்ளன ] , தெம்மாங்கு ,சிந்து இசை வகைகள் பயன்பட்டுள்ளதுடன் நல்ல இசை பயிற்சி ,தமிழ் மொழியில் பயிற்சி போன்றவற்றையும் முக்கியமானதாகக் கருதினார் சுவாமி.

நாடகத்தில் ஹார்மோனிய இசை , பின்பாட்டு , முன்பாட்டு போன்ற இசை யுக்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகத்தில் பயன் பட்ட செவ்வியல் ராகங்கள் சில:

1. நாடகம் : வள்ளிதிருமணம் நாடகம்

பாடல் : 1 . ஞான தேசிகா மெய் ஞான தேசிகா – ராகம் : தோடி
இந்தப்பாடல் தியாகராஜசுவாமிகளின் ” ஆரம்கிபவே பா – ஸார கிம்பவே ” என்ற தோடி ராக கீர்த்தனத்தின் பாதிப்பாகும்.

பாடல் : 2 . முருகன் திருமால் மருகன் – பெருமை அந்த
முக்கணணனுக்குமில்லை – ராகம் : அடானா

பாடல் : 3 .”சுந்தரம் நிறைந்து ததும்பும் சிறந்த மங்கை ” – ராகம் : நாட்டக்குறிஞ்சி

2. நாடகம் : பவளக்கொடி

பாடல் : 1 . எத்தனை நேரம் இப்படி நிற்ப்பேன் – ராகம் : தன்யாசி தாளம் : ஆதி
பாடல் : 2 . ஏதுக்கு இந்த விசாரம் – ராகம் : நாட்டக்குறிஞ்சி தாளம் : ஆதி
இந்தப்பாடல் தியாகராஜ சுவாமியின் ” சங்கீத ஞானமு ” என்ற அதே ராகப் பாடலை
ஓட்டியமைந்தததாகும்.இதே ராகத்தில் வள்ளிதிருமணம் நாடகத்தில்
“சுந்தரம் நிறைந்து ததும்பும் ” என்ற பாடலும் பயன் படுள்ளது.

பாடல் : 3 . ஏதுக்கிந்த சரப்பளியினால் – ராகம் : பூர்விகல்யாணி தாளம் : ஆதி
பாடல் : 4 . செம்பவள வள்ளி போல் எங்கே வந்தாய் ” – ராகம் : மோகனம் தாளம் : ஆதி

பாடல் : 5 . அப்பா புலேந்திரனே அருமைக்கண்மணியே – ராகம் :முகாரி

3. நாடகம் : சத்தியவான் சாவித்திரி

பாடல் : 1 . நந்தவன அழகைக் கண்டு – ராகம் : கமாஸ்
இதே ராகத்தில் ” காமி சத்தியபாமா கதவை திறவாய் “என்று எஸ்.ஜி.கிட்டப்பா பாடி புகழ் பெற்றார்.
பாடல் : 2 . அம்மணி நீ சொல்லக் கேளாய் – ராகம் : பரசு

4. நாடகம் : ஞானசௌந்தரி

பாடல் : 1 . தந்தை இன்று தான் பிரிந்தார் – ராகம் : முகாரி – [ஏக்கப்பாடல் ]
இதே ராகத்தில் ராமன வனம் புகும் காட்சியில் அருணாசலக்கவிராயரின் ராமநாடகத்தில் பாடல் இடம் பெற்றுள்ளது.

பாடல் : 2 . இனிமேல் இவனை விட்டால் எனக்கு கெடுதி வரும் – ராகம் : சாவேரி

பாடல் : 3 . இந்த மாதிரி அன்பு செய்திடில் – ராகம் : பைரவி

பாடல் : 4 . மாதவம் செய் மாமுனியே – ராகம் : குறிஞ்சி

5. நாடகம் : கோவலன் சரித்திரம்

பாடல் : 1 . நீயே சகாயமென நினையாமல் மானே
நேசம் தாசி மேல் வைத்தேன் – – ராகம் : சகானா – தாளம் :மிஸ்ர சாபு

பாடல் : 2 . அடைக்கலமே அடைக்கலமே
அருமை குணமுள்ள நாயகியானாள் – ராகம் : ஆரபி – தாளம் :ஆதி
இந்தப்பாடல் வரிகளை அப்படியே இசை மேதை ஜி.ராமநாதன் ” கற்ப்புக்கரசி ” [1955] என்ற படத்தில் வரும் ஒரு கோவலன் இசை நாடகப்பாடலில் அர்ப்புதம்மாகப் பயன்படுத்தி இருப்பார்.அந்த பாடலை A.ரத்னமாலா + கே.ஜமுனாராணி + ஜிக்கி போன்றோர் அழகாகப் பாடியிருக்கின்றார்கள்.

பாடல் : 3 . மதியிலுயர் வணிகர்குல மதனில் வரு துணைவரடி
மலர்தொழுது கண்ணகை யெனும் – ராகம் : ஆபேரி

கோவலனுக்கு கண்ணகி எழுதும் கடிதம் போல் அமைந்த பாடல்.

பாடல் : 4 . வாராய் நேசா மதன உல்லாசா – ராகம் : பெகாக்

பாடல் : 5 . ஆபரண வகை யாவும் தந்தேனினி – ராகம் : நாட்டைக்குறிஞ்சி

இதே போன்று நாட்டுப்புறபாங்கில் தெம்மாங்கு , குறத்திப்பாடல் ,ஒப்பாரி ,நொண்டிச்சிந்து , கும்மிப்பாடல் போன்றவற்றையும் அப்பர் , சுந்தரர் , சம்பந்தர் ஆகியோரின் தேவார இசையையும் தேவைகளுக்கேற்ப பயன் படுத்தியிருக்கின்றார்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடல் வகைகளில் எல்லாம் ராகங்கள் விரவிக்கிடக்கின்றன.குறத்தி பாடல்களில் சங்கராபரணம் ,ஒப்பாரிப் பாடல்களில் முகாரி ,தெம்மாங்கு இசையில் யதுகுல காம்போதி, ஆனந்த பைரவி , மாயாமாளவ கௌளை , கும்மிப்பாடல்களில் ஆனந்தபைரவி, பைரவி தேவார இசையில் மோகனம் , பூபாளம் போன்ற ராகங்கள் காணப்படுகின்றன.

பெரும்பாலான திருவாசகப் பாடல்கள் மோகனராகத்தில் இசைக்கப்படுகின்றன.விருத்தபாடல்களாகவும் அவை பாடப்படும்.ஆதிகாலத்தில் வழங்கி வந்த முல்லைப்பண் என்பதே இன்றைய மோகனம் என்பது அறிஞர்களின் கருத்து.இசை அறிஞர் எஸ்.ராமநாதன் இதனை தனது ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளார்.
பலவித பாடல்களுக்கும் அதற்க்கான ராகங்கள் என்னென்னவென்றும் , இன்னன்ன நேரங்களில் அவை பாடப்பட வேண்டும் என வகுக்கப்பட்டன.மிகப்பழங்காலம் தொட்டே தமிழில் பகல்பண்கள் , இராப்பண்கள் , பொதுப்பண்கள் என்ற வகைப்பாடு இருந்து வந்துள்ளது.

பகல்பண்கள் :
புறநீர்மை , பஞ்சமம் , இந்தளம் , கௌசிகம் , காந்தர பஞ்சமம் , தக்கேசி , பழம் பஞ்சுரம் , நட்டபாடை , சாதாரி .

இராப்பண்கள் :
சீகாமரம் , வியாழக்குறிஞ்சி , அந்தாளக்க்குறிஞ்சி , கொல்லி , மேகராகக்குறிஞ்சி , பழந்தக்க ராகம் .

பொதுப்பண்கள்:
செந்துருத்தி , திருத்தாண்டகம் ,செவ்வழி.
இந்த மரபின் தொடர்ச்சியாகவே பின் வந்த காலங்களில் சில முறைகள் பின்பற்றப்பட்டன.

திருப்பள்ளி எழுச்சி – பூபாளம்
திருப்பொன்னூசல் – பைரவி , நீலாம்பரி ,ஆனந்த பைரவி
திருச்சாழல் – ஆரபி
திருப்படையாட்சி – ஆனந்த பைரவி

திருவெம்பாவை என்பது மகளிர் பொய்கையில் நீர் விளையாடி மகிழும் அதிகாலைக்குரியது.மாணிக்க வாசகர் பாடிய திருவெம்பாவை மோகனத்தில் இப்போதும் மார்க்ழியில் பாடப்படுகிறது.
அவை மட்டுமல்ல நாட்டுப்புற இசையில் செஞ்சுருட்டி , உசேனி ,கமாஸ் , ஆபேரி , சிந்துபைரவி என எங்கும் ராகங்கள் நீக்கமற நிறைந்துள்ளன.
இவை மட்டுமல்ல அன்றாட வாழ்வின் பல நிகழ்வுகளுக்கும் ,கொண்டாட்டங்களுக்கும் ,பல்வகைத் தேவைகளுக்கும் இன்ன , இன்ன இசை அல்லது ராகங்கள் பயன் பட வேண்டும் என சில விதி முறைகளை கையாண்டார்கள்.உ +ம் : ஒரு திருமண வைபவத்தில் நாதஸ்வர இசையில் என்னென்ன ராகங்கள் பயன்பட வேண்டும் என்ற சில படிமுறைகள்:

மாப்பிள்ளை அழைப்பு – கல்யாணி
ஊர்வலம் புறப்படும் போது – சங்கராபரணம்
ஊர்வலம் போகும் போது – காம்போதி , தோடி
திருமண கூடத்தில் – கரகரப்பிரியா
நிச்சயதார்த்தம் – பியாகடை ,கானடா , அடானா
முகூர்த்தம்நடக்கும் போது – நாடக்குருஞ்சி , தன்யாசி
தாலி கட்டும் போது – ஆனந்தபைரவி

பண்டைக் கலாச்சாரத் தொடர்பால் தாய்லாந்து நாட்டில் இன்றளவும் கோயில்களில் தமிழில் தேவாரம் பாடப்படுவதாகவும் நாம் அறிகின்றோம். மோகன ராகத்தில் தேவாரம் பாடப்படுகிறது . தாய்லாந்து நாட்டு இசையிலும் மோகனராகம் பயன் பாட்டில் உள்ளது.

அந்தக் கால நாடகக் கலைஞர்கள் நாடக மேடைகளில் இந்த ராகங்களை எல்லாம் பாடி மக்களை மகிழ்ச்சிப்படுத்தினார்கள். ஆனால் அந்தகால நாடகக் கலைஞர்களின் வாழ்வு எவ்வாறிருந்தது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.அந்த கால நாடக்கலைஞர்களின் நிலையை நாடக மேதை T.K.சண்முகம் [26 . 04 . 1912 – 15 . 02. 1973 ] தனது ” நாடகக்கலை ” எனும் நூலில் பின்வருமாறு விபரிக்கிறார்.

” நான் நாடகத்துறையில் இறங்கிய அந்த நாளில் [1918] நாடகக்கலைஞர்கள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டு வந்தார்கள்.கொலைகாரன், கொள்ளைக்காரன் முதலியவர்களைக் கண்டால் மக்கள் எப்படிப் பயந்து ஒதுங்கி வாழ்வார்களோ அதே நிலைதான் நாடகக்காரனுக்கும் இருந்து வந்தது.நாடகக்காரர் என்றால் குடியிருக்க வீடு கொடுக்கக்கூட மக்கள் பயந்தார்கள்.அனேக ஊர்களில் மயானக்கரைக்கு அருகே பேய்கள் வசிக்கும் வீடென்று ஒதுக்கப்பட்ட வீடுகளில் தான் அந்தக் காலங்களில் நாங்கள் குடியிருக்க நேர்ந்தது.” ஒரு தொழிலுமில்லாதார் நாடகக் காரரானார் “என்பது ஒரு பழமொழியாகக் கூட உருவாகியிருந்த காலம்.”

Sankaradass Swamigal Bookதவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் [ 1867 – 1922 ] நாடகத்துறையில் நுழைந்தது 1891 ம் ஆண்டு.அவருடைய காலத்தில் தமிழ் சமூகத்தில் நாடகத்துறை எவ்வாறிருந்தது என்பதை நாம் ஊகித்துக்கொள்ளலாம்.சுவாமிகளின் வாழ்வைப் பற்றி நூல் எழுதிய நாடக மேதை T.K.சண்முகம்
” நாடக உலகம் மட்டுமன்று, தமிழ் இலக்கிய உலகமே தன் இதயத்தில் வைத்துப் ஒற்ற வேண்டிய பெரும் புலவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.ஆனால் , தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவோருக்கு எங்கள் சுவாமியைப்பற்றி எதுவும் தெரியாது.பெயரைத் தெரிந்த ஒரு சிலருக்கும் அவருடைய பெருமை தெரியாது.இது காலம் செய்த சதி.சுவாமிகளின் ஆயிரக்கணக்கான மாணாக்கர்களில் அடியேனும் ஒருவன், அவர் வாழ்ந்த காலத்தில் நான் அறியாச் சிறுவன்.நன்கு அறிமுகப்படுத்தும் அளவுக்கு உறவாடிப் பழ்கியவனல்லன்.
பெரியவர்கள் யாரேனும் இப்பணியை செய்திருந்தால் பெரு மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்ன செய்வது? எவரும் முன்வரவில்லை.” என்று எழுதுகின்றார்.

தமிழ் புலவர்கள் , அறிஞர்கள் போன்றவர்கள் அவரை ஒரு ” கூத்தாடி ” என்று கேவலமாக தான் கருதியிருக்க வேண்டும்.!இசை என்பது குறைந்த சாதியினருடன் அடையாளப்படுத்தபட்டு வந்ததென்பதையும் நாம் நினைவில் கொள்வதும் நலம்.

சுவாமிகளின் நாடக இசையில் மற்ற எந்த கலை வடிவத்தையும் காட்டிலும் கதாகாலாட்சேபத்தின் தாக்கமே மிகவும் அதிகம் என்பார் , சுவாமிகளின் பாலர் நாடக சபை மரபில் வந்த திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள்.

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் பயிற்சி பெற்ற கலைஞர்களில் கிட்டப்பா சகோதரர்கள் மிக முக்கியமானவர்கள்.குறிப்பாக எஸ்.ஜி. கிட்டப்பா [1906–1933 ] தனது இனிய குரல் வளத்தால் எல்லோரையும் கவர்ந்தார்.மிக்க ஏழைக் குடும்பத்தில் பிறந்த கிட்டப்பா மிக இள வயதிலேயே [ 6 வயது ] வறுமை காரணமாக நாடகத்தில் சேர்க்கப்பட்டார். அவரது பாடல்களை கர்னாடக இசைகலைஞர்களும் ரசித்துக் கேட்டார்கள்.வள்ளி திருமணம் என்ற சுவாமிகளின் முதன்மை நாடகத்தில் நடித்து பெரும்புகழ் பெற்றார் கிட்டப்பா.
” இந்த நாடகத்தில் இசையும் ஒரு கதாபாத்திரம் ” என்பார் இந்திரா பார்த்தசாரதி .

நாடகமேடையில் தோன்றி தனது குரலினிமையால் பாடுவதில் புதிய பாங்கை உண்டாக்கினர்.இவ்விதம் முறையாக பாடுபவர்களால் நாடக இசையும் வளம் பெற்றது.எஸ்.ஜி.கிட்டப்பாவின் இனிமையான பாடல்கள் இசைத்தட்டுக்களாக வெளிவந்து புகழ் பெற்றன.ஓங்கி குரல் எடுத்துப் பாடும் அவரது குரல் 5 ,6 கட்டைகளுக்கும் அனாயாசமாக போகக்கூடியது .அவரது சுருதி 4 கட்டை என்பர்.அவரது பாடல்களை இன்றும் நாம் இசைத்தட்டுக்களில் கேட்டு மகிழலாம்.

கிட்டப்பா பாடி பிரபலமான பாடல்களில் :

எவரெனி நிர்னயின்சனா – ராகம்: தேவாம்ருதவர்சினி – தியாகராஜர் கீர்த்தனை

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த – ராகமாலிகை – வள்ளலார் பாடல்

காயாத கானகத்தே நின்றுலாவும் – ஸ்ரீ வள்ளி நாடகத்திற்க்காக சங்கரதாஸ் எழுதிய ராகமாலிகைப்பாடல் பாடல்

கீதா சமுத்திரம் – ராகம் : சுருட்டி – தியாகராஜர் கீர்த்தனை

ராக சுத்த ரச பாலமு தேசி – ராகம் : ஆந்தோளிகா

trmகிட்டப்பாவின் பாணியில் பல பாடகர்கள் பாடி புகழ் பெற்றார்கள்.அவர்களில் முக்கியமானவர்கள் சி.எஸ்.ஜெயராமன் , டி.ஆர். மகாலிங்கம் , வீ.ஏ .செல்லப்பா போன்ற பாடகர்கள்.இளவயது சி.எஸ்.ஜெயராமன் பாடிய போது கிட்டப்பாவே அவதாரம் எடுத்தது போல் இருந்தது என அந்தக்கால பத்திரிகைகள் எழுதின.ஆயினும் கிட்டப்பாவின் சுருதியில் பாடக்கூடிய டி.ஆர்.மகாலிங்கம் , கிட்டப்பாவின் பாணியில் பாடி புகழ் பெற்றார். மேல் சொன்ன கிட்டப்பாவின் பாடல்களை வேதாள உலகம் , ஸ்ரீவள்ளி போன்ற படங்களில் பாடினார்.

” காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே ” என்ற பாடலை 1974 இல் வெளிவந்த ” ராஜபார்ட் ரங்கதுரை ” படத்தில் T.M.சௌந்தரராஜனும் கிட்டப்பாவின் சாயல் தெரியும்படி பாடியிருப்பார்.

டி.ஆர்.மகாலிங்கத்தின் பாடல் பாணியை பின்பற்றிப் பாடி புகழ் பெற்றவரே சீர்காழி கோவிந்தராஜன். அகத்தியர் [1972 ] படத்தில் இருவரும் இணைந்து பாடிய” இசையாய் தமிழாய் இருப்பவனே ” , ” நமச்சிவாய என சொல்வோமே ” போன்ற பாடல்களில் ஒற்றுமையை நாம் அவதானிக்கலாம்.

எம் .கே.தியாகராஜா பாகவதர் [ 1910 – 1959 ]

கிட்டப்பாவின் [ 1906 – 1933 ] சமகாலத்தவரான எம் .கே.தியாகராஜா பாகவதர் கிட்டப்பாவின் இசைத்தட்டுக்களை ஆர்வமோடு கேட்ட்வராவார்.இவரும் நாடக மேடையிலிருந்து திரைக்கு வந்த கலைஞரே.
எஸ்.ஜி.கிட்டப்பா வின் நாடகங்களைப் பார்ப்பதில் அலாதிப்பிரியம் கொண்டவராயிருந்தார்எம் .கே.தியாகராஜா பாகவதர். .தனித்தன்மையும் ஒப்பற்ற திறமையும் , தன்னிகரில்லாத குரல் வளமும் , அழகிய தோற்றமும் கொண்ட தியாகராஜ பாகவதர் சுருதி சுத்தமாக கர்னாடக இசை பாடல்களைப் பாடுவதில் வல்லவராயிருந்தார்.
மிக இளம் வயதிலேயே அபாரமாகப் பாடும் திறமை பெற்ற சிறுவன் தியாகராஜனின் திறமையை அறிந்த ரசிக ரஞ்சனி சபா அதிபர் எப்.ஜி. நடேசய்யர் தியாகராஜனின் தந்தையிடம் பின்வருமாறு கூறினார் .

” எனக்கொரு பையன் வேண்டும்! ஆமாம் , அவன் எப்படிப்பட்ட பையனாக இருக்க வேண்டும்தேரியுமா ? இந்த மஹா ஜனங்கள் இருக்கிறார்களே , ரசிக மகா ஜனங்கள் , இவர்கள் அவன் சிரித்தால் தாங்களும் சிரிக்க வேண்டும் ;அவன் அழுதால் தாங்களும் அழவேண்டும்.அவனை யாராவது அடித்தால் இவர்கள் உடனே எழுந்து சென்று அவனை அடித்தவனை அடித்து நொறுக்கத் துடிக்க வேண்டும்…”

baghavadar_thiyagarajaதந்தையாரை இணங்க வைத்து “அரிச்சந்திரா ” நாடகத்தில் லோகிதாசனாக நடிக்க வைத்தார்.தியாகராஜ பாகவதரின் தந்தையார் கதாகாலட்சேபத்தில் பின்பாட்டுக்கலைஞராகவும் , நாடகங்ககளிலும் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.தனது பாட்டுத்திறத்தால் மக்களை கவர்ந்த பாகவதர் பற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

” மக்கள் பாகவதரைத் தேடிக் கொண்டு வருகிறார்கள் , நானோ அவர்களைத் தேடிக்கொண்டு போகிறேன் .” என பெருமையாகக் கூறினார்.

பிறவியில் அவருக்கு அமைந்த பாடல் திறனும், இனிய குரலும் அவரது உயர்வுக்கு காரணமாயிருந்தாலும் , அவரது உழைப்பும் , ஊக்கமும் அவரது காலத்தில் வாழ்ந்த நாதஸ்வரமேதை திருவாடுதுறை ராஜரத்தினம்பிள்ளை ,புகழ் பெற்ற ஆலத்தூர் சகோதரர்கள் ,இசை மகா சமுத்திரம்’ என்று புகழப்படும் விளாத்திக்குளம் சுவாமிகள் , பாபநாசம் சிவன் ஆகியோரின் வழியை அவர் தக்க இடத்தில் தக்கவாறு பயன்படுத்தியதும் காரணமாகும்.

” கேட்ட மாத்திரத்தில் “ஓட வைக்கும் ” கர்னாடக இசையை மெல்லிசையாக்கி பாடி மக்களை மகிழ்வித்தவர் பாகவதர் ” என்பார் விந்தன்.

நெல்லையில் வாழ்ந்த விளாத்திக்குளம் சுவாமிகள் என்ற இசை மேதை பற்றி பழம்பெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் சிறப்பாக எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
விளாத்திக்குளம் சுவாமிகள் சண்முகப்பிரியா , சிந்துபைரவி ,நாகடப்பிரியா, புன்னாகவராளி போன்ற ராகங்களையே எப்போதும் பாடுவார் என எழுதுகின்றார் விந்தன்.

திருநீலகண்டர் [ 1938 ] படத்தில் ” பவள மால்வரை பனி படர்ந்தனையதோர் ” என்ற பைரவி ராகத்தில் ஆரம்பிக்கும் ராகமாலிகைப் பாடலுக்கான ,அருமையான சங்கதிகளை ,பிருக்காக்களை நாதஸ்வரமேதை திருவாடுதுறை ராஜரத்தினம்பிள்ளையிடம் கற்றுக்கொண்டு பாடினார் தியாக ராஜ பாகவதர்.
ராஜரத்தினம்பிள்ளையின் நாதஸ்வர வாசிப்பின் தன்மையை இந்த பாடலில் நாம் துல்லியமாகக் கேட்கலாம்.

