தேசபக்தி அயோக்கியர்களின் கடைசி முகமூடி:ஆழியூரான்

con13

அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கும்
 
ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடந்த இறுதி லீக் போட்டி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் பரபரப்பாக கவனிக்கப்பட்டது. காரணம், அதில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால்தான் இந்தியாவால் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பைப் பெற முடியும். புள்ளிகள் அடிப்படையில் நடந்த போட்டியின் நிலைமை அவ்வாறு இருந்தது. அன்றைய தினத்தில் பெரும்பான்மையான இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானின் வெற்றிக்காக பாரதமாதாவை நெக்குருகி வேண்டிக் கொண்டிருந்தன.

  தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் ‘எப்படியாவது பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிடாதா?‘ என்று ஏங்கித் தவித்தார்கள். சென்னை பண்பலை வானொலிகள் பலவற்றில் அன்று இதைப்பற்றிதான் மூச்சுவிடாமல் பேசினார்கள். ரேடியோ மிர்ச்சியில் அஞ்சனா என்ற ரேடியோ ஜாக்கி இதைப்பற்றி நேயர்களிடம் தொலைபேசி வழியே உரையாடும் நிகழ்ச்சி ஒன்றை செய்துகொண்டிருந்தார். அவர், ‘எனக்கு இதை சொல்றதுக்கு நாக்கு கூசுறது. இருந்தாலும் பாகிஸ்தான் ஜெயிக்கனும்னு நாமல்லாம் பிரே பண்ணுவோம். என்னப் பண்றது௪ நம்ம நிலைமை இப்படில்லாம் சொல்ல வேண்டியிருக்குது‘ என தன் மனதை கல்லாக்கிக்கொண்டு பாகிஸ்தானின் வெற்றிக்காக பிரார்த்திதார். அநேகமாக அன்று இரவு அவர் தான் செய்த பாவத்துக்காக அரங்கனின் பாத அடிகளை சேவித்து பாவ மன்னிப்பும் கேட்டிருக்கக்கூடும். ‘பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும்‘ என கோடிக்கணக்கான ‘இந்திய‘ உதடுகள் உச்சரித்த நிகழ்வு அண்மை காலத்தில் இதுவாகத்தான் இருக்கும். (அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோற்று இந்தியாவின் எதிர்பார்ப்பில் ‘கரி‘யைப் பூசிவிட்டது என்பது வேறு விஷயம்).  இது ஒன்று . இரண்டாவது, தசரா பண்டிகையை வட மாநிலங்களில் ராம் லீலாவாகக் கொண்டாடுகிறார்கள். ராவணனின் உருவப்படத்தை எரிப்பது அதில் ஒரு பகுதி. அப்படி இந்த வருடம் போபால் நகரில் ராம் லீலா கொண்டாடப்பட்டபோது ராவணனின் உருவப்படத்துக்குப் பதிலாக மும்பைத் தாக்குதலில் கைதாகியிருக்கும் தீவிரவாதி அஜ்மல் கசாப்பின் உருவ பொம்மையை எரித்தார்கள். இதைப்பற்றி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அகர்வால் என்பவர் சொல்லும்போது, ”தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு அரசாங்கத்தால் இதுவரைத் தண்டனைத் தர முடியவில்லை. கொடும்பாவியை எரித்ததன் மூலம் நாங்கள் தண்டனைக் கொடுத்திருக்கிறோம்” என்றார்.

இந்த இரண்டும் தேசபக்தி என்பது எத்தகைய பொய்மையானது என்பதையும அது எதிர்வுகளை கட்டமைப்பதன் மூலம் எப்படித் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது என்பதையும் புரிந்துகொள்வதற்கான அண்மை கால சான்றுகள். தேசபக்திக்கு எப்போதும் எதிரிகள் வேண்டும். உங்கள் இந்திய தேசபக்தியை நிறுவ, நீங்கள் பாகிஸ்தானை எதிரியாக வரித்துக்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் தோல்வியடைய வேண்டும் என்று நினைப்பதில்தான் இந்திய தேசபக்தியின் அடர்த்தி நிலைநிறுத்தப்படுகிறது. மாறாக பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பதே பதற்றம் தருவதாகவும், பாவம் ஒன்றை செய்வதாகவும் மாறிப்போகிறது. இதை மறுவளமாக பார்த்தால் ‘பாகிஸ்தானின் வெற்றி இந்தியாவுக்கு லாபம் தரும் என்றால் அதை இந்திய மனநிலை ஆதரிக்கும்‘ என இதை சாறு எடுத்துப் புரிந்துகொள்ள முடியுமா? இல்லை.
 

தேசபக்தி என்பது இன்றைக்கு வியாபாரம் செய்வதற்கு தோதான ஒரு பிராண்ட, கோககோலா, பெப்ஸி, ரிலையன்ஸ், இந்துஸ்தான் லீவர், ஹமாம் போல தேசபக்தியும் ஒரு பிராண்ட். இது அனைத்து பெருமுதலாளிகளுக்குமான அமுத சுரபி. பன்னாட்டு நிறுவனங்களும், பெரும் முதலாளிகளும் கோடிகளை செலவழித்து நடிகர், நடிகைகளை வைத்து தங்கள் பொருளுக்கு கொடுக்க முடியாத விளம்பரத்தை தேசபக்தியின் பெயரால் மிக எளிதாக செய்கிறார்கள். குறிப்பிட்ட பிராண்ட் துணி அணிந்தால், குறிப்பிட்ட பிரஷ்ஷர் குக்கர் வாங்கினால் நீங்கள் உண்மையான தேசபக்தர். இந்திய சுதந்திரத்தின் 50&ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்களின்போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்த கோல்கேட் நிறுவனம் ‘வந்தே மாதரம், ஸ்பான்ஸர்டு பை கோல்கேட்‘ என்று சொல்லிக்கொண்டது. பாரதமாதாவுக்கும், வந்தே மாதரத்துக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்ஸர் செய்ய ஆரம்பித்து வெகு காலமாகிறது. 
 
 
con14கொஞ்சம் கவனித்தால் நாட்டில் கிரிக்கெட் காலங்களிலும்இன்ன பிற விழா காலங்களிலும் தேசபக்தியின் அடர்த்தி கூடிவிடும். அப்போது மட்டும் தேச பக்தியின் பெயரால் சாமியாடுவார்கள். ஆனால் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டில் இந்திய தேசியம், தேசபக்தி என்பதெல்லாம் டவுசர் கிழிந்து தொங்குகிறது. இந்த வெறியூட்டப்பட்ட தேசபக்தியின் உச்சகட்ட வடிவம்தான் கிரிக்கெட். அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டி என்பது தேசபக்தியை மிக அதிக விலைக்கு விற்கக் கிடைத்திருக்கும் சந்தை. இந்த சந்தையை தங்கு தடையில்லாமல் நிறுவுவதற்காகதான் பாகிஸ்தான் என்னும் தேசத்தையும், அதன் மக்களையும் இந்திய எதிரிகளாக கட்டமைக்கிறார்கள். இதன் இந்தியப் பதிப்பாக முஸ்லீம் விரோதம் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடக்கும்போது ‘என்ன இருந்தாலும் நீ பாகிஸ்தானுத்தான் சப்போர்ட் பண்ணுவே‘ என்று கிரிக்கெட் பார்க்கும் இந்திய முஸ்லீம்களை நோக்கி வார்த்தைகள் வீசப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். இதன் மூலம் முஸ்லீம்களுக்கு தேசபக்தி இருக்காது, இருக்கத் தேவையில்லை என்ற கருத்தை கட்டமைத்து, இந்திய தேசபக்தி தனக்கான எதிர்வுகளை நிறுவுகிறது. ‘பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: பழி தீர்க்குமா இந்தியா?‘ என்று ஊடகங்கள் தங்கள் பங்குக்கு வெறியூட்டுகின்றன.
அனுதினமும் அதிகாரம் மக்களுக்கு துன்பங்களையே பரிசளித்து வருகிறது .
 இவற்றை மக்கள் உணரவிடாமல் செய்யவும் தங்களின் பொறுக்கித் திண்ணும் பிழைப்பை மூடி மறைத்துக்கொள்ளவும் அதிகார வர்க்கத்துக்கு தேசபக்தி பயன்படுகிறது. எல்லையோரத்தில் துப்பாக்கிக்களுக்கு இரையாகும் அப்பாவி ராணுவ வீரன் தேசபக்தியாளனாகக் கொண்டாடப்படுகிறான். இதன்மூலம் அவனை கொன்றது அரசதிகாரம்தான் என்ற உண்மை மறைக்கப்பட்டு தேசபக்தியின் பெயரால் ஒரு கொலை, தியாகமாக்கப்படுகிறது.

இப்படி அதிகாரம் தயாரித்து வழங்கும் தேசபக்தியை கேள்விகளுக்கு அப்பாற்பட்டு நிறுவும் நிறுவனமாக செயல்படுகின்றன இந்திய நீதிமன்றங்கள் ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழர் விடுதலை இயக்கமும் தமிழ்நாடு முழுக்க இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டங்களை நடத்தின. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு பிணை வழங்கும்போது ‘இவர்கள் இந்திய தேசிய கொடியை அவமதித்திருக்கிறார்கள். அதனால் ஒரு வார காலத்துக்கு தங்கள் வீடுகளின் முன்பு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்‘ என்பதை பிணைக்கான நிபந்தணையாக விதித்தது நீதிமன்றம். இதற்கு அவர்கள் மறுத்தபோது நீதிபதிகள் கோபப்பட்டனர். தேசியக் கொடி ஏற்றும் நிபந்தணையை மறுபடியும் மறுபடியும் வலியுறுத்தினார்கள். இங்கு தேசபக்தி என்பது கட்டாயமாக்கி ஊட்டப்படுகிறது. இதை, ‘இந்த நாட்டில்தானே வசிக்கிறீர்கள். இந்த நாட்டு அரசாங்கத்தின் சலுகைகளைத்தானே அனுபவிக்கிறீர்கள். பிறகு தேசபக்தி இல்லாமல் இருந்தால் அது குற்றமில்லையா?‘ என்ற எளிய தர்க்கத்தின் மூலம் நியாயப்படுத்துகின்றனர். நானும் இந்த நாட்டில்தான் வாழுகிறேன், அம்பானியும் இந்த நாட்டில்தான் வாழுகிறார், அசோக் சிங்காலும், நரேந்திரமோடியும் இந்த நாட்டில்தான் வாழுகின்றனர், வாயில் மலம் திணிக்கப்பட்ட திண்ணியம் முருகேசனும், ராமசாமியும் இந்த நாட்டில்தான் வாழுகின்றனர், எல்லோரும் சமமா? ஒரு அரசு தன் ஆளுகையின் கீழ் வாழும் அனைத்து தேசிய இனங்களையும் சமமாக நடத்த வேண்டும்? அவ்வாறுதான் நடக்கிறதா?
 
 
கீழே உள்ளது கயர்லாஞ்சியில் ஆதிக்க சாதியினர் செய்த சித்தரவதையின் சிறு பகுதி,

   “குடிசைக்குள் புகுந்த உயர் ஜாதி இந்துக்கள், (பெண்கள் பலரும் அக்கூட்டத்துடன் வந்தனர்.) அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்திக் கையோடு கொண்டுவந்திருந்த ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினர். நால்வரையும் தெருத்தெருவாக இழுத்துச்சென்றனர். ஊர்ப் பொது இடத்திற்குக் கொண்டுவந்து போட்மாங்கேவின் மனைவியையும் மகளையும் கூட்டத்திலிருந்த எல்லா ஆண்களும் மாறிமாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். சூழ்ந்துநின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த உயர் ஜாதி இந்துப் பெண்கள் யாரும் தம் ஆண்களின் வெறிபிடித்த இந்த வன்செயலைக் கண்டிக்கவுமில்லை, தடுக்கவும் முற்படவில்லை. பிறகு ஒரு கொடூரமான செயல் அரங்கேறியது. தாயையும் தங்கையையும் புணருமாறு போட்மாங்கேவின் மகன்கள் சுதிருக்கும் ரோஷனுக்கும் கட்டளையிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே அவர்களின் ஆண் உறுப்புகளைக் கத்தியால் வெட்டினர். பிறகு ரத்தம் தெறிக்கும் அவர்களது உடல்களை ஆகாயத்தில் தூக்கி எறிந்து விளையாடினர். அவர்களது உயிர் பிரியும்வரை நான் முந்தி நீ முந்தி எனப் பலரும் இந்த விளையாட்டில் ஈடுபட்டனர். குற்றுயிராய்க் கிடந்த இரு பெண்களின் குறிகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடியில் பொருத்தப்படும் கம்புகளைச் சொருகினர். சிலர் நன்கு கூர்மையாகச் சீவப்பட்ட மூங்கில் குச்சிகளை அடித்துச் சொருகினர். அதிக இரத்தப் போக்கினாலும் தாங்க முடியாத சித்திரவதைகளினாலும் உயிரிழந்த அப்பெண்களது உடல்களைத் தெருவில் வீசிவிட்டுச் சென்றனர்.”

இதைப் படிக்கும்போது ஒரு கணம் உடல் அதிரவில்லையா? ஒரு தலித்தாக இருந்துகொண்டு சொந்த நிலம் வைத்திருந்ததையும், தன் பயிர்கள் மீது உயர்சாதியினர் டிராக்டர் ஏற்றி நாசம் செய்தபோது அதற்கு நியாயம் கேட்டதையும் தவிர போட்மாங்கே செய்த தவறு என்ன? இந்த கொடூரங்களை அரங்கேற்றியவர்களும், செத்துப்போனவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். இருவரும் ஒன்றா? ‘இந்த நாட்டின் மீது எனக்கு பற்று இல்லாமல் போனதற்கு நான் காரணம் அல்ல. நான் வாழ்வதற்கு உரிய குறைந்தப்பட்ச உரிமைகளைக் கூட தர மறுக்கும் இந்த நாடுதான் காரணம்‘ என்றார் அண்ணல் அம்பேத்கர். அந்த நிலை கொஞ்சமும் குறையாமல் இந்த நாடு என்பது ஆதிக்கத்துக்கும், அதிகாரத்துக்கும் சேவை செய்யும் நிறுவனமாக இருக்கும் நிலையில் தேசபக்தி எப்படி வரும்? 
 
 
con15இந்திய தேசபக்தி என்பதே இந்து தேசபக்திதான்  இதை இந்திய தேசியம் என்ற கற்பிதத்தின் பெயரால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஊட்டியதில் காந்திக்கு பெரும்பங்கு உண்டு. ‘நான் ஒரு சனாதான இந்து‘ என்று அறிவித்துக்கொண்ட காந்தி இந்திய தேசியம் என்பது இந்து தேசியம்தான் என்பதை பல சமயங்களில் மிக வெளிப்படையாகவே அறிவித்தவர். தலித்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் இரட்டை வாக்குரிமை வேண்டும் என்ற அம்பேத்கரின் கோரிக்கையை, ‘அப்படி செய்தால் இந்து மதம் பிளவுபட்டு விடும்‘ என்று சொல்லி நிராகரித்தவர். பிரிட்டீஷ் அரசு தலித் மக்களுக்கு அந்த உரிமையை வழங்கியபோது அதைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த காந்தி எப்படி இந்த நாட்டு தலித் மக்களுக்கு ‘தேசப்பிதா‘வாக இருக்க முடியும்? இப்போது இந்துத்துவா அமைப்புகள் பழங்குடி மக்களிடமும் தங்களின் பாசிச கருத்துக்களை விதைக்கும் வேலையில் இறங்கியிருக்கின்றன. அவர்களின் பழங்குடி கலாச்சாரத்தை நீக்கம் செய்து ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு இந்துத்துவ வகுப்பு எடுக்கிறது. குஜராத்தில் பழங்குடி மக்களைக் கொண்டு முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை மோடி கட்டவிழ்த்து விட்டதை நினைவில் கொள்ள வேண்டும்.
அடிப்படையில் தேசியம் என்பதே மற்றமைகளை மறுக்கிற ஒன்றுதான்.
 
  அது இந்திய தேசியமாக இருந்தாலும், தமிழ் தேசியமாக இருந்தாலும்,  தேசியம் என்ற கருதுகோளே நிபந்தணையற்ற ஜனநாயகத்தை மறுப்பதில்தான் தொடங்குகிறது. அதுவே பின்பு அடக்குமுறையாகவும், அதிகாரமாகவும் மாற்றம் கொள்கிறது. இந்தியா என்பது பல்தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருப்பதையும் நாம் இந்த பின்னணியில் இருந்துதான் வாசிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா என்ற நிலப்பரப்புக்கு எவ்வகையிலும் சம்பந்தப்படாத வட கிழக்கு மாநில மக்களை இந்திய தேசிய வரையறைக்குள் எப்படி சேர்க்க முடியும்? ஏறக்குறைய அனைத்துப் பார்ப்பனர்களுமே இந்திய தேசியத்தை வலியுறுத்துகின்றனர்.
 

