ரோஷித ராஜபக்சவின் கொழும்புப் பல்கலைக்கழக போலிப் பக்கம் நீக்கப்பட்டது

roshithaமுன்னை நாள் ஜனாதிபதியும் மேற்கு மற்றும் இந்திய அரசுகளுடன் இணைந்து இனப்படுகொலையை நடத்தியவருமான மகிந்த ரஜபக்சவின் இளைய மகன் ரோஷித ராஜபக்ச கொழும்புப் பல்கலைக் கழகத்திலும் பிரித்தானியப் பல்கலைக்கழகத்திலும் பட்டப்படிப்புக் கற்கைகளை மேற்கொண்டதாக கொழும்புப் பல்கலைக் கழக விஞ்ஞானபீட பக்கத்தில் பதியப்பட்டிருந்தது. கடந்தவாரம் வரை நீக்கப்படாமலிருந்த அந்தப் பக்கம் இப்பொழுது நீக்கப்பட்ட்டுள்ளது.

http://science.cmb.ac.lk/contact-us/contacts/?contact_id=224

 புலம்பெயர் நாடுகளில் பிள்ளையான் ஆதரவாளர்களும் ஆலோசகர் குழுக்களும் இனியொருவை மாபியா ஊடகம் எனவும் மிரட்டியும் அவர்களது இணையங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளன.  ராஜபக்ச மீண்டும் ஆட்சியமைத்தால் இவர்களுக்கு கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டம் வழங்கப்படலாம்.

மறுபுறத்தில், இலங்கை அரச  ‘நல்லாட்சியின்’ சில்லரைச் சீர்திருந்தங்களால் மகிழ்ச்சியடைந்துள்ள மத்தியதர வர்க்கம் அதன் ஆபத்தான பக்கங்களைக் கண்டுகொள்ளவில்லை. மேற்கு அரசுகளின் அடியாள் அரசு ஒன்று அதன் கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.

28.10.2015 அன்று பிரித்தானியாவில் நடைபெற்ற நூல் வெளியீடு விழாவில் சிவில் யுத்தத்தை எப்படி முடிவிற்குக் கொண்டுவந்தோம் என எரிக் சொல்கையிம் பிரசங்கம் செய்ய பல புலி ஆதரவாளர்கள் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தனர். புலிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாகவே யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர முடியும் என நோர்வே வெளிநாட்டமைச்சர் உரையாற்றும் போது புலிகள் சார்பில் சமாதானப் பேச்சுக்களில் கலந்துகொண்ட சுதா நடராஜா மேடையில் அமர்ந்திருந்தார்.

இலங்கை அரசு ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரை போர்க்குற்றங்களுக்காக வேண்டுமானால் தண்டிக்கலாம். ஆனால் எரிக் சொல்கையிம் உட்பட்ட மனிதப் படுகொலைகளுக்குத் துணைசென்ற எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்.