ராஜரத்தினம்பிள்ளைசங்கீத சக்கரவர்த்தி ராஜரத்தினம்பிள்ளை மிகச் சிறந்த பாடகர் என்பது பலரும் அறியாத செய்தி.அவர் பாடி நடித்த காளமேகம் [1940] திரைப்படத்தில் தோடி ராகத்தில் அவர் பாடிய ” சண்முகன் காட்டிடும் ” என்ற விருத்தப்பாடலில் அசாத்தியமான கமகங்களால் பாவங்களை காட்டியிருப்பார்.அதுமட்டுமல்ல காளமேகம் படத்தில் பல பாடல்களை இவ்விதமாகப் பாடி அசத்தியிருப்பார்.

தமிழ்மக்கள் “சங்கீத சக்கரவர்த்தி ” எனப் பெருமை கொள்ளும் ராஜரத்தினம்பிள்ளை பாகவதரின் ரசிகராக இருந்தார்.

கலைவாணர் என்.எஸ் .கிருஷ்ணனின் புதுமனை புகுவிழாவில் பாகவதரின் கச்சேரி இடம் பெற்றது.பாகவதரின் கதையை எழுதிய விந்தன் பின்வருமாறு எழுதுகிறார்.

“அந்தக் கச்சேரிக்கு வந்தவர்களில் இருவர் விசேசமாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.அவர்களில்; ஒருவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ; இன்னொருவர் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை .

எந்த ராஜரத்தினம் பிள்ளை ? என்று இதற்குள் கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.” சங்கீத சக்கரவர்த்தி” என்று சொல்ல மனம் இல்லாமல் ” நாதசுவர சக்கரவர்த்தி ” என்று சிலர் “நாதசுவரம் ” என்பதற்கு மட்டும் ஒரு தனி அழுத்தம் கொடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே , அந்த” சங்கீத சக்கரவர்த்தி” தான் !.

பாகவதரின் பாட்டின் மயக்கமோ என்னவோ.அன்று சாட்சாத் ராஜரத்தினம் பிள்ளை , சாட்சாத் ராஜரத்தினம் பிள்ளையாக நடந்து கொள்ளவில்லை;சாதாரண காலரி மாஸ்டர் போல் பாகவதருக்கு எதிர்த்தாற் போல் உட்கார்ந்து , ” ராதே உனக்குக் கோபம் ஆகாதடி பாடுங்கள் , உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ பாடுங்கள்!” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்; பாகவதரும் புன்னகையுடன் அவர் கேட்டுக்கொண்டிருந்த பாடல்களைஎல்லாம் ஒன்று விடாமல் பாடிக்கொண்டே இருந்தார்.

இதனால் என்ன ஆயிற்று என்கிறீர்கள்? ” பாகவதர் சாதாரண மக்களுக்காகப் பாடுகிறார். நாங்களோ சங்கீத விற்ப்பனர்களுக்காகப் பாடுகிறோம் ” என்று சொல்லிக் கொண்டிருந்த சில மகா வித்துவான்களின் கொட்டம் அடங்கிப் போயிற்று.”

ராஜரத்தினம் பிள்ளை போன்ற சங்கீத மேதைகள் மட்டுமல்ல பாமர மக்களும் தியாக ராஜ பாகவதரின் பாடலகளில் மயங்கினார்கள்.மேலோட்டமாகப் பார்க்கும் போது மெல்லிசையாகத் தோன்றும் அந்தப் பாடலகளில் கனதியான செவ்வியல் இசை ராகங்களே அவற்றின் அடிப்படையானதாக இருந்தன.

இசையமைப்பில் இசைமேதை ஜி.ராமநாதனும் , பாடல் எழுதிய பாபநாசம் சிவனும் அவற்றை தனது இனிமையான குரலால் பாடிய தியாகராஜா பாகவதரும் புதிய இசை சாம்ராஜ்ஜியத்தை படைத்தார்கள்.அந்தப் பாடல்கள் இன்று கேட்டாலும் இனிக்கின்ற பாடல்களே !

புகழின் உச்ச்சியில் இருந்த தியாகராஜபாகவதர் , ஸ்டூடியோவில் ஒரே ஒருவரைக் காணும் போது மட்டும் தான் கை கூப்பி வணக்கம் செலுத்துவாராம்! அந்தபெருமைக்கும் , மரியாதைக்குமுரியவராக இருந்தவர் இசைமேதை ஜி.ராமானாதன்.

ஜி.ராமானாதன் போட்ட வர்ண மெட்டுக்கள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றன.அந்த மெட்டுக்களால் இனிமை நிறைந்த ராகங்கள் பரந்துபட்ட மக்களிடம் போய்ச் சேர்ந்தன.

பாபநாசம் சிவன் – ஜி.ராமநாதன் , தியாகராஜ பாகவதர் கூட்டணியில் வெற்றிபெற்ற பாடல்கள் :

1. அம்பா மனம் கனிந்துனது – படம் : சிவகவி [1943] – தியாகராஜ பாகவதர் – ராகம் : பந்துவராளி – இசை : ஜி.ராமநாதன்

2. ராதே உனக்கு கோபம் ஆகாதடி – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் : செஞ்சுருட்டி – இசை : ஜி.ராமநாதன்

3. சிவபெருமான் கிருபை வேண்டும் – படம் : நவீன சாரங்கதாரா – தியாகராஜ பாகவதர் – ராகம் : சுருட்டி – இசை :
ஜி.ராமநாதன்

4. ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் : அசாவேரி – இசை : ஜி.ராமநாதன்

5. சந்திரர் சூரியர் -படம் :அம்பிகாபதி – தியாகராஜ பாகவதர் – ராகம் : மாண்டு – இசை : ஜி.ராமநாதன்

6. உலகில் இன்பம் வேறுண்டோ – படம் :அம்பிகாபதி – தியாகராஜ பாகவதர் – ராகம் : சிம்மேந்திர மத்திமம் – இசை :
ஜி.ராமநாதன்

7. நாடகமே உலகம் – படம் :அம்பிகாபதி – தியாகராஜ பாகவதர் – ராகம் : கமாஸ் – இசை : ஜி.ராமநாதன்

8. சிதம்பர நாத – படம் :திருநீல கண்டர் – தியாகராஜ பாகவதர் – ராகம் : ஹேமாவதி – இசை : ஜி.ராமநாதன்

9. மறைவாய் புதைந்த ஓடு – படம் :திருநீல கண்டர் – தியாகராஜ பாகவதர் – ராகம் : தர்பார் – இசை : ஜி.ராமநாதன்

10. ஒரு நாள் ஒரு பொழுதாகினும் – படம் :திருநீல கண்டர் – தியாகராஜ பாகவதர் – ராகம் : கமாஸ் – இசை : ஜி.ராமநாதன்

11. தீன கருணாகரனே நீலகண்டனே – படம் :திருநீல கண்டர் – தியாகராஜ பாகவதர் – ராகம் : – இசை : ஜி.ராமநாதன்

12. தியானமே எனது மனம் – படம் :அசோக்குமார் – தியாகராஜ பாகவதர் – ராகம் : காபி – இசை : ஜி.ராமநாதன்

13. சற்ப கோண போதன் – படம் :அசோக்குமார் – தியாகராஜ பாகவதர் – ராகம் : ஜோன்புரி – இசை : ஜி.ராமநாதன்

14. மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் – படம் :அசோக்குமார் – தியாகராஜ பாகவதர் – ராகம் : கல்யாணி – இசை : ஜி.ராமநாதன்

15. உன்னை கண்டு மயங்காத – படம் :அசோக்குமார் – தியாகராஜ பாகவதர் – ராகம் : – இசை : ஜி.ராமநாதன்

16. வதனமே சந்திர பிம்பமோ – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் : சிந்துபைரவி – இசை : ஜி.ராமநாதன்

17. வள்ளலைப் பாடும் வாயால் – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் : செஞ்சுருட்டி – இசை : ஜி.ராமநாதன்

18. சொப்பன வாழ்வில் மகிழ்ந்து – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் : விஜய நகரி + புவன் காந்தாரி – இசை : ஜி.ராமநாதன்

19. கவலையைத் தீர்ப்பது – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் : நாட்டக்குறிஞ்சி – இசை : ஜி.ராமநாதன்

20. அற்ப்புத லீலைகளை – படம் :சிவகாமி – தியாகராஜ பாகவதர் – ராகம் : மத்யமாவதி – இசை : ஜி.ராமநாதன்

21. தில்லையின் நாயகனே – படம் :சிவகாமி – தியாகராஜ பாகவதர் – ராகம் : சிந்துபைரவி +சாமா + பௌளி – இசை : ஜி.ராமநாதன்

22. என் உடல் தனில் – படம் :சிவகவி – தியாகராஜ பாகவதர் – ராகம் : யதுகுலகாம்போதி – இசை : ஜி.ராமநாதன்

23. கிருஷ்ணா முகுந்தா – படம் :சிவகாமி – தியாகராஜ பாகவதர் – ராகம் : நவரோஜ் – இசை : ஜி.ராமநாதன்

24. மன்மத லீலையை வென்றார் – படம் :ஹரிதாஸ் – தியாகராஜ பாகவதர் – ராகம் : சாருகேசி – இசை : ஜி.ராமநாதன்

25. கண்ணா வா மணி வண்ண வா – படம் :ஹரிதாஸ் – N.C.வசந்த கோகிலம் – ராகம் : சுத்த தன்யாசி – இசை : ஜி.ராமநாதன்

26. எனது மனம் துள்ளி – படம் :ஹரிதாஸ் – N.C.வசந்த கோகிலம் – ராகம் : மாண்டு – இசை : ஜி.ராமநாதன்

27. கதிரவன் உதயம் கண்டு – படம் :ஹரிதாஸ் – N.C.வசந்த கோகிலம் – ராகம் : பிலகரி – இசை : ஜி.ராமநாதன்

28. சியாமளா சியாமளா – படம் :சியாமளா – தியாகராஜ பாகவதர் – ராகம் : திலங் – இசை : ஜி.ராமநாதன்

அந்நாளைய நாடகங்களில் பின் பாட்டு , முன்பாட்டு முறைகள் முக்கியத்துவம் வாய்ந்ததவையாக விளங் கியதால் பாடக்கூடியவ்ரக்ளுக்குப் பயிற்சிக களனாகவும் நாடக மேடை திகழ்ந்தது.

[ தொடரும் ]

முன்னையது :

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்

இலங்கை தேசிய கீதம்: இழந்து போன வசந்தத்தின் குறியீடு : T.சௌந்தர்

ananda1இலங்கை பாராளுமன்றத்தில் இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியுடன் தமிழையும் இணைக்க வாசுதேவ நாணயக்காராவால் கொண்டு வரப்பட்ட கோரிக்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயால் நிராகரிக்கப்பட்டது.

“ஒரு நாட்டின் தேசிய கீதம் எனபது ஒரு மொழியில் தான் பாடப்படுகிறது .இரு மொழியில் பாடப்படும் ஒரு நாட்டைத் தமக்குக் காட்டும்படி ” கேட்டு நாணயக்காராவின் “நாணய”த்தையும் பரிசோதித்திருக்கிறார். ஜனாதிபதி கேட்ட கேள்விக்கு நாணயக்காரா என்ன பதிலி றுத்தார் என்பது எந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை.அல்லது பதிலளிக்க முடியாத நாணயக்காரா , ஜனாதிபதியின் உள்நோக்கத்தை அறிந்து ” நாணயமாக ” பதிலளிக்காமல் விட்டாரா என்பதை “பத்திரிகாதர்மத்திடம்” விட்டு விடுவோம்.

ஒரு நாட்டின் தேசிய கீதம் என்பது எல்லா நாடுகளிலும் ஒரு மொழியில் மட்டும் தான் பாடப் படுகிறதா ? இல்லை என்ற பதில் சொல்லி பல நாடுகளை உதாரணம் காட்டலாம் .

சுவிஸ் ,கனடா ,தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றன.

ஒரு நாட்டின் இன , மத நல்லிணக்கத்தை அரசே ஏற்ப்படுத்த வேண்டும்.ஆனால் வலிந்து ஒரு மொழியை நீக்குவது பல்லின மக்களிடையே முரண்பாடுகளை வளர்க்கவே உதவும்.ஆட்சியாளர்களின் நோக்கம் அதுவே என்பதை சமீபத்திய சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.அதில் ஒரு அங்கமாகவே தேசிய கீத விவகாரம் பயன்பட்டுள்ளது.ஆனால் இந்த தேசிய கீதம் பிறந்த பொழுதிலிருந்து பல நெருக்கடிகளை சந்தித்ததுடன் அரசியல்வாதிகளின் தலையீடுகளால் தொந்தரவுக்கும் ஆளாகியே வந்துள்ளது.

அவர்களின் அளவுக்கதிகமான தலையீடு இலங்கை தேசிய கீதத்தை எழுதிய இசைக்கலைஞரான ஆனந்த சமரக்கோன் [ 13.01.1911 – 05.04.1962 ] அவர்களின் மரணத்திற்கும் காரணமாகியது.

” நமோ நமோ மாதா ” என்று ஆனந்த சமரக்கோன் எழுதிய வரிகள் ” ந ” என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் நாட்டிற்கே துரதிஸ்டம்,அமங்கலம் என்ற சாஸ்த்திர நம்பிக்கையின் அடிப்படையில் ” நமோ ” என்பதற்குப் பதிலாக ” ஸ்ரீ லங்கா மாதா “என்று ஆனந்த சமரக்கோன் அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே மாற்றினார்கள்…இந்த சம்பவம் அவரது மரணத்திற்கும் காரணமாகியது எனலாம்.

இதனால் மனமுடைந்த அவர் அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரைகளை உட் கொண்டு மரணமடைந்தார்.இறப்பதற்கு முன் அவர் டட்லி சேனாநாயக்காவுக்கு எழுதிய கடிதத்தில்

” என்னுடைய குரலை நசுக்கி விட்டார்கள்.என்னுடைய மரணம் மட்டுமே என் வேதனையைப் போக்கும் ” என்று எழுதினார்.

” அரசும் ,அரசு சார்ந்த பண்டிதர்களும் சமரக்கோனைக் கொன்று விட்டார்கள் ” என்று சிங்களப் பத்திரிகைகள் எழுதின.

ஆனந்த சமரக்கோன் எழுதிய இலங்கைத் தேசிய கீதம் எந்த இனத்தையும் புகழாலாமல் ,இனவாத கருத்துக்களை விதைக்காமல் எழுதப்பட்டமை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.சாந்திநிகேதனம் என்கிற தாகூரின் கலை கல்லூரியில் கலை பயின்ற ஆனந்த சமரகோனிடம் தாகூரின் தாக்கம் இருந்தது.

தாகூரின் ” ஜன கண மன ” என்ற இந்திய தேசிய கீதத்தின் சாயல் இலங்கை தேசிய கீதத்தில் கடுமையாகத் தெரிவதை நாம் காணலாம்.எனினும் இந்திய தேசிய கீதத்தை விட இனிமையானது இலங்கைத் தேசிய கீதம் என்பது மறுக்க முடியாத உணமையாகும்.

இந்தியாவெங்கும் ஒலிக்ககூடிய ராகமான பிலகரி ராகத்தில் இந்திய தேசிய கீதத்தை தாகூர் அமைத்தார்.வட இந்தியாவில் இந்த ராகத்தை பிலவால் என்று அழைப்பர்.தமிழ் செவ்வியல் இசையில் இந்த ராகம் [ பிலகரி ] வசந்த காலத்திற்கு உரிய ராகமாக போற்றப்படுகின்றது.இருந்தாலும் வங்காள நாட்டுப்புற இசையிலும் மிக அதிகமான அளவில் பயன்படுகின்ற ராகம் என்பதால் தான் தாகூர் இதைப் பயன்படுத்தியிருக்கின்றார்.

tagoreவசந்தத்தை எதிர் பார்க்கும் ஒரு வறிய குடும்பத்தின் கதையைச் சொன்ன சத்யஜித்ரே அவர்களின் படமான ” பாதர் பாஞ்சாலி ” என்ற கிராமிய படத்தின் பிரதான இசையாக [Theme Music ] இந்த பிலகரி ராகத்தையே , பல் வேறு சூழ் நிலைகளுக்குப் பொருத்தமாக அந்த படத்தின் இசையமைப்பாளர் இசைமேதை ரவிசங்கர் அமைத்திருப்பார்.

தமிழ் படத்திலும் இந்த ராகத்தின் ரீங்காரத்தை , கிராமப்புற அழகின் பின்னணியில் புல்லாங்குழல் இசையாக கவிக்குயில் படத்தில் இளையராஜா பயன்படுத்தியிருப்பார்.

தெலுங்கு விவசாயிகளின் அவல நிலையைஉண்மையாகப் படம் பிடித்துக்க் காட்டிய படமான ” மாபூமி “[ 1979 ] [எங்க நிலம் ] என்ற கிராமிய படத்தில் Title பாடலான ” பல்லே தூரி பில்ல காடா ” என்ற சோகம் ததும்பும் பாடலும் பிலகரி ராகத்திலேயே அமைக்கப்பட்டது.அந்த படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான Goutam Ghosh என்பவர் வங்காளத்தைச் சேர்ந்தவர்.

இனிமையும் ,சோகமும் ,அழகும் ததும்பும் ஓர் அருமையான ராகத்தில் அமைந்த இனிய இசை கொண்டது இலங்கை தேசிய கீதம்.

இன்று தமிழ் மக்களின் இழந்து போன வசந்தத்தின் குறியீடாக இலங்கையின் தேசிய கீதமும் அமைந்து விட்டது.

தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் 4 : T .சௌந்தர்

கர்னாடக இசையை ஆதாரமாககக் கொண்டு ஜி.ராமநாதன் .எஸ்.எம். சுப்பையா நாயுடு ,எஸ்.வீ .வெங்கட்ராமன் போன்ற மூத்த தலைமுறை இசையமைப்பாளர்கள் 1950 களின் இறுதிவரை ராகங்களைஅடிப்படையாகக் கொண்ட ராகங்கள் வெளிப்படையாத் தெரிகின்ற பாடல்களைத் தந்தார்கள்.

1950 களிலேயே மெல்லிசைகளின் ஒளிக்கீற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிய ஆரம்பித்தது.சுப்பராமன் இசைவாரிசுகளாக ஏ.எம் .ராஜா, விஸ்வநாதன் ராமமூர்த்தி அந்த திசையில் பயணித்த முக்கியமானவர்களாக இருந்தனர்.பணம் [1953 ] படத்தின்மூலம் அவர்கள் அறிமுகமாகினாலும் சில வருடங்களின் பின்னர் தான் அவர்கள் பிரபலமாகிறார்கள்.

* கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே படம் : மகாதேவி [1957 ] A.M.ராஜா + P.சுசீலா

* துள்ளித் துள்ளி அலைகள் எல்லாம் என்ன சொல்லுது படம் : தலை கொடுத்தான் தம்பி [1957 ] A.M.ராஜா + P.சுசீலா

* தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் படம் : பெற்ற மகனை விற்ற அன்னை [1958 ] A.M.ராஜா + P.சுசீலா

* வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே படம் : பதிபக்தி [1959 ] T.M.சௌந்தரராஜன்

* கனிந்த காதல் இன்பம் என்றானே படம் : ராஜாமலையசிம்மன் [1959 ] P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா

* விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே படம் : புதையல் C.S.ஜெயராமன் + P.சுசீலா

* நானன்றி யார் வருவார் படம் : மாலையிட்ட மங்கை [1959 ] T.R.மகாலிங்கம் + A.B.கோமளா

* சின்னஞ் சிறு கண் மலர் செம்பவழ வாய் மலர் படம் : பதிபக்தி [1959 ] P.சுசீலா

போன்ற நல்ல பாடல்களை தந்த நேரத்தில் , மூத்த இசையமைப்பாளர்கள் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களுடன் போட்டி போடவும் நேர்ந்தது. எம்.ஜி.ஆர் , சிவாஜி போன்ற பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மூத்த இசையமைப்பாளர்கள் இசையமைத்துக் கொண்டிருந்தார்கள். இளையராஜா போல எடுத்த எடுப்பிலேயே புகழ் பெற முடியவில்லை.அதற்காக அவர்கள் நிறைய பாடுபட வேண்டியிருந்தது.கீழே உள்ள படங்களின் பட்டியலை கவனித்தாலே புரியும்.அவர்கள் அந்தக்கால ஜாம்பவான் இசையமைப்பாளர்களுடன் போட்டி போடும் நிலைமை தான் இருந்தது.

1. மிஸ்ஸியம்மா [1955 ] எஸ்.ராஜேஸ்வர ராவ்

2. கோடீஸ்வரன் [1955 ] எஸ்.வீ .வெங்கட்ராமன்

3. கோமதியின் காதலன் [1955 ] ஜி.ராமநாதன்

4. நல்ல தங்கள் [1955 ] ஜி.ராமநாதன்

5. அமரதீபம் [1956 ] டி .சலபதி ராவ்

6. சதாரம் [1956 ] ஜி.ராமநாதன்

7. கோகிலவாணி [1958 ] ஜி.ராமநாதன்

8. நான் பெற்ற செல்வம் [1958 ] ஜி.ராமநாதன்

9. தாய்க்குப் பின் தாரம் [1956 ] கே .வீ . மகாதேவன்

10. இரும்புத்திரை [1958 ] எஸ்.வீ .வெங்கட்ராமன்

11. ரம்பையின் காதல் [1956 ] டி.ஆர்.பாப்பா

12. மதுரை வீரன் [1956 ] ஜி.ராமநாதன்

13. காத்தவராயன் [1957 ] ஜி.ராமநாதன்

14.அம்பிகாபதி [1957 ] ஜி.ராமநாதன்

15 .சமயசஞ்சீவி [1957 ] ஜி.ராமநாதன்

16 .சக்கரவர்த்தித் திருமகள் [1957 ] ஜி.ராமநாதன்

17. நீல மலை திருடன் [1957 ] கே .வீ . மகாதேவன்

18. மக்களைப் பெற்ற மகராசி [1957 ] கே .வீ . மகாதேவன்

19. உத்தமபுத்திரன் [1958 ] ஜி.ராமநாதன்

20. தங்க மலை ரகசியம் [1957 ] டி.ஜி.லிங்கப்பா

21. கடன் வாங்கிக் கல்யாணம் [1958 ] S.ராஜேஸ்வர ராவ்

22. சபாஸ் மீனா [1958 ] டி.ஜி.லிங்கப்பா

23 சாரங்கதாரா [1958 ] ஜி.ராமநாதன்

24. சக்கரவர்த்தித் திருமகள் [1958 ] ஜி.ராமநாதன்

இவர்களுடன் முக்கியமாக கே.வீ .மகாதேவனும் சமதையாக இசையமைத்துக்கொண்டிருந்தார்எனபதும் குறிப்பிடத்தக்கது..எம்.ஜி.ஆர் ,சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி என்ற படத்திற்கு இசையமைத்தவர்கே.வீ.மகாதேவன்.

