முதன்முறையாக இந்தியாவைப் புரட்டிப் போட்டது மக்கள் சக்தி; பெப்சி, கொக்கக்கோலா விற்பனை மாபெரும் சரிவைச் சந்தித்துள்ளன!

இந்தியாவில் கோலோச்சிக்கொண்டிருந்த பெரு வர்த்தக நிறுவனங்களான பெப்சி மற்றும் கொக்கக்கோலா குளிர்பானங்கள் மக்களின் பலத்த எதிர்ப்பினால் விற்பiனைச் சரிவைச் சந்தித்துள்ளன.

இதற்கான எதிர்ப்பு 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடைவிதிக்கவேண்டுமெனப் போராடிய பீட்டா அமைப்புக்கெதிராக தமிழக இளைஞர்கள், பெண்கள் என தமிழகமே திரண்டு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

ஜல்லிக்கட்டினால் பன்னாட்டு நிறுவனங்கள் மீது மக்களுக்கு எழுந்த கோபத்தினால் ஜல்லிக்கட்டு போராட்டம் நிறைவுற்றதும், தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களான பெப்சி, கொக்கக்கோலா போன்ற குளிர்பானங்களை அருந்துவதில்லையெனவும், அதற்குப் பதிலாக உள்நாட்டில் மக்களால் தயாரிக்கப்படும் பழங்களில் தயாரிக்கப்படும் பானங்களையே அருந்துவதாகவும் மக்கள் முடிவெடுத்தனர்.

மக்களின் இம்முடிவை அடுத்து தமிழ் நாட்டு வணிகர் சங்கங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களான பெப்சி, கொக்கக்கோலா குளிர்பானங்களை தாம் விற்பனை செய்யப்போவதில்லையெனவும் அறிவித்தனர்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கெதிராக எழுந்த மக்களின் கோப அலையானது, மெல்ல மெல்ல இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது. இதனையடுத்து பெப்சி, கொக்கக்கோலா நிறுவனங்களின் விற்பனையானது 5.3 வீதமாகச் சரியத் தொடங்கியுள்ளது.

அத்துடன், கர்நாடகாவில் மக்களின் எதிர்ப்புக் காரணமாக கொக்கக்கோலா நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அவ்வாறே ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாவட்டங்களிலும் மூடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கெதிராக எழுந்த மக்களின் கோபமானது, தற்போது அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்குத் தூண்டியுள்ளது

முருகன் தமிழ்க் கடவுளா? :வி.இ.குகநாதன்

முருகன் தமிழ்க்கடவுள் என்பது காலகாலமாக இருந்துவரும் ஒரு கருத்தாயினும், அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்புடைய உரையாடல்களால் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளது. அண்மையில் ஒரு தமிழ்த்தொலைக்காட்சியிலேயே (Vijay tv) “தமிழ்க்கடவுள் முருகன்” என்ற தொடர் ஒளிபரப்பப்படுமளவிற்கு இக் கருத்து பரவலடைந்துள்ளது. உண்மையில் முருகன் தமிழ்க்கடவுளா? என்ற கேள்விக்குப் பதிலளிப்பதே இக் கட்டுரையின் நோக்கம். இதற்கு நேரடியாக பதிலளிப்பதற்கு முன் சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருப்பதால், இதற்கான பதிலினை கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.

பழங்காலத் தமிழர் வழிபாடுகளில் முருகன்:

முதலில் பழங்காலத்தில் தமிழர்கள் முருகனை வழிபட்டார்களா எனப் பார்ப்போம். பழைய வரலாறுகளிற்குச் சான்றாகப் பொதுவாக தொல்பொருளாய்வுச் சான்றுகளையும், பழைய இலக்கியங்களையும் கொள்வர். இவ்வாறான தொல்பொருள் சான்றாக நடுகல் வழிபாட்டினைக் காட்டி நிற்கும் நடுகற்கள் காணப்படுகின்றன. தமிழரும், அக்காலத்தில் வாழ்ந்த பிற இனத்தினரைப் போன்று, முதலில் மூதாதையோரை வழிபட்டு வந்தனர். இம் மூதாதையர் வழிபாட்டினை நினைவூட்டும் ஈம அடக்கங்கள், ஈமப்படையல்களின் எச்சங்கள் என்பன தமிழகத்தில் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் கந்தரோடை போன்ற இடங்களிலும் அகழ்வராட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன (1). இத்தகைய மூதாதையர் வழிபாட்டு முறையின் ஒரு பகுதியாக மரித்தோர் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன. அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இதே முறையில் போரில் வீரச்சாவு அடைந்தவர்களிற்கு நடுகற்கள் நடப்பட்டன. மூதாதையர் நடுகல் வழிபாட்டிலிருந்தே வீரர்களிற்கான நடுகல் வணக்கமுறை தோன்றியதாக கலாநிதி கைலாசபதி நிறுவுவார்(2). பழங்காலத்தில் நடுகல் வணக்கம் தவிர வேறு கடவுள் வழிபாடு இல்லை என்பதனை மாங்குடி கிழார் “அடலருந் துப்பின்…” என ஆரம்பிக்கும் பாடலில்
“கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.”

என புறநானூறில் பாடுவார் (3). இத்தகைய முன்னோர் மற்றும் வீரர்களின் நடுகல் வழிபாடும் ஒரு வகை முருக வழிபாடாகக் கருதப்பட்டது. இத்தகைய நடுகல்லான கல் தூண் என்பதையே சுருக்கி கந்து எனக்கூறிப் பின்னர் கந்தன் (ஸ்கந்தா Skanda என்பது வேறு) என அழைக்கப்பட்டது எனவும் கூறுவர். மேற்கூறியவாறு இத்தகைய நடுகல் வழிபாடு ஒரு வகைப் பழங்காலத் தமிழரின் முருக வழிபாடாகும்.

இதே போன்று குறிஞ்சி நிலத் தலைவனாகவும் முருக வழிபாடு காணப்பட்டது. இதனையே தொல்காப்பியம் “சேயோன் மேய மைவரை உலகமும்..” எனப் பாடும். அதாவது மலைசார்ந்த பகுதிகளில் தமிழர்கள்/ தமிழர்களின் முன்னோர் வாழ்ந்தபோது, அப் பகுதியின் தலைவனாக சேயோன்/ முருகன் கருதப்பட்டார். இதே போன்று இயற்கை வழிபாடான சூரிய வழிபாட்டின் மருவிய வடிவமும் மற்றொரு வகை முருக வழிபாடாயிற்று என சாரங்கபாணி எனும் அறிஞர் பரிபாடற் திறன் எனும் நூலில் “மாக்கடலினின்று நிவர்ந்தெழுந்த … செவ்வேள்” எனக் குறிப்பிட அதனை மறைமலை அடிகளாரும் பின்னர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

முருகனின் மற்றொரு வடிவம் வேலினை அடிப்படையாகக்கொண்ட வேலன் ஆகும். பழங்கால முன்னோர் வேட்டையினையும், உணவு சேகரித்தலையும் அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்த காலத்தில் தோன்றியதே இந்த வேலன் எனும் வடிவமாகும். வேட்டையினை முடித்து வந்தவர்கள் மீண்டுமொரு முறை வேட்டையில் நடந்தவற்றை செய்து பார்த்தனர். இதன்போது நாடகம், கூத்து என்பன தோன்றியதாகவும், இதன்போது வேலை ஏந்துபவன் வேலனாகக் கருதப்பட்டான். இவ்வாறான காலப்பகுதியில் பூசாரி வேல் ஏந்தி உருக்கொண்டதாக எண்ணிக்கொண்டு ஆடும் ஆட்டமே வெறியாட்டு என கலாநிதி க. கைலாசபதி கூறுகிறார்(4). இத்தகைய வெறியாட்டத்தின்போது வேலை ஏந்துபவரும் வேலனாகவே கருதப்பட்டார்.

மேற்குறித்த பலவகையான பழந்தமிழ் வழிபாடுமுறைகள் நமது முன்னோர்களிடம் காணப்பட்டன என்பது எவளவு உண்மையோ அதேயளவிற்கு உண்மை யாதெனில் இன்றைய நிலையிலுள்ள வழிபாடுமுறைகள் எதுவும் அன்றைய முறைகளுடன் அறவே தொடர்பற்றன என்பதாகும். இதனை விளங்கிக்கொள்வதற்கு நாம் முருகன் சுப்பிரமணிய ஸ்வாமி/ ஸ்கந்த(Skanda) ஆகிய கதையினை அறிந்துகொள்ளவேண்டும்.

ஆரியப் படையெடுப்பால் சுப்பிரமணிய ஸ்வாமியாகிய முருகன்:

இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளிற்கு முன்னர் (பொதுயுகத்திற்கு முந்திய 3000 ஆண்டளவில்/ BCE 3000) இடம்பெற்ற ஆரியப்படையெடுப் பானது இந்தியப் பழங்குடி மக்களிற்கு மட்டுமல்லாமல், அவர்களின் இயறகையோடு ஒன்றிய வழிபாட்டுமுறைகளிற்கும் இருண்ட காலத்தினைக் கொண்டுவந்தது. ஆரியப் பார்ப்பனர்கள் முதலில் அக்கினி,இந்திரன்,சோமன் போன்ற கடவுள்களிற்கே முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டதுடன், அவற்றையே ஏனையோரிடமும் பரப்பவும் முனைந்தனர். இதனை நாம் ரிக்,யசூர் ஆகிய வேதங்களில் அக் கடவுள்களிற்கு கொடுத்த முக்கியத்துவத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். இன்று இந்துக்களிடையே பரவலடைந்துள்ள எந்தவொரு கடவுளும் அன்று வேதங்களில் முக்கியம் பெற்றிருக்கவில்லை.

இதற்கு சுப்பிரமணிய ஸ்வாமியாகிய ஸ்கந்தாவும் விதிவிலக்கல்ல. ஸ்கந்தா (Skanda)என்பவர் குமார (Kumara)என்ற பெயருடன் அக்னியுடன் தொடர்புள்ளவராக ரிக் வேதத்தில் முதன்முதலில் காணப்படுகிறார்(5). வேதத்தின் மற்றொரு பகுதியில் ஸ்கந்தா ருத்திரா- Rudra (பிற்காலத்தில் சிவனாகப்போகும் ருத்திரா) உடன் தொடர்புடையவராக, சிறு குற்றவாளிகளின் (The lord of petty criminals) அதிபதியாகக் காணப்படுகிறார்(6). இவ்வாறு வேதங்களில் முக்கியத்துவமிளந்து சிறு சிறு இடங்களில் காணப்பட்ட ருத்திரா, ஸ்கந்தா போன்ற கடவுள்கள் திடீரென முக்கியத்துவம் பெற்று விஸ்வரூபம் எடுப்பதற்கு ஒரு வரலாற்றுப் பின்னனி காரணமாகவுள்ளது. பார்ப்பனியப் பிற்போக்குக் கருத்தியலிற்கு எதிராக பவுத்தப்புரட்சி ஒன்று பொ.முந்திய ஆறாம் நூற்றாண்டளவில் (BCE 6th century) ஏற்பட்டு இந்தியா முழுவதும் பரவலடைந்தது. இந்தப் பவுத்தப் புரட்சியினை எதிர்கொண்டு தமது பார்ப்பனிய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு பார்ப்பனர்கள் தமது அக்கினிக்குப் பலியிட்டு வழிபடும் முறையினைக் கைவிட்டு ஆதிக்குடிகளின் வழிபாட்டுத் தெய்வங்களைத் தமது வேத காலக் கடவுள்களுடன் இணைத்து பல புராணக்கதைகளை உருவாக்கினார்கள். இந்தப் பின்புலத்திலேயே ஏனைய தொல்குடி மக்களின் வழிபாட்டுமுறைகள், வேதத்தில் வரும் ஸ்கந்தா,குமாரா போன்றவர்கள், உபநிடதங்களில் வந்த சனத்குமார் (Sanath Kumar)என்பவற்றுடன் தமிழர்களிடையே இருந்த பல்வேறுவகைப்பட்ட முருக வழிபாட்டுமுறைகளையும் இணைத்து சுப்பிரமணிய ஸ்வாமி உருவாக்கப்பட்டார். இதுவே சுப்பிரமணிய ஸ்வாமி தோன்றிய வரலாறாகும்(7). இவ்வாறான பல்வேறு கடவுளின் தொகுப்பாக அமைந்ததாலேயே வேறு எந்தக் கடவுள்களிற்குமில்லாதளவில் சுப்பிரமணிய ஸ்வாமிக்கு அதிகளவில் பெயர்கள் இருப்பதும், அவரின் பிறப்பு, வளர்ப்புடன் தொடர்புடையதாகப் பல பெற்றோர்கள் (ருத்திரா, பார்வதி, அக்கினி, கார்த்திகைப் பெண்கள்…)காணப்படு வதும் அமைந்துள்ளது.

இவ்வாறு முற்றிலும் பார்ப்பன மயப்படுத்தப்பட்ட ஸ்கந்தா என்ற போர்க் கடவுள் குப்தர் காலத்தில் இந்தியா முழுவதும் பரவலடைந்திருந்த போதும், குப்த பேரரசின் வீழ்ச்சியுடன் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வீழ்ச்சியடைய, தமிழ் நாட்டில் மட்டுமே பழந்தமிழர்களின் பண்பாட்டுடன் இணைக்கப்பட்டிருந்த காரணத்தால் முக்கியத்துவமிளக்காமலிருந்தது. இந்தப் போர்க்கடவுளின் ஒன்றிணைப்பு மூலமான தோற்றத்தினை நியாயப்படுத்தும் நோக்கில் ஸ்கந்த புராண (Skanda Purana) உருவாக்கப்பட்டது. இதனையடிப்படையாகக் கொண்டு இப்புராணக்கதையினை தமிழர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக கந்தபுராணம் எனும் புராணம் கச்சியப்ப சிவாச்சாரியாரால் தமிழில் இயற்றப்பட்டது.

கந்த புராணத்தின் முரண்கள்:

கந்த புராணத்தை எவளவோ சிரத்தை எடுத்து இயற்றியபோதும் அதில் பல தர்க்கரீதியான முரண்கள் காணப்படுகின்றன. குறிப்பாக சுப்பிரமணிய ஸ்வாமி சூரனை அழித்து அவனை மயில் வாகனமாகவும் சேவற்கொடியாகவும் ஆக்கியதாக கந்தபுராணம் பாடும். அவ்வாறாயின் அதற்கு முன்னரே சிறுவனாகவிருக்கும்போதே பிள்ளையாருடன் மாம்பழத்திற்கு சண்டையிட்டு மயிலேறி உலகம் சுற்றியது எவ்வாறு என்ற கேள்வி எழும். தூங்கும் குழந்தைகள் உட்பட மொத்த ஊரையே கடலுள் மூழ்கடித்தவர் ( “முஞ்சு தானை களார்ப்பொடு குழீ …” பாடல்- படத்தில் காண்க) எவ்வாறு கருணையே உருவான கடவுளாக முடியும். இவ்வாறான முரண்கள் கந்த புராணத்தில் காணப்படுவதாலேயே தமிழக கிராமப்புறங்களில் ஒருவர் நம்ப முடியாத பொய்களை/ புழுகுகளைக் கூறும்போது, “இந்தப் புழுகு கந்த புராணத்திலும் இல்லாத புழுகு” எனக் கூறுவார்கள். (இதனை சில பக்தர்கள் “கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்த புராணத்திலும் இல்லை” என மாற்றிக்கூறிவருகின்ற போதிலும் முன்னையதே நாட்டுப்புற வழக்கிலுள்ளது).

முருக வழிபாட்டின் இன்றைய நிலை:

பழந் தமிழர்களிடையே காணப்பட்ட இயற்கையோடு ஒன்றியும், அவர்களுடைய வாழ்வியலுடனும் கலந்திருந்த முருக வழிபாட்டின் பல்வேறு வடிவங்களும் இன்று பார்ப்பனப் புராணக்கதைகளிற்குட்பட்டு வேறு ஒரு வடிவிலேயே உள்ளது. இன்னும் கடுமையாகப் பார்த்தால் தமிழர்களிற்கு எதிரான நிலையினை இன்றைய முருகவழிபாடு எடுத்துள்ளதனை சூரன்போர், சமசுகிரதத்திலேயே முருகனிற்கு பூசை என்ற இடங்களில் காணக்கூடியதாகவுள்ளது. தமிழர்களுடைய கோயில்களில் சமசுகிரதத்தில் பூசை நடைபெறும்போதே” தமிழ் நீசபாசை” என்பதனை ஏற்றுக்கொள்வதாகவே பொருளாகிறது. இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் “தமிழ்க்கடவுள் முருகன்” எனும் தொடரும் முற்றுமுழுதாக ஸ்கந்த புராணக்கதையினை

அடிப்படையாகக்கொண்டுள்ளதே தவிர மாறாக பழந்தமிழர் வாழ்வியலையோ அல்லது அவர்களின் வழிபாட்டையோ சிறிதும் பிரதிபலிக்கவில்லை.

முருகன் தமிழ்க் கடவுளா? கேள்விக்கான பதில்:

இப்போது கேள்விக்கான பதில் காண்பதற்கான நேரம் வந்துவிட்டது. இங்கு பதில் காண்பதற்கு முன் கேள்வியினை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. முருகன் பற்றித் தேவையானளவு மேலே ஏற்கனவே பார்த்துள்ளோம். அடுத்த சொல்லான தமிழ் என்பது “அ” முதலிய 247 எழுத்துக்களையுடைய நமது மொழியைக் (பழைய வட்டெழுத்துக்கள், தமிழி, பேச்சுமொழி உள்ளடங்கலாக) குறிக்கும். இறுதிச் சொல்லான கடவுள் என்பது சற்றுச் சிக்கலானது. அகராதியின் படி கடவுள்(God) என்பவர் அண்டம் (Universe) முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர்(Supreme power) என்றும்,எல்லாச் செயல்களிற்கும் காரணமானவர் எனவும் வரைவிலக்கணப்படுத்தப்படுகிறார் (Oxford dictionary). இப்போது பதிலிற்கு வந்தால் முருகன் தமிழ்க்கடவுளா என்பதற்கு முன் தமிழிற் கு எனத் தனியாகக் கடவுள் இருக்கலாமா எனப் பார்த்தால் பதில் கடவுளின் வரைவிலக்கணப்படி இல்லை என்பதேயாகும். விளங்கக் கூறின், ஒரு வாதத்திற்கு கடவுள் இருக்கிறார் எனக்கொண்டாலும் அவர் இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் பொதுவானவாராக இருப்பாரேயன்றி மாறாக தமிழர்களிற்கு முருகன், சமசுகிரத ஆரியரிற்கு இராமர், ஐரோப்பியரிற்கு இயேசு, அராபியரிறகு அல்லா என இருக்கமுடியாது.
இதுவரைப் பார்த்தவற்றைச் சுருக்கமாகக் கூறினால், முருகனின் (கொற்றவை போன்றவையும்) பல்வேறு நிலைகளிலான வழிபாட்டு முறைகள் எமது முன்னோர்களிடம்/பழந் தமிழர்களிடம் காணப்பட்டன. அவையெல்லாம் இன்றைய நிலையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு உட்பட்டு முற்றுமுழுதாக உரு மாறிவிட்டன. அவற்றினை மீட்டெடுக்காமல் வெறுமனே முருகன் தமிழ்க்கடவுள் எனக்கூறுவது பார்ப்பனியத்திற்கு முண்டுகொடுக்கும் வேலையேயன்றி வேறில்லை. அவ்வாறு மீட்டாலும், அதற்குப் பின்னர்கூட , இன்றைய அறிவியல்நிலையில் “எல்லாம் வல்ல கடவுள்” என்ற வரைவிலக்கணத்திற்குள் அடைக்கத்தேவையில்லை, மாறாக பழந்தமிழ்க் கலை-பண்பாட்டு வரலாற்று அடையாளங்களாகக்கொள்ளலாம்.

துணை நின்றவை
(1)= பொ.இரகுபதி- பெருங்கற்கால யாழ்ப்பாணம்(பக்கம்6-7)
(2)= க.கைலாசபதி- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். (பக்கம்37)
(3)= புறநானூறு- பாடல் 335
(4)= க.கைலாசபதி- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். (பக்கம்172)
(5)= Pandit Pundalik Madhav (1967), translation of The Rigveda Samhita Vol 1, (p 167)
(6)= Narayan Aiyangar (1987), Kumara in Essays on Indo-Aryan Mythology Vol 1 (p 29)
(7)= Nath Vijay (2001), Acculturation Process Mythicised in Puranas and Acculturation: A Historico-Anthropological Perspective, (pp 98-99)

மாவீரர் தினம் – அழித்தவர்களே நடத்தும் அவமானகரமான களியாட்டம் : வியாசன்

maveerarஈழத்தில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் எவ்வளவு தியாகங்களையும் அர்ப்பணங்களையும் எமக்கு முன்னால் விட்டுச் சென்றிருக்கிறதோ அதே அளவிற்கு தனிநபர் பயங்கரவாதம், உட் கட்சிப் படுகொலைகள், அதிகாரவர்க்க அரசியல் என்ற அனைத்தையுமே தன்னகத்தே கொண்டிருந்தது. அன்னிய அரசுகள் போராட்டத்தின் எச்ச சொச்சங்களே தெரியாத அளவிற்கு அழித்துத் துடைத்தெறிவதற்கான அடிப்படைகளே அவற்றிலிருந்து தான் ஆரம்பமானது.

அவை அனைத்துமே போராட்டத்தின் நியாயங்களாக புதிய சந்ததிக்குக் கூறப்பட்டது. முழுமையான இருளுக்குள் மூழ்கடிக்கப்பட்ட புதிய தலைமுறைக்கு உண்மையை அறிந்துகொள்ளும் உரிமையை இனவாதிகளும், ஏகாதிபத்திய அடியாட்களும், குற்றவாளிகளும் மறுத்தனர். வர்த்தகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஊடகங்கள் அவர்களுக்குத் துணை சென்றன.

தோற்றுப் போனதற்கான காரணங்களைப் புதிய தலைமுறைக்கும் உலகத்திற்கும் எடுத்துச் செல்வதற்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போராட்டத்தின் தோல்விக்கு நாம் காரணமல்ல சர்வதேசம் உள்ளே புகுந்து அழித்துவிட்டது என்று தவறுகள் அனைத்தையும் நிறுவனமாக்கும் பிழைப்புவாதிக்ளின் கூட்டம் அழிவுகளின் பின்னான தலைமையைக் கையகப்படுத்திக்கொண்டது.

உலகின் மூலை முடுக்கெல்லாம் போராட்டங்கள் அதிகாரவர்க்கத்தால் அழிக்கப்பட்டிருக்கின்றன. மிகப் பெரும்பாலான போராட்டங்கள் முன்னைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு முன்னெழுந்திருக்கின்றன.
நமது நிலைமையோ வேறானது. மாவீரர் நாளை வெறும் சடங்காக்கி கோவில்களிலும், நினைவுக் கூடங்களிலும் முடக்கிவிட்ட வியாபாரிகள் கூட்டம் உரிமைக்கான போராட்டத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு பின் தள்ளியிருக்கின்றன.
இதுவரை நடந்தவை அனைத்தும் அப்பழுக்கில்லாத அரசியல் தவறுகள் இல்லாத புனிதமான போராட்டம் என்று மதச் சடங்கு போல அதனை மாற்றியமைத்துவிட்டனர். தவறுகளற்ற மாபெரும் இராணுவப் போராட்டம் அழிக்கப்பட்டுவிட்டதால் இனிமேல் அடங்கிப் போய் கிடைத்தைப் பெற்றுக்கொள்வதே ஒரே வழி என இலங்கை அரசிடம் ஒரு கும்பல் தஞ்சமடைந்துள்ளது; இன்னொரு கும்பல் மேற்கு ஏகாதிபத்திய நாடுகளின் காலடியில் ஏவல் நாய்களைப் போலக் காத்துக்கிடகின்றது.
ஆக, மாவீரர் தினம் என்பதை அடிமைச் சாசனமாகவும் சடங்காகவும் மாற்றிய கும்பல்களே இலங்கையிலும், ஐரோப்பாவிலும் “தமிழ்” அரசியலின் முகவர்கள். இவர்களின் கூட்டுச் சதியிலேயே மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்

ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்த ஒரு சந்ததியே நமது அரசியல் தவறுகளால் அழித்துத் துவம்சம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றை சுய விமர்சனத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தி புதிய அரசியல் திசை வழியை அமைத்துக்கொள்ள தேசியப் பிழைபுவாதிகள் அனுமதிப்பதில்லை. கொலைகளையும், கோராங்களையும், மனித விழுமியங்களுக்கு எதிரான வன்முறைகளையும் நியாயப்படுத்தும் பிழைப்புவாதக் கும்பல்கள் சிறுகச் சிறுக எமது சமூகத்தைக் கொன்று தின்றுகொண்டிருக்கின்றன.