தமிழ் தேசியம் பேசும் பார்பனர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. காரணம் தாங்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள் இல்லை என்ற உண்மையை அவர்களின் அடிமனம் எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. தங்களுக்கு என்ற சொந்த நாடு இல்லாத அவர்களின் மனநிலையானது அடுத்தவன் ஒரு நாடு அடைவதையும் தடுக்கிறது. அதனால்தான் பெரும்பான்மை பார்ப்பனர்கள் தமிழீழம் என்பதற்கும் எதிராக இருந்தார்கள், இருக்கிறார்கள். இந்த இந்துத்துவவாதிகள்தான் இந்திய தேசியத்தை தேசபக்தியின் பெயரால் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். உண்மையில் மக்களின் மனங்களில் இருந்து தேசியம் துடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.. மக்களுக்கு தேசியவெறி இல்லை. தேச எல்லைகள் தேவையாய் இல்லை. இதற்கு உலகமயமாதல் உட்பட பல காரணங்கள்.
 
 இந்த நிலைக்கு எதிர்மாறாக உலகம் முழுக்க ஆளும் வர்க்கத்தால் தேசியவெறி திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது. காரணம் ஆளும் முதலாளிகளுக்கு தேசிய வெறி என்பது மிகத் தேவையான ஒன்று. அழிவின் விளிம்பில் நிற்கும் முதலாளித்துவமானது, தனது இருப்பை எப்பாடுபட்டாவது தக்கவைத்துக்கொள்வதற்காக மக்களிடம் தேசியவெறியை தூண்விடுகிறது.
 
 இதை முறியடிக்க வேண்டுமானால் முதலில் நாம் இந்த முதலாளித்துவ தேசியத்தின் துரோகிகளாக மனமாற்றம் கொள்ள வேண்டும். தேசபக்தனில் இருந்து தேசத்துரோகியாக மாறுவது ஒன்றே அறம் சார்ந்த வாழ்வாக இருக்க முடியும்!

யார்பக்கம் ? : சபா நாவலன்

lttepower ந்திய ஆதிக்க வர்க்கமும் அதன் இலங்கை அடிமைகளும் கூட்டிணைந்து நிகழ்த்திய வன்னிப் படுகொலைகள் புலிகள் என்ற அமைப்பிற்குக் கிடைத்த தோல்வி மட்டுமல்ல அதன் அதிகாரம் சார்ந்த கருத்தியலுக்கும் சிந்தனை முறைக்கும் கிடைத்த மாபெரும் தோல்வி. இன்னமும் செத்துப் போய்விடாத இந்தச் சிந்தனை முறையும், அரசியலும் இன்னும் எத்தனை மனித உயிர்களைப் பலியெடுக்கப் போகின்றன என்பதே இங்கு புதிய அச்சங்களைத் தோற்றுவிக்கின்றன.

அதிகார வர்கத்தின் பொருளாதார நலன்கள் வரலாறு முழுவதும் பல ஆயிரக்கணக்கில் மனித உயிர்களைப் பலிகொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கில், ஆபிரிக்காவில், ஆசியாவில் என்று எங்கெல்லாம் தமது அதிகார நலன்களுக்காக அப்பாவிகளைக் கொன்று போட வேண்டுமோ அங்கில்லாம் மனிதக் கொலைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

அதிகார வர்க்கத்தைச் சார்ந்த கருத்தியல் என்பது புலிகள் போன்ற போராட்டக் குழுக்களின் அரசியலாக வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது ஒரு புறம், மறுபுறத்தில் அதுவே இன்னுமொரு வடிவத்தில் உலக மக்களின் சிந்தனை முறையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பது துரதிர்ஷ்ட வசமானது. இது தான் மக்களை அழிக்கும் பாசிசமாக வளர்ச்சி பெறுகிறது. இவ்வாறு வளர்ச்சி பெற்ற பாசிசம் என்பது தான் தமிழ் பேசும் மக்களின் சிறீ லங்கா அரசிற்கு எதிரான நியாயமான போராட்டத்தையும் சீர் குலைத்துச் சிதைத்து விட்டிருக்கிறது.

அதிகாரம் சார்ந்த இந்தச் சிந்தனை முறை தகர்த்தெறியப்பட வேண்டும். உலகம் முழுவதும் அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்படும் மக்களே பெரும்பான்மை. இந்தப் பெரும்பான்மை ஆளும் வர்க்கத்தின் சிந்தாந்தங்களால் சிதைக்கப்படுகின்றது. இவ்வாறான சித்தாந்தங்கள் ஒடுக்கப்படுகின்ற மக்களின் பெரும்பான்மையைச் சிதைத்து அதன் ஒருபகுதியை அதிகாரத்திற்குச் சார்பானதாக மாற்றிவிடுகிறது.

LocustThumbளும் வர்க்கத்தோடு சமரசம் செய்கின்ற உணர்வையும், பெரும்பான்மை மக்களின் அபிலாசைகளையும் கூறுபடுத்துகின்ற இந்த போக்கானது அதிகாரத்தோடு சமரசத்தை கோருகின்றது. காலனியாதிக்க பிரித்தானியாவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கை இன முரண்பாடு இலங்கை இந்திய ஆளும் வர்க்கத்தால் தொடர்ச்சியாகக் கையாளப்பட்டு, ஆயிரக்கணக்கன தமிழ் பேசும் அப்பாவிகளைக் கொன்று புதைத்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி மட்டும் தான் தமிழ் பேசும் மக்கள் அழிக்கப்படுவதற்குக் காரணமல்ல. வன்னியில் கொன்று போடப்பட்ட அப்பவி மக்கள் மக்களின் பிணங்களின் மீது அரசியல் நடத்த முனையும் அத்தனை சிங்களப் பௌத்தப் பேரின வாதிகளும்தான் காரணம். மக்கள் அழிக்கப்பட்டாலும் புலிகள் அழிந்துபோனதைப் பெருமையாகப் பேசும் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசின்க, இலங்கை அர்சின் வெற்றியில் தானும் பங்கு கேட்கிறார். மக்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்படும் போது மூச்சுகூட விடாமல் இலங்கைத் தேசியம் பேசிய ஜே.வீ.பி யினருக்கு இப்போது மட்டும் திடீரென தமிழ் பேசும் மக்கள் மீது rajapakshabuddhistகரிசனை முளைவிட்டிருக்கிறது. இவர்கல் அனைவருமே மனித குலத்தின் எதிரிகள். மனித குலத்தின் ஒரு தொகுதி, சாரி சாரியாக கொல்லப்பட்ட போது பார்த்து ரசித்துக்கொண்டிருந்தவர்கள். இன்று தமிழ் பேசும் மக்களின் பிரமுகர்கள் கூட்டம் தம்மை இந்தக் குழுக்களோடு அடையாளப் படுத்திக்கொள்ள முனைகின்றனர். இவர்களும் மனித குலத்தின் எதிரிகளே!

 ஆசியாவின் ஒரு மூலையில் மக்கள் சாரிசாரியாகக் கொல்லப்பட்ட பின்னர், கால் மில்லியன் மக்களை திறந்த வெளிச் சிறைச் சாலைகளில் அடைத்து வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சர்வதேச அதிகாரவர்க்கம் தம்மை நிர்வாணமாக மக்கள் மத்தியில் அடையாளம் காட்டியிருக்கிறது.
இலங்கை, இந்திய, அமரிக்கா போன்ற சர்வதேச அதிகார வர்க்கத்தோடு மட்டும் தான் நாம் இன்னமும் நம்மை அடயாளப்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லை உலகெங்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினரோடு எம்மை அடயாளப்படுத்திக் கொள்ளப்போகிறோமா என்பது தான் இங்கு தொக்கி நிற்கும் பிரதாக கேள்வி.

அதிகாரவர்க்கத்தை நம்பியிருந்த புலிகளை  அவ்வர்க்கம்  கைகழுவி விட்டு,  மனிதப் படுகொலைகளை  வேடிக்கை amnesty-internationalபார்த்துக்கொண்டிருந்த பின்னரும் அதே ஆதிக்க வர்க்கத்தோடு மட்டும் தான் இனச்சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப் பட்டிருக்கும் தமிழ் பேசும் மக்கள் தம்மை அடையாள்ப்படுத்துவதென்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம் மட்டுமல்ல இன்னொரு தோல்வியின் ஆரம்பத்திற்கான அத்திவாரம்.

காரணமின்றி வலிந்து சிறைவைக்கப்பட்டிருக்கும் கால் மில்லியன் மக்களை விடுவிக்க வேண்டுமென்று எந்தச் சர்வதேச அமைப்புக்களும் கோரிக்கை விடவில்லை. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்களெல்லாம் சிறை முகாம்களில் மனித உரிமை குறித்தும், அவற்றின் வசதிகள் குறித்தும் அவ்வப்போது அறிக்கை  வெளியிட்டபடி அவ்வப்போது தமது இருப்பைப் பறைசாற்றிக்கொள்கின்றன.

இவர்களெல்லாம் இலங்கை அரசிற்கு மறைமுக அங்கீகாரம் மட்டும்தான் வழங்குகின்றனர். நீங்கள் மக்களைக் காரணமின்றிச் சிறை வைத்திருக்கலாம் ஆனால் மனித உரிமை மீறல்களின்றிப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். அறுபது வருட காலமாக திட்டமிட்டு நடத்தப்படும் இனச்சுத்திகரிப்பை “மனி உரிமைக்கு” மதிப்பளித்துத் தொடரச்சொல்கின்றனர்.

இவை அனைத்திற்கும் மத்தியில் சில Save Tamils ஏற்பாடு செய்யப்பட்ட திஸ்சநாயகத்தின் கைதிற்கு எதிரான கண்டனக்கூட்டம் அதிகாரம் சாராமல் நடைபெற்ற நிகழ்விற்கு ஒரு நல்ல முன்னுதாரணம்.

இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளில் புலிகள் களின் அதிகாரம் சார்ந்த சிந்தனை முறையே இன்னமும் ஆதிக்கம் செலுத்துகிறது.

புலிசார் வானொலியொன்று ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் மக்களைச் சாரிசாரியாகக் கொன்றொழிக்கும் ஒபாமாவின் ஆதரவை கோரி நிற்கும் அதே வேளை ஒபாமா அரசு புலிகளுக்கு ஆதரவு வழங்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடாகத் தான் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவு வழங்குகிறது என்றும் இதற்கு மாறாக இந்திய அரசிற்கு தமிழர்கள் ஆதரவு வழங்க வேண்டுமென்று அதிகார வர்க்கச் சிந்தனை முறைகுட்பட்ட இன்னொரு பகுதியினர் கோருகின்றனர்.

காஷ்மீரிலும், மேற்கு வங்கத்திலும், இன்னும் இந்தியா முழுவதும் எந்த மனிதப்பெறுமானக்களுக்கும் மதிப்பளிகாது மனிதப்படுகொலை நிகழ்த்தும் இந்திய அதிகாரம் உலக முதலாளித்துவத்தோடு தன்னை இணைத்துக் கொள்வதற்காக இலங்கையில் மட்டுமல்ல தனது சொந்த எல்லைக்குள்ளேயே மக்களைக் கொன்று குவிக்கிறது என்பதை உணர மறுக்கிறார்கள் இவர்கள்.

உலகம் முழுவதையும் தனது பொருளாதார ஆகிரமிப்பிற்குள் உட்படுத்துக் நோக்கோடு இரத்தம் தோய்ந்த வரலாற்றை இன்றுவரை எழுதிவைத்திருக்கும் பிரித்தானிய வாக்குக் கட்சிகளோடு இலங்கைப் பிரச்சனை பற்றி மணிக்கணக்கில் விலையுயர்ந்த உணவு விடுதிகளுள் பேச்சு நடத்தும் பிரித்தானிய btfதமிழ் fபோரம் போன்ற புலி சார் அமைப்புக்கள், பிரித்தானியாவின் அடக்குமுறைகளுக்கு எதிராக, பிரித்தானியாவிற்குள்ளேயே போராட்டம் நடத்தும் இலட்சக்கணக்கான இடது சாரிகளை இனம் கண்டுகொள்வதில்லை.

பாலிஸ்தீனய மக்களின் விடுதலைக்காகவும், ஈராக்கிய, ஆப்கானிஸ்தானிய ஆக்கிரமிப்புக்களுகெதிராகவும் இவர்கள் நடத்திய வீரம்மிக்க எதிர்ப்பியக்கங்கள் பல தடவைகள் பிரித்தானிய அதிகாரத்தை அதிரவைத்திருக்கின்றன.

இலங்கை இனப்படுகொலை குறித்து பிரச்சார அடிப்படையில் கூட இவர்கள் அணுகப்படவில்லை. மாறாக, மக்களின் எதிரிகளோடும், அதிகாரத்தோடும் கைகோர்த்துக் கொள்ள முனையும் புலிகளின் தோற்றுப்போன அதிகாரம் சார் சிந்தனை முறை இன்று மறுபடி மறுபடி தமிழ் பேசும் மக்களின் அரசியலாக முன்னிறுத்தப்படுகின்றது.

ஒடுக்கப்படுகின்ற, இனப்படுகொலைக்கும், இனச்சுத்திகரிப்பிற்கும் முகம்கொடுக்கும் தமிழ் பேசும் மக்கள் அதிகாரத்தின் பக்கமல்ல, ஒடுக்கப்படுகின்ற ஏனைய மக்களின் பக்கத்தில் தான் என்ற செய்தி சொல்லப்பட வேண்டும்.

நமது சிந்தனை முறை மாற்றத்திற்கு உள்ளாக்கப்படவேண்டும். இந்தியாவிலும், இல்ங்கையிலும், உலகம் முழுவதும் பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்களை எமது பலத்திற்கு ஆதரவு சக்திகளாக இணைத்துக்கொள்வதன் ஊடாகவே தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்க்குப் புதிய உயிர்ப்பை வழங்க முடியும்.

ஈழப் படுகொலைகளும், இந்திய ஊடகங்களின் வன்மமும் டி.அருள் எழிலன்

hindunaziஊடகவியலாளர்களை கொலை செய்தும் ஒடுக்கியும் அச்சுறுத்தியும் துரத்தியும் விடும் நாடாக மாறியிருக்கிறது இலங்கை.மக்களை மூளைச் சலவை செய்யவும் அச்சுறுத்தவும் தாங்கள் சேவை செய்யும் அதிகார பீடங்களின் ஊது குழலாகவும், தாங்கள் நம்பும் சாதி, மதம் கோட்பாடுகளை பிரச்சாரம் செய்யும் கார்ப்பரேட் சக்திகளாகவும் மாறியிருக்கின்றன இந்திய ஊடகங்களும் பெரும்பாலான ஊடகவியளார்களும்.

உலகெங்கிலும் உண்மைக்காவும் படுகொலை செய்யப்படும் மக்களுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் கவலைப்படும் ஊடகவியளார்களின் கதி அச்சப்படும் வகையில் அதிகரித்துச் செல்கிறது.

இடது திவீரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம். என்றெல்லாம் கட்டி எழுப்பப்படும் அமெரிக்க நலன்களும், அதையொட்டி இராணுவ அனர்த்தனங்களுக்கு இடையில் சிக்கி அழியும் மக்கள் குறித்து பேசுவதற்கும் எந்த ஊடகங்களும் தயாரில்லை. ஆப்கானில் எண்ணெய் லாறியில் இருந்து வழிந்தோடும் எண்ணையை பிடிக்க காலிக் குடங்களோடு திரளுகிற மக்களை குண்டு வீசிக் கொல்கிறது அமெரிக்கப் படைகள்.

அவர்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கிறது மேற்குலக ஊடகங்கள். பி.பி.சி, சி.என்.என். போன்ற ஏகாதிபத்திய உடகங்களுக்கு மாற்றாக அல்ஜசீரா போன்ற ஊடகங்கள் உருவாகி வளர்ந்தாலும் அதன் தேவைகள் ஒப்பீட்டளவில் போதுமானதாக இல்லை.பாக்தாத்தில் வைத்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீசி மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்று இப்போது விடுதலையாகியிருக்கும் சையத்தும் சரி, இந்திய உள்துறை அமைச்சராக இருந்த பா.சிதம்பரம் மீது செருப்பு வீசி சஸ்பெண் செய்யப்பட்டிருக்கும் ஜர்னைல் சிங் போன்றவர்களின் செயல் குறித்து விவாதிக்கக் கூட எந்த ஊடகங்களும் தயாரில்லை.

பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கிலும் அன்றாடம் வீசப்படும் குண்டுகள் குறித்து பிராந்திய மொழி ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில்லை. காஷ்மீரிலும் இந்தியாவின் வடகிழக்கிலும், சட்டீஸ்கர்,மேற்குவங்கம் போன்ற மாவோயிஸ்டுகள் செல்வாக்குச் செலுத்தும் மாநிலங்களில் இந்திய இராணுவம் செய்கிற மனித உரிமைப் படுகொலைகள் குறித்தும் தடுத்து தனிமைப்படுத்தி ரகசிய வதை முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள் குறித்து இந்திய ஆங்கில ஊடகங்கள் வாயே திறப்பதில்லை. இன்றைக்கு உலகமே இராணுவக் கண்காணிப்பின் கீழ் வாழ்கிறது. இந்தக் கண்காணிப்புகள் மாநில போலிஸ், மத்தியப் படைகள் என விரிவடைந்து சென்றாலும் இவர்களின் சீருடை தரித்த கண்காணிப்பின் கீழ் சிறுபான்மை மக்கள் அவர்களின் மத அடையாளங்களை பேணி சுதந்திரமாக வாழ முடியாத சூழல். இந்தியாவில் ஊடகங்களில் மக்களின் முற்போக்கு இயக்கங்களுக்கு எதிரான, இடஒதுக்கீடு உரிமைக்கு எதிரான போக்குகள் ஊடகங்களில் காணப்படுகிறது.

பொதுவாக இந்திய அரசு அல்லது ஆளும் வர்க்கங்களின் ஊதுகுழலாகவே இந்திய ஊடகங்கள் மாறி விட்ட சூழலில் இருந்துதான் ஈழத் தமிழர்கள் மீதான போரின் போதும் போருக்குப் பின்னரும் இந்திய ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் குறித்து எழுதத்தோன்றுகிறது.

வன்னிப் போரும் ஆங்கில ஊடகங்களும்

வன்னி மக்கள் மீதான போர் 2007 – ஆம் ஆண்டு துவங்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகாலம் நடந்த அந்தப் போரின் தெரிப்புகள் இந்தியாவிலோ, தமிழகத்திலோ இல்லாமல் இருந்தது. அவ்வப்போது தமிழக ஊடகங்களில் புலிகள் தொடர்பான கட்டுரைகள், அதுவும் வீரசாகசக் கதைகளைக் கொண்ட கட்டுரைகள் மட்டுமே வெளிவந்தன.

2007&ல் மாவிலாறு பகுதியை இராணுவம் கைப்பற்றிய போது நான் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் சுப.தமிழ்செல்வனையும், இராணுவப் பேச்சாளர் இளந்திரையனையும் நேர்காணல் கண்டிருந்தேன்.

அவர்கள் இந்தக் கோரமான யுத்தத்தின் நீட்சி பற்றி அறியாதவர்களாகவே இருந்தார்கள். மாவிலாறு ஒரு சிரிய பகுதி என்றும் சிங்களப் படைகள் தோற்கடிக்கப்படுவது உறுதி என்றுமே சொல்லி வந்தார்கள். நான் உட்பட தமிழகத்தின் சகல தரப்பினருமே புலிகளை இலங்கை இராணுவத்தால் ஒரு போதும் வெல்ல முடியாது என்றே நம்பினோம்.

அதன் விளைவாகத்தான் போரின் கொடூரமான ஒரு பக்கத்தை பேசவோ, இந்தப் போர் ஈழ மக்களின் சிவில் சமூக வாழ்வின் மீதும், அவர்களின் உயிர்வாழ்வின் மீதும் எவளவு மோசமான பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்றோ அறியாதவர்களாகவோதான் இருந்தார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களும் போரின் கோடூர முகம் குறித்து போர் துவங்கிய காலத்தில் பேசவில்லை, 2008 – ஆம் செப்டம்பருக்குப் பிறகு போர் தீவீரமாகி 2009 ஜனவரியில் கிளிநொச்சி விழுந்த போதே தமிழகத்தில் போராட்டங்கள் தீவீரமாகின அதுவும் சிறு சிறு அமைப்புகள் ஆங்காங்கு போருக்கு எதிராக போராடி வந்தார்கள். வெகுமக்களை மையமிட்டு நடத்தப்படும் அரசியல் கட்சிகள் அதன் பின்னே களத்தில் குதித்து அதை மாபெரும் சூதாட்டமாக மாற்றின.

தியாகி முத்துக்குமாரின் தீக்குளிப்பிற்குப் பின்னர் எழுந்த நெருப்பை அணைப்பதில் எல்லா தேர்தல் கட்சிகளுமே தீவீரமாக இருந்தது. ஆனால் பெருந்தொகையான மக்கள் கொன்று குவிக்கப்பட்டது தமிழக மக்களிடையே கடுமையான அனுதாப அலையை தோற்று வித்தபோது அது ஆளும் கட்சிகளுக்கு அரசியல் நெருக்கடியாகவும், எதிர்கட்சிகளுக்கு அல்வாவாகவும் மாறிவிடும் என்கிற சூழலில் குதர்க்கமான பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது சடுதியாய் தமிழகம் பற்றி எரிவதைப் போன்ற ஒரு தோற்றம் கட்டமைக்கப்பட்டது. அனைத்துக்கட்சிக் கூட்டம், ராஜிநாமா நாடகம், மனிதச் சங்கிலி நாடகம், என ஈழப் போராட்டம் சூதாட்டமாக மாற்றப்பட்டு வெகுமக்கள் மயப்படுத்தப்பட்ட போது தான் இந்திய ஆங்கில ஊடகங்களின் அகோரமான தாக்குதல் தொடங்கியது. அந்தவகையில் தமிழ் மக்கள் மீதான இனவெறிப் பிரச்சாரத்தை துவங்கி வைத்தது இந்து பத்திரிகைதான். நெருக்கடிகளை எப்படியாவது சாமாளித்தாக வேண்டிய சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது திமுக. 14& 10&2008 செவ்வாய்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏற்பாடாகியிருந்தது. அன்று வெளியான இந்துப் பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதி The Dangers of Tamil Chauvinism. )http://www.thehindu.com/2008/10/14/stories/2008101454490800.htm) என்ற கட்டுரையை எழுதியிருந்தார். தமிழக மக்களை நச்சு விதைகளாகவும் இனவாதிகளாகவும் சித்தரிக்கும் கட்டுரை அது. புலிகளுக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழகமே கிளர்ந்தெழுந்து விட்டது போன்ற தோற்றத்தையும் அதனால் இந்திய இறையாண்மையே கேள்விக்குள்ளாகும் சூழலும் எழுந்துள்ளதாகவும் அக்கட்டுரை சித்தரித்தது. அதில் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்களைக் கூட முட்டாள்கள் என்கிற ரேஞ்சில்தான் எழுதியிருந்தார் மாலினி பார்த்தசாரதி. அதுதான் இந்தப் போரின் மீதான தமிழக மக்களின் அனுதாபத்தையும் துடிப்பையும் இனவாதமாக சித்தரித்த முதல் எழுத்து. அந்த புள்ளியில் இருந்தே ஆங்கில ஊடகங்கள் ஈழம் குறித்து திட்டமிட்ட பொய்பிரச்சாரத்தை துவங்கினார்கள்.கிளிநொச்சி விழ்ந்த போது ஒரு உயிரழப்பு கூட இல்லாமல் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதாக ராஜபட்சேவின் நேர்காணலை வெளியிட்டார் இந்து ராம் முத்துக்குமாரின் தீக்குளிப்பை ஒட்டி தமிழகம் முழுக்க எழுந்த அதிர்வலையும் கொளத்தூரில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திரண்ட முற்போக்கு எண்ணம் கொண்டவர்களின் கூட்டத்தையும் தீவீரவாத கூட்டமாகவும் பெரும் கலவரச் சூழல் எழுந்துள்ளது என்றும் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

ஆனால் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசியல் கட்சிகளைச் சாராதவர்கள் அரசியல் கட்சிகளின் மேல் கடும் வெறுப்புற்றவர்கள். முத்துக்குமாரின் மரணத்தை ஒட்டு அது பற்றி செய்திகளை வெளியிட்ட ஆங்கில ஊடகங்கள் அதை ஒரு மனநோயாக சித்தரித்து மனோவியல் நிபுணர்களின் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்கள் என்பதோடு, வழக்கறிஞர்களின் போராட்டம் உள்ளிட்ட பல அமைப்புகளின் போராட்டங்களையும் தேச நலனுக்கு எதிரானது எனச் சித்தரித்து அரசின் ஒடுக்குமுறைக்கு தூபமிட்டதும் இதே ஆங்கில ஊடகங்கள்தான்.

ஏன் இப்படி?

புலிகளின் தோல்வியை இவர்கள் ஈழ மக்களின் தோல்வியாக மட்டும் பார்க்கவில்லை, தமிழகத் தமிழர்களின் தோல்வியாகப் பார்த்தனர். தவிறவும் இந்துஸ்தானத்திற்கு எதிரான திராவிடக் கருத்தியல் அதன் இடஒதுக்கீடு கொள்கை, பிராந்திய தன்மை இவைகள் எல்லாமே பார்ப்பனீயத்திற்கு எதிரானவை என்பதிலிருந்து ஆங்கில ஊடகங்களின் வன்மம் துவங்கிறது.

உயர் கல்வித்துறையில் இட ஒதுக்கீடு, மண்டல் கமிஷனுக்கு ஆதரவான நிலை, என்கிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக் கோர்க்கைகளில் தமிழகம் தனித்து நடப்பதிலிருந்து இந்த வன்மம் துவங்குகிறது.

அந்த வன்மத்தின் உச்சத்தைத்தான் நாம் மே மாதம் புலிகள் மீதான போர் முடிவுக்கு வந்த போது ஆங்கில ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தில் பார்த்தோம். பொதுவாக போரின் முடிவு genosideஎன்பது பயங்கரவாதத்தை அழித்த அரசின் வெற்றி என்ற பார்வைதான் ஆங்கில ஊடகங்களின் பார்வை.ஆனால் இந்தப் போர் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்களையும் பல்லாயிரம் போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் அழித்து துயரமான ஒன்றாக முடிவுக்கு வந்தது குறித்து கவலையற்று, பிரபாகரனின் மரணத்தைக் கொண்டாடினார்கள்.

இந்திய ஆங்கில ஊடகங்கள். மே மாதம் 19&ஆம் தியதில் தொடங்கி அடுத்த ஒருவார காலத்திற்கு ஆங்கில ஊடகங்களின் பிரச்சாரம் என்பது இராவணனை அழிக்கும் தசரா விழா போன்று கொண்டாடப்பட்டது. பிரபாகரன் எப்படி இறந்தார்? அது குறித்து பிரமுகர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று சோ ராமசாமியையும், சு.சாமியையும் பேட்டி எடுத்து தொடர்ந்து ஒளிபரப்பியது ஊடகங்கள்.

எங்கோ சாலையில் நடந்து போகிற ஒருவரிடம் .பிரபாகரன் இறந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கிறார் டைம்ஸ் நௌவ் செய்தியாளர் அவர் தீவீரவாதி கொல்லப்பட்டது குறித்து மகிழ்ச்சி என்கிறார். உடனே செய்தியாளர் கேமிராவுக்குள் வந்து தமிழக மக்கள் பிரபாகரனின் மரணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார். என்.டி.டி.வி, சி.என்.என்.ஐ.பி.என், டைம்ஸ் நௌவ், ஹெட்லைன்ஸ் டுடே என எல்லா ஆங்கில ஊடகங்களுமே மூன்றாம் தரமான மஞ்சள் ஊடகங்களாக மாறிப்போனது அப்போதுதான். சந்தீப் குமார் ரத்தோய், பர்கா தாத்தா, டைம்ஸ் நௌவ் செய்தியாளர் என எல்லா அதிமுகக்கிய இந்திய ஊடக முகங்களும் இனவாதிகளாக மாறி நீண்ட கால வன்மத்தை தமிழக மக்கள் மீது பொழிந்து கொண்டிருந்தார்கள். போர்க்காலத்தில் ஈனத்தனமான பல செய்திகளை வெளியிட்ட டைம்ஸ் ஆப்ஃ இந்தியா சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு அகதி முகாம் பற்றி குறிப்பிடத்தக்க கட்டுரை ஒன்றை கொண்டு வந்தது. மலையாளியான ஜெயாமேனன் எழுதிய அந்தக் கட்டுரை பாவத்தைக் கழுவுகிற பிலாத்துவின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கட்டுரை. ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும் படியான சிற்ந்த கட்டுரைகளை வெளியிட்டது தெஹல்கா இதழ்தான்.

போர் காலத்தில் இலங்கை இராணுவ வீரர்கள் இந்தியாவில் எங்கெல்லாம் பயிர்ச்சி எடுக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறான பயிர்சிச்கள் உதவிகள் வழங்கப்பட்டது என்றும். இந்தியா இலங்கை அரசிற்கு எவ்வாறு உதவுகிறது என்றும் பல கட்டுரைகளை இந்தியாவின் கோரமுகத்தை அம்பலப்படுத்தி தெஹல்கா எழுதியது. ஆனால் இந்து ராம் போன்ற இடது சாரி முகமூடிகள் இன்று வரை தொடர்ந்து போருக்குப் பின்னரும் இலங்கை அரசின் அங்கீகரிக்கப்படாத இந்தியத் தூதர்கள் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை இனப்படுகொலை வெளிக் கொணர்ந்த ஊடகங்கள்.மக்களினங்கள் மீது நிகழ்த்தப்படும் படுகொலைகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விசாரணைக்குட்பட்டே வருகிறது.

 படுகொலை நிகழ்த்தும் நாடும் அதைச் சூழ நிலவும் பிராந்திய அரைசியலும் உலகநாடுகள் எவ்விதமான துருவ அரசியலில் தங்களைப் பிணைத்துள்ளன என்பதைப் பொறுத்தும் இத்தகைய விசாரணைகளை முன்னநகர்த்துகின்றன. நாஜிப்படுகொலைகள், ருவாண்டா படுகொலைகள், உள்ளிட்ட படுகொலைகளுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு இனப்படுகொலைதான் இலங்கையிலும் நடந்தது. பொதுவாக குறிப்பிட்ட இனத்த்தை முடக்கி அழிக்கவோ, பலவீனமாக்கவோ நினைத்து இவ்விதமான இன அழிப்புகள் நடந்து சில காலம் பின்னரே இப்படுகொலைகள் உலகின் கண்களுக்குத் தெரியவரும். ஆனால் இலங்கையில் போர் தீவீரமாக நடந்த 2009 பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்காலில் பகுதிக்குள் 13 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்குள் நடந்தவை அப்பட்டமான இனப்படுகொலை என்று உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்பினார்கள். தமிழகத்தில் கடும் கொந்தளிப்பான போராட்டங்களும், அதை அச்சுறுத்தி அடக்குகிற நிலையும் காணப்பட்டது. போர் முடிந்த பிறகு மேற்குலக ஊடகங்கள் இனப்படுகொலைக்கான ஆவணச் சாட்சியங்கள் சிலதை வெளியிட்டன. அந்த வகையில் டைம்ஸ் இதழ் போர் முடிவுக்கு வந்த மே மாதம் இறுதியில் 29&ஆம் தியதி முதல் கட்டுரையை வெளியிட்டது.

இறுதிப்போரின் போது இருபதாயிரம் மக்கள் சிங்களப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்றது அந்த புலனாய்வு அறிக்கை. பீரங்கிகள், கனரக ஆயுதங்களை பயன்படுத்தி சர்வதேச போர் நெறிகள் எல்லாவற்றையும் மீறி கனரக ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட கொடூர யுத்தம் என்று இதை வர்ணித்த டைம்ஸ் இதழ் தனது புலனாய்வுச் செய்தியாய் இதை பதிவு செய்தது.

இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் எடுக்கப்பட்ட பேரழிவைக் காட்டும் புகைப்படங்களோடு வெளியிடப்பட்ட அந்தக் கட்டுரை ” பீரங்கித் தாக்குதல் மற்றும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு பல நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் பீரங்கி தாக்குதலை நிறுத்துவதாக இலங்கை அரசு அறிவித்தது. பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஒரு லட்சம் தமிழர்கள் இருப்பதாகவும், இப்பகுதியில் தாக்குதல் நடத்தப்படாது என்றும் இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால் டைம்ஸ் இதழ் நடத்திய புலனாய்வு விசாரணை மற்றும் புகைப்படங்களில், இலங்கை ராணுவம் உலக நாடுகளுக்கு அளித்த உறுதி மொழியை மீறியுள்ளது தெரிய வந்துள்ளது. போஸ்னியாவில் 1995-ம் ஆண்டு ஏற்பட்ட மனிதப் படுகொலை மற்றும் சூடானில் உள்ள தார்ஃபூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களைப் போல இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல் அமைந்துள்ளது என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாதுகாக்கப்பட்ட பகுதியில் மட்டும் இலங்கை ராணுவ நடவடிக்கையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது”

சில நாள் இடைவெளிக்குப் பிறகு டைம்ஸ் இக்கொலைகளை வார இறுதிக் படுகொலைகள் என்று கடுமையாகச் சாடி செய்தி வெளியிட்டது.