பொதுவாக அன்றைய இசையமைப்பாளர்களின் பாடல்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டிருந்தன.எல்லோரும் அருமையான , நல்ல பாடல்களை மட்டும் தருவோம் ” என்று சபதம் செய்தது போல் பாடல்களை தந்து கொண்டிருந்தார்கள்.மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அழகாக சொல்வார் ” வீணான பாட்டே கிடையாது ” என்று.

மகாதேவி [1957 ] படத்தில் மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் மிகச் சிறப்பானவை. உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்கும் அற்ப்புதமான பாடல்கள் சிலவற்றை தந்தார்கள்.குறிப்பாக

1 . சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே [ பாடியவர்கள் : எம். எஸ்.ராஜேஸ்வரி + ஆர்.பாலசரஸ்வதிதேவி ]

இந்தப் பாடல் மூலம் தமிழ் திரை இசையில் தாலாட்டு பாடல் அமைப்பில் ஒரு புதிய போக்கு [ new trend ] ஏற்படுத்தியது என்றும் தாலாட்டுப் பாடல் என்றால் அந்த பாடல் அமைக்கப்பட்ட ராகத்தில் [ ஆபேரி ராகம் ] தான் அமைய வேண்டும் என்ற போக்கு பின்னாளில் அதன் விளைவால் ஏற்பட்டது என்பார் ” மெல்லிசை மன்னர் ” திரு.எம்.எஸ்.விஸ்வநாதன்.ஆனாலும் 1954 இல் வெளிவந்த இல்லற ஜோதி என்ற படத்தில் இசைமேதை ஜி. ராமநாதன்

கண்ணல்ல தூங்கம்மா செல்ல
கண்ணல்ல தூங்கம்மா”

என்ற பாடலை ஆபேரி ராகத்தில் அமைத்து ஒரு முன் மாதிரியாக திகழ்ந்தார்.இதைப் போலவே பராசக்தி [ 1952 ] படத்தில் வரும் ” கொஞ்சு மொழி பைங்கிளியே ” என்ற பாடலை தேஷ் ராகத்தில் ஆர். சுதர்சனம் இசையமைத்திருந்தார். தமிழ் செவ்வியல் இசையில் [ கர்னாடக இசை ] தாலாட்டு பாடல்கள் என்றால் இன்ன இன்ன ராகங்ககளில் தான் இருக்க வேண்டும் [ குறிப்பாக நீலாம்பரி , குறிஞ்சி ,ஆனந்தபைரவி போன்ற ராகங்களில் ] என்கிற நியதிகளை அன்றே மீறி இருக்கிறார்கள்.அந்த ராகங்களில் சில ஒலி அதிர்வுகள் இருப்பது உண்மையாக இருக்கலாம்.ஆனாலும் அவற்றை எல்லாம் மீறி ஆபேரி போன்ற ராகங்களிலும் தாலாட்டு பாடல்களைத் தந்தார்கள்.

2 . மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு [ பாடியவர் : டி.எஸ்.பகவதி ]

இந்த பாடல் உணர்ச்சி வெளிப்பாட்டில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட பாடல். கதையோட்டத்திற்கு பொருத்தமாக மனதை உருக வைக்கும் ராகங்களில் [ பைரவி , ஹிந்தோளம் , ஆபேரி ] அமைத்து மக்களை இசையால் கட்டி போட்டார்கள்.இந்த பாடல் காட்சியில் நடிகை சாவித்திரியின் முக பாவங்கள் மிக அற்ப்புதமாக இருக்கும்.இசை நாடகங்களுக்கு பயன் படத் தக்க வகையில் மிகச் சிறப்பாக இசையமைக்கப்பட்ட பாடல் இதுவாகும்.இந்த வகை இசை பாணியை நாடகங்களில் பயன் படுத்தி நாம் பயன் அடையலாம்.

இது போலவே கற்ப்புக்கரசி , காத்தவராயன் போன்ற படங்களில் , சில பாடல்களில் இசை மேதை ஜி.ராமநாதன் பாடல்களிலேயே கதை சொல்லும் முறையை கையாண்டு ஒரு சிறந்த முன்னோடியாக விளங்கினார்.

இந்த இசையின் உன்னதங்களை , வெற்றிகளை எல்லாம் நடிகர்களும் ,அவர்களை சார்ந்த அரசியல் இயங்கங்களும் [தி.மு.க ] தங்கள் உயர்வுக்கு பயன் படுத்தினார்கள்.உண்மையில் இந்த வெற்றிகள எல்லாம் இசையமைப்பாளர்கள் பெற்றிருக்க வேண்டியவையே!! எத்தனையோ நூற்றுக்கணக்கான இனிமையான பழைய பாடல்களை ரசிக்கும் நாம் ,அந்தப்பாடல்கள் இடம் பெற்ற படங்களை மிகுந்த சகிப்பு தன்மையுடன் தான் இன்று பார்க்க வேண்டிய நிலை உள்ளது.சில படங்களை பார்க்கும் போது கொடிய தண்டனை அனுபவிப்பது போலிருக்கும்! ஆனாலும் பாடல்களாலேயே அந்த படங்கள் ஞாபகப் படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால்அந்த பாடல்களை தந்த இசை மேதைகள் பத்தோடு பதினொன்றாக ஆக்கப்பட்டார்கள். நியாயமாக அவர்கள் பெற வேண்டிய அங்கீகாரங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் கடினப்பட்டு உழைத்து உருவாக்கிய பாடல்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் பாட்டாகவும் , சிவாஜி பாட்டாகவும் அறியபட்டன.படங்கள் வெற்றி பெற்றால் பாடல்களும் வெற்றி பெறும்.அவர்களுக்கு எந்தவிதமான விருதுகளும் வழங்கப்படவில்லை.இசை மக்களைக் கவர்ந்தது என்றாலும் இசை பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலம் என்பதால் அவர்கள் சரியாக கவனிக்கப்படாமல் போயினர்.தங்களுக்கான தனித்துவத்தைப் பேணும் அதே நேரம் , மிகவும் சிறப்பான பாடல்களையும் தந்தார்கள்.பின்னாளைப் போல நடிகர்களின் குழு மனப்பான்மை இல்லாத காலத்தில் இவை நடந்தன எனலாம்.நடிகர்கள் தங்களுக்குள் போட்டி போட்டாலும் இசையமைப்பாளர்கள் பாகுபாடின்றி குழு நிலைக்குள் சிக்காமல் இருந்த காலமும் அதுவாகும் எனலாம்.

பாடகர்களிலும் பொதுவாக எல்லோரும் பாடிக்கொண்டிருந்தார்கள்.இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்றில்லாமல் இனிமையான குரலக்ளில் பாடல்களின் தன்மைகளுக்கு ஏற்றவாறு பொருத்தமானவர்கள் பாடியதால் பாடலகள் சுவையாகவும் இருந்தன.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ஜெமினி கணேஷன் போன்ற நடிகர்களுக்கு ஒரே படத்தில் வெவ்வேறு பாடகர்கள் ,வெவ்வேறு விதமான பாடல்களை பாடினார்கள்.ஒரே படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஏ .எம்.ராஜாவும் , டி .எம் சௌந்தரராஜனும் , பி.பி.ஸ்ரீநிவாசும் பாடிய படங்களும் உண்டு.அதனால் நல்ல பல பாடல்கள் தொந்தரவாகப் பாடப்படாமல் தப்பித்துக் கொண்டன.

பின்னாளில் துரதிஸ்டமான முறையில் தமிழ் சினிமா இசையில் இருந்து தானே ஒதுங்கி நின்ற, [அல்லது அவ்வாறான ஒரு நிலைக்கு அவரை கொண்டு செல்லப்பட்ட ] மாபெரும் இசைக்கலைஞன் A.M. ராஜா எழுபதுகளின் மத்தியில் ஒரு பேட்டியில் நல்ல பாடல்கள் பற்றி கேட்ட போது பின்வருமாறு கூறினார்.

” இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் , என்ற நிலை மாறவேண்டும். அந்நிலை மாறினால நல்ல பாடல்கள் வர வாய்ப்புக்கள் உண்டாகும்.”

பொதுவாக அந்தக்காலப் படங்கள் ராஜா ராணிக் கதைகளாகவே இருந்தன.அதனாலே விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்றவர்களும் முன்னவர்களை போன்றே இசையமைக்க வேண்டி இருந்தது.எனினும் அவற்றிலும் கிடைக்கும் காட்சிகளுக்குப் பொருத்தமாக சில பாடல்களில் வெளிநாட்டு இசையை பயன்படுத்தி வந்தார்கள்.குறிப்பாக குலேபகாவலி படத்தில்

ஆசையும் என் நேசமும் இரத்த பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா என்று கே.ஜமுனாராணி பாடும் பாடலில் [ படத்தில் ஆதி வாசிகளுக்கு நடுவே பாடும் பாடல் ]

THE GREEN COCKATOO [ HITS OG 46 ] ROBERTO INGLEZ & HIS ORCHESTRA என்ற லத்தீன் அமெரிக்க பாடலின்ஒரு சிறிய பகுதி சேர்ந்து மறைந்து விடும்.

நல்ல மெட்டுள்ள ஹிந்தி திரைப்படப் பாடல்களை நகல் எடுப்பதும் நடந்தன.செந்தமிழ் தென் மொழியாள் என்ற பாடல் , நௌசாத் இசையமைத்துப் புகழ் பெற்ற பாடலின் நேரடியான தழுவலாகும்.இது கண்ணதாசன் தயாரித்த படமான மாலையிட்ட மங்கை [1959 ] என்ற படத்தில் இடம் பெற்றது.. கண்ணதாசன் ,தனக்கு பிடித்த அந்த ஹிந்தி பாடலின் மெட்டில் , தனது வரிகளை போட்டு மகிழ்ந்தார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் , இதே பாடல் வேறு ஒரு படத்திலும் மோக முத்தம் தருமாம் மலர் கொடியாள் என்ற பாடலாக, மேலே சொன்ன ஹிந்திப் பாடலின் நேரடித் தழுவலாகவும் வெளி வந்தது.

1940 களின் மத்தியில் இந்தி திரை இசையில் இசையமைப்பாளர் சி .ராமச்சந்திரா சாக்ஸபோன் , கிடார் ,ஹார்மோனிகா, ஒபோ , ட்ரம்பெட் ,கிளாரினெட்,பொன்கொஸ் போன்ற மேலைத்தேய வாத்தியங்களை அறிமுகம் செய்தது போல தமிழ் திரை இசையில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மேல் குறிப்பிடபட்ட வாத்தியங்களுடன் ஹிந்துஸ்தானி இசைக்கருவிகளான செனாய், சித்தார் போன்ற புதிய வாத்தியகருவிகளை தமது இசையில் பயன்படுத்தினார்கள்.

 

Shehnai [1947 ] என்ற படத்தில் சி .ராமச்சந்திரா இசையமைத்து சித்தலக்ர் [ Chitalkar ] என்ற பெயரில் அவரே மீனாகபூருடன் பாடிய ” Aanna Mere Jaan Sunday Ke Sunday ” .என்ற நகைசுவை பாடலில் மேலைத்தேய இசையையும் ,வடஇந்திய நாட்டுப்புற இசையையும் இணைத்திருப்பார்.

இதே உத்தியை பதிபக்தி [1959 ] படத்தி மேலைத்தேய இசை வடிவமான் ROCK AND ROLL இசையை ,தமிழ் செவ்வியல் இசையுடன் இணைத்து மேலைத்தேய நடனமும் ,தமிழ் நடனமும் இணைந்த ஒரு நாட்டியப் பாடலை , நகைச்சுவை பாடலாக தந்தார்கள் மெல்லிசை மன்னர்கள்.அந்த பாடலை நடிகர் ச்நதிரபாபுவும், V.N.சுந்தரமும் பாடினார்கள்.அந்த பாடலின் பெயர் : ராக் .. ராக் .. ராக் … ராக் அண்ட் ரோல் .[ படம் : பதிபக்தி ]

பாடகர் பி.பி. ஸ்ரீநிவாஸ் சொல்வார் ” Westren Influence மெல்ல , மெல்ல வந்த போது K.V.மகாதேவன் சொல்வார் “கொஞ்சம் Western உடன் கலந்தால் அழகிருக்கு , அதில் தப்பில்லை, ..இசைக்கு எல்லை இல்லை ” என்று.

பதிபக்தி [1959 ] விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையருக்கு ” ” என்ற வரிசையில் அமைந்த முதல் படமாகும்.அவர்களின் இசையார்வத்திற்கு நல்ல ஆரம்பமாகவும் அமைந்திருந்தது. சமூகக் கதைகள் சினிமாவில் அதிகம் வெளிவர ஆரம்பித்த கால கட்டமாகவும் இருந்தது.சமூகக் கதைகளை மைய்யமாக கொண்ட கதைகளின் வருகையும் ,அதற்கேற்ற புதிய மெல்லிசை பாங்கான இசையின் தேவையும் ஒன்றுக்கொன்று இசைவாக்கம் பெற உதவியது எனலாம்.திரைக் கதையின் சூழ்நிலைக்கு, கதா பாத்திரங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய இசையை மரபிலிருந்தும் , வெளியிலிருந்தும் இணைத்தும் அர்ப்புதங்களை செய்தார்கள். மேலைத்தேய இசை , ஹிந்தித் திரைப்பட இசை ,தமிழ் செவ்வியல் இசை ,ஹிந்துஸ்தானி இசை [ கவாலி , ஹசல் ] போன்ற பல் வகை இசையிலிருந்தும் இனிமையான பாடல்களைத் தரமுடியும் என இந்த இரட்டையர்கள் நிரூபித்தார்கள். குறிப்பாக 1960 களை இவர்களது பொற்காலம் அல்லது தமிழ் திரையிசையின் பொற்காலம் என வரையறுக்கலாம். பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களாக இருந்தாலும் அதில் இனிமையும் , வார்த்தை எளிமையும் இழைந்திருக்கும். பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களாக இருந்தாலும் அதில் இனிமையும் , வார்த்தை எளிமையும் இழைந்திருக்கும்.இன்றைய இளைஞர்களும் அவர்களது பாடலகளைப் பாட விளைவது அந்தப் பாடலகளில் இருக்கும் இலகுவான தன்மையினாலேயே! பலவகை இசையிலிருந்து அவர்கள் பெற்ற உந்துதல் [ INSPIRATION ],அவற்றை அவர்கள் நமது இந்திய சூழ்நிலைக்கு பொருத்துமான வகையில் இசைவாக்கியது பெரு வெற்றியளித்தது எனலாம்.படத்திற்குப் படம் இனிமையான பாடல்களைத் தந்தார்கள்.

பாடல் மெட்டமைப்பில் மட்டுமல்ல , இடையே வரும் இசையிலும் [ interlute ] சீரிய பார்வை கொண்டவர்களாக விளங்கினார்கள்.எளிமையான மெட்டமைப்பை கொண்ட பாடலாக இருந்தாலும் , புதுமையான , உயர்ந்த தர வாத்திய இணைப்பின் சேர்க்கையோடு பாடலின் இனிமையும் இணையும் போது புது பரிமாணங்களை எட்டி, நம்மை புது நிலைக்கு கொண்டு செல்லும் வல்லமைமிக்கதாக பாடல்கள் அமைந்துவிடுகின்றன. தமது சக்திக்கு எட்டிய உலக இசையின் சாத்தியங்களை எல்லாம் நமக்கும் காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்.

குறிப்பாக 1950 களின் பின்னால் மேற்கில் வளரச்சியடைந்த பொப் இசை [ pop music ] என்னும் சொல்லாடல் ராக் அண்ட் ரோல் [ Rock and Roll ] இசையின் மூலம் கிடைக்கிறது.பல இசை வடிவங்களை [ Ballad , Gospel , Soul Music , Jazz , Country Music , Rythm of dance music ,Classical Music போன்ற இசை வடிவங்கள் ஒன்றிணைந்த இசை ] உள்வாங்கிய இசையாகவும் ,மின் கருவிகளை இணைத்த புது இசையாகவும் மலர்ந்தது.பொழுது போக்கு இசையில் புது பரிமாணங்களை எட்டிய இந்த வகை இசை மேற்கில் பரந்துபட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வளர்ந்தது.இந்த போக்குகளுக்கு முன்பே வளர்ந்திருந்த குறிப்பாக 1930,1940 களில் வளர்ச்சியடைந்த Nat King Cole போன்ற ஜாஸ் பியானோ இசைக்கலைஞர்களின் இசையில் மிக்க ஈடுபாடு காட்டியவர்கள் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தி. Nat King Cole என்ற அமெரிக்க கறுப்பினஇசைக்கலைஞர். மிகப்பெரிய இசைக்குழுவை நடாத்தியதுடன் , முதன் முதலில் டி ,வீ நிகழ்சிகளிலும் இசை நிகழ்சிகளை நடத்திய முன்னோடியாவார். இவருடைய இசையின் பாதிப்பு [ inspiration ] மெல்லிசைமன்னர்களின் இசையில் அதிகம் உண்டு.

இவருடைய[ Nat King Cole ] வாத்திய குழுவில் பயன்படுத்தப்பட்ட BONGOS என்ற தாள வாத்தியம் தாள லயத்தில் புது மெருகூட்டியது. ஆபிரிக்காவின் அடிமை மக்களால் கொண்டு வரப்பட்ட இந்த வாத்தியம் , 1800 களில் கியூபாவில் நிலை பெற்று , பின் ஆபிரிக்க ,ஸ்பானிய கலப்பு கலாச்சாரத்தின் அடையாளமாக மாறியது . Changui & Sone என்கிற ஸ்டைலில் வாசிக்கப்பட்டு புகழ் பெறுகிறது.சல்சா [ Salsa ] இசையின் வேர்கள இந்த இசையில் தான் உள்ளது என்பர்.1940 , 1950 களில் BONGOS முன்னணி வாத்தியமாக உயரவும் , வியாபாரா ரீதியில் புகழ் பெற உழைத்த கலைஞர் ” MR. BONGO ” என்று போற்றப்பட்ட Jack Contanzo என்பவராவார். இவர் Nat King Cole இன் வாத்தியக் குழுவில் மிக முக்கிய பங்காற்றினார்.இந்த இசை குழுவின் அமைப்பு முறையை தான் மெல்லிசைமன்ன்ர்கள் முன்மாதிரியாக [ INSPIRATION ] கொண்டு தமிழ் சினிமா இசையில் காட்சிகளுக்குப் பொருத்தமாக சில பாடலகளை தந்தார்கள்.சர்வர் சுந்தரம் படத்தில் அவளுக்கென்ன அழகிய முகம் என்ற பாடல் காட்சியில் தோன்றும் விஸ்வநாதனின் இசைக்குழுவும் Nat King Cole இன் வாத்தியக் குழுவினரை போலவே தோற்றமளிக்கும்.
BONGOS என்ற தாள வாத்தியக் கருவியை மிகச் சிறப்பாக மெல்லிசை மன்னர்கள் கையாண்டார்கள்.அதன் இனிய நாதம் தமிழ் திரை இசைக்கு புத்துணர்வுமிக்க புதிய சப்தத்தை வழங்கியது.இன்று ஏ.ஆர் ரகுமான் போல தாளத்தை சகட்டுமேனிக்கு போட்டு ” முழக்காமல் ” மிகவும் கச்சிதமாக திரையில் காட்சிகளுக்கு பொருத்தமாக பயன்படுத்தினார்கள்.

அதுமட்டுமல்ல கியுபாவில் தோன்றி பின் மெக்சிக்கோவில் நிலை பெற்ற நடன முறையில் பயன் பட்ட DENZONES என்ற இசை , ENRIQUE JORRIN என்பவரால உருவாக்கப்பட்டது.ஆங்கில இசையின் கலப்பும் ,கியூபா மற்றும் ஆபிரிக்க தாளத்தின் கலவைகளாக உருவான இந்த இசை பிரஞ்சு காலனித்துவ வாதிகளால் பரப்பபட்டது.இந்த இனிய கலவையின் விளைவாகத் தோன்றியதே CHA CHA CHA என்ற நடன இசை.இந்த இசை 1940 , 1950 களில் மிகவும் புகழ் பெற்றிருந்தது.இந்த CHA CHA CHA வை பயன்படுத்தி 1960 களில் வெளிவந்த பல படங்களில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பல வெற்றிப்பாடலகளைத் தந்தார்கள். அவற்றில் சில

1. அன்று வந்ததும் இதே நிலா [படம் : பெரிய இடத்து பெண் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P சுசீலா
இந்த பாடலில் நேரடியாக ”
CHA CHA ” என்ற சொல் பிரயோகம் நேரடியாக வரும்.

2. இது வேறுலகம் தனி உலகம் [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி
இந்த பாடலிலும் நேரடியாக ” CHA CHA ” என்ற சொல் பிரயோகம் நேரடியாக வரும்.

3. அவளுக்கென்ன அழகிய முகம் [படம் : சர்வர் சுந்தரம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி …..
இந்தப் பாடலில் நேரடியாக
CHA CHA ” வராது ஆனால் தொனிப்புகளில் மிக துல்லியமாகத் தெரியும்.

அது மட்டுமல்ல ஸ்பானிய , ஆபிரிக்க கலப்பு இசையான இன்னொரு வடிவம் RAMBA MUSIC. இது லத்தீன் அமெரிக்க நடனத்தில் பயன்படும் மென்மையான தாள அசைவுகளை கொண்ட இசையாகும். இதை நல்ல உந்துதலாகக் கொண்டு [ INSPIRATION ] கொண்டும் சில பாடல்களைத் தந்தார்கள்.

போனால் போகட்டும் போடா ” [படம் : பாலும் பழமும் ] பாடியவர்: T.M.:சௌந்தரராஜன் ,,, என்ற பாடலை மிக அழகாக RAMBA MUSIC பாணியில் இசையமைத்திருப்பாரகள் மெல்லிசை மன்னர்கள்.