அவர்களின் கொலை வெறியைத் தூண்டியது பணப் பசி மட்டுமே. இப் பணப் பசியின் உச்சமாக நவம்பர் மாதத்தில் கொண்டாட்டப்படும் களியாட்டமான மாவீரர் தினம் அமைந்துள்ளது.

உலக மக்களுக்கும், ஒடுக்கப்படும் மக்கள் கூட்டங்களுக்கும், ஜனநாயகவாதிகளுக்கும், மனிதாபிமானிகளுக்கும் நமது சமூகத்தின் அரசியலை பிழைப்புவாத வன்முறையின் உச்சம் என வெளிப்படையாக் கூற மாவீரர் நாளைப் பிழைப்புவாதிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

விட்டில் பூச்சிகள் போன்று மரணித்துப் போவதற்கு என்றே புலிகளுடன் இணைந்துகொண்ட தியாக உணர்வு மிக்க பல போராளிகள் இப் பிழைப்புவாதக் கும்பலை நிராகரிக்கின்றார்கள்.

தவறுகளை வெளிப்படையாக விமர்சனத்திற்கு உட்படுத்தி அவற்றை எதிர்கால சந்ததிக்குச் வெளிப்படுத்தி, அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு புதிய அரசியல் வழிமுறைய முன்வைக்க வேண்டும் என்ற உணர்வு இறுதிவரை போராடிய போராளிகள் மத்தியில் தோன்றியுள்ளது.

இந்த மாற்றம் புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் போது தேசியப் பிழைபுவாதிகள் ஓரம் கட்டப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பிரபாகரனுக்கு ஒளிவட்டம் கட்டி மரணித்துப் போனவர்களின் தியாகங்களின் மீது பிழைப்பு நடத்தும் இக் கும்பல்களே பிரபாகரனின் மரணத்திற்கும் காரணமாயின.

தாம் கடவுளுக்குச் சமமாக நேசிப்பதாகக் கூறும் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த மாவீரர் தினத்தில் எந்த விளக்கும் ஏற்றப்படுவதில்லை.

enlf
TELO, LTTE, EROS, EPRLF இயக்கத் தலைவர்கள்

பிரபாகரனைப் பயன்படுத்தி மக்கள் பணத்தைச் சூறையாடிய இக் கும்பல்கள் அவரை அனாதையாக்கியுள்ளன.
——–*——-
1980 களின் மத்திய பகுதியில் நான்கு பிரதான விடுதலை இயக்கங்கள் ஒரு கூட்டமைபை ஏற்படுத்திக்கொண்டன. இக் கூட்டமைப்பிற்கு ENLF என்று பெயர் சூட்டப்பட்டது. ஈழப் போராட்டத்தின் மீது மக்களின் நம்பிக்கை வைக்க ஆரம்பித்திருந்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இயக்கங்களில் இணைந்துகொண்டனர். தமது இளவயதின் மகிழ்ச்சி என்பதே போராடி மரணிப்பது என்றே அவர்கள் நம்பினர். பள்ளிக்குப் போவதாக புத்தகங்களையும் காவிக்கொண்டு சென்ற குழந்தை இராணுவப் பயிற்சிக்கு என இந்தியா சென்றுவிட்டதாக பெற்றோர்கள் கேள்ள்வியுற்று மகிழ்ச்சியடைந்த காலம் ஒன்று இருந்தது.

மக்கள் வெறும் பார்வையாளர்களாக இருந்திருக்கவில்லை. வெகுசனப் போராட்டங்களால் தெருக்கள் ஆர்ப்பரித்தன.

இந்திய அரசு இயக்கங்களை ஒன்று சேர்த்து அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது ENLF என்பதை அப்போது யாரும் தெரிந்து வைத்திருக்கவில்லை.

புலிகள் இயக்கம் முதலில் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற TELO ஐ அழித்தது. போராளிகள் ஏன் செத்துப் போகிறோம் என்று தெரியாமலே தெருக்களில் மரணித்துப் போனார்கள். கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த இளைஞர்களுக்கு போக்கிடம் இருந்திருக்கவில்லை. பதினைந்திற்கும் இருபத்தைந்து வயதிற்கும் இடைப்பட்ட போராளிகள் கிடைக்கும் இடங்களில் மறைந்துகொண்டார்கள். திருனெல்வேலியில் இரண்டு கிழக்குமாகாண இளைஞர்கள் புலிகளின் மேலிடத்து உத்தரவால் உயிரோடு எரிக்கப்பட்டார்கள்.

டெலோ உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் சரண்டைய வேண்டும் என ஒலி பெருக்கி உத்தரவால் யாழ்ப்பாணம் அதிர்ந்தது. வழமையாக விமானக் குண்டு மழை பொழியும் இலங்கை அரச விமானங்கள் அன்று அனைத்தையும் நிறுத்திக்கொண்டன.

puthuvai_patnathuraiஇவை எல்லாம் நியாயம் எனப் போதிப்பதற்கு புதிய கூட்டம் ஒன்று தோன்றியது. இறுதி நாள் வரை டெலோவின் ஊதுகுழலாகச் செயற்பட்ட புதுவை இரத்தினதுரை புலிகளின் கவிஞனாக மாறினார். தவறுகளை நியாயப்படுத்த என்றே புதிய புத்திசீவிகள் கூட்டம் தோன்றியது.

இதே போலத்தான் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கமும் அழிக்கப்பட்டது. போராளிகள் தெருத்தெருவாகக் கொல்லப்பட்டனர். புத்திசீவிகள் என்று கூறிக்கொண்ட கூட்டம் முழு மக்களின் மனிதாபிமான உணர்வுகளைக் குழி தோண்டிப் புதைப்பதற்குத் துணை போயிற்று.

மனிதத்தின் மீதான வன்முறையை நியாயம் எனப் போதித்தது. உலகிற்கு தமிழினத்தை வன்முறை மீது காதல்கொண்ட இனமாக அறிமுகப்படுத்திற்று. அக்கூட்டம் முள்ளிவாய்க்கால் வரை புலிகளை அழைத்து வந்து கொன்று போடும் அளவிற்கு விருட்சமாக வளர்ந்து இன்றும் எமது அவமானச் சின்னமாக உலகில் வலம் வருகின்றது. இன்று வரைக்கும் வன்முறைகளுக்குப் பொழிப்புக் கூறும் இக் கூட்டம் தவறுகளை நியாயப்படுத்தி எதிர்காலத்தை இருளின் விழிம்பிற்குள்ளேயே வைத்திருக்கிறது.

prabakaranஇவர்களுக்குப் பயன்படுவது பிரபாகரனும் புலிகளின் அடையாளமும் மட்டுமே. புதிய தலைமுறைக்கு உண்மையை அறிந்துகொள்ளும் உரிமையை மறுக்கும் இந்த வன்முறைக் கும்பல்களின் பிடியிலேயே மாவீரர் தினம் என்ற பொன்முட்டை போடும் வாத்து அடைத்துவைக்கப்பட்டிருக்கிறது.

பிரபாகரனுக்கு அஞ்சலி செய்வதன் ஊடாக உலகத்திற்கு உண்மையைச் சொல்லும் தலைமுறை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தப்படுமானால், சிறீ சபாரத்தினம், பத்மநாபா போன்றவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும். போராடி மரணித்துப் போன அனைத்து இயக்கப் போராளிகளும் துரோகிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும்.அவர்கள் அஞ்சலிக்குரியவர்களே. நம்மை வன்முறையாளர்கள் பட்டியலிரிருந்து நீக்கிக் கொண்டு உலக மக்கள் மத்தியில் ஜனநாயகவாதிகளாக அறிமுகப்படுத்தும் முதல்படியாக இது அமையும். வக்கிர மனோபாவம் நிறைந்த சந்ததி ஒன்று உருவாகுவதைத் தடுப்பதற்கான நுளைவாசலாக இது அமையும்.

~மீள் பதிவு~

யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு:ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம்-கா. சிவத்தம்பி

“வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது.”

ஆர். சி. கொலிங்வூட்
வரலாற்றியலறிஞர்.

பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள் எமக்கு இங்கு இயைபுடைய ஒன்றாகின்றது. வுரலாற்று முகவர்களின் “சிந்தனைப் பக்கத்தை” அறிவது வரலாற்றாசிரியரின் கடமையெனின், இலக்கிய வரலாற்றாசிரியனின் பணியோ, இலக்கியங்கள், வாத விவாத எழுத்துக்கள் ஆகியவற்றில் எடுத்துக் கூறப்பட்ட கருத்துக்கள் வரலாற்றை எவ்வாறு வெளிப்படுத்துவனவாயுள்ளன என அறிவதாகும்.

எந்த எழுத்தும், சம்பந்தப்பட்டவரின் அறிகை முறையின் (றுயல ழக உழபnவைழைn) அடியாக வருவதாகும். ஏந்த அறிகையும் ஏதோ ஒரு வகையில் குறிப்பிட்ட எழுத்தாளரின் சமூக நிலைப்பாடுகளோடு சம்பந்தப் பட்டதாகும்.

இந்த அறிகை முறை அவ்வச் சமூக பொருளாதார மரபுகளினு}டாக வரும் அறிகை முறைமைகயோட ( முழெறடநனபந ளலளவநஅ) சம்பந்தப் பட்டதாகும். அறிவு முறைமை என்பது கல்வி, கேள்வி மரபு, பயிற்சிமரபு, அவை பற்றிய கருத்து நிலைகள் ஆகியனவற்றை உள்ளடக்கி நிற்பதாகும். ஊயர் அங்கீகாரம் பெறும் அறிவு முறைமை, சம்பந்தப்பட்ட சமூகத்தின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தும் ஒரு “நிறுவன” மாகவே அமையும்.

யுhழ்ப்பாணச் சமூகத்தின் வரலாற்றோட்டதில் மேலாண்மையுடையனவாக விளங்கியமையும், மேலாண்மையடைய விரும்பியவையுமான சிந்தனை மரபுகள் யாவை என்பதையும், அந்தச் சிந்தனை மரபுகள் எவ்வாறு நடந்தேறிய சமூக வரலாற்று மாற்றங்களின், அன்றேல் மாற்ற முயற்சிகளின் பட்டெறிவாக (சுநகடநஉவழைn) இருந்தன என்பதையும் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஒரு சமூகத்தின் சிந்தனைகள், அதன் புலமையாளரால (ஐவெநசயெவழையெட) வெளிக்கொணரப்படுகின்றன. “புலமையாளர்” (சற்று இலக்கியமயத்திக் கூறினால் ‘புலத்துறை போகியோர்’) என்னும் பதம், அறிவு, காரணி விளக்க ஆற்றலையுடையோரைக் குறிக்கும். இந்தப் புலமையாளர் அறிவினாலும், அறிவு தரும் கற்பனைத் திறனாலும் ஆற்றலாலும் வாழ்க்கையை நடத்துபவர் ஆவார். புலமைத்துவ (ஐவெநசயெவழையெட) மரபு என்பது இப்புலமைச்செல்நெறி பாய்தோடிய பாங்கினை விளக்குவதாகும். இந்தப் புலமைத்துவ மரபினை எழுத்துக்களிலும் மற்றைய ஆக்கங்களிலும், இயக்கங்களின் செயற்பாடுகளிலும் கண்டு கொள்ளலாம்.

ஐஐ
யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபினை அதற்குரிய பின்புலத்தில் வைத்து விளங்கிக் கொள்வதற்கும் நாம் இரு அமிசங்களைத் தெளிவு படுத்திக் கொள்ளுதல் அவசியமாகும். முதலாவது, யாழ்ப்பாணத்தில் இயல்புகளை அறிந்துக் கொள்ளுதல். இரண்டாவது, புலமைத்துவ வெளிப்பாட்டு முறைமைகளான எழுத்துக்கள், சமூக சீர்திருத்த முயற்சிகள் போன்றவற்றின் தளமாக அமையும் சிந்தனைக் செல்நெறிகள் யாவை என்பதைக் தெளிவுபடுத்திக் கொள்ளல்.

யாழ்ப்பாணம் இலங்கையின் வடகிலுள்ள தீபகற்ப பகுதியாகவும், இந்தியாவின் தென்பகுதிக்கு மிக அண்மையானதாகவும் அமைந்துள்ளது. இத்தீபகற்பத் தன்மை காரணமாக ஓர் ஒதுக்கற்பாட்டுணர்வு நிகழ்தேறியது. அந்;த அளவுக்கு இது முக்கியமான ஒரு தமிழ்க் குடியிருப்பாக அமைகின்றது. இந்த முக்கியத்துவம் இலங்கை, இந்தியா, தென்னாசியா ஆகிய மூன்று நிலைகளிலும் உணரப்படுவதொன்றாகும்.

இப்பிரதேசம் பிரதானமான சைவமும் தமிழும் என்ற ஒரு மேலாக்கக் கருத்து நிலையோடு சம்பந்தப்பட்டிருந்தாலும், இங்கு சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர். முத அடிப்படையில் நோக்கும் பொழுது கிறிஸ்தவர்களும் கணிசமான தொகையினர் உள்ளனர். கிறிஸ்தவர்களுள் றோமன் கத்தோலிகரே பெருந் தொகையினரெனினும், புரட்ஸ்தாந்திகள் கல்வி முதலாம் புலமைத்துவத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றனர். யாழ்ப்பாணத்து அறிவு முறைமையின் ஓர் அங்கமான உயர் பாடசாலை வளர்ச்சியில் இவர்கள் ஏற்படுத்திய மிக முக்கிமானவையாகும்.

யாழ்ப்பாணத்தின் பொருளாதார வரலாற்றின் பண்புகளை எடுத்துக்கூறிய பேராசிரியர் அரசரத்தினம்.

The strength of the Jaffna settlement has been this concentration of population and their density. This has enabled them to develop economic relationships among themselves and has encouraged regional specializations and exchange of commodities. It has also enabled the region to grow in insolation from the rest of the island and shelterd it from vicissitudes else where ………………………….. ………………………. ………………………………….. ………………. With in peninsula itself patterns of settlement have continued with relatively little change over last 400 years. These has been little internal movement of population except with in small distance in areas of little productivity and areas subject to sabination.

குடியேற்றம், சனநெருக்கம் பற்றிய இந்த ஸ்திரப் பண்பு ஏறத்தாழ 1984வரை காணப்படுகின்றதெனலாம். அதன் பின்னர் இனக்குழுமப் போர் காரணமாக பெருமளவில் சனத்தொகை மாற்றம் ஏற்படுகின்றது. எனினும் இதற்கு முன்னர் ஏறத்தாழ 14, 15 ஆம் நு}ற்றாண்டிலிருந்து ஒரு நிலையான சமூக – பொருளாதார அமைப்பு உருவாகி நிலைபெற்று வந்துள்ளது.

இந்த ஸ்திரப்பாட்டிற்கு இம்மக்களிடையே நிலவிய ஒரே சீரான பொருளாதார நடவடிக்கை மரபும், சட்ட ஒழுங்கு மரபும் காரணமாக அமைகின்றன. இதனை யாழ்ப்பாணத்தில் நிலவிய தேச வழமைச் சட்டமும், சாதியமைப்பையும் வழங்கின. துனியார் சொத்துக்கு வழங்கப்பட்ட மரியாதையும், அவை பேணப்பட்ட முறைமையும் (வேலியிட்டுப் பிரித்து வைத்துக் கொள்ளல்) இந்த ஸ்திரப்பாட்டுடன் காரணகாரியத் தொடர்பு கொண்டவையாகும்.

யாழ்ப்பாணத்தின் சமூக, பொருளாதார ஸ்திரப்பாடு பற்றியும் அரசரத்தினம் அவர்கள் தொகுத்துக் கூறுவது உற்றுநோக்கப்பட வேண்டியது.

There was then the institution of caste which evolved in ways different from the original home – lands of the Tamils. The absence of a large group of Tamils weakend the Brahminie norms which the Tamils had brought from south India. Castes did not have to strictly adhere to traditional occupations and there was some socio – economic mobility. These occupations did not and could not have the same social values attached to them in south India. Agriculture and Agriculture persuuts continued as the most valued occupations but seafaring and the industries associated with seproduce achieved a value greater than I n south India provided the means to upward social mobility. /The numerical preponenrance of the major agricultural caste, which soon become the dominant caste in society gave a stability to society.

(S.Arasarathnam Historical foundation of the Tamils of North SriLanka – Fourth Chelvanayagam Memorial lecture Jaffna. – 1982)

மாற்றங்கள் அதிகம் ஏற்படாது தொடர்ந்தமைக்கும், அதே வேளை மேனிலை நோக்கிய சமூக – பொருளாதார அசைவியக்கத்துக்கான (தென்னிந்திய சாதி மரபில் இருக்காத சில) சாத்தியப்பாடுகளும் இங்கு நிலவியமைக்கான காரணங்கள் இப்பொழுது துல்லியமாகின்றன. யாழ்ப்பாணச் சாதியமைப்பு வழங்கிய மேலாண்மையுடன் விவசாயம் பிரதான இடத்தை வகிக்கத் தொடங்கிற்று.

இந்த விவசாய மேலாண்மைக்கான இன்னொரு காரணம் இங்கு ஒரு வன்மையான வணிக வர்க்கமோ, முயற்றியாளர் குழாமோ (நவெசநிநnரெசயைட பசழரிள) இல்லாது போனமையாகும். சிறு வியாபாரிகள் ஆன வணிக குழுவினரைத் தவிர இங்கு எடுத்துப் பேசக்கூடிய வணிக மரபினர் மிகக் குறைவானோரே, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை கடலோடிகளால் நடத்தப் பெற்று வந்த ஒரு வர்த்தகப் பாரம்பரியம், பாய்க்கப்பல் முறைமையின் ஒடுங்குதிசையின் பின்னர்(இதே காலத்திலேற்பட்ட சுங்கத்திணைக்கள வளர்ச்சியுடன்) மங்கிப் போயிற்று. வணிக முனைப்பும், பெருந்தொகை வணிக முதலீடுமில்லாது இருந்தமையும், இச்சமூகத்தில் ஒரு வகையான மாற்றமின்மையைத் தவிர்க்க முடியாததாக்கிற்று எனலாம்.

இவ்வாறான ஒரு “பாரம்பரிய” ச் சூழலில், பாரம்பரியப் பேணுகை முக்கிய இடம் பெற்றது ஆச்சரியத்தைத் தருவதன்று.

இத்தகைய சமூகங்களில் மதம் முக்கியம் பெறுகின்றது. அதனை மையமாகக் கொண்டே பாரம்பரியப் பேணுகை நடப்பதும் இயல்பே.

இத்தகைய சமூகத்தில் நிலவும் அறிவு – முறைமையும், சமூகப் பாரம்பரியங்களைப் பேணுவதாகவே அமையும். இங்கு வரன்முறையான கல்வியென்பது மதம் சார்ந்ததாகவும், சமூகத்தின் சகல ஆக்கங்களையும் உள்ளடக்காததாகும். உண்மையில் இச்சமூகத்தின் அடிநிலையினருடன் சம்மந்தப் படாததாகவே இருக்கும்.

அடுத்து, இந்தச் சமூகப் பொருளாதாரப் பின்புலமுள்ள இச்சமூகத்தில் எழுத்துக்களும் புலமைத்துவச் செல்நெறிகளும் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை வரலாற்றுப் பின்னணியில் வைத்து நோக்குவது அவசியமாகின்றது.

அதனைப் பின்வரும் வகையில் மிகச் சுருக்கமாக உடுத்துக் கூறலாமெனக் கருதுகிறேன்.

மேனாட்டு வருகைக்கு முந்திய காலம்(Pசந – றநளவநசn)
அ. யாழ்ப்பாண அரச உருவாக்கம் நடந்தேறிய காலம் (14ஆம்,15ஆம்) பெரும்பாலும் ~வரலாறு| சார்ந்த எழுத்துக்களே காணப்படுகின்றன. இவை இந்துப் பாரம்பரியத்தில் வரலாறு எடுத்துக் கூறப்படும் பௌராணிக, ஐதீக மரபை ஒட்டியே அமைந்துள்ளன. தக்கிண கைலாசபுராணம்,கோணேசர் கல்வெட்டு, வையாபாடல்,கைலாயமாலை ஆகியன. மற்றையவை மதம், மருத்துவம் சார்ந்தவை.

ஆ. முஸ்லிம்களின் வருகை: மேனாட்டார் வருகைக்கு முந்திய காலத்து முஸ்லிம் இலக்கியப் படைப்புக்கள் எதுவும் இல்லையென்றே கூறல் வேண்டும்.

புpரிட்டிஷ் ஆட்சிக்கு முற்பட்ட காலம் (1505 – 1796)
அ. போர்த்துக்கேய,ஒல்லாந்தர் காலங்கள் – கிறிஸ்தவத்தின் வருகை – கத்தோலிக்கம், இறப்பறமாதுக் கிறிஸ்தவம்

இந்துமதமும் இஸ்லாமும் பலத்த பாதிப்புக்குள்ளாக்கப்படல், இக்காலத்துக்குரியனவாக உள்ள கிறிஸ்தவ, இந்து எழுத்தாக்கங்கள்

ஆ. அந்நிய கல்விமுறை நிறுவப்படல் – டச்சு ஆட்சியின் கல்வி முறைமை. பாரம்பரியக்கல்வி முறையின் தொடர்ச்சி – தமிழக் தொடர்புகளின் தொடர்ச்சி.

பிரிட்டிஷ் காலம் (1796 – 1948)

பிரித்தானிய ஆட்சியின் மதநெகிழ்ச்சிக் கொள்கைகள்: சமூக – பண்பாட்டுத் தலைவர்கள் பிரித்தானிய ஆட்சியை ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவம் சாராத ஒரு கல்வி முறையைக் கோரியமை: கிறிஸ்துவத்திற்கான இவ்வெதிர்ப்பு கல்வி முறைமைக்குள் கிறிஸ்தவம் முனைவுப்படுத்தப்பட்ட முறைமை பற்றியிருந்ததுவே தவிர அந்தக் கல்வி முறைமைக்கு அது கொண்டு வந்த உள்ளடக்கம், அமைப்பு ஆகியவற்றுக்கு எதிரானதன்று.

இந்தக் கல்விமுறைமையை ஏற்பது பற்றி நடந்த போராட்டங்கள் முக்கியமானவையாகும். தமிழ்க்கல்வி மரபையும்,ஆங்கில மொழிப் பயில்வையும் எவ்வாறு இணைப்பதென்பது ஒரு பிரச்சனை மையமாக விளங்கியது. ஆறுமுகநாவலரின் இயக்கம் இது சம்மந்தப்பட்டதாகவே அமைந்தது.

இறுதியில் சமூகத் தேவைகளையும் மதத் தேவைகளையும் இணைக்கும் சைவ ஆங்கிலப் பாடசாலை மரபு தோற்றுவிக்கப்பட்டது.

இந்த இணைப்பு ஏற்பட்டதும் பாரம்பரியப் பேணுகையையும் புதிய தேவைகளையும் அனுசரிக்கும் ஒரு சமூக அசைவியக்க முறைமையையும் கடைப்பிடிப்பது சுலபமாயிற்று.

இந்து மத மட்டத்தில் இவ்விணக்க இயைபு முயற்சி மேற்கொள்ளப்பட்ட வேளையில் புதிய கல்வி மரபு கிறிஸ்தவ முகாமையின் கீழ் வளர்த்தெடுக்கப்பட்டாலும், விஸ்தரிக்கப்படலும் நடைபெறுகின்றன.

