இலங்கையில் இந்திய முதலாளிகளும்…முதலீடுகளும்.

picture-2இலங்கையில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் பலவற்றுக்கு இலங்கை அரசின் ஒப்புதலை இந்திய நிறுவனங்கள் பெற்றுவிட்டன. எஞ்சிய திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திட்டங்களைத் தீட்டத் தொடங்கியிருக்கின்றன. லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள பல மாடி வர்த்தக வளாகம் கட்டும் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுவிட்டது.

இத்தகவலை இலங்கை முதலீட்டு வாரிய இயக்குநர் சி. இக்னேஷியஸ் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் ஏற்கெனவேமேற்கொண்டுள்ள இதே போன்ற திட்டப்பணி அடுத்த ஆண்டில் முடிவடையும் என தெரிகிறது.

அத்துடன் 26 அடுக்கு குடியிருப்பு வளாகம், யூரியாவைச் சேமித்து வைக்கும் மிகப் பெரிய கிடங்கு, உர நிறுவனத்துக்கான பிரில் கோபுரம் ஆகியவற்றை லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் தயாரித்து அளிக்கவிருக்கிறது. இலங்கை மின் வாரியத்துக்குத் தேவைப்படும் மின்சார கம்பிவடங்களைத் தாங்கும் உயர் அழுத்த மின் கோபுரங்களையும் இந் நிறுவனம் தயாரித்து அளிக்க உள்ளது. கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதியில் குடியிருப்பு வீட்டுமனைகளைக் கட்டித் தரும் ஒப்பந்தத்தை கிரீஷ் புரவங்கரா நிறுவனத்தின் துணை நிறுவனமான கங்காதர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் பெற்றிருக்கிறது.

கொழும்பு நகரிலேயே வீடுகளை கட்டித்தரும் ஒப்பந்தத்தை புரவங்கரா பெற்றிருக்கிறது. 25 ஏக்கர் பரப்பில் மிகப்பெரிய துணை நகரமாகவே வீடுகள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு வீடும் சுமார் 2 லட்சம் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் போன் நிறுவனமான பாரதி ஏர்டெல், ஏர்டெல் பெயரில் இலங்கையில் ஏற்கெனவே சேவைகளைத் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை மின் வாரியத்துடன், தேசிய அனல் மின் கார்ப்பரேஷன் (என்.டி.பி.சி.) நிறுவனமும் இணைந்து 1,000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறனுள்ள அனல் மின் நிலையத்தை கட்டித் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கிழக்கு திரிகோணமலையில் சாம்பூர் என்ற இடத்தில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிறுவனத்தை நிறுவும் ஒப்பந்தத்திலும் என்.டி.பி.சி. கையெழுத்திடப் போகிறது. கெய்ர்ன் இந்தியா என்ற தனியார் எண்ணெய் வள நிறுவனமும் இலங்கையில் எண்ணெய் வள கண்டுபிடிப்புப் பணியில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறது.

எச்.சி.எல். மெபாசிஸ், அசென்சர் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இலங்கையில் தங்களுடைய பணிகளைத் தொடங்க ஆர்வமாக உள்ளன. அயல்பணி ஒப்படைப்பு அலுவலகம் திறக்கவும், மென் பொருள்களை அளிக்கவும் அவை tataதயாராக இருக்கின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆதித்ய பிர்லா குழுமம், டாடா குழுமம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்களும் இலங்கையில் தொழில், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உன்னைப் போல் ஒருவன் – இந்துப் பாசிசத்தின் இன்னொரு பிரதி : ஆழியூரான்

kamal7ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள். தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள். இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல.

இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை.
இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும்,ஒடுக்கப்படும் தேசிய இனமான இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன்.

இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘சமூக அக்கறை’ விஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது… இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.

‘தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லை’ என்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள். ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. ‘தெரியாதத்தனமாக’ தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர். ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும் ‘புனிதப்போர்’ என்றும், ‘கபீர்களை அழிக்க வேண்டும்’ என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர் ‘தெரியாதத்தனமாக’ அந்த ‘சதிவலை’யில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி. அட ங்கோ… குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே… அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?

கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது . தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர் ‘ஆரிஃப்’ என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.

தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார்.

தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்தி ‘போற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் (எ) ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், ‘பாருங்கப்பா… ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?’ என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா.ஜ.க. செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா.ஜ.க. மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)

இப்படி ஆதிக்க சாதி பெருமைகள் பேசும் , இஸ்லாமிய எதிர்ப்பு சமூக மனநிலையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இதே கமல்தான் மிக அண்மையில் ‘என்னால் ஈழப் பிரச்னையை சினிமாவாக எடுக்க முடியாது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஒரு கலைஞன் எதைப் பேச வேண்டும் என்று புறசக்திகள் தீர்மானிப்பதை ஆதரிக்க முடியாது. ஆனால் அப்படி பேசும், பேச மறுக்கும் செய்திகளுக்கு பின்னுள்ள அரசியலை நாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும், லட்சக்கணக்கான மக்கள் முடமாக்கப்பட்டிருப்பதையும் பற்றி தன்னால் சினிமா எடுக்க முடியாது என்று நேர்மையாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் கமல்ஹாசன், இதே நேர்மையை இதர விஷயத்திலும் கடைபிடிக்க மறுப்பது ஏன்? பொதுப் பிரச்னைகளில் பூடகமான ஒரு மௌனத்தையேத் தொடர்ந்து பராமரிக்கும் கமல் மிக நுணுக்கமாக தசாவதாரம் முதற்கொண்டு தனது பார்ப்பன மேல்நிலை சாதியாக்கத்தைத் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.

கமல் வகையறா முற்போக்கு பார்ப்பனர்கள் பேணும் நடுநிலையின் அரசியல் ஒரே புள்ளியில் சந்திக்கக்கூடியது. அண்மையில் குமுதத்தில் காஞ்சீபுரம் படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. ‘காஞ்சீபுரம் ஒரு செயற்கையாக செய்யப்பட்டப் படம். அதில் இயல்புத்தன்மை இல்லை’ என்று அதில் சொல்லியிருக்கிறார். அது சரியானதே. அது ஒரு மிக செயற்கையான படம்தான். ஆனால் கட்டுரையின் அடுத்த பத்தியில், ‘அதே வருடத்தில் வேறு சில விருதுக்குத் தகுதியான நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றன’ என்று ஞாநி பட்டியிலிடும் படங்களின் வரிசையில் ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தின் பெயரும் இருக்கிறது. பெரிய பொருட்செலவுடன் மாதவன் தயாரித்து நடித்த ‘எவனோ ஒருவன்’, மிக மோசமான மய்யப்படுத்தப்பட்டப் பார்ப்பன பிரதி.

தெருவோரத்தில் சுத்தமில்லாமல் தள்ளுவண்டி கடை நடத்துபவரையும், பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் சேர்த்து விற்கும் சிறு வியாபாரியையும் போட்டுத்தள்ளச் சொல்லும் அந்த பாசிஸ்ட் படத்தைதான் சிறந்த படம் என்று போகிறப் போக்கில் பிட்டு போடுகிறார் ஞாநி.

முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும்,
பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, ‘நான் ஒரு முஸ்லீம்’ என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ‘இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்’ என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.

உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி… ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக கடத்தி கொல்ல வேண்டிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.

ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது

. ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதி ‘அதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல…’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமே’ என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததே’ என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்’ என்று அர்த்தமாம். ஒண்ணுக்கேத்… இதுல யுகங்கள் தோறுமா?

பெரியார், அம்பேத்கார், பூலே – ஏகாதிபத்தியப் பிரிவினைக் கருத்துகளைக் கொண்டவர்கள்? : பேர்லின் தமிழரசன்

பேர்லின் தமிழரசன் “தேசிய இனப்பிரச்சனையில்   ஏகாதிபத்தியங்களின் சதி”என்ற நூலிற்கு எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி இது.       சிந்தனையைத் தூண்டும் விடயங்களும், விவாதத்திற்கு-  விமர்சனத்திக்கு  உட்படுத்தக்கூடிய கூறுகளும் பொதிந்திருப்பதால் இப்பகுதியைத் தனிக்கூறாக மறு பதிவுசெய்கிறோம்.

தமிழ்நாட்டில் ஆரிய,திராவிட பிளவுகள்,பாகுபாடுகள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு அறியப்படாத ஒன்று.வீரமாமுனிவரின் திராவிட periyarமொழியாய்வு நூலுக்கு பின்னரே இது மேற்கத்திய கல்வி அறிவுபடைத்தவர்களிடம் திராவிடமொழி,இனம்பற்றி கருதுகோள்கள் உருவாகின.

கென்றிமோர்கனின் திராவிடஉறவுமுறைகள் பற்றிய நூலும் மானுடவியயல் மொழியியல் துறைகளின்தொடக்ககாலத்துக்குரியவை.

இந்த தெளிவற்றபோக்கே திராவிடஇனம் என்ற கருத்தாக்கத்தை ஆரியஇனத்துக்கு எதிராக நிறுத்தியது,இவை இனவாதக் கற்பனைகளே.தமிழ் இலக்கியங்களில் ஆரியர் என்ற சொல் ஒரு போதும் இனம் அல்லது மக்கள் பிரிவு என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை. ஆரியர் என்றால் குரு அறிவுடையோன்,மருத்துவன்,மேலாளன், ஆசிரியன், தலைவன், சிவன், புத்தன்,அரசன் ஆகியோரைக் குறிக்கவே பயன்பட்டது.சகல மதங்களின் மதகுருக்களும் இந்திரனை வழிபட்ட மதகுருக்களும் ஆரியர் என்று அழைக்கப்பட்டனர்.