மேல் சொன்ன BONGOS என்ற தாள வாத்தியக் கருவி , CHA CHA CHA , RAMBA MUSIC போன்ற இசைகளின் கலவைகளான லத்தீன் அமெரிக்க இசையை கொண்டு இனிய பல பாடல்களை தந்தார்கள் மெல்லிசை மன்னர்கள். சில உதாரணங்கள் …இந்தப்பாடல்களில் BONGOS வாத்தியக்கருவி முதுகெலும்பாக இருக்கும். BONGOS வாத்தியம் பயன்பட்ட சில பாடல்கள் இதோ :

1. அவளுக்கென்ன அழகிய முகம் [படம் : சர்வர் சுந்தரம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி

2. இது வேறுலகம் தனி உலகம் [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி

3. படைத்தானே படைத்தானே [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன்

4. போனால் போகட்டும் போடா [படம் : பாலும் பழமும் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன்

5. பாலும் பழமும் கைகளில் ஏந்தி [படம் : பாலும் பழமும் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன்

6. பெண் போனால் இந்த பெண் போனால் [படம் : எங்க வீட்டுப் பிள்ளை ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + .P.சுசீலா

7. ஒரு பெண்ணைப் பார்த்து நிலவை பார்த்தேன் [படம் : தெய்வத்தாய் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன்

8. பருவம் போன பாதையில் [படம் : தெய்வத்தாய் ] பாடியவர்: P.சுசீலா

9. இது வேறுலகம் தனி உலகம் [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி

10.பருவம் எனது பாடல் [படம் : ஆயிரத்தில் ஒருவன் ]பாடியவர்: P.சுசீலா

11. குமரிப் பெண்ணின் உள்ளத்திலே [படம் : எங்க வீட்டுப் பிள்ளை ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + .P.சுசீலா

12 .வந்த நாள் முதல் இந்த நாள் வரை [படம் : பாவ மன்னிப்பு ] பாடியவர்: T.M.:சௌந்தரராஜன்

இந்த ” வந்த நாள் முதல் இந்த நாள் வரை “ பாடலின் அமைப்பு முறயில் மிகவும் புதுமையைக் கையாண்டார்கள மெல்லிசை மன்னர்கள்.பாடலின் ஆரம்பத்தில் விசில் சத்தத்தைத் தொடர்ந்து ஹம்மிங் பின்தொடர்ந்து முடிய, பாடல் ஆரம்பிக்கும்.தொடர்ந்து விசில் சத்தத்தை பின்ணணி இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தியிருப்பார்கள்.இதில் புதுமையின் உச்சம் என்னவென்றால் இந்தப் பாடல் அமைக்கப்பட்ட ராகம். தமிழ் செவ்வியலிசையில் மிக முக்கிய ராகங்களில் ஒன்றான மோகனம்.

மோகன ராகத்தில் இப்படியும் இசையமைக்க முடியுமா ? என்று எண்ண வைக்கும் வகையில் , முற்றிலும் புதிய , யாரும் எதிர் பார்க்காத கோணத்தில் அமைக்கப்பட்ட பாடல் இதுவாகும். ஹம்மிங் , விசில் போன்றவற்றோடு கமகங்கள் குறைக்கப்பட்ட மோகன ராகத்தின் வலிமையும் , கண்ணதாசனின் கவித்துவம் அழுத்தாத எளிமையான வரிகளாலும் அமைக்கப்பட்ட இந்தப் பாடல் இன்னும் ஒரு நூற்றாண்டைக் கடந்து செல்லும் வல்லமை கொண்ட புதுமையான பாடலாகும் , என்பது ஒவ்வொரு முறையும் கேட்கும் போதுஆனந்திக்கும் எனது அனுபவமாகும்.ஆச்சர்யமான முறையில் மோகன ராகத்தைக் கையாண்ட அவர்களது மேதமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மெல்லிசை மன்னர்கள் பற்றி பின்னணிப்பாடகர் பி .பி. ஸ்ரீனிவாஸ் சொல்வார்.. ” இவர்களது வருகையால் இசை இனிய திசைக்குச் சென்றது.” என்று.

உலகெங்கும் உள்ள நல்ல இசையை தமிழ் சினிமாவில் கொண்டு வந்த பெருமை அவர்களைச் சாரும் என்பதை நாம் அவர்களது பாடல்களை இன்று கேட்கும் போதும் உணரக்கூடியதாக இருக்கின்றது.இன்று சர்வ சாதாரணமாகப் பயன் படுத்தப்படும் வெளி நாட்டு வாத்தியங்களை எல்லாம் இவர்களே அறிமுகம் செய்தார்கள்.ஒரு மெலோடி [Melody ] யுகத்தை உருவாக்கி அதில் வாத்திய இனிமையையும் ,நவீனத்தையும் , காலத்திற்கு ஏற்ப புதுமையையும் படைத்தார்கள்.பாடல் மட்டுமல்ல பாடலுக்கு வரும் முகப்பு இசை [Opening Music] இடையில் வரும் வாத்திய இசை [Interlute] போன்றவற்றைப் புதுமையாக அமைத்து பாடலின் எல்லா பக்கத்தையும் இனிமையாக்கினார்கள்.ஹம்மிங் , கோரஸ் , விசில் , பறவை இனங்களின் ஒலிகள் , இரவின் ஒலி போன்ற சப்தங்களை எல்லாம் மிக நுட்பமாக பயன்படுத்தினார்கள்.மனதை கரைய வைத்து நினைவில் இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் இந்த இரட்டையர்கள்.காட்சிக்கு பொருத்தமான இசையை பயன்படுத்தி வந்த இரட்டையர்கள் மரபை விட்டு வில்கியவர்களல்ல என்பதும் கவனத்திற்குரியது.வாத்திய சேர்க்கைகளில் புதுமை இருந்தாலும் ராக அடிப்படைகளில் நின்று மனதை வசியம் செய்கின்ற பல பாடல்களை தந்தார்கள்.ராகங்களை “மறைத்து வைக்கும் “அதே நேரத்தில் அதன் குணாம்சங்களை பாத்திரங்களின் உணர்வு நிலைக்கு ஏற்ப கொடுக்கும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள்.சில பாடல்களில் ராகங்கள் இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு விதமான மயக்க நிலலையில் , ரகசியமாக ஒளித்து வைக்கும் கலையை கை வரப் பெற்றார்கள் எனலாம்.கனமான ராகங்களில் மெல்லிசை தன்மை ஓங்கி நிற்கும்.பாடல்களைத் தந்து சாதனை படைத்தார்கள். சில சாதனைப் பாடல்கள்…

1. கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே [படம் : கர்ணன் ] பாடியவர்: P.சுசீலா ராகம்: சுத்த தன்யாசி

2. நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே [படம் : பார் மகளே பார் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம்: தர்மவதி
3. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் [படம் :பாலும் பழமும் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம் : சிவரஞ்சனி
4. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் [படம் : பாக்கியலட்சுமி ] பாடியவர் : P.சுசீலாராகம் : சந்திர கெளன்ஸ்
5. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல [படம் : பாசமலர் ] பாடியவர்கள் : T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம் : ஆபேரி
6. தங்கரதம் வந்தது [படம் : கலைக்கோயில் ] பாடியவர்:பாலமுரளி கிருஷ்ணா + P.சுசீலா ராகம் : ஆபோகி
7. மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா [படம் : கற்பகம் ] பாடியவர்: P.சுசீலா ராகம் : கீரவாணி
8. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் [படம் : போலீஸ்காரன் மகள் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் ராகம் : ஆபேரி

9. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் ராகம் : கல்யாணி

10.ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை [படம் : பணத்தோட்டம் ]பாடியவர்: P.சுசீலா ராகம் : காபி

11. பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா [படம் : பணத்தோட்டம் ]பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + .P.சுசீலா ராகம் : சாருகேசி

12 .பொன் என்பேன் சிறு பூ என்பேன் [படம் : போலீஸ்காரன் மகள் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + எஸ்.ஜானகி ராகம் : சாருகேசி

13 .தமிழுக்கும் அமுதென்று பேர் [படம் : பஞ்சவர்ணக்கிளி ] பாடியவர்: P.சுசீலா ராகம் : திலங்

14 .நான் உன்னை சேர்ந்த செல்வம் [படம் : கலைக்கோயில் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா ராகம் : மோகனக்கல்யாணி

15 .நெஞ்சம் மறப்பதில்லை [படம் : நெஞ்சம் மறப்பதில்லை ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா ராகம் : மிஸ்ர மாண்டு

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இவ்விதம் ஏராளமான பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.


திரையின் கதையமைப்பி
ற்க்கு ஏற்ப எங்கெல்லாம் நல்லிசை இருக்கிறதோ அவற்றை எல்லாம் , நமது சூழலுக்கு பொருத்தமாக , அவற்றை அருவருப்பாக அல்லாமல் கண்ணியமான பாடல்களாகத் தந்தார்கள்.

தங்களது இசையமைப்பு பற்றி மெல்லிசை மன்னர் பின்வருமாறு கூறுகிறார்.

” நாவல்டி.. புதுமை ..அப்படி ஏதாவது செய்யணுமின்னு வெறி இருந்தது.ஆனால், பழமை மாறாத புதுமை பன்னனுமின்னு நினைச்சோம். எந்தப் பாடலை எடுத்தாலும் ஒரு ராகமிருக்கும்.அதை கொஞ்சம் மாடிபை [ MODIFY ] பண்ணி … கொஞ்சம் வெஸ்டர்ன்நைசா { westernise ] பண்ணி .. இப்படி ஒரு விதமா சேஞ் பண்ணினோம்.முழுக்க முழுக்க கிளாசிக்கலா இருந்ததை மாற்றி லைட் கிளாசிக்கலா பண்ணி ஜனரஞ்சகமா கொடுத்தோம் “

அவர்களின் இசையை பற்றி அவர்களது ரசிகன் இளையராஜா சொல்கிறார்.

” எனது இளவயது போனதே தெரியாமல் ,அவருடைய இசையிலேயே நான் கழித்தேன்.எத்தனையோ பாடல்கள் வார்த்தையால் வர்ணிக்க முடியாத அளவுக்கு உயிரோட்டமாகக் கொடுத்திருக்கிறார். அதில்

மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் என்ற பாடல் மிகவும் பிடிக்கும்.ஒரு பாடல் என்பது படத்துக்கு மட்டும் உதவினால் பிரயோசனமில்லை , படத்தைத் தாண்டி , பட சூழ் நிலையை தாண்டி ,படத்தில் வரும்கதாபாத்திர மன நிலையத் தாண்டி பாடலைக் கேட்ககூடிய ரசிகர்களை போய் தாக்க வேண்டும். பாலய விவாகம் செய்து கணவனை இழந்த பெண் பாடும் பாடல்.

அதில் எனக்குப் பிடித்த வரிகள் :

இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
நினைவும் அறியாமல் முடிவும் தெரியாமல்
மயங்குது எதிர் காலம் ” ………என்னுடைய எதிர்காலம் குறித்து யோசிக்க வைத்த அந்தப் பாடலைகண்ணாதாசன் அர்ப்புதமாக் எழுதினார்.விஸ்வநாதன் ,கண்ணதாசன் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாது.இசையை விட்டு வார்த்தையையும் ,
வார்த்தையை விட்டு இசையையும் பிரிக்க முடியாது.அது தான் இசை. பாட்டு என்றால் பாடுகிற படி இருக்க வேண்டும். “

பின்னாளில் இந்ந்தப் பாடலை உந்துதலாகக் [Inspiration] கொண்டு இளையராஜா ஒரு சிறந்தபாடலை அமைத்தார்.மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற அந்தப்பாடல் அமைந்த சந்திரகௌன்ஸ் என்ற ராகத்திலேயே , இளம் விதவை பாடுவதாகத்தான் அமைக்கப்பட்டது அந்தப் பாடல் வைதேகி காத்திருந்தாள் [1985 ]படத்தில் வரும் ”

” அழகு மலராட அபிநயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள் ”

என்ற பாடலாகும்.ஒரே ராகமாக இருப்பினும் இரண்டு அற்ப்புதமான இசைப் படைப்புக்களாகும். இரண்டு பாடலும் ஒரே விதமான் உணர்வு நிலையை வெளிப்படுத்தும் பாடலாக இருந்தாலும் ,அந்த ராகத்தின் ரசம் அந்த உணர்வு நிலையை தொட்ட போதும் ,ஒரு பாட்டைப்போல அடுத்த பாடல் இல்லை.
இசைஞானி இளையராஜா சொல்வார் ” ஹிந்தி திரை இசையமப்பாளர்களான மதன் மோகனும் , ரோஷனும் தங்கள் இசை மூலம் பேசிக்கொள்வார்கள்; ஒருவர் தன பாடல் மூலம் கேள்வி கேட்பார் , மற்றவர் அதற்குத் தன் பாடல் மூலம் பதில் சொல்வார் “ என்று.
அது போன்றே
இசைஞானி இளையராஜா , இசை பொது வெளியில் பல இசைமேதைகளால் விடப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லியிருப்பதை நாம் அவருடைய பல பாடல்களிலிருந்து உதாரணங்களை சொல்ல முடியும்.அந்த வகையில் மெல்லிசை மாமன்னர்எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்ட கேள்விக்கான பதிலே “அழகு மலர் ஆட ..” என்ற பாடாகும்.அகத்தூண்டுதல் [Inspiration] என்பதற்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.

அதே போலவே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாலும் பழமும் படத்தில் இடம் பெற்ற

” காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்க வா ” என்ற பாடலுக்கான Inspiration இசை மேதை நௌசாத் இசையமைத்த அக்பர் படத்தில் வரும் ” கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆச்சே ” என்ற பாடலிலிருந்து பெற்றது என்று கூறியிருப்பது ஆச்சரியமிக்கதாகும்.

பலவிதமான இசைகளை கேட்டு அவற்றில் லயித்து [Inspire] தாம் பெற்ற இன்பத்தை நமக்கும் தந்த மெல்லிசைம்ன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இந்தஅகத்தூண்டுதல் [Inspiration] பற்றி என்ன சொல்கிறார் ?

” இந்த இசையமைப்பு ,பாட்டெழுதுவது என்கிற தொழிலிலே நமக்குப் பிடிச்ச விசயங்கள் எங்கோ நமக்கு அறியாமல் ,ஒளிஞ்சு நிற்கும். வேறுயாராவது கம்போசர்களைக் கேட்டாக் கூட அந்தச் சாயல் வந்திடும் , இல்லை அந்தச் சாயல் அறியாமல் வந்திடும். அதனாலே அதனைத் திருடினேன் என்று சொல்லக் கூடாது.பாக்கியுள்ளவர்கள் திருடினேன் என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஒழிச்சு வைக்க வேணும்.அதனை ஓபன் ஆகத் திருடினேன் என்றளவுக்கு வைச்சுக்கக் கூடாது. நானும் காப்பி அடிச்சிருக்கேன் .என்னைப் பார்த்து சிலர் காப்பி அடிக்கிறதா சொல்லிக்கிறாங்க! இருக்கலாம் , But அதை ஒழிச்சு வைக்கணும்.அது மாதிரி…
கல்லைத்தான் காய்ச்சித்தான்
மண்ணைத்தான் குடிக்கத்தான்
… என பெரிய Poet அந்தக் காலத்தில் எழுதின ஒரு வரியை வைத்து ” கவிஞர் ” விளையாடினார். “அத்தான் ..என்னத்தான் ” இப்படி எல்லாம் தான் ,தான் என்றே வரும்.இந்த மாதிரி ஒரு பாட்டை எழுதினார்.பாவமன்னிப்பு படத்தில் நல்ல சிட்டுவேசன் மாட்டியது. அப்ப என்கிட்டே சொன்னாரு ..” டேய் தம்பி இப்படி ஒரு பாட்டு வைச்சிருக்கேன்டா ,ரொம்ப ஆசையாய் எழுதி வைச்சிருக்கேன் , இதை யார்யாரோ மியூசிக் டைரைக்டர்களிட்டே கொடுத்துப் பார்த்தேன்.இதுக்கு மெட்டே வராதுன்னுட்டாங்க.. நீ போட்டேன்னா உனக்கும் நல்லது ,எனக்கும் நல்லது என்று கெஞ்சினார்.அதில் என்னென்னா .. கவிதை அவ்வளவு ரசிப்புத்தன்மையுள்ளது.ஒரு ரசிகன் தான் கலைஞாக முடியும்.நான் ஏன் சொல்கிறேன் என்றால் அவர் ரசித்ததை நாம் எல்லோரும் ரசிப்போம் என்கிற நம்பிக்கை அவருக்கு ! என்கிட்டே கொடுத்தாரு , ஏன் வரமாட்டேன் என்று சொன்னாங்க ..ரை பண்ணிப் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன் …
“அத்தான்..
என் …..அத்தான்
அவர் என்னைத்தான்
எப்படி சொல்வேனடி ” ….
மத்தியிலே நல்ல காப் [ இடைவெளி ] இருக்கும். AVM செட்டியாரு சொன்னார் ” என்ன பாட்டிது ? மத்தியிலே இவ்வளவு காப் [ gap]இருக்கே , வெத்திலை ,பாக்கு மடிச்சு போடுற நேரம் இருக்கு , இப்பிடி பண்ணிட்டாங்களே விஸ்வநாதனும் ,கண்ணதாசனும்!!
அந்த காப் [ இடைவெளி ]எப்படியாச்சின்னா , வெட்கத்தை குறிப்பிட்டிச்சு.அந்த காப் சொல்லமுடியாத விரகதாபத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திரிச்சு !அதற்குத் தகுந்த மாதிரி பி.சுசீலா பாடும் பொது எல்லோரும் தம்மை மறந்தாங்க.லதா மங்கேஸ்கர் பாராட்டிய பாடல் அது.அந்த வார்த்தை தான் என்னை இன்ஸ்பையர் [ INSPIRE ] ஆக்கியது. ” —எம்.எஸ்.விஸ்வநாதன்.

மனதோடு மனோ இசை நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதன் சொல்கிறார். “… இன்னுமொரு கஷ்டமான சூழ்நிலை ,சிவாஜி ஹீரோ , கஷ்டப்பட்டு ,நொந்து பொய் ,அவஸ்தைப்பட்டு பாடுகிற பாட்டு.மேட்டுப்போட்டோம் ,பாட்டு எழுதினோம்.கம்போஸ் பண்ணினோம் ..சிவாஜி வந்தாரு. நீங்க நடிச்சாவது காட்டுங்க ,ஏதாவது inspiration வருதான்னு பார்ப்போம் என்றோம்.உடனே சிவாஜி நடித்துக் காட்டும் போது ” எங்கே நிம்மதி .. எங்கே நிம்மதி ” என்று நடித்து காட்டுகிறார்.அந்த வார்த்தையை வைத்து பல்லவிஎழுதினார்.ஒரு கவிஞரும் ,இசையமைப்பாளரும் கணவன் மனைவி போல பழகணும்.அப்படி நட்பாக இருந்தால் நல்ல பிள்ளை [ பாடல் ] பிறக்கும்.


ஒரு விதமான ஜனரஞ்சக இசையை [வெகுஜன மக்களிசை ] உருவாக்கி வெற்றி கொடி நாட்டிய அவர்கள், பாமரர்களை ரசிக்க வைத்தது மட்டுமல்ல இசை அறிந்தவர்களும் பாராட்டும் வண்ணம் சாதனை படைத்தார்கள்.

மெல்லிசைமன்னர்கள் உந்துதல் [ INSPIRE ] பெற்ற சில பாடல்களை கீழே தருகிறேன்.

ஹிந்தி திரைப்படப்பாடல்களை [ Inspiration ]ஆகக் கொண்டு அமைக்கப்பட்ட பாடல்கள் பார்ப்போம்

01 . பாலும் பழமும் படத்தில் இடம் பெற்ற
” காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்க வா ” என்ற பாடலுக்கான Inspiration இசை மேதை நௌசாத் இசையமைத்த அக்பர் படத்தில் வரும் ” கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆச்சே ” என்ற பாடலிலிருந்து பெற்றது என்று விஸ்வநாதன்
கூறியது ஆச்சரியமிக்கதாகும்.

04 . Chale Aaj Tum Jahan Se [ படம்: Udan Khatola ] இசை : நௌசாத்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் ” [ படம்: பாவமன்னிப்பு ] – T.M.சௌந்தரராஜன்

05 . Dukh Bhare din beete re [ படம்: Mother India ] இசை : நௌசாத்

எங்களுக்கும் காலம் வரும் ” [ படம்: பாசமலர் ] T.M.சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி

06 . O..gadiWale [ படம்: Mother India ] இசை : நௌசாத்

மஞ்சள் முகம் நிறம் மாறி ” [ படம்: கர்ணன் ] P.சுசீலா + குழுவினர்

07 . அழகே வா அறிவே வா ” [ படம்: ஆலயமணி ] 1963 – P.சுசீலா
Ruk Ja Rat Theher Ja Re [ படம்: Dil ke Mandir ] 1963 இசை : மதன் மோகன் …இந்தப் பாடலில் அழகே வா பாடலின் அழகுகள் எல்லாம் காண்பிக்கப்படும்.

 

08 . Tum Muje Yun Bhula Na ” [ படம்: Pagla Kahin ka ] 1970 …
ஒரே பாடல் உன்னை அழைக்கும் படம்: எங்கிருந்தோ வந்தான் – T.M.சௌந்தரராஜன் ** இசை: எம்.எஸ். விஸ்வநாதன். இந்தப்பாடல் நேரடியாகத் துருத்திக்கொண்டு தெரியாது.அந்தப் ப்பாடலின் கடுமையான வாசம் இதில் வீசும்.இந்தப் பாடலில் மேலே உள்ள பாடலின் அழகுகள் எல்லாம் காண்பிக்கப்படும்.

09 . DIl ka Haal Sune Dilwala – -Shri420 – Mnnaadey + Lata music: Shanker Jaikishan

* சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரபடம்: புதையல் – P.சுசீலா இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. ** இந்தப் பாடலின் thaal ஒரே மாதிரி amஇருக்கும்.பாடலில் நிறைய சாயல்கள் தெரியும்.Strong Inspiration.

10 . Mera Pyar Bhi Tu Hai ” [ படம்: ] இசை :

தங்கத்தில் முகம் எடுத்து [ படம்: மீனவ நண்பன் ]

11 . SAWAN KE BADALO UNSE JA KAHO – RATTAN-1944 – ZOHRA BAI & KARAN DIWAN music::NAUSHAD

* உன்னைத்தான் நானறிவேன்படம்: வாழ்க்கைப்படகு – P.சுசீலா இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. ** இந்த பாடலில் வரும் ” என் உள்ளம் என்னும் மாளிகையில உன்னையன்றி யார் வருவார் ” என்ற வரிகள் மட்டும்தான் எடுத்தாடபட்டிருக்கும்.வேறு எந்த இடங்களிலும் சம்பந்தம் கிடையாது.

