வரலாற்றின் ஒரு குறித்தகட்டத்தின் ஆளுமை மங்கையற்கரசி காலமானார்

mamirதமிழ்த் தேசிய அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான மங்கயற்கரசி அமிர்தலிங்கம் நேற்று முந்தினம் அதிகாலை(08/03/2016) பிரித்தானியாவில் சரே பகுதியில் காலமானார். வன்னிப் படுகொலைகள் வரை இலங்கை அரசியலின் பிரதான பகுதியாகவிருந்த தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆரம்பகால வரலாறு மங்கையற்கரசியுடன் பிணைந்ததிருந்தது.

பொதுவாக அனைத்து விடுதலை இயக்கத் தலைவர்களும் மங்கையற்கரசியைக் கடந்து சென்றிருக்க முடியாது. தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் நடத்திய அனைத்து ஆர்பாட்டங்களிலும் நேரடியாகக் களத்தில் பங்களித்த மங்கையற்கரசி சிறந்த மேடைப் பேச்சாளரும் பாடகியுமாவர்.

இலங்கை அரச போலிஸ் படைகளின் கண்காணிப்பிற்கும் தொல்லைகளுக்கும் உள்ளான மங்கையற்கரசி தான் சார்ந்த கட்சிக்காக உறுதியுடன் போராடினார்.

V.DharmalingamwithMrs.M.Amirthalingamin1972தமிழ்த் தேசியம் என்பது கொழும்பு சார் தலைமைகளிலிடமிருந்து வடக்கிற்கு மாற்றப்பட்டமைக்கு மங்கையற்கரசியினதும் அவரது கணவர் அமிர்தலிங்கத்தினதும் பங்களிப்பு இன்றியமையாதது.

தமிழ்த் தேசிய அரசியலின் முக்கிய ஆளுமைகளில் மங்கையற்கரசியும் அவரது கணவர் அமிர்தலிங்கமும் வரலாறு முழுவதும் நினைவு கூரப்படுவார்கள்.

வறிய மத்திய தரவர்க்கக் குடும்பமாகவே தனது வாழ் நாள் முழுவதையும் நகர்த்திய மங்கயற்கரசியின் கணவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான திரு.அமிர்தலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செயப்பட்ட பின்னர் இலங்கையை விட்டு வெளியேறி தனது இறுதிக் காலத்தை பிரித்தானியாவில் வாழ்ந்து முடித்தார்.

தமிழ்த் தேசிய அரசியலின் முதன்மையானதும், முதலாமவர்களில் ஒருவருமான மங்கயற்கரசியின் மரணச் செய்தி வரலாற்றின் ஒரு குறித்த கட்டத்தின் நேரடிச் சாட்சியின் இழப்பு!