பிரெஞ்சு ஊடகமான லே மாண்டே போன்ற இதழ்கள் 13 சதுரகிலோ மீட்டருக்குள் ஐம்பதாயிரம் மக்கள் சிக்கி அவர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்படுவதாக எழுதியது . இதில் நாம் சந்திக்கும் ஒரு முரண் என்னவென்றால் போர்பகுதிக்குள் எழுபதாயிரம் மக்கள் இருப்பதாக இந்திய வெளிவிவாகரத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி பாராளுமன்றத்தில் சொன்னார். பல ஊடகங்களும் ஐம்பதாயிரம் என்றும் எழுபதாயிரம் என்றும் சொன்னன.

உண்மையில் அங்கு மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள் என்று தொடர்ந்து புலிகள் சொல்லி வந்தார்கள். இந்தியாவும் இலங்கை அரசும் வேண்டுமென்றே மக்கள் எண்ணிக்கையை குறைத்துச் சொல்ல உண்மையான மக்கள் எண்ணிக்கை எவளவு என்று தெரியாத ஊடகங்களோ அனுமானமாக மக்கள் எண்ணிக்கையை வெளியிட்டாலும் அவர்களின் அக்கறையை நாம் மதிக்கத்தான் வேண்டும். போருக்குப் பின்னர் பான்கிமூன் நடந்து கொண்ட விதம், இந்திய வம்சாவளியில் வந்த விஜய்நம்பியாரை இலங்கை விவாகரங்களுக்கு பொறுப்பாளியாக நியமித்தது குறித்தும் அவரது தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசின் இரணுவத்திடம் ஊதியம் பெற்றுக் கொண்டு இராணுவ அட்வைசராக இருப்பது குறித்தும் இனனர் சிட்டி பிரஸ் நேரடியாகவே ஐநாவின் தூதுவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு விஜய் நம்பியாரின் இந்திய சார்பையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர் நடந்து கொண்டதையும் கூட இன்னர் சிட்டி பிரஸ் வெளிக் கொண்டு வந்தது. அத்தோடு பெருந்தொகையான மக்கள் இனப்படுக்கொலை செய்யப்பட்ட போது அதுகுறித்து அமைதியாக இருந்து கழுத்தறுத்துவிட்டார் பான்கிமூன் என்று கடுமையாக பான்கிமூனைச் சாடியது இன்னர் சிட்டி பிரஸ்.

இந்த ஊடக நிறுவனத்தின் கடுமையான சாடலுக்குப் பின்னர்தான் பான்கிமூன் மென்மையாகவேனும் இலங்கை அரசை கண்டிக்க முன்வந்தார். போருக்குப் பின் பெருந்தொகையான மக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டு முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களில் 13,000& க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டிருக்கும் மக்கள் குறித்தும் காத்திரமான கேள்விகளை அது எழுப்பியது.

மௌனித்திருந்த மேற்குலக ஊடகங்கள் ஓரளவுக்கு செய்திகளை வெளியிட்டன. டைம்ஸ், லே மாண்டே, இன்னர் சிட்டி பிரஸ், வரிசையில் இலங்கை அரசின் இனவாதக் கொலைகளுக்கு ஆதாரமாக உறுதியான இரண்டு ஆவணங்களை வெளியிட்டது சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம்.

ஏனைய ஊடகங்களைக் காட்டிலும் சேனல் 4 நிறுவனத்தின் பணி இலங்கைப் போரில் அளப்பரியது. ஐடிஎன் செய்தி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் சேனல் 4 மார்ச் மாத இறுதியிலேயே தனது படப்பிடிப்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பியிருந்தது. இரும்புத்திறை போட்டு மூடப்பட்டு பெருமளவான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட இடத்திற்கு இலங்கை அனுமதித்தது சில ஊடகவியளார்களை மட்டும்தான். மேற்குலக ஊடகங்களுக்கு கண்டிப்பான முறையில் அனுமதி மறுக்கப்பட்டது. சில தமிழக ஊடகவியளார்கள் அங்கு செல்ல முயன்றோம். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ( சில இலங்கை ஆதரவு தமிழக. ஆங்கில, ஊடகவியளார்கள் இலங்கை அரசின் மறைமுக நிதி உதவியோடு அங்கு சென்றும் வந்தார்கள். இந்து ராம் இராணுவ ஹெலிகாப்டரிலேயே வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்) என்பதை எல்லாம் தாண்டி மக்கள் சார்ந்து எழுத நினைத்த எவருக்குமே அங்கு அனுமதி இல்லை. இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி செய்தியாளர்கள் மட்டும் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இப்படிப் போன ஒரு சிங்கள ஊடகவியளார்கள் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சில மடிக்கணனிகளை திருடிய சம்பவம் கூட நடந்தது. இந்நிலையில் சானல் 4 தொலைக்காட்சியின் செய்தியாளர் நிக் பேட்டன் வால்ஷ், தயாரிப்பாளர் பெஸ்ஸி டூ, கேமராமேன் மாட் ஜாஸ்பர் ஆகியோர் வவுனியாவுக்குள் நுழைந்து அங்குள்ள அகதி முகாம்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி முதல் செய்தித் தொகுப்பை வெளியிட்டார்கள். பெருமளவான தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதாகவும், அவர்கள் எந்த நம்பிக்கையும் அற்று கொடூரமான கொலைக்களத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்தச் செய்தியை பதிவு செய்தார் நிக் பேட்டன்.

வவுனியா ஆரம்ப சுகாதார மையத்திற்குள் ரகசிய கேமிராவைக் கொண்டு போய் அங்கிருந்த நோயாளிகள், குவித்து வைக்கப்பட்டிருந்த பிணங்கள் குறித்த செய்திகளை எல்லாம் முதன் முதலாக கொண்டு வந்தவர்கள் இக்குழுவினரே, மிக முக்கியமாக சேனல் 4 தொலைக்காட்சி கனரக ஆயுதங்கள் போரில் பயன்படுத்தப்பட வில்லை என்று இந்தியா இலங்கை அரசுக்குக் கொடுத்த நற்சான்றிதழை உடைத்தெரிந்தார்கள். அவர்கள் தொகுத்தளித்த இந்த செய்தி ஆவணம் மே& 5 ஆம் நாள் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது அது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்கள் மூன்று பேரும் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள்.

பின்னர் ஜனநாயத்திற்கான ஊடகவியளார் அமைப்பு வெளியிட்ட கொடூரமான இனப்படுகொலை விடீயோவை வெளியிட்டதும் சேனல்4 தொலைக்காட்சிதான்.

இத்தனை ஊடகங்கள் இவளவு கேள்வி எழுப்பியும், போர் தொடர்பாகவும் இனப்படுகொலை தொடர்பாகவும் இவளவு ஆவணங்கள் வெளிக் கொணரப்பட்ட பிறகும் ஏன் இலங்கையைச் சூழ அமைதி நிலவுகிறது என்றால் ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் இந்திய வர்த்தக நலனுக்காகவும் இலங்கையில் உருவாகியுள்ள புதிய சந்தையை சுவைப்பதற்காகவும்தான் இதில் அமைதிகாக்கின்றன. மேலும் இவ் ஊடகங்களும் மேற்குலகமும் இலங்கை அரசிடம் பெரிதும் வேறு படுவது தன்னார்வக்குழுக்கள் தொடர்பாகத்தான். அவர்கள் தன்னார்வக்குழுக்களை முகாம்களுக்குள் அனுமதிக்கக் கோருகிறார்கள். ஆனால் இலங்கையோ இராணுவச் சர்வாதிகார பார்மா போன்று தன்னார்வக்குழுக்கள் உள்ளிட்ட எல்லா வெளி உதவிகளையும் தான் பெற்றுக் கொள்ளமட்டுமே நினைக்கிறது. தன்னார்வக்குழுக்கள் பௌத்த இறைமையை சிதைத்து விடும் என இலங்கை அரசு நம்புகிறது.

ஆனால் இலங்கைக்குள்ளேயோ முகாம்களுக்குள்ளேயோ அனுமதிக்க மறுக்கிற தன்னார்வக்குழுக்களை புலம்பெயர் நாடுகளில் ஊக்குவிக்கிறது. அதுவும் ஏற்கனவே உள்ள ஏகாதிபத்திய தன்னார்வக் குழுக்களை அல்ல இலங்கைத் தமிழர்களைக் கொண்ட புதிய குழுக்களை உருவாக்கி அதற்கு நிதி உதவி அளித்து புலத்தில் உள்ள புலி ஆதரவைச் சிதைப்பது புலி ஆதரவாளர்களை கைது செய்வது, அரசியல் எழுச்சி ஏற்படா வண்ணம் மக்களைக் குலைப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இக்குழுக்களை பயன்படுத்துகிறது இலங்கை அரசு.போருக்குப் பின்னர் இலங்கை அரசின் பெரும்பங்கு நிதி இலங்கைக்கு வெளியில் அதன் ராஜதந்திர நடவடிக்கைக்காக செலவிடப்படுகிறது ராஜதந்திர நடவடிக்கை என்பது முன்னெடுக்கப்படுவது இந்த தன்னார்வக்குழுக்கள் மூலம்தான். சென்னையில் பணியாற்றிய அம்சா பதவி உயர்வு பெற்ற பிரிட்டனுக்குச் சென்றதும இதற்காகத்தான்.

தமிழக ஊடகங்கள்

ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்கள் மீது மிக மோசமான விஷத்தைக் கக்கி நச்சை விதைத்த போது கிட்டத்தட்ட அந்த நாட்களில் தமிழ் மக்கள் மிகவும் மன அயர்ச்சி அடைந்திருந்தார்கள்

.ஆங்கில ஊடகங்களின் இழிவான பிரச்சாரத்திற்கு எதிர்பிராச்சாரம் செய்து தமிழக மக்களை ஓரளவுக்கேனும் மன ஆறுதல் கொள்ளச் செய்யும் வேலையை எந்த ஊடகங்களும் செய்யவில்லை. மாறாக ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் பந்த் நடந்தால் அதை ஒரு விடுமுறை தினமாக கொண்டாடி சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்பின பிரதானமான இரண்டு தொலைக்காட்சிகள். தமிழக அச்சு ஊடகங்களோ விற்பனையை பிரதானமாகக் கொண்டிருந்தாலும் ஆனந்தவிகடன், நக்கீரன், குங்குமம் இதழ்கள் தொடர்ந்து போர்க்காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்காக செய்திகளை வெளியிட்டன. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ஈழப்போர் குறித்த செய்திகள் வெளியிடாமல் தவிர்த்தன அல்லது தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை பாதிக்காத வகையில் அச்செய்தி திரித்து எழுதப்பட்டதாக இருந்தது. தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் தெரிந்த அன்றே ஈழப் போரின் முடிவுகளும் பெரும் துயரமான செய்திகளாய் நமக்கு எட்டின. புலிகள் அழிக்கப்பட்டார்கள். பல்லாயிரம் போராளிகள் அவர்களின் குடும்பங்களோடு கொல்லப்பட்டார்கள். ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். போர் முடிந்தது ஜனநாயக சக்திகளுக்கு துயரமானதாகவும், பேரினவாதிகளுக்கு உற்சாகமளிக்கும் வகையிலும் போர் முடிவுக்கு வந்தது. நாற்பது வருட பிரச்சனையை நான்கு நாளில் முடிக்க முடியாது என்றவர்கள். போர் முடிவுக்கு வந்தது குறித்து மகிழ்ந்தார்கள்.

வன்னி மக்கள் மீதான இந்தப் போரைப் பொறுத்தவரையில் தமிழக ஊடகங்கள் எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டுமோ அதைப் பேசவில்லை. எந்த நேரத்தில் எது முக்கியம் அற்றதோ அது குறித்துப் பேசினார்கள். போர் நடந்த போது இவர்கள் மக்கள் படுகொலைகள் குறித்துப் பேசாமல் வேறு விஷயங்களைப் பேசினார்கள். போர் முடிந்த பிறகு துயரமான மக்கள் படுகொலை குறித்துப் பேசாமல் பிரபாகரன் வருவார் ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கும் என்கிறார்கள். பழைய புகைப்படங்களை பிரசுரித்து அது குறித்த காலத்தைப் பதிவு செய்யாமல் பொதுத் தன்மையோடு எழுதி நேற்று நடந்தது போல சித்தரிக்கிறார்கள். பிரபாகரன் இந்தியாவின் உதவியோடு தப்பியதாகவும் எழுதினார்கள். பேரினவாத படுகொலையை சிங்களப் படைகளின் முதுகெலும்பாக நின்று நடத்தியதே மத்திய காங்கிரஸ் அரசுதான்.

 ஆனால் போரில் இந்தியாவின் பங்கு குறித்து தமிழகத்தின் எந்த ஊடகங்களும் நேர்மையான முறையில் எழுத வில்லை.மாறாக இவர்கள் போரின் மீதான மத்திய அரசின் பங்கு குறித்தோ கடைசி நேரத்தில் புலிகளுக்கு தமிழகம் செய்த துரோகம் குறித்தோ பேசாமல் வீரசாகசக் கதைகளை எழுதி வருகிறார்கள். அரசியல் அழுத்தங்கள், சார்ந்திருக்கிற அணிகளுக்கு ஏற்றது மாதிரி ஊடகங்கள் ஈழப் போரின் மீதான கருத்துக்களை வெளியிட்டு வந்தன. இதுதான் தமிழ் ஊடகங்களின் செயல்பாடாக இருந்தாலும் தினத்தந்தி, தினமணி, ஆனந்தவிகடன், நக்கீரன், குங்குமம் போன்ற இதழ்கள் போர்க்காலத்தில் மக்களின் துன்பம் குறித்த செய்திகளை வெளியிட்டன. ஆனால் அது அரசியல் அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தது என்பதுதான் உண்மை.

மற்றபடி சென்னையில் இருந்த இலங்கை அரசின் துணைத்தூதர் அம்சாவின் செயல்பாடுகள் ஊடகவியளார்கள், அரசியல்வாதிகளை மையமிட்டு இருந்தன. ஊடக நிறுவனங்களின் பிரதான பொறுப்பாளர்கள் பலரும் அம்சாவிற்கு நெருகக்மாக இருந்தார்கள். போரின் முடிவுக்கு முன்னரும் பின்னரும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அம்சா இவர்களுக்கு விருந்து கொடுத்தார். பரிசும் கொடுத்தார் சில நேர்மையான ஊடகங்கள் இதை புறக்கணித்தாலும் இந்தப் போர்ச்சூழல் அதிக வருவாயை ஈட்டித் தரும் தந்திரம் மிக்கதாய் இருக்கிறது என்பதை உணர்ந்த பத்திரிகையாளர்களோ இலங்கை அரசின் அனுகூலங்களை அனுபவித்தார்கள் என்பது மறுக்க முடியாத அசிங்கமான உண்மை. சிலர் கொழும்புவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குளிப்பாட்டப்பட்டார்கள். சிலர் சென்னையிலேயே குளிப்பாட்டப்பட்டார்கள். ரகசியாமான விருந்துகள் அம்சா இங்கிருந்து செல்லும் வரை நடந்தது. புதிய தூதர் கிருஷ்ணமூர்த்தி பதவியேற்றதும் அதற்கும் விருந்து நடைபெற்றது இன்றும் ஊடகவியளார்கள், இலங்கைத் தூதர் கூட்டு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் யாரிடமும் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அம்சா வீசி எரிந்த வெள்ளிக்காசுகளை வாங்க மறுத்து இலங்கை அரசை கடுமையாக விமர்சித்த ஊடகங்கள் தமிழகத்திலேயே ஒடுக்குமுறைக்குள்ளாகியது. நக்கீரன் மீது அம்சா வழக்குத் தொடர அனுமதி கேட்டு கடிதம் எழுதினார்.

மக்கள் தொலைக்காட்சி போர் தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காக இலங்கையின் வடக்கில் அதன் ஒளிபரப்பு தடுக்கப்பட்டது. ஏன் தமிழக ஊடகவியளார்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால் ஊடக முதலாளிகளும் தொழில் அரசியல் கூட்டுக்கு ஏற்பவே இவ்விஷயத்தை அணுகினார்கள். ஊடக முதலாளிகளின் இந்த தொழில்சார் ஊடக தர்மத்தை ஊடகவியலாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இலங்கை அரசின் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராக எழுதி. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஊடகவியளார்கள் இலங்கையில் படுகொலையானார்கள். கடைசியாய் நாம் லசந்தா பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டதையும், திசநாயகத்திற்கு இருபாதாண்டுகால கடும் சிறைத் தண்டனை கிடைத்ததையும் நாம் கண்டோம். இருபது உயிர்கள் பலியாகி சிறைக் truth_001கொட்டடிகளில் கிடந்து இனப் படுகொலைக்கு எதிராக இன்றளவும் தலைமறைவாக பல நாடுகளிலும் மறைந்திருந்து தொடர்ந்து எழுதுகிறார்கள் சிங்கள இனத்தைச் சார்ந்த ஊடகவியளார்கள்.