இதனை முதலில் ஏற்படுத்தியவர்கள் புரட்டஸ்தாந்துப் பிரிவினர்களே. (அமெரிக்க மிஷன், வெஸ்லியன் மிஷன், ஆங்கிலத் திருச்சபை மிஷன் ஆதியன முதலிலும் கத்தோலிக்கம் பின்னருமே வந்தன)

பிரித்தானிய ஆட்சி ஏற்படுத்திய மாற்றங்களின் பின்னர், நவீனமயப்பாடு(ஆழனநசணையவழைn) ஆங்கிலக்கல்வி முறைமையே மூலமே வந்தது. இந்த நவீன மயப்பாடு இல்லாது சமூக அந்தஸ்துப் பேணுகையையோ, சமூக மேனிலைப்பாடோ சாத்தியமற்றதாகிற்று. இதனால் இந்த நவீன மயப்பட்ட கல்வி சமூக முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்றாயிற்று. அதனால் இக்கல்வியை மிகச் சிறந்த சூழலிற் பெறக்கூடிய கல்வி வாய்ப்புக்கள் முக்கியமானவையாகின.

யாழ்பாணத்தில் நடந்தேறிய நவீன மயமாக்கம் ஏறத்தாழ 1950 கள் வரை தொழிநுட்ப மயவாக்கத்துடன் (வநஉhழெடழபணையவழைn) சம்மத்தப்படவில்லை. கல்வி மூலமாகவே இந்த நவீன மயவாக்கம் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் பிராமணிய முறையில்லாததால் சாதியமைப்பில் தமிழகத்திற் காணப்படாத ஒரு நெகிழ்ச்சி இங்கு இருந்தது. இடைநிலைச் சாதியினர் தங்கள் இந்தஸ்தை உயர்த்திக் கொள்ளவும், தங்கள் இடம் நன்கு வரையறுக்கப்படாதிருந்த சாதிக் குழுமங்கள் (அகம்படியார், தனக்காரர், சாயக்காரர் போன்றோர்) உயர்நிலையினருடன் தம்மை இணைத்துக் கொள்ளவும் கல்வி பயன்பட்டது. இந்த நெகிழ்சிசியினைப் பயன்படுத்திய நவீனமயமாக்கம், கல்வியை ஒரு முக்கிய பொருளாதார முயற்சியாக்கிற்று.

ழூ ஆங்கிலக்கல்வி வாயில்களாக அமைந்த நிறுவனங்களினுள் அமெரிக்க மிஷரினர்மார் நடத்திய யாழ்ப்பாணக்கல்லு}ரி, இருந்த ஆங்கிலக் கல்லு}ரிகளிலும் பார்க்க உயர் வகுப்புக்களை நடத்தியபடியாலும், பிரிட்டிஷ் காலனித்துவ மேலாண்மைக்குக் கட்டுப்படாதிருந்தமையாலும், பாடசாலை நிர்வாகத்தி;ற்கு அரச நிதியுதவியை எதிர்பாராதிருந்தாலும் 19ஆம் நு}ற்றாண்டு அமெரிக்கத் தாராண்மைவாதக்கல்வி முறைமையைப் பின்பற்றியதாலும் மற்றைய கல்வி நிலையங்களில்லாத ஒரு தாராண்மை (டiடிநசயட) வாதப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடியதாகவிருந்தது.

இந்தக் தாராண்மைவாதச் சூழலில் அக்கல்லு}ரி மாணவர்கள், யாழ்ப்பாணத்தில் எல்லாக் காலத்திலும் நிலவி வந்துள்ள இந்தியச் செல்வாக்குக் காரணமாக வந்த இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சமகாலப் போக்குளை உள்வாங்கி முற்றிலும் புதிய தளமாற்றவாத (சயனiஉயட) சமூக, அரசியற் கோடபாட்டை முன்வைக்கின்றனர்.

இது நடந்தது 1924- சமகாலப் பிரிவிலாகும். இதுவே யாழ்ப்பாணத்தின் மாணவர் பேரவை இயக்கமாகும். (ளுவரனநநவெ ஊழபெசநளள) அதனைத் தொடர்ந்து 1939 முதல் மார்க்ஸியச் சிந்தனை பரவப் தொடங்குகின்றது. அடிப்படைப் பொருளாதார உறவுகள் மாறாத ஒரு சூழலில் மார்க்ஸியம் இங்கு வன்மையாக சமூக – பொருளாதாரக் கோட்பாடாக கிளம்பாது புலமை நெறியாகவே வளரத் தொடங்குகின்றது. புலமை நெறியாகத் தொடங்கியது நிறுவன அமைப்பாக மாறத்தொடங்க சமூகச் சுரண்டல்கள் இடம் பெறும் இடங்களில் வேரூன்றித் தொடங்கிற்று. அரசியலில் இது இலங்கையை ஒரே தேசியச் கூறாகக் கொண்டது.

சுpங்களத் தேசியவாதக் காலம் (1948)

இந்தப் புலமைத்துவ நெறிப்பரவலைத் தொடர்ந்து, மிக முக்கியமான சிந்தனை மரபாக மேற்கிளம்புவது இலங்கையை முற்று முழுக்கத் தனது என உரிமை கொண்டாடிய சிங்களத் தேசியவாதமாகும். இது 1920 களில் தொடங்கி 1930களில் முக்கியமாகி, சுதந்திரத்தின் பின்னர் தன்னைப் புவியியல் hPதியாகவும், நிர்வாக hPதியாகவும் நிலைநிறுத்தத் தொடங்கிற்று. சிங்களத் தேசிய எழுச்சியின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள், தமிழரின் சமூக மேனிலைப்பாட்டுக்கான பிரதான வாயிலான கல்வியுரிமைகளைப் பாதிக்கத் தொடங்கவே, அதற்கெதிரான இனக்குழுமத் தனித்துவ வெளிப்படுத்துகை தொடங்குகின்றது. இது 1949 இல் நிகழ்ந்த தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் தொடங்குகின்றதெனலாம். 1956 இன் பின்னர் இது வளரத் தொடங்கி 1972 இல் ஓர் அரசியல் திருப்புமுனையை எய்துகின்றது. 1972 ஆட்சியமைப்பில் தமிழர்கக்கான இடம் பேசப்படாமலே விடப்பட்டது. இலங்கைத் தமிழ்ப் போராட்டம், அது எதிர்நோக்க வேண்டிய சிங்களத் தேசியத்தின் அரச நிலைப்பட்ட ஒடுக்குமுறைகள் காரணமாக வன்முறைப்பட்டதாகவும், புதிய தலைமையை நாடுவதாகவும் அமைந்தது. 1970 களின் பின்னர் தமிழ்த்தேசியம் முக்கிய அரசியற் சக்தியாகி மேற்கிளம்புகின்றது.

அடுத்து மேற்கூறிய காலகட்டங்களில் தோன்றிய எழுத்துக்களையும் பிற புலமைத்துவ வெளிப்பாடுகளையும் சற்று விரிவாக நோக்குவோம்.

அவ்வாறு ஆராய்வதற்கு முன்னர், ஒரு அவதானிப்பினைப் பதிவு செய்து கொள்ளுதல் அவசியமாகின்றது. யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய அமைப்புக்குச் சவால்கள் கிளம்பிய காலகட்டங்களிலேயே முக்கியமான புலமைத்துவ நடவடிக்கைகள் தோன்றின என்பது உய்த்தறியப்படத்தக்கதாகவுள்ளது. அவ்வாறு நோக்கும் பொழுது புலமைத்துவ நடவடிக்கைகள் இருநிலைகளில் வைத்துக் பார்க்கப்படலாம்.

ஓன்று – நிலவும் அமைப்புச் சவால் விடுவன யாவை என்பதும் அவை எவ்வகையில் சவாலை சவாலை விட்டன என்பதும்,

இரண்டு – நிலவும் அமைப்பு புதிய சவால்களை எவ்வாறு ஏற்றக் கொண்டது என்பதும், அதனால் அவ்வமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை என்பதும்.

இவ்வாறு நோக்கும் பொழுது மேனாட்டார் வருகைக்கு முற்பட்ட புலமைத்துவ மரபானது பிரதானமாக, சமூக அமைப்பின் உருவாக்கத்திற்கு உதவுவனவாகவும் அந்த அமைப்பினை நியாயப்படுத்துவனவாகவும் காணப்படும். இது பற்றி “ஈழத்துத் தமிழ் இலக்கியத்” தில் விளக்கியுள்ளேன்.(2 ஆம் பதிப்பு 1987 – பக்கம் 10-11, 163-5) வையாபாடல், கையாலயமாலை, தட்சணகைலாச புராணம், பரராஜசேகரனுலா, கதிரைமலைப் பள்ளு ஆகிய நு}ல்களின் தோற்றத்தை மனங்கொள்ளல் வேண்டும், அவை தோன்றிய அந்தக் காலப் பிரிவிலேயே வைத்திய நு}ல்களும் (செகராசசேகரம்) தோன்றின. இந்த நு}ல்களின் தோற்றத்துக்கும், ஆட்சியதிகாரத்துக்கும் தொடர்பு இருந்ததென்பது இந்நு}ல்கள் பற்றிய தகவல்கள் வழியாகத் தெரியவருகின்றன. மக்கள் நிலைப்படடதான இக்கால இலக்கியமென்று கூறப்படத்தக்கதாக அமைவது கண்ணகி வழக்குரையே. இந்நு}ல் கோயில் ஏடுகள் வழியாகப் பேணப்பட மற்றைய நு}ல்களோ வரன்முறையான உயர்நிலைப் பேணுகை வழியாக கையளிக்கப்பட்டனவாகும்.

யாழ்ப்பாண அரசின் ஆட்சியம்சங்களின் முக்கியமான ஒன்று பிரதேச முதலிகளின் முக்கியத்துவமாகும். யாழ்ப்பாண அரசு ஒருமுகப்படுத்தப்பட்ட ஓர் ஆட்சி முறைமை நடைமுறைப்படுத்தியிருந்தது. என்பதற்குப் போதிய சான்றுகளில்லை. அத்துடன் தென்னிந்தியாவில் நிலவி வந்த கூறாக்க முறைமைக்கு (ளநபஅநவெயசல ளவயவந வசயனவைழைn) மாறான ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் ஆட்சி முறைமை யாழ்ப்பாணத்தில் நிலவிற்று என்று கூறமுடியாது. யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சிக்கே பிரதேசப் பிரதானிகள் சூழ்ச்சி முக்கியமான ஒரு காரணியாக விளங்கிகிற்று என்று கொள்ளப்படுவதிலிருந்து இந்த உண்மை நன்கு புலனாகின்றது.

மேனாட்டார் வருகைக்கு முன்னர் நிலவிய கல்வி முறைமை பாரம்பரிய தமிழ்க்கல்வி முறைமையாகவே இருத்தல் வேண்டும். அதாவது குரு – சிஷ்ய மரபினைப் பேணியதாகவும், உயர் நிலைப்பட்டோருக்கு உரிய ஒன்றாகவும், மதச்சார்புடையதாகவுமே இருந்;திருத்தல் வேண்டும். அந்த அளவில் இச்சமூகத்தின் இயல்பான அடுக்கமைவு முறைக்கு (hநைசயசஉhiஉயட யெவரசந) இயைந்ததாகவே அமைந்திருத்தல் வேண்டும். “உலகம் என்பது உயர்ந்தோர்மேற்றே” எனும் கருத்துநிலை இத்தகைய சமூகங்களில் இயல்புநிலையாகும்.

இக்கால இலக்கியங்களில் முக்கியமானது யாழ்ப்பாணத்தின் சிந்தனை மரபில் முக்கியமானதாக எடுத்தோதப்படவேண்டிய நு}ல் இரகுவம்சமாகும். காளிதாஸனது மூலநு}லின் மொழிபெயர்பாக அமைந்த இந்த ஆக்கம், அரசகேசரியினுடையது. அரசகேசரி யாழ்ப்பாண அரசர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். சுமஸ்கிருத மரபுவழிவரும் ஓர் இந்த முறைமையை யாழ்ப்பாணத்து மரபின் தளமாகக் கொள்ளும், ஒரு செயற்பாடு இதனுள் தொக்கு நிற்கின்றது. தன்யொரு நு}லினை வைத்துக் கொண்டு பொதுப்படையான ஒரு வரலாற்றுச் செல்நெறியை வகுத்துக் கொள்வது சிரமமெனினும் பின்வரும் யாழ்ப்பாணத்தில் வளர்ந்த மரபினை நோக்கும் போது (சைவசித்தாந்தத்தை வேதாகத்தின் பிழிவாகக் கொள்வது) இரகுவமிசத்தின் தமிழ்ப்படுத்துகைக்கான புலமைத்துவச் செல்நெறி மிக உன்னிப்பாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சிக்காலங்கள் இப்பிரதேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைகின்றன. மேனாட்டாட்சி முறையும் கிறிஸ்தவரும் இலங்கை நாட்டினதும் இப்பிரதேசத்தினதும் வரலாற்றையே மாற்றியமைக்கின்றன. இங்கு நிலவிய விவசாய அமைப்பும், அடுக்கமைப்புச்; சமூக முறைமையும், கூறாக்க ஆட்சி அமைப்பும்; வந்த ஆட்சியை எதிர்பதற்கோ அன்றேல் அதற்கு எதிராகக் கிளம்புவதற்கோ வேண்டிய ஒரு கருத்து நிலையை மக்களிடத்தே ஏற்படுத்தக் கூடியனவாக அமையவில்லை.

கிறிஸ்தவத்தின் வருகையும், அது அரசயந்திரத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப் படுத்தப்பட்டமையும் இங்கு நிலவிய சமூக – மத மேலாண்மைக்குப் பெருஞ்சவாலாக அமைந்தன. இந்த வருகையுடன பாரம்பரிய அமைப்பு அதனைப் பேணுவதற்கான ஆட்சியதிகார ஆதரவை இழந்தது. திருச்சபையோடிணைந்த ஒரு கல்வி மரபு இச்சமூகத்தின் பாரம்பரிய புலமைத்துவ மரபுக்குச் சவாலாக விளங்கிற்று. இந்த வருகையின் பாரம்பரிய புலமைத்துவ நிறுவனங்களிடையே ஓர் ஒதுக்கற்பாடு (நஒஉடரளiஎநநௌள) காணப்பட்டது. இப்பிரதேசத்தின் மத பண்பாட்டு ஊற்றின் தளமான தமிழகத்திற்குச் செல்லும் ஒரு செல்நெறியும் காணப்பட்டது.

கிறிஸ்தவம் இத்தகைய ஒரு பாதிப்பை ஏற்படுத்திற்று என்றாலும் அந்த ஆரம்ப நிலையில் கிறிஸ்தவம் பாரம்பரிய அமைப்பினை அது ஜீவமரணப் போராட்டம் நடத்தும் ஒரு நிலைக்குத் தள்ளவில்லை. ஏனெனில் முதலில் வந்த கத்தோலிக்க மதத்தினர், இச்சமூகத்தின் உயர்மட்டத்திற்கு எத்தகைய ஒரு பெருஞ்சவாலையும் ஏற்படுத்தவில்லை. இந்தப் பிரதேசத்தின் பாரம்பரியப் பண்பாட்டினைப் பேணும் அதன் களஞ்சியமாக விளங்கிய சமூக மட்டத்தில் ஒரு மிகச் சிறிய பகுதியினரே கத்தோலிக்கத்திற் சேர்ந்திருந்தனர். பெரும்பான்மையான கத்தோலிக்கர் அடிநிலைப்ப்பட்ட சாதிக்குழுமங்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

போர்த்துக்கேய ஆட்சிக் காலத்தில் அவ் ஆட்சி வழி வந்த பண்பாட்டமிசங்களை புறக்கணிக்கும் ஒரு மனோபாவமே உயர் குழாத்தினரிடம் நிலவிற்று. ஒல்லாந்தர் ஆட்சியில் குறிப்பாக அதன் பிற்பகுதியில் கிறிஸ்தவத்தின் பரப்புகை பற்றிய அவர்களது சிரத்தை, பொருளாதாரத் துறையில் காட்டப்பட்ட அளவு காட்டப் பெறவில்லை எனலாம். கிறிஸ்தவ மதத்தை ஊக்குவிப்பதென்பது ஒல்லாந்தராட்சியில் இரண்டாம் பட்ச இடத்தையே பெற்றிருந்தாலும், ஒல்லாந்தக் கல்வி முறையானது திருச்சபையுடனேயே இணைக்கப்பட்டிருந்தது.

Youth with some education had career openings in the company’s Junior administrative service. They were employed as translators in the company’s offices, in the revenue services in a wide range of duties, and as school masters and catechists.

(S. Arasaratnam9. V, P-17)

போர்த்துக்கேயர் காலத்து மேற்கொண்ட ஒதுக்கல் நிலைப்பாட்டை யாழ்ப்பாணச்சமூகத்தின் உயர்குழாத்தினர் ஒல்லாந்தர் காலத்தில் மேற்கொள்ளவில்லை எனலாம். தங்களைக் கிறிஸ்தவர்களாகக் காட்டிக் கொள்ளவும் அவர்கள் தயங்கவில்லை. யாழ்ப்பாணத்தில் 1758 இல் 37 தேவாலயங்களும்,200, 233 இறப்பிறமாத்துக் கிறிஸ்தவர்களுமிருந்தனரென்று கூறப்படுகின்றது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்கர்களும் இன்னல்களுக்காளாக்கப்பட்டனர்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் போர்த்துக்கேய ஆட்சியே மோசமாக இருந்தது.

கத்தோலிக்கர்களைப் பொறுத்தவரையில் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் தங்கள் மதத்தைப் பேணுவதற்குக் தங்கள் அடிநிலைத் தொடர்புகளை வற்புறுத்திக் கொண்டனர் எனலாம்.

ஓல்லாந்தர் ஆட்சியின் கீழ் உள்நாட்டு நிலப்பிரபுக்களும், வியாபாரிகளும் தரகர்களும் நல்ல நிலையிலிருந்தனர் என்பர். இலக்கியத்தின் மூலம் இந்த உண்மை நிரூபிக்கப்படுகின்றது. உள்ளுர்ப்பிரபுத்துவ பரம்பரை பற்றித் தோன்றிய முதலாவது நு}ல் – கரவை வேலன் கோவை – ஒல்லாந்தர் காலத்தைச் சார்ந்ததாகும். யாழ்ப்பாண வைபவ மாலை கூட

“உரராச தொழுகழன் மேக்னு}னென்றோதும்
உலாந்தேசு மன்னன் உரைத் தமிழாற் கேட்க”

மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்டதாகும் என்பர்.

யாழ்ப்பாணத்தின் பாரம்பரியச் சுமூக அமைப்பு அந்நிய ஆட்சியுடனும் கிறிஸ்தவத்துடன் “உடனுறைய” ப் பழகிக் கொண்டுவிட்டது எனலாம்.

பிரித்தானிய ஆட்சி வருகையுடன் ஆட்சியாளரின் மதக் கொள்கையில் மேலும் நெகிழ்ச்சி காணப்படுகிறதெனினும், இக்கால பிரிவில் புரட்டஸ்தாந்து மதங்களின் பரவல் (வெஸ்லியன் மிஷன், சேச் மிஷனரிக் கழகம்) பாரமபரிய சமூக அமைப்புக்கான பெரிய சவாலாக அமைந்தது. (மு.ளுiஎயவாயஅடில – ர்iனெர சுநயஉவழைn வழ ஊhசளைவயைn Pசழஉடலவணையவழைn யனெ றுநளவநசnணையவழைn in 19வா உநவெரசல துயககயெ – ளுழஉயைட ளுஉநைnஉந சுநஎநைற ழே 1இ 1979 – ஊழடழஅடிழ)

இரண்டாவது – இது முக்கியமானது – இவர்கள் உயர்சமூகதிதினரிடையே தங்கள் மதத்தினைப் பரப்பினர். அடிநிலைச் சமூக மக்களிடையே மதத்தைப் பரப்புவதில் அதிக ஆர்வம் காட்டவி;ல்லை எனலாம். புரட்டஸ்தாந்திகளாக மதம் மாறிய அடிநிலைப்பட்டோர் மிகச் சிலரே.

மூன்றாவது அரச உத்தியோகங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஆங்கிலக் கல்வி பிரதானமாக இந்த நிறுவனங்கள் மூலமே போதிக்கப்படலாயிற்று.

நான்காவது இந்தத் திருச்சபைகள் வழிவந்த கல்வி முறைமை, நவீன மயவாக்கத்துக்கான ‘முகவர்’ (யபநnஉல) நிறுவனமாகக் கணக்கிடப்பட்டது. இதனால் கிறிஸ்து மயப்பாட்டினை எதிர்த்த சுதேசிகள் புதிய கல்வி முறைமையைக் கையேற்று அதன் மூலமே தமது பண்பாட்டுப் பேணுகையை நடத்த வேண்டியதாயிற்று.

ஆங்கில ஆட்சியும், மிஷனரிமார்கள் அறிமுகப்படுத்திய கல்வி முறைமையும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கிறிஸ்தவத்தின் நேரடித் தாக்கமில்லாத கல்வியை உணர் மட்டத்தினர் விரும்பினர். அதாவது பாரம்பரியச் சமூகச் செல்வாக்கையும் அதிகார மேலாண்மையையும் ஊறுசெய்யாத வகையில் புதிய கல்வி முறை அமைந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்பதைப் பட்டவர்த்தனமாகத் தெரிவித்தனர்.

இந்த விடயம் பற்றிக் கணிசமான ஆராய்ச்சி நடந்துள்ளது. ஆறுமுகநாவலர் பற்றிய ஆய்வுகள் பலவற்றில் இவ்விடயம் பேசப்பட்டுள்ளது. (நாவலர் நிறைவு நு}ற்றாண்டு விழா மலர் – பதிப்பு க. கைலாசபதி 1979) எனவே அவற்றை மீண்டும் இங்கு எடுத்துக் கூறாமல், கிறிஸ்தவ கல்வியை இந்துக்கள் நோக்கிய முறைமை பற்றியும், கிறிஸ்தவ வழிக்கல்விக்கான எதிர்;புக்கான காரணங்கள் யாவை எனக் கிறிஸ்தவர்கள் கருதினர் என்பது பற்றியும் சில முக்கியமான தரவுகளை அருகருகே வைத்துக் பார்ப்பது இவ்விடயம் பற்றிய ஒரு தெளிவான புலப்பதிவுக்கு உதவுவனவாகும்.

தனது பாடசாலைக்கான நிதிக்கொடை கேட்டு ஆறுமுகநாவலர் எழுதிய முறையீடு பின்வருமாறு :

???????

(Appendix – Navalar Apeals for state Aid” in நாவலர் பணிகள் – தனஞ்ஜெயராசசிங்கம் பேராதனை – 1969) ஆங்கில ஆட்சியை வரவேற்கும் நாவலர், மிஷனரிகளின் தேவையையும் ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டு ஆங்கிலம் கற்க வருபவர்கள் மீது கிறிஸ்துவ மதக்கருத்துக்களைக் திணிக்கக் கூடாது என்று சொல்கிறார். அந்தக் கல்வியைப் பெறும் வரையில் தான் அவர்கள் மிஷனரிமார் சொல்வதை ஏற்றுக் கொள்கிறார்கள். கல்வி முடிந்த பின்னர் அதற்குக் கிஞ்சித்தேனும் மதிப்புக் கொடுக்கவில்லை என்று கூறுகிறார் இங்கு தமிழ் மாணவர் எனக் கொள்வது அக்காலக் கல்வி முறைமைக்குள் வரக்கூடிய தமிழ் மாணவரையே.

நாவலரின் இந்த நிலைப்பாட்டை ஒரு கிறிஸ்தவ மிஷனரி எவ்வாறு பார்த்துள்ளார் என்பது சுவாரசிமானதும்.

வெஸ்லியன் மிஷனரியைச் சேர்ந்த றொபின்சன் என்பவர் நாவலர் கல்வி இயக்கத்தின் நோக்கம் பற்றிக் குறிப்பிடும் பொழுது பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“As long as 1842, the gentry of Vannarpanne showed themselves very uneasy at the

????

கிறிஸ்தவம் சாதாரண மக்களிடையே பரவுவதனாலும், திறமையும் கல்வியுமுடையோர் தமது பாரம்பரிய அதிகார அடுக்கமைவு மேலாளரை மீறி முன்னேறுவதனாலுமே உயர்மட்டத்தினர் தங்களுக்கென ஒரு பாடசாலையை 1842 இல் நிறுவினர் என றொபின்சன் பாதிரியார் கூறுகின்றார்.

மேலிருந்து வரும் சமூகச் சலுகைகளை அடிநிலைக்குச் சுவறவிடாது தமது நிலையினுள் அமைத்துக் கொள்வது யாழ்ப்பாணத்துச் சமூக மேலாண்மை மரபின் ஒரு பண்பு என்பதனை எனது ~~யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளலில்|| (1993) எடுத்துக் கூறியுள்ளேன்.