எனவே திராவிடர் என்ற பதம் தமிழ் இலக்கியத்தில் பிரயோகிக்கப்பட்டு இருந்தாலும் அது ஆரியர் திராவிடர் முரண்பாட்டின் எதிர்வினையான இனம், இனக்குழு, மக்கள் பிரிவு என்ற பொருளில் கட்டாயமாகப் பயன்படுத்தப்பட்டிருக்க முடியாது என்பதுடன் தமிழ் இலக்கியத்தில் திராவிடர் என்ற சொல் பாவனையில் இருந்ததாய் ஒரு தடயமும் இல்லை. அதே போல் வேதம்களிலும் திராவிட என்ற சொல் பயன்பட்டதாக ஆதாரமில்லை.

ரிக்வேதம் ஆரிய திராவிட மோதல் என்ற கதைக்கு இன்று எந்த வரலாற்று ஆதாரமுமற்ற கட்டியமைக்கப்பட்ட பொய் என்பது நிருபணமாகிவிட்டது.

ரிக்வேதம் தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 1ம் அல்லது 2ம் நூற்றாண்டு ஆகும். வேதங்களில் உள்ள 1,52,972 சொற்களில் ஆர்ய’ என்ற சொல் வெறும் 3 தடவை மட்டுமே வருவதாக ஒரு ஆய்வு குறிக்கின்றது. வேத நூல்கள் ஆரியக் குடியேற்றத்துடன் எழுந்த ஆரியர்களின் இலக்கியம் என்பது வலுஇழந்து விட்ட பழைய காலங்கடந்த கருத்தாகிவிட்டது.

ஆர்யா’ என்ற சொல்லுக்கு வேதம்களில் நல்குடிப் பிறப்பு வேற்றாள் என்ற பொருள்கள் மட்டுமே கொள்ளப்பட்டன. பிராமணியத்தை பெரியாரும் பூலேயும் எதிர்த்தனர் என்று அ.மாக்ஸ் எழுதுகின்றார்.இந்த இருவரும் ஆரியர் – திராவிடர்களின் போhராட்டம் நிரம்பிய ஒன்றாக இந்திய வரலாற்றைப் பார்த்தவர்கள் பெரியாரின் பிராமணிய எதிர்ப்பு என்பது ஆரிய எதிர்ப்பு வடிவம்களில் ஒன்றே. பிராமனியத்தை அவர் ஆரியச் சதி என்றே பிரச்சாரம் செய்தவர்.

எனவே ஆரிய திராவிட சித்தாந்தம்கள் இன்று நவீன மானுடவியல், மொழியியல்,புதைபொருள் ஆய்வுகள் முன்பு பெறுமதி இழக்கும்போது பெரியார், பூலே, அம்பேத்கார் வரிசைகளும் சேர்ந்தே பெறுமதி இழக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. பிராமணர்கட்கு உரியதாய் கருதப்பட்ட பசுவணக்கம், காளை வழிபாடு, உருவவழிபாடு, மலர், பழம் இலை, நீர் இவைகளைக் கொண்டு செய்யப்படும் பூசைகள் சடங்குமுறைகள் ஆரிய மொழி பேசியவர்கட்கும் முந்திய திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் பிரிவுக்குரியது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆரியம், திராவிடம், பிராமணியம் போன்ற கருத்துக்கள் இன்று முழுமையான மறு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியவைகளாகும்.

பாரதியைக் கூடத் தேடிப்பிடித்து அவரின் பிராமணியக் கூறுகளை ஆய்வு கூடத்தில் வைத்துக் கட்டுடைத்தவர்கள் ஏன் அங்கு பெரியார், பூலே,அம்பேத்கர் போன்றவர்களை கொண்டு சென்று அவர்களது பிரிட்டிஸ் தொடர்புகளை ஏகாதிபத்தி;ய பிரிவினைக் கருத்துக்களை ஆராய்வதில்லை. பிராமணனையும் பாம்பையும் கண்டால் முதலில் பிராமணனை அடி என்ற பெரியார் வெள்ளையனையும் பாம்பையும் கண்டால் முதலில் வெள்ளையனை அடி என்று கூறக்கூடியவரல்ல.அம்பேத்கரின் பிரிட்டிஸ் சார்பு பற்றி பல தொகுதிகள் எழுதலாம். பூலே பரிசுத்தமான பிரிட்டிஸ் ஆதரவு நபர், பிராமணிய ஆதிக்கக் கருத்தை எதிர்க்கும் ஜனநாயக உரிமையானது சொந்த தேசத்தின் ஒரு பிரிவு மக்களை எதிரியாய்க் காண்பதும் பிரிட்டிஸ் ஆட்சியை ஆதரிப்பதுமான அரசியல் எல்லைகளைக் கொண்டிருக்கமுடியாது.ஆரியர், திராவிடர், பிராமணியம்,தலித்துக்கள்,தமிழன், மராட்டியன், தெலுங்கன் என்ற பிரிவினைப் போக்குகளுக்கு எதிராக இவர்களை மனிதர்களாக ஒன்றிணைக்கும் சிந்தனை வேண்டாமா?

பிறப்புச் சார்ந்து மனிதர்களை வகுப்பதும் பிரிப்பதும் பாசிசம் தான். பெரியாரை விமர்சித்தால் மாக்சைப் பற்ற எழுதுவோம் என்று பயமுறுத்தல்கள் புகலிடத்தில் உண்டு. இதுவும் தாய்த்தமிழகத்திலிருந்து பிரதியெடுத்த குணம் தான்.பெரியார் ஆரியரை பிராமணியத்தை மனிதவிரோதமட்டம் வரை எதிர்த்தவர்.

ஆனால் பிரிட்டிஸ்காரர்களை அப்படி எதிர்த்ததில்லை மேற்கத்தை பகுத்தறிவைப் போற்றி இந்தியப் பிற்போக்கு தனம்களை இழிவை அவர் ஏளனம் செய்தபோது அதை ஆரியர்களின் குற்றமாய்க் காண்பித்தார். இந்தியாவின் சாதியம் மனித இழிவுகளுக்கு இந்திய சமூக அமைப்புக் காரணமில்லையா?

அதை புதிய இந்திய தழுவிய சமுதாய மாற்றத்தாலும் உற்பத்தி வடிவங்களாலும் தான் மாற்றமுடியுமே தவிர ஆரியரைத் திட்டி பழித்து அல்ல, பெரியார் வெள்ளை நாகரீகத்தின் பிரச்சார்கர், அவர் வட இந்தியக் கறுப்பு ஆரியரை எதிர்ப்பவரே தவிர பிரிட்டிஷ் வெள்ளை மனிதர்களும் ஆரியர்கள் தானே என்று ஒரு போதும் எண்ண முயலாதவர்.

திராவிடர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்தியதாகப் பிரச்சாரம் செய்தவர்கள் அவர்கட்கு முன்புவந்த திராவிடர்கள் இந்திய ஆதிக்குடிகளை ஆக்கிரமித்திருக்கமுடியாதா? ஆரியர்களை எதிர்க்க வேண்டும் என்பது ஜெர்மனிய நாசிகளின் எல்லா யூதர்களையும் செமிட்டிக் இனம்களையும் எதிர்க்கவேண்டும் அழிக்கவேண்டும் என்ற போதனைக்கு நெருக்கமானது தான். பிராமணர்கள் தலித்து மக்களை ஒடுக்குவதென்பது தனியே பிராமணர்களின் குணமல்ல பிரமாணர்களை படைத்து நிர்வகித்து வரும் இந்தியாவின் பழைய சமூக அமைப்பின் பிரச்னையாகும்.சமூக அமைப்பை மாற்றாமல் பிராமணர்கள் மாறமாட்டார்.

தமது விசேட உரிமைகளை விடச் சம்மதிக்கமாட்டார்கள். இதை தனியே மனித வெறுப்பாலும் மக்களில் ஒரு பிரிவை எதிர்ப்பதாலும் சாதிக்கமுடியாது.உலக மயமாதல் என்பது காந்தியையும் அம்பேத்காரையும் பெரியாரையும் தேவையற்றதாக்கும் முதலாளிய ஜனநாயகக் கருத்து வளர்ச்சியானது இவர்களை விட வலிமையானது.இவர்களின் போதனைகளை விட நிர்ப்பந்தங்களைத் தரும் சாதிகள்,இனம்கள், மதம்கள், பிரதேசங்கள், மொழிகள் கலப்பது தொடங்கும் இவர்கள் இந்தியர்களாக ஆசியர்களாக உலகமனிதர்களாக மாறுவார்கள்.

இயக்குநர் அடூர்கோபாலகிருஷ்ணன் நேர்காணல்:டி.அருள் எழிலன்

அடூர் அவரது “நாலுபெண்ணுகள்” படத்திற்காக ஏழாவது முறையாக தேசீய விருது பெற்றிருக்கிறார். 2004-ல் சென்னைக்கு வந்த ஆரம்பகாலத்தில் மலையாளப்படங்கள் எனக்கு ஆதர்ஷமாக இருந்தது. அந்த வகையில் எனக்கு பஷீரின் கதையைத் தழுவி அடூர் எடுத்த மதிலுகள் படத்தின் மூலம் ஏற்பட்டது அடூர் மீதான ஈர்ப்பு. பின்னர் திருவனந்தபுரம் செல்லும் போதெல்லாம் அவரை இயலுமாயின் சந்தித்து சிறிது நேரம் உறையாடி வருவேன். அப்படி சில நேர்காணல்களையும் என்னால் செய்ய முடிந்தது.

இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்மவிபூஷன், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பாரத்ரத்னா விருதைத் தவிர எல்லாவற்றையும் பெற்று விட்டார் அடூர். அடூர் அதிகமாகப் பேச மாட்டார் சிக்கனமாக வார்த்தைகளை உபயோகிப்பார் யாருடைய கதையை தழுவுகிறோமோ அவருக்கே கதையில் நேர்மையான அங்கீகாரத்தைக் கொடுப்பார் மற்றபடி அடூர் எடுத்த எல்லா படங்களும் சிறப்பானவைகள் அல்ல திருவனந்தபுரத்தில் அவரைச் சந்தித்த போது,

‘‘நான் இப்போதும் கற்றுக் கொண்டிருக்கிறேன் சினிமா தொடர்பாக படித்ததோ, சினிமா எடுத்ததோ விருதுகளுக்காக அல்ல. விரும்பிய ஒன்றை தெரிந்து கொள்வதற்காகவே” என்று பணிவோடு சொல்லும் அடூர் கோபாலகிருஷ்ணன் , தனது சிறுபிராய சினிமாத் தேடல் குறித்து சொல்லும் போது,எனக்கான சினிமா என்னிடமிருந்துதான் வந்தது.அப்போ நான் ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தேன்.என் அம்மாவோட மூத்த சகோதரருக்கு ஒரு சில தியேட்டர்கள் இருந்தது. காசு கொடுக்காம அங்கே போய் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி.பிரேமலேகா மாதிரியான படங்களை அடிக்கடி பார்ப்பேன்.வருடக்கணக்காக அந்தப்படங்கள் ஒடும்.சினிமாவும் நாடகமும்தான் இனி நம்மோட வாழ்க்கைணு முடிவு பண்ணினது அப்போதான்.பதேர்பாஞ்சாலிண்ணு ஒரு படம் காட்டினாங்க..இது ஒரு பெயிண்டர் எடுத்த படம். ஒரு சில அவாட்ஸ் வாங்கியிருக்கு என்று சொல்லி பதேர்பாஞ்சாலி படத்தோட இயக்குநர் சத்யஜித்ரேயை அறிமுகப்படுத்தினாங்க….முகப்பூச்சு இல்லாத மனிதர்களின் ஜீவிதத்தை முதன்முதலாக தரிசித்தது அந்தப்படத்தில்தான். பூனே இன்ஸ்டியூட்டில் சேர்ந்து டைரக்சன் கத்துக்கணும்ணு முடிவு பண்ணி அங்கே போய் சேர்ந்தேன். ஆனால் அந்தக் காலத்தில் சினிமா எல்லா அக்காடமிக் கல்வி மாதிரி முறையான பாடத்திட்டங்கள் மூலம் கற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் என்ற எண்ணமோ பார்வையோ பொதுவாக இல்லாமல் இருந்தது. அப்போது ஒரு சினிமா விஐபி ஒரு நாள் எதுக்கு இன்ஸ்டியூட்டுக்கு வந்திருக்கீங்க? என்ன மாதிரி சினிமா எடுப்பீங்க? என்று கேட்டார் நான் சொன்னேன்‘‘பத்து சினிமா எடுத்தால் அதில் ஒரு நல்ல சினிமா வரும்லியா அதுக்குத்தான் நான் வந்தேன்’’ என்று சொன்னேன். அவர் திருப்பிக்கேட்டார்.‘‘பத்து குழந்தைகள் பிறந்து அதில் ஒன்பது ஊனமாகவும் ஒன்று மட்டும் ஆரோக்கியமாகவும் பிறந்தால் போதுமா ? என்று கேட்டார். அது ஒரு சிக்கலான கேள்வி இல்லையா? நல்ல சினிமா என்பது என்ன? ஓடுகிற சினிமாவா? வசூலிக்கிற சினிமாவா? அல்லது சிலரின் கண்ணீரை காவு கேட்கிற சினிமாவா? என்று பலவாரான குழப்பங்கள்.

ஆனால் இது குறித்து சிந்திக்கத் துவங்கினால் ஆரம்பகாலத்தில் இருந்த குழப்பங்கள் இன்றும் வந்து சேர்ந்து விடுகிறது. நான் எனக்கான சினிமா எனது ரசனைக்கான சினிமாவை எடுக்கத் துவங்கினேன். அப்புறம்தான் என்னோட முதல் படமான சுயம்வரம் படத்தை எடுத்தேன். முதல் படம் பெறும் போராட்டமாக இருந்தது.’’ என்று ஆரம்பகால சினிமா ஆர்வம் குறித்துப் பேசுகிறார்

இனி அவரது நேர்காணல்.

 ?தாதா சாகேப் பால்கே விருது, இப்போது ஏழாவது முறையாக தேசீய விருது சந்தோசமாக இருக்கிறதா? பொதுவாக விருதுகளைப்பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?

நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.

  தென்னிந்தியாவில் முதல் முதலாக ஒரு இயக்குநருக்கு பால்கே விருது கிடைத்தால் அதுவும் நானாக இருக்கும் போது மகிழ மாட்டேனா? இந்தியா சினிமாவுக்கு நானும் பங்களித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிச்சியாக இருக்கிறது. திரைப்படங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்க்காகவும், சினிமா துறையில் சாதனை படைத்தவர்களை ஊக்குவிப்பதற்காகவும்தான் மத்திய அரசு சினிமா விருதுகளை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுப்பதற்க்கான ஜூரிக்களை அமைக்கிறது. விருதுகள் தகுதியானவர்களை சென்றடைவதும்,தகுதி குறைந்தவர்களிடம் செலவதும். நியமிக்கப்படுகிற ஜூரிகளின் கையில் உள்ளது. ஒவ்வொரு முறையும் மத்திய அரசு விருதுகள் அறிவிக்கும் போது நம் நாட்டில் சர்ச்சைகள் எழுவதுண்டு. இந்தியாவைப்போல பல மொழி கலாச்சாரங்களைக்கொண்ட நாட்டில் இம்மாதிரி சர்ச்சைகள் எழுவது சகஜம்தான். எனக்கு கிடைத்த விருதுகள் குறித்து நான் கருத்துச் சொல்வதென்றால் விருதுகள் கிடைக்கும் என்றெல்லாம் நான் சினிமா எடுக்கவில்லை . ஆனால் இந்த விருதுகள் மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்கின்றது. மறந்து விடாதீர்கள். இது ஒரு நல்ல சினிமா. இது உங்களால் பார்க்கப்பட வேண்டிய படம் என்று மக்களுக்கு அரசு சொல்வதும் அதன் முக்கியத்துவத்தை மக்கள் உணரவுமே இம்மாதிரி விருதுகள் கொடுக்கிறார்கள் என நினைக்கிறேன்.

?இப்போது உங்களுக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்திருக்கும்‘நாலு பெண்ணுகள்‘ கதையை தகழியிடம் இருந்து எடுத்து அப்படியே காட்சியாக்கினீர்களா? அல்லது நீங்கள் கதையை மாற்றி அமைத்தீர்களா?

தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய ஏராளமான கதைகளில் நான்கு கதைகளை வெவ்வேறு தொகுப்புகளில் இருந்து தேர்ந்தெடுத்துதான் இந்த நாலு பெண்ணுகள் படத்தை இயக்கினேன்.

  நான்கு கதைகள், நான்கு பெண்கள். திருமணமாகியும் கணவனால் தாம்பத்திய சந்தோசத்தை பெற முடியாத பெண், பாலியல் தொழிலாளி, குடும்பத்தலைவி, திருமணமாகாத முதிர் கன்னி, என நான்கு கேரளப் பெண்கள் தங்களின் வாழ்வின் மீது எவ்வாறான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பேசுகிற கதை அது.ஒரு வகையில் இது மனச்சாட்சியை உலுக்குகிற விஷயமும் கூட பெண்கள் குறித்த மதிப்பீடுகளை யதார்த்தமாக உணரச் செய்கிற கதை இது என நினைக்கிறேன்.

?பூனே இன்ஸ்டியூட்டில் படித்த வந்த பிறகு பல ஆண்டுகள் கழித்து அந்த இன்ஸ்டியூட்டுக்கே தலைவரான அனுபவம் எப்படியிருந்தது?

 எனக்கு சினிமா மீதான மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தது பூனே இன்ஸ்டியூட்தான். என்னோட சொந்த மாநிலத்தில் கிடைக்காத சினிமா நட்புகள் பூனேயில் கிடைத்தது.மலையாளத்தில் சில படங்களை இயக்கியவரும் திரைப்படக்கல்லூரியின் டீனாக இருந்தவருமான ஜாண் சங்கரமங்கலம் என்னுடன் படித்தவர். இயக்குநர்கள் சுபாஷ் கய், மணிகவுல்,நடிகர் அஷ்ராணி,நடிகை சுதாராணி ஷர்மா.இவர்களெல்லாம என்னோட டிப்ளோமோ படத்தில் நடித்தவர்கள்.கேரளத்தின் புகழ் பெற்ற இயக்குநர்கள் ஜாண்ஆப்ரஹாம்,கே.ஜி ஜார்ஜ், என்னோட ஜூனியர்ஸ். ரெம்ப சந்தோசமான பருவமாக பூனா இன்ஸ்டியூட்காலம் எனக்கு இருந்தது .பிற்பாடு இன்ஸ்டியூட்டுக்கு தலைவராக போன போது நான் படித்த போது எனக்கு சினிமா கல்வியில் என்னென்ன கிடைக்கவில்லையோ அதையெல்லாம எதிர்கால சந்ததிக்கு கொடுக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன்.சினிமா கல்வியின் பல துறைகளிலும் பாடத்திட்டங்களை மறுசீரமைப்பு செய்தேன். குறிப்பாக டைரக்ஷன் துறையில் பாடத்திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டுவந்தேன்.ஆனால் என்ன காரணத்தாலோ என் பதவிக்காலத்துக்குப்பிறகு பாடத்திட்டங்கள் பழைய ஸ்டைலுக்கே மாற்றப்பட்டது. மாற்றங்களுக்கான தேவைகள் குறித்து நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறேன்.

?புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற காலத்திய மன நிலைக்கும் இன்றைய மனநிலைக்கும் ஏதாவது வேறு பாடு இருக்கிறதா?

 அங்கு செல்வதற்கு முன்னால் நான் தமிழகத்தின் திண்டுக்கல்லில் காந்திகிராமில் படித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் அப்போது எனக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது. நான் நேசிக்கிற தெரிந்து கொள்கிற ஆர்வத்தில்தான் புனே கல்லூரிக்குச் சென்றேன். உலகின் ஆகச்சிறந்த படைப்புகளை அங்கு பார்த்தேன் அதில் சில இந்திய இயக்குநர்களும் இருந்தார்கள். 1965ல் படித்து முடித்து விட்டு வெளியேறிய பிறகு நாற்பதாண்டுகள் ஓடிக் கழிந்து விட்டது. அப்போது என்ன மனநிலையில் இருந்தேனோ இப்போதும் அப்படியே இருக்கிறேன். தினம் தோறும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன், சினிமாவில் மட்டுமல்ல வாழ்விலும்.

