பாசிஸ்ட் மோடியை வரவேற்கும் செலவைப் பொறுப்பேற்கும் லைக்கா மொபைல்

lycamobieஇனக்கொலையாளியும் இந்திய இந்து பாசிஸ்டுமான நரேந்திர மோடியை வரவேற்பதற்காக வெம்பிளி அரங்கு 13.11.2015 முழு நாளும் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. விழாவிற்கான ஒழுங்குகளைக் கவனிப்பதற்காக ‘பிரித்தானியா மோடியை வரவேற்கிறது’ என்ற தலையங்கத்தச் சுமந்த 450 பணியாளர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரவு விருந்து, கலை நிகழ்ச்சிகள், உரைகள் போன்றவை பிரித்தானிய பல் தேசிய வியாபார நிறுவனங்களின் அனுசணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நள்ளிரவு வரைக்கும் வெம்பிளி அரங்கை வாடகைக்கு அமர்த்துவதற்கான செலவுத் தொகை மட்டும் 2 மில்லியன் பிரித்தானிய பவுண்ஸ்கள்.

அதற்கான செலவு முழுவதையும் மோடியை இயக்கும் பல்தேசிய நிறுவனங்கள் போட்டி போட்டுப் பொறுப்பெடுத்துக்கொண்டன. செலவுகளைப் பொறுப்பெடுத்துக்கொண்ட நிறுவனங்கள் தொகைக்கு ஏற்ப வெள்ளி, தங்க அனுசரணையாளர்கள் எனத் தரம்பிரிக்கப் பட்டிருந்தனர்.

இதில் பிரதான தகவல் என்னவென்றால், லைக்கா மோபைல் நிறுவனம் முதல் தர தங்க அனுசரணையாளர்கள் என்பதே. இலங்கையின் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவின் பொதுநலவாய நாடுகளில் முதல்தர அனுசரணையாளர்களான லைக்கா நிறுவனத்தினர், இனக்கொலையாளி மோடியின் இன்றைய பண வழங்குனர்கள்

மனிதகுல விரோதி மோடியை வரவேற்கும் களியாட்டங்களுக்கான செலவுகளைப் பொற்ப்பெடுத்துக்கொண்ட ஏனைய நிறுவனங்களில், சண் மார்க், இந்தியன் வங்கி, டாட்டா, ரவலெக்ஸ், பாங்க் ஒப் பரோடா போன்றவை பிரதானமானவை.

இந்து பாசிசமானாலும், சிங்கள பௌத்த பேரினவாதமானாலும், தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகளானாலும் லைக்கா போன்ற பல்தேசிய வியாபாரக் கொள்ளையர்களுக்கு வேறுபாடுகள் கிடையாது.

இன்று மோடி பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்திற்கு வருகை தந்த போது, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இனக்கொலையாளிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். லைக்கா நிறுவனம் உட்பட்ட ஏனைய பல்தேசிய நிறுவனங்கள் இந்த மக்களின் எதிரிகள் என்பதை நிறுவியுள்ளன.

மோடியின் வருகையை எதிர்த்து லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம்: நிர்வாணமான இந்திய ஜனநாயகம்

One thought on “பாசிஸ்ட் மோடியை வரவேற்கும் செலவைப் பொறுப்பேற்கும் லைக்கா மொபைல்”

 1. அடொல்ப் கிட்லா் வேசமிட்டு சினிமாவில் நடிக்கும் ஒரு ஜோ்மனி நடிகா் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த வேடத்திலேயே ஜோ்மனியின் பல இடங்களிற்கும் சென்று வந்தபோது வளியெங்கிலும் மக்கள் ஓடிச்சென்று அவரை கட்டி அணைத்ததை பாா்த்து அவா் தான் மிகவும் ஆச்சாியப்பட்டதாக கூறி இருந்தாா் அதேவேளை இஸ்ரேலிய பிரதமா் கூறினாா் கிட்லா் யூதா்களை அழிக்க விரும்பவில்லை என்றும் பாலஸ்தீன மதகுருவே காரணம் என்று ஆக இறுதியில் கிட்லா் கூட ஒரு மனிதாபிமானமுள்ள மனிதராக விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஆச்சா்யப்படுவதிற்கில்லை.
  மோடி எவ்வளவு கொடுமையானவா் என்பதை நாம் கூறிக்கொள்வதால் எதுவுமே நடக்கப்போவதில்லை இந்த உலகம் வியாபார உலகம் மனிதத்தையிட்டு பேசிக்கொள்ள இங்கு யாருமே இல்லை அத்தோடு நாம் மனிதகுல எதிாிகள் என்று அழைப்பவா்களை நம்மைவிட அதிக அழவிலானவா்கள் தம்மை காக்கின்ற தெய்வங்கள் என்று தொழுகின்றாா்கள். எங்கும் அதிக இலக்கங்கள்தான் முக்கியமாகின்றது.
  ஒலிவா் குரொம்வெல் ஆங்கிலேயா்களுக்கு கீரோ ஆனால் அயா்லாந்து மக்களுக்கு ஒரு கொலைகாரன்.
  நீங்கள் எந்தப்பக்கம்.
  லைக்கா??
  சிாிப்பதா அழுவதா என்று தொியவில்லை.

Comments are closed.