கிறிஸ்தவம் ஏற்படுத்திய பண்பாட்டுத் திரைவுக்கு எதிராக இந்தியாவின் சில பாகங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சகலரையும் உள்ளடக்கிய இயக்கங்கள் தோன்ற, இங்கோ சமயப் பேணுகை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நலன்களின் பேணுகையையே வற்புறுத்திநின்றது.

கிறிஸ்துமதத் தாக்கத்தினதும் நவீனமயவாக்கத்தினதும் தாக்கங்களிடையே பாரம்பரியப்பேணுகையானது இரண்டு கருத்துநிலைத் தளத்திலிருந்து தொழிற்பட்டது.

1. நவீனமயவாக்க உத்திகளையே பயன்படுத்தல்
– அச்சுப்பதிவு
– செய்யுளிலக்கியங்களை உரை வடிவில் தரல்
– துண்டுப் பிரசுங்களைப் பயன்படுத்தல்

2. பாரம்பரியக்கல்வி முறையையும் சில நடவடிக்கைகளையும் பேணுதல்
– புராணபடனமரபு
– குரு – சிஷ்ய முறையைப் பேணல்
– பாரம்பரியச் சமூகக் கொள்கைகளைப் பேணல். ஆதில் எவ்வித அசைவியக்கத்தையும் காண
விரும்பாமை.

நூவலர் இந்த இரண்டு அமிசங்களையும் இணைத்து நின்றார். ஆனால் அவரது காலத்தின் பின்னர் வந்த இந்து ஆங்கிலப் பாடசாலை முறைமையானது பாரம்பரியக் கல்வி முறைத் தொடர்ச்சியினைப் பேணும் முறையைக் கைவிட்டு, இந்து மதச்சூழலில் புதிய பாடத்திட்டத்தினைப் பயிற்றுவிக்கும் முறைமையை ஏற்றுக் கொண்டது. அந்தப் பெருமாற்றத்தைக் குறிப்பதே யாழ். இந்துக் கல்லு}ரியின் தோற்றமாகும் (1889). இந்த மாற்றம் நாவலரின் பின்னரே நடைபெறுகின்றது.

ஆறுமுக நாவலரின் பின்னர் சைவப் பேணுகை சம்பந்தமாக இரு சிந்தனைப் போக்குகள் தொழிற்படுவதைக் காணலாம். ஓன்று சைவ ஆங்கிலப் பாடசாலைகளைக் கட்டும் மரபு; மற்றது மேனாட்டு நாகாPக இணைவு சற்றுமின்றிப் பாரம்பரிய சைவத் தமிழ் கல்வியைப் பேணும் முறைமை.

1889 யாழ் இந்துக் கல்லு}ரியின் தோற்றத்தின் பின்னர் ஆங்கிலக் கல்வியை சைவச் சூழ்நிலையில் பயிலும் பண்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் சைவ ஆங்கிலக் கலாசாலைகள் தோன்றத்தொடங்கின.

அதே வேளையில் மறுபுறத்தில் நாவலர் தோற்றுவித்த இலக்கிய மரபைப் பின் பற்றும் பாரம்பரிய இலக்கிய இலக்கணப் பயில்வும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த மரபின் தன்மையைப் பற்றி வல்வை. சுp. வைத்தியலிங்கம்பிள்ளை எழுதியுள்ள சிறு நு}லில் குறிப்பிட்டுள்ளேன்.

யாழ்ப்பாணத்துத் தமிழரிடையே காணப்பட்ட இந்த மரபுப் பேணுகை முயற்சிகள் போன்ற ஒரு பேணுகை முயற்சியினை யாழ்ப்பாணத்து முஸ்லிம்களிடையேயும் காணலாம். ஹக்கீம் மீரு முகிய்யதீன் புலவர், யாழ்ப்பாணம் சேகுத்தம்பிப் புலவர், சுலைமான் லெப்பை, சுல்தான் தம்பிப் பாவலர் முதலியோர் 19ஆம் நு}ற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர்களாவர். (அப்துல் ரகீம் – யாழ்ப்பாண முஸ்லிம்கள் – வரலாறும் பண்பாடும் – 1979) ஆனால் இந்துக்கள் ஆங்கிலக்கல்வியை தமது மதச்சூழலில் படிப்பிக்கத் தொடங்கிய அந்த முறைமையினை முஸ்லிம்கள் மேற்கொள்ளவில்லை. இதனால் அவர்கள் கல்வியில் பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருபதாம் நு}ற்றாண்டின் தொடக்கத்தில் அவர்கள் யாழ்ப்பாணம் சோனக குடியிருப்புக்கு அருகே இருந்த பாடசாலைகளில் ஆங்கிலம் படித்தனர். இவ்வகையில் வைத்தீஸ்வராக் கல்லு}ரி முக்கிய இடம் வகித்ததெனலாம். அப்பாடசாலையின் நிர்வாகம் இராமகிஷ்ணமிஷனை சார்ந்திருந்தமை அனுமதி நெகிழ்ச்சிக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

கிறிஸ்தவம் யாழ்ப்பாணப் பாரம்பரியத்துக்கு ஊறுசெய்ததா என்பது ஒரு முக்கியமான விடயமாகும். நாவலரும் அவர் தம் மரபினரும், குறிப்பாக நாவலர் மரபினைப் போற்றியோர் எடுத்த நிலைப்பாடும், பற்றிய கிறிஸ்தவக் கண்ணோட்டத்தை நோக்குவது கடமையாகின்றது.

எஸ்.ஜெபனேசனின் அமெரிக்க மிஷனும், இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் (1983) என்னும் நு}லுக்கு முன்னுரை வழங்கிய முன்னாள் பிசப்பான கலாநிதி எஸ்.குலேந்திரன்.

“To say that the cultural activities of the missionaries destroyed our culture is not due to (as some of us think ) malice but to a mistake. There are many who say the British destroyed the ancient culture of India; but few of them, if given the chances, World like to live in India before the British, with it suttee system, its thuggery, child widons and the highhanded behavions of the Brahmins.

A culture that to al;l new influences, new ideas and new insights, does not express itself to new experiences but is handed down from generation to generation, wrapped up as in a parcel is a died thing. It is new influences and experiences that renew a culture and make it like.

The mistake made by those who denounce the cultural activates of the missions as having dealt out death to the old cutture of Jaffna are actually denouncing it for having given it a new life”

புதிய பண்பாட்டு அனுபவங்களுக்கு முகங்கொடுத்ததானாலேயே தமிழ்ச்சமூகம் விழிப்படைந்து புத்து}க்கத்துடன் வரும் காலத்தை எதிர்நோக்ககியதென்று கூறும் ஆயர் குலேந்திரன் தேவ ஊழியச் சபைகள் மரபு வழிப்பண்பாட்டை மரணிக்கச் செய்யாமல் அதற்குப் புத்துயிர் வழங்கினர் என்று கூறுகின்றார். கலாநிதி குலேந்திரனின் இக்கருத்து சற்று நிதானமாகவே நோக்கப்படல் வேண்டும்.

கிறிஸ்தவர்கள் பங்களிப்புப் பற்றிப் பேசும் இக்கட்டத்தில், அவ்வழியாக வந்த இரு முக்கிய செல்நெறிகளைப் பதிவு செய்து கொள்வது அவசிமாகும்.

அ. கிறிஸ்தவர்கள் தம் தழிழ் வழிப்பேற்றைத் தமிழில் பதிவு செய்து கொண்டமை.

ஆ. தமிழின் புராதான இலக்கிய வளத்தை ஆங்கிலத்தில் எழுதியமை.

முதலாவதற்கு உதாரணமாக பாவலர் ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தைக் (1886) குறிப்பிட வேண்டும். ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை மேனாட்டு மரபுக்கியைய எடுத்தக் கூறியவர் (1859) புத்தளத்தை வரலாற்றைச் சேர்ந்த காசிச் செட்டியாராவர். கிறிஸ்தவர்கள் தங்கள் தமிழ்ப்பாரமபரியத்தை விதந்து கூறும் பண்பு தமிழகத்திலும் காணப்படுவதொன்றாகும். (தமிழில் இலக்கிய வரலாறு 1888 – 1898) இருபதாம் நு}ற்றாண்டின் முற்கூற்றில் சுவாமி ஞானப்பிரகாசர் ஆற்றிய ஆராய்ச்சிகள் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

கிறிஸ்தவர்கள் தாக்கம் ஏற்பட்டதன் பின்னர், அதற்கு முகங்கொடுக்கத் தக்க முறையில் நாவலரால் வளர்ந்தெடுக்கப்பட்ட சைவமானது மெதடிஸ்த து}ய்மைவாத அணுகுமுறையைக் கொண்டது என்பது ஏற்கனவே எடுத்துக் கூறப்பட்டுள்ளது. (ளுiஎயவாயஅடில 1979)

நாவலரின் பாரம்பரியப் பேணுகை முயற்சியின் பின்னர், யாழ்ப்பாணத்துப் புலமைத்துவப் போக்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது யாழ்ப்பாண மாணவ காங்கிரசாகும். (வுhந ளவரனநவெ உழபெசநளள)

1924 டிசெம்பரில் நடைபெற்ற அதன் முதலாவது மகாநாட்டில் அது நிறைவேற்றிய தீர்மானங்கள் அது எத்துணைத் தளமாற்றைத்தன்மை (சயனiஉயட) உடையதாயிருந்தது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

அத் தீர்மானங்கள் பின்வருமாறு;

“1. தாய்நாட்டின் சேமநலத்திற்கும், அதன் நலன்களை எல்லாச் சமயங்களை சார்ந்தவர்களாலும் சமமான நேர்மையுடனும், விநயத்துடனும் ஊக்குவிப்பது முடியும் என்று இந்த காங்கிரஸ் நம்புவதால், இக்காங்கிரசானது அதனைப் பொறுத்தவரையில் நாட்டிலுள்ள பல்வேறு சமயநிறுவனங்களிடையே வேறுபாடு காட்டுவதில்லையென்றும், எந்த ஒன்றுக்கும் முதலிடம் கொடுப்பதில்லையென்றும் காங்கிரஸின் பொதுக்கூட்டங்களிலோ, செயற்குழுக் கூட்டங்களிலோ அல்லது செய்யும் பிரச்சார வேலைகளின் பொழுது எந்தவொரு மதம் சார்ந்த எந்த விடயமும் கிளப்பக்கூடாதென்றும், இதற்கான ஒரு வாசகம் ஆட்சியமைப்பு விதிகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும்,

2. …………………………..

3. தற்போது நாட்டில் நிலவும் சாதி வேறுபாடுகள் முன்னேற்றத்திற்குக் தடையென இக்காங்கிரஸ் கருதுகின்றதென்றும், நம்மிடையே இருந்து தீண்டாமை என்னும் காயத்தை இயன்றளவு அகற்றுவதற்கு காங்கிரஸ் அங்கத்தவர் முயல்வாரென்றும்

4. தேசிய இலக்கியத்தைப் படிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் வாரத்தில் குறைந்தது மூன்று மணித்தியாலங்களையாவது செலவிடுவதென காங்கிரசின் அங்கத்தவர்கள் தம்மைக் கட்டுப்படுத்தும் வாக்குறுதியொன்றைச் செய்து கொள்வதென்றும்,

5. தேசிய இலக்கியம், கலை, இசைத்துறைகளில் அவற்றின் மீட்பிற்கு வேண்டிய தன்னாக்கப்படைப்பினைத் தோற்றுவிக்கும் எவருக்கும், பரிசு, பதக்கம் அன்றேல் யாதுமொரு ஊக்குவிப்பினை காங்கிரஸ் கொடுக்கவேண்டுமென்றும்,

6. அ. விஞ்ஞானம் ஆ. புனைகதை இ. சுமூகவரலாறு வாழ்க்கை ஆகிய துறைகளில் தேசிய இலக்கியத்தை அபிவிருத்தி செய்வதற்கு வேண்டிய வழிவகைகளை உண்டாக்குவதற்கு செயற்குழுவினால் ஐந்து அங்கத்தினரைக் கொண்ட குழுவை நியமிப்பதென்றும்,

7. தென்னிலங்கையில் தமிழும், வட இலங்கையில் சிங்களமும் சிங்களமும் படிப்பிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக காங்கிரஸ் எடுக்க வேண்டும் என்றும்,

8. 1925 ஏப்பிரலில் நடத்தப்படவுள்ள காங்கிரஸ் அமர்வுடன் எல்லா இனங்களினதும் (பிரதானமாக சிங்களவர்களினதும் தமிழர்களினதும் ) கொள்கைகளையும் நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அமைப்பதற்கு வேண்டிய நடவடிக்ககைகளை எடுக்க வேண்டுமென இந்தக் காங்கிரசின் செயற்குழுவைக் கேட்டுக் கொள்வதென்றும்,

9. இந்தக் காங்கிரஸ் இயக்கத்தின் நோக்குகளை வெகுசனத்திற்கு விளக்கவும், மது ஒழிப்பு, கூட்டுறவு ஆகிய துறைகளினை அவர்களுக்குப் புகட்டவும் வேண்டிய துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவதற்கென பிரசுரக்குழுவொன்றைத் தோற்றுவிப்பதென்றும்,

10. காங்கிரஸ் அங்கத்துவர்கள் இயன்றளவு உள்ளுர் வர்க்கத்தையும், கைத்தொழில்களையும் ஆதரிக்க வேண்டும் என்றும், அவர்கள் குறிப்பாக அந்நிய சவர்க்காரம், வாசனைத்திரவியங்கள், பூசல் மா, மது, சிகரெட் ஆகியவற்றை வாங்காது தவிர்க்க வேண்டுமென்றும்,

இக்காங்கிரஸ் தீர்மானிக்கிறது” எனப் பிரகடனப்படுத்திற்று.

சைவமும் தமிழும், கிறிஸ்தவமும் தமிழும், சமூக ஒதுக்கற்பாடு, பாரம்பரிய மரபுப்பேணுகை என இது வரை பேசப்பட்டு வந்த அரங்கில் இது முற்றிலும் புதுமைiயான பார்வையையும் கண்ணோட்டத்தையும் முன்வைத்தது.

காங்கிரஸ் மொழியும், இலக்கியமும், மொழி வளர்ச்சியும் பேசப்பட்டு வந்த முறைமையானது இதற்கு முன்னர் மொழி, இலக்கியம் பற்றி நிலவிய கண்ணோட்டங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். மதங்களைக் கடந்த ஒரு மனிதாயத நோக்கில் கலை இலக்கியங்கள் பேசப்படத் தொடங்குகின்றன. பாரமபரியப்பண்பாட்டை மதநோக்குக்குள் வரையறை செய்துவிடாது தேசிய பண்பாடு என்ற பரிமாணத்தில் நோக்கும் மாற்றம் மிக முக்கியமானதொன்றாகும்.

பாரம்பரியத்தின் மேன்மையை தேசிய கண்ணோட்டத்தில் வலியுறுத்தும் அதே வேளையில் பாரம்பரியச் சமூகத்தில் நிலவிய ஒடுக்குமுறையை – சாதி வேறுபாட்டை – அது முற்றாக நிராகரித்தது.

மேனாட்டாட்சி எதிர்ப்பு இந்தக் கண்ணோட்டத்தில் முக்கிய இடத்தை வகித்தது. இதன் காரணமாக சனநாயகம், விடுதலை, சுதந்திரம் என்ற கோட்பாடுகள் முன்னிலை எய்தத் தொடங்குகின்றன. மாணவர் காங்கிரஸ் முன்வைத்த சுதந்திரம் சனநாயக அடிப்படையில் இயங்கும் ஒன்றாகும்.

பாரம்பரிய அடுக்கமைவுச் சமுதாயத்தின் பாகுபாட்டுக் கொள்கைக்குப் பழகிக் போயிருந்தவர்களுக்கு இந்தக் கோரிக்ககைகள் சமூகத்தின் அடித்தளத்தையே மாற்றுவனவாகக் காணப்பட்டது.

இந்தத் தாராண்மைவாத தளமற்ற அணுகுமுறையானது ஆங்கிலக்கல்வி வழியாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட உந்துதல் வழியாக வந்தனவாகவும், அத்துடன் 1920 முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உந்துசக்தியாகவிருந்த காந்தீயத்தினடியாகவும் வந்தது.

இந்தப் புதிய கண்ணோட்டத்தின் இலக்கியநிலைப் பிரதிபலிப்பாக ‘ஈழகேசரி’ (1930) பத்திரிகையும் பின்னர் 1942 இல் தோன்றிய ‘மறுமலர்ச்சி’ இலக்கிய இயக்கமும் அமைந்தன.

இந்த உந்துதல் காரணமாகவே வட இலங்கைச் சங்கீதசபை(1931இல்) தோன்றுகின்றது. தாகூரின் வருகை கலை அபிமானிகளுக்கு புத்து}க்கத்தை அளித்தது. இச்சந்தர்ப்பத்தில் பாரம்பரிய சமூக அமைப்பிலும், நாவலரியக்கக் கண்ணோட்டத்திலும் கலைகள் உயரிய இடத்தைப் பெறுவனவாக அமையவில்லை. எனினும் உண்மையைக் குறிப்பிடவேண்டும். இது பற்றிய விபரங்களை காரைசுந்தரம்பிள்ளையின் இசைநாடக வரலாற்றுக்கு (1986) எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

கலை இலக்கியம் பற்றிய இந்தக் கண்னோட்டம் எத்தகைய பயனுள்ள சாதனைகளுக்கு காரணமாயிருந்தது என்பதற்கு ஐசாக் தம்பையாவினதும், அவரது மனைவி மங்களநாயகி தம்பையாவினதும் புலமைத்துவ பங்களிப்புக்கள் சான்றளிக்கின்றன. கிறிஸ்தவரான ஐசாக் தம்பையா தாயுமானவர் பாடல்கள் ஐரோப்பிய சிந்தனைமரபில் வைத்து நோக்கும் பொழுது மிக நுண்ணிதானவை என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். ஆவர் அந்நு}லுக்கு (1926) எழுதியுள்ள முன்னுரையில் தமிழ்ப்பண்பாட்டின் சிறப்பியல்புகளை பெருமித உணர்வுடன் எடுத்துக்கூறுகின்றார். ஐரோப்பிய சிந்தனைதரபு வழியாக வந்த புதிய நோக்குகள் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் விளங்கவும் புது முறையில் வியாக்கியானிக்கவும் உதவும் முறையினை இந்நு}லிலே காணலாம். மங்களநாயகி தம்பையாவே “நொறுங்குண்ட இருதயம்” என்ற நாவலை எழுதியவர். இப்புதிய கண்ணோட்டம் சமூகச் சிந்தனையில் ஏற்படுத்திய விஸ்தரிப்பினை இந்த ஆக்கங்களில் காணலாம்.

1920 களிலிருந்து நவீன தமிழிலக்கியம் ஈழத்துத்தமிழ்ப்பாரம்பரியத்துடன் இரண்டற இணைகின்ற தன்மையை அவதானித்துக் கொள்ளல் வேண்டும். ஆங்கிலத்தின் தாக்கம் இரண்டறச்சுவறத் தொடங்கியமையால் இப்பண்பு காணப்படுகின்றதெனலாம். வந்த மேனாட்டுப் பண்பாட்டுப் பண்புகளை தளமாகக் கொண்டு எமது சமூகத்தைப் பார்க்கத் தொடங்கும் செல்நெறிதொடங்குகின்றதெனலாம். இது அரசியலில் மாத்திரமல்லாமல் சமூக பண்பாட்டுத் துறைகளிலும் காணப்படுவதையே இப்பண்பு காட்டுகின்றது. இதற்கான உதாரணங்களாகவே இலங்கையர்கோன், வைத்திலிங்கத்தின் சிறுகதையாக்கங்களைக் கருதவேண்டும். மேனாட்டுத்தாக்கங்களை உள்வாங்கி மேற்கிளம்பிய இன்னொருதுறை நாடகமாகும். கலையரசு சொர்ணலிங்கம் இத்துறையில் முன்னணியில் நிற்கின்றார்.

இப்பண்பின் வெளிப்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது யாழ்ப்பாணத்தின் கலை, இலக்கிய வரலாற்றில் அதிக முக்கியத்துவமளிக்காதுள்ள ஒருவர் கலைப் புலவர் க.நாகரத்தினம் – பற்றிக் குறிப்பிடல் அவசியமாகும். தூகூர் வழிவந்த இந்தியக்கலை மறுமலர்ச்சியின் யாழ்ப்பாணக் கலை வெளிப்பாடு கலைப்புலவரதும் அவரது மனைவியாரினதும் கலைத்தொழிற்பாடுகளில் தெரிய வருகின்றதெனலாம்.

ஆறுமுகநாவலரால் கண்டிக்கப் பெற்ற இசை, நடனக் கலைப்பயில்வினை யாழ்ப்பாணத்து மத்தியதரவர்க்கத்தினரிடையே கொணர்ந்த பெருமை இக்குடும்பத்தைச்சாரும். சுhஸ்திhPய இசைப்பயில்வினை இவர்கள் ஊக்குவித்தார்கள்.

ஆறுமுகநாவலரால் கண்டிக்கப்பெற்ற இசை, நடனக் கலைப்பயில்வினை யாழ்ப்பாணத்து மத்தியதர வர்க்கத்தினரிடையே கொணர்ந்த பெருமை இக்குடும்பத்தைச்சாரும். சாஸ்திhPய இசைப்பயில்வினை இவர்கள் ஊக்குவித்தார்கள்.

இவர்களின் சமகாலத்தவர்களாக விளங்கிய கனகசபை போன்றோரே யாழ்ப்பாணத்தின் சமய சார்பற்ற ஓவிய மரபை வளர்ப்பதில் முன்நின்றனர்.

நாவலர் பாரம்பரிய வழியே நின்ற யாழ்ப்பாணத்துக்கலை இலக்கியவரலாற்றினை நோக்கும் பொழுது வலியுறுத்தப்படாத இந்தப் புலமைப் பாரம்பரியத்திற்குரிய இடத்தை வழங்குதல் அவசியமாகும்.

மேற்குறிக்கப்பெற்ற இவர்கள் தாம் வாழ்ந்த காலத்தின் சமூகப்பண்பாட்டு விடயங்களில் முக்கிய பங்கெடுத்தனர்.

1920 – 30 களிற் காணப்படும் இன்னொரு முக்கிய பண்பு இக்காலத்தில் முற்றிலும் ஆங்கிலத்திலேயே யாழ்ப்பாண வாழ்க்கையின் வளத்தைச் சித்தரிக்கும் ஆற்றலுடையவர்கள் தோன்றியமையாகும். அழகு சுப்பிரமணியம், தம்பிமுத்து ஆகியோர் இதற்கான உதாரணங்களாவர். தம்பிமுத்துக்கவிஞர், அழகு சுப்பிரமணியத்தின் எழுத்துத்திறன் காரணமாக யாழ்ப்பாண வாழ்க்கையின் செழுமை ஆங்கில இலக்கியத்தின் ஆற்றலுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேனாட்டுச் சூழலில் வாழ்ந்தே, இந்த இலக்கியச் செயற்பாட்டினில் ஈடுபட்டனர் என்பதும் உண்மையாகும்.

சைவப்பாரம்பரியத்தில் வந்தோரும் தங்கள் சிந்தனைகளை ஆங்கிலத்தில் பொறிக்கும் ஒரு மரபு இருந்தது என்பதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். இந்தச் செல்நெறியின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் சேர் பொன்னம்பலம் இராமநாதனும், அவரது சகோதரர் சேர் பொன்னம்பலம் அருணாசலமுமாவார்கள்.

மாணவர் காங்கிரஸின் சனநாயக நோக்கு சாதி முறைமை பற்றிய அவர்களது கண்ணோட்டத்தில் நன்கு புலனாகிறது. இந்த நடவடிக்கையுடன் தாழ்த்தப்பட்டோருக்கு விதிமுறையான கல்வி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது. கட்டாயக்கல்விச் சட்டம் ஆகியவற்றினை இணைந்து நோக்கும் பொழுது இது ஒரு முக்கிய செயற்பாடாகும். இவர்களுக்கான ஆங்கிலக்கல்வி பெரும்பாலும் கிறிஸ்தவக்கல்வி நிலையங்கள் மூலமாகவே கிடைக்கின்றது. சமாசன இயக்கம் மூலம் கல்விவசதி தமிழ்ப்பாடசாலைகளில் கிட்டிற்று.

