பேராசிரியர் சாய்பாபாவுக்கு மீண்டும் சிறை ! – மதுரை அரங்கக் கூட்டம்

08-prof-saibabaடெல்லி பல்கலைக் கழகத்தின் ராம்லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிபவரும், ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருபவருமான முனைவர் ஜி.என்.சாய்பாபா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மே 2014-ல் டெல்லியிலிருந்து கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, அவரது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய சூழலில் சிறையிடப்பட்ட அவர் உயிரை அச்சுறுத்தும் நோய்களில் தள்ளப்பட்டதோடு, சிறைவாசம் அவரது இடது கையை முடங்கச் செய்தது.

நாடு முழுவதும் எழுந்த தொடர்ச்சியான கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகுதான் ஜூன் 2015-ல் தலைமை நீதிபதி மோகித் ஷா, நீதிபதி பி.எஸ் ஷுக்ரே அடங்கிய அமர்வு அவருக்கு இடைக்கால பிணை வழங்கியது. பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் தேவையான மருத்துவ சிகிச்சை பெற முடிந்தது. அந்த சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்கும் போதே, எந்த சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாரோ அதே சிறைக்கு போகும்படி முனைவர் சாய்பாபா உத்தரவிடப்பட்டுள்ளார்.

மக்களுக்காக பேசும் குரல்களுக்கு எதிராக அரசின் வளர்ந்து வரும் சகிப்பின்மை இந்த நீதிமன்ற உத்தரவிலும் வெளிப்பட்டிருக்கிறது. அவுட்லுக் இதழில் மே 2015ல், அவர் எழுதிய கட்டுரையில் பாபு பஜ்ரங்கி, மாயா கோத்னானி போன்ற கொலையாளிகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்குவதை கேள்விக்குள்ளாக்கி பேராசிரியர் சாய்பாபாவை விடுவிக்கும்படி கோரியதற்காக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தொடுத்திருக்கிறது, நீதிமன்றம்.

பாசிசம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், இத்தகைய அரசு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நாம் அனைவரும் போராட முன் வர வேண்டும். அதிகரித்து வரும் அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரே பதில மக்கள் திரள் போராட்டமே.

பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய
டெல்லி பேராசிரியர் சாய்பாபாவுக்கு மீண்டும் சிறை!
முற்போக்கு சிந்தனையை முடமாக்கும் காவிகள்!

அரங்கக் கூட்டம்

நாள் : 17-01-2016 ஞாயிறு நேரம் மாலை 5.00 மணி

இடம் : மூட்டா அரங்கம் (தரைத்தளம்)
6, காக்க தோப்பு தெரு, (சென்னை சில்க்ஸ் அருகில்), மதுரை – 1

தலைமை
திரு. ம. லயனல் அந்தோனி ராஜ்,
மாவட்டச் செயலாளர்

சிறப்புரை
பேராசிரியர் முனைவர் R.முரளி,
தேசியக் குழு உறுப்பினர்,
மக்கள் சிவில் உரிமைக் கழகம்

நன்றியுரை
வழக்கறிஞர் பா.நடராஜன்,
மாவட்ட துணைத் தலைவர்

அனைவரும் வருக

இவண்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை, 94434 71003