?பொதுவாக உங்களை மாதிரி இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லையே?

டூயட்,,மயிர்க்கூச்செரியும் சண்டைக்காட்சிகள் நிறைந்த படம் என்று போட்டால்தான் சினிமா. என்று தயாரிப்பாளர்களும் பைனான்சியர்களும் ரசிகர்களும் நினைத்துக்கொண்டிருந்த எழுபதுகளில் நான் சினிமா எடுக்க வந்தேன். அதனால் என் பாணி படங்களுக்கு பைனான்சியர்ஸ் கிடைப்பது கடினமாக இருந்தது. அதனால் ஆரம்பக் கட்டத்தில் நாங்கள் சில நண்பர்கள் சேர்ந்து பணத்தை போட்டு டாக்குமெண்டரி படங்களைத் தயாரித்தோம். என்னுடைய முதல் படத்திற்க்கு பிலிம் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடம் இருந்த நிதி கிடைக்க ஏழு ஆண்டுகள் காத்திருக்கவேண்டி வந்தது. ஏழு ஆண்டுகளுக்கு பிறகு பிலிம் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடமிருந்து வந்த பணத்துடன் டாக்குமெண்டரி படங்களின் மூலம் நான் சம்பாதித்த பணத்தையும் சேர்த்து சுயம்வரம் படத்தை எடுத்தேன். அதனால்தான் நான் எனது முதல் படமான ‘சுயம்வரம்’ பெரும் போராட்டமாக இருந்தது என்றேன்.

?சுதந்திரமான மக்கள் சினிமா இயக்கங்கள் கேரளத்தில் ஜாண்ஆப்ரஹாம் துவங்கிய ஓடேஸா’அமைப்பை மாதிரி மக்களுக்கான சினிமா அமைப்புகள் இன்று இல்லாமல் போனதேன்?

மக்களிடம் இருந்தே நிதி வசூலித்து அவர்கள் ஊரிலேயே படம்பிடித்து அங்கேயே அதை16 – எம் எம் படமாக போட்டுக்காட்டும் ஜாணின் ‘ஒடேஸா‘அமைப்பும் அவரும் மக்களோடு மக்களாக சினிமாவை ஒன்று கலந்தார்கள். அல்லது அதற்கு முயர்சித்தார்கள். மக்கள் தயாரிக்கிற படங்களை அவர்களிடமே கொண்டுபோய் சேர்த்த ஜாணின் உழைப்பு மலையாள சினிமாவில் காலாகாலத்துக்கும் போற்றத்தக்கது. ஜாணுக்கு பிறகு அந்த அமைப்பு வெற்றிகரமாக செயல்படவில்லை. ஜாண் மாதிரி ஆத்மார்த்தமான உழைப்பும் இல்லை ஒடேஸா மாதிரி அமைப்பும் இல்லை.

?உங்கள் சினிமாக்களுக்கு கலைப்படங்கள் என்ற முத்திரை விழுவதை விரும்புகிறீர்களா ?

சினிமாவை கம்ர்ஷியல் படங்கள் கலைப்படங்கள் என்று பிரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது . எல்லா படங்களும் தங்களால் இயன்ற லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுத் தரத்தான் செய்கிறது.என்னுடைய படங்களுக்கு அதிக முதலீடு தேவையில்லை.ஆனால் என்னுடைய எல்லா படங்களும் தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை பெற்றுத்தந்துள்ளன. பெரும்பாலான படங்கள் லாபத்தையும் சில படங்கள் பெரும் லாபத்தையும் ஈட்டிக்கொடுத்துள்ளன. பெரும்பான்மை மக்களை சென்றடையும் அம்சங்கள் ஒரு படத்தில் இருந்தால் அது கம்ர்ஷியல் படம் என்று நினைக்கிறார்கள்.அதிக பொருட் செலவில் எடுக்கப்படும் கம்ர்ஷியல் படங்கள் படு மோசமான தோல்வியடைந்து பெட்டிக்குள் முடங்குவதும். கலைப்படங்கள் என்று நீங்கள் சொல்லக்கூடிய படங்கள் நன்றாக உலகெங்கிலும் பயணித்து நல்ல வருவாயை ஈட்டிக் கொடுப்பதும் இன்றைய சினிமாவின் வழித்தடத்தில் இறைந்து கிடக்கிறது.ஆகவே சினிமாவை கமர்ஷியல், கலை என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.நான் கமர்ஷியல் படங்களில் இருந்து எந்த வகையிலும் விலகவில்லை. கமர்ஷியல் இயக்குநர்கள் பயன்படுத்தும் அதே கேமிரா, அதே லைட்ஸ், படச்சுருள்களைத்தான் நானும் பயன் படுத்துகிறேன். ஒரே வித்யாசம் நான் என்னுடைய படங்களை எனக்கு பிடித்த மாதிரி படமாக்குகிறேன் என்பதுதான்.

கோடி கோடியாகக் கொட்டி ஒரு பாடலுக்காக ஃபாரின் போகிற சினிமா தொழிலில் கலைப்படங்கள் எடுப்பது செல்வத்துக்கும் செல்வாக்கிற்கும் பயன்படாதே.

? நீங்கள் வாங்கும் ஊதியத்தைச் சொல்ல முடியுமா?

செல்வமும் செல்வாக்கும் சேர வேண்டும் என்று நான் சினிமா எடுக்கவில்லை நான் எடுப்பது கலைப்படங்கள் என்று சொல்லப்படும் ஆர்ட் சினிமாவும் அல்ல, நான் எடுத்த படங்கள் எனக்கு அதிக லாபத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. நான் என்ன ஊதியம் வாங்குகிறேன் என்பதை உங்களிடம் மட்டுமல்ல உலகுக்கும் சொல்ல மாட்டேன். காரணம் அது என் தனிப்பட்ட விஷயம். நீங்கள் ஏன் சினிமாவை கலைப்படம் என்றும் வணிகப்படம் என்றும் வேறு படுத்துகிறீர்கள்? அப்படி என்றால் அடூர் படங்கள் எடுத்து சம்பாதிக்கவே இல்லையா என்ன? அப்படி எல்லாம் இல்லை. நான் வர்த்தகன் அல்ல கலைஞன். லாபமீட்டும் கலைஞனாகவும் இருக்கிறேன். சினிமா எடுக்கும் போது கலைப்படமாக அல்ல என் விருப்பத்திற்காவும் என் ரசனை சார்ந்தும் இயக்குகிறேன். அதில் வெற்றியும் பெறுகிறேன்.

 எனக்கென்று தனித்த விருப்பங்களும் ரசனைகளும் உண்டு. கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் முப்பது குறும்படங்களும் 11 முழு நீள சினிமாவும் adoorஎடுத்திருக்கிறேன். நான் எடுத்து மற்றவர் ரசிப்பது என்பதையும் தாண்டி நான் இயக்குகிற எல்லா படங்களையும் என் ரசனைக்கும் விருப்பத்துக்கும் உட்பட்டதாகவே எடுக்கிறேன். எந்த ஒரு படைப்பும் என் விருப்பங்களுக்கு அப்பால் எடுக்கப்படுவதில்லை. நான் விரும்புகிற சினிமாவைத்தான் இத்தனை ஆண்டுகாலமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

?இலக்கியத்தோடு இணைந்து பயணித்த மலையாள சினிமா தற்காலத்தில் அதன் ஆன்மாவை தொலைத்து விட்டதா?

 பயணத்தில் நாம் இடர்களைச் சந்திக்கிறோம் மேடு பள்ளங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதற்காக யாரும் பயணத்தை பாதியில் இடை நிறுத்தி விடுவதில்லை. அது போலவே சினிமாவும் வனப்பும், வறுமையும் வந்து செல்லத்தான் செய்யும். மலையான சினிமா அதன் கெட்ட நேரத்தைக் கடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

மலையாளத்தில் புதிய தலைமுறை இயக்குநர்களில் நம்பிக்கை தருகிறவர்கள் என்று சில படங்களையோ இயக்குநர்களையோ குறிப்பிட இயலுமா?

 மலையாளத்தில் எம். .ஆர். சுகுமாரன்தான் என் மனதுக்குப் பிடித்த இயக்குநர். நடிகர் முரளியை வைத்து அவர் இயக்கிய ‘த்ரிஷாந்தம்‘ படம் மலையாளத்தின் மிகச் சிறந்த படம் என்பேன்.

?கேரளத்தில் மம்மூட்டி மோகன்லால் போன்ற நடிகர்கள் உங்களது சினிமா முயர்ச்சிகளுக்கு உந்துதலாக இருக்கிறார்களா?இப்போது வழமையான மலையாள சினிமா பாரம்பரீயம் சீரழிந்து விட்டதாக அறிவு ஜீவிகள் குற்றம் சாட்டுகிறார்களே?

மம்மூட்டி,மோகன்லால், சுரேஷ்கோபி போன்றோர் என்னுடைய முயர்ச்சிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.இம்மாதிரி படங்களில் நடித்து அதற்க்குரிய பயனையும் அடைந்திருக்கிறார்கள்.‘அனந்தரம், விதேயன், மதிலுகள் என என்னுடைய மூன்று படங்களில் மம்மூட்டி நடித்துள்ளார்.சிறையிலடைக்கப்படுகிற ஒரு கிரியேட்டருடைய தனிமைக்குள் ஊடுறுவுகிற ஒரு சிறைக் காதலை மதிலுகள் படத்தில் சொல்லொயிருப்பேன். கடைசி வரை அதில் வருகிற பெண் யாரென்றே தெரியாது.துன்பமான சிறையிலிருந்து அவன் விடுதலையாகி வெளியில் போக நினைக்கிறான் விடுதலை தள்ளிப்போகிறது.பெண் சிறைப்பகுதியில் இருந்து ஒரு காதல் கிடைத்து சிறை சொர்க்கம் ஆகும் போது விடுதலை வந்து துன்பம் கொடுக்கிறது.வைக்கம் முகமது பஷீருடைய கதையை நான் படமாக்கிய போது அது வசூலிலும் நல்ல பெயரை சம்பாதித்துக்கொடுத்தது.இப்போதும் நான் சினிமா எடுத்தால் என்னுடைய முயர்ச்சிகளுக்கு நடிகர்கர்கள் துணைபுரிவார்கள் என்று நம்புகிறேன்.