மாணவர் காங்கிரஸை இளைஞர் காங்கிரஸ் என 1931 இல் பெயர் மாற்றம் செய்துகொண்டனர். யாழ்ப்பாணச் சமூகச்சிந்தனையின் வரலாற்றில் இவ்வியக்கம் பெருத்தமாற்றங்களை ஏற்படுத்தியது. டொனமூர் ஆணைக்குழு ப10ரணசுய ராட்சியத்தை வழங்கவில்லையென்பதால் அதற்கான தேர்தலையே பகிஸ்கரிக்கும் முயற்சியில் அது ஈடுபட்டது. அதன் பின்னர் செல்வாக்கு குன்றத் தொடங்கிற்று.

எழுத்துநிலையில் பார்க்கும் பொழுது மாணவர் காங்கிரஸ் இயக்கம் திடீரென பரிய மாற்றங்களைக் கொண்டுவரவில்லை என்பது உண்மையே. சுமூக அடுக்கமைவு காரணமாக எழுத்தறிவு வரையறுகச்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தில் அந்த அறிவுமுறையை மாற்றுவதற்கான முயற்சிகளை முன்வைத்ததே இவ்வியக்கத்தின் முக்கியமான பணியாகும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசிய பண்பாடுகளில் மறுமலர்ச்சி, சனநாயக மயவாக்கம் ஆகிய துறைகளில் இவ்வியக்கம் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளது.

இவ்வாறு கூறுகின்றபொழுது மாணவர் இளைஞர் காங்கிரஸ் யாழ்ப்பாணத் தமிழர்களிடையே ப10ரணமான தளமாற்றத்தினை ஏற்படுத்திவிட்டதாக கூறிவிட முடியாது. இது அரசியல் துறையில் அது பெற்ற தோல்வியால் நன்கு தெரியவருகின்றது. மேலும் இந்த இயக்கத்தினால் யாழ்ப்பாணத்தின் அடிப்படைப் பொருளாதார அமைப்பில் எவ்வித மாற்றத்தையும் செய்ய முடியவில்லை. ஆயினும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் பாரம் பரிய நவீனத்துவ நோக்குகள் இலங்கைத் தமிழரிடையே சனநாயக அடிப்படையில் பரவுவதற்கான ஒரு வாயிலாக அமைந்தன.

இதன் செயற்பாடு காரணமாக யாழ்ப்பாணத்தில் இரண்டு கருத்து நிலைகள் நிலவத்தொடங்கின. ஓன்று, நாவலர் இயக்கம் வழிவந்த பாரம்பரியப்பேணுகை. அதாவது மேலிருந்து கீழ்வரும் புதிய நடவடிக்கைகளை சமூகத்தின் அடிப்படை அமைப்பு மாறாத முறையில் ஏற்றுக்கொள்ளல். இது பெரும்பாலும் சமூக – மத விடயங்களில் காணப்பட்டது. இன்னொன்று தாராண்மைவாத நோக்காகும். இது பிரதானமாக அரசியலில் தொழிற்பட்டதாகும். இத்தாராண்மைவாதம் சிலரால் சமூக – மத மட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டன. சிலர் அவ்வாறு சொல்லவில்லை. முற்றும் முழுதாக நோக்கும் பொழுது சமூகத்தில் நெகிழ்ச்சி ஏற்பட்டதெனலாம். இளைஞர் காங்கிரஸின் செல்வாக்கு ஏறத்தாழ 1922 முதல் 1922 முதுல் 1938 வரை நீண்டதென சீலர் கதிர்காமர் குறிப்பிடுவர். இளைஞர் காங்கிரஸ் தோற்றுவித்த தளமாற்ற நோக்கு அதில் ஈடுபட்டிருந்தோர் பலரை காங்கிரஸின் ஒடுக்குதிசையின் பின்னர் மாக்ஸியத்தை நோக்கி நகரச்செய்தது. (சிலன் கதிர்காமர் 74, 99, 102)

“By the mid thisties the youth congress members began to go their several ways. Some joined the justify mevoment. Among there were P.Nagalingam, Tharmakulasingam, whose premature death robber the Lanka Sama Samaya Party of an able leader in the North, S.Sellamuthu and K.Satchithanandam, T.Duraisingam and others were involve with the Suriya Mal Movement in the South and later became consistent supporters of the communist party. Handy Perinbanayagam himself admitted later that his pohheal sympathies were “justifyish and that by and large without special connections, be sympathized with the LSSP”

(Silan Kathirkamar p 102)

யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் வலுக்குன்றத் தொடங்கிய கட்டத்தில் இலங்கை மட்டத்தில் மார்க்சீயச் சிந்தனை மேலெழும்பத்தொடங்குகின்றது. சிங்களப் பிரதேசங்களிலும் மார்க்சீயச் சிந்தனை இளைஞர் இயக்கமாகவே தொடங்குகின்றது. 1935 இல் லங்கா சமசமாஜக் கட்சி தொடக்கம் பெறுகின்றது. இலங்கையில் மார்க்சீய வளர்ச்சியால் “சூரியமல் இயக்கம்” (1939) முக்கியமான ஒரு கட்டமாகும். சூரியமல் இயக்கம் யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் மார்க்சீயம் ஆரம்பத்தில் இரண்டு நிலைகளிற் தொழிற்பட்டதெனலாம். முதலாவதாக அது ஒடுக்கு முறைக்கெதிரான ஒரு சக்தியாகத் தொழிற்பட்டமையாகும். ஏற்கெனவே தொழிற்பட்டுவந்த ஒடுக்கப்பட்டோhர் ஊழியர் சங்கத்துடன் (னுநிசநளளநன ஊடயளள ளுநசஎiஉந டநயபரந) இதன் முதன்மையாளராக ஜோன்பவுல், ஜேக்ஸ் ஆகியோர் தொழிற்பட்டனர்) இயைபினை ஏற்படுத்திக் கொண்டது. இரண்டாவதாக அக்காலத்து இலங்கை மட்ட முக்கிய மார்க்சீயச் செயற்பாடு ஒன்றுக்கிணங்க தொழிற்சங்க நடவடிக்கையிலீடுபட்டமையாகும். பஸ் தொழிலாளர் இயக்கம், சுருட்டுத் தொழிலாளர் இயக்கம் என முக்கிய தொழிற்சங்க நிறுவனங்கள் வளர்ந்தன.

நிறுவன hPதியாக நோக்கும் பொழுது முதலில் தோற்றுவிக்கப்பட்ட மார்க்ஸிட்கட்சி லங்கா சமசமாஜக்கட்சியாகும். (1935) பின்னர் இரஷ்ய நாட்டில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக (டிறொஸ்கி – ஸ்டாலின் பிணக்கு, ஸ்டாலினின் மேலாண்மை ஆகியன) பிளவுகள் ஏற்பட்ட முதலில் (1941) ஐக்கிய சோஷலிசக்கட்சி உருவானது. அது 1943 ய10லையில் பொதுவுடமைக்கட்சியாக நிறுவப்பட்டது. ஆரம்பகாலத்தில் லங்கா சமசமாஜக்கட்சியிலும் பொதுவுடமைக்கட்சியிலும் தமிழர்கள் முக்கிய இடம் வகித்தனர். தர்மகுலசிங்கம் உத்தியோகப10ர்வ அங்கத்தவராக இருக்கவில்லையெனினும் சமசமாஜக்கட்சி ஆதரவாளராகவே விளங்கினார். கம்ய10னிஸ்ட் கட்சியில் பொன்.கந்தையா, அ.வைத்தியலிங்கம் ஆகியோர் முக்கிய இடம்பெற்றனர்.

யாழ்ப்பாண மட்டத்தில் மார்க்சீய இயக்கங்களில் ஈடுபட்டோர் இருவகைப்படுவர். முதலாவது குழுவினர்,தமது கல்வி காரணமாக மார்க்சீயம் சுட்டும் சமத்துவம், சுரண்டலெதிர்ப்பு ஆகியவற்றில் புலமைத்துவ ஈடுபாடு கொண்டவர்களாக இவர்களிற் பெரும்பாலும் உயர் குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருந்தமை வரலாற்றின் தவிர்க்க முடியாத நியதியாகும். ஆரம்ப காலத்தில் இந்த புலமைத்துவ நிலைப்பாட்டுடன் கட்சி அங்கத்துவம் அன்றேல் கட்சிச் சார்பும் தொழிற்பட்டது. இரண்டாம் குழுவினர் ஒடுக்குமுறைக்கு ஆளான சமூக மட்டங்களைச் சேர்ந்தவாக்ளாவர். இவர்கள் தமது சமூக எதிர்ப்புணர்வு காரணமாக சேர்ந்து, பின்னர் கட்சி நிலைப்பட்ட இலக்கியங்களையும் பிற எழுத்துக்களையும் வாசித்தமையால் புலமைத்துவப் பரிச்சயமுடையோராகிக் கொண்டவர்களாவர்.

இத்தகைய அணியினரைக் கட்டி வளர்ப்பதில் சமசமாஜக் கட்சியிலும் பார்க்க கம்யூனிஸ்ட் கட்சி அதிக ஆதரவைப் பெற்றிருந்ததெனலாம். யாழ்ப்பாணக் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் இந்த இரண்டாவது குழுவினர் 1948 அளவில் இலக்கிய ஆர்வமுடையோர் வளர்ந்திருந்தனர்.டொமினிக் ஜீவா, டானியல் முதலியோர் இவ்வாறு வளர்ந்தவர்களே. இவர்கள் கார்த்திகேயனால் வழிப்படுத்தப்பட்டவர்கள்.

இளைஞர் காங்கிரஸ் வழியாக வந்த ஊக்கத்தினால் வளர்ந்த மறுமலர்ச்சி இயக்கத்தில் இடதுசாரிச் சிந்தனையாளர்கள் ( அ.ந.கந்தசாமி) இந்த இலக்கிய இயக்கத்தில் முக்கிய இடம் பெறத் தொடங்கினர்.

இந்த இடதுசாரி இலக்கியக் களமாக 1954 முதல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் திகழ்ந்தது. கொழும்பை மையமாகக் கொண்டியங்கிய இது யாழ்ப்பாணத்தில் ஒரு வன்மையான கிளைகளைக் கொண்டிருந்தது.

மார்க்சீய இலக்கியச் சிந்தனைப் பரம்பலில் இந்நிறுவனத்தின் பணி கணிசமானதாகும். புpன்னர் 1960களில் பொதுவுடைமைக்கட்சி சீன சார்பு, ரஷ்ய சார்பு என இருகிளைப்படப் பிரிந்த பொழுதும் எழுத்தாளர் மட்டத்தில் இந்தச் சங்கத்தின் தொழிற்பாடு காரணமாக ஒற்றுமை பேணப்பட்டது.

இலங்கைத் தமிழ் எழுத்தாளரிடையே முற்போக்கு இலக்கியக் கோட்பாடு தொழிற்பட்டமை காரணமாக இருநிலைப்பட்ட எண்ணக்கருக்கள் இலக்கியத்தில் வளர்நதெடுக்கப்படலாயின. ஓன்று தேசிய இலக்கியக் கோட்பாடு. அக்காலத்து மார்க்சீயக் கட்சிகள் கொண்டிருந்த அரசியல் கோட்பாட்டிற்கமைய இது இலங்கை மட்டத் தேசியத்தையே வற்புறுத்தியது. ஆயினும் இலங்கைத் தமிழ் இலக்கியம் இந்திய வணிக இலக்கியத்தின் வழிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும், முதல் நிலைப்படுத்தி பேச வேண்டும் என்பதற்காகவும் ஈழத்தின் தமிழ் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட ஓர் ஈழத்தமிழ் இலக்கியத்திற்காகப் போராடியது. இலக்கிய நிலையில் முன்வைக்கப்பட்ட ஈழத்தமிழ் இலக்கியக் கோட்பாடு 1983 இன் பின்னர் தமிழ்த் தேசிய வளர்ச்சி பற்றிப் பேசப்பட்ட பொழுது, அதன் வளர்ச்சிக்கான பசளையாக அமைந்தது. மற்றயது யதார்த்தவாதம் என்னும் கோட்பாடாகும். இந்த அணுகுமுறை காரணமாக எழுத்தாளர்கள் சமூக ஜீவிகள் என்ற வகையில் தம்மைப் பாதிக்கும் சமூகப் பிரச்சனைகளை இலக்கியப் பொருளாக்கினர்.

இவ்விலக்கியச் செல்நெறி பாரிய மாற்றத்தினை ஏற்படுத்திற்று. சலுகைகள் மறுக்கப்பட்டவர்கள் தங்கள் பிரச்சனைகள் பற்றிய முதல் நிலை அனுபவங்களை எழுதத் தொடங்கியபோது, சமத்துவக் கருத்துநிலைகளை வற்புறுத்திய பொழுதும் ஈழத்தில் முதற் தடவையாக பாரம்பரிய மரபுகள் பற்றிய தனது எதிர்ப்பினைத் தெரிவிக்கத் தொடங்கிற்று. அது ஒரு நிலையில் நவீன எழுத்தாளர்களையும்,நவீன எழுத்து வடிவங்களையுமே நிராகரித்தது. இதனால் மரபு பற்றிய ஒரு முக்கிய இலக்கிய விவாதம் 1960களில் நடைபெற்றது.

இந்த மார்க்சீய இலக்கியத்தின் முக்கிய அங்கமாக விளங்கியது அது தோற்றுவித்த விமரிசனமாகும். இலக்கியத்தின் சமூக அடிப்படைகளை வற்புறுத்திய அந்த விமர்சன முறைமை புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்களை நியாயப்படுத்தியது மாத்திரமல்லாமல் நவீன காலத்திற்கு முற்பட்ட இலக்கியங்களையும் மார்க்சீய நோக்குநிலை நின்று விமர்சிக்கத் தொடங்கிற்று. இது தமிழிலக்கிய ஆய்வுச் செல்நெறியில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திற்று. அது மாத்திரமல்லாது இந்த விமர்சன முறைமை தமிழகத்திலும் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்தது. இந்த விமரிசன மரபுடன் கைலாசபதியின் பெயரும் எனது பெயரும் இணைக்கப்படுதல் வழக்கு. ஆயினும் இக்கால கட்டத்திற் பயின்ற எல்லா எழுத்தாளர்களும் இலக்கியத்தின் விமர்சன அமிசங்கள் பற்றிய தெளிவுடனேயே எழுதினர். இக்கால இலக்கிய வளர்ச்சியில் ஆக்கமும் விமர்சனமும் இணைந்தே சென்றன. இதன் காரணமாக ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் பலர் விமர்சனங்களையும் எழுதினர். ( முருகையன், இராசதுரை, இளங்கீரன் முதலியோர்)

இவ்வாறு பெருநிலைப்பட வளர்ந்த மார்க்சீய இலக்கியம் பற்றிய இரண்டு முக்கியமான சமகால விமரிசனங்கள் இருந்தன. முதலாவது இது அன்று நிலவிய தமிழ்த் தேசியத்தை வகுப்பு வாதமாகக் கருதியமையாகும். இது இலக்கிய அணி சார்ந்திருந்த அரசியற் கட்சிகளின் நோக்குக் காரணமாக ஏற்பட்ட ஒரு விளைவாகும். அக்காலத்தைய தமிழ்த் தேசியம் சமூகப் பி;ற்போக்குவாதத்துடன் இணைந்து நின்றமையும் இதற்கு ஒரு காரணமாகும். இரண்டாவது இந்த இலக்கியக் கண்ணோட்டம் ‘ மார்கசீயத்திற்கு அப்பாலான’ நிலைப்பட்ட விழுமியங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கவில்லை என்பதாகும். இவ்வாதத்தை மு.தளையசிங்கம் முன்வைத்தார். இவருடைய வாதம் இலக்கியம் ஆன்மீக சனநாயகத்திற்கான( ளிசைவைரயட னநஅழஉசயஉல) ஒரு களமாக அமைய வேண்டும் என்பதாகும். இந்த இரண்டு சமூக முக்கியத்துவம் உடைய மார்க்சீய எதிர்ப்பு வாதங்களைத்தவிர நவீனத்துவத்தின் இயல்பான ஒரு அங்கமாக நவ வேட்கை வாதத்தின் எதிர்ப்புக் குரலும் காணப்பட்டது. ஆனால் அது சமூக முக்கியத்துவம் உடையது என்று கூறிவிடமுடியாது.

ஆனால் இந்த விமர்சன முறைகள் யாவுமே நவீன இலக்கியத்தையே இயல்பான இலக்கிய வெளிப்பாடமாகக் கொண்டன.

முற்போக்கு இலக்கிய ஆக்கவீச்சு (1970) தொடக்கத்துடன் ஒடுங்குகின்றதெனக் கொள்ளலாம்.

அதனைத் தொடர்ந்து இரு காரணிகள் முக்கிமாகின்றன.

ஓன்று, 1970கள் முதல் தொடங்குகின்ற சிங்கள் மேலாண்மைவாதப் போக்கு. 1930கள் முதலே சிங்கள மேலாண்மைவாதம் முக்கிய ஒரு சக்தியாக மேற்கிளம்பிக் கொண்டு வந்ததெனினும் 1956 உடனேயே அது திட்டவட்டமான ஒரு அரசியல் செல்நெறியாயிற்று. தேசிய மறுமலர்ச்சி பற்றிய தெளிவின்மை காரணமாக மார்க்சீஸ்ட் கட்சிகளிலும் சிங்களத் தேசியத்தை இலங்கைத் தேசியமாக மயங்கிக் கொண்டன.

சிங்கள மேலாண்மை வாதம் வெகுவிரைவில் அரச அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு கொடுக்கத் தொடங்கியது (பொலிஸ், இராணுவ அட்டூழியங்கள்). ஆதனை எதிர்த்துத் தமிழ் இளைஞர் தீவரவாதம் மேற்கிளம்பத் தொடங்கிற்று. இத்தீவிரவாதம் தமிழ்த் தேசியத்தையம் மார்க்சீயத்தையும் இணைத்துக் கொண்டது. ஆத்துடன் இது தன்னைத்தான் நீக்கக் கோட்பாட்டுடன் (டுiடிநசயவழைn) இணைத்துக் கொண்டது. தளைநீக்கம் என்பது அரசியல், சமூக, பொருளாதார விடுதலையை உள்ளடக்கிய ஒரு கோட்பாடாகும்.

1970களில் மேலோங்கித் தொடங்கிய இந்தத் தீவிரவாதத்தில் 1974இல் நிறுவப் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இளைஞர் இயக்கங்கள் ஒவ்வொன்றிலும் பல்கலைக்கழக மாணவாகள் இடம் பெற்றிருந்தமை மாத்திரமல்லாமல், போராட்டத்தின் சமூக பொருளாதார அமசங்களிலும் பல்கலைக்கழகம் தொடர்புபட்டது.

இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் இதுவரை வந்தவற்றைக் கொண்டு நோக்கும்பொழுது இந்தக் கோட்பாடு நிலைப்பாடுகள் எடுத்துக் கூறப்படுவதிலும் பார்க்க, அரச நிலைப்பாடு காரணமாக ஏற்பட்ட அடக்குமுறையின் கோரமும், அந்த அடக்கு முறை காரணமாக மேற்கிளம்பும் மானிட அவலங்களுமே (ர்ரஅயn வசயபநனல) முக்கிய இடம் பெறத் தொடங்கின.கவிதையில்இது “மரணத்துள் வாழ்வோம்” கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. புனைகதைத் துறையுள் சிறுகதையில் இது நன்கு தெரியவந்துள்ளது. யோகநாதனின் “இரவல் தாய்நாடு”, “நேற்றிருந்தோம் அந்த வீட்டிலே” முதலிய நாவல்களிலும் இது நன்கு தெரிய வந்துள்ளது. இவ்வாறு வந்து சேர்ந்து வரலாற்று முக்கியத்துவம் உடையனவாகக் காணப்படினும் இவை யாவும் எந்த அளவிற்கு பாரம்பரியச் சமூக அமைப்பினை மாற்றியுள்ளன என்பது முக்கியமான வினாவாகும்.

யுhழ்ப்பாணத்தின் உற்பத்தி முறைமைகளை நோக்கும்போது, அடிப்படை மாற்றமின்மை தெரிவரும். புதிய விவசாய முறைகள் (பயிர் மாற்றம், தொழில்நுட்ப பயன்பாடு) பாரம்பரிய அமைப்புடன் ஒன்றிணைக்கப் பெற்றுள்ளனவே தவிர இவை காரணமாக அடிப்படை உற்பத்தி உறவோ, உறவுகளோ ஏற்படுத்தப்படவில்லை.இதன் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் மேலோட்டமானவையாகவுள்ளனவே தவிர அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக மேனிலைப்பட்டோரும் தமது அந்தஸ்தினை நிலைநிறுவுவதற்குப் பாரம்பரியத்தையும் பாரம்பரிய முறைகளையுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இந்த அமிசம் காரணமாக யாழ்ப்பாணத்தின் சமூகத்தளம் மாற்றப்படாதிருபதை அவதானிக்கலாம்.இதன் காரணமாக ஆமற்கூறிய கருத்தோட்டங்கள் செல்வாக்குச்செலுத்தி வருகின்ற அதே வேளையில் சமூகத்தில் சமாந்தரமான முறையில் பாரம்பரியமும், மரபுபேணுகையம் முக்கிய செயற்பாடாகத் தொழிற்படுவதைக் காணலாம். முத ஒழுகலாறுகள் முதல் புலமைத்துவ நெறிகள் வரை இந்தச் சமாந்தரத் தன்மை காணப்படுகின்றது. இது காரணமாக ஒரு சுவாரசியப் போக்கு ஒன்றுஉருவாவது வழக்கம். வருகின்ற புதுமைகள் தம்மைப் பழமையுடன் இணைத்து நிலைநிறுத்த விரும்பும் பண்பும், அதே வேளையில் பழைமையும் புதுமையின் தன்மைகளைக் காட்டிக் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்கின்ற ஒரு தன்மையுள்ளது. முதலாவது போக்கின் விளைவாக நாலரைத் தேசிய வீரராகக் காட்டிய ஒரு செயற்பாடு நிகழ, இரண்டாவது போக்கின் நிரந்தரத் தன்மை கரணமாக நாவலரின் கோடபாடுகள் இன்று பண்பாட்டுப்பேணுகையுடன் இணைந்து பேசப்படுகின்றது.

இந்த இயல்பு காரணமாக, நாம் ஆராய்ந்த எல்லாக் காலப்பகுதியிலும் பாரம்பரிழய இலக்கிய மரபு வன்மையுடன் பேணப்பட்டு வருவதைக் காணலாம். கோயில் சார்ந்த இலக்கியங்கள் இந்தத் பாரம்பரியத் தொடர்ச்சியினை எடுத்துக் காட்டுவனவாக அமைகின்றன.

1984க்குப் பின் ஏற்பட்டுள்ள சனவேற்ற மாற்றம், வாழ்க்கைக் குலைவு ஆகியன புதிய ஒரு சமூகப்போக்குக்கு வழி சமைப்பனவாக அமையும் சாத்தியப்பாடுகள் உள்ளன. ஆனால் அது நிகழ நாட்கள் செல்லும். அதுவரை ஒரே கிராமத்திலிருந்தே தசைச் சிலேடை வெண்பாவும், கோசலையும் தோன்றுகின்ற நிகழ்வினை நாம் கண்டு கொண்டேயிருப்போம்.
யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு

கார்த்திகேசு சிவத்தம்பி

——————————————–

யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு
– ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம்

பேராசிரியர். கார்த்திகேசு சிவத்தம்பி
தலைவர், நுண்கலைத் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்

அனுசரணை – ப்ரவாத

—————————————-

ஆசிரியர்:
யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு
– ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம்

பேராசிரியர். கார்த்திகேசு சிவத்தம்பி (M. A., PH.D.)
தமிழ்ப் பேராசிரியர்,
தலைவர், நுண்கலைத் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தில் ஆற்றிய உரையின் திருத்திய பிரதி.

முதற்பதிப்பு:
பெப்ரவரி 1995

வெளியீடு:
சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு
இல 61, பழைய கொட்டாவ வீதி
மிரிஹான
நுகேகொடை

அச்சிட்டோர்:
டெக்னோ பிரின்ட்,
6, ஜெயவர்த்தன அவெனியூ,
தெகிவளை

புலம்பெயர் ஏகாதிபத்திய அடிமைகளுக்கு ஐ.நா வழங்கியுள்ள விடுமுறை அழிவுகளை மட்டுப்படுத்துமா?