12 . Main Aashinq Hoon Bacharonka – Film : Ashiq [1962] – Singer: Mugesh இந்த பாடலில் 01 :51 நிமிசத்தில் கீழே உள்ள பாடலின் சாயல் தெரயும்.

புன்னகையில் கோடி – படம் இதயக்கனி – T.M.சௌந்தரராஜன் மேலே உள்ள பாடலின் செயல் நன்றாக தெரியும்.

13 . Jag Dard E Ishq Jag – Anarkali – Lata Mangeshkar + Hemant Kumar Music: C .Ramachandra இசையமைத்த இந்தப் பாடல் , கீழ் கண்ட பாடல்களுக்கு முன்னுதாரணமாக அமைந்த
பாடலாகும்.
* மயக்கும் மலை பொழுதே நீ போ போபடம்: குலேபகாவலி – A.M.ராஜா + ஜிக்கி ** என்ற பாடலும்
* கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்படம்: மீண்டசொர்க்கம் – A.M.ராஜா + P.சுசீலா
* ஆசை பொங்கும் அழகு ரூபம் – – A.M.ராஜா + ஜிக்கி
* தூது செல்லாயோ இளம் ஜோடியாய் உலாவும் நிலவே
படம்: ராஜ சேவை – கண்டசாலா + ஜிக்கி ** போன்ற பல பாடல்களுக்கு மிகவும் முன்னுதாரணமிக்க
பாடலாகும்.மேற் சொன்ன அந்த பாடலின் கடுமையான பாதிப்புக்குள்ளான [ Inspiration ]பாடல்கள் இவை.

14 . Dil Dhal Jaye hai raat – singer : rafi music: S.D.Burman

மௌனமே பார்வையால் ஒரு – கொடி மலர் – பி.பி. ஸ்ரீநிவாஸ்

15 . Aat Socha To – film: Hindustan Ki Zakham – Music: Madan Mohan என்ற இந்த பாடலை அடியொற்றி கீழ் கண்ட பாடலை விஸ்வநாதனும் ,இளையராஜாவும் இணைந்து இசையமைத்தார்கள்.

தேடும் கண் பார்வை – மெல்லத்திறந்தது கதவு – எஸ்.பி.பாலசுரமணியம் + எஸ் ஜானகி

16 . Pekas Pekram Kijike – Film : mugal Eazam – lata Music : Nausad இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.

என் அன்னை செய்த பாவம் – சுமைதாங்கி – பி.பி. ஸ்ரீநிவாஸ்

17 . Tu Mera Chand mein tere chandni – Film : Dillagi – Music : Nausad என்ற பாடலில் வரும் ஒரு சிறிய புல்லாங்குழல் இசையை ஆதாரமாகக் கொண்டு

பூமாலையில் ஓர் மல்லிகை – ஊட்டி வரை உறவு – T.M.சௌந்தரராஜன் + P.சுசீலா என்ற பாடலை மெல்லிசைமன்னர் மிக அற்ப்புதமாக ,அகத்தூண்டுதல் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைத்திருப்பார். இந்த விஷயத்தை  இசை மேதை நௌசாத் திடம் மெல்லிசைமன்னர் கூறிய போது அவர் ஆச்சரியத்துடன் அப்படியா என்று வியந்ததுடன் , இரு பாடல்களும் வெவ்வேறானவை என்றாராம்.
18 . தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் – படம் : பெற்ற மகனை விற்ற அன்னை பாடியர்கள் : A.M.ராஜா + P.சுசீலா இந்தப் பாடல் கீழ் வருகின்ற இசைமேதை நௌசாத் இசையமைத்த பாடலின் அகத்தூண்டுதலாகும்.
song :tere sadke balam -FIlm :Amar singer : lata

மேற்கத்தேய இசையை [ Inspiration ]ஆகக் கொண்டு அமைக்கப்பட்ட பாடல்கள் பார்ப்போம்.
01 . Rhythm of the Rain ” The Cascades- ( Gomme ) 1963

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே [ படம்: எங்கமாமா ] T.M.சௌந்தரராஜன்

02 . Rock Around The clock ” bill Haley & The Comets 1956
விஸ்வநாதன் வேலை வேணும் [ படம்:காதலிக்க நேரமில்லை ]


03 . Lime Light Title Music ” [ படம்: Lime Light ] இசை : Charlie Chaplin

பந்தல் இருந்தால் கொடி படரும் [ படம்: பந்தபாசம் ] T.M.சௌந்தரராஜன் + எஸ் ஜானகி

04 . Stragers in the night Frank Sinatra
நல்லது கண்ணே கனவு கனிந்தது – ராமன் தேடிய சீதை – சௌந்தரராஜன் + சுசீலா

05 . Laura [ Hits of 1945 ] Woody Herman & HIs Orchestra இந்த பாடலில் வரும் ஹம்மிங் அப்படியே

படைத்தானே படைத்தானே ” என்ற பாடலில் [ படம்: நிச்சயதாம்பூலம் ] பயன்டுத்தியிருப்பார்கள்.

06 . Coolwater [ Hits of 1945 ] Vaughn Monroe & Sons of Poineer இந்த பாடலின் வாடை

யாருக்கு மாப்பிள்ளை யாரோ ” [ படம்: பார்த்தால் பசி தீரும் ] இந்தப் பாடலில் background இசையில் மெதுவாக வீசும்.

07 . Besame Mucho [ 1945 ] Jimmy Dorsey & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்

அனுபவம் புதுமை ” என்ற பாடலில் [ படம்: காதலிக்க நேரமில்லை ] என்ற பாடலில் வரும் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே …என்ற வரிகளில் சுகமாக வந்து
போகும்.
08 . The Green Cockatoo [ 1946 ] Roberto Inglez & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்
தாபமும் வேகமும் தணித்திடும் பானமடா ” [ படம்: குலேபகாவலி ] இந்தப் பாடலில் அப்படியே வந்து போகும்.

09 . There ‘s No You[ 1945 ] Tommy Dorsey & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்
எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள் ” [ படம்: சந்திரோதயம் ] என்ற பாடலில் வரும்.

 

09 . Across The Valley From the Alamo – [ 1947 ] The Mills Brothers இந்த பாடலின் மிகவும் பாதிப்பு கொஞ்சம் அதிகமான சாயல் , குறிப்பாக தாளமும் ,கோரசும்
வீடு நோக்கி ஒடுகின்ற நம்மையே ” [ படம்: பதிபக்தி ] என்ற பாடலில் வரும்
.
10 . Dance At the Gym – Mambo என்ற பாடலில் First Part [ படம்: West Side Story ] music: Leonard Bernstein இந்த பாடலின் மிகவும் பாதிப்பு கொஞ்சம் அதிகமான சாயல் இருக்கும்.
என்னைத் தெரியுமா ” [ படம்: குடியிருந்த கோயில் ] என்ற பாடலில் …ஆகா ரசிகன் …ஆகா ரசிகன் ..உங்கள் ரசிகன் என்ற வரிகளை பாடும் போது அந்தப் பாடலின் .

வேகம் அப்படியே வரும்

11 . Jezebel [ Million seller 1951 ] Frank Laine The Norman Luboff Choir இந்த பாடலை அடி ஒற்றி கீழே வரும் மூன்று பாடல்கள்

சம்போ சிவ சம்போ ” [ படம்: நினைத்தாலே இனிக்கும் ] இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை ” [ படம்: சிவந்த மண் ] இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்


12. Rock around the clock – Bill Haley
விஸ்வநாதன் வேலை வேண்டும் – காதலிக்க நேரமில்லை – P
.B.ஸ்ரீநிவாஸ்

13. Do You Wanna Dance – Bobby Freeman
மலர் என்ற முகம் – வெண்ணிற ஆடை – L.R.ஈஸ்வரி

14 . Standing on the corner – Four lads 1956
வீடு நோக்கு ஓடுகின்ற – பதி பக்தி – T.M.சௌந்தரராஜன்

15 . Good Golly Miss Golly – Little Richard 1956
என்ன வேகம் சொல்லு பாமா – குழந்தையும் தெய்வமும் – T.M.சௌந்தரராஜன்

16 . Estrella Morente – my songs and poems

பட்டத்து ராணி பார்க்கும் – சிவந்த மண் – L.R.ஈஸ்வரி

17 . javier solis [ ” payaso” ] இந்த பாடலில் கீழ் கண்ட பாடல்களின் சாயல்கள் தெரியும்.
தேவனே என்னை பாருங்கள் – ஞான ஒளி –
T.M.சௌந்தரராஜன்
அந்த நாள் ஞாபகம் – உயர்ந்த மனிதன் – T.M.சௌந்தரராஜன் இந்தபாடலில் வரும் சிரிப்பு பகுதி மேல் சொன்ன பாடலை ஒத்திருக்கும்.

18 . Teri Pyaari Pyaari surat இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.
கண் படுமே பிறர் கண் படுமே –
P.B.ஸ்ரீநிவாஸ்

19 . Damaso Perez Pradd – bailando maribo இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.

அவளுக்கென்ன அழகிய முகம் – சர்வர் சுந்தரம் – T.M.சௌந்தரராஜன் + L.R.ஈஸ்வரி

20 .
Jose Padilla இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.
அதோ அந்த பறவை போல – ஆயிரத்தில் ஒருவன் –
T.M.சௌந்தரராஜன்

இன்னும் பல எடுத்துக்காட்டுக்களை சொல்லலாம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த சில அமானுஷ்யப் பாடல்கள்.இசையால் நம்மை புது உலகத்திற்கு கொண்டு செல்லுவது போன்ற உணர்வை தருகின்ற பாடல்கள்.வார்த்தையால் வர்ணிக்க முடியாத உணர்வுகளை மனதில் கிளர்த்தக்கூடிய பாடல்கள்.

* அழகே வா அறிவே வா படம்: ஆண்டவன் கட்டளை – P.சுசீலா
* நெஞ்சம் மறப்பதில்லை படம்: நெஞ்சம் மறப்பதில்லை P.சுசீலா
* மன்னவனே அழலாமா படம்: கற்பகம் P.சுசீலா
* பூஜைக்கு வந்த மலரே வா
பாதகாணிக்கை ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா
* அம்மம்மா கேளடி தோழி படம்: கருப்புப்பணம் – ஈஸ்வரி
* பார்த்த ஞாபகம் இல்லையோ படம்: புதியபறவை P.சுசீலா
* கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா படம்: ஆலயமணி – T.M.சௌந்தரராஜன் ஈஸ்வரி
* நாம் ஒருவரை ஒருவர் குமரிக்கோட்டம் T.M.சௌந்தரராஜன் ஈஸ்வரி


1952 இல் இணைந்த மெல்லிசை மன்னர்கள் 1965 இல் பிரியும் வரை பல இனிமையான பாடல்களைத் தந்தார்கள்.பின்னர் தனித் தனியே சிறப்பாக இசையமைத்த போதும் முன்பிருந்த இருந்த இசையின் ஈர்ப்பு பின்னர் இருக்கவில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.அந்த இருவரின் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருந்தமையே மிகவும் நல்ல பாடல்கள் வரக் காரணமாயின எனலாம்.வேகமாக இசையமைக்கும் ஆற்றல பெற்ற எம்.எஸ்.விஸ்வநாதன் பின்னாளில் திரையிசையில் நிலை பெற்றார்.
அதன் காரணமாகவே முன்பு இரட்டையர்களாக இருந்து இசையமைத்த பாடல்களின் இனிமைக்கும் இவரையே தனி பொறுப்பாளர் என்று தவறுதலாக சொல்லப்படுவதுண்டு. விஸ்வநாதனின் சிற்ப்பான பாடல்களை பட்டியல் போடுபவர்கள் , அவர்கள் இரட்டையர்களாக இசையமைத்த பாடல்களை தான் பெரும்பாலும் சொல்வார்கள்.பதிலாக விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று தான் சொல்லப்படுவது நியாயம்.
மெல்லிசைமன்னர் எம்.எஸ். விஸ்வநாதனிடம் உள்ள சிறப்பு ,அவருடைய இசை ஆளுமை.அவர் தனது மெட்டுக்களை பாடகர்களுக்கு சொல்லி கொடுக்கும் போது ,அதை பாடகர்கள் உள்வாங்கிப் பாடும் போது அவருடைய பாதிப்பை பாடகர்களால் மறைக்க முடிவதில்லை.பாடகர்கள் பாடும் சில சமயங்களில் ” விஸ்வநாதன் குரலிலேயே ” பாடுவது போலவே அமைந்து விடுவதுண்டு. இந்த சிறப்பு வேறு இசையமைப்பாளர்களிடம் இல்லை என்று துணிந்து கூறலாம்.

பாடல்களை அமைப்பதிலும் ,அதிலுள்ள கமகங்களின் பிரயோகங்களையும் ,வாத்திய அமைப்பையும் வைத்து பல இசையமைப்பாளர்களின் பாடல்களை அடையாளம் கண்டு விடலாம். ஆனால் விஸ்வநாதன் போல ,தான் பாடுவது போலவே பாடகர்களைப் பாட வைக்கும் ஆற்றல் வேறு எந்த இசையமைப்பாளர்களிடமும் நான் காணவில்லை.தங்கள் குரலின் தனித்துவத்துடன் சிறப்பாகப் பாடல்களை பாடும் பாடகர்கள் கூட விஸ்வநாதன் போல பாடியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களை ISPIRE பண்ணிவிடுவார்.T.M.சௌந்தரராஜன் ,S.P. பாலசுரமணியம் போன்ற பாடகர்கள் பல பாடல்களை இவ்விதம் பாடி இருக்கிறார்கள். இதற்க்கு K.J.யேசுதாஸ் கூட ஆட்பட்டிருக்கிறார்.!!. ” ஆதி என்பது தொட்டிலிலே ” என்ற பாடலில் இது தெளிவாக தெரியும்.
அவர்களுடைய ஆரம்ப கால இசையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நல்ல பாடல்களை எழுதினார்.அவரைத்தொடர்ந்து கண்ணதாசன் கூட்டணியில் வெற்றிப் பாடல்கள வெளிவந்தன.

கண்ணதாசன் விஸ்வநாதன் பற்றி சொல்வார் : ” அவனுக்கு இசையை தவிர வேறு ஒன்றும் தெரியாது.அவன் அரசியல், உலக நடப்புக்கள் பற்றி கேட்டால் சிரிப்பாக இருக்கும். ஆனால் இசை என்று வந்தால் , உலகெங்கிலும் என்னென்ன இசை உண்டு என்பது அவனுக்கு தெரியும். Light Music இல் அவன் International.”

தங்களது இசையால் தமிழ் மக்களை மகிழ்வித்த மெல்லிசைமன்னர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இசையை மிகச் சிறப்பாக , நமது மரபு இசையுடன் இணைத்து புது பாதையை அமைத்தார்கள்.தமிழ் சினிமாவின் FUSION MUSIC என்று சொல்லப்படுகின்ற கலப்பிசையின் முன்னோடியாக இருந்தனர். உலகின் பல பகுதிகளிலும் உள்ள இசையை தம்மால் முடிந்தளவு தமிழ் மக்களுக்கு இசைவாக பதப்படுத்தி கொடுத்தனர் எனலாம்.மேற்கத்திய பொழுது போக்கு இசையும் , ஹிந்தி திரை இசையும் அவர்களது இசைஉந்துதலுக்கு [MUSIC INSPIRATION ] ஆதாரமாக அமைந்தன எனலாம்.

இவர்களை போன்றே கே .வீ .மகாதேவன் , ஆதிநாராயண ராவ், , கண்டசாலா , ஏ.எம் ராஜா , டி .ஜி.லிங்கப்பா , சி .என் .பாண்டுரங்கன் ,மாஸ்டர் வேணு , டி.வீ.ராஜூ , எஸ்.தட்சிணாமூர்த்தி, ஆர்.கோவர்த்தனம். ஜி.தேவராஜன், வீ.தட்சிணாமூர்த்தி, ஜி.கே.வெங்கடேஷ் , வீ.குமார் ,எம்.பீ.ஸ்ரீநிவாசன் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் நல்லிசை தந்தார்கள்.தணியாத அவர்களது இசை ஆர்வத்தை அடியொற்றியே இசைஞானி இளையராஜா அறிமுகமாகிறார்.

தொடரும்…….

முன்னைய பதிவுகள் :

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் 3 : T .சௌந்தர்

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல்(2) : T .சௌந்தர்

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் : T .சௌந்தர்

நாடோடிகளின் இனிய இசை(2) – T .சௌந்தர்

உலகின் பல பாகங்களிலும் இவர்கள் ஒடுக்கப்பட்டு நரவேட்டையாடப்பட்டாலும் இவர்களது கலை,பண்பாட்டைக் காக்கவும் ,இவர்களுக்கு எனத் தனியே நாடக அமைப்பு ஒன்றை ஏற்ப்படுத்தி முன் மாதிரியாகத் திகழந்தது அன்றையசோவியத் யூனியன்அரசு. இந்த நாடக அமைப்பு 1931 ம ஆண்டு மொஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.இதில் ஜிப்சிக் கலைஞர்களும் பெரும் பங்காற்றினார்கள்.இதுவே ஜிப்சிகளுக்கென அமைக்கப்பட்ட முதல் நாடக அமைப்பு எனவும் பெற்றது.

பல நூறு வருடங்களாக பல அரசுகளால் ஒடுக்கப்பட்டாலும் புலம் பெயந்து நாடோடி வாழ்க்கையைத்த் தொடரும் ஆவலை இவர்கள் விட்டு விடவில்லை.இக்கொடுமைக்களூடே தமது கலைகளையும்,காப்பாற்றி வந்துள்ளமையும் இவர்களது உறுதிக்குச் சான்று பகர்கின்றது. தமது சோகங்களை எல்லாம் இசை மூலம் வெளிப்படுத்தும் இவர்கள் தமது மகிழ்ச்சிக்கும் ,பொழுது போக்கிற்கும் இசையையே பயன்படுத்துகிறார்கள்.

இவர்களது கொண்டாடங்கள் எப்பொழுதும் இசையுடனேயே ஆரம்பமாகின்றன.அவை நாட்டுப்புற இசையாகவோ மெல்லிசையாகவோ அமைந்திருக்கும்.குறிப்பாக குடும்ப நிகழ்சிகளில் தமது சொந்த இசையை மாத்திரம் பாடுவார்கள்.அவை அவர்களது முன்னோர்கள் பாடிக் கேட்ட பாடல்களாகவும் பயணங்களின் போது பாடப்பட்ட பாட்டுக்களாகவும் அமைந்திருக்கும் .மற்றைய இன மக்களைக் கவர்வதற்காக இவர்கள் அநதந்த நாடுகளில் பிரபலமான போப் பாடல்களையும் பாடுவார்.ஜிப்சிகளில் பல பிரிவினர் உள்ளதால் ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கென இசைப்பாணிகளை வைத்திருக்கின்றனர்.பல்வேறு நாடுகளிலும் வாழ்வதால் அந்தந்த நாடுகளின் இசை மரபுகளை எடுத்துக் கொண்டு அதனுடன் தங்கள் இசையையும் இணைத்து இசைப்பார்கள்.நாடுப்புற இசையை இவர்கள் பெரிதும் விரும்பி இசைத்து வருகிறார்கள்.

இது பெரும்பாலும் அவர்களது சுய விருப்பமாகவே இருக்கும்.எனினும் தமது இசையால் பணம் சம்பாதிக்க விரும்பியவர்கள் தொழில் முறையாகவும் இசையைப் பயன்படுத்துகின்றனர்.இவை பெரும்பாலும் மக்கள் எப்படி விருபுகின்றார்களோ அதற்க்கு ஏற்றவாறு அமைந்திருக்கும்.

ஹங்கேரி நாட்டு ஜிப்சிகளின் இசை மிகவும் பிரபல்யமானதொன்றாகும்.இதனை ஹங்கேரியில் வாழும் ஜிப்சிகள் அந்த நாட்டு இசை மரபுடன் தமது முறையையும் இணைத்து இசைப்பதன் மூலம் ஒரு புதிய வடிவத்தை உருவாகியுள்ளனர் என இசை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த வகையான ஜிப்சி இசையை ஹங்கேரியில் ரோமுங்கிரி ( Romungiri ) இசை என அழைக்கின்றார்கள்.இந்த வகை இசையில் பயன்படுத்துகின்ற நாட்டியமும் பெயர் பெற்ற ஒன்றாகும்.இந்த நடனத்தில் ஜிப்சி இன ஆண்களும் ,பெண்களும் பங்கு பெறுவர்.எனினும் இதில் இசையே மிகவும் புகழ் வாய்ந்ததாக உள்ளது.

இந்த வகை இசையால் பாமரர் முதல் பண்டிதர் வரை கவர்ப்பட்டிருக்கிறார்கள்.பல இசை இசையறிஞர்களை இது பாதிக்கவும் ( Inspire )  செய்திருக்கிறது என்றால் மிகையாகாது.மேலைநாட்டு இசை மேதைகள் இந்த இசையால் கவரப்பட்டு தாங்கள் படைத்த இசைக் கோவைகளில் அவற்றைப் பயன் படுத்தியிருக்கின்றார்கள்.இதானால் ஏற்ப்பட்ட உணர்ச்சிகளை தமது படைப்புகளில் வெளிப்படுத்தி வெற்றி கண்ட சிம்பொனி ( Symphony ) இசைமேதைகளாக மூவரைக் குறிப்பிடலாம்.

1 .பிரான்ஸ் லிஸ்ட் ( Franz List 1811 – 1866 )

2 .ஜொஹான் ஸ்ட்ராவ்ஸ் ( Johhan strauss 1825 – 1899 )

3 .ஜோஹன்னேஸ் ப்ராம்ஸ் ( Johaannes Brahms 1883 – 1897 )

இந்த இசை மேதைகள் தமது படைப்புகளில் பயன்படுத்திய ஜிப்சி இசை அதன் சிறப்பு காராணமாக உன்னதப் படைப்புக்கள் என இன்றும் புகழப்படுகின்றன. பிரான்ஸ் லிஸ்ட் ( Franz List ) என்ற இசைக்கலைஞர் அமைத்த” ஹங்கேரி நாட்டுப்புற இசையில் கற்பனை ” Fantasia on Hungarian Folkemelodies என்ற இசைக்கோவையும் ,Hungarian Rhapsody என்னும் இசைக்கோவையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.சிம்பொனி இசையில் இவற்றைக் கலந்துள்ளமை இவரின் மேதமைக்குச் சான்றாகும்.”Rhapsody ” என்பது “அதி உற்சாகம் தரும் கட்டுக்கடங்காத ஆக்கம் ” அல்லது ” உணர்ச்சியைத் தூண்டுகின்ற இசைத்துணுக்கு ” எனப் பொருள் படுகிறது.கர்நாடக இசையில் ஒரு ராகத்தை ஆலாபனை செய்வது போன்று நீண்ட இசைக்கோவைகளாக படைத்துள்ளார்.அவற்றில்

1.Fantasia on Hungarian Folk Melodies

2.Hungarian Rapsody no:2

3.Hungarian Rapsody no:5 என்பன முறையே 15 ,12 , 13 நிமிடங்களைக் கொண்ட நேர அளவுகளில் அமைந்த படைப்புகளாகும்.இம்மூவரும் ஜேர்மனிய இசைவிற்ப்பனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜொஹான் ஸ்ட்ராவ்ஸ் ( Johhan ஸ்ட்ராஸ்) இசையமைத்த ” ஜிப்சி பாரோன் ” ( Gipsy Baron ) என்னும் இசை நாடகமும் (ஒபேரா ) மிகவும் புகழ் பெற்றது.இந்த இசை நாடகம் 1885 ம் ஆண்டு எழுதப்பட்டது.இந்த இசைக் கோவையில் பாட்டும்,இசையும் இணைத்துவைக்கப்பட்டுள்ளதுடன் ,ஒரு பாடல் மூன்று விதமான வெவ்வேறு சூழ் நிலைகளுக்கு ஏற்ப பல்லியத்துடன் (Orchestra )இசைப்பதும் இதன் தனித்துவமான சிறப்பம்சம் என இதனை நெறியாள்கை ( Conduct ) செய்த நிகோலஸ் (Nikolas ) என்பவர் கூறுகின்றார்.