?தமிழ் சினிமா உங்களுக்கு பரிச்சயம் உண்டா அது குறித்துச் சொல்ல முடியுமா?தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்தவர்கள் யார்?

எனது துவக்கலாத்தில் நான் தமிழ் சினிமாவைக் கடந்தே வந்திருக்கிறேன். ஒரு முறை சென்னையில் பரணி ஸ்டுடியோவில் 1957&ஆம் ஆண்டு என நினைக்கிறேன் வீரபாண்டிய கட்டப் பொம்மன் ஷூட்டிங் எல்லாம் பார்த்திருக்கிறேன். அந்த ஷாட்டில் சிவாஜிகணேசனும், மனோரமாவும் நடித்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் சினிமா பற்றிய என் கருத்து என்னவென்றால் செழுமையான தமிழ் இலக்கியத்தைத் தொட்டு தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னி அதோடு கைகோர்த்து தமிழ் சினிமா பயணிக்கவில்லையோ? என்று தோன்றுகிறது. மற்றபடி தமிழில் இயக்குநர் மணிரத்னமும், நடிகர் கமலஹாசனும்தான் எனக்குப் பிடித்த தமிழ் சினிமா பிரபலங்கள்.

?சினிமாவை டி வி சீரியல்கள் தின்றுவிட்டது என்று குற்றம்சுமத்துகிறார்களே?

 சினிமாவைத் தின்பதிருக்கட்டும் தொலைக்காட்சியும் அதில் வரும் சீரியல்களும் போதை வஸ்துவைப்போல மக்களின் மனதை மயக்கி வைத்திருக்கின்றன.

.இதிலிருந்து மக்களை திசைதிருப்புவது கடினம்.வெறுத்துப்போய் மக்களாக திரும்பிவந்தால்தான் உண்டு.

?நல்ல சினிமாவுக்காக அரசு என்ன செய்ய வேண்டும்?

 தேசீய திரைப்பட வளர்ச்சி கழகம் N,F.D.C)போன்ற அமைப்புகள் நல்ல சினிமாவுக்கான முற்போக்கு கொள்கைகளை உருவாக்க வேண்டும்.வெறும் பணத்தை கடன் கொடுக்கும் அமைப்புகளாக இல்லாமல் நல்ல சினிமாவை ஊக்குவிக்கும் அமைப்பாக மாறவேண்டும்.நம் நாட்டில் நல்ல படங்கள் பல தியேட்டர்களை அடையாமல் முடங்கிப்போகின்றன. இந்நிலையை மாற்றி நல்ல படங்களை தியேட்டர்களுக்கு விநியோகம் செய்யும் வர்த்தகத்தை அரசே நடத்த வேண்டும்.

?அரசியலுக்கு வரும் சினிமா நடிகர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு நல்ல நடிகரால் நல்ல அரசியல்வாதியாகவும் நடிக்க முடியும்.

இங்கிலாந்தில் இலங்கைத் துணைத் தூதர் ஹம்சாவின் முதல் குறி : கேசவன்

bribeஇலங்கை இந்திய அரசுகள் இணைந்து வன்னி மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகக் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் மனிதக் கொலைகளை எதிர்ப்பின்றி நடத்தி முடிக்க தமிழகத்தில் இலங்கை அரசின் கைக்கூலியாகப் பணிபுரிந்தவர் தான் ஹம்சா என்ற இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதர்.

வரலாறு முழுவதும் சீர்திருத்தப் போராட்டங்களை முன்நிறுத்திய திராவிடக் கட்சிப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் என்று பல்வேறு மட்டங்களிலும் தனது தொடர்பை வளர்த்துக்கொண்ட ஹம்சா, இவர்களின் பலவீனங்களைப் புரிந்துகொண்டு பணத்தை வாரியிறைத்தவர்.

ஜூனியர் விகடனிலிருந்து அதன் நிர்வாக ஆசிரியர் ஹம்சாவிடம் பணம் பெற்ற குற்றச்சாடையும் முன்வைத்து நீக்கப்பட்டிருக்கிறார். தமிழ் நாட்டிலிருந்து வரும் ஆங்கில ஊடகங்கள் தமிழ் பேசும் மக்களின் உணர்விகளின் மீது ஒரு போரையே தொடுக்குமளவிற்கு அம்சாவின் நிகழ்ச்சித் திட்டங்கள் அமைந்திருந்தன. நிதி வழங்கல், களியாட்டங்கள், ஐந்து நடசத்திர விடுதிகள் விருந்து, வியாபார உறவுகள் என்று போர்க்காலத்தில் தமிழகத்தின் கட்சி தலைவர்களைக் கையகப் படுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும், அதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தூண்டிவிடவும் ஹம்சாவின் முன்னெடுத்த நடவடிக்கைகள் அபாரமானவை.

தனது வரலாறு முழுவதும் தமிழ் உணர்வை மையப்படுத்தியே அரசியல் செய்த கலைஞர் கருணாநிதி குடும்பத்தினருக்கும் இலங்கை அரச அதிகாரிகளுக்கும் இடையேயான தொடர்பை வளர்த்தெடுப்பதிலும் கூட ஹம்சாவின் பங்கு முதன்மைப் படுத்தப்படாலாம் என்று கூறப்படுகிறது.

இலங்கை அரசு இனப்படுகொலையை எதிர்ப்பின்றி, எழுச்சிகள் பற்றிய பய உணர்வின்றி நடாத்தி முடிப்பதற்கு இவர் வகித்த பங்கிற்குப் பரிசாகவும் புலம்பெயர் தமிழ் மக்களைக் கையாளவும் ராஜபக்ஷ அரசால் இங்கிலாந்திற்கான துணைத்தூதுவராக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார் ஹம்சா.

தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்ல, புலம் பெயர் தமிழ் அரசியற் சூழலிலும், அரசியல் முரண்பாடுகள் தெளிவாகத்தெரிய ஆரம்பித்துள்ள காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீதிக்கும் அநீதிக்கும், உண்மைக்கும் பொய்க்கும், சரிக்கும் பிழைக்கும் இடையேயான போராட்டங்கள் தான் மக்களியக்கங்களின் வரலாறு. இங்கு நீதியின் பக்கத்திலும், உண்மையின் பக்கத்திலும் தம்மை நிறுத்திக்கொள்கின்றவர்களுக்கான அரசியல் தான் அதிகாரத்திற்கெதிரான அரசியல்.

இன்று கொடிய அதிகாரத்தை, அதிலும் மனிதப்படுகொலை நிகழ்த்திவிட்டு எந்தச் சலனமுமின்றி உலக அரங்கில் இறுமாப்புடன் உலா வருகின்ற ரஜபக்ஷ குடும்ப அரசை நியாயம் சொல்லும் ஒரு புதிய வியாபாரக் கூட்டம் இந்திய அரசியல் வாதிகளின் மத்தியில் முளைவிட்டிருப்பது போல புலம் பெயர் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் உருவெடுத்திருக்கிறது.

புலிகள் புலம் பெயர் தேச தமிழர்கள் மத்தியில் கோலோச்சிய போது, அவர்களின் கருத்துச் சுதந்திரம் மீதான அடக்குமுறை புலியெதிர்ப்பாக உருவெடுத்திருந்தது. இந்த அடக்கு முறையைச் அடிப்படையாகக் கொண்டு இணைந்து கொண்டவர்கள் பல சந்தர்பங்களில் பேரினவாத அடக்குமுறை குறித்துக் கூடக் கவலை கொண்டதில்லை.

இந்தப் புலியெதிர்ப்பு வட்டத்திற்குள் சந்தர்ப்ப வாதிகளும், அரசியல் வியாபாரிகளும், தன்னார்வ அமைப்புக்களின் பண முதலைகளும் கூட இணைந்து கொண்டனர்.

நீதியின் பக்கத்தில் நின்ற புலியெதிர்ப்பாளர்களோ புலிகளிடம் இலங்கை அரசிற்கெதிராகப் போராடும் உரிமையைக் கோரியே போராடினர். புலிகளின் போராட்டம் பாசிசத் தன்மை கொண்டது, இது அழிவிற்குத் தான் வழிகோலும் என்ற இவர்கள், இலங்கை அரசின் பேரின வாத அடக்குமுறைக்கு எதிராகப் போராட புலிகளிடம் உரிமை கோரியே புலியெதிர்ப்பாளார்களானார்கள்.

இவர்கள் எப்போதுமே அரச சார்பு நிலையோ அதிகாரம் சார்ந்த சந்தர்ப்ப வாதத்தையோ தமது அரசியல் நிலைப்பாடாகக் கொண்டதில்லை.

புலிகளின் அழிவின் பின்னர் சந்தர்ப்பவாத புலியெதிர்ப்பாளர்களும், சமூகவிரோதிகளும், இலங்கை அரசையும் ரஜபக்ஷ குடும்பத்தையும் நியாயப்படுத்தும் அரசியல் வியாபாரத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் ஒரு சாரார் இலங்கை அரசின் தொடரும் இனப்படுகொலைகள் குறித்து பேசக் கூடாது என்றும் அப்படிப் பேசினால் அவர்கள் தம்மை தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி புரிய அரசு அனுமதிக்காது என்றும் எந்தக் கூச்சமுமில்லாமல் பிரச்சாரம் மேற்கொள்ளுகின்றனர்.