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு இலங்கைக்கு இரண்டுவருட அவகாசம் வழங்கியுள்ளது. இலங்கையில் மனிதப்படுகொலைகளைத் தலைமையேற்று நடத்திய மகிந்த ராஜபக்சவும் அவரோடு இணைந்த அத்தனை கொடூரமான கொலையாளிகளும் மக்கள் மத்தியில் உலாவருகின்றனர். சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட இராணுவக் கூலிப்படைகள் தடுத்துவைக்கப்பட்டு புனர் வாழ்வு வழங்கப்படாமல் மக்கள் குடியிருப்புக்களை அண்மித்த பகுதிகளில் நிலைகொண்டுள்ளன.

இவ்வகையான அச்சம் தரும் சூழலில் மைத்திரி – ரனில் அரசு இலங்கையில் பௌத்த சிங்கள இராணுவம் தண்டிக்கப்படவோ விசாரணைக்கு உட்படுத்தவோ மாட்டாது என்கிறது. தமிழ்த் தேசியத்தின் பெயரால் வாக்குப் பொறுக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குகிறது.

இதன் மறுபக்கத்தில் அமெரிக்கா சார்ந்த ஏகபோக நாடுகளையும் அதன் துணை அமைப்புக்களான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தையும் நம்பக் கோரும் அமைப்புக்கள் இலங்கை அரசிற்கு எதிராகவும் சுய நிர்ணைய உரிமை கோருவதை நோக்கியும் செயற்படுவதாகக் கூறுகின்றன. இலங்கையின் நடத்தப்பட்ட இனப்படுகொலையின் பின்புலத்தில் இந்திய அரசு மட்டுமன்றி அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளும் செயற்பட்டதை மூடி மறைக்கும் இக் குழுக்கள், ஐ.நா இலங்கை அரசை இன்னும் தண்டிப்பதற்கான சாத்தியங்கள் காண்படுவதாகக் கூறுகின்றன.

தான் சார்ந்த ஏகாதிபத்திய நாடுகளின் சார்பாக இரவோடு இரவாக முடிவுகளை மேற்கொள்ளும் ஐ.நா, அமெரிக்காவின் அடியாள் அரசாகச் செயற்படும் இலங்கை அரசிற்கு 2 வருட கால எல்லையை வழங்கி மனிதப் படுகொலையின் போது நடைபெற்ற போர் அத்துமீறல் தொடர்பாகப் பொறுப்புக் கூறுவதற்கு இரண்டு வருடங்கள் தவணை வழங்யுள்ளது.

இப்போது ஐ.நா வின் காலடியைச் சுற்றி வந்த அத்தனை ‘செயற்பாட்டாளர்களுக்கும்’ எந்த அரசியலும் கிடையாது. ஆக, இரண்டு வருடக் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இக் கட்டாய விடுமுறையில் அவர்களது நடவடிக்கைகள் மற்றொரு வகையில் மாற்றமடைய ஆரம்பித்துள்ளன.

விழாக்கள், பொதுக் கூட்டங்கள், பழைய பெருமை பேசுதல் போன்ற செயற்பாடுகளைத் தவிர புதிய ஒன்று கூடல்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.

தேசியம் என்ற தலையங்கத்தில் இக் குழுக்கள் ஏற்படுத்தும் அழிவுகளை அதன் செயற்பாட்டாளர்களில் பலரும் புரிந்துகொள்வதில்லை.

கடந்த காலப் போராட்டத்தைக் கற்றுக்கொள்ளும் வெளியாக மாற்ற மறுக்கும் வெளிப்படைத் தன்மையற்ற மூடிய இருளுக்குள் அமிழ்த்திய அவர்களின் அரசியல் இலங்கை அரசிற்கு மட்டுமன்றி அமெரிக்கா போன்ற ஏகபோக அரசுகளுக்கும் நேரடியாகச் சேவையாற்றியுள்ளன.

இவ்வாறான சூழலில் இக் குழுக்கள் ஸ்கந்தனேவிய நாடு ஒன்றி தடல்புடலாக ஏற்பாடு செய்துள்ள ஒன்றுகூடல் புதிய மாற்று அரசியலுக்கான முன்மொழிவாகஅமைவதற்குப் பதிலாக அதனை நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ பலப்படுத்தும் மற்றோர் நடவடிக்கையாகவே அமையும் என்பதில் சந்தேகம் கிடையாது.

ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய இரண்டுவருட விடுமுறையில் பேரினவாதமும் இலங்கை அதிகார வர்க்கமும் தம்மைப் பலப்படுத்திக்கொள்ளும் அதே வேளை புலம்பெயர் குழுக்கள் ஏற்பாடு செய்யும் ஒன்று கூடல் அழிவுகளை மேலும் ஆழப்படுத்தாமலிருந்தாலே இப்போதைக்குப் போதுமானது.

மனிதர் எவ்வாறு கடவுளை உருவாக்கினர் : அர்ச்பால்ட் ராபர்ட்சன்

மரபுவழிக் கல்வியறிவின் தாக்கத்தின் கீழிருக்கும் பலருக்கு இயற்கையாகவே மனிதர் சமயப் பற்று உள்ளவர் என்று தோன்றுகிறது. நமது பள்ளி களின் கற்பித்தலில் தவிர்க்கவியலாத ஒன்றாய் இருக்கும் விவிலியம் மனிதகுலம் தொடக்கக் காலத்திலிருந்தே கடவுளை வழிபட்டு வருகின்றது என்று சித்திரிக்கின்றது. வன்மையாகக் கடவுள் மறுக்கப்படுதலும், அதே வேளையில் கடவுள் போற்றப்படுதலும் எல்லாம் வல்ல கருணைமிக்க படைப்பாளர் ஒருவர் இருக்கின்றார் என்று மெய்ப்பிக்கப்படுகிறது என்பது சமயக் கவியின் அடித்தளம்.

பின்னோக்கிப் பார்த்தோமானால் நாம் இயற்கை யாகவே சமயப்பற்றுக் கொண்டவர்கள் இல்லை என்பது வெளிப்படையான உண்மை. நமக்குக் கற்பிக்கப் படுவதால்தான் நாம் சமயச் செயற் பாட்டில் நம்பிக்கை கொள்கிறோம். தேவால யங்கள் தங்களுடைய அரசியல் அதிகாரத்தின் மூலம் பள்ளிக் கல்வியில் சமயக் கல்வியைத் திணித்துள்ளன; சமய நம்பிக்கை ஏதுமில்லாத ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு வளர்ச்சிநிலையில் உள்ள மக்களுக்கும் சமயம் மூடநம்பிக்கைகளைக் கற்பிக்கிறது. திருத்தொண்டர்களின் திருமுகங்கள் “கடவுள் எல்லாம் வல்ல தந்தை” என்ற நம்பிக்கையை விதைக்கின்றன. இத் தொடரில் உள்ள “தந்தை” என்ற சொல் நமக்கு அறிவார்ந்ததாகப்படுகின்றது; ஆனால் பழங்குடி களுக்கு அச்சொல் அறிவார்ந்ததாகப் படவில்லை. காரணம் அவர்களுக்குத் தந்தைவழி முறைமையுடன் அறிமுகம் ஏதுமில்லை. இக்காலத்திலும் தந்தைவழி முறைமையுடன் அறிமுகம் ஏதுமற்ற பழங்குடிகள் இருக்கின்றனர் என்பது உண்மை.

எல்லாக் காலத்திலும் மனிதர் சமூக விலங் காகவே இருக்கின்றனர். கடுமையான காலநிலை, கொடிய விலங்குகள் ஆகியவற்றை எதிர்த்து வாழ் வதற்கான போராட்டத்தில் ‘சமூக விலங்காக’ இல்லாவிட்டால் அவர்களால் பிழைத்திருக்கவே இயலாது. தொல், அநாகரிக, நாகரிகச் சமூகங்கள் இடையேயான வேறுபாடு, வளர்ச்சி ஆகியவற்றிற் கான அடிப்படை அச்சமூகங்களின் உற்பத்திக் கருவிகளும் சமூக உறவுகளும் ஆகும். மனிதர் களிடமிருந்து நவீனத் தொழில்துறையின் நீராவி ஆற்றலையும், மின்சாரத்தையும் நீக்கிவிட்டால், தொடக்க கால முதலாளியத்தின் சுடுபடைக் கலங்கள், கடலோடியின் திசைகாட்டும் கருவி, அச்சுமுறை ஆகியவற்றை நீக்கிவிட்டால், பண்டை நாகரிகத்தில் உருவான எழுதும் கலையை நீக்கிவிட்டால், வரலாற்றிற்கு முந்தைய அநாகரிகக் காலத்தில் சாதிக்கப்பட்ட மேய்ச்சல், உழவு, உலோகத் தொழிற்கலை ஆகியவற்றையும்கூட நீக்கிவிட்டால் அவர்கள் தொடக்க நிலைக்கே சென்றுவிடுவார்.

தொன்மைக்கால உற்பத்திக் கருவிகளுடன் தாம் தொன்மைக்காலப் பொருளாதார ஒழுங்கமைவு தோன்றியது. அத்துடன் தொன்மைக்காலக் கருத்து நிலையும் தோன்றியது. இவ்விசயம் தொன்மைக்காலத்தவர்கள் முட்டாள்கள் என்று பொருள் தருவதில்லை. ஆஸ்ரேலியப் பழங்குடிகள் மண்பாண்டக் கலையும் உழவையும் அறியாதவர்கள். ஆனால் ‘பூமராங்’ என்ற வேட்டையாடப் பயன்படும் வளரித்தடியை உருவாக்குவதற்குப் போதுமான அளவு அறிவாளிகள். தொன்மைக் கால மெலனேசியர்கள் உலோக வேலைகள் உள்ளிட்ட சிலவற்றை அறியாதவர்கள். ஆனால் மண்பாண்டக் கலை, படகு கட்டுதல், மீன்பிடித்தல், தோட்ட வேளாண்மை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள். இந்தப் பழங்குடிகள் எவற்றைச் செய்தார்களோ, அவை பற்றிய அறிதலில் போதுமான அளவு பகுத்தறிவுடன்தான் செயற்பட்டார்கள்.

நற்பேற்றின் இயற்கையாற்றலைத் தன்வயப்படுத்து வதிலிருந்து பழங்குடி சமூகத்தின் தனிச்சிறப்புள்ள கருத்துநிலை தொடங்குகிறது. காலநிலை, பயிர்ப் பெருக்கம், விலங்குகள் முதலானவற்றின் செயற் பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்வடிவமாக மந்திரம் முக்கிய இடம்பெற்றது. ஆனால் பழங் குடிகள் மந்திரத்தைக் ‘கட்டுப்படுத்துதல்’ என்ற சொல்லின் உண்மையான சொற்பொருள் அடிப் படையிலான செயல்படாகச் செய்யவில்லை. அவர் களின் உற்பத்திச் செயல்முனைவில் விருப்பச் செயல் பாட்டின் மூலம் தாக்கம் ஏற்படுத்துவது என்ற வகையில் மந்திரத்தின் பொதுவான வடிவம் “ஒத்தியைகின்ற” மந்திரமாக இருந்தது. அவர்கள் இனம் பெருகுவதற்குப் பாடல், நடனம் ஆகிய வற்றினால் நடித்துக் காட்டி கூட்டுவிருப்பமாக்குவர். அவர்கள் மழையையும், இடியையும் உருவாக்குவதற்கு ‘எருது – முழுங்கி’ என்று அழைக்கப்படும் கருவியைச் சுழற்றுகின்றனர்; முரசை முழக்குகின்றனர்; தண்ணீரைப் பொழிகின்றனர்.

இளையர்கள் பழங்குடியின் முழு உறுப் பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ‘இறந்து – பிறத்தல்’ என்றொரு மந்திரச் சடங்கு நிகழ்த்தப் படுகிறது. இவ்வாறு மிகப் பெரும்பாலான தொல் சமூகங்கள் மந்திரத்தை மட்டும் கொண்டிருந்தனர். அவர்களிடம் சமயம் ஏதுமில்லை. “ஆஸ்திரேலி யாவின் பழங்குடிகள்” பலவற்றில் “மந்திரம் மட்டுமே எங்கும் பயல்வில் இருக்கின்றன. இவ்வாறிருக்க உயர்ந்த ஆற்றல் ஒன்றிடம் சரண்புகுதல், வழிப் படுத்துதல் என்ற கருத்தைக் கொண்டிருக்கும் சமயம் மிக அண்மைக் காலம்வரை அறியப்பட வில்லை” என்று பிரேசர் கூறுகிறார்.1 பழங்குடி உடைமையாயிருக்கும் உள்ளார்ந்த அறிவுடன் இணைந்த மந்திரம் மரபின் மூலம் வழிவழியாகக் கையளிக்கப்படுகிறது. இரண்டு தகுதிப்பாடுகள் பெற்றவுடன் விடலைகள் இளையர்களாக மறு கின்றனர். அவர்களுக்குச் சடங்கின் விளக்கம் தருக்கம் ஏதுமற்றுச் சொல்லப்படும் தொன்மங்கள் வழியாக அளிக்கப்படுகின்றது. குடியில் உறுப்பின ராகா ஆஸ்திரேலியப் பழங்குடிச் சிறுவர்கள் எருது – முழங்கியைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படு வதில்லை. ஆனால் அதன் ஒலி அணங்கு அல்லது முன்னோர் ஆவியின் குரல் என்று தொன்மம் வழியாகச் சொல்லப்படுகிறது. “மழை பொழி வதற்கும், புதியன துளிர்ப்பதற்கும்” காரணமான இடியை உருவாக்கும் மந்திரத்தைப் பயன்படுத்தக் கற்றறிந்தவர்கள் குடியின் உறுப்பினராக ஏற்கப்படு கின்றனர்.

இரோகுவோய் பழங்குடிகளிடையில் உள்ள ஒரென்டா, சியோப்ஸ் பழங்குடி களிடையில் உள்ள வாகண்டா, ஆல் கோங்வ் பழங்குடிகளிடையில் உள்ள மனிடோவ், மெலனேசியர்கள் இடையிலுள்ள மானா முதலானவை பல அநாகரிகப் பழங் குடிகள் மனிதர், விலங்குகள், செடிகொடிகள், உயிரற்ற புறப்பொருட்கள் ஆகியவை எந்தக் குலத்திற்கும் ஆற்றலை அளிக்கும் சொற்களை நல்குகின்றன என்று ஏற்றனர் என்பதைக் காட்டுகின்றன. ஆற்றல் அளிக்கும் ஆவியைக் குறிப்பிடும் பல சொற்கள் அவர்கள் ஒதுக்கவியலாத அவசியமான ஆளுமைகளை நமக்கு நினைவூட்டுகின்றன. இடிச் சுறாவளி, மலை, மரம், பறவை, கொடிய விலங்கு, ஆற்றல் வாய்ந்த மனிதர் ஆகியவற்றின் ஆற்றல்களை அச்சொற்கள் காட்டுகின்றன. “வாகண்டாவைக் கண்டவர் எவருமில்லை” என்று ஓமாகாப் பழங்குடி முதியவர் மானிடவியலாளரிடம் கூறியுள்ளார்.2 தொல்பொதுவுடைமைச் சமூகத்தில் மனிதரும் கடவுளாகக் கருதப்பட்டவையும் மிக அருகருகே தாம் இருந்தன.

தொல்குடிகளின் நடைமுறையாய் இந்த பழங்குடி மந்திரத்திலிருந்து நாகரிகச் சமூகத்தின் சமயம் தோன்றியது என்பதற்குச் சில சான்றுகள் உள்ளன. ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் மந்திரத்தில் இருந்து பண்டை நாகரிகச் சமயங்கள் சில படி நிலைகள் ஊடே வளர்ச்சியடைந்துள்ளன. பழங்குடி மந்திரங்கள் சடங்குகளாய் மட்டுமே இருக்கின்றன; அவை வேண்டுதல்கள் அல்ல. நாகரிகச் சமயங்களில் மனிதருக்கு அப்பாற்பட்ட ஆற்றலிடம் அதாவது கடவுளிடம் வேண்டுவதின் பகுதியாய் சடங்கு மாறுகின்றது. இதுதான் மந்திரத்திற்கும் சமயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. முக்கியமானவற்றைப் புறக்கணித்து விட்டு அடையப்பட்டுள்ள இந்த முடிவின் வாயிலாக மந்திரத்திலிருந்து சமயம் தோன்றிய மிகப்பெரிய படிமலர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கு வாய்ப் பேதுமில்லை.

மந்திரத்திலிருந்து சமயம் தோன்றுவது தொல் பொதுவுடைமையிலிருந்து வர்க்கச் சமூகம் தோன்று வதுடன் தொடர்புகொண்டுள்ளது. மிகப் பெரும் பாலான தொல்குடிகளில் ஆட்சியாளர் என்ற தனியான வர்க்கம் ஏதுமில்லை. அச்சமூகங்களின் அலுவல்கள் மூத்தவர்களால் ஒழுங்கு செய்யப்படு கின்றது. ஒரு மூத்தவர் இறந்துவிட்டால், அடுத்த வயதான மூத்தவர் வருவார். ஆனால் உற்பத்திக் கருவியின் சில வளர்ச்சிகளுடன் இந்தச் சமூகங் களில், குறிப்பாக மெலனேசியப் பழங்குடிகளின் உபரிஉணவு உற்பத்தியில் ஈடுபடாத பூசாரிகளிடம் சென்றடைந்தது. அவர்களுக்கு இந்த நல்வாய்ப்பு பலியிடுதல் வழியாகக் கிடைக்கத் தொடங்கியது. விரும்பியதை அடைந்த பிறகும் ‘மானா’விற்கும் இயற்கை ஆற்றலைக் குறிக்கும் (மெலனேசியப் பழங்குடிக் கடவுள்) ஒரு பங்கை ஒதுக்கினர். இதைத்தான் “சமூகப் படிமலர்ச்சியில் மிகப் பழைய தொழில்திறனாளர்களாகவும், கலைத் திறனாளர்களாகவும் பூசாரிகள் அல்லது மருத்து வர்கள் (நோய்தீர்ப்போர்) விளங்கினார்கள்” என்று எடுத்துரைத்துள்ளார் பிரேசர்.3 “எந்தவொரு பெரிய பூசாரியைச் சுற்றியும் அவனுடைய வேட்டைகள் அல்லது கொலைகள், கைப்பற்றல்கள், வெற்றிகள், காதல் விளையாட்டுகள் பற்றிய கதைப் புனைதல்கள் ஒளிவட்டமாய் எழுந்தன” என்று மலினேவ்ஸ்கி கூறுகிறார்.4 இயற்கை மீதான ஆற்றலுக்காகப் பழங்குடிகள் அவனுக்குக் கடன்பட்டனர்; அல்லது நல்வாய்ப்பின் தொடர்ச்சியால் அவன் இயற்கை ஆற்றலாகவே பழங்குடிகளுக்குத் தெரிந்தான்.

பூசாரியின் ஆற்றல் பற்றிய பொய்மை குலக் குறி முறையுடன் இணைந்த பழக்கவழக்கங்கள் மூலம்தான் வலிமை பெறுகின்றது. ஒவ்வொரு குலமும் தம் இனப்பெருக்கத்திற்கு – இதற்கு அதனுடைய குலக்குறியும் பெருக வேண்டும் – தமக்குரிய மரபார்ந்த மந்திரத்தைப் பயன்படுத்து கிறது. அதனால் அக்குலத்தினுடைய குலக்குறி உண்பவற்றிலிருந்த விலக்கப்படுகின்றது. இவ்வாறு பிற குலங்களின் குலக்குறி விலக்கப்படுவதில்லை. ஒரு குலக்குறியிலிருந்து தாம் தோன்றியதாக ஒரு குலம் சொல்லிக் கொள்கிறது. அதன் குலக்குறி மீதான விலக்குதலை மீறினால் தொடர்ந்து கொடிய விளைவுகள் ஏற்படும் என்று உறுதியாக நம்பப் படுகிறது. குலக்குறி என்பதற்கும் குலம் என்பதற்கும் அமெரிக்கத் தொல்குடிகள் ‘ஊடயn’ என்ற ஒரே சொல்லைத்தான் பயன்படுத்துகின்றனர். பூசாரி குலக்குறி விலங்கைப் போன்று வேடமிட்டு சடங்கு களை ஆற்றும் பழக்கவழக்கம் குலத்தையும் மீறி அவன் குலக்குறியுடன் உணர்வளவில் தொடர்பு கொண்டுள்ளான் என்று குலத்தினரை நம்பச் செய்தது.

பூசாரிகளும், மருத்துவர்களும் முதன்முதலாகக் கடவுள் என்று கருதப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. பண்டைய சமூகங்களில் குருமார்நிலையும், அரசநிலையும், தலைமைக் கடவுளும் ஒன்றாகவே இருந்தன. பழங்கால மனிதன், “கடவுள், வல்லமையான சூனியக்காரன் ஆகியோர் இடையில் துல்லியமான தகுதிநிலை வேறுபாடு” ஒன்றையும் காணவில்லை என்று பிரேசர் கருதுகிறார். இந்தப் பொருளில் தான் “அநாகரிக மக்களிடம் எல்லா வகைக் கடவுள்களும் இல்லை” என்று கூறினார்.5 பரம் பொருளைப் பற்றி ஆராயும் குருமார், அரசன், கடவுள் ஆகியோரைப் பின்னோக்கிப் பார்த்தால் மிகப் பழங்காலத்தில் பழங்குடி நலத்திற்கான பூசாரியும் அவனுடைய ‘மானா’வும் மட்டுமே இருப்பார்கள்.

முதிராநிலை வர்க்கம் சமூகத்தில் ஆட்சி செய்தல் ஆபத்தான சூதாட்டமாக இருக்கின்றது. எப்போதும் பூசாரியின் நல்வாய்ப்பு தொடரு வதில்லை. அவனுக்குத் தோல்விகள் தடைகளை எழுப்பின. சில தோல்விகள் வெற்றிகளால் சரி கட்டப்பட்டிருக்கலாம்; வேறு சில எதிரிப் பூசாரிகள் அல்லது சூனியக்காரிகளின் செயல்கள் என விளக்கப் பட்டிருக்கலாம். ஆனால் விரைவாகவோ, காலம் தாழ்ந்தோ பெரும்பாலும் நிகழும் கெடுவாய்ப்பு களால் பூசாரிகளின் உரிமைகள் முடிவுக்கு வந்தன. இந்நிலையை அடைந்த நாள் பூசாரியின் கெட்ட நாள். அவன் அவமதிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுக் கொல்லப்படுவான் அல்லது தற்கொலைக்குத் தள்ளப்படுவான். சண்டையிட்டுத் தோற்கடிக்கப் படுதல், கொல்லப்படுதல், அரியணை பறிக்கப் படுதல் என்று எப்போதும் அவன் நிலை எதிர்ப்புக் குள்ளாகியது. “எவனொருவன் கொலை செய் கிறானோ, தற்கொலை செய்ய வைக்கிறானோ அவன்தான் குருமார் ஆவன்” என்பது வழிபாட்டிடம் பற்றி இலத்தீனில் புகழ்பெற்ற பழமொழி. அரசனைக் கொல்கிறவனுக்கே அரசன் நன்றிகடன்பட்டவன் என்பது வங்காளியில் சாதாரண வழக்கு மொழி.

