தேர்தலுக்காக அரசியலுக்குள் நுளைவதாகக் கூச்சமின்றி அறிவித்த ரஜனிகாந்

தென்னிந்தியாவில் ‘பச்சைத் தமிழன்’ எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் புதிய அரசியல் கோமாளியான ரஜனி காந்த் என்ற நடிகன் தான் ‘அரசியலுக்கு’ வந்து வாக்குக் கேட்கப் போவதாக அறிவித்துள்ளார். மூன்று வருடங்களின் பின்னர் தேர்தல் அறிவிக்கப்படும் போது மட்டுமே அரசியலுக்குள் பிரவேசிக்கப் போவதாகக் கூறும் ரஜனிகாந் அதுவரை மூச்சுவிடப் போவதில்லை என்கிறார்.

பொதுவாக, வாக்கு வங்கிக்காகத் தம்மைத் தயார்படுத்தும் எந்தஅரசியல் கட்சியினரும் ஒரு வகயான கோட்பாட்டை முன்வைப்பார்கள், ரஜனிகாந்தைப் பொறுத்தவரை எந்த அரசியல் கோட்பாட்டையும் முன்வைக்காமல் தேர்தலுக்காக மட்டும் அரசியலில் நுளைவதாகக் குறிப்பிடுகிறார்.

தமிழ் நாட்டில் பரபப்புச் சூழலை ஏற்படுத்தி மக்களைத் திசைதிருப்பும் புதிய யுக்தியை இந்துப் பயங்கரவாத இந்திய அரசு கையாண்டு வருகிறது. அந்தவகையில் கமலஹாசனுக்குப் பின்னர் ரஜனிகாந்த் தனது பரபப்புச் செய்தியை வெளியிடுகிறார்.

தமிழ் நாட்டில் நீண்டகாலமாக வாழும் ரஜனிகாந், இதுவரை மக்களின் அவலங்களில் பங்கெடுத்ததில்லை. இந்திய மத அடிப்படைவாத அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் தெருக்கள் எங்கும் போராட்டம் நடத்திய வேளைகளில் எல்லாம் தனது கருத்தைக்கூட வெளியிடாத ரஜனிகாந் தேர்தலில் போட்டியிடும் ஒரே நோக்கத்திற்காக அரசியலில் நுளைவதாக எந்தக் கூச்சமும் இன்றி அறிவித்தார்.

எந்த அரசியல் தொடர்புமின்றி, உயர் நீதிமன்ற நீதியரசராக இலங்கை அரசின் கீழ் பதவிவகித்து, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிய சீ,வீ.விக்னேஸ்வரன் திடீரென முதலமைச்சராகி புலம்பெயர் கனவான்களின் கதாநாயகனாகும் போது ரஜனி ஏன் அரசியலில் நுளையக்கூடாது என பலர் நொந்துகொள்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

Leave a Reply