இவர்கள் தான் இன்று ஹம்சாவின் முதற் குறி. இம்மாதம் 3ம் திகதி லண்டனில் நிகழ்வுற்ற, தமிழ் அமைப்புக்களோடு தொடர்புகளைப் பேணிவந்த உபாலி குரே யின் மரணச் சடங்கில் hamsaகலந்து கொண்ட ஹம்சா, தனது அரசியல் பிரசன்னத்தை வெளிப்படுத்திக் கொண்டார். இதற்கு மறு நாளே வைற் சப்பல் என்ற இடத்தில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் மத நிகழ்விற்கு பல புலம் பெயர் தமிழ்ப் புலியெதிர்ப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இங்கு ஹம்சாவைச் சந்திப்பதற்கு முண்டியடித்துக்கொண்டு சென்ற பல தமிழ் ஜனநாயத் தூதுவர்கள் முன்வைத்த காரணம் இந்து இஸ்லாமிய மத ஒற்றுமை. இவ்வாறான நிகழ்வுகளை எட்டிக்கூடப் பார்த்திராத பல அரசியல் வியாபரிகளுக்கு மத ஒற்றுமை பளிச்சிட்டதோ ஹம்சாவின் வருகையோடு தான். தெருவோரங்கள் நாய்கள் நிணம் புசிக்கக் கொன்று போட்டுவிட்டு நியாயாயம் கூறும் ஒரு பௌத்த மேலாதிக்கவாத கொலைகாரக் கூட்டத்தின் இஸ்லாமியப் பிரதிநிதியோடு, இந்து அரசியல் வியாபாரிகள் ஏற்படுத்தும் மத ஒருங்கிணைப்பு கிரிமினல்களின் ஒன்று கூடலே தவிர வேறில்லை.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மறுபடி ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். புலம் பெயர் நாடுகளிலிருருந்து புலி எழுந்து விடுமாம். ஹம்சாவின் இங்கிலாந்துப் பிரசன்னமும் இந்த எச்சரிக்கையும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவை.

புலம் பெயர் நாடுகளிலிருந்து புலி வருகிறதோ இல்லையோ, நிச்சயமாகப் புதிய கருத்துக்கள் வரும். நாளைய சமூகத்தின் மாபெரும் சக்தியாக இலங்கையில் நடாத்தப்படும் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிபிற்கும் நியாயம் கோரும் ஒரு சில மனிதர்களாவது வெளிவருவார்கள். அவர்களின் ஆரம்பம் ஹம்சாவிற்கு முளைத்திருக்கும் புதிய புலம்பெயர் வியாபார வால்களை அறுப்பதிலிருந்தே உருவாகும்.

மறுபடியும் பட்டு அல்லது காஞ்சீவரம்! :சுப்ரபாரதிமணியன்

kanchipநான் எழுதிய  “பட்டு” திரைக்கதையை அந்த ஒளிப்பதிவாளர்  இன்றைய பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல்வாதியுமான  பெண் கவிஞர்,  ஒரு மலையாள இயக்குனர்,  ஒரு இயக்குனர் ஆகியோரிடம் செழுமைப்படுத்த தந்ததாக என்னிடம் சொல்லியிருந்தார். அது போல் வேறு யார் யாரிடம் சென்றன என்பது தெரியவில்லை. ஒரு ரவுண்டு போய் விட்டு வந்து இந்த ரூபமூம்  அடைந்திருக்கலாம்.

“சினிமாமாவுலே இதெல்லாம்  சகஜமப்பா ” என்று ஆறுதல் படுத்திக் கொள்வதுண்டு.  

எனது திரைக்கதை சுதந்திரப் போராட்டகாலத்தை சார்ந்ததல்ல. அதில் பெண்  பாத்திரத்தை பிரதானமாக்கி இருந்தேன். இதில் அப்பா பிரதானமாகி இருக்கிறார்.

“முதல் மரியாதை” படம் எனது “கவுண்டர் கிளப்” குறுநாவலன்  மையத்தை ஒத்திருந்தது. அந்தக் குறுநாவல் “தீபம்” இதழில் வந்தது. இயக்குனர் பாரதிராஜா,  கதாசிரியர் செல்வராஜ் ஆகியோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினேன். இரண்டு முறை திரும்பி வந்தன.

மூன்றாம் முறை பெற்றுக் கொண்ட பாரதிராஜா பதில் அனுப்பியிருந்தார் அவரின் வழக்கறிஞர் மூலம்: “கடிதம் அனுப்பி இருக்கும் ஆர் பி சுப்ரமணியனுக்கும் சுப்ரபாரதிமணியனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை”  ஆர் பி சுப்ரமணியன் என்பது என் இயற்பெயர். நான் தான் சுப்ரபாரதிமணியன் என்பதை நிரூபிக்கவேண்டியுருந்தது.

அப்போது தீபம்  பத்திரிககை அலுவலகத்தில் மறைந்த எழுத்தாளர் என் ஆர் தாசனை சந்தித்தேன். அவரின் “வெறும் மண்’ என்ற  நாடகத்தைத் தழுவி  பாலச்சந்தர் ‘அபூர்வ ராகங்கள்” எடுத்ததை மையமாகக் கொண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்தவர். அவரின் அனுபவத்தைச் சொன்னார் : “முதல் ஏழு ஆண்டுகள் வாய்தாதான், பிறகு 3 ஆண்டுகள் விசாரணை. முடிவில் ஆமாம் கதையில் ஒற்றுமை உள்ளது 1000 ரூபாய் அபராதம் என்று விதித்தார்கள். நான் சென்னைக்காரன். வழக்கறிஞர் செந்தில்நாதன் நண்பர். எனவே அலைந்தோம். நீங்கள் ஹைதராபாத்தில் இருக்கிறிர்கள். சென்னைக்கு அலைய முடியுமா?” .

நான் அப்போது ஹைதாராபாத்தில் வசித்து வந்தேன்.  எனவே வழக்கை விட்டு விட்டேன்.

எனது “கவுண்டர் கிளப்” மையம் இது : கவுண்டர் ஒருவர்  கிராமம் ஒன்றில்  டீ கடை வைத்திருப்பார் . மனைவியுடன் உறவு இருக்காது. ஒரு பெண் தாழ்ந்த ஜாதி தனது தந்தையுடன் அந்த கிராமத்திற்கு வேலை தேடி வருவாள் தந்தையுடன். கவுண்டரின் நிர்கதி தெரியவரும். இருவரும் நட்பு கொள்வார்கள். கவுண்டரின் மனைவி கவுண்டர் ஊரில் இல்லாத ஒரு நாளில் அவளை தெருவில் வைத்து அடித்து அவமானப்படுத்துவாள். ஊர் திரும்பிய கவுண்டர் அதிர்ந்து போவார். அப் பெண் தற்கொளை செய்து கொள்வாள். அவளின் நினைவாக டைம் பீஸ் கடிகாரம் உட்பட பல இருக்கும். தலை மயிரில் கோத்த பாசிமணி உட்பட. மையம் இது.

படத்தில் சிவாஜி , ராதா ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சிவாஜியின் மாப்பிள்ளை , சத்தியராஜ் கதைகள் கிளைக்கதைகள் தனி. படத்தில் கி ராஜநாரயணனின் கோபல்லகிராமம் இதில் ஒரு பகுதியாக வந்திருக்கும்.

எனது “சாயத்திரை” நாவலை நான் திரைக்கதையாக்கி வைத்திருநததை பெற்றுக்கொண்ட பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இப்போதைக்கு 5 பேர் உள்ளனர்.

சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்டதினால் “ஆன் லைனில்” ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ். பிளீஸ் என்று தொலைபேசியிலேயே தொடர்ந்துக் கேட்டு கொண்டிருந்தார். 15 நாளில் முழு திரைக்கதையை  “ஆன் லைனில்” எழுதி முடித்தேன். அது என்ன பாடுபடப் போகிறதோ?

திரைப்படத்துறையைச் சார்ந்த ஒரு நண்பர் சொல்வார்: “பத்து குயர் பேப்பர் வாங்கிக் குடுத்து இதுதா சன்மானம்முன்னு அனுப்பிச்சிருவாங்க.”
 
“சினிமாவுலே இதெல்லாம் சகஜமப்பா”

தமிழகத்தின் எழுச்சி மட்டுமே இந்தியாவின் கருத்தை மாற்ற வைக்கும் ஆற்றல் வாய்ந்தது:சென்னை கண்டனக் கூட்ட பதிவுகள்!

 “சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை” – என்ற தலைப்பில் “சேவ் தமிழ்ஸ்” கூகுள் குழுமத்தின் சார்பில்   கண்டனக் கூட்டம் செப். 12, சனிக்கிழமை சென்னையில்  நடைபெற்றது.

   ‘சேவ் தமிழ்ஸ்” கூகுள் குழுமம் தகவல் தொழில்நுட்பவியலாளர்களினால் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.  இலங்கைஇராணுவம் ஈழத் தமிழர்களை கண்மூடித்தனமாகக் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் இக்குழுமத்தின் சார்பில் மனிதச் சங்கிலி, பட்டினிப் போராட்டம் உட்பட பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன. பின்னர் வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்கக் கோரியும் பேரணி போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

   ஈழத் தமிழர் நலன்களுக்காக நடத்தப்பட்ட பல நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, திசநாயகத்திற்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகால சிறை தண்டனையை உடனடியாக இரத்து செய்து அவருக்கு நிபந்தனை அற்ற விடுதலை வழங்கக் கோரியும், ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குள் பன்னாட்டு ஊடகங்களை அனுமதிக்கக் கோரியும்,   இலங்கை அரசின் ஊடக ஒடுக்குமுறையைக் கண்டித்தும்   செப். 12, சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு சென்னை தியாகராய நகர் செ. தெ. நாயகம் பள்ளியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

   இக்கருத்தரங்கத்தில் இந்தியாவின் முன்னணி ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

   மூத்த ஊடகவியலாளரும், சன் டிவியின் முன்னாள் செய்தி ஆசிரியருமான ஏ. எஸ் பன்னீர்செல்வம் தனது உரையில் ‘திசநாயகத்தின் கைது ஒரு குறிப்பிட்ட ஏதேச்சையான நிகழ்வு அல்ல. அதற்கு பின்னணியில் இலங்கை அரசியல் சட்டத்தின் அமைப்பும் அது அரசுக்கு வழங்கியுள்ள உச்சபட்ச அதிகாரமும் இருக்கிறது. அந்த அரசியல் சட்டம் நீக்கப்படாமல் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வு கிடையாது” என ஆணித்தரமாக விளக்கினார்.

   டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழின் மூத்த செய்தியாளர் வெங்கட்ரமணன் தனது உரையில், திசநாயகத்தின் வழக்கின் பின்னணியையும், எவ்வாறு திசநாயகத்திற்கு ஆதரவாக சாட்சியம் அளித்தவர்களின் சாட்சியங்கள் எவ்வித நியாயமான காரணமுமின்றி நிராகரிக்கப்பட்டன என்பதையும், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பே வழங்கப்பட்டது என்பதையும் விரிவாக விளக்கினார்.

   ஓய்வு பெற்ற அய்.ஏ.tesaaஎஸ் அதிகாரியும் ஈழம் தொடர்பாக தொடர்ந்து ஊடகங்களில் எழுதி வருபவருமான தேவசகாயம் ‘சீனா இலங்கையில் காலடி எடுத்து வைப்பது என்பது இந்தியாவின் நலன்களுக்கும் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது. ஓர் இந்தியக் குடிமகனாக எனக்கு இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

   இந்நிலையில் தமிழர்களை இந்தியா நட்பு சக்தியாக்கிக் கொள்வது மட்டுமே இந்தியாவிற்கு நன்மை பயக்கும். இலங்கை மண்டியிட வைப்பதற்கான ஒரு வழியாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடர் பிரச்சாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்கா தடை செய்யப்பட்டதைப் போன்று இலங்கையும் கிரிக்கெட் மற்றும் பிற உலகளாவிய விளையாட்டுகளில் விளையாட தடை செய்யப்பட வேண்டும்” என கூறினார்.

   ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியின் செய்தியாளரும் சமாதான காலங்களிலும் பிற நேரங்களிலும் 5 முறை ஈழத்திற்கு சென்று பதிவு செய்தவருமான ராஜேஷ் சுந்தரம் இந்நிகழ்விற்காக தில்லியில் இருந்து வந்திருந்தார். அவர் தனது உரையில்,

   ‘முகாம்களில் மக்களை அடைத்து வைப்பதன் மூலம் வெறுப்பையும் போராட்ட உணர்வையுமே இலங்கை அரசு வளர்க்கிறது. இன்று முகாமில் வளரும் 10-11 வயது சிறுவன் தன் கண் முன் தனது 2 வயது தங்கையும் 80 வயது தாத்தாவும் மருந்தின்றி மடிவது கண்டும், தனது தாய், தந்தை, மூத்த சகோதரர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவது கண்டும் வளரும் நிலையில் அதற்கு எதிரான போராட்ட உணர்வே அவன் மனதில் மேலோங்கும்.

   எனது கணிப்பில் இன்னும் 6 மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ மீண்டும் ஆயுதப் போராட்டங்கள் ஈழத்தில் வெடிக்கும் என்றே கருதுகிறேன்.

   இந்தியாவைச் சுற்றி நண்பர்களே இல்லாத நிலையில் ஈழத்தையும் தமிழர்களையும் தனது நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தமிழகத்தின் எழுச்சி மட்டுமே இந்தியாவின் கருத்தை மாற்ற வைக்கும் ஆற்றல் வாய்ந்தது. நீங்கள் ஆயுதம் ஏந்த வேண்டியதில்லை. ஆனால் காந்திய முறைப்படி பல போராட்டங்களை நடத்தலாம்.

   இலங்கையின் சுற்றுலாத் துறை இந்த ஆண்டு மட்டும் இந்தியாவிலிருந்து 7.5 இலட்சம் பேர் இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வருவார்கள் என கூறுகிறது. இந்த 7.5 இலட்சம் பேர் ஆளுக்கு 100 டாலர்கள் குறைந்தபட்சமாக செலவழித்தால் கூட அந்த பணம் இலங்கை அரசு மேலும் ஆயுதங்கள் வாங்கவும், மேலும் ஆட்களை இராணுவத்தில் சேர்க்கவுமே பயன்படப் போகிறது. இதனை தடுக்க, இலங்கைக்கு சுற்றுலாச் செல்ல வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரச்சாரங்கள் செய்ய வேண்டும்.

   இலங்கைப் பொருட்களை பயன்படுத்துவதை எதிர்த்து பிரச்சாரங்கள் செய்ய வேண்டும். இவை இலங்கையின் பொருளாதாரத்திற்கு நெருக்கடியை அளிக்கும். அதன் மூலம் இலங்கை அரசுக்கு நெருக்கடி அளிக்கலாம்” என்றார்.

   மேலும், வீக் ஆங்கில வார இதழின் கவிதா முரளிதரன், டெக்கான் கிரானிக்கல் பீர் முகம்மது, குங்குமம் இதழின் அருள் எழிலன், நக்கீரன் இதழின் லெனின், குமுதம் இதழின் கார்டூனிஸ்டு பாலா ஆகியோரும் தங்கள் கண்டனத்தையும் கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

காஞ்சிவரம் -இடது சாரிகளுக்கு எதிரான கருத்துக்கள்:ரதன்

kanpa1

சுப்பிரபாரதிமணியனின் கதையை திருடிய , காஞ்சிவரத்துக்கு இவ் வருடம்சிறந்த பட விருது கொடுக்கப்பட்டுள்ளது. இடது சாரிகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட இப்படத்தில் அதீதமாக நடித்தமைக்காக பிரகாஸ்ராசுவிற்கு சிறந்த நடிகர் விருதும் கொடுக்கப்பட்டுள்ளது.

1954ல் முதன் முதலாக இவ் விருது கொடுக்கப்பட்டது. இது வரை இரண்டு தமிழ் படங்களே இவ் விருதைப் பெற்றுக் கொண்டன. ஒன்று காஞ்சிவரம், மற்றையது 1991ல் மறுபக்கம் படத்துக்கு இவ் விருது கிடைத்தது.

 தமிழ் நாட்டிற்கு அண்மையில் உள்ள மலையாளம் 9 விருதுகளையும்( புலிஞன்மம் (2007- இ-பிரியநந்தன்), சாந்தம் (2001- இ- ஜெயராஜ்), வானப்பிரஸ்தம் (2000 – இ-சாஜி.என்.கருண்), கதாபுருஷன் (1996-இ-அடூர் கோபாலகிருஷ்னன்), பிறவி (1989 -இ- சாஜி.என்.கருண்), சிதம்பரம் (1986 – இ- அரவிந்தன்), நிhமால்யம் (1974-இ- வாசுதேவன் நாயர்), சுயம்வரம் (1973-இ-அடூர் கோபாலகிருஷ்னன்), செம்மீன் (1966-இ- ராமு காரியத்)) வங்காளம் 21 விருதுகளையும் பெற்றுக் கொண்டன.

பின்வரும் படங்கள் சத்யஜித்ரே இயக்கி விருதைப் பெற்ற படங்கள்
1992 Agantuk
1972 Seemabaddha
1969 Goopy Gyne Bagha Byne
1965 Charulata
1960 Apur Sansar
1956 Pather Panchali
மிருணாள் சென் இயக்கிய நான்கு படங்களும், கன்னட இயக்குனர் கிருஷ் கர்ணவாளியின் நான்கு படங்களும், வங்காள இயக்குனர் புத்த தேவ் தாஸ் குப்தாவின் ஜந்து படங்களும் விருதைப் பெற்றுக் கொண்டன.

 பிரபல சமூக அரசியல் இயக்குனர் சியாம் பெனகலின் சமர் என்ற படம் மாத்திரமே இவ் விருதைப் பெற்றுக் கொண்டது. தமிழைப் போல் திரைப்பட மொழியை நாசப்படுத்தும் தெலுங்குப் படங்களுக்கு இதுவரை எந்த விருதும் கிடைக்கவில்லை.

சிறந்த இயக்குனர் வ்விருதைப் பெற்றுக் கொண்டனர் இரு தமிழர்கள். 1997ல் அகத்தியன் – காதல் கோட்டைப் படத்துக்காகவும், 2002ல் பி.லெனின் ஆளுக்கு நூறு பேர் என்ற படத்துக்காகவும் பெற்றுக் கொணடனர். அடூருக்கு ஜந்து தடவைகளும், சத்யஜித்ரேக்கு ஆறு தடவைகளும், மிருணாள் சென்னுக்கு நான்கு தடவைகளும் இவ் விருது கிடைத்தது.

சிறந்த நடிகர் விருதை கமலஹாசன் மூன்று தடவைகளும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரிக்சாக்கரன் படத்துக்காகவும், மற்றும் விக்ரம், பிரகாஷ்ராஜ் போன்றோர் தமிழுக்காக பெற்றுக் கொடுத்தனர். பிரபல மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி(3) மற்றும் ஓம்  பூரி. நஷரூதின் ஷா இரு தடவைகள் பெற்றுள்ளனர். அமிதாப்பிற்கும் இரு தடவைகள் இவ் விருது கிடைத்துள்ளது. சிவாஜி கணேசனுக்கு இவ் விருது ஒரு தடவையேனும் கிடைக்க வில்லை.

இவ் வருடம் பரதேசியில் நடித்தமைக்காக மோகன்லால் இறுதி சுற்று வரை பிரகாஸ்ராசுவுடன் கடும் போட்டியில் போட்டியிட்டு நடுவர்களின் நாயகனின் வாக்கு ராசுவுக்கு சாதகமாக ராசு பரிசைத் தட்டிச் சென்றார். பரதேசி படத்தைப் பார்த்தவர்கள் நடிப்பின் வித்தியாசத்தை அறிவார்கள். சிறந்த நடிகைக்கான விருதை தமிழுக்கு பிரியாமணி, ஷோபா, லக்சுமி, அர்ச்சனா, சுகாசினி ஆகியோர் பெற்றுக் கொடுத்தனர். சப்னா ஆஷ்மிக்கு ஜந்து தடவைகள் இவ் விருது கிடைத்தது. சாரதா மூன்று தடவைகள் பெற்றுக் கொண்டார்.