 ஆனால் தமிழ், தமிழர் பெருமை பேசும் தமிழ் ஊடகவியளார்கள்? திசநாயகத்தோடு கைது செய்யப்பட்ட ஜசீகரனும் அவரது மனைவி வளர்மதியும் இன்றும் விசாரணைக் கைதிகளாக கொழும்பு மகசீன் சிறையில் கிடக்கிறார்கள். ஆனால் அஞ்சாமால் சிங்கள இனவாதிகளுக்கு எதிராக சித்திரவதைகளையும் கடந்து போராடுகிற அவர்கள் ஏதோ ஒரு வகையில் இனப்படுகொலை ஆவணங்களை உருவாக்குகிறார்கள். ஆனால் இந்திய ஆங்கில ஊடகங்களோ இலங்கை அரசிற்கு எதிராக உருவாகும் ஆவணங்களை அழிக்கிறார்கள். அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையில் இருந்து அவர்களை பாதுகாக்கிறார்கள்.

ஓரினப்புணர்ச்சி சட்டபூர்வ அங்கீகாரம் தீர்ப்பும், சில ஐயங்களும்:லக்ஷ்மி சரவணக்குமார்

சுதந்திரம் நோக்கி நகர்தல்…

THE MOST IMPORTANT THING IN ART AND IN LIFE IS TO BE FREE” – IANNIS XENAKIS.

நானொரு ஓரினப் புணர்ச்சியாளனும்கூட. முதல் வரியிலேயே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்க நேர்ந்ததற்கு ஏராளமான Lesbiansகாரணங்களிருக்கின்றன. தொடர்ந்து என்னுடைய கதைகளையும் கவிதைகளையும் வாசித்து வருகிற நண்பர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த சந்தேகமிருந்ததை நன்கறிவேன். அவர்களுக்கு இதனை தெளிவுபடுத்திவிட வேண்டுமென்கிற எந்த கட்டாயங்களும் எனக்கில்லை, எனினும் ஒரு படைப்பாளியாய் மிக முக்கியமான கட்டத்தில் இதனை பிரகடனப் படுத்துவதை அவசியமெனக் கருதுகிறேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரத்யேகமான அடையாளங்களில் என்னை ஓரினப் புனர்ச்சியாளனாக மட்டுமே ஒட்டுமொத்த அடையாளமாக மற்றவர்கள் மாற்றிக் கொள்வதில் விருப்பமில்லை. ஒருபால் ஈர்ப்பு என்பது அடிப்படையில் தனிப்பட்ட மனிதர்களின் சுயம் சார்ந்த விசயம், வெகு சாதாரணமாக நிகழ்கிற உறவு முறைகளைப் போல். அகம் சார்ந்த விசயங்களை மட்டுமே கொண்டு ஒரு தனிமனிதனின் அரசியல் நிலைப்பாட்டில் கொள்ளும் சந்தேகங்களும் ஆளுமையின் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் மிக அபத்தமானவை.

ஓரினப் புணர்ச்சி சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுவதாக தில்லி உயர்நீதிமன்றத்திலிருந்து வந்த தீர்ப்பினையும் வந்த வேகத்திலேயே எழுந்த எதிர்ப்பின் காரணமாக மீண்டும் தடையுத்தரவு என அபத்தமானதொரு அரசியல் நாடகத்தின் பெரும்பாலான காட்சிகளை முன்பே தெரிந்து வைத்துதானிருந்தேன். வரிசைமாறாமல் அவற்றை பார்க்க நேர்ந்ததில் வெறுப்பாகவும் சோர்வாகவும்தானிருந்தது. ஒருவேளை தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டாலுமே இங்கு என்னமாதிரியான மாற்றங்களை அரசாங்கத்தால் கொண்டுவந்துவிட முடியும்? ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போல் பெரியளவிற்கு இல்லாவிடினும் குறைந்தபட்சம் இவர்களால் எந்த முற்சிகளையும் செய்யமுடியாது என்பதுதான் நிதர்சனம். தீர்ப்பு வந்த தினத்திலேயே இங்கிருந்த அரசியல் தலைகள் பலரும் எதிர்த்துக் கொந்தளித்ததையும் மதத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என கருத்துக் கேட்கவும் வரிந்துகட்டிக் கொண்டு முன்னால் நின்றன நமது பிரபல பத்திரிக்கைகள் பலவும். ஓரிணப்புனர்ச்சியாளர்களைப் பற்றின செய்திகளையும் திருநங்கைகள் குறித்தும் முடிந்தவரை கீழ்த்தரமாக செய்திகள் எழுதும் இவர்கள் எங்கே நமது தேசத்தின் இறையான்மை போய்விடுமோ என்கிற அச்சத்தில் இதுமாதிரியெல்லாம் செய்கிறார்கள் போல, அதிலும் முக்கியமானவர்கள் என்ன சொல்கிறார்களென்கிற கருத்துக் கணிப்பு வேறு, கருமம் இவர்களெல்லாம் என்ன சொல்ல வேண்டும்? எதற்காக சொல்ல வேண்டும்? ஒரு தனிமனிதனின் உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த விருப்பங்களை கேள்விகேட்பதற்கும் விமர்சனம் செய்வதற்கும் இவர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது. அதிலும் இந்த மதத் தலைவர்கள் ‘ இறைவன் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டாரென வருத்தமும் வன்மமும் கலந்து சொல்கிறார்கள். நல்லது, “நான் யாருடன் உறவு கொள்ள வேண்டுமென்பதும், அதுவென்ன மாதிரியான உறவென்பதும் என்னுடைய தனிப்பட்ட விருப்பம். அதற்கும் வழியில்லையெனில் பின்னெதற்காக மனித உரிமை கழகம்?”

சரி தவறென எந்தவொரு விசயங் குறித்தும் முடிவெடுக்கக் கூடிய அல்லது தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் பெற்றவர்களாய் விடாப்பிடியான பிற்போக்குத்தன வாதிகளே இருக்கின்றனர். கருத்தரிப்பிற்கின்றி நிகழும் பிறவெல்லா புணர்ச்சிகளும் இயற்கைக்குப் புறம்பானது என்றுதான் படித்த பதர்களும் நம்பிக்கொண்டிருக்கின்றன. இயற்கைக்கு புறம்பானது அல்லது விரோதமானதென எதுவுமில்லை. குழந்தை பிறப்பில்லாத உடலுறவு இயற்கைக்கு விரோதமானதென்றால் சுயமைதுனம் செய்துகொள்வதும் குற்றம்தான். இப்படி மிகமோசமாக வெகுஜன சிந்தனைகளை மழுங்கடித்திருப்பதில் ஊடகங்கள் அதிகாரமையங்கள் என எவ்வளவோ பேருக்கு பங்கிருக்கிறது. மற்றவர்களின் எதிர்பார்ப்பிற்காகவும் கட்டாயத்திற்காகவும் தங்களின் சுயவிருப்பங்களையும் நேசத்தினையும் மறைத்து இயல்பான காதலை சொல்ல பயந்தே தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாதவர்கள் எவ்வளவோபேர்.

ஒரு ஆண் இன்னொரு ஆணை விரும்புவதற்கு அடிப்படையாய் என்ன காரணமிருக்குமென பலரும் கேட்பதுண்டு. ‘TOP, BOTTOM, VERSATILE’ என ஓரினப் புணர்ச்சியாளர்கள் குறித்து பொதுவாக சொல்லப்படுகிற மூன்று வகைகளில் TOP வகையினர் தங்களின் குறியை பிற ஆண்களிடம் சுவைக்கக் கொடுக்க விரும்புகிறவர்களாகவும் BOTTOM வகையினர் பிற ஆண்களின் குறிகளை சுவைக்க விரும்புகிறவர்களாகவும் குத புணர்ச்சியை விரும்புகிறவர்களாகவும் இருப்பர். மூன்றாவது வகையான VERSATILE வகையினர் பரஸ்பரம் தங்களின் குறிகளை சுவைக்கிறவர்களாக இருக்கிறார்கள். எந்த வயதில் இதுமாதிரியான விருப்பங்கள் துவங்குகிறது என்பது சரியாக வரையறுத்துச் சொல்ல முடியாதவொன்று. இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காரணங்களைக் கூறுகிறார்கள். தோழி லிவிங் ஸ்மைல் வித்யா தனது வாழ்க்கைக் குறிப்புப் புத்தகத்தில் குறிப்பிடுவதுபோல் சிலருக்கு இயற்கையிலேயே தங்களின் பெண் தன்மையை உணர்ந்துகொள்ள முடிகிறது. இதுதவிர சில சமயங்களில் தவிர்க்கவியலாத காரணங்களால் ஒரே வகையான உடல்களை விரும்புவதும் நிகழ்கிறது. மாணவவிடுதிகள் சிறைச்சாலைகள் போன்றவற்றில் மிகுதியான தனிமை உடல்வேட்கை ஏற்படுத்தும் பெரும் தவிப்புகளென சகிக்கவியலாத துயரங்களுக்குப்பின் தனக்கு இணக்கமான உடலை சிலர் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். நாம் ஹோமோக்களை பேசுகிற அளவிற்கு இன்னும் லெஸ்பியன்களைப் பற்றி பேசத்துவங்கவில்லை. விரைவில் அதுவும் பேசப்பட வேண்டியது அவசியம்.

மருத்துவ ரீதியாக என்ன மாதிரியான காரணங்களைச் சொல்கிறார்கள்? குரோமோசோம்கள் பிரச்சனை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன? உடலிலுள்ள X Y குரோமோசோம்களில் ஆண்களுக்கான Y குரோமோசோம் முழுமையாக மூளைக்கு செல்லாதிருக்கும் பொழுதுதான் திருநங்கைகளாகின்றனர். இதன் அளவு வெவ்வேறாக இருப்பதைப் பொறுத்துதான் GAYயினரில் வெவ்வேறான பிரிவினர் வருகிறார்கள். மற்றபடி சூழல் காரணமாக சொல்லப்படுவது மிகக் குறைவான விகிதத்தில்தான். இன்னும் சொல்லப்போனால் தங்களை அடையாளங் கண்டுகொள்கிறார்கள் என்பதுதான் சரியாயிருக்கும். வளரத்துவங்குகிற நாட்களில் இந்த உணர்வு மனதில் ஏற்படுத்துவது ஒருவிதமான தவிப்பினையும் தனிமையுணர்வினையும் தான், மற்றபடி உடல்ரீதியான எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை. சிலர் ஓரினப்புணர்ச்சியாளர்கள் எப்பொழுதும் உடலுறவிற்கான வேட்கையிலேயே இருப்பார்களென கற்பனை செய்துகொள்வதுண்டு, இயல்பான அவர்களின் உணர்வுகளை முடிந்தவரை கொச்சைப் படுத்த வேண்டும் என்பவர்கள் மட்டும்தான் இப்படி நடந்துகொள்கிறார்கள். வளரும் பருவத்தில் தங்களின் உடல் பற்றின சந்தேகங்களை தைர்யமாக கேட்கும்படி நமது குழந்தைகளைப் பழக்கினால் பரஸ்பரம் பெற்றவர்களுக்கும் குழந்தைகளுக்குமான புரிந்துணர்வு ஏற்பட்டுவிடும்.
பொதுவன அனுபங்களிலிருந்து சில சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனத் தோன்றுகிறது.

ஊரில் சில மாதங்கள் PIMP ஆக வேலை பார்த்த அனுபவம் எனக்குண்டு. நான் பார்த்தது பெண் விபச்சாரிகளுக்கானதுதான் எனினும் தொழில் நடக்கும் முள்ளுக்காட்டில் ஓரிணப் புணர்ச்சியாளர்களும் கூடுவதுண்டு. என் ஊரான திருமங்கலத்தில் ஓரினப்புணர்ச்சியாளர்கள் கூடுவதற்கென நிரந்தமான இரண்டு இடங்களுள்ளன, ரயில்வே ஸ்டேசன் ஒட்டிய பகுதி மட்டும் ஊரின் எல்லையிலிருக்கும் எங்கள் பகுதி முள்லுக்காடு. இதுதவிர தற்காலிகமான இடங்கள் சிலவும் உள்ளன. பெரும்பாலனவர்கள் இவர்களில் TOP கவும் கொஞ்சம்பேர் BOTTOM ஆகவும் இவர்களில் இருப்பார்கள், இந்த பகுதியைப் பற்றி சொல்லும்போது சட்டத்திற்குப் புறம்பான பகுதியென சிலர் குறிப்பிடுவதுண்டு. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு மதுரையில் உடலுறவு தேர்வு குறித்து நடத்தப்பட்ட தொண்டு நிறுவணம் ஒன்றிற்கான கனக்கெடுப்பில் ஆயிரத்தி நானூறு பேர்வரை double ducker களாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். முதலில் இதற்கான அர்த்தம் எனக்குப் புரிந்திருக்கவில்லை. விசாரித்தபின்புதான் இவர்கள் இருபால் புணர்ச்சியையும் விரும்புபவர்கள் எனத்தெரிந்தது.

தமிழ் திரைப்படங்கலைப் பொறுத்தவரை திருநங்கைகள் நாயகனை சந்தோசப்படுத்தும் ஊறுகாயாகவோ பாடல்களில் செயற்கை முலை காட்டி வந்து ஆடிச்செல்பர்களாகவும்தான் இருக்கிறார்கள். மிகமோசமாக சித்தரிப்பது, அல்லது கேவலமான sentiment காட்சிகளால் கொலைசெய்வது இதைத்தான் செய்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் ஓரினப் புணர்ச்சியாளர்கள் குறித்தும் திருநங்கைகள் HAPPY TOGETHERகுறித்தும் மிகச்சிறந்த திரைப்படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. WANG-KAR-WAI ன் HAPPY TOGETHER, KIM-KI-DUK ன் BREATH என தொடர்கிற வரிசையில் ஹாலிவுட்டின் பிரபலமான நாயகர்களான கெய்னு ரீவ்ஸ், ஷ்யான் பென் போன்றோர்கூட ஓரினப் புணர்ச்சியாளர்களாய் நடிக்கிறார்கள். நமது நிலை?

எல்லாதரப்பிலிருந்தும் இந்த விசயம் மட்டும் எதிர்க்கப்படுவதற்கு என்ன காரணமாயிருக்குமென யோசிக்கையில் வலுவாக இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் சம்பிரதாயங்கள் ஒழுக்கங்கள் அனைத்தையும் மீறுவது அல்லது கேள்விகேட்பது என்பதால்மட்டும்தான். பலகாலமாக பலவிசயங்களுக்காக விடுதலை வேண்டுமென கேட்டுப் போராடுபவர்கள் அல்லது மக்களின் தொண்டர்களாய் தங்களைக் கூறிக் கொள்பவர்கள் அத்தனைபேரின் போலித்தனங்களும் வெளிப்பட்டுவிடும். வெகுஜன மக்களின் பார்வை இவ்விசயத்தில் என்னவாயிருக்கிறதென நம்மிலிருந்தே பாருங்கள். தான் ஒருபாலீர்ப்பு கொண்டவன் என்று சொல்பவரை ஏற்றுக் கொள்ளும் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் இங்கு எத்தனைபேர்? சர்வதேச குற்றவாளிகளைப் பார்ப்பதைப் போல்தான் பார்ப்பார்கள். தொண்டு நிறுவனத்துக்காரர்கள் எல்லாவற்றையும் வியாபாரமாக்கும் வித்தை தெரிந்தவர்கள் எனபதால் அவர்களின் அக்கரையை நான் மதிப்பதில்லை, வெகுஜன ஊடகங்கள் அடுத்தகட்டமாய் என்ன செய்யப்போகின்றன?

இன்றைக்கும் உலகளவில் நாம் மதிக்கின்ற எவ்வளவோ ஆளுமைகள் பலர் ஓரினப்புணர்ச்சியாளர்களாய் இருக்கிறார்கள், பல நாடுகளில் சட்டபூர்வமான அங்கீகாரத்துடன் இவர்களின் திருமணமும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நாம் இனிமேலும் கலாச்சாரமென்னும் போலித்தனமான காரணம் சொல்லிக்கொண்டிருந்தால் நம்மைவிட முட்டாள்கள் யாரும் இருக்கமுடியாது.கலாச்சாரமென்பது வாழ்க்கைமுறைதான், எல்லாகாலங்களிலும் ஒரேமாதிரியான வாழ்க்கைமுறை இருக்க வேண்டுமென்பது கட்டாயமுமில்லை. இல்லாத புதிய விசயம் ஒன்றுமில்லை, காலங்காலமாக இருந்துவருவதுதான், பிரிட்டீஸ் காலத்தில் போடப்பட்ட முட்டாள்தனமான சட்டங்களில் இதுவும் ஒன்று, மெக்காலே கல்வி முறையைப்போல். சட்டம் இயற்றிய நாட்டில்கூட இன்று பெரும் மாற்றம் ஏற்ப்பட்டிருக்கிறது.ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான gay organasations உள்ளன. இங்கு மட்டும்தான் சட்டம் கொண்டுவரலாமென யோசிக்கும் போதெ கொந்தளித்து அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.புரட்சி வந்துவிடுமென கொக்கரிக்கிற கூட்டம்கூட இவ்விசயத்தில் வாய்திறக்கக் காணோம். எல்லாமுமே ஒரே நாளில் மாறிவிட வேண்டுமென நானும் நிர்பந்திக்கவில்லை,ஆனால் மாற்றத்தினை நோக்கின நகர்தலில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி- தோழி லிவிங் ஸ்மைல் வித்யா, கிளாடி, மற்றும் அனிருத்தன் வாசுதேவனின் ஒரு கட்டுரைக்கும்.-லக்ஷ்மி சரவணக்குமார்

இனியொரு வாசகர்களின் கேள்விகளும், தோழர் சி.கா.செந்திவேல் அவர்களின் பதில்களும்…..

