வெளிநாட்டவர் வெருகை குறைந்தால் பிரித்தானியப் பொருளாதாரம் பாதிப்படையும் : Fitch

recபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் அந்த நாட்டிற்குக் குடிவரும் வெளிநாட்டவர்களின் தொகை குறைவடையும். இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு, முதலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு வேலை தேடி வரும் குடியேறிகள், சட்டரீதியாக ஐரோப்பாவிற்குள் நுளைய முடியாது. இரண்டாவதாக பிரித்தானியாவில் நிறவாதிகளின் தொகை அதிகரிப்பதால் ஏனைய நாடுகளிலிருந்து குடியேறிகளின் தொகை குறைவடையாலாம். தவிர, பிரித்தானிய நாணயத்தின் மதிப்பீடு குறைவடைவதால் வருகை குறைவடையும். இந்த நிலையில் வெளிநாட்டுக் குடியேறிகளின் தொகை குறைவடைவதால் பிரித்தானியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என Fitch என்ற ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

உலக நாடுகளின் கடன் மதிப்பீட்டுப் பெறுமானத்தை நிர்ணையம் செய்யும் நிறுவனங்களில் Fitch உம் ஒன்று.
இந்த நிறுவனம் பிரித்தானியாவின் கடன் மதிப்பீட்டை AA+ இலிருந்து AA ஆகக் குறைத்துள்ளது. அதற்கான காரணங்களில் ஒன்றாக வெளிநாட்டவர்களின் வருகை குறைவடையும் என்பதை அறிவித்துள்ளது.

தமிழர்கள் உட்பட பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்தவர்களில் பலர் அங்கு புதிதாக வரும் வெளி நாட்டவர்களின் தொகையை குறைப்போம் என்ற அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தை முன்வைத்தே வாக்குச் சாவடிகளுக்குச் சென்றனர்.
இப்போது வெளி நாட்டவர்கள் வருகை குறைந்தால் பிரித்தானியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் Fitch நிறுவனம் தெரிவித்துள்ளது.

  பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் அந்த நாட்டிற்குக் குடிவரும் வெளிநாட்டவர்களின் தொகை குறைவடையும். இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு, முதலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு வேலை தேடி வரும் குடியேறிகள், சட்டரீதியாக ஐரோப்பாவிற்குள் நுளைய முடியாது. இரண்டாவதாக பிரித்தானியாவில் நிறவாதிகளின் தொகை அதிகரிப்பதால் ஏனைய நாடுகளிலிருந்து குடியேறிகளின் தொகை குறைவடையாலாம். தவிர, பிரித்தானிய நாணயத்தின் மதிப்பீடு குறைவடைவதால் வருகை குறைவடையும். இந்த நிலையில் வெளிநாட்டுக் குடியேறிகளின் தொகை குறைவடைவதால் பிரித்தானியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என Fitch என்ற ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

உலக நாடுகளின் கடன் மதிப்பீட்டுப் பெறுமானத்தை நிர்ணையம் செய்யும் நிறுவனங்களில் Fitch உம் ஒன்று.
இந்த நிறுவனம் பிரித்தானியாவின் கடன் மதிப்பீட்டை AA+ இலிருந்து AA ஆகக் குறைத்துள்ளது. அதற்கான காரணங்களில் ஒன்றாக வெளிநாட்டவர்களின் வருகை குறைவடையும் என்பதை அறிவித்துள்ளது.
தமிழர்கள் உட்பட பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்தவர்களில் பலர் அங்கு புதிதாக வரும் வெளி நாட்டவர்களின் தொகையை குறைப்போம் என்ற அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தை முன்வைத்தே வாக்குச் சாவடிகளுக்குச் சென்றனர்.
இப்போது வெளி நாட்டவர்கள் வருகை குறைந்தால் பிரித்தானியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் Fitch நிறுவனம் தெரிவித்துள்ளது.

Fitch இன் ஆய்வுகளின் அடிப்படையில் வெளிநாட்டு உழைப்போரின் தொகை மூன்றில் இரண்டு வீதத்தால் குறைவடைந்தால் 2065 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பொருளாதாரம் 9 வீதத்தால் வீழ்ச்சியடையும் என்று குறிப்பிடுகிறது.

பிரித்தானிய அரச புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து செல்லும் தொழிலாளர்கள் நிகராக 3 பில்லியன் பணத்தை பிரித்தானிய அரசிற்கு இலாபமாக வழங்குகின்றன.

பிரித்தானியாவில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. நிறவாதக் கட்சிகள் மட்டுமே வெளிநாட்டவர் வருகையால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என பிரச்சாரம் மேற்கொண்டுவந்தன. இதனை எதிர்கொண்டு மக்களுக்கு உண்மையைக் கூட மக்கள் சார்ந்த மாற்றுத் தலைமகள் இல்லை என்பது துயரத்திற்குரியது. இன் ஆய்வுகளின் அடிப்படையில் வெளிநாட்டு உழைப்போரின் தொகை மூன்றில் இரண்டு வீதத்தால் குறைவடைந்தால் 2065 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பொருளாதாரம் 9 வீதத்தால் வீழ்ச்சியடையும் என்று குறிப்பிடுகிறது.

பிரித்தானிய அரச புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து செல்லும் தொழிலாளர்கள் நிகராக 3 பில்லியன் பணத்தை பிரித்தானிய அரசிற்கு இலாபமாக வழங்குகின்றன.
பிரித்தானியாவில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. நிறவாதக் கட்சிகள் மட்டுமே வெளிநாட்டவர் வருகையால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என பிரச்சாரம் மேற்கொண்டுவந்தன. இதனை எதிர்கொண்டு மக்களுக்கு உண்மையைக் கூட மக்கள் சார்ந்த மாற்றுத் தலைமகள் இல்லை என்பது துயரத்திற்குரியது.