புலம்பெயர் ஆபத்திற்கு எதிராக புதிய மாற்றுத் தேவை!

donotenterஇன்று இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வாதரப் பிரச்சனைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்பாகப் பேசுவதற்கு அரசியல் கட்சி அல்லது இயக்கம் ஒன்று இல்லாத அவலம் தோன்றியுள்ளது. இந்த நிலைமைக்கு புலம்பெயர் ஊடகங்கள், குழுக்கள் பிரதான பாத்திரத்தை வகித்திருக்கின்றன. பொதுவாக தமிழ் இணைய ஊடகங்கள் புலம்பெயர் நாடுகளை மையப்படுத்தியே இயங்குகின்றன. பொதுவாக அவை அனைத்துமே இலாப நோக்கை முன்வைத்து இயங்குகின்றன. மக்கள் சார்ந்த ஊடகங்களுக்கான வெளி இன்னும் வெற்றிடமாகவே காணப்படுகின்றது.

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்ப் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் பணத்திலும், தன்னார்வ நிறுவனங்களின் நிதி வழங்கலிலும், விளம்பரங்களின் தயவிலும் வியாபாரம் நடத்தும் இந்த ஊடகங்கள் புலம்பெயர் நாடுகளிலுள்ள பிழைப்புவாதிகளின் நலனை உறுதிப்படுத்த வேண்டிய தேவையை முன்வைத்துச் செயற்படுகின்றன.

தேசியத்தின் பெயரால் அப்பாவி மக்களின் வாழ்க்கையைச் சுரண்டிக் கொழுத்த இப் பிழைப்புவாதிகள், ஊடகங்களைக் கட்டுப்படுத்திவருகின்றனர். இலங்கைப் பேரினவாத அரசால் சூறையாடப்பட்ட மக்கள் கூட்டத்தின் எஞ்சிய பகுதிகளைக் கூடக் கொள்ளையடிக்கத் தயாராக தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் இப் பிழைப்புவாதிகள், மக்களின் கண்ணீரையும், இரத்தைத்தையும் மூலதனமாக்கிக் கொள்கின்றனர். நாளை மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிபடையப் போகிறது எப்ன்பது குறித்தெல்லாம் அவர்கள் துயர்க்கொள்வதில்லை. பணம்.. பணம்.. பணம்.. என்பது மட்டுமே அவர்களின் ஒரே நோக்கம்.

இவர்கள் வடக்குக் கிழக்கில் தமது பினாமிகளைத் தொடர்ச்சியாகத் தேடினார்கள். இறுதியில் அவர்கள் கண்டுபிடித்த மூன்று முத்துக்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார், மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர்.

வன்னிப் போருக்குப் பின்னர் நடைபெற்ற பேரழிப்பான சுன்னாகம் நீர்ப் பிரச்சனை யாழ்ப்பாணக் குடா நாடு முழுவதையும் அழிக்கும் நிலை தோன்றியுள்ள போதும், அழிப்பத் துரிதப்படுத்திய விக்னேஸ்வரன் தன்னைப் பொருத்தமான பிழைப்புவாதியாக புலம்பெயர் எஜமானர்களுக்கு அடையாளம் காட்டினார்.

நடந்த முடிந்த கொலைகளின் குற்றவாளிகளைத் தண்டிக்கோரும் விக்னேஸ்வரன் குழு நடந்துகொண்டிருக்கும் அழிப்பின் பங்காளி.

இவற்றை மீறி, விக்னேஸ்வரனுக்கு புலம்பெயர் ஊடகங்கள் ஒளிவட்டம் கட்டுவதன் நோக்கம் என்ன?
சுரேஷ் பிரேமச்சந்திரனின் மண்டையன் குழு பற்றித் தெரிந்துகொண்டும் அவரை தேசியவாதியாக்கி மக்களுக்கு உண்மையை மறைக்கும் ஊடகங்களின் நோக்கம் என்ன?

தமிழின அழிப்பிற்குத் துணை போகும் இவர்களுக்கு எதிராக மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் இயக்கங்கள் சொந்தப் பலத்தில் தோன்றவேண்டும். அவ்வாறான அமைப்பு தனது அரசியலைத் தானே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். தேவையானால் புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் பற்றுள்ளவர்கள் அதற்குப் பக்கபலமாக அமையாலம்.

One thought on “புலம்பெயர் ஆபத்திற்கு எதிராக புதிய மாற்றுத் தேவை!”

  1. விக்னேஸ்வரனுக்கு யார் யார் ஒளிவட்டம் கட்டுகிறார்கள் என்பது தெரியவில்லை ஆனால் இனியொருக்கு ஏன் இவ்வளவு பதட்டம்? ஏன் இந்தியாவுக்குக் கூடத்தான் பதட்டமாக இருக்கிறது, தமிழன் இச்சிறு தீவில் ஒரு கூட்டமாக சேர முயன்றால் பலருக்கு பலவிதமான பதட்டம் உருவாகிறது அதோடு அப்படியான முனைப்புகளை மழுங்கடிக்க கங்கணம் கட்டி நிக்கிறார்கள்.

    இனியொரு கூட தூய(ர) நோக்கோடு மக்கள் இயக்கங்களை கட்டி எழுப்பலாம் அல்லது பின்னுக்கியாக கூட இருக்கலாம் இல்லை இனங்காட்டலாம் அதைவிடுத்து விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக்கொண்டு இருப்பது எந்தவகையில் ஆக்கபூர்வமானது? விமர்சனங்களை தனிமனித/ குழு நிலை வாத தாக்குதல்களாக ஒரு வாசகன் உணருவான் ஆகில் அது அதன் பெறுமதி இழந்து வெறும் சேறடிப்பாகவே நோக்கப்படும்.

    இச்சிறுதீவில் தமிழர்களின் குடி மூழ்கிப்போய் பலதசாப்தங்கள் ஆகிறது இது ஒண்றும் நேற்று வந்த விக்னேஸ்வரனால் ஆனதில்லை.. சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான பிரச்சினையில் முழு பழியையும் முதலமைச்சர் மீதே போட்டுவிடுவோம் ஏனெனில் அவர்(கள்) ஒரு நிபுணர் குழுவை நியமித்து இவ் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்தவர்கள் என்ற ரீதியில், நிற்க்க இவ் பிரச்சனை தொடர்பில் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தார்மீக கடமை எதுவும் இல்லையா? அல்லது இது மாகாண அரசுடன் சம்பத்தப்பட்ட ஒரு விடயம் மாத்திரமா? மத்திய அரசுக்கு இது தொடர்பில் எதுவித தொடர்பும் இல்லையா? எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஐயாக்கும் எதுவித கருசனையும் இல்லையா??

    விக்னேஸ்வரன் இதில் களவு செய்கிறார் என்றால் மற்றவர்கள் ஏன் மவுனமாக இருக்கிறார்கள் அவர்களும் கூட்டு களவாணிகளா??

Comments are closed.