தேவர் மகனுக்காக சிவாஜி நடுவர் விருதைப் பெற்றுக் கொண்டார். பாவமன்னிப்பு படம் 1962ல் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. மக்கள் அபிமான விருதை ஓட்டோகிராப், வானத்தைப் போல, சம்சாரம் அது மின்சாரம் ஆகிய படங்கள் தமிழுக்கு பெற்றுக் கொடுத்தன. குடும்பல நல விருதை தவமாய் தவமிருந்து, கருத்தம்மா, சந்தியாராகம் ஆகிய தமிழ்ப்படங்கள் பெற்றன.

 பல தொழில்நுட்ப விருதுகள் தமிழ்ப்படங்களுக்கு கிடைத்தன. இசை,ஒளிப்பதிவு, கலை போன்றவை. கந்தன் கருணை படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கே.வி.மகாதேவனுக்கு கிடைத்தது. சாந்தி நிலையம் பட ஒளிப்பதிவாளராக மார்க்கஸ் பாட்லேய் விருது பெற்றார். சத்யஜித்ரேயும் 1973ல் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார்.

 காஞ்சிவரம் ஊழதெநநஎயசயஅ என்ற ஆங்கில பதம், காஞ்சிபுரம் என்பதன் திரிபாகவே மாறியுள்ளது. காஞ்சிவரம் என்பது ஆங்கிலப் பெயரே. இன்றும் என்றும் காஞ்சிபுரமாகவே இருந்து வருகின்றது. ஏன் இப்படத்துக்கு காஞ்சிவரம் எனப் பெயரீட்டார்கள்? ஆங்பிலேயர்கள் காலத்தில் நடக்கும் கதை என்பதனாலா? பல்லவர், சோழர், பல்லவர் விஜய நாயக்கர், மொகாலயர் ஆங்கிலேயருக்கு முன்பாக ஆண்டுள்ளார்கள்.

சரித்திர பிரசித்தி பெற்ற மாமல்ல புரம், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பதி போன்ற நகரங்கள் சுற்றிவர உள்ளன. ஒரு காலத்தில் பட்டுபுடவைகளுக்கு பெயர் பெற்ற இடம். இன்றும் அந்த இடத்தை தங்கவைத்துள்ளது. சுமார் 400 வருடங்களுக்கு முன்பாகவே இங்கு பட்டு புடவைகள் நெய்யும் தொழில் ஆரம்பமாகிவிட்டது. கி.மு 6000 ஆண்டளிவில் சீனாவில் முதலில் பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இன்று சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் பட்டு நெய்கின்றார்கள். மொத்த சனத்தொகையில் என்பது வீதமானோர் பட்டுத் தொழில் ஈடுபட்டுள்ளார்கள். (நெய்பவர்கள், வியாபாரிகள்) சுமார் 50,000 சிறுவர்கள் இத் தொழிலில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் சராசரி 12 மணித்திலாயங்கள் வேலை செய்கின்றனர். சில சமயங்களில் 16 மணித்திலாயங்களும் வேலை செய்கின்றனர்.

 சுமார் 15,000 விற்கும் சேலையை நெய்யும் குடும்பத்திற்கு கிடைப்பது வெறும் 1,500 ரூபாய்களே. அதனையும் மீறி உலகமயமாதல்  Cars (Hyundai of S. Korea and Ford Motors of the USA) ‘ Phones (Nokia , Motorola ) போன்ற பல நிறுவனங்கள காஞசிபுரத்தில் இப்பொழுது; உள்ளன. இன்று பலர் நெசவைத் தவிர்த்து வேறு வேலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர்.
சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் பட்டு நெய்யும், தொழிலாளர்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்கின்றனர். இவர்களது உழைப்புக்கும், கலைத்திறனுக்கும் போதிய ஊதியம் கிடைப்பதில்லை. வேங்கடம் தனது திருமணத்தில் மனைவிக்கு பட்டு புடவை உடுத்துவேன் எனக் கூறுகின்றான். அது சாத்தியப்படமால் போக தனது மகளின் திருமணத்திற்கு பட்டு புடவை கொடுப்பேன் எனக் கூறுகின்றான். இதற்காக பட்டு நெய்யும் பொழுது நூல்களை வாயினுள் போட்டு கொண்டு வந்து, வீட்டில் யாருக்கும் தெரியாமல் நெய்கின்றார்.

இதற்கிடையில் அங்கு வரும் கம்யூனிஸ்ட்லால் தொழிலாளர்களிடையே மாற்றம் ஏற்படுகின்றது. போராடுகின்றனர், வேலை நிறுத்தம் செய்கின்றனர். வேங்கடத்தின் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து போகின்றாள். வேங்கடத்தின் நண்பனின்  மகனுக்கும், வேங்கடத்தின் மகளுக்கும் காதல் மலர்கின்றது.

 நண்பனின் மகன் இராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு வருகின்றார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தீhமானிக்கின்றனர். பட்டு புடவையை நெய்யும் முயற்சியில் தீவிரமாகின்றார் வேங்கடம். நண்பர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகின்றது. இதனால் நண்பர்களிடையே ஏற்படும் கைகலப்பில் வேங்கடத்தின் வாய்க்குள் இருந்து நூல்கள் வெளியேறுகின்றன. வேங்கடத்தை கள்ளன் எனக் கூறி அடித்து, சிறையில் தள்ளுகின்றனர். வேங்கடத்தின் மகளின் திருமணம் தடைப்படுகின்றது.

பல வருடங்களின் பின்னர் மகள் வாத நோய் ஏற்பட்டு படுக்கையில் இருக்கும் பொழுது, இரு நாட்கள் பரோலில் வருகின்றார். இரு நாட்களில் திரும்பிச் செல்லவேண்டும். மகளைப் பார்ப்பதற்கு, வேங்கடத்தின் சகோதரி கூட மறுத்துவிடுகின்றார். சகோதரியின் கணவன் தீவிரமாக மறுக்கின்றான். எதுவும் செய்ய முடியாத வேங்கடம், எலி மருந்து கொடுத்து மகளை கொல்லுகின்றார்.

மக்களுக்காக வாழும் இடது சாரிகள் மக்களை கொல்கின்றார்கள் என்ற பிரியதர்சனின் மசாலா சிந்தனை இங்கே வெளிப்படுகின்றது. தொழிலாளர்களிடையே சாதாரண மனிதாபமானம் கூட இல்லை என அடித்துக் கூறுகின்றார் பிரியதர்சன்   முதலாளி வேங்கடத்தை அடிக்கும் பொழுது தொழிலாளிகள் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி இதனை வெளிப்படுத்துகின்றது.

 படத்தின் முடிவில் இன்று இயங்கும் நெசவாளர்கள் சங்கம் பற்றிய விடயங்களை கூறியுள்ளனர். இப் படம் இடது சாரிகளுக்கு எதிரான கருத்துகளை பதிவுசெய்துள்ளது. வேங்கடத்தை ஓர் சபலம் நிறைந்த இடதுசாரியாக காட்டியுள்ளனர். வேங்கடம் கள்ளன் என அடிபடும் பொழுது, வேங்கடத்தின் நண்பரும், இடதுசாரியுமான இவரது நண்பரும், தோழர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் கையைக் கட்டி பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். வேங்கடத்தின் நண்பர் இடது சாரியாகவிருந்தும், வேங்கடம் செய்த தவறுக்காக அவரது மகளின் திருமணத்தையே தடைசெய்கின்றார்.

இறுதியாக வேங்கடத்தின் மகளை, வேங்கடமே கொலை செய்வதுடன்,(கருணைக் கொலை) இயக்குனர் தனது இடது சாரிகள் மேல் உள்ள கோபத்தை தீர்த்துக் கொள்கின்றார். கதையை நகர்த்த தந்தை மகள் பாசக்கோடு. புடத்தின் பிரதான பாத்திரங்களில் ஒன்றான பட்டுச் சேலையின் நிறத்தை அடிக்கடி மாத்திக் காட்டுகின்றார்கள்.

இயக்குனர் பிரியதர்சன் சில தமிழ் படங்களை இயக்கியுள்ளார். ஹிந்தியில் ஏராளமன படங்களை இயக்கியுள்ளார். வெற்றிகரமான வணிக இயக்குனர். இவரது முதலாவது சீரிய படம். காட்சியமைப்புக்கள் இவரை சிறந்த வணிக இயக்குனர் என்பதை நிரூபிக்கின்றன. கடும் மழையில் பேரூந்தில் வேங்கடம் பொலிஸ்காரர்களுடன் பயனிக்கின்றார். இயல்பாக மழை நாள் போல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படம் காஞ்சிவரத்தை சுற்றியுள்ள பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண புகையிலை போன்ற பல நுணுக்கமான விடயங்கள் பதிவு செய்துள்ளார் இயக்குனர். சுதந்திரத்துக்கு முற்பட்ட காலப்பகுதியை சிறப்பாக பதிவு செய்துள்ளார். வணிக இயக்குனர்கள் தொழில் நுட்பத்தில் சோடை போவதில்லை. கலை சாபு சிரிலும, இசையமைப்பாளர் எம். ஜி. சிறி குமாரும் மிகவும் சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். வேங்கடமாக பிரகாஸ்ராஜ் நடித்துள்ளார். இவரது தேர்வு தவறானது. வேங்கடம் பாத்திரத்துடன் இவரால் இணைய முடியவில்லை. இயல்பான நடிப்பு வெளிப்படவில்லை. இவரது தோற்றத்தில் ஓர் நெசவாளியையும் காணமுடியாது. முதலாளி போன்ற தோற்றம் கொண்ட பிராகாசுராசுரவை ஏன் இப் பாத்திரத்துக்கு தேர்வு செய்தார்கள். இவரது நடை, உடை, பாவனை அனைத்தும் முதலாளித்துவத்தின் வெளிப்பாடே.  துணைப் பாத்திரங்களின் நடிப்பு இயல்பாகவிருந்தது. இதனை பிரதான பாத்திரங்களில் காணமுடியவில்லை. வணிக நடிகர்களை சீரிய படங்களில் நடிக்க வைப்பதும் ஓர் வணிக முயற்சியே.
இக் கதையின் மூலத்தை இயக்குனர் வெளிப்படுத்தவில்லை.

9/24/2008 19:22:48 P.M