  ( இனியொருவில்  செம்ரெம்பர் 4ல் வெளிவந்த தோழர் சி.கா. செந்திவேலின் பேட்டியைத் தொடர்ந்து வாசகர்களின் ckse10பின்னூட்டக் கேள்விகள் பல வந்தன. அவற்றுக்கு தோழர் சி.கா. செந்திவேல்  வழங்கிய பதில்கள் இங்கே தரப்படுகின்றன.)
 
   பின்னூட்டக் கேள்வி: உலகமயமாதலின் உற்பத்தி உறவுகள் என்ன? சந்தைப் பொருளாதாரம் எவ்வாறு அமையும்? தேசிய முதலாளித்துவம் இல்லாத நிலையில் தேச விடுதலை யாருக்கு?
 
 தோழர் சி.கா. செந்திவேல் : உலகமயமாதல் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையினைத் தமது ஏகபோக மூலதனத்தின் மூலம் விரிவுபடுத்தி அதனை உறுதிப்படுத்துவதற்கான ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலாகும்.  அதன் அடிப்படையில் கடந்த முப்பது ஆண்டு காலப் பகுதியில் அதன் உற்பத்தி உறவுகள் நவ தாராள பொருளாதாரம் என்பதன் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. பல்தேசிய நிறுவனங்களின் மூலதன விரிவாக்கல், தனியார்மயம், தாராள சந்தை, நுகர்வுத் திணிப்பு, போன்றன பரந்த உலகமயமாக்கம் பெற்றுள்ளன.  அதேவேளை, நாடுகளின் வளங்களை வாரிச் செல்லல், குறைந்த கூலியில் உழைப்புச் சுரண்டல், பெருலாபம் குவித்தல், தேசியப் பொருளாதாரத்தை சிதைத்தல், சுயசார்புக் கொள்கைகளை அழித்தல் என்பன தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
 
நவீன தொழில் நுட்பமானது உலகமயதாலுக்கு முக்கிய கருவியாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.  இவற்றுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் பண வாரியிறைப்பு மூலமான அரசியல் நீக்க நடவடிக்கைகளும், சமூக பண்பாட்டுச் சீரழிவுகளும் தொடரப்படுகின்றன.  இவற்றுக்கு இசைவானவையாகக் கருத்தியல் தளத்தில் பின்-நவீனத்துவம் தாராள அரசியல், என்பன பரப்புரை செய்யப்பட்டு வர்க்கப் போராட்ட அரசியல் மாக்சிசம், சோசலிஷம் என்பன மறுக்கப்படுகின்றன.  அதே வேளை, இன மத மொழி பிரதேச வேறுபாடுகளினதும் தேசியத்தின் பெயராலும் உருவாக்கப்படும் மோதல்கள் யுத்தங்களாக மாற்றப்படுகின்றன.  அரசாங்கங்களுக்கும் விடுதலையின் பெயரிலான போராட்டங்களுக்கும் நேரடி, மறைமுக ஆயுத விற்பனை செய்வதுடன் ராணுவத் தலையீடுகளையும் மேற்கொள்ளலும் தொடர்கிறது. இவை யாவும் சமகால உலக முதலாளித்துவ மூலதன விரிவுக்கும் உற்பத்திக்கும் அதன் உறவு முறைகளுக்குமாக ஏகாதிபத்தியத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நவகொலனிய அமைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சி நிரலேயாகும்.

மேலும், சந்தைப் பொருளாதாரம் என்பது முதலாளித்துவப் போட்டியையும் பெருலாபம் குவிப்பதையும் குறியாகக் கொண்டதாகும். இது மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கிலான உற்பத்தியையும் நுகர்வையும் நிராகரித்து, தனிநபர்கள் லாபத்தைப் பெருக்கிப் பணம் குவிக்கும் வழிமுறைகளிலேயே செயற்படுகிறது.  இதற்கு மாறாக, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய சோசலிஷப் பொருளாதாரம் தோற்றம் பெற்று வளர்ந்து வந்தது. ஆனால் முதலாளித்துவம் பல வழிகளிலும் அதனை முறியடித்து தோல்வியுறச் செய்து விட்டது. சந்தைப் பொருளாதாரத்தை நிராகரித்து வந்த முன்னாள் சோசலிஷ நாடுகள் எனப்பட்டவை கூட, இன்று இச் சந்தைப் பொருளாதாரத்தில் பங்கு கொண்டு தமது சோசலிஷப் பொருளாதாரத்தைப் பலியிட்டு விட்டன. இதற்கு உதாரணமாக நாம் காணக் கூடியது தான், முன்னைய சோசலிஷ சீனாவின் சோசலிஷப் பொருளாதாரமும் தற்போதைய முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் மீதான சீனாவின் மாற்றமடைந்த நிலைப்பாடுமாகும். 
 
எனவே முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரமே இன்று உலகப் பொருளாதார ஒழுங்காக அமைந்து ஆதிக்கம் பெற்று நிற்கிறது. இச் சந்தைப் பொருளாதாரப் போட்டி மனப்பான்மை மக்கள் மனங்களின் திணித்துப் பதியவைக்கப்பட்டு எங்கும் எதிலும் போட்டியும் குறுக்குவழிகளும் எப்படியாவது தனித்தனியே ஈடேற்றம் காண்பது என்ற வரிசையில் மக்களை நிறுத்தியுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளில் தேசிய முதலாளித்துவ அரசுகள் ஏகாதிபத்திய உலகமயமாதலால் உள்வாங்கப்பட்டதுடன் அதன் தேசியத் தன்மைகள் கழுத்து நெரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளன. இதனை இலங்கையில் தெளிவாகக் காணமுடிந்துள்ள அதே வேளை, பின் தங்கிய உலக நாடுகளின் தேசிய அரசுகள் எனப்பட்டவற்றுக்கும் அதே கதிதான் ஏற்பட்டுள்ளது.
 
 தேசிய அரசுகள் மட்டுமன்றி தேசிய விடுதலைப் போராட்ட சக்திகள் எனத் தம்மைக் கூறிக்கொண்டு அரங்கினில் மேற்கிளம்பித் தேசிய குணாம்சங்களை வெளிப்படுத்திய விடுதலை அமைப்புகள் கூட ஏகாதிபத்திய அரவணைப்புக்கு  உள்ளாகி உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்குத் தம்மை இரையாக்கிக் கொண்டன. இதற்கும் இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வுகள் அனுபவமாகி உள்ளன. அதே வேளை, இவ் உலகமயமாதலின் நச்சுத்தனங்களை எதிர்த்து நிற்பதில் குறிப்பிட்ட தேசிய சோஷலிச அரசுகள் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியும் வருகின்றன என்பதும் கவனத்திற்குரியதாகும். 
 
மேலும் தேசத்தின் விடுதலைக்கு தேசிய முதலாளித்துவம் அவசியம் என்பதும் தேசிய முதலாளித்துவம் இன்றி தேச விடுதலை சாத்தியமில்லை என்பதும் தவறான கருதுகோள்களாகும். ஏனெனில், தேசிய முதலாளித்துவம் ஊசலாட்டம் மிக்கதும் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்யக் கூடியதுமாகும்.  எனவே வர்க்கப் போராட்ட அடிப்படையில் அணிதிரளும் தொழிலாளர்களும் விவசாயிகளும் பிற உழைக்கும் மக்களும் தமக்கான விடுதலையைத் தேசிய முதலாளித்துவத்திற்குப் பின்னால் இழுபட்டுச் சென்று வென்றெடுக்க முடியாது. தமக்குரிய தேச விடுதலையைத் தமது சொந்தத் தலைமையைக் கட்டியெழுப்பி தமக்கான பாதையில் மக்களை அணிதிரட்டிப் போராடியே வென்றெடுக்க முடியும்.
 
   பின்னூட்டக் கேள்வி: தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அவசியமானதா? தேசிய இயக்கங்கள் தேவையா?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : வரலாற்று ரீதியான இலங்கையின் இன்றைய யதார்த்தம், இத் தீவு நாடு பல்லினத் தேசியங்கள் வாழும் நாடென்பதும் இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் வாழ்ந்து வருவதுமாகும்.  இங்கு பிரிவினையை ஏற்படுத்தி எந்தவொரு தேசிய இனமும் வாழமுடியாது. ஆனால், தேசிய இனங்கள் தம்மை எதிர் நோக்கி நிற்கும் பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்த்து சுயநிர்ணயத்தை வென்றெடுப்பதற்குப் போராட முடியும். போராடவும் வேண்டும்.
 
ஒடுக்குமுறைக்கு உள்ளாகி நிற்கும் மூன்று தேசிய இனங்களும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான சுயாட்சியை முன்னிறுத்திய தமது கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் முன்னெடுக்க வேண்டும்.  இவை ஒன்றை ஒன்று நிராகரிக்காத நிலையிலும் ஆளும் வர்க்கத்தால் பிளவுபடுத்தி மோத வைக்கும் சூழ்ச்சிக்கு உட்படாதவாறும் தமக்குள் ஒரு பொது வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொள்வது அவசியமானதாகும். எனவே தேசிய இனப் பிரச்சினை கூர்மையடைந்துள்ள நிலையில் தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது தவிர்க்க முடியாத அவசியப்பாடாக அமைகிறது. இதுவே இலங்கையின் இன்றைய யதார்த்தமாக உள்ளது.
 
 
 பின்னூட்டக் கேள்வி : தமிழ் மக்களின் புதிய போராட்ட மார்க்கம் எது?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : தமிழ் மக்களின் பேரில் முன்னெடுத்த முன்னைய போராட்டங்கள் யாவும் தோல்வி கண்டுவிட்டன. ஏனெனில் உறுதியான வெகுஜனப் போராட்டம் தமிழர் தலைமைகளால் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. பாராளுமன்றப் பாதைக்கும் அராஜகங்கள் நிறைந்த  ஆயுதப் போராட்டத்திற்கும் அப்பாலான புரட்சிகர வெகுஜனப் போராட்டமே புதிய மார்க்கமாக அமைய முடியும். இப் போராட்டத்தின் மையமும் பலமும் பரந்துபட்ட மக்கள் சக்தியாக மட்டுமே இருக்க முடியும். கொள்கை வகுப்பதிலும் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் மக்களின் பங்களிப்பு அடிப்படையானதாக அமைய வேண்டும்.  தம்மை எதிர் நோக்கும் பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிராகத் தாமே முன்னின்று போராடுபவர்களாக மக்கள் இருக்க வேண்டும். தமிழர் மேட்டுக்குடி வழிவந்த உயர் வர்க்கத் தலைவர்கள் வகுக்கும் கொள்கைகளாலோ அல்லது இளைஞர்களின் தோள் வலிமையை மட்டும் நம்பிய சிறு முதலாளியப் போராட்டங்களாலோ தமிழ்த் தேசிய இனமோ ஏனைய தேசிய இனங்களோ தமக்கான விடுதலையைத் தேடிக் கொள்ள முடியாது என்பதே உண்மையாகும்.
 
 
 பின்னூட்டக் கேள்வி : 9 /11க்குப் பிந்திய உலக ஓழுங்கில் விடுதலைப் போராட்டங்கள் பயங்கரவாதமாகப் பார்க்கப்படும் நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை சாத்தியமாக்குவது எப்படி?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியம் 9 /11ன் பயங்கரவாதத் தாக்குதலையும் அதன் காரணமாகக் கொல்லப்பட்ட சுமார் மூவாயிரம் வரையான மக்களின் அகால முடிவையும் தனது உலக மேலாதிக்கத்திற்கான பாதைக்கு உரமாக்கிக் கொண்டது. அதனை வைத்தே தனது ஏகாதிபத்தியப் பயங்கரவாதத்தை ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அப்பட்டமாகவே தனது கூட்டாளி நாடுகளுடன் இணைந்து கட்டவிழ்த்துக் கொண்டது. அத்துடன் உலகின் ஒவ்வொரு நிலையிலும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த போராட்டச் சக்திகள் ஒடுக்கப்படுவதற்கு உரிய சர்வதேச சூழல் உருவாக்கப்பட்டது.
 
இங்கே நாம் தூர நோக்கிலும் வரலாற்று வளர்ச்சி மீதான நம்பிக்கையிலும் மக்கள் தான் தீர்க்கமான வரலாற்று உந்து சக்தி என்ற உண்மையிலும் இருந்தே ஏகாதிபத்தியத்தையும் அது காலத்திற்கு காலம் கட்டவிழ்த்து விட்டு வரும் பரப்புரைகளையும் அதன் பயங்கரவாத நடவடிக்கைகளையும் முறியடிக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நீண்டகாலத்திற்கு உலக மக்களை ஏமாற்றவோ அடக்கவோ முடியாது. ஒவ்வொரு நாட்டினதும் ஒடுக்கப்படும் மக்கள், தமது நியாயமான போராட்டங்களை மக்கள் போராட்டங்களாக உரிய தந்திரோபாயங்களுடன் முன்னெடுப்பதில் உறுதியாக முன்னேறும் போது, பயங்கரவாதம் என்ற பதத்தின் உண்மைத் தன்மையை மக்கள் புரிந்து கொள்வார்கள்.  அப்போது பயங்கரவாதம் என்று பரப்புரை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பாதகமான சூழலை உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குச் சாதகமானதொன்றாக மாற்றிக் கொள்வார்கள். இது கடினமானதொன்றாயினும், மக்கள் முன்னேறிச் செல்லும் போது ஏகாதிபத்தியத்தால் நின்று பிடிக்க முடியாது போய்விடும். அப்போது, ஏகாதிபத்தியம் உட்பட எல்லாப் பிற்போக்காளர்களும் இறுதியில் காகிதப் புலிகளாகி விடுவர் எனத் தோழர் மாஓ சேதுங் கூறியது சாத்தியமாகிவிடும்.
 
 
பின்னூட்டக் கேள்வி : கேணல் கருணா ஜனநாயக அரசியலுக்கு வந்து தேசிய அரசியலில் தேசியக் கட்சியின் தலைவர்களில் ஒருவராகும் நிலை உலக அரசியலுக்குப் புதிய படிப்பினையும் முன்னுதாரணமும் என்று சொல்கிறார் சுகன். இது குறித்து தங்கள் பார்வை என்ன?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : இதில் எந்தவிதமான படிப்பினையையும் முன்னுதாரணத்தையும் காண முடியவில்லை. அதேவிதமாக ஆயுதம் தூக்கி நின்றவர்கள் ஏற்கனவே அரசாங்கங்களுடன் இணைந்தும் அமைச்சர் பதவியில் இருந்தும் வருகிறார்கள். புலிகள் இயக்கத்தில் இருந்தும் கிழக்கில் இருந்தும் கருணா பதவி பெற்றிருப்பது தான் ஒரே வேறுபாடாகும். கடந்த காலங்களில் பேரினவாத முதலாளித்துவ அரசாங்கங்களில் தமிழ்த் தேசியவாதக் கட்சிகளில் இருந்து அவ்வப்போது அமைச்சுப் பதவிகளில் அதன் கட்சிகளில் அங்கம் பெற்று வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவரே கருணாவாவார். இதனால் தேசிய இனப் பிரச்சினையையும் பேரினவாத ஒடுக்குமுறையையும் எதிர்நோக்கி நிற்கும் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மைகளும் கிடைக்காது. அத்தகைய நிலைப்பாடு, தனிமனித ஈடேற்றத்திற்கும் சலுகைகளுக்கும் உதவக் கூடும். அதனை ஆளும் வர்க்கம் நன்கு பயன்படுத்திக் கொள்ளவே செய்யும்.
 