1883 ம் ஆண்டு தமது நண்பர் ஒருவரின் விருந்தில் கலந்து கொண்டு பியானோவில் ஹங்கேரியப் பாடல் ஒன்றை தான் வாசித்ததாகவும் அதிலிருந்தே இந்த இசையின் மீதான ஆர்வம் தன்னிடம் வரளத் தொடங்கியது எனவும் ஸ்ட்ராவ்ஸ் கூறுகின்றார்.அத்துடன் அதே ஆண்டில் வேறு ஒரு விருந்தில் Franz List என்ற இசைமேதையை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது அவருடன் இது குறித்து நிறைய விவாதித்ததும் தமது ஆர்வம் மேலும் வளரக் காரணமாயிற்று என்று அவர் பெருமையுடன் குறிப்பிடுகின்றார்.மேற்சொன்ன சந்திப்புக்கள் ஹங்கேரியில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.மேற்குறிப்பிட்ட இரு இசைமேதைகளை பார்க்கிலும் ஜிப்சி இசையைத் தனது சிம்போனிக்களில் பயன் படுத்திப் புகழ் பெற்றவர் இசைமேதை ஜோஹன்னேஸ் ப்ராம்ஸ் (Johaannes Brahms ) என்பவரே .அவர் இவ்விசைக் கோவைகளை நீண்ட கால இடைவெளிகளில் (1869 – 1880 ) எழுதியுள்ளார்.அவரது ஏனைய இசைப் படைப்புகளைப் போலவே இந்த இசைப் படைப்பும் மிகவும் புகழ் பெற்றது.ஹங்கேரிய நடனங்கள் ( Hangarian Dances ) என்ற பெயரில் இது இன்றும் வழங்கிவருகிறது.நெசவில் பலவிதமான நூல்களை இணைத்து இழை நயம் வெளிக்கொண்டு வருவது போல பல வர்ண இசைக் கோவைகளால் நெஞ்சை அள்ளும் வண்ணம் இந்த இசை அமைந்துள்ளது.அவர் தமது இருபதாவது வயதிலிருந்தே ஜிப்சி இசையை சேகரிக்கத் தொடங்கினார் எனவும் அவற்றில் சில அவரது சொந்தப் படைப்புக்கள் எனவும் ஜிப்சி இசையை உயிரோட்டத்துடனும் ,எழுச்சியுடனும் சுதந்திரமாக பயன் படுத்தியுள்ளார் என இசை நிபுணர்கள் கருதின்றனர்.

ஜிப்சிகளின் இன்னொரு இசை வடிவமான ப்ளமிங்கோ இசை ( Flamenco ) ஸ்பெயின் நாட்டில் வாழும் ஜிப்சிகளால் உருவாக்கப்பட்டது என்பதை வரலாற்று ஆய்வுகள் புலனாக்குகின்றன ஸ்பெயின் நாடு என்றதும் எல்லோர் மனதிலும் சட்டென்று ஞாபகத்திற்கு அங்கு பெரிய விழாவாகக் கொண்டாடப்படும் எருது அடக்கும் போட்டியும்( ஜல்லிக் கட்டு ) ,இந்த ப்ளமிங்கோ இசையுமே ஆகும்.ஸ்பெயின் நாட்டின் தென் பகுதியான அண்டலூசியனில் ( Andalausian ) தான் இந்த இசை உருவானது.

இது நடனத்துடன் இணைத்து நடத்தபடுவது.ஜிப்சிகள் இவ்விசையில் சிறப்புற்று விளங்குகின்றனர்.ஜிப்சி இன ஆண்களும் ,பெண்களும் இதில் கலந்து கொண்டு பாடி ஆடுவர்.விசேஷமாக ஜிப்சி இன பெண்கள் கண்ணைப் பறிக்கும் பலவித வண்ண ,வண்ண உடைகளை அணிந்து விறுவிறுப்பான இசையுடன் தம்மை மறந்து தாளம் பிசகாமல் ஆடுவர். இந்த ஆட்டமானது பார்வையாளர்களை பரவச நிலைக்கு இட்டுச் செல்லும் ஆற்றல் மிக்கது.

பிளமிங்கோ இசை என்பது கிட்டார் ( Guitar ) ஒலி மாத்திரம் அல்ல.உள்ளுணர்வுக்கு உத்வேகம் தருகின்ற தாளமும் ,அதன் மூலம் ஐம்புலன்களையும் ஒத்திசைவுடன் இயங்க வைக்கும் அசைவுகளையும் கொண்ட நடனமும் சேர்ந்ததே எனக் கலைஞர்கள் கூறுவர்.

ஸ்பெயின் நாட்டில் அண்டலூசியனில் ஜிப்சிகளின் வருகைக்கு முன்னர் இந்த இசைவடிவம் இருக்கவில்லை..அண்டலூசியனுக்கு
வெளியே வாழ்ந்த ஜிப்சிகளும் இந்த இசையில் ஈடுபடுவதில்லை. இந்த இசை பிறந்த வரலாறு சுவையானது.அண்டலூசியன் பகுதியில் கிரேக்க,ரோம,அரேபிய ,யூத இன மக்கள் குடியேறி வாழ்ந்தார்கள்.அப்பகுதி நாட்டுப்புற இசைகளில் கிரேக்க ,ரோம இசையின் தாக்கம் மிகத்துல்லியமானது.அப்பகுதித் தேவாலயங்களில் பாடப்பட்ட பாடலகள் கிரேக்க ,ரோம இசையின அடிப்படையிலேயே அமைந்திருந்தன.

அரேபியர்கள் அண்டலூசியன் பகுதியை கி.பி. 8 ம் நூற்றாண்டில் கைப்பற்றி கி.பி.15 ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர்.அவர்களின் வருகையோடு யூத இன மக்களின் வருகையும் ஏற்ப்பட்டது.அரேபியகள்ஆட்சியில் யூத, கிறிஸ்தவ மத உரிமைகள் பாதுகாக்கப்பட்டன.கி.பி. 8 ம் நூற்றாண்டின் புகழ்மிக்க அப்தர் ரஹ்மான் (Abdar Rahman II ) இசைத் துறையிலும் ,கவிதைத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.இவரால் கி.பி.822 ஆம் ஆண்டு அரேபியாவிலிருந்து ஸ்பெயினுக்குக் கொண்டுவரப்பட்ட இசைக்கலைஞர் ஜிர்ஜாப் பாக்தாத் அரணமனையில் மிகப்புகழுடன் இருந்தார்.அங்கே ஜிர்ஜாப் ( பெரியபறவை ) என்ற பெயரில் புகழ் பெற்றிருந்தார் இவரது இயற்ப்பெயர் அபுல் ஹசான் அலி இப்பின் நாபி ( Abul Hasan Ali Ibin Nafi ) என்பதாகும். அன்றைய அரேபிய ஆட்சி ஸ்பெயின் நாட்டின் கோர்டோபா ( Cordoba ) என்ற நகரத்தை தலைநகரமாகக் கொண்டு நடந்தது. ஜிர்ஜாப் தனது மரணகாலம் வரை அங்கேயே வாழ்ந்தார்.அவர் வரவழைக்கப்பட்டதன் முக்கியமான நோக்கங்ககளில் ஒன்று அரேபிய இசையை பரப்புவதே ஆகும்.அதனால் அந்தப் பகுதிகளைச் சுற்றிப் பயணம் செய்து தனது இசையை கற்ப்பித்ததுடன் அப்பகுதிகளில் வழங்கிய நாடுப்புற இசையை நன்றாகப் பயின்று குறிப்பிடப்படும் அளவுக்கு தனது படைப்புக்களிலும் பயன்படுத்தினார் ஜிர்ஜாப்.

இவரது பங்களிப்பின் உச்சமாக இவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இசைக்கல்லூரியும் ,இசைக்கல்வியும் கருதப்படுகின்றன.மத்தியதரைக் கடல் பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்ட முதல் இசைக்கல்லூரி ஜிர்ஜாபினாலேயே ஆனது என்பது குறிப்பிடத்தக்க வரலாற்று உண்மையாகும்.

அவர் பயிற்றுவித்த கீழைத்தேய இசை அண்டலூசியன் பகுதியில் மிக முக்கியம் பெற்றதுடன் ,அண்டலூசிய இசை மரபுடனும் இணைக்கப்பட்டு விட்டது.இந்த கலப்பில் உருவாகிய இசை ,நடனம் என்பவை இன்றும் வழக்கில் உள்ளன. அவை :

1 .சாம்ராஸ் ( Zamras )

2 .சாம்ப்ராஸ் ( Zampras ) என அழைக்கப்படுகின்றன.கி.பி.15 ம் நூற்றாண்டளவில் இந்த கலப்பிசை அண்டலூசியனில் நிலைபெறவும் தொடங்கியது.

கி.பி.1425 ம் ஆண்டு ஏற்பட்ட ஜிப்சிகளின் குடியேற்றம் இந்த இசைக்கு மேலும் மெருகூட்டியது.ஆரம்பத்தில் ஜிப்சிகள் நன்கு வரவேற்கப்பட்டனர்.மத்திய காலத்தில் ஏற்பட்ட கிறிஸ்த்தவ எழுச்சியின் வெற்றி கி.பி.15 ம் நூற்றாண்டில் அரேபிய ஆட்சியின் வீழ்ச்சி அரேபிய ,யூத ஜிப்சி இன மக்களை கடுமையான ஒடுக்குமுறைக்குள்ளாக்கியது.ஜிப்சிகள் பலவந்தமாக மதமாற்றம் செய்யப்பட்டனர்.மத்திய ஸ்பெயின் யூதர்கள் மத அனுஸ்டானங்களை மிக ரகசியமாக நடத்தி வந்ததை 1990 களின் மத்த்தியில் டென்மார்க் தொலைக்காட்சி ( Danmarks Radio) வெளிக்கொண்டு வந்தது.

ஜிப்சிகள் தாம் எந்த இடத்தில் குடியேறுகிறார்களோ அந்த இடங்களில் உள்ள இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து தமையும் அர்ப்பணிப்பர்.அத்துடன் தமது பாணியில் அவற்றை இசைத்து தனி முத்திரை பதிப்பதையும் தமது பண்பாகக் கொள்வார்கள்.அரேபிய ,யூத இன மக்களைப் போலவே ஜிப்சிகளும் ஒடுக்குமுறைக்குட்பட்டதால் அவர்களது இசையும் அரேபிய, யூத இன மக்களின் இசைக்கு மிக நெருக்கமாக இருந்தது.

முன்னயவை
 பாகம் 1 

 இன்னும் வரும்..

இசை – பக்தியிலிருந்து சிம்பொனி நோக்கி … : T .சௌந்தர்

இயற்கையில் தனது உணவை தேடிய ஆதி மனிதன் வளர்ச்சி போக்கில் அதனை தானே உற்பத்தி செய்யும் திறனை பெற்றான்.தனது பயிர்கள் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து போவதை கண்டு பயந்த அவன் ஆடுவதன் மூலமும், பாடுவதன் மூலமும் தன்னையும் ,தனது பயிர் களையும் பாதுகாக்கலாம் என எண்ணினான்.இயற்கையின் வினோதங்கள் தனக்கு கட்டுபடாததை உணர்ந்த அவன் ,அது இறைவனின் செயல் எனவும் என்ன தலைப்பட்டான். பலவிதமான ஒலிகளை எழுப்பிய அவன் அதன் வளர்ச்சி போக்கில் இனிய இசையையும் கண்டடைந்தான்.மனதை ஆட்டுவிக்கும் அந்த இசை கூட இறைவனின் விந்தை எனக் கருதியதுடன், இனம் புரியாத அந்த இனிமையில் அவன் இருப்பதாகவும் எண்ணினான். அந்த இசை அவனையே மகிழ்விக்கும் என எண்ணிய அவன் அதனை இறைவனுக்கே அர்ப்பணமும் செய்தான்.அதற்க்கான சடங்குகளையும் உருவாக்கினான்.

இனம் ,மதம் ,மொழி, கலாச்சாரம் என்ற எல்லைகளை எல்லாம் கடந்து இறைவனை பாடி மகிழ்வதை உலகெங்கும் காண்கிறோம்.இசையின் ஆற்றலை உணர்ந்த தமிழர்கள் இறைவனை இசை வடிவமாகவே கண்டனர். ” ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே ..”என்கிறது ஒரு தேவார பாடல் .மிக அண்மையில் வெளிவந்த தமிழ் திரைப்பட பாடல் ஒன்று ” இசையின் பயனே இறைவன் தானே ” என்று தேவார பாடலின் கருத்துக்கு முட்டு கொடுக்கின்றது.

“ஆதியில் இசை இருந்தது ..” என்கிறது பைபிள் . “இசை என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது , அது மனிதன் பாவப்பட முன்பு இறைவனால் வழங்கப்பட்டது ; அதனால் மதத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது “.என்றார் மார்டின் லூதர் ( martin luther ) என்கிற யேர்மனிய பாதிரியார். சூட்சுமமான இசையின் ஆற்றல் தெய்வ வழிபாட்டில் பிரித்து பார்க்க முடியாத வண்ணம் ஒன்றினைக்கப்ப்டுள்ளது.இனிய இசையுடன் கூடிய வழிபாடு அல்லது பூஜை மனதை ஒரு நிலை படுத்தி செம்மைப்படுத்தும் வல்லமை கொண்டது. கூட்டு வழிபாட்டு முறையை ( congretional worship ) இசை இலகுவாக வழி நடாத்தி செல்லும் என்பார்கள்.

இவ்விதம் உலகெங்கும் இசை இறைவனுடன் இணைத்துப் பேசப்படுகிறது.சமணர்களுக்கு எதிரான் போரில் சைவர்கள் கண்ணுக்கு தெரியாத ,சக்தி வாய்ந்த ஆயுதமாக இசையைப் பயன் படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பிய சூழலில் மார்டின் லூதர் ( 1483 – 1546 ) என்ற யேர்மனிய மதத் தலைவர் ஈசையை வெற்றிகரமாக பயன்படுத்தினார் .மதச் சீர்திருத்தத்தில் புதிய பாதையை கடைப் பிடித்த அவர் இசையை மிகப் பெரிய பலமாகவே கருதினார்.கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்து புரட்டஸ்தாந் என்ற ஒரு பிரிவை ஏற்படுத்தியவர் தான் இந்த லூதர். ஐரோப்பாவில் முதலில் நிலை பெற்ற கத்தோலிக்கம் , பின் வந்த புரட்டஸ்தாந் மதத்திலிருந்து விடு பட்டு இசை எவ்வாறு சிம்பொனி ( symphony ) என்கிற உயர்ந்த வடிவத்திற்கு வந்தடைந்தது என்பதை சமூக ,அவர்லாற்று பின்னணியுடன் ஓரளவு விளக்க முனைகிறது இக் கட்டுரை.

ஐரோப்பாவில் கி.பி. முதலாம் நூற்றாண்டில் பரவிய கிறிஸ்தவ மதம் சமூக அடித்தளத்திலிருந்த மக்களிடையே செல்வாக்கு பெற்று பிற்படுத்தப்பட்ட மக்களின் மதமாக அறிமுகமாகியது.கத்தோலிக்க மதம் என அழைக்கப்பட்ட அந்த மதம் அடுத்து வந்த நூற்றாண்டில் தனக்கென ஒரு மத பீடத்தையும் ஸ்தாபித்து அதன் பரப்பளையும் விரிவாக்கியது.அதற்கென அமைக்கப்பட்ட நிவாகத்தை பிரபுக்கள் கையில் ஒப்படைத்ததுடன், சர்ச்சுக்கான கட்டிடங்களை நிர்மாணிக்கவும் தொடங்கினர்.அடுத்தடுத்து வந்த நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மதம் ரோம ராஜ்ஜியத்தின் முன்னணி மதமாக அறிவிக்கப்பட்டு கி.பி. 392 ம் வருடம் அதிகார பூர்வமான மதமாகவும் உயர்ந்தது.தமது எண்ணங்களுக்கு ஏற்ப சமூகத்தை மாற்றுவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட ஆரம்பித்த மதபீடம் , மக்களை தம்முடன் இணைப்பதில் கவனம் செலுத்தினர். சமூக மாற்றம் என்பது தங்களை சுற்றி வளர்வதை விரும்புவதாகவும் ,தம்மை விட்டு விலகிச் செல்லும் மாற்றங்களை வெறுப்பதாகவும் ,தமது இருப்புக்கு அச்சுறுத்தலாகவும் கணித்தது. கை மீறிப் போபவர்களை அழித்தொழிக்கும் நடைமுறைகளையும் கைக்கொண்டனர்.

சமூகத்தில் கல்வியை தமது கைகளில் வைத்திருந்த பாதிரிமார்கள் தமக்கு அனுகூலமான முறையிலே மக்களை மாற்ற முனைப்புக் காடினர்.மக்கள் எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் , எவற்றை எல்லாம் உள்வாங்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தினர்.இசை குறித்து அவர்கள் பார்வையும் அவ்விதமே அமைந்தது.

2

அடிமைகளின் உடல் உழைப்பால் தம்மை மேல் நிலையில் வைத்துக் கொண்ட பிரபுக்களும் ,பாதிரிமார்களும் உடல் உழைப்பை கேவலமாகக் கருதினர்.கலைகளை உயர்வாகவும், கலைஞர்களை இழிவாகவும் பார்ப்பது அக் காலத்திய நடைமுறையாக இருந்தது.”Antic காலம் ” என வர்ணிக்கப்படும் அக்காலத்திலேயே லத்தீன் என்ற மொழி உத்தியோக மொழியாக திணிக்கப்பட்டு ,கிறிஸ்தவ மதத்திற்கானஓர் கலாச்சார அடித்தளம் அமைக்கப்பட்டதுடன் ,மக்களின் மதம் சாராத பழக்க வழக்கங்கள் யாவும் உள்வாங்கவும்பட்டன.

தட்டிக் கேட்பார்ற்றற்று கிடந்த ரோம ராஜ்ஜியத்தின் இறுதிக் காலங்களில் பாதிரிமார் மற்றும் பிசப்மார்களினால் நிர்வகிக்கப்பட்ட மத பீடம் ஊழலின் சாம்ராஜ்ஜியமாக விளங்கியது.ரோம ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாக அமைந்தாலும் ,அதிலிருந்து மத பீடம் தன்னை மீட்டெடுத்து ஏக பிரதிநிதியாக நிலை நிறுத்திக் கொண்டதுடன், யாரும் நெருங்க முடியாத சர்வாதிகார அமைப்பாகவும் நிலை பெற்றது.

இசையை பொறுத்த வரையில் பெரும்பாலான மக்களால் ரசிக்கப்பட்டு வந்த இசை மத பீடத்தினரின் விருப்பத்திற்குரிய இசையாக இல்லாத காரணத்தால் ,தமது விருப்பத்திற்கு இசைந்த ஓர் இசையை உருவாக்க வேண்டிய நிலைக்கு மதபீடம் தள்ளப்பட்டது.அதற்க்கான இசையை அமைப்பதற்கு அங்கும் ,இங்கும் இசைவகைகளை தேடியது.கிறிஸ்த்தவ மதத்தின் வேர்களாக இருந்த யூத, மற்றும் சிரிய நாட்டு சர்ச் பாடல்களிலிருந்து சிலவற்றை எடுத்தாண்டனர்.துள்ளலான தாள அமைப்புகள் அற்றதும் ,வைத்திய இசையின் துனையற்றதும்,இனிமை நிறைந்த இசையை மறுப்பதும் ,துறவு நிலையை வெளிப்படுத்துவதும் ,கடவுள் மீதான பக்தியை உண்டாக்குவதுமான ஓர் வகையை வலிந்து உருவாக்கினர்.

முதலாம்,இரண்டாம் நூற்றாண்டுகளில் பயன்பட்ட பைபிளின் பழைய ஏற்ப்பாடு பாடல்களின் போதாமையால் கிரேக்க நாட்டு இசையையும் சேர்த்தனர்.இவ்விதம் கதம்பமாக சேர்க்கப்பட்ட இந்த வகை இசை கிரிகோரியன் இசை ( Gregorian Music ) என அழைக்கப்பட்டது.அந்நாளில் வாழ்ந்த புகழ் பெற்ற ” போப் ” பாக விளங்கிய கிரிகோர் ( Gregor – கி.பி.596 – 604 ) என்பவற்றின் பெயரில் அழைக்கப்பட்டது.இந்த இசையில் யூத இசையின் தாக்கம் இருந்ததற்கான காரணம் கிறிஸ்தவ மதத்தை முதலில் தழுவியவர்கள் யூதர்கள் என்பதும் முக்கியமான காரணமாகும்.கிரிகோரியன் இசைக் கலைஞர்கள் தமக்கு ஏற்ற விதத்தில் வெட்டியும் ,ஒட்டியும் பூஜைக்கான ஓர் இசையை உருவாக்கினார்கள் என்பர்.ஐந்து சுரங்களைக் கொண்ட இசையின் ( Pentatonic Scale ) செல்வாக்கு இந்த இசையில் ஓங்கி இருப்பதாக இசை ஆய்வாளர்கள் குறிப்பிடுவர் .கி.பி. 11 ம் நூற்றாண்டு வரையில் இவ்வகை இசை பயன் பாட்டில் இருந்தது.

3 .

