நல்லாட்சியின் முகத்திரையைக் கிழிக்கவல்ல சிறைக்கைதிகளின் போராட்டம் ஆரம்பம்

jail-cellவிசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். நாட்டின் முக்கிய சிறைச்சாலைகளில் இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ச இனக்கொலை அரசில் அங்கம் வகித்த பேரினவாதிகள் ஜனநாயக முகமூடியோடு ‘நல்லாட்சி’ நடத்துவதாகக் கூறும் அரசின் முகமூடி கிழிக்கப்படுவதற்கான முக்கிய போராட்டம் இது.

இதுவரை காலமும் சிறைச்சாலைகளில் தம்மை விசாரணை செய்து விடுதலை செய்யக் கோரி அமைதிப் போராட்டங்கள் நடத்திய கைதிகள் மீது அரசும் அதிகாரிகளும் கோரமான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

தமிழீழம் வாங்கித் தருவதாக ஆரம்பித்து ஜனநாயகம் வாங்கிவிட்டதாக இலங்கை அரசுடன் தேனிலவு நடத்தும் உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்களின் முகத்திரையும் இப் போராட்டத்தின் ஊடாகக் கிழிக்கப்படலாம்.

உலகத் தமிழர் பேரவையின் நேர் காணல் ஒன்று இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாகினியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

பல தசாப்தங்களாக சிறைகளில் வைக்கப்பட்டுள்ளவfர்கள் விடுதலை செய்யப்படுவதும் அவர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டதற்கான நட்ட ஈடு வழங்கப்படுவதும் அவசியமானது.