 
பின்னூட்டக் கேள்வி  : “புலிகளின் அரசியல் தோல்வி, ஆசிய நாடுகளில் மேற்குலக நாடுகளுக்கு எதிரான அரசியல் இராணுவப் பொருளாதார வெற்றியாகும். இலங்கைத் தொழிலாளி வர்க்கம் நாடு தழுவிய வகையில் மீண்டும் இணைவதற்கு கிடைத்த வாய்ப்பு” எனத் தன்னை இடதுசாரியாகக் காட்டி வரும் தமிழரசன் கூறுகிறார். இது குறித்து தங்கள் பார்வை என்ன?
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : இலங்கையில் புலிகள் இயக்கம் தோல்வி கண்டுள்ளமை மேற்குலக நாடுகளுக்கு கவலை தரக்கூடியதாக உள்ளதே தவிர, ஆசிய நாடுகளுக்கு கிடைத்த வெற்றி எனக் கொள்ள முடியாது. ஏனெனில் மேற்குலகம் திரை மறைவில் இருந்தே புலிகளுக்கான ஆதரவை வழங்கி வந்தது.  அதே வேளை, இலங்கை அரசாங்கத்திற்கும் போதியளவிற்கு ஆதரவைக் கொடுத்தும் வந்தது. உலக மேலாதிக்கத்திற்கான நிலையில் அமெரிக்காவிற்கும் பிராந்திய மேலாதிக்கத்திற்கான நிலையில் இந்தியாவிற்கும் இடையிலான மறைமுகப் பொருளாதார அரசியல் ராணுவப் போட்டியில் புலிகளின் தோல்வி அமெரிக்க மேற்குலகிற்கு இலங்கையைப் பொறுத்து ஒரு பின்னடைவு மட்டுமே. அதே வேளை இந்தியா இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதில் வெற்றி நிலையைப் பெற்றுள்ளது. இதனை வைத்து இலங்கையில் தொழிலாளி வர்க்கம் மீண்டும் ஒன்றிணைவதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று கூறுவது மேலோட்டமானதேயாகும்.
 
இலங்கையில் தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கு வேட்டு வைத்த காரணிகள் பலவுள்ளன.  அதில் பிரதானமானது பேரினவாத முதலாளித்துவ ஒடுக்குமுறையாகும். அதனைத் தவறான நிலைப்பாட்டிலிருந்து குறுந் தமிழ்த் தேசியவாதமாக முன்னெடுத்த சகலரும் தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் குலைத்தவர்கள் தான். ஏன், பேரினவாத ஒடுக்குமுறையின் அக்கம்பக்கத் துணையாக இருந்த பாராளுமன்ற இடதுசாரிகளும் தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்குக் கேடு விளைத்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஏற்படாத வரை, தேசியவாதத்தை மூலதனமாகக் கொண்டுள்ள அனைத்து உயர் வர்க்க சக்திகளும் தோற்கடிக்கப்படாத வரை, தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. இதனைப் புலிகளின் தோல்வியால் மட்டும் மீட்டுவிடமுடியும் என்பது யதார்த்தத்தை மீறிய கற்பனை மட்டுமே.
 
 பின்னூட்டக் கேள்வி : இலங்கை அரசுக்கு ஆதரவாக கியூபா ஐ.நா.வில் வாக்களித்தது குறித்து, அதன் வெளியுறவுக் கொள்கை சந்தர்ப்பவாதமானது எனத் தமிழ்த் தேசியவாதிகள் விமர்சனம் முன்வைக்கிறார்கள். இது குறித்து உங்கள் பதில் என்ன? அதே வேளை, கியூபாப் புரட்சியின் ஆதரவாளரான பிரஞ்சு மாக்சியர் ரெஜி ரெப்ரே “இனித், தேசியத்துடன் இணையாத சோசலிஷம் உயிர்வாழ முடியாது”  எனக் குறிப்பிட்டதை முன்னிலைப்படுத்தி தேசியவாதத்தின் அவசியம் பற்றிப் பேசப்படுவது பற்றிக் கூறுங்கள்.
 
 
  தோழர் சி.கா. செந்திவேல்  : கியூபா சோஷலிச நாடாகிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் பின்தங்கிய நாடாகவே இருந்து வருகிறது. அதே வேளை, ஏகாதிபத்திய நலகொலனித்துவப் பிடிக்குள் இருந்து வரும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் ஏகாதிபத்திய உள்நோக்கங்களுக்கு உதவும் வகையில் சர்வதேச அரங்கில் கியூபா எந்தவொரு நிலைப்பாட்டையும் வகிக்க முடியாது என்பது சரியானதேயாகும்.
 
 இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் அமெரிக்க மேற்குலகம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. அதன் நோக்கம் உலக மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதேயாகும். எனவே கியூபா இலங்கைக்கு ஆதரவாக நின்றமை அமெரிக்க மேற்குலக உள்நோக்கங்களை முறியடிக்கும் வகையிலேயேயாகும். தமிழ்த் தேசியவாதிகள் எப்போதும் ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டுடனேயே இருந்து வந்துள்ளனர் . அந்த வகையில் கியூபா பற்றிய அவர்களது விமர்சனம் அர்த்தமற்றதாகும்.
 
அடுத்து “இனித், தேசியத்துடன் இணையாத சோசலிஷம் உயிர்வாழ முடியாது” என்ற ரெஜி ரெப்ரேயின் கூற்று எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். சோஷலிசத்துடன் இணைந்த தேசியம் தான் உயிர் வாழ்ந்துள்ளதே தவிரத், தேசியத்துடன் இணைந்த சோஷலிசம் இறந்து போனதையே வரலாறு கண்டுள்ளது. கியூபாவின் தேசியம் சோசலிசத்துடன் இணைந்து கொண்டதாலேயே இன்றுவரை உயர்வாழ்வதுடன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சோசலிசமாக விருத்தி பெற்றும் கொண்டது. அதன் பாதையில் வெனிசுவேலா முதல் தென்னமெரிக்க நாடுகள் பலவும் பயணித்து வருவதையும் காணமுடியும். முன்பு கிழக்குலகில் சீனாவிலும் வியட்நாம், கொரியா போன்ற நாடுகளிலும் தேசியம் சோசலிசத்துடன் இணைந்தே வெற்றி பெற்று உயிர் வாழ்ந்தமை வரலாற்று உண்மையாகும். எனவே தேசியம் உயிர்வாழ்வதற்கு ஏகாதிபத்தியமா அல்லது மாக்சிசமும் சோசலிசமுமா தேவை என்பதைத் தமிழ்த் தேசியவாதிகள் தீர்மானிக்கட்டும்.
 
 பின்னூட்டக் கேள்வி : “ஃபிடல் காஸ்ரோ அமெரிக்காவை எதிர்க்கிறார் என்பதற்காக மட்டுமே நாம் இங்கு எதிர்க்கத் தேவையில்லை…. ஃபிடல் எதிர்ப்பது தனது தேசிய நலன்களிலிருந்தே அன்றி உலகளாவிய நன்மைக்காகவல்ல என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்”; என்ற வாதம் பற்றிச் சர்வதேசியவாதியான உங்களின் மறுமொழி என்ன?
 
  தோழர் சி.கா. செந்திவேல் : ஒரு நாட்டினதும் கட்சியினதும் தலைவர் முதலில் தனது நாட்டினதும் மக்களினதும் நலன்களில் இருந்து தான் எதனையும் தொடங்க வேண்டும் என்பது சரியானதேயாகும். அதே வேளை, அத்தகைய நிலைப்பாடு உலக மக்களின் நலன்கள் தேவைகளுக்கு உகந்ததாகவும் இருப்பது அவசியம். அந்த வகையில் ஃபிடல் காஸ்ரோ தனது நாட்டு நலன்களுக்காக மட்டுமன்றி உலக மக்களின் நலன்களுக்காகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வந்துள்ளார். அவரதும் கியூபாவினதும் நிலைப்பாடு, உலகின் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களின் பக்கமே இருந்து வருகின்றது. ஃபிடலின் எழுத்துக்களை உரைகளை ஆழமாகவும் ஆர்வத்துடனும் படிப்போருக்கும் அவதானிப்போருக்கும் அவை நன்கு புரியக் கூடியதாகும்.
 
 இது அவரவர் கொண்டுள்ள உலக நோக்கின் பாற்பட்டதேயாகும். மாக்சிச உலக நோக்குடைய ஒருவரால் வர்க்கப் போராட்ட அடிப்படையில் ஒவ்வொரு பிரச்சினையையும் அணுகித் தெளிவான முடிவிற்கு வரமுடிகிறது. அவ்வாறு இல்லாதவர்கள் பழைமைவாத நிலவுடைமை வழிவந்த கருத்தியற் சிந்தனைகளிலான உலக நோக்கின் அடிப்படையில் விடயங்களை அணுகி நிற்க நேர்கிறது.  இவ்விரு உலக நோக்குக்களினதும் வழியாகவே ஒருவர் சர்வதேசிய வாதியாக இருப்பதும் மற்றவர் தேசியவாதியாக அதற்கும் அப்பால் குறுந்தேசிய வாதியாக நின்று விடயங்களை அணுகுவதும் நிகழ்கிறது. இதனையே சுகன், யசீந்திரா என்போர் மட்டுமன்றி ஏனையோரின் உரையாடல்களிலும் காணமுடியும். இத்தகையவர்கள் எந்த உலக நோக்கின் அடிப்படையிற் புதிய சிந்தனைகள் தமக்குத் தேவை என்று கூறுகிறார்கள் என்பதே முக்கியமான கேள்வியாகும்.

கருணாநிதி – தி கிரேட் கோமாளி:மலரவன்

karuna100தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் உலக வரைபடத்தை தன் கையில் வைத்துக் கொண்டு குரங்காட்டம் ஆடிக் கொண்டிப்பார் ஹிட்லர். மேதை சாப்ளினின் நடிப்பில் அது அவளவு நகைச்சுவாய இருக்கும். தமிழக முதல்வர் கருணாநிதியின் தற்கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது அவரும் தமிழக வரைபடத்தை கையில் வைத்துக் கொண்டு குரங்காட்ட குத்துக்குரணம் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பது நமக்குப் புரிகிறது. பலர் கருணாநிதியை மூத்த திராவிட இயக்கத்தலைவர் என்பதால் விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள். பலர் மௌனமாக கருணாநிதியின் அல்லக்கையாக மாறுவதற்கான தருணத்தைக் எதிர்பாத்துக் காத்திருக்கிறார்கள். கவிஞர்கள், திரைத்துறையினர், தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் என்று பலரும் கருணாநிதியை சகித்துக் கொண்டிருப்பதற்கு இதுவே காரணம்.

ஊழல், அராஜகம். போலீஸ் காட்டாட்சி, ஊழல், சாதி வெறி அரசியல் இதில் எந்த ஒன்றிலும் அதிமுகவிற்கு கருணாநிதி குறைந்தவரல்ல என்று அம்பலப்பட்டுக் கிட்ககும் சூழலில் இந்தியாவிலேயே தமிழகம்தான் அதிக என்கவுண்டர் நடக்கும் மாநிலமாக மாறியிருபப்தை எந்த மனித உரிமை ஆர்வலர்களும் கண்டு கொள்ளவில்லை. காரணம் கருணாநிதி மீதான திராவிடப் பாசம்.

சரி அதெல்லாம் இருக்கட்டும். காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடந்த அண்ணாதுறையின் நூற்றாண்டுவிழா மாநாட்டில், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி, தமிழை தேசீய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற மாதிரி தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார் கருணாநிதி. இதே விதமான தீர்மானங்களை திமுக தொடங்கிய காலத்தில் இருந்தே போட்டுக் கொண்டிருக்கிறது.

 ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மத்தியில் அரசைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது திமுகாதான். ஈழ மக்கள் போரில் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களை காக்க உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதோடு அவர்களின் உயிர்களையே ‘‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’’ என்று கொச்சைப்படுத்தியது போக இறுதிப்போரின் போது மக்கள் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லபப்ட்டுக் கொண்டிருந்த போது குடும்ப சகிதமாக டில்லிக்கு சென்று பதவிக்காக டில்லியிலேயே ஐந்து நாட்களுக்கு மேல் கிடந்தவர்தான் இந்தக் கருணாநிதி.

ஈழத் தமிழர்களுக்குத்தான் எதுவும் செய்யவில்லை, உள்ளூரிலாவது சுயாட்சிக்கும், தமிழுக்கும் என்ன செய்திருக்கிறார் கருணாநிதி என்று பார்த்தால் கடந்த பல வருடங்களாக தீர்மானம் போட்டிருக்கிறார் என்பதைத் தவிற எதுவுமே செய்யவில்லை.தன் மகள் கனிமொழியை எம்பியாக்கினார். அழகிரியை அமைச்சர் ஆக்கினார். சமீபத்தில் நாடாளுமன்ற அமைச்சர் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் திமுக எம்பிக்களால் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஏண்டா இத்தனை நாள் வைக்காத கோரிக்கையை திடீரென இப்பொ வைக்கிறாங்களே? என்னடா என்று கேட்டால் அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாதாம். அதனால் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பதில் சொல்ல அனுமதிக்க வேண்டுமாம். என்ன கொடுமையப்பா? இது? அழகிரிக்கு தமிழ் மட்டும் ஒழுங்கா பேசத் தெரியுமா?

ஆனால் கருணாநிதிக்கு சமீபத்தில் விருதுகள் மேல் விருதுகள் வழங்கப்படுகின்றன. எண்பது வயதைக் கடந்து விட்ட இன்னும் இளைஞராகவே இருக்கும் கருணாநிதிக்கு இத்தனை வேகமாக ஏன் இவளவு விருதுகள் வழங்குகிறார்கள் என்று தெரியவில்லை. காஞ்சிபுரம் விழாவில் அவருக்கு அண்ணா விருது வழங்கியிருக்கிறார்கள்.அண்ணா விருது திமுக கட்சியால் வழங்கப்படுகிற விருது. திமுக என்பது கருணாநிதியின் கட்சி அதன் தலைவரும் அவரே, கேள்வியும் நானே பதிலும் நானே என்று தினம் தோறும் அறிக்கை விடுகிற மாதிரி விருது கொடுப்பதும் நானே, பெற்றுக் கொள்வதும் நானே என்று அண்ணா விருது பெற்றிருக்கிறார்.

அடுத்த நாளே திரைப்பட விருதுகளை அறிவித்திருக்கிறார் கருணாநிதி மொத்த விருதுகளையும் தன் திரைத்துறை அல்லக்கைகளுக்கு அள்ளி வழங்கிவிட்டதோடு விடாமல் உளியின் ஓசை என்ற தனது படத்திற்கு தான் எழுதிய வசனத்திற்கு சிறந்த உரையாடல் ஆசிரியர் – மு.கருணாநிதி (உளியின் ஓசை) என்று தானே விருது கொடுத்திருக்கிறார். இந்த விருதுகளிலும் திருஷ்டிப் பொட்டு மாதிரி சா.தமிழ்செல்வனுக்கும் விருது கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கமலஹாசனை விட சிறந்த இயக்குநர்கள் வந்து விட்டார்கள், பாலா, அமீர், சசிகுமார், மிஸ்கின், என்று தமிழ் சினிமா பல சாத்தியங்களைக்கொண்டு பலவீனங்களோடு இயங்கிக் கொண்டிருக்க ஸ்கூல் பசங்க மாறுவேடப்போட்ட்டிக்கு வேஷம் கட்டுகிற மாதிரி சிறுபிள்ளைத்தமாக படத்திற்கு படம் கமல் கட்டுகிற மாறுவேடப்போட்டிக்கு விருது கொடுக்கிறார் கருணாநிதி. ஆனால் ஒரு நல்ல கதையை உருவாக்கிய சுபரமணியபுரத்திற்கு உருப்படியான எந்த விருதுகளும்.இல்லை. விருது தொடர்பாக சிறந்த பதிவு இதில் இருக்கிறது படியுங்கள்.
http://truetamilans.blogspot.com/ 

 அப்பாடா என்று கண்ணைக்கட்டி டிவியை அணைக்கலாம் என்று போனால் அடுத்த செய்தி. கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருதாம் வழங்க இருப்பவர்கள் சினிமா தொழில்நுட்பக்கலைஞர்கள். இப்போ தெரிகிறதா? ஹிட்லர் கையில் இருந்த உலக வரைபடம் கருணாநிதி கையில் என்னவாக இருக்கிறது என்று.

நேற்று அதிமுகவில் இருந்து வந்த ஒரு கூட்டத்தினரை வரவேற்றுப் பேசும் போது சொல்கிறார் ‘’நமது சாதனைகளைப் பார்த்து தமிழக மக்கள் பூரித்துப் போயிருக்கிறார்களாம்” ஆமாம் கருணாநிதியின் ஆட்சியில் மக்கள் பூரித்த பூரிப்பில்தான் ஆங்காங்கே வகைதொகையில்லாமல் கொலைகள் விழுகின்றன. சில அரசியல் படுகொலைகளில் கொலை செய்தவர்களும் போலீஸ் நிலையத்திலேயே இறந்து போய் விடுகிறார்கள்.

இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலையிழந்து பட்டினியால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழக கிராம மக்கள் பாரம்பரீய விவாசயத்துக்கு விடை கொடுத்து விட்டு நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். கிராமத்து மக்கள் பல வெளிமாநிலங்களின் கல்குவாரிகளில் கொத்தடிமைகளாக இருக்க தமிழகமே மகிச்சியில் பூரித்திருக்கிறது என்று இவரே பூரித்துக் கொள்கிறார்.