வோண்மையில் தொல்தொழில்நுட்பம் முக்கிய இடம்பெற்று மிகவும் போற்றப்பட்டது. வேளாண்மை வளர்ச்சியுடன் கூடவே பூசாரிகளின் மதிப்பும் பெருகியது. அதே வேளை வெற்றிப் புகழும், தோல்வி அவமதிப்பும்கூடப் பெருகின. இக்காலத்தில் தந்தைவழி முறைமையின் இயல்பு நன்கு அறியப் பட்டதே. வேளாண் வளர்ச்சிக்கு (அதாவது வேளாண் நில விரிவாக்கத்திற்கு) பழக்கப்பட்ட விலங்குகள் தேவைப்பட்டன. பண்ணை விலங்குகளின் தேவை யானது தந்தைவழி முறை மடமையைப் பிழைத் திருக்க உதவியது. இப்போது ‘வளம்பெருக்கும் அரசன்’ ஆன தலைமைப் பூசாரியின் ஆண்மை ஒத்திசைவாகுகிற மந்திரக் கோட்பாட்டின் படி நிலவளத்தைப் பெருக்குவதற்குத் துணை செய்வதாக நம்பப்பட்டது. ஆனால் தோல்வியடைந்த வளம்பெருக்கும் அரசன் ஆற்றல்கள் எதற்கும் பயன்படாது. தோல்வியடைவதைவிட எத்தோப்பியா மக்களிடமும், இந்த நவீன காலத்திலும்கூட நைல், கங்கோ பகுதி மலைகளில் வாழும் பழங்குடிகளிடையேயும் நிகழ்வது போன்று அவன் கொல்லப்படுவது அல்லது தற்கொலை செய்துகொள்வது நற்பயன் விளைவிக்கும். அதாவது அவன் இறந்த பின்னால் அவன் ஆற்றல் நிலத்திற்குச் செல்வது உறுதி என்று நம்பப்பட்டது. ஆப்பிரிக்காவிலும் தென்னிந்தியாவின் சில பகுதி களிலும் இந்த நவீன காலத்திலும்கூட குறிப்பிட்ட வழிமுறைகளின் மூலம் வளம்பெருக்கும் அரசன் கொல்லப்படுதல் பழக்கவழக்கமாக ஆட்சி பெற்றுள்ளது. எகிப்தில் ஒசிரிஸ், செமிடிக்கில் தாமுஸ், கிரேக்கத்தில் டையோன்சிஸ், வட பகுதியில் ஓடின் முதலான கடவுள்களைப் பற்றி வெகுமக்கள் மரபில் குறிப்பிட்ட காலப் பகுதியில் அம்மக்களுக்காகக் கடவுள்கள் இறந்து, பின்பு மீண்டும் பிறக்கின்றனர் என்று சொல்லப்படு கின்றது.

வர்க்கச் சமூக எழுகையுடன் தலைவர்களின் நடத்தைகள் நெறிபிறழத் தொடங்கின. மேய்ச்சலும் பிந்தைய வேளாண்மையும் உருவாக்கிய உபரி உணவு தொல்குடி அமைப்பை அகற்றியது. அடி மைகள் தோன்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது (அடிமைகளை “மனித மந்தைகள்” என்று எங்கெல்ஸ் எடுத்துரைத்துள்ளார்)6. பின்பு தலைவர்கள் சொத்துகளை உடைமையாக்கிக் கொள்ளுதல் எளிதாக நடந்தேறியது. பணக்காரர்களாகவும், அதிகார ஆற்றல் உடையவர்களாகவும் தலைவர்கள் மாறினார்கள். இருப்பினும் அவர்கள் தோல்வி யடைதலையும் எதிர்பார்த்தனர். அவ்வாறு தோல்வி யடைந்தால் முதலில் இறந்து, பின்பு மீண்டும் குலமக்களிடையில் வாழ முடியும் என்றும் நம்பினர். ஒரு தலைவன் வீழ்ச்சியடையும் நேரம் அவன் இறக்கும் காலம் என்று நமக்குத் தெளிவா கின்றது. இதற்குப் பின்தங்கிய சமூகங்களிலிருந்து நமக்கு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கின்றன.

கி.மு.300-இல் எத்தியோப்பியாவின் அரசனாக இருந்த கிரேக்கக் கல்வி பெற்ற டையாடோருஸ் பழக்கவழக்கத்தின்படி மதகுருவை தற்கொலை செய்துகொள்ளுமாறு பணித்தான். போர்ச்சுகீசிய வரலாற்று அறிஞரை மேற்கோள் காட்டி பிரேசர் பின்வரும் செய்தியைக் கூறுகிறார். கப்பிர் அரசன் மதகுருவின் முன்பல்லை உடைத்து அவமதித்து தற்கொலை செய்து கொள்ளுமாறு ஆணையிட்டான். அவனுக்குப் பின்வந்த வெற்றியாளர்களும் அவனுடைய முன் மாதிரியைப் பின்பற்றினர். பொதுவாகத் தலைவன் தன் ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதற்குத் தன் மகன் (மகன்தான் சிறந்த பலிப்பொருள்) அல்லது அடிமை அல்லது அறியப்படாத யாரோ ஒருவனைப் பலியிட்டான்.

உண்மையாகவே இம்மனிதப் பலியிடல் முதல் நாகரிகங்களின் தொடக்க காலத்தில் நடந்தது. முதல் நகர்ப்புறப் புரட்சிக்குப் பின்னர், அதாவது பெருந்தொகையான மக்கள் கி.மு.3000த்திலிருந்து எகிப்து, மெசோபோடமிய நகரங்களில் வாழத் தொடங்கிய பின்னர் தோன்றிய நாகரிகங்கள் மத்திய கிழக்கு நாகரிகங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. வெற்றி பெற்ற முடியரசு மரபு களால் நகரங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு தான், சிந்தனைத் திறனற்றவர்களாய் இருந்த ஆட்சியாளர்கள் காலத்தில் இந்த மூடநம்பிக்கை மிகுந்த செயல் நடைபெற்றது. ‘தெய்வீக அரசன்’ என்னும் கட்டுக்கதையைக் காப்பாற்றுவதற்கு, சில நாள் அரசனாக நடத்தப்பட்டு ஒருவன் பலியிடப் பட்டான். பண்டைய எகிப்தில் வரலாற்றுக்கு முந்தைய தங்கள் முன்னோரின் பழக்கத்தைப் பின்தொடர்ந்த பரோக்கள் ‘வளம்பெருக்கும் ஆவி’ ஆன ஒசிரிஸாக ஒருவரை நடத்தி பலியிட்டனர். ஒசிரிஸாகக் கருதி பலியிடப்பட்ட அவன் அங்கு ஒசிரிஸாகவே போற்றப்படுவதையும் பரோக்கள் தடை செய்யவில்லை.

ஆண்டுக்கொரு முறை பாபிலோனில் தண்டிக்கப்பட்ட சிறைக்கைதி அரச உடைகள் அணிவிக்கப்பட்டு, அரசனாகவே நடத்தப்பட்டு, ஐந்து நாட்கள் அரசனுடைய காமக் கிழத்தியருடன் மகிழ்ந்திருக்கவிட்டு பின்பு துன் புறுத்தப்பட்டுக் கொல்லப்படுவர். முன்பெல்லாம் மெக்ஸிக்கோவில் ஸ்பானிய போர்க்கைதி ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனை ஓராண்டிற்குக் கடவுளாக அலங்கரித்து, வழிபட்டு, விருந்தளித்து, அவன் மூலம் அருள்பெற்ற குழந்தைகள் பெற்றுக் கொண்டு, நோய்களைத் தீர்த்துக்கொண்டு பின்பு வசந்த காலத் திருவிழாவில் கொல்லப்பட்டு உண்ணப் படுவான். வர்க்கச் சமூகம் வளர்ச்சியடைந்ததின் வாயிலாகச் சிறப்புரிமைகளைப் பெற்ற பிறகு, அதற்காகப் பலிபீடத்திற்குக் கழுத்தை நீட்ட வேண்டிய அல்லது நீட்டச் செய்ய வேண்டிய தலைமைப் பூசாரியின் பொறுப்புகள் ஏதுமற்று உயர்ந்த ஆற்றல் உடையவனாகச் சிறப்புரிமைகளை அரசன் அனுபவித்தான்.

கடவுளுக்கும் அவருடைய தற்காலிகப் பிரதி நிதிக்கும் உள்ள வேறுபாட்டைப் பழங்குடி நலத்தின் பொருட்டு நீக்குவதற்காகவே தலைமைப் பூசாரியையும் பிற்காலத்தில் தலைமைப் பூசாரிக்கான பதிலாளையும் கொல்லும் பழக்கம் ஏற்பட்டது. ஆற்றல் வாய்ந்த ஒரு பூசாரி தேவைப்படும் நேரத்தில் மழையைப் பொழியச் செய்து, உணவு உற்பத்தியைப் பெருக்க முடிந்தால் அவன் எல்லோரையும்விட வலிமை யானவன் என்று ஏற்கப்படும். அதே வேளையில் தோல்வியடைந்தால் பூசாரித் தலை துண்டிக்கப்பட்டு வலிமையற்றவன் என்பதும் மெய்ப்பிக்கப்படும். நேற்று வெற்றி பெற்று, இன்று தோற்கும் பூசாரி மழைக்கும், உணவுப் பெருக்கத்திற்கும் உரிமை யுடையவன் இல்லை. மிக முற்பட்ட வீரயுகத்தில் பழங்குடி மூதாதைகளான மிகச் சிறந்த பூசாரிகள் யாவரும் வியக்கும் வண்ணம் மந்திரம் செய்தனர். அவர்கள் முன்னிருந்த வெற்றியாளர்களிடமிருந்து ஆற்றலைப் பெற்றனர். அவர்கள் வெற்றிபெறும் போது மூத்தோர் ஆவி அவர்களிடமிருக்கின்றது; தோற்றுவிடும்போது மூத்தோர் ஆவி பிறிதொரு வனிடம் சென்றுவிட்டது என்று பொருள். இந்த இடத்தில் குறைந்தபட்சம் மனிதர் அல்லது தோற்றால் செத்துப்போகும் தலைமைப் பூசாரி அல்லது பூசாரியாகக் கருதப்பட்ட மனிதர் ஆகியோரிட மிருந்த ஒரு பகுதி ஆற்றல்தான் கடவுள் என்று நாம் அறிந்துகொள்கிறோம்.

ஓர் எடுத்துக்காட்டு, என்றும் அழிவில்லாத நிரந்தரமான எகிப்திய தேபன் மலைக் கடவுள் அமுன் கொம்புள்ள ஆட்டுக்கடாத் தலை கொண்ட மனிதனாகத் தீட்டப்பட்டுள்ளார். ஐயமின்றி தேபர்களின் தலைமைப் பூசாரிகள் ஆட்டுக்கிடா வேடமிட்டு தேபர்களின் மந்தைப் பெருக்கத்திற்குச் சடங்கு நடத்தியிருப்பார்கள். லுக்சரில் உள்ள கல்வெட்டில், பரோவுக்காக அரசியுடன் கூடி கருவுண்டாக்கும் அமுனின் உரிமையை பதினெட்டாம் தேபன் பரோ (சுமார் கி.பி.1550-1380) ஏற்றுக் கொண்டிருந்தான். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு கடவுளின் மகன் என்ற நன்றி பாராட்டுதலோடு எகிப்திய அரசுரிமைக்கான அலெக்ஸாண்டருடைய உரிமைக் கோரிக்கை அமுனின் குறி சொல்லலால் உறுதிசெய்யப் பட்டது. இந்த நவீன காலத்திலும்கூட இதே வழியில் நைல் நதி மலைகளில் வாழ்ந்த சில்லுக் பழங்குடியினர் தங்கள் அரசனின் நலத்தையும், வலிமையையும் பொருத்தே தங்கள் நிலையும் இருக்கும் என்று நம்பியும் அவர்களின் தலைவர்கள் நயாகங்களின் (முன்னோர்களின்) மறுபிறப்பு என்றும், தெய்வீக அம்சம் என்றும் ஏற்கின்றனர்.

மரபுக்குட்பட்டு அரசன் இறந்துபோன பிறகு அரசனின் தெய்வீக வழித்தோன்றல்களாக மகனையோ அல்லது நெருங்கிய உறவினரையோ ஏற்கின்றனர். இதே போல் நைல் பகுதி பழங்குடிகள் தங்கள் தலைவர்களுக்குள் மூதாதையர்களின் ஆவி வழி வழியாகத் தொடர்கிறது என்று நம்புகின்றனர். சுருக்கமாகக் கூறினால், கடவுள் தனியான தலைமைப் பூசாரியின் ஒரு பகுதியாகவும், குலத்தின் மறு உருவமாகவும், வரவிருக்கும் மிகச் சிறந்த தலைமைப் பூசாரியின் கருத்துருவாகவும், அநாகரிக அல்லது நுழைய நாகரிகச் சமூகத்தில் ஆட்சியாளராகவும் இருந்தார்.

அநாகரிகத்திலிருந்து நாகரிகம் தோற்றம் பெற்ற காலத்தில சமயம் முரண்பாட்டுக் கூறுகளின் கலவையாக இருந்தது. முதலாவதாக, சமயம் பழங் குடிப் பூசாரிகளின் நாகரிக எதிர்உருவமான குரு மார்கள் அல்லது அரசக் குருமார்கள் குலத்தின் முன்னேற்றத்திற்கும் உணவு உற்பத்திக்குமாக இயற்கை ஒழுங்கில் மேலாண்மை செய்வதற்குப் பழங்குடிகளின் சடங்கைக் கைப்பற்றிக் கொண்டதின் வெளிப்பாடாக இருந்தது. இரண்டாவதாக, சடங்கோடு தொடர்புடைய தொன்மங்களின் உருவமைப்பாக இருந்தது.

குருமார்களின் உண்மையான நம்பிக்கைகளின் தவிர்க்கவியலாத வெளிப்பாடாக இல்லாமல், வேறுபட்ட உள்ளூர் கடவுள்மரபுகளின் பரஸ்பர உறவுகள் ஒருங்கிணைப்பாக எகிப்திய இறையியல் விரிவாக்கம் பெற்றது. இதன் உண்மையான பொருள், எகிப்து ஒருங்கிணைக்கப்பட்டபோது குருமார்கள் வேறுபகுதி கடவுள்களை ஒவ்வொரு உள்ளூர்க் கடவுளின் பண்புக்கூறுகளோடு இணங் குவித்தனர் என்பதாகும். பதினெட்டாவது அரச மரபில் திபேஸ் எகிப்து தலைநகரான பிறகு, அதன் அமுன் கடவுள் ரே, ஹருஸ் ஆகிய கடவுள்களோடு கலந்து முதன்மைக் கடவுள் ஆனது. எகிப்திய உழவனின் கடவுள்களைப் பிற கடவுள்களோடு உறவுபடுத்திக் குருமார்கள் உருவாக்கிய மரபுப் பட்டியல் ஒரு பொருட்டே அன்று. அவர்கள் நீண்ட கால மரபுடைய சடங்கு வாயிலாகச் சூரியனையும், நைல் வெள்ளப் பெருக்கையும், விளைச்சலையும் கட்டுப்படுத்தி உற்பத்திப் பெருக்கை கைப்பற்றிக் கொண்டபோது எகிப்திய உழவன் தன் கிராமத்தில் உழைத்துஉழைத்து மடிந்து போனான்.

முதலில் எகிப்திலும், பின்பு பாபிலோனியாவிலும் நகர அரசினால் நாட்டின் ஒருங்கிணைப்பு நடந்து முடிந்தபோது, கோயிலின் ஆணையால் வேறுபட்ட நகரக் கடவுள்களின் ஒழுங்குபடுத்தலும் குருமார்கள் மூலம் முன் னெடுக்கப்பட்டது. சுமார் கி.பி. 2000-இல் பாபிலோன் தலைநகரமான பிறகு, அதன் கடவுள் மர்டுக்குடன் பிற கடவுள்களின் தொன்மங்களும் சடங்குகளும் இணைத்துக்கொள்ளப்பட்டது. மர்டுக் ஒளிக் கடவுளான பெல் – மர்டுக்காக மாறி கடல் பூதம் தியமெட்டை வென்று அதனுடைய துண்டிக்கப் பட்ட உடல் உறுப்புகளிலிருந்து சொர்க்கத்தையும் பூமியையும் உருவாக்கி, தாவரங்களையும், விலங்கு களையும், மனிதரையும் படைத்தார். இந்தப் படைப்புத் தொன்மம் மிகப் பல நூல்களில் நமக்குக் கிடைக்கிறது.

பழைய மரபுக்கதைகளில் பாபிலோனியர்களின் மர்டுக் மட்டுமல்ல, இயா, (பாரசீக வளைகுடாவில் கடல் அலைகள் உட்புகுந் திருந்த காலத்தில்) இரிடுவின் கடவுள் ஆகியோரும் படைப்பாளராக இருந்தனர். இத்தொன்மங்கள் முதலாவதாகத் தொடக்கத்தில் பாபிலோனியாவில் குடியேறியவர்கள் யூப்ரடீஸ், டைக்ரடீஸ் ஆகிய வற்றின் சதுப்புநிலங்களைப் பண்படுத்தியதை நினைவுபடுத்துகிறது. இரண்டாவதாக, நீர்ப் பாசனத்திற்காகப் பகைவர்களுடன் போராடி இரத்தம் சிந்தியதின் எதிரொலிப்பான கதையாகவும் இருப்பது நமக்குத் தெரியவருகின்றது. மிக அதிக மான பழைய நாகரிகங்களில், குறிப்பாகப் பாபி லோனியாவின் பரந்த ஆற்றிடைச் சமவெளியில் ஆற்றுப்பாசனத்திற்காக இரத்தம் சிந்துதல் நிலை யான மிகப்பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து சென்றது. படைப்பு, இரத்தம் சிந்துதல் பற்றிய பாபிலோனியர் பழங்கதைகளின் தழுவல்கள் யூதர்களின் தொடக்க நூலில் (ஆதி ஆகமத்தில்) இருக்கின்றன.

கடவுள்கள் மண்ணுலகிலிருந்து விண் உலகிற்குச் சென்றுவிடுதல், விண்ணுலகம் கடவுளின் நிலையான வாழிடமாதல், கடவுள்கள் மனிதப் பண்புகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு மீஇயல்பு பெற்றவர்களாதல் ஆகியன பழைய சமயத்தின் குறிப்பிடத்தக்க எதிர்கால வளர்ச்சி மாற்றங்கள் ஆகும். தொன்மைக்காலக் கடவுள் பூமியில் மழையைப் பொழியவைத்தல், பழங்களின் விளைச்சலைப் பெருக்குதல், விளைநிலத்தை விரிவாக்குதல், கடலில் மீன்களை அகப்படச் செய்தல் ஆகிய செயல்பாடு களைச் சிறப்பாக மேற்கொண்ட மிகப்பெரிய, மிகச் சிறந்த பூசாரியாகத்தான் இருந்தார் என்று பார்த்தோம்.

பூசாரிகளின் கல்லறைகளிலிருந்து அவர்களின் இறப்பு, இறப்புச்சடங்குகள்பற்றி அறிகின்றோம். அவற்றிலிருந்து அவர்கள் தெய்வீகமானவர்களாகக் கருதப்படவில்லை என்று அறியமுடிகிறது. இயற் கையில் பிறப்பு, இறப்புச் சுழற்சியும் ஆண்டுதோறு மான பருவநிலை சுழற்சியும் நீண்ட கால ஆண்டுக் கணக்கிடுதலை மனிதருடைய வாழ்க்கைத் தேவை யாக்கியது. நாகரிக எழுகைக்குப் பிறகு துல்லிய மான காலக்கணக்கிடுதல் முறை அத்தியாவசிய மான தேவை ஆகிவிட்டது. காலக்கணக்கிடுதலுக்கு முதலில் நிலவின் இயக்கம் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. ஆண்டு முழுவதும் சூரியன் இயக்கத்தை விட நிலவின் இயக்கத்தை எளிதாகக் காணமுடியும். இவ்வாறு நாகரிக விடியலின் போது பொருளாதார வாழ்வில் நிலவு முக்கிய பங்காற்றியதால் நிலவுசார்ந்த நம்பிக்கைகள், கடவுள்கள் உருவாக்கப்பட்டு ஏற்கப்பட்டன.

பழங்காலத்தில் நாகரிகத் தொடக்கத்தின்போது நிலவோடு சேர்த்து அறியப்பட்ட எகிப்து தோத் கடவுள் தோற்றத்துடன் நிலவுசார் காலக்கணக்கிடுதல் நெருக்கமாய்த் தொடர்பு கொண்டிருந்தது. தோத் கடவுள் உலகைப் படைத்தவர் என்று கதை சொல்லப்பட்டது. நாட்காட்டியும் எழுதும் கலையும் கண்டுபிடிக்கப்பட்டதற்கு நிலவுக்குக் கடன்படுகிறோம். பாபிலோனிய நிலவுக் கடவுளான சின் அறிவின் கடவுள் என்று அழைக்கப்படுகின்றது. பிற்காலத்தில் மிகுதியான ஓய்வுநேரம் குருமார்களுக்குக் கிடைத்ததால் சூரியனின் அசைவியக்கத்தைக் கவனித்து சூரிய ஆண்டுக் கணக்கை ஏறத்தாழத் துல்லியமாகக் கணக்கிட்டனர். அதற்குப் பிறகு நிலவுக் கடவுளின் முதன்மையைச் சூரியக் கடவுள் எடுத்துக் கொண்டது. அத்துடன் சமய உலகிலும் பழைய கடவுள்கள் சூரிய நம்பிக்கையில் இணைக்கப் பட்டு சூரியக் கடவுள் முதன்மைக் கடவுளாக மதிக்கப்பட்டது. இதன் விளைவுதான் எகிப்தில் தோத் கடவுள் கணக்காளராக மதிப்பிறக்கப்பட்டு, ரே-ஹருஸ் உயர்கடவுளாக மாற்றமடைந்தது ஆகும்.

இயற்கை மீதான குறிப்பிடத்தக்க மேலாண்மை பெறுவதற்குத் தேவையான சூரியனைச் சார்ந்த பருவநிலைமாற்றங்களைக் கண்டறிதல் நாகரிகம் நன்கு விரிவாக்கம் பெற்ற காலத்திலும் முழுமை யடையவில்லை. இருப்பினும், மரபார்ந்த மந்திரச் சடங்குகள் சமயம் சார்ந்து நிகழ்த்தப்பட்டதின் மூலம் அடையப்பட்ட கூட்டறிவு அதிகாரத்திற்கும், வரிவருவாய்க்கும் ஆதரமாய் இருந்தது. பண்டைக் காலச் சமயம் “அநேகமாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் இடைவெளியில் வேறுபட்ட காலச் சிந்தனைகளின் இட்டுவைப்பான”7 (இத்துடன் நாம் வேறுபட்ட உற்பத்தித் தொழில்நுட்பங் களையும், சமூக உறவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்) மந்திரம், குலக்குறிமுறை, மூதாதையர் வழிபாடு, இயற்கை வழிபாடு, அறிவுநுட்பமுள்ள ஆனால் முன்னுக்குப்பின் முரணான தொன்மங்கள் ஆகியவற்றின் முரண்பாட்டுக் கலவையாக இருந்தது. மடிந்துபோகும் மனிதத்தன்மை வாய்ந்த பூசாரி, அவனுடைய பழங்குடிக்காக மழையைப் பொழிய வைத்தல், உணவைப் பெருக்குதல், குலத்தைப் பெருக்குவதற்காக அவன் குலக்குறி போன்று பாசாங்கு செய்தல், பழமரபு முன்னோர்களின் பயனுடைய கலைகள், மந்திரம் ஆகியவற்றின் வழித்தோன்றல் பூசாரி என்ற கற்பிதத்தை ஏற்றல், இவையெல்லாம் சேர்ந்து உருவாக்கிய இறுதிவிளைபொருளான கடவுள் ஆகிய செயல்திறனுள்ள மந்திரத்தின் முரண் கருத்தாக்கங்களோடு சமயம் இரண்டறக் கலந்தது.

உழைக்கும் வெகுமக்களின் நம்பிக்கை, ஆளும் வர்க்கத்தின் கருத்துநிலை ஆகியவற்றிடையேயான முரண்பாடுகள் விரிவடைதலின் துணையோடு சமயத்தின் வளர்ச்சி முன்சென்றது. அமுன், பிதா, ஆபிஸ், ஒசிரிஸ் ஆகிய கடவுள்கள் முழுவாழ்வின் ஆதரமான, (அவர்களுடைய காலத்தில்) அறிவு நுட்பமாகச் சூரியனோடு அடையாளப்படுத்தப் பட்ட தனி முழுமுதல் இருப்பின் வெளிப்பாட்டுப் பண்புக்கூறுகளின் எச்சங்களென எகிப்திய குரு மார்களே முதலில் பதிவு செய்தார்கள். அக்காலத்தில் பாரோ அகாமன்னான் (கி.மு. 1375 – 1388) திடீரென குருமார்களை ஒருபக்கமாக ஒதுக்கித்தள்ளி விடு வதற்கு முயன்றும், எல்லா வழிபாடுகளை ஒடுக்கியும் எளிமையாக சூரியனுடைய ஒளியையும், ஆற்றலையும் போற்றும் வழிபாட்டை நிறுவினான். இச்செயல் பாட்டின் மூலம் “மனிதர்களிடையே மன உளைச்சலை” ஏற்படுத்திப் பொதுமக்களையும், அவர்களின் நம்பிக்கைகளையும் வலுவிழக்கச் செய்தான். வரலாற்று ஏடுகளில் குருமார்கள் அவனை வசைமாறி பொழிந்துள்ளனர். அவனுடன் அவனுடைய புரட்சியும் அழிவுற்றது.