கி.பி 11 ம் நூற்றாண்டில் அறிமுகமான பலகுரல் இசை ( Chorus Music ) கிரிகோரியன் இசையின் வீழ்ச்சியை அறிவித்தது.தேடலின் விளைவாய் உதித்த இந்த இசையில் பல புதிய உத்திகள் கையாளப்பட்டன. பாடல்களில் ஏற்ற இறக்கங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தக் கூடிய பாடகர்களும் ,இசை தொகுப்பாளர்களும் ( Conductors )உருவாயினர். பலகுரலிசையில் இசை நேர்த்தி முக்கியமானதொரு அம்சமாக கருத்தப்பட்டது.பாடலின் தொடக்கமும் ,முடிவும் சரியான இட்சத்தில் சேர வேண்டியதுடன் ஒத்திசைவின் ( Harmony )நேர்த்தியையும் வேண்டி நின்றன .இவ்வாறு ஒரு புதிய இசை வடிவம் உருப்பெற்ற போதும் ,அது யாரால் இசையமைக்கப்பட்டது போன்ற விபரக் குறிப்புகள் தெளிவாக இல்லை என்பர். பாடலைப் பாடியவர்கள் ,இசையமைத்தவர்கள் என்ற பேதம் வெளியே தெரிய சிறிது காலம் பிடிக்கிறது.

அதிகாரத்தில் உள்ளவர்களே வரலாறு எழுதும் நியதியாயிருந்த காரணத்தால் போப் கிரிகொரின் பெயர் பதிவு செய்யபட அவர் பெற்றிருந்த செல்வாக்கே முக்கிய காரணமாகத் திகழ்ந்தது .இவருக்கு சற்று முன்பு வாழ்ந்த போப் அம்ரோசியஸ் (Ambrosius – கி.பி. 340 – 397 ) என்பவரது பூசைப் பாடலகள் ,மற்றும் 10 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாதிரியாரான நூத்கர் பால்புலஸ் ( Notker Balbulus ) இசையை உருவாகினார்கள் என கருதப் பட்டாலும் அவர்கள் அவற்றை உருவாக்கவில்லை என்பதே உண்மையாகும்.இதைப் போன்றதே தென்னிந்திய சங்கீத உலகில் புகழ் பெற்றிருந்த சுவாதித் திருநாள் என்ற மன்னன் கீர்த்தனைகள் இயற்றினார் என்று சொல்லப்படுவதும்.அவரது அரண்மனையில் இசைக் கலைஞர்களாக இருந்த தஞ்சையை சேர்ந்த இசைக் கலைஞர்களே அவற்றை இயற்றினார்கள் என்பதும் மறைக்கபட்ட உண்மையாகும் .

பலகுரலிசையில் Guido Af Arezzo என்பவர் ஒரு இசையமைப்பாளராக முதன்மை நிலை பெற்றிருந்தாலும்,பல குரலிசையின் முதல் இசயமைப்பாலறார் என முக்கியம் பெறுபவர் ஹில்டே gard Von Bingen ( 1098 – 1179 ) என்ற பெயரை கொண்ட ஓர் பெண் இசையமைப்பாளரே ஆகும்.

தனது பெயரை குறிப்பிடாத ஒருவர் ” Anonymus IV ” என்ற பெயரில் 1275 களில் வெளியிட்ட தொகுப்பு ஒன்று ஆரம்ப கால இசையமைப்பாளர்களைப் பற்றிய குறிப்புகளை தருகின்றது. ” Anonymus IV ” என்பவர் ஒரு ஆங்கிலேய பாதிரி எனவும், அவர் பாரிஸ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றார் என்பதும் அவர் பற்றிய குறிப்புகள் ஆகும் .அவரது குறிப்புகளிலிருந்து முதன் முறையாக புகழ் பெற்ற இரு இசையமைப்பாளர்கள் என Leonin ( 11 ம் நூற்றாண்டு ) ,Perotin ( 12 ம் நூற்றாண்டு ) போன்றோரின் பெயர்கள் உறுதிப் படுத்தப் படுகின்றன.அவர்கள் இருவரும் Nortredam சர்ச்சில் பணிபுரிந்ததாகவும் பலகுரளிசைக்கு பல புதிய பாடல்களை உருவாகினார்கள் என பதிவு செய்திருக்கிறார்.மத்திய காலத்து ஓவியங்களிலும் பொதுப்படையானதாக இசைக் கலைஞர்கள் காட்டப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்டு இனம் காட்டும் வகையில் இல்லை. எனினும் பிற்காலங்களில் படிப்படியாக இசையமைப்பாளர்கள் ஓவியங்களில் காணக் கிடைக்கின்றனர்.

ஓவியம் , தத்துவம், கவிதை, கட்டிட கலைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மத்திய காலத்து மதபீடம் கலாச்சார மையமாகவும் திகழ்ந்தது .மதம் சார்ந்த இசையில் சில புதுமைகளை செய்து மாற்றங்களை உள்வாங்கினாலும் இசையை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடிந்திருக்கவில்லை. மதம் சாராத நாட்டுப்புற இசைக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கே அதற்க்கான காரணமாய் அமைந்தது என்பர், சர்ச் இசைக்குப் போட்டியாக இருந்த நாட்டுப்புற இசை கலைஞர்கள் மீதான வரியை அதிகரித்து அவர்களது இசையை முடக்கிய சர்ச் அவர்களது இசையையும் தடை செய்தது.அடித்தட்டு மக்களின் களியாட்டங்களில் அவர்களது இசை முழங்கிக் கொண்டிருந்தாலும் பொருளாதார நிலையில் பலம் குன்றிய நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் நிச்சயமற்ற எதிர் காலத்தை நோக்கியதால் பிரபுக்களின் உதவியை நாடத் தொடங்கினர்.

4 .

சமூக அடுக்கின் கிழ் இருந்த உழைக்கும் மக்கள், யூதர்கள் ,நாத்திகர்கள் சொத்து சேர்க்கும் ,நிலங்களை வைத்திருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தனர்.அந்த வரிசையில் மதம் சாரா தொழில்முறைப் பாடகர்களும் ,நடிகர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்பது குறிப்படத்தக்கது.கிராமப்புறங்களில் வாழ்ந்த மக்கள் இயற்கையுடன் இணைந்த வாழ்வை கொண்டிருந்தனர்.உற்பத்தியில் ஏற்ப்படுகின்ற ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப அவர்கள் வாழ்வு அமைந்திருந்ததெனினும் ,உற்பத்தி அதிகமாகும் போது மத பீடமும் ,பிரபுக்களும் அவற்றை தமக்குள்ள பங்கு போடும் சுரண்டல் முறையை கடுமையாக நடாத்தினார்கள்.நோய் ,வறுமை ,பட்டினி போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் இசையில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.மக்கள் பெரும்பான்மையாக கூடும் இடங்களான சந்தை, சர்க்கஸ் போன்றவற்றில் வாத்திய இசையுடன் கூடிய பாடல்கள் பாடப்பட்டன.சர்ச்சில் பாடப்படும் ஒரு சில பாடல்கள் அங்கு இசைக்கப்பட்டாலும் மத உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத காதல், தாலாட்டு பாடல்களுடன் நடன பாடல்கள் என மக்களுக்கு நன்கு தெரிந்த பாடல்கள் இசைக்கப்பட்டன.

நாட்டுப்புற வாழ்வைப் போலவே அவர்களால் பயன்படுத்தப்பட்ட இசைக்க கருவிகளும் மிக எளிமையானவையாக இருந்தன.கி.பி. 13 ,14 ம் நூற்றாண்டுகளில் ஏற்ப்பட்ட விவசாய உற்பத்தியின் அதிகரிப்பு ஆடம்பர பொருட்களின் பாவனைக்கான வழியைத் திறந்து வைத்ததுடன் ஆடையலங்காரம் , கட்டிட கலை நிர்மாணம் ,அலங்கார வேலைப்பாடுகள் போன்றவற்றுடன் இசை ரசனையும் புதிதாக இணையத்துக் கொள்ளப்பட்டது.இசை ரசனை என்பது உயர்ந்ததாகவும் மாறத்தொடங்கியது.பிரபுக்களின் உதவியைப் பெற்ற இசைக் கலைஞர்கள் நடன, நாடக நிழ்ச்சிகளில் பின்னணிக் கலைஞர்களாகவும் ,ராணுவத்தில் இசைக் கலைஞர்களாகவும் மாறினார். சர்ச்சால் தாழ் நிலைக்கு தள்ள பட்ட இக் கலைஞர்கள் புதிய வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தொழில் நேர்த்தியை வளத்ததுடன் ,சர்ச் இசைக்குப் புறம்பான ஓர் இசையையும் வலத்தேடுதுக் கொண்டிருந்தனர்.மக்கள் கூடும் போது நிகழ்சிகளில் அவை பரீட்சித்து பார்க்கப்ப் பட்டதுடன் ,மக்கள் மத்தியில் அவை செல்வாக்கும் பெற தொடங்கியது.

மத்திய காலத்து நடுப்ப் பகுதியில் இசையைக் குறிப்புகளாக ( MUSIC NOTATIONS ) எழுதும் முறை GUIDO AREZZO என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது என்பது இசைத் துறையில் நிகழ்ந்த புரட்சி எனலாம்.அவருக்கு முன்பு இசைக் குறிப்புகளை எழுதும் முறை இருந்ததெனினும் முழுமையானதாக இருக்கவில்லை. ” நூறு வருடப் போர் ” என் அழைக்கப்பட்ட ,இங்கிலாந்துக்கும் ,பிரான்சிற்கும் இடையே நடை பெற்று வந்த போர் (1339 – 1453 ) முடிவடைத்ததும் ஐரோப்பாவில் நிரந்தர அமைதி ஏற்ப்பட்டது.அது பிரான்சில் ஒரு தேசிய அரசுக்கும் அடித்தளமிட்டுக் கொடுத்ததுடன் ஐரோப்பாவுக்கும் ,இங்கிலாத்துக்குமான தொடர்புகளையும் அதிகரிக்க செய்ததது.மதபீடத்தின் ஆதிக்கத்திற்குள் இருந்த இத்தாலியிலும் ,பிரான்சிலும் எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த மதம் சாராத லௌகீக இசை அதிக செல்வாக்குப் பெற தொடங்கியது.மறுபுறம் ஆங்கிலேயரின் சிறப்பான நாடுப்புற இசையை ஐரோப்பிய மக்கள் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது.

ஒரு புறம் பல குரல் இசை ,மறுபுறம் இங்கிலாந்து நாட்டுப்புற இசை இவற்றோடு இணைந்த மதம் சாராத ஐரோப்பிய நாடுப் புற இசை என பல்வேறு இசைவகைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன.இந்த இசைகள் ஒன்று கலந்து ஐரோப்பாவில் புதுவகை இசையாக மலர ஆரம்பித்தது.பிரஞ்சு போப் ஜோஹன்னஷ் ( JOHANNES VII ) என்பவர் இந்த புதுவகை இசையை கடுமையாக தாக்கினார்.ஆயினும் “அழகிய எழுத்துக் கலை ” ( CALLIGRAPHY ) என அழைக்கப்படும் புதிய கலை வடிவத்துடன் ,அழகிய எழுத்துக்களால் அமைக்கப் பட்ட இசைக்குறிப்புக்கள் வெளி வந்து புகழ் பெறத் தொடங்கின.

இவ்விதம் இனிமையான இசைகளின் தொகுப்பாக ஒரு புதிய இசையை நேதேர்லாண்டுகள் ( NETHERLANDS ) என அழைக்கப்பட்ட ( இன்றைய நெதர்லாந்த், லக்ஸ்சம்பர்க், பெல்ஜியம் போன்ற நாட்களை சேர்ந்த ) கலைஞர்கள் படைத்து புகழ் பெறத் தொடங்கினார்கள்.

5 .

இத்தாலிய ,ஆங்கிலேய ,பிரெஞ்சு மற்றும் பலகுரலிசை போன்றவற்றின் சிறப்பம்சங்கள் எல்லாம் ஒன்றிணைந்த சிறப்பான இசையாக நெதேர்லாண்டுகளின் இசை மலர்ந்தது.ஐரோப்பா முழுவதிலும் உள்ள பிரபுக்களின் மாளிகைகளில் அவர்களது இசை முழங்கியது.15 பாடகர்கள் ,25 வாத்தியக் கலைஞர்களைக் கொண்டிருந்த இக் குழுவினர் Philip Dristiges ( 1363 – 1404 ) என்ற பிரபுவின் மாளிகையில் அதிகமான சலுகைகளைப் பெற்றனர்.பிற்க்காலத்தில் கலைத்துவம் மிக்க இசையை உருவாக்கிய இசை மேதைகளின் முன்னோடியாக இவர்களே விளங்கினர். இசையில் நீண்ட ஓட்டத்தை பாடல்களுக்கேற்ப அமைத்து ,பல குரலிசையில் குரல்களை எதிரும் ,புதிருமாக அமைத்து புதுமை செய்ததுடன் முழுமையான இசை வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.இந்த வகை இசையே 17 ம் நூற்றாண்டில் உருவான சிம்போனி ( Symphony ) இசையின் முன்னோடி என வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர்.

இப்புதிய இசையின் தாக்கம் சர்ச் இசையிலும் ஏனைய இசைகளிலும் செல்வாக்கு செலுத்தியதுடன் J .S .Bach , Hayden , Handel , Mozart போன்றோர் காலம் வரையும் நீடித்தது என்பர்.

கி.பி 1430 இல் Johannes Guttenberg ( 1398 – 1468) என்பவர் கண்டு பிடித்த அச்சுக்கலை ( Printing Technology ) செய்தித்துறையின் புரட்சி ( Media Revolution ) என புகழ் பெற்றது. கி.பி 1455 இல் Guttenberg முதன் முதலில் பைபிளை அச்சிட்டார்.அச்சுக்களியின் வளர்ச்சி இசைக் குறிப்புகளை அச்சு வடிவில் கொணர்ந்து சாதனை நிகழ்த்தியது. கி.பி 1500 களில் இசைக்குறிப்புகள் ( Music Notations ) அச்சிடப்படும் வசதி ஏற்ப்பட்டதும் அவை விற்ப்பனைப் பொருளாகவும் மாறத்த் தொடங்கியதுடன் இசையைமைப்பாளர்கள் அதன் உரிமையாளர்களாகவும் மாறத்தொடங்கினார்.

பாவனையின் பெறுமதி மட்டுமல்ல ,பெறுமதிமிக்க மாற்றீடாகவும் அவை கருதப்பட்டன .இசைப் பிரதிகள் கற்கவும் ,பிரதிகள் எடுக்கவும் ,அதனூடே ஒரு பாரம்பரியம் உருவாகவும் , இசை என்பது வெறும் கைவினை என்ற நிலையிலிருந்து கலை வடிவமாகவும் மாற்றமடைய உதவியது.
மறுமலர்ச்சி காலத்தில் ஏற்ப்பட்ட வேகமான வளர்ச்சி ஐரோப்பாவில் சகல மட்டத்திலும் மாற்றங்களை ஏற்ப்படுத்தியது.அவை மதத்திலும் எதிரொலித்தது.கத்தோலிக்க எதிராக லூதர் மேற்கொண்ட கிளர்ச்சி வேதாந்த தத்துவப் பார்வையிலும் மட்டுமல்ல இசையிலும் சமூக ரீதியிலும் மாற்றங்களைத் தோற்றுவித்தது.லூதரியச் சிந்தனை குறிப்பாக இசையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்ப்படுத்தியது. கத்தோலிக்க மதத்திற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்த Martin Luther ( 1483 – 1546 )அதன் இசையை முற்று முழுதாக வெருத்தாரில்லை.மதம் சார்பான வழிபாட்டு முறைகளில் கத்தோலிக்க கணிசமான அளவு பயன்படுத்தினார்.கத்தோலிக்கப் பாடல் வரிகளை மாற்றி அதற்குப் பதிலாக தனது பாடல் வரிகளை வைத்து ,பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களை முழுமையாக இணைக்கும் ஒரு வழியாக வழிபாட்டை உருவாக்கினார்.மத பூஜைகளில் இசை பயன் படக் கூடாது என்று தீவிரம் காட்டிய மத குருக்களை மறுத்து தனது பூஜைகளில் இசையை மிக நுட்ப்பத்துடன் கையாண்டார். இசையை எவ்வித சலனமுமின்றி லூதர் பயன் படுத்தினார் என்றால் மிகையல்ல என்பர்.

லூதரியச் சிந்தனை இசையில் மாற்றங்களை ஏற்ப்படுத்தியதுடன் புதிய பரம்பரை இசையமைப்பாளர்களையும் உருவாக்கியது.அதன் முதல் முக்கியமானவர்களாக
1 . Heirich Shutz ( 1585 – 1672 )

2 . Johannes Sebastian Bach ( 1685 – 1750 )
3 . Georg Fredrich Handel ( 1685 – 1759 ) போன்றோரை குறிப்பிடலாம். எனினும் 16 ம் நூற்றாண்டின் அர்த்த புஷ்டியுள்ள இசையை வழங்கியவர்களில் கத்தோலிக்க இசையமைப்பாளர்களே முதன்மையாக திகழ்ந்தனர் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர்.அவர்களில்
1 .John travener ( 1490 – 1550 )
2 . William Bryd ( 1543 – 1623 )
3 .Thomas Tallis ( 1505 – 1585 )
போன்றோர் முக்கியமானவர்கள் என கணிக்கப்பட்டாலும் ,அவர்கள் எல்லோரையும் விட
Claudio monteverdi ( 1567 – 1663 ) என்பாரே முதன்மையானவராக விளங்கினார்.

6 .

இவரது இசையே மேற் கூறிய லூதரிய இசையமைப்பாளர்கள் மீது அதிகம் செல்வாக்கு செலுத்தியது.வாத்திய இசைக் கருவிகளை தெரிவு செய்வதிலும் ,ஒழுங்கமைப்பதிலும் முன் மாதிரியான வழிகளை கையாண்டவர் இவரே. பின் வந்த Johann Sebastian Bach இன் காலத்தில் இவை மென் மேலும் வளர்ந்து சிறப்பெய்தின என்பர்.படைப்பாற்றல் திறனில் Bach இன்றும் அதி உன்னத இசைக் கலைஞராக போற்றப்படுகிறார்.

இரு மதங்களின் ( கத்தோலிக்க – புரட்டஸ்தாந் )உள்ளடக்கம் வெவேறு சமூக நோக்குகளின் அடிப்படியாக அமைந்திருந்தது.ஒன்று நிலப்பிரபுத்துவத்தையும் ,மற்றது முதலாளித்துவத்தையும் பிரதிபலித்தன.லூதரின் இயக்கம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புதிய மனிதர்களை உருவாக்கும் போராட்டங்களை கட்டவிழ்த்து விட்டதுடன் முதலாளித்துவ உற்பத்தி முறைமையையும் ஏற்றது.லூதர் ரஷ்ய பற்றிஎழுத்தாளர் மாக்சிம் கோர்கி பின்வருமாறு எழுதினார் .” அவர் (லூதர் ) ஒரு மதத் தலைவர் போலால்லாமல் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி போலவே நடந்து கொண்டார்.” என்று.
இப்போராட்டங்கள் வன்முறை மிக்கதாகவும் ,சில சமயங்களில் சாத்வீகமானதாகவும் இருந்ததுடன் இசையிலும் அவை வெளிப்பட்டன.கத்தோலிக்க இசையின் தாக்கத்திலிருந்து முற்றாக விடுபட முடியாமல் இருந்தாலும் லத்தீன் மொழிக்குப் பதிலாக ஜேர்மன் மொழியில் பாடல்கள் பாடப்பட்டதுடன் ஜேர்மன் மொழி சொற்ப் பொழிவுகளுக்கும் கொடுக்கப்பட்டது. தாய் மொழிகளில் பூஜைகள் முக்கியத்துவம் பெற்றன . 1525 ம் ஆண்டு முதன் முதலாக ஜேர்மன் மொழியில் Wittenburg சர்ச்சில் பிரார்த்தனை நடைபெற்றது.அது 1526 ம் வருடம் அச்சிலும் வெளிவந்தது.ஜேர்மன் மொழியில் பாடல்களை எழுதியவர் லூதரே ஆவார்.லூதர் அடிப்படையில் ஓர் இசைக்க கலைஞராகவும் விளங்கினர். அவரது இசைத் திறமை மிக இளம் பிராயத்திலேயே இனம் காணப்பட்டதாகவும் ,அவரது இனிய குரலில் மயங்கிய ஓர் வயோதிபப் பெண்மணி அவருக்கு உணவும், உறைவிடமும் கொடுத்து அவரது கல்விக்கும் உதவினார் என அவர் பற்றிய வரலாறு கூறுகிறது.பாடல்கள் பாடுவதிலும் , Lute மற்றும் புல்லாங்குழல் வாசிப்பதிலும் சிறந்து விளங்கினார் லூதர். வட ஐரோப்பாவில் ஏற்ப்பட்ட சமூக மாற்றங்களில் இசையும் ஓர் ஆயுதமாகப் பயன்பட லூதேரின் இந்த இசைப்பின்னனியே காரணம் எனலாம்.1538 இல் வெளி வந்த இசை நூல் ஒன்றின் முன்னுரையில் ” எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் வார்த்தைக்கு அடுத்த படியாக உயர்ந்த இசைக் கலையே இந்த உலகின் மிகப் பெரிய செல்வம். அது இதயத்தையும் ,சிந்தனையையும் ,ஆத்மாவையும் கட்டுப்படுத்துகிறது …” என்று எழுதினார்.

லூதரிய இயக்கம் வட ஐரோப்பாவில் சமூகத்தில் போராட்டங்களை ஏற்ப்படுத்தியதுடன் முன்பிருந்த சமூக இறுக்கத்தையும் தளர்த்தி முதலாளித்துவ சமூகத்தை நோக்கியும் தள்ளியது.இதன் வளர்ச்சி இசையில் திருச்சபை இசை ,அதற்க்கு அப்பாற்ப்ப்பட்ட இசை என இரு பிரிவை உண்டாக்கியது.இந்த தவிர்க்க முடியாத தர்க்க ரீதியான பிளவு 1800 களில்முடிவுக்கு வருகிறது.

மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கிய அமெரிக்க புரட்சி ( 1775 – 1783 ) அதைத் தொடர்ந்த பிரஞ்சுப் புரட்சி (1789 – 1792 )பிரபுக்களையும் ,மதபீடத்தையும் கதி கலங்க வைத்தது.குறிப்பாக பிரஞ்சுப் புரட்சி ஐரோப்பாவெங்கும் சுதந்திரத்திற்க்கான புத்துணர்ச்சியை ஏற்ப்படுத்தியது.மத பீடத்தின் ஆதரவுக்கும் ,பிரபுக்களின் ஆதரவுக்கும் ஏங்கிக் கொண்டிருந்த கலைஞர்கள் விடுதலை பெற்றார்கள்.மறுமலர்ச்சி காலத்தின் தொடர்ச்சியாக மொசார்ட் ( Wolgang Amedeus Mozart – 1756 – 1791 ) வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

7

இந்த மாற்றங்கள் இசையை திருச்சபையின் அதிகாரத்திலிருந்து பிரித்தெடுக்க உதவியதுடன், பூஜை இசையையையும் பின் தள்ளியது.இசையமைப்பாளர்கள் உயர்ந்த இசையைவழங்கக்கூடியவர்களாகவும் ,ரசிகர்களுக்கு இசைவிருந்து அளிக்ககூடிய சிறந்த கலைஞர்களாகவும் உருவாகினர்.திருச்சபையின் கை வினைஞர்கள் என்பதிலிருந்து மாறி உயர்ந்த , கலைத்தரமிக்க இசையமைப்பாளர்களாகவும் மாறினார். மதத் தலைமைக்கும் ,பிரபுக்களுக்கும் எதிராக அமைந்த இந்த காலம் இசையின் வளர்ச்சிக்கு அடிப்படையானதாக அமைந்தது.

18 ம் நூற்றாண்டில் இசை மதத்திலிருந்து மிகத் தீவிரமாக பிரிந்து சென்றது.இதன் நாயகர்களாக மொசார்ட் ( Wolfgang Amadeus மொசார்ட் – 1756 – 1791 ) ,மற்றும் பீத்தோவன் ( Ludwig van Beethoven – 1770 – 1827 ) என்ற மாபெரும் கலைஞர்களை குறிப்பிடுவர்.மனிதத்திற்கான சுதந்திர உணர்வு வேகமாகப் பரவத் தொடங்கிய இக் காலத்தில் பிறர்புக்களிடமிருந்து கலைஞர்கள் தம்மை விடுவித்துக் கொண்டார்கள்.அந்த வகையில் மொசார்ட் சல்ச்பெர்க் ( salzburg ) பிரபுவின் தொடர்பை முறித்துக் கொண்டார். மத பீடத்தால் தடை செய்யப்பட்ட நாடகங்களுக்கு இசை மொசார்ட் புதிய இசை வடிவங்ககளை உருவாக்கினார். The Magic Flute என்ற ஒரு இசை வடிவம் எழுதி முடித்த சில மாதங்களில் தனது 35 வது வயதில் மொசார்ட் மரணமடைந்தார்.
ஆனால் எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காதவராக விளங்கிய பீத்தோவன் தன்னை மனிதத்துவத்திர்க்கான இசைக்கலைஞன் என பிரகடனம் செய்தார்.பிரஞ்சு புரட்சியை தொடர்ந்து பிரபுக்களை எதிர்த்து ஆட்சிக்கு வந்த நெப்போலியனை வாழ்த்தி மூன்றாவது சிம்போனியை அமைத்த பீத்தோவன் ,பின் நெப்போலியன் பிரபுக்களை ஆதரித்து மாமன்னனாக வர முயன்ற போது தனது மூன்றாவது சிம்போனியை கிழித்தெறிந்தார்.அதற்க்கு பதிலாக தொழிலாளர் எழுச்சியை முன்னறிவிக்கும் விதமாக தனது புகழ் பெற்ற “தொழிலாளர் படையே வருக ” என்ற ஒன்பதாவது சிம்போனியை அமைத்தார்.
மொசார்ட் , பீத்தோவன் அக் காலத்தில் படைத்த இன்று Master Peices என்று இன்று வரை கொண்டாடப்படுகின்றது.இவ்விரு இசை மேதைகளாலேயே ஐரோப்பிய செவ்வியல் இசை ( Classical Music ) உச்சம் பெற்றது. அது மட்டுமல்ல பின் வந்த பல இசை மேதைகளின் இசையில் பெரும் செல்வாக்கு செலுத்தியது என்பது அவர்களது படைப்பாற்றல் திறமைக்கு எடுத்துக் காட்டாகும்.இதை அவர்களுக்கு கடவுள் அருளவில்லை.

முற்றும்.

கர்நாடக இசை தமிழிசையே (இறுதிப்பாகம்) : T.செளந்தர்

கல்+நாடு=கன்னாடு. கன்னாடு என்பது மலைகள் நிறைந்த நாடு . மலைகள் நிறைந்த பகுதியாதலால் தமிழர்கள் அதனை இவ்வாறு அழைத்தார்கள்.

ஆங்கிலத்தில் கில் என்ற சொல் சொல்லும் கல் என்பதிலிருந்து கிடைத்ததே என ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். சோமேசபுல்லேகமால் என்ற மன்னன் தவறுதலாக கூறியது நிலை பெற்றுவிட்டது. ஆனால் பார்ப்பனர்கள் அது தமிழ்நாட்டு இசையல்ல என்று காட்டுவதற்காகவே திட்டமிட்டு கர்நாடக இசை என்று பயன்படுத்திவருகிறார்கள்.

கர்நாடக இசை என்பதே தமிழிசைக்கு பார்ப்பனர்கள் இட்டுக்கட்டிய பெயர் என்றும், தமிழிசை தான் கர்நாடக இசை என்றும் ஒத்துக் கொள்ளும் பார்ப்பன இசையறிஞர்கள் மறந்தும் தமிழிசை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது கிடையாது. இன்று சில சங்கீத நூலாசிரியர்கள் சிலர் தமிழிசை வேறு என்று சாதுர்யமாகவும்,சமரசமாகவும் எழுதிவருகின்றனர்.

“ஆதி இசை வகைகள் 12000 .பண்கள் 103வகை. இசைகுறிப்பெயர்கள் ” என்று தமது ஆராச்சிமுடிவுகள் குறித்து நூலாக எழுது முன்பே ஆப்ரகாம் பண்டிதர் , சுதேச மித்ரன், த இந்து போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பினார் ஆனால் அவை இருட்டிப்பு செய்யப்பட்டன..

 சங்கீதமும் மூர்த்திகள் :

1.தியாகய்யர்(1767- 1847)

 2.சியாமாசாஸ்திரி(1762- 1827)

 3.முத்துஸ்வாமிதீட்கிதர்(1776- 1835)

தமிழருக்குப் புரியாத மொழிகளில் பாடு முன்னரே தமிழில் கீர்த்தனைகள் எழுதியும் பாடியும் த்மிழிசையை வளர்த்த மூவர் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்தார்கள். அவர்கள்

1.சீர்காழி முத்துதாண்டவர்(1525- 1605)

 2.சீர்காழி அருனாசலகவிராயர்(1711- 1779)

 3.மாரி முத்தாபிள்ளை(1712_ 1787)

தாம் வாழ்ந்த காலத்திலேயே புகழ் பெற்ற இந்த மூவரின் அடியொற்றியே பின் வந்த மூவர்களும் மும் மூர்த்திகள் ஆனார்கள். முத்துத்தாண்டவர் தான் முதன் முதலில் கீர்த்தனை வடிவத்தை அமைத்தார். பல்லவி, அனுபல்லவி, சரணம் எனும் அமைப்பு முறையையும் வகுத்தவர் அவரே.

கீர்த்தனை இசை வடிவம் தமிழ்நாட்டு மக்களுடையது. புரந்தரதாசருக்கோ, அன்னமாச்சாரியாருக்கே இந்த வடிவம் தெரியாது. இறைவனின் பெயர்களை வரிசையாககூறும் தேவர்நாமா என்ற வடிவத்தை புரந்தாதாசரும், நாமபஜனை என்பதைதான் அன்னமாச்சாரியாரும் எழுதியுள்ளனர். அவர்களும் கீர்த்தனைகள் இயற்றவில்லை.

இராமபிரமம் என்பவர் பிழைப்பு தேடி தமிழ்நாட்டில் குடியேறிய தெலுங்கு பிராமணர். அவரின் புதல்வர்களில் ஒருவர் தான் தியாகய்யர் என்று அறியப்படுகின்ற தியாகராஜர்.இவர்களது தாய் மொழி தெலுங்கு .தியாகய்யர் தான் வாழ்நாளிலே ஒரே ஒரு தடவை தான் ஆந்திரா சென்றுள்ளார். தமிழ் நாட்டில்பிறந்து வளர்ந்த அவர் தமிழ்நாட்டு இசையைத்தான் கேட்டார் .

கோவில்களில் இசைக்கப்பட்ட தேவார இசையையும்,நாதஸ்வர இசையையும், தமிழ் கீத்தனங்களையுமே அவர் கேட்டிருப்பார்.இவ்விதம் தமிழர்களிடமிருந்து தான் பெற்ற இசை அறிவை பயன்படுத்தி தனது தாய் பாசையில் பாடல்களாக எழுதினார்.

அவரது பாடல்கள் கொச்சை தெலுங்கில் எழுதப்பட்டவை என்றும் இன்று விளங்குவது போல் விருத்தி பெற்ற இசையாக இருக்கவில்லை என்பதும், பின் வந்த இசைக்கலைஞர்கள் பாடும் முறைகளில் பல விருத்திகளை செய்தார்கள் என்பதும் . இசை ஆராய்ச்சியாளர்கள் கூற்று.

தியாகய்யர் எந்தெந்த தமிழ் கீத்தனங்களை தேவாரங்களை எல்லாம் “காப்பி” அடித்து தெலுங்கில் பாடல்களாக்கினார் என்று நீண்டதொரு பட்டியலை இசை அறிஞர் ச . ராமநாதன் வெளியிட்டு பாடியும் காண்பித்தார். தியாகய்யர் ஒரு பார்ப்பனர் என்பதால் அவரை தலையில் வைத்துக் கொண்டாடும் பார்ப்பனர்கள் இவற்றை எல்லாம் கேட்டும் செவிடர்கள் போல நடிக்கிறார்கள் அறிவால் வெல்லும் தகுதி அற்ற பார்ப்பனர்கள் சூழ்ச்சியாலும், சதியாலுமே தமது காரியங்களை சாதித்து வருகிறார்கள்.

thavilதமிழர்கள் உருவாக்கிய இந்த இசை என்னென்றும் பக்திசார்ந்த இசையாக இருந்ததில்லை. தமிழ் கவிதை யாப்பு , இலக்கண நூல்களிலும், ,அவற்றின் உரைகளிலும் பக்தி மார்க்கம் குறித்த கவிதைகள் பற்றி விவாதிக்கப்படவில்லை. அது பற்றிய தவல்களுமில்லை. இலக்கியமும், இசையும் கி.பி.7 ம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமயப்போராட்டங்களின் பின்னர் தான் பக்திமார்க்கத்தில் இணைக்கப்பட்டன. இலக்கியமும் அவ்வாறே . ஆரம்பகால பக்தி இலக்கியங்கள் இலக்கியம் என்றளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.என்பதும் சந்தேகமே.

சைவ ,வைணவ வளர்ச்சிக்காகவும் ,பெளத்த ,சமண சமயங்களுக்கு எதிராகவும் இசை திருத்தப்பட்டது. பார்ப்பனர்கள் தங்கள் தேவைக்காக கடவுளையே உருவாக்கக் கூடியவர்கள் . கணபதி, முருகன் கதைகள் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். சிவபெருமானின் பிள்ளையான முருகனை வட இந்தியர்கள் வழிபடுவதில்லை என்பது சிறிய உதாரணமாகும். இசை தமிழ்நாட்டில் இறைவனுக்கும்.அல்லது பக்திக்கும் என என்றென்றும் இருந்ததில்லை.

அக்கால (கி.பி.7ம் நூற்றாண்டு) அரசியலே அதனையும் தீர்மானித்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இவ்விதம் தமிழிசை பக்தி இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்பது தமிழ் மக்கள் மத்தியில் இசைக்கு இருந்த செல்வாக்கினையே காட்டுகிறது . பின் அதுவே சம்பிரதாயமாகவும் மக்கள் மேல் திணிக்கப்பட்டது. தமிழிசையின் வ்லிமையால் தான் பிற சமயங்களிலிருந்து சைவத்தையும், வைணவத்தையும் காப்பாற்றமுடிந்தது. பார்ப்பனர்கள் உண்டாக்கிய இறைவனால் அல்ல. இந்த மத்ப் போராட்டங்களால் தான் தாழ்த்திவைக்கப்பட்டிருந்த (சாதிகள்) பாடகர்களின் தேவை முக்கியமாகியது. பாடல்களைப் பாடக்கூடியவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு கோயில் மண்டங்களுக்குள் நிறுத்தப்பட்டனர். பின்னர் இவர்களை “இசை வேளாளர்கள்” என உயர்த்தப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் பாலர் வகுப்புக்களில் நான் படித்த சைவ சமய பாடத்தில் சொல்லித்தரப்பட்ட நம்பியாண்டார்நம்பி என்பவரின் கதை இதை எழுதும் போது என் நினைவுக்கு வருகிறது . இந்த சைவ சமயம் என்பதை ஒரு பாடமாக படிப்பதில் என்ன லாபம் இருக்கிறது. எனநான் பல முறை சிந்தித்ததுண்டு ,சமணர்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டார்கள்.

நம்பியாண்டார் நம்பி ஓர் அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த ஆரம்பகால தேவாரப்பாடல்களை எவ்விதம் மீட்டெடுத்தார் போன்ற கதைகளின் முழுப்பரிமாணமும் இப்போது தான் புரிகிறது.

 சமணர்கள் கழு மரத்தில் ஏற்றப்பட்டார்கள் என்பதை நான் அவர்கள் ஏதோஒரு மாமரம் போன்ற ஓர் மரத்தில் ஏற்றப்பட்டார்கள் என்றே நீண்ட காலம் எண்ணியிருந்தேன். (தவறு செய்யும் மாணவர்களை ப்ள்ளி ஆசிரியர்கள் பெஞ்சில் ஏற்றுவதுபோல ) .நம்பியாண்டார்நம்பியும் ,பேரரசன் இராஜராஜ சோழனும் தேவாரப்பாடல்களை மீட்டெடுக்கச் சென்றபோது பார்ப்பனர்கள் எப்படி எல்லாம் சதி செய்து நாடகமாடினார்கள் என்பதை சிவாஜி கணேசன் நடித்த ராஜராஜசோழன் என்ற தமிழ் சினிமாவில் மிக அழகாகக் காண்பித்தார்கள்.

சமணர்களை வெறுப்பதில் புகழ் பெற்றிருந்த சம்பந்தரைப் புகழ்ந்து பாடல் புனைந்த நம்பியாண்டார் நம்பிக்கும் காரியம் இலகுவாக இருக்கவில்லை .நம்பியின் பாடல்களில் சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதை காணலாம் பார்பனியத்திற்கு என்னென்ன விதமாக சேவை செய்தாலும் தமிழ் தமிழர்விரோதம் என்பதே அவர்களது கொள்கையாக இருந்து வருகிறது.

தமிழில் பாடு என்ற கோசம் எழும்பும் போதெல்லாம் ‘துவேசம்’ பேசுகிறார்கள் என்றும்’தமிழ்வெறியர்கள்’ என்றும் கூறுபவர்கள்’ இசைக்கு மொழி இல்லை என்பார்கள் . இசைக்கு மொழி இல்லை என்பது தமிழில் பாடு என்று சொல்லும் போதே வருகிறது. இசைக்கு மொழி இல்லை என்பதும் அரை உண்மையே.

அப்படி கூறும் பார்ப்பனர்கள் யாராவது நாதஸ்வரத்தையோ, தவிலையோ தொட்டிருக்கிறார்களா? வாசிப்பார்களா? மதம் மொழி கடந்து பலரும் நாதஸ்வரக்கலைஞர்களாக இன்று திகழ்கிறார்கள்.முஸ்லீம்கள்.பெண்கள் என பலர் நாதஸ்வரக்கலைஞர்களாக உள்ளனர். இசைக்கு மொழி இல்லை என்று மற்றவர்களின் வாயை அடைக்கும் பார்ப்பனர்கள் யாராவது நாதஸ்வரக்கலைஞர்களாக உள்ளனரா? இதற்கு காரணம் நாதஸ்வரம் தவில் சாதி என்ற பாகுபாட்டுடன் உள்ளடங்கி இருப்பதே. பறையும் இதைப்போலவே. இதற்கான இதற்கான சாதிகளையும் உருவாக்கியவர்கள் பிராமணர்கள்தான்.

தேவடியாள்கள் நட்டுவர்கள் பறையர்கள் கூத்தியர்கள் என இழிவு படுத்தப்பட்ட இந்த மக்களால் தான் நாதஸ்வரமும் சதிராட்டமும் தமிழிசையும் காலங்காலமாக தமிழ் மக்கள் மத்தியில் நிலைபெற்று வருகிறது. தேவடியாள்களால் ஆடப்பட்ட சதிராட்டமும் தமிழ்நாட்டு நடனமே. இந்த சதிராட்டம் என்பதே இன்று பரதம் எனப்படுகிறது. 2000 வருடங்களுக்குமேலாக ஆடப்பட்டு வரும் இந்த சதிராட்டம் வரும் இந்த சதிராட்டத்தை முதன் முதலாக ஒரு பிராமணப் பெண் ஆடியது 1931ம் ஆண்டுதான்.

ஆடிய அந்த சிறுமியின் பெற்றோரை கும்பிட்டு மன்றாடி பெரும்பாடுபட்டே நடாத்தப்பட்டது. ஆனால் 1994 ல் நடைபெற்ற தமிழிசைச் சங்க பண் ஆராய்ச்சி மாநாட்டில் பத்மா சுப்ரமணியம் என்பவர் “பரதம் ஒன்றிற்குதான் இருக்கிறது, வட மொழியில் தோறியது தான் அது. தமிழ்நாட்டில் இந்த நடனம் தோன்றியத்ற்கான ஆதாரம் ஏதுமில்லை . இதோடு ஆரியர்கள் ,திராவிடர்கள் என பேசுகின்ற இனவாதத்தை உடனே நிறுத்த வேண்டும். என்னைக்கேட்டால் இந்த நாட்டில் திராவிடர்கள் இருந்தார்கள் ஆரியர்கள் ஆக்கிரமிப்பு செய்தார்கள் பிறகு பண்பாட்டு ரீதியாகவும் ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கின்ற எல்லா பாட நூல்களையும்தடை செய்ய வேண்டும் ” என தமிழிசை சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அந்த இயக்கத்தின் வீழ்ச்சி பார்ப்பணியத்துடனான அதன் சமரசத்தின் பின்னனிகளை சிந்திப்பது பயன் தரும்.

இந்த அடிப்படையிலிருந்து தான் கர்நாடக இசை என்பது களவாடப்பட்ட இசை என்று தெரிந்திருந்தும், தமிழிசையைப்பற்றி ஏராளமான தகவல்களைக் கொண்டுள்ள தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எழுதிய 1360 பக்கங்கல் கொண்ட “கானமிர்த சாகரம்” மற்றும் சிலப்பதிகாரத்தில் இசை பற்றிய பகுதியான “அரங்கேற்றுக்காதை” சங்கீத பாடத்திட்டதில் சேர்க்கப்படவில்லை.

தமிழில் பாடுவது அவசியம் என்பது மற்றைய மொழிகளின்மீதான வெறியல்ல. இதை எல்லாம் தன் வாழ்நாளில் உணர்ந்து தெலுங்குமொழி தெரியாமல் சங்கீத வித்துவான்கள் சங்கீத கொலை செய்வதைக் கண்ட பார்ப்பணியத்தின் “மாந்தப்பற்று” முகம் கொண்ட பாரதி பின்வருமாறு கண்டனம் செய்கிறான்.

“இசை ஞானமில்லாதபடி பல்லவிகளும் ,கீத்தனங்களும் பாடுவோர் சங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள். இந்த காலத்தில் சங்கீத வித்துவான்களிலேயே பலர் சங்கீதத்திற்கும் ரசங்களே உயிர் என்பதை அறியாதவர் .முக்காலே மும்மாகாணி வித்துவான்களுக்கு இந்த கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது . எழுத்துக்களையும், பத்ங்களையும் கொலைசெய்தும், விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு ரசம் தெரிய வாய்ப்பில்லை.

நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக்கொண்டே வருகிறேன். பாட்டுக்கச்சேரி தொடங்குகிறது .’வாதாபிகணபதிம்’ என்று ஆரம்பம் செய்கிறார். ‘ராம நீ சமானமெவரு’…மரியாத காதூரா’…’வரசொசரி’….அய்யய்யோ அய்யய்யோ. ஒரே கதை ஒரேகதை;….” இப்படி மேலும் எழுதிக் கொண்டே போகிறான் பாரதி.

பொறுமையிழந்த பாரதியின் வாக்குமூலம் அது. கர்நாடக இசையின் தோற்றம் பற்றி கூறும் பார்ப்பணர்கள் அது சாம கானத்தில் பிறந்தது என்பர் . K.B.தேவாஸ், கிளைமென்ட்ஸ் போன்ற இசையறிஞர்களுக்கு ஆப்ராகாம் பண்டிதர் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு அறுதியிட்டு கூறுகிறார்.

“மேலும் ஆரிய சங்கீதமென்ற ஒரு சங்கீதம் இருப்பதாக நாம் கேட்டதுமில்லை. நூல்களில் பார்த்துமில்லை , ஆரியர்கள் பாடிக்கொண்டிருப்பதினால் மாத்திரம் ஆரிய சங்கீதம் என்றும் , சமஸ்கிருதத்தில் எழுதியதெல்லாம் ஆரியருக்குச் சொந்தமென்றும் சொல்வது பொருந்தாது”.

கர்நாடக இசை இன்று பெரும்பாலான மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருப்பதற்கான முக்கிய காரணம் அது பக்தி என்ற ஒரு உணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தி நிற்பதே. அதைத்தான் பாரதி’ ஒரே கதை”என்றான். சினிமாஇசையின் தோற்றம் பெரும்பாலான மக்கள் புதிய இசை வடிவங்களைக் கேட்க வழிசமைத்தது. சினிமா இசையையும் மட்டம்தட்டவும் ,இருட்டிப்பு செய்யவும்,குட்டுவைக்கவும் எத்தனையோ முயற்சிகளை எல்லாம் அவர்கள் செய்தார்கள். சினிமா சங்கீதத்தை வானொலியில் இருட்டிப்பு செய்தார்கள்.

சினிமா இசை உலக மக்களின் உழைப்பில் தோன்றிய இசை வடிவங்களைச் சாரமாக பலவடிவங்களில் நமக்கு அறிமுகம் செய்து பார்ப்பனர்களின் இருட்டடிப்புகளை எல்லாம் முறியடித்துள்ளது. மக்களின் பல விதமான உணர்வுகளையும் பிரதிபலித்தது சினிமாஇசை.

கர்நாடக இசையும் பெரும்பாண்மையான மக்களைச் சென்றடைய வேண்டுமாயின் அது பக்திஉணர்ச்சி என்ற தடையை கடக்க வேண்டும்.