main

Comments 1

  1. S.G.Ragavan says:

    ஊடகங்களின் தார்மீகமும், மறைக்கப் படாத உண்மைகளும்!
    இனச்சுத்திகரிப்பிற்குத் துணை போவது யார் : மறைக்கப்படும் உண்மைகள்!, எனத் தொடரும் இனியொருவின் கட்டுரையில், இலங்கை அரசு வன்னியில் நடத்திய இனப்படுகொலையின் பின்னர், திட்டமிட்டு சிறுகச் சிறுக நடத்தப்படும் இனப்படுகொலையின் மற்றொரு ஏஜண்டாக வடமாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரது ஆதரவாளர் குழாமும் என இந்த வரலாற்றுத் துரோகம் நிறுவியுள்ளது.என நீங்கள் கூறும் வாதம்! இன்னொரு வாதமாக பொதுப் பரப்பில் சிலாகிக்கப் படும்!
    முதலமைச்சர் விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவந்தவரும், இனப் படுகொலையே இலங்கையில் நடக்கவில்லை எனக் கூறியவரும், பெரும் பணச் செலவில் தனது பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்து அறிவியல் பொக்கிசங்களை வளைத்துப் பிடித்து தேர்தல் வெற்றியை உறுதிப் படுத்தியவர் எனக் கூறப் படுபவருமான சுமந்திரனின் வகிபாவத்தை தங்களின் வாதம் மறைத்துப் பேசுவதாகவும் பொருள் கொள்ளும் படி அமைந்து விடுகிறது அல்லவா?
    சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபடுத்தப் பட்டமை மிகத் திட்டமிடப் பட்ட அழிவு நடவடிக்கை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
    இது பின்வரும் உள்நோக்கங்களை கொண்டிருக்கலாம்!
    1. மக்களை அப்புறப் படுத்தி நிலங்களை அல்லது வளங்களை கொள்ளையடிக்கும் உத்தியின் வெளிப்பாடுகளும் இருக்கலாம்.
    (உலகின் எந்த எந்த இடங்களில் கனிம வளங்கள் உண்டு என்பதை வல்லரசு நாடுகளும் அதன் நிறுவனங்களும் தெரிந்தே வைத்துள்ளன.)
    2. இல்லையேல் இலங்கை பேரினவாத மையங்கள் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரை திட்டமிட்டு நாசமாகும் செயல் பாட்டில் இறங்கி இருக்கலாம்.
    3. இவை ஒரு கூட்டு அழிப்பாகவும் இருக்கலாம்

    இவைகுறித்த இனிஒருவின் அக்கறைகள் கவனிப்புக்கு உரியவை மிகவும் காலத்தின் தேவையான கட்டுரை! மறுப்பதற்கு இல்லை.
    இருப்பினும் இக்கட்டுரையில் ஊடக அறம் மீறப் படுவதாக ஒரு வாசகனாக என்னால் உணர முடிகிறது. ஒரு ஊடகம் தனது ஆளுமை வெற்றியை அடைதல் என்பது சமூகத்தின் ஆளுமை வெற்றியை உறுதி செய்வதில் தான் தங்கியுள்ளது என்பது எனது பணிவான கருத்து. அதனை இனிஒரு செய்தல் வேண்டும் என்பது எனது அவா. வாசகர்களும் அவ்வாறே கருதுவர்.
    அரசியல் சமூக பொறுப்புணர்வு மிக்க மனிதர்களை நாம் வளர்ப்பதில் அக்கறை செலுத்துவதில்லை அல்லது அவர்களை இனங்கண்டு நாம் வளர்ப்பதில்லை! குறிப்பாக, சில இளநிலை அரசியல் சகாக்களை, அவர்களின் சமூக அக்கறைகளை, அவர்களின் சமூகம் சார்ந்த செயல்ப்பாடுகளை எமது ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவதில்லை. அவ்வாறாயின் எவ்வாறு நாம் நல்ல தலைவர்களை உருவாக்க முடியும்?
    தமிழ் தேசிய கூட்டமைப்பு இளநிலை அரசியல் தலைவர்களை உருவாக்க முனையவில்லை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியதை இங்கு கோடி காட்ட விரும்புகிறேன். சமூக அக்கறை உள்ள ஒருவரிடம் இருந்தே இத்தகைய கூற்று வெளிப்பட முடியும் என்பது எனது கருத்தாகும்.
    மக்களின் வாழ்வியலில் அவர்களின் இருப்பில் அக்கறையுடன் செயல்படும், முல்லைத்தீவு மாகாண சபை உறுப்பினர் துவிகரன் மற்றும் அம்பாறை மாகாண சபை உறுப்பினர் கலையரசன் போன்றவர்களின் பண்பியல்பு சமூகத்தை வழி நடத்த தேவையான விடயங்கள் ஆகும். ஆனால் துரதிஸ்டவசமாக இவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை.
    நூறு விகித தூய்மைவாத வரலாற்றுப் பின்னணியின் சொந்தக் கார்கள் தமிழர்கள். குறை காணுவதில் மாத்திரம் நிம்மதி காணும் மனநிலை பிறழ்வுகள் தமிழ் மக்களின் காலதி காலத்தை மாத்திரம் அழிக்கவில்லை நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கேள்விக் குள்ளாக்குகிறது.
    வாசகர்கள் ஆகிய எங்களை விட ஊடகங்கள் மிக நிதானமாக செய்திகளை பதிவு செய்தல் வேண்டும். அவர்கள் தங்கள் பொறுப்பை சரியாகச் செய்தல் என்பதில் சமூகத்தின் வாழ்வும் அல்லது இருத்தலும் தங்கி உள்ளது . தவறுகளை சுட்டிக்காட்டுதல் காலத்தின் தேவை அந்தச் செயல் முறைமையில் முதிர்ச்சி மிக்க சமூகப் பொறுப்புணர்வு வேண்டும். இல்லையேல் அது ஒட்டு மொத்த சமூகத்தின் பொறிமுறைகளை அல்லது இயங்கு திறனை அழித்து விடும் என்பதில் நாம் அக்கறையுடன் இருக்கவேண்டும். சில சந்தர்ப்பங்களில் மிகவும் கீழ் இறங்கி எதிர்வினை ஆற்றவேண்டிய சந்தர்ப்பங்களை சூழல் எனக்கு ஏற்படுத்தி விடுகிறது என்பதை மனவருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன்.
    S.G.Ragavan
    (மண்ணியல் நீர் முகாமைத்துவம். WSP, Vaughan – ON,Canada)

Leave a Reply