குறிப்புகள்

1. Frazer, Golden Bough, abridged edition, ch.IV.

2. Alice Fletcher, cited by Jane Harrison, Themis, ch.III.

3. Golden Bough, abriged edition, ch.VII. This may be true even of some palaeolithic societies. Gordon Childe cites the case of artist – magicians among Magdalenian cave dwellers. What Happened in History, chap.II.

4. Malinowski, Magic, Science and Religion, V, 4.

5. Golden Bough, abridged edition, ch.VII.Cf . Thomson : “The more advanced forms of worship develop in response to the rise of a ruling class — hereditary magicians, priests, chiefs and kings… The idea of godhead spring from the reality of kingship; but in the human consciousness, split as it now is by the cleavage in society, this relations is inverted. The King’s power appears to be derived from God, and his authority is accepted as being the will of God.” Aeschylus and Athens, chap.I.

6. Engels, The Origin of the Family, Private Property and the State, Chap.II.

7. L.R. Farnell, Encyclopaedia Britannica, articals zeus.

அர்ச்பால்ட் ராபர்ட்சன்

தமிழில் : துரை.திருநாவுக்கரசு

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=12564&Itemid=403

தமிழக மாணவர்களின் கழுத்தை நெரிக்கும்  நீட் தேர்வு எனும்  கயிறு:  வி.இ.குகநாதன்   

இலங்கையில் ஒரு அனிதா (அனிதா ஜகதீஸ்வரன்-மகாஜனாக்கல்லூரி) கோலுன்றிப் பாய்தலில் மற்றொரு தேசிய சாதனையினைப் படைத்த அதே காலப்பகுதியில் தமிழ் நாட்டில் மற்றொரு அனிதா (அனிதா சண்முகம்-அரியலூர்)தனது மருத்துவராகும் கனவு நனவாகாமையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.     இவர் பன்னிரண்டாவது தேர்தலில் 1176 மதிப்பெண்கள்(1200 இற்கு) பெற்று மாநிலத்திலேயே முன்னனி  வகித்தவர்தான், ஆயினும் இவரது மருத்துவராகும் கனவிற்கு குறுக்கே வந்தது நீட்  (NEET-National Eligibility and Entrance Test) எனும் தேர்வு . இந்த நீட் என்பது மாணவர்களின் திறமையினை சோதிக்கும் தேர்வு எனக் கூறப்பட்டாலும் அது  CBSE எனும் பாடத்திட்டத்தினை (மாநில அரசுக்கல்வித் திட்டத்திற்கு புறம்பானது) அடிப்படையாகக்கொண்டது. மேலும் தனியார் கல்லூரிகளில் இலட்சக்கணக்கில் செலவு செய்து பிரத்தியேக பயிற்சி வகுப்புக்களிற்கு செல்பவர்களாலேயே இதில் தேர்வடைய முடியும்.  இந்த நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறவில்லை எனக்கூறியே அனிதா போன்ற பல ஏழை எளிய மாணவர்களிற்கு மருத்துவக்கல்விக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடே இன்று போர்க்களமாக் காணப்படுகிறது.

     இந்த நீட் தேர்வினால் அடித்தட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதாலேயே தமிழ்நாடு சட்டசபையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு ஒரு தீர்மானம் இயற்றி குடியரசுத் தலைவரிற்கு அனுப்பியிருந்தன. என்றாலும் இப்போது மத்தியிலிருக்கும் இந்துத்துவ அடிப்படைவாதக் கட்சியான பாரதீய சனதாக் கட்சி வழமை போல இவ் விடயத்திலும் தமிழகத்திற்குத் துரோகம் இழைத்து அத் தீர்மான நகலையே காணவில்லை என நாடகமாடியது. இந்தியாவினைப் பொறுத்தவரையில் எப்போதும் அதிகாரத்திலிருக்கும் பார்ப்பனர்களால் கல்வியுரிமையானது காலங்காலமாக ஏதாவதொரு வடிவில் சூத்திரர்களிற்கு மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் கல்வியாகக் கருதப்பட்ட வேதங்களினை சூத்திரர் கேட்டால், அவர்களின் காதில் காய்ச்சிய ஈயத்தினை ஊற்றவேண்டும் என மனுநீதி இயற்றி வைத்திருந்தார்கள். இராமயணக் கதையிலோ சூத்திரனாகவிருந்து தவம் செய்ததற்காக சம்பூகனின் தலையினை இராமபிரான் வெட்டியதாக கதையமைத்திருந்தனர். சமசுகிரதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்கலாம் எனச் சட்டமியற்றினர். ஆங்கிலேய ஆட்சியின் பின்னர் கூட ராஜாஜி ஆட்சியில் குலக்கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டிருந்தது.  இவ்வாறான கொடுமைகள் தமிழ்நாட்டில் பெரியார்,அயோத்திதாச பண்டிதர் போன்றோரின் போராட்டங்களால் அகன்றன. பின்பு திராவிடக் கட்சிகள் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டு முறையினால் கல்வி,தொழில் வாய்ப்புக்கள் எல்லோரிற்கும் ஒரளவிற்கு கிடைத்துவந்தன. இந்தப் பின்புலத்திலேயே நிலமையினை பழைய நிலைக்கு மீண்டும் கொண்டு செல்வதற்கான ஒரு தந்திரோபயமாகவே நீட் தேர்வு அமைந்துள்ளது.

     இந்த நீட் தேர்விற்கு பின்னே தனியாகப்  பார்ப்பனிய ஆதிக்கமட்டுமல்லாது உலகமயமாக்கலும் ஒழிந்துள்ளது. அண்மையில் மோடி தலமையிலான இந்திய அரசு உலக வர்த்தக அமைப்புடன் (WTO) செய்துள்ள ஒப்பந்தப்படி கல்வி, சுகாதாரம் என்பன விரைவில் தனியார் மயப்படுத்தப்பட்டு உலக மூலதனச் சந்தைக்கு திறந்துவிடப்படவேண்டும்.  இதற்கும் நீட் தேர்வானது ஒரு கருவியாகப் பயன்படும். இதை சுருக்கமாகப் பார்த்தால் இப்போதுள்ள மாநில அரச கல்வி முறை மூலம் மருத்துவர்கள் சில காலமாவது பின்தங்கிய கிராமங்கள், பழக்குடியினரின் பகுதிகள் போன்றனவற்றில் பணியாற்றவேண்டியிருப்பதால், அப் பகுதியிலுள்ள அரச பொது மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் இயங்கக்கூடியதாகவுள்ளன. நீட் தேர்வு முறை மூலம் இந்த கட்டாய கிராமப்புற சேவை ஒழுங்குமுறை முடிவிற்கு கொண்டுவரப்படும்.  இதன்பின்பு அரச பொது சுகாதாரசேவை கிராமங்களில் தானாக முடிவிற்கு வர அந்த இடைவெளியினை தனியார்துறை நிரப்பிக்கொள்ளும். இந்தப் பின்புலத்திலேயை  இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள மலபே (Malabe) தனியார் மருத்துவக்கல்லூரியினையும் நாம் பார்க்கலாம்.

   இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள நீட் தேர்விற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு அதிகம் ஏன்? எனஇங்கு ஒரு கேள்வி எழலாம். இந்தியாவில் பலவிடயங்களில் தமிழகமே முன்னோடி. தேவதாசி ஒழிப்பு முறை, இட ஒதுக்கீடு, மொழியுரிமைப் போராட்டம், பெண்களின் முன்னேற்றம், பகுத்தறிவு எனப் பல விடயங்களில் தமிழகம்தான் இந்தியாவிற்கே முன்னோடி.  இன்னொரு முக்கிய விடயம் தமிழ்நாட்டில்தான் மிக அதிகமான அரச மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவின் வளர்ச்சி மாநிலமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரப்படுத்தப்பட்ட மோடியின் குசராத் மாநிலத்தில் ஒரு அரச மருத்துவக்கல்லூரி கூட இல்லை, மறுபுறத்தில் தமிழகத்தில் 28 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும்தான் அதிகமாக 69 வீத இட ஒதுக்கீடும் நடைமுறையிலுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலேயே அடித்தட்டு மக்களிற்கும் மருத்துவக்கல்வி இதுவரைக் கிடைக்கக்கூடியதாகவிருந்தது.  இப்போது இந்த வாய்ப்புகளிற்கு எதிராகவே நீட் தேர்வு வந்துசேர்ந்துள்ளது. இதனால்தான் தமிழ்நாடு இந்தத் தேர்வினை எதிர்ப்பதில் முன்னனி வகிக்கின்றது. மத்திய அரசு முன்வைக்கும் தரம் என்ற வாதம் இங்கு எடுபடாது, ஏனெனில் சென்னைதான் இந்தியாவின் மருத்துவத் தலைநகர் என்று சொல்லுமளவிற்கு ஏற்கனவே தரமாகவேயுள்ளது. இங்கு தமிழக மாணவர்களின் ஒரு தொகுதி இடங்கள் பறிக்கப்பட்டு அதனை பணவசதி படைத்த வெளி மாநிலத்தவர்களிற்கும், வெளிநாட்டினரிற்கும் வழங்கும் ஒரு உத்தியாகவே மோடி அரசு  நீட் தேர்வினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறத்திற்கு புறம்பான செயலினை எதிர்த்தே தமிழகம் போராடிவருகின்றது.

   மீண்டும் அனிதாவின் விடயத்திற்கு வருவோமாயின், அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் குடிசை வீட்டில் பிறந்து இள வயதிலேயே தாயினைப்  பறிகொடுத்தவர். இவரது தந்தை மூட்டை தூக்கியே தனது மகளினைப் படிக்கவைத்திருந்தார். அனிதா ஏற்கனவே கிராமத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் தனது தாயினைப் பறிகொடுத்திருந்தார். இதனால் தான் மருத்துவராகி அக் கிராமத்திலேயே ஏழை மக்களிற்குச் சேவை செய்ய வேண்டும் எனக் கனவு கொண்டிருந்தார். அதற்கேற்ப படித்து மாநிலத்திலேயே முதன்மையாகச் சித்தியுமடைந்திருந்தார்.வாய்ப்பு மறுக்கப்பட்டபோது சில சமூக ஆர்வலகர்களின் உதவியுடன் உயர்நீதிமன்றம்வரைச் சென்று போராடியுமிருந்தார். பார்ப்பனியமும், உலகமுதலாளித்துவமும் சேர்ந்து அனிதாவிற்கான எல்லா வழிகளையும் பல சிக்கலான கயிறுகளைக் கொண்டு அடைத்தபோது, அவர் தனது வாழ்க்கையினை முடிப்பதற்கு சுருக்குக்கயிற்றினைத் தெரிவுசெய்து கொண்டார். சுருக்கின் அனிதா போன்ற பல எளிய தமிழ் மாணவர்களின் கனவு நீற் (NEET) தேர்வு மூலம் நீற்றாக (neat) முடித்துவைக்கப்பட்டுள்ளது.

                           இன்று மருத்துவப் படிப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நீட் போன்ற தேர்வுகள் ஏனைய துறைகளிற்கும் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ளது. இதனை உணர்ந்தே தமிழகம் இன்று போர்க்களமாகியுள்ளது. இலங்கையில் ஏற்கனவே தரப்படுத்தல்முறையினை இனத்துவேச நோக்குடன் கொண்டுவந்து தமிழ் மாணவர்களின் கல்வியுரிமையினைப் பறித்தபின்பு என்ன நடைபெற்றது என்பது வரலாறு. வரலாற்றிலிருந்து பாடங்களைப் படித்துக்கொள்ளாத சமுதாயங்கள் என்றுமே முன்னேறியதாக வரலாறில்லை.

கக்கூஸ் : இராமியா

கக்கூஸ் : துப்புரவுத் தொழிலாளர்களை அரசாங்கமும், நீதித் துறையும் படுத்தும் கொடுமைகளையும், அவர்கள் இந்த நச்சுக் சூழலில் சிக்கி வெளியே வர முடியாமல் இருக்கும் சமூகச் சூழலையும் விளக்கி, தோழர் திவ்யா பாரதி “கக்கூஸ்” என்ற ஆவணப் படத்தை வெளியிட்டு இருக்கிறார். இப்படம் துப்புரவுத் தொழிலாளர்களின் அவலங்களை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அது மட்டும் அல்ல; அரசாங்கத்தின், நீதித் துறையின் மனிதாபிமானம் அற்ற போக்கையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. துப்புரவுத் தொழிலாளர்கள் இத்தொழில் வேண்டாம் என்று வேறு தொழில்களுக்குப் போய் விடலாம் என்று கடுமையாக முயன்றாலும், அவர்களால் வெளியே வரமுடியாதபடி, இச்சமூகம் அவர்களை வலுக்கட்டாயமாக அழுத்தி வைத்து இருப்பதும் இதில் காட்டப்பட்டு உள்ளது.

“இப்பொழுதெல்லாம் யார் சாதியைப் பார்க்கிறார்கள்? அப்படியே இருந்தாலும் கிராமப்புறங்களில் ஓரளவு இருக்கலாமே ஒழிய நகர்ப்புறங்களில் இல்லவே இல்லை” என்று அதிமேதாவித்தனமாகப் பேசும் அறிவு ஜீவிகளை இப்படம் நார் நாராகக் கிழித்துத் தொங்கப் போட்டு இருக்கிறது. நகர்ப்புறங்களில் சாதிக் கொடுமையில் இருந்து எழ முடியாமல், மலக் குழியிலேயே வெந்து சாகும் துப்புரவுத் தொழிலாளர்களையும், தங்கள் குழந்தைகளை இத்தொழிலில் இருந்து தப்ப வைத்து விட வேண்டும் என்று கடுமையாக முயன்று, பல தியாகங்களைச் செய்து, படிக்க வைத்த பிறகு, அப்படிப் படித்தவர்களும் துப்புரவுத் தொழிலையே செய்ய வற்புறுத்தும் இச்சமூகத்தின் கொடூரத் தன்மையை ஆணித் தரத்துடன் இப்படம் எடுத்துக் காட்டுகிறது.

இக்கொடுமைகளை நீக்க வேண்டும் என்று “வீராவேசமாகச்” சட்டங்களை இயற்றினாலும், எந்த அடிப்படை மாற்றமும் ஏற்பட்டு விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக வேண்டிய எதிர்மறைக் கூறுகளையும் அச்சட்டங்களில் திணித்து இருப்பதை இப்படம் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. ஒழுங்கான முறையில் சட்டங்களை இயற்றினாலேயே, அவை நடைமுறைப் படுத்த முடியாத படியான வழிமுறைகளைக் கண்டு பிடிக்கும் நமது அதிகார வர்க்கம், சட்டம் ஏற்படுத்திக் கொடுத்து இருக்கும் வழிகளைப் பயன்படுத்தத் தவறுமா?  “இப்பிரச்சினையில் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், நீதித் துறை ஆகியவை மட்டுமா மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொள்கின்றன?” என்று கேட்கும் இப்பட இயக்குநர் தோழர் திவ்யா பாரதி, முற்போக்கு பற்றிப் பேசும் இடதுசாரி அரசியல் கட்சிகளும் இதைப் பற்றி மவுனம் சாதித்தது / சாதிப்பது குறித்து வியப்பு தெரிவிக்கிறார். அது மட்டும் அல்ல; இம்மக்களின் அவலங்களைக் களைய வேண்டிய பொறுப்பு உள்ள, தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்களும் இவர்களைச் சுரண்டுவதை மிகவும் வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறார்.

துப்புரவுத் தொழிலாளர்களை மலக் குழியிலேயே வீழ்த்தி வைத்து இருக்கும் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் குற்ற உணர்வு கொள்ள வைப்பதே தன் முதல் நோக்கம் என்று தோழர் திவ்யா கூறி இருக்கிறார். மேலும் அதன் அடிப்படையில் மக்களைத் திரட்டி இந்த இழிவான முறைக்கு எதிராகப் போராடி ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.    தோழர் திவ்யா கூறுவது மிகவும் சரி! துப்புரவுத் தொழிலாளர்களை இந்நிலையில் வைத்து இருக்கும் நம் ஒவ்வொருவரையும் கொலைக் குற்றத்தை விட மிக மோசமான குற்ற உணர்வு உறுத்தத் தான் வேண்டும். ஆனால் இப்படத்தைக் காணவே மறுக்கும் பலர் இருக்கவே செய்கின்றனர். [இந்நிலையில் அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் அம்பேத்கர் வாசகர்கள் வட்டம் (Ambedkar King Study Circle) எனும் அமைப்பும் பிற அமைப்புகளும் சேர்ந்து 13.8.2017 அன்று இப்படத்தைத் திரையிட்டு இருப்பதும், மேலும் பல ஊர்களில் திரையிடத் திட்டமிட்டு இருப்பதும் ஒரு உற்சாகத்தைத் தருகிறது] பார்த்தவர்களில் பலரைக் குற்ற உணர்வு உறுத்தவே செய்கிறது. ஆனால் இவ்வளவு தெளிவான ஆவணப் படத்தைப் பார்த்த பிறகும், குற்ற உணர்வு உறுத்தாமல் இருப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். இது முற்போக்கு உள்ளம் கொண்டவர்களின் பணிச் சுமையைக் கடுமையாக அதிகரிக்கிறது.சரி!

இப்பிரச்சினைக்குத் தீர்வு என்ன? அத்தீர்வைச் செயல் படுத்த முனைந்தால் அதை எதிர்க்கும் சக்திகள் யாவை? அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?  தொழில் நுட்பம் மிகவும் வளர்ந்து உள்ள இக்காலத்தில் இதற்குத் தீர்வு காண்பது மிக மிக …. மிக எளிது. தொழில் நுட்பம் இன்றைய நிலையை விடப் பாதியளவு கூட வளரத காலத்திலேயே, பணக்கார நாடுகள் மடடும் அல்லாமல் ஏழை நாடுகளே கூட (சொல்லப் போனால் இந்தியாவை விட ஏழை நாடுகளே கூட) மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளும் பிரச்சினை இல்லாதபடி திட்டமிட முடிந்து இருக்கிறது. ஆகவே இதற்குத் தொழில் நுட்பத் தீர்வு காண்பது மிக மிக …. மிக எளிது. அப்படி என்றால் தடையாக இருப்பது எது? இன்று நம் நகரங்களில் கழிவுநீர் எடுத்துச் செல்லும் குழாய்களின் கொள்திறனை விட அதிக அளவில் கழிவுநீர் உற்பத்தி ஆகிறது.

ஆங்கிலேயர்கள் போட்ட கால்வாய்க் குழாய்களின் அளவை மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப அதிகரிக்கவில்லை என்பது மட்டும் அல்ல; புதிதாக அமைக்கும் குழாய்களின் அளவே கூட ஒரு ஆண்டிற்குள்ளேயே போதாமல் போகும்படியாகத் தான் வடிவமைக்கப் படுகிறது. ஏன் இப்படி நடக்கிறது? ஏனெனில் துப்புரவுத் தொழிலாளர்களின் துயரமும் வலியும் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாதவர்கள் தான் திட்டமிடும் வேலையில் அமர்ந்து இருக்கிறார்கள். சரி! இந்நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

            இன்றைய கழிவுநீர் வடிகால் குழாயின் அளவு போதுமானதாக இல்லை. இந்த வடிகுழாய்களை மற்ற நாடுகளின் தரத்திற்கு ஈடாக வடிவமைக்க வேண்டும். அதாவது கழிவுநீர் எந்த ஒரு சூழ்நிலையிலும் தடை இல்லாமல் இறுதி வரை பயணம் செய்யத் தேவைப்படும் அதிக பட்ச அளவை விட குறைந்த பட்சம் மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட கழிவுநீப் பாதையை அமைக்க மிகப் பெரும் நிதியை ஒதுக்க வேண்டி இருக்கும். இதை விவாதிக்கும் போது பெரும்பாலான மக்களுக்குப் பிரச்சினை இருப்பதாகத் தோன்றாது. ஆனால் நடைமுறைப் படுத்த முனைந்தால் மிகப் பெரும் அரசியல் பிரச்சினை எழும். இவ்வளவு பெரிய நிதியை இத்திட்டத்திற்குத் திருப்பிவிட வேண்டும் என்றால், இப்பொழுது செயல் பட்டுக் கொண்டு இருக்கும் எந்தத் திட்டங்களுக்கு வெட்டு விழ வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டி இருக்கும்.

            ஆதிக்க சக்திகளாக இருப்பவர்கள் தங்கள் நலன்களுக்கான திட்டங்களின் நிதியில் ஏதோ சிறிதளவு விட்டுக் கொடுத்து விட்டு, உழைக்கும் மக்களின் நலன்களுக்கான திட்டங்களைப் பெரும் அளவில் வெட்டிவிடத் தான் முயல்வார்கள். அம்மாதிரி முயற்சிகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே உள்ள முரண்பாடுகளை மேலும் கூர்மையாக்குவதில் தான் முடியும். அது மட்டும் அல்ல; ஒடுக்கபட்ட வகுப்பு மக்களின் நலன்களுக்கான நிதியில் 100%ஐத் திருப்பி விட்டாலும் இத்திட்டத்திற்குப் போதுமானதாக இருக்காது. ஆகவே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடையே கலவரத்தை மூட்டி விட்டு இறுதியில் பழைய நிலையே தொடரும் நிலை ஏற்படும். ஆதிக்க சக்திகளின் அயோக்கியத்தனமான நலன்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக வெட்டுவது தான் இத்திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான ஒரே வழியாகும். இந்நிலையில் முற்போற்குச் சக்திகள் என்ன செய்ய வேண்டும்? இந்திய அரசு ஆதிக்க சாதியினரின், பெருமுதலாளிகளின் (கூடாத) நலன்களுக்காக நெஞ்சு பொறுக்காத அளவை விட மிகக் கொடூரமான அளவு நிதியை ஒதுக்கி வீணடிக்கிறது.  எடுத்துக் காட்டாக, வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளில், அந்நாட்டில் உயர் கல்விக்குத் தகுதி பெற முடியாதவர்களுக்கு, இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் இடம் அளிப்பது மட்டும் அல்லாமல், அவர்களுடைய கல்விச் செலவு முழுவதையும் இந்திய அரசே ஏற்றுக் கொள்கிறது.

இத்திட்டத்தில் 90%க்கும் மேல் பயன் பெறுவது பார்ப்பனர்களே. இது முழுமையாகத் தவிர்க்கப்பட்டே தீர வேண்டிய செலவினம். இது ஒரு புறம் இருக்கட்டும். காஷ்மீர்ப் பார்ப்பனர்களை அகதிகள் என்று பெயரிட்டு, மனம் பதைபதைக்கும் அளவை விட மிக அதிகமான அளவு சலுகைகளை அள்ளித் தருகிறது இந்திய அரசு. உண்மை என்னவென்றால் அவர்கள் அகதிகளே அல்லர். அவர்கள் காஷ்மீருக்குச் சென்று வாழ்வதற்கு இம்மி அளவும் தடை இல்லை. ஆனால் அவாள் தங்கள் மேலாண்மைக்கு மற்றவர்கள் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற வர்ணாசிரம அதர்ம நினைப்பும், காஷ்மீர் மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் தான் இந்திய அரசுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. வர்ணாசிரம அதர்ம எண்ணத்தைக் கைவிட்டு விட்டால் பண்டிட்டுகளுக்காக ஒதுக்கப்படும் மிகப் பெரும் நிதி முழுவதையும் இத்திட்டத்திற்குத் திருப்பிவிட முடியும்.இது போல் தகுதி இல்லாத சுகத்தைப் பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவிப்பதற்காக எண்ணற்ற திட்டங்களை நம் கண்களுக்குப் புலப்படாமலேயே அரசு வைத்துக் கொண்டு உள்ளது. அவற்றை எலலாம் முழுமைமயாக வெட்டி விட்டால் இத்திட்டத்திற்குத் தேவையான நிதியைத் திரட்டி விடலாம்.அது மட்டும் அல்லாமல் பெருமுதலாளியக் குழுமங்களுக்காக வீணாக்கும் நிதியை முழுமையாக வெட்டி விட்டால் இத்திட்டத்தைச் செயலாக்கம் செய்வதற்கு மட்டும் அல்ல; மேற்படி துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான நிதியும் எளிதில் கிடைத்து விடும்.

நாம் போராட்டத்தை எங்கிருந்து தொடங்கப் போகிறோம்?

இராமியா