பிரசல்ஸ் விமான நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல்களின் பின்புலத்தில்…

2011 ஆம் ஆண்டு மொஸ்கோ விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது வெளியான வீடியோ
2011 ஆம் ஆண்டு மொஸ்கோ விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது வெளியான வீடியோ

பெல்ஜியம்ம், பிரசல்ஸ் விமான நிலையத்தில் அப்பாவிப் பயணிகளைப் பலிகொண்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களின் பின்னணியிலிருந்த சந்தேக நபர் கைதாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகரில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து பிரசல்சில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளே காரணம் என்கிறு ஐரோப்பிய ஊடகங்கள் தமது வழமையான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டன.

ஐரோப்பா என்பது வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற பிரதேசமாக மாறி வருகிறது என்றும், வெளி நாட்டவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் மறுபடி கூச்சலிட ஆரம்பித்துவிட்டனர். உலக நாடுகளிலெல்லாம் விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமான நிலையத்தில் கூட பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்ட்டுள்ளது.

பாரிஸ் தாக்குதல்கள் மேற்கு நாடுகளின் உளவு நிறுவனங்களே நடத்தின என்பதற்கான ஆதராங்கள் வெளியாகி சில மாதங்களின் பின்னதாக பெல்ஜியம் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

பெல்ஜியம் தாக்குதல்களில் வெளியிடப்பட்ட போலி வீடியோ
பெல்ஜியம் தாக்குதல்களில் வெளியிடப்பட்ட போலி வீடியோ

மத்திய கிழக்கில் அமெரிக்க அரசின் செல்லப்பிள்ளையான ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளைக் அழிக்கிறோம் என்ற தலையங்கத்தில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் நடத்தும் இராணுவத் தர்ப்பார் மனிதகுலத்தின் ஒரு பகுதியை அழித்துத் துவம்சம் செய்துவருகிறது.
இஸ்லாம் என்ற மத்ததைக் காரணமாக முன்வைத்து உலகம் முழுவதையும் தனது இரணுவக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்த முயலும் மேற்கு ஏகதிபத்தியங்களுக்கு எஞ்சியிருகும் இறுதி ஆயுதம் ஐ.எஸ்.ஐ.எஸ் மட்டுமே.

இந்த நிலையில் பெல்ஜியம் தாக்குதலின் போது முதலில் வெளியான பாதுகாப்பு கமராக்களின் நிழல்படம், லா லிப்ர் (La Libre)என்ற ஊடகத்தில் கிடைக்கப்பெற்றது.

மக்கள் மத்தியில் ‘உண்மை மற்றும் நடு நிலைமை’ என்ற தலையங்கத்தில் பரப்பப்பட்ட இச் செய்தி அப்பட்டமான பொய் என்பதை, மக்கள் மத்தியில் அறியப்படாத ஊடங்கள் வெளியிட்டிருந்தன.

பிரசல்ஸ் பாதுகாப்புக் கமராக்களிலிருந்து பெறப்பட்டதாக லா லிப்ர் வெளியிட்ட நிழல் படம் உண்மையில் மொஸ்கோ விமான நிலையில் 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது எடுக்கப்பட்டிருந்தது.