 ஜெயலலிதாவை மேரி மாதாவோடு ஒப்பிட்டு விளம்பரத் தட்டி வைத்த போது சிறுபான்மை கிறிஸ்தவர்களை தூண்டி விட்டு அதை பெரிய கலவரமாக மாற்றத் துடித்தவர் கருணாநிதி. ஆனால் கடவுள் மறுப்புப் கொள்கையே தனது கட்சி,குடும்ப ( ஆழ்வார்பேட்டைம், கோபாலபுரம், இரு குடும்பங்களின்) கொள்கை என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் மகன் கட்அவுட் தமிழ் கடவுள் முருகனைப் போல சித்தரித்து வைக்கப்பட்டுள்ளது. வீரமணி ஒரு வேளை புது வியாக்கினாம் இதற்குக் கொடுக்கலாம். மேரி மாதாவோடு ஜேவை ஒப்பிட்டது தவறு என்றால் முருகவோடு ஸ்டாலினை ஒப்பிட்ட திமுகவை எதைக் கொண்டு வரவேற்பது எனத் தெரியவில்லை.

கடவுளில் என்னடா? தமிழ் கடவுள் இங்கிலீஷ் கடவுள்?
இபப்டியான கூத்துக்கள் எவளவோ கருணாநிதியின் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. சிறுபான்மையின்ரரின் ஆதரவாளர், திராவிட இயக்கத்தின் கடைசித் தூண், தமிழகத்தில் இருக்கும் ஒரே கம்யூனிஸ்ட் இப்படி எல்லாம் கருணாநிதிக்கு முகம் உண்டு. ஆனால் முற்போக்குச் சக்திகளை ஒடுக்கியது, ஈழ ஆதரவுப் போராட்டங்களை புலி ஆதரவுப் போராட்டங்களாக சித்தரித்து அவர்களை அடக்கி ஒடுக்கியது, கடைசி நேரத்தில் ஈழ மக்களுக்கு துரோகம் செய்தது எல்லாம் போக சிறுபான்மை மக்களையும், இடதுசாரிகளையும் கூட வாய்ப்பு வரும் போதெல்லாம் கழுத்தறுத்தவர்தான் இந்த கருணாநி.இதற்கு எத்தனையோ உதாரணங்களை வரலாற்றில் இருந்து சொல்ல முடியும். ஆனால் அவருக்கு இருக்கும் முற்போக்கு முகங்களில் எந்த ஒன்றை வைத்தேனும் இன்றைய கருணாநிதியை அளவிட்டுப் பாருங்கள். தன் பதவிக்கும், ஆட்சிகும் ஆபத்து வரும் என்றால் எத்தகைய இழிவான செயலையும் செய்யத் தயங்காத கருணாநிதியின் இன்றைய வருத்தமெல்லாம் உலக்த் தமிழர்களின் தலைவர் பதவி பறிபோய் விட்டதே என்ற கவலைதான்.

தமிழ்ச்சினிமாவின் மீது தமிழக அரசு பூசிய கரி! :மாதவராஜ்

tamilnaduபுழுக்கத்தில் இருந்த தமிழ்ச்சினிமாவுக்குள் தென்றலின் தீண்டலாய் பாவிய மொழி படத்திற்கு இரண்டாவது பரிசாம். தமிழ்ச்சமூகத்தின் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவரான பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு போனால் போகிறது என்று சிறப்புப் பரிசாம். இந்தப்படங்களையெல்லாம் தாண்டி  ரசனையை, சிந்தனையை, பண்பாட்டை சீரழிக்கும் சிவாஜி படத்திற்கு 2007ம் ஆண்டு சிறந்த பட விருதாம். ரஜினி சிறந்த நடிகராம்.  இந்தச் செய்தி, எரிச்சலிலும் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. பெரிய அளவில் எல்லோராலும் பேசப்பட்ட பருத்திவீரனை தமிழக அரசு தொலைத்து விட்டது போல. எடுக்கப்பட்ட விதத்தில் யதார்த்தமாகவும், இயல்பாகவும் இருந்த கல்லூரியை கணக்கில் வைத்துக் கொள்ளவேயில்லை போலிருக்கிறது.

2008ம் ஆண்டு விருதுகளுக்கும் அதே கொடுமைதான். சீரியஸாய் ஆரம்பித்து காமெடியாகி எல்லோரையும் குழப்ப சுனாமியில் மூழ்கடித்த தசாவதாரம் படம் சிறந்த படமாம். ஒரே நேரத்தில் பத்து மாறுவேடப் போட்டிகளில் கலந்து கொண்ட கமல் சிறந்த நடிகராம்.(இவருக்கு இந்த படத்தில் பின்னணிக்குரலுக்கு வேண்டுமானால் பரிசு கொடுக்கலாம்). தமிழ்ச்சினிமாவுக்கு இன்னொரு அத்தியாயம் எழுதியதாய்ச் சொல்லப்படுகிற சுப்பிரமணியபுரத்தில் ஒரு பிண்ணனிப் பாடகருக்கு மட்டும் விருது கிடைத்திருக்கிறது.

முன்னணி நடிகர்களை கைக்குள் வைத்துக்கொள்வது என்னும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் தந்திரம் அப்பட்டமாய் தெரிகிறது. இந்த அரசியல் ஆலிங்கனத்தில் குருவிக்காரன் எப்படி விடுபட்டுப் போனார் என்பதற்கு என்ன கிளைக்கதை இருக்கிறதோ தெரியவில்லை. அது நமக்குத் தேவையுமில்லை. சன் டி.வியின் டாப் டென்னுக்கும், தமிழக அரசின் விருதுகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

மீண்டும் தமிழ்ச்சினிமாவிற்குள் புதியவர்களும், புதிய சிந்தனைகளும் ஒரு மறுமலர்ச்சி போல பிரவேசித்திருக்கிற காலம் இது. கனவுகளோடும், நம்பிக்கைகளோடும் எதாவது செய்யவேண்டும் என்கிற துடிப்போடு அவர்கள் இருப்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த  படங்களில் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு தமிழக அரசு இந்த விருது மூலம் சொல்கிற செய்தி என்ன? பிரம்மாண்டமான படங்கள் பக்கம்தான் தமிழக அரசு நிற்கும் என்பதுதானா? உளி இங்கே சிலைகளை செதுக்கவில்லை, உடைத்துக் கொண்டு இருக்கிறது. அதன் சத்தம் நாராசமாய் கேட்கிறது.

தமிழக அரசு இந்த விருதுகளின் மாண்புகளையும், மதிப்பையும் சீர்குலைத்துவிட்டது. தமிழ்ச்சினிமாவின் மீது கரியை பூசியிருக்கிறது. நல்ல கலைஞர்கள் இப்படிப்பட்ட ‘கலைஞரிடம்’ இருந்து விருதுகளை இனி எதிர்பார்க்க மாட்டார்கள். உலகத் தமிழ் மாநாட்டை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது!

http://mathavaraj.blogspot.com/2009/09/blog-post_29.html

காடுகளில் அநாதரவாக்கப்பட்ட புலிப்போராளிகள் – புதிய இணைவுகளின் அவசியம்! : கேசவன்

forgottenஎண்பதுகளின் பின்னான தமிழ் பேசும் மக்க்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான தற்காப்பு யுத்தம் என்பதும் எதிர்ப்பரசியல் என்பதும், புலிகள் என்ற எல்லலைக்குள் குறுக்கப்பட்டிருந்தது. இந்தக் குறுகிய எல்லைக்குள் புலிகளின் பாசிசக் கூறுகள் வளர்ந்து செல்ல இதன் மறுபுறத்தில், சிங்கள மக்கள் மத்தியிலிருந்த சிங்கள பௌத்த பாசிசத்தின் எதிர்ப்பு சக்திகளும், இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டிலிருந்த முற்போக்கு அரசியலுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களும், உலகம் முழுவதும் பரந்திருக்கும் மனிதாபிமான சக்திகளும் தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்பரசியலிலிருந்து அன்னியப்படுத்தப்பட்டனர்.

அரசியற் பின்னடைவு..

ஈராக் மக்கள் மீதான அமரிக்க அழிப்புயுத்தத்திற்கு எதிராகவும், ஆப்கனிஸ்தானில் ஐரோப்பிய அமரிக்கக் கூட்டுக்கள் நடத்தும் மனிதப்படுகொலைகளுக்கு எதிராகவும், பலஸ்தீனிய ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராகவும் தெருவில் இறங்கிக் குரலெழுப்பும் எந்த ஐரோப்பிய முற்போக்கு சக்திகளும் இலங்கைப் பிரச்சனை குறித்து மூச்சுக்கூட விட்டதில்லை. புலிகளின் அரசியற் தவறு என்பது சிங்கள பௌத்தப் பேரின வாதம் நிகழ்திக் கொண்டிருக்கும் இனச்சுத்திகரிப்பிற்கு எதிரான பாரிய அரசியற் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

விரும்பியோ விரும்பாமலோ புலிகளோடு தங்களை இணைத்துக் கொண்ட ஆரம்ப நிலைப் போராளிகளில் பலர், அதன் பின்புலத்திலிருந்த அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால், சிறீலங்கா அரசின் மூர்க்கத் தனமான அடக்குமுறைக்கு எதிரான ஒரே எதிர்ப்பியக்கம் என்ற அடிப்படையிலேயே இணைந்திருந்தனர்.

போராட்டத்தின் இன்றைய தேவை..

புலிகளின் அழிவிற்குப் பின்னர் இவர்களில் ஒரு பகுதி அன்னிய நாடுகளுக்ளை நோக்கி இடம் பெயர்ந்திருந்தனர் என்பது தவிர, ஒரு குறித்த சிறு பகுதியினர் இலங்கையின் காடுகளுக்குள் மறைந்திருக்கின்றனர். சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புக்களுக்கும் அப்பால் இனவழிப்பிற்கு எதிராக  தற்காப்பு யுத்தம் என்பது இன்றைய அரசியற் சூழலில் அவசியமானதும் அவசரமானதுமாகும். 80 களில் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்கு முறைகெதிரான ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் அவசியத்திலும் அதிகமாக இன்று அதன் தேவை அதிகமாகவே உணரப்படுகிறது. இந்த யுத்தம் புலிகளின் சிந்தனை முறையின் அடிப்படையில் புலிகளின் பழைய தலைமை முன்னெடுக்கப்படுமாயின் மறுபடி இன்னொரு பாசிசமே வளர்த்தெடுக்கப்படும்.

இலங்கைக்கு மட்டுமல்ல, தெற்காசியாவிற்கும் ஏன் மொத்த மனிதகுலத்திற்குமே அபாயகரமான அடக்கு முறையின் சின்னமாக அமைந்திருக்கும் சிறீலங்கா அரசிற்கெதிரான தற்காப்பு யுத்தம், தமிழ் பேசும் இஸ்லாமியர்களையும், மலையக மக்களையும், ஒடுக்கு முறைக்கு உட்படுத்தப்படும் பெரும்பாலான சிங்கள மக்களையும், மனிதகுலத்தின் மீது பற்றுள்ள உலக மக்களையுமே இணைக்கவல்லது.

சிந்தித்தால் கூட சிறையிலடைத்துச் சித்திரவதைக்குட்படுத்தும் சிறீலங்கா அரச பாசிசத்திற்கு எதிரான எதிரான எதிர்ப்பரசியல் என்பது இலங்கையின் எல்லைக்கு வெளியில் அன்னிய தேசங்களில் கூட சாத்தியமற்றது என்றாகிவிட்ட விரக்தி மிக்க சூழலில் காடுகளிலிருக்கும் எஞ்சிய, புலிகளின் அரசியல் சிந்தனை முறைக்குட்படாத போராளிகளின் அரசியல் நகர்வுகள்  உடனடியான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது. ஆரம்ப நிலைப் போராளிகளாக இருந்த புலிகளின் பாசிச சிந்தனைகளுக்கு உட்படாத சில குழுக்கள் கூட வன்னிப் பகுதிக்காடுகளில் அனாதரவாக விடப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் கசிகிறது. இவர்கள் நடத்தவல்ல தற்காப்பு யுத்தம் மட்டுமே உடனடியான இடைவெளியை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.

 தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல, முழு இலங்கை மக்களுமே அரச அடக்குமுறைகெதிரான தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வெளியை ஏற்படுத்த வல்லது.

புதிய இணைவுகளின் அவசியம்

புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற புலி ஆதரவு வியாபாரிகள் இப்போராளிகள் குறித்து எந்த அக்கறையும் காட்டத் தயாரில்லை. இப்போராளிகளின் அன்றாட வாழ் நிலை என்பதே கேள்விகுள்ளாகப் பட்டுள்ள சூழலில், இவர்களில் அழிவையே எதிர்பார்க்கும் புலி சார் புலம் பெயர் வியாபாரிகள், இலங்கை அரச பாசிச சார்புநிலை நோக்கியே தம்மைக் கட்டமைத்துக்கொள்கின்றனர். “பிரபாகரன் வாழ்கின்றார்” என்று அரசியல் வியாபாரம் நடத்த்திக்கொண்டிருக்கும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் இவர்களின் இன்னொரு எதிரிகள்.

இலங்கை அரசு வனப்பகுதிகளைச் சார்ந்த கிராமங்களில் இராணுவக் குவிப்பை நிகழ்த்தி வருகிறது. இந்திய – இலங்கை இராணுவக் கூட்டு நடவடிக்கைகள் காடுகளை நோக்கி மறுபடி மேற்கொள்ளப்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

இடதுசாரிகளின் வரலாற்றுக்கடமை..

இந்த நிலையில் ஒரு புறத்தில் இப்போராளிகளின் முற்போக்கு அரசியற் சக்திகளுடனான இணைவும், மறு புறத்தில் அவ்வாறான அரசியற் சக்திகள் போராளிகளின் இருப்பை உறுத்திப் படுத்துவதும், அவர்களின் அரசியல் நகர்வு சிறிலாங்கா அரச பாசிசத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் தற்காப்பு யுத்தமாக பரிணாமமடைய உதவுவதும், இன்றைய வரலாற்றுக் கடமை.

தமிழ் பேசும் சிறுபான்மை மக்களில் போராட்டத்தை சர்வதேசிய அரசியலின் ஒரு பகுதியாகக் கருதும், இந்தியாவெங்கும் பரந்திருக்கும் முற்போக்கு சக்திகளும், முற்போகு இயக்கங்களும் அபாயகரமான இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரகப் போராடவல்ல இந்த சந்தர்ப்பததைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மாவோயிஸ்டுக்கள் மீதான இந்திய அரச பயங்கரவாதம் நத்திகிராமிலும், லால்காரிலும், இன்னும் பல கிராமங்களிலும் மக்களைக் கொன்று குவித்திருக்கிறது. இந்திய அரச பயங்கரவாதத்திற்கு எதிரான பொதுவான போராட்டம் என்ற தளத்தில் இலங்கைப் போராளிகளுடன் ஏற்படுத்தப்படுகின்ற இணைவு என்பது புலம் பெயர் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியர்கள் போன்ற அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் ஒன்றிணைக்கும் வலிமைபெற்றது. தென்னாசியாவின் மக்களின் விடுதலைக்கு ஆரம்பப் புள்ளியாக அமையவல்லது. வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற காலப்பகுதியில், தமிழ் நாட்டிலே கருணாநிதி அரசின் அடக்குமுறைகளுக்கு மத்தியில், விட்டுக்கொடுப்பற்ற போராட்டங்களை நடத்திய இடதுசாரி முற்போக்கு சக்திகள் இந்தச் சந்தர்ப்பத்தை நிராகரிக்க மாட்டார்கள்.

இந்தியாவின் மறு கோடியில் இந்திய மேலாதிக்கவாததை எதிர்த்த நேபாள மாவோயிஸ்டுக்களின் போராட்டம் குறித்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்திய மாவோயிஸ்டுக்களிடம் தோற்றுப் போய்விட்டதாக இந்தியப்பிரதமர் கண்ணீர் வடிக்கிறார். ஆக, போராட்டங்களும் எதிர்பியக்கங்களும் தோற்றுப்போய்விடவில்லை. புதிய அரசியலும், புதிய இணைவுகளும், புதிய தந்திரோபாயமும் தான் இன்றைய தேவை என்பதை இலங்கையிலிருக்கும் போராளிகள் உணர்ந்துகொள்வார்கள். அதிகாரத்தின் பின்னணியில் அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளுடனன்றி, மக்கள் மீது பற்றுள்ள போராட்ட சக்திகளுடனான இணைவு என்பதே அனாதரவாகக் காடுகளில் வாழ்கின்ற ஆரம்ப நிலைப்  போராளிகளைப் புதிய தென்னாசிய அரசியல் சக்திகளாக மாற்றியமைக்க வல்லது.

புலிகளின் அரசியல் என்பதும் அதன் சிந்தனை முறை என்பதும் அபாயகரமான பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதாகும். இதன் தலைமட்ட உறுப்பினர்கள் அந்த சிந்தனை முறையில் உறியவர்கள். இச்சிந்தனை முறை தகர்த்தெறியப்படவேண்டும். இதன் சரியான தலைமை என்பது இந்திய இடதுசாரி அணியின்டமிருந்தே எதிர்பார்க்கப்படலாம்.