தரிசனம் தொலைக்காட்சி தடை: இஸ்ரேல் வெளிநாட்டமைச்சு கடிதம்.

தமிழீழ விடுதலைப்புலிகள்  சார்பான தொலைக்காட்சி சேவையான தரிசனம்   தடை தொடர்பாக இஸ்ரேலிய வெளிவிகார அமைச்சு கடித மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. சற்லிங் என்ற இஸ்ரேலிய செய்மதி நிறுவனத்தூடாக செயற்பட்டுவந்த இந்த சேவையை இஸ்ரேலிய அரசு தடைசெய்துள்ளது தொடர்பாக சற்லிங் இன் பிரதான முகாமையாளரான டேவிட் ஹொக்னருக்கு எழுதியுள்ள கடிதத்தில் புலிகளைப் பயங்கர வாத அமைப்பு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய வெளி நாட்டமைச்சின் தெற்காசியப் பிரிவின் உதவி முகாமையாளரான யரோன் மேர் கையொப்பமிட்டு எழுதியுள்ள கடித்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் புலிகளின் பிரச்சாரச் சாதனமாகவும் பணம் சேர்க்கும் ஊடகமாகவும் செயற்படும் தரிசனம் தொலைக்காட்சி தொடர்பாக  இலங்கை அரசு தமக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலிகள் போன்ற பயங்கர வாத அமைப்புடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய எந்த அமைப்பிற்கும் சேவையை வழங்குவது உரித்தானதல்ல என்று டேவிட் ஹொக்னருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயங்கர வாதத்தையும் வன்முறையையும்  ஆயுதமாகப் பயன்படுத்திப் பிரிவினை கோரும் அமைப்பான தலைமறைவு  இயக்கமான புலிகள் எனத் தகவல் கூறும் இக்கடிதத்தைத் தொடர்ந்து லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் ஐ.பீ.சீ போன்ற புலிகள்  ஆதரவு வானோலி சேவையும் தடைக்குள்ளாகலாம் என உத்தியோக பூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

Copy of the Isreali Ministry of Foreign Affairs’s letter

MINISTRY OF FOREIGN AFFAIRS               [Symbol]                                                             משרד החוץ
JERUSALEM                                                                                                                                        ירושלים
 
[Date according to Jewish calendar]
15/06/2008
Document number: 1-4037365
 
To
Mr. David Hochner
Satlink CEO
02-5349145
 
Re: Satellite broadcasts of the Tamil underground organization by Satlink company
Hello,
Following our conversation, we wish to bring to your attention an application that has been received by the Ministry of Foreign Affairs from the CEO of the Ministry of Foreign Affairs of Sri-Lanka, referring our attention to broadcasts of the Tamil underground organization LTTE, by Satlink Communications company. According to the information we have received, the company under your management is broadcasting, via satellite, a Tamil channel named Tharishanam. The content of the broadcast includes propaganda on behalf of LTTE, to the Tamil community exiling in Europe, including an effort for money raising for the benefit of the activity of this organization in Sri Lanka. The government of Sri Lanka required from the State of Israel to act so that the Israeli company will cease the broadcast of the Tamil channel.
For your knowledge, the Tamil underground LTTE, is battling for independence in east of Sri Lanka and is making use of means of terror and violence. Said underground is defined as a terror organization in the United States, Canada, the European Union countries and India. It is not yet defined as a terror organization in Israel. However, any connection between it and an Israeli body is highly problematic and even extremely severe in light of Israel’s coping against the terror organizations.
In light of the high political importance that we see in resolving the issue, according to the manner required by the government of Sri Lanka, the Ministry of Foreign Affairs is of the opinion that it is not appropriate that an Israeli company shall provide services, directly or indirectly to a body that is identified with a terror organization such as the LTTE. Therefore, we will be thankful for taking our aforesaid standpoint into consideration in the continuation of your activity.
 
Sincerely,
[Signature]
Yaron Meir
Vice Manager of South East Asia Department
Ministry of Foreign Affairs
60 Israel
Ministry of Foreign Affairs, 9 Yitzhak Rabin Ave. Kiriat Ha’leom Jerusalem

தேசிய இனப்பிரச்சனை: இரண்டு லட்சத்து 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 1975 முதல் 2002 வரை நிகழ்ந்த மோதல்களில் 2,15,000 பேர் பலியாகியுள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வியட்நாமில் இருந்து பொஸ்னியா வரை ஐம்பது ஆண்டு காலப் போர் வன்முறை உயிரிழப்புகள்; உலக சுகாதார ஆய்வுத்திட்டத் தரவின் பகுப்பாய்வு” என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியாகியுள்ளது. ‘போர்களால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை, முன்பு மதிப்பிட்டதைக் காட்டிலும் அதிக அளவிலேயே உள்ளது என்றும், ஐம்பது ஆண்டுகளில் போர் மரணங்கள் குறைந்ததற்கான ஆதாரமேயில்லை என்றும் குறித்த ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் வங்கதேசம்,  இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் உயிரிழப்புகள் குறித்துப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த 1971-ல் வங்கதேச சுதந்திரப் போரில் 58,000 பேர் பலியானதாக, முந்தைய ஆய்வுகள் மதிப்பிட்டுள்ளன. ஆனால், இந்தப் போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,69,000-க்கும் அதிகமாக இருக்கும் என்று இந்தப் புதிய ஆய்வு கணக்கிட்டுள்ளது.

அதேபோல், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 1975 முதல் 2002 வரை நிகழ்ந்த மோதல்களில் 2,15,000 பேர் பலியாகியுள்ளதாக, அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை சுமார் 61,000 மட்டுமே என்று முன்னைய ஆய்வுகளில் மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு ராணுவ‌த் ‌தீ‌ர்வை ‌விரு‌ம்ப‌வி‌ல்லை: இ‌ந்‌திய குழு‌வின‌ர்

இ‌ந்‌தியா ‌விரு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்றகொழு‌ம்‌பி‌லஇ‌ந்‌திஉய‌ர்ம‌ட்ட‌ககுழு‌வின‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

அனை‌‌த்து‌‌ததர‌ப்‌பினரு‌மஏ‌ற்று‌க்கொ‌ள்ளு‌மவகை‌யி‌லஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ஒரு‌ங்‌கிணை‌ந்த ‌சி‌றில‌ங்கஎ‌ன்க‌ட்டமை‌ப்‌பி‌ற்கஉ‌ட்ப‌ட்டஇன‌‌ப் ‌பிர‌ச்சனை‌க்கஒரஅமை‌தியான ‌தீ‌ர்வை ‌சி‌றில‌ங்கக‌ண்ட‌றியு‌மஎ‌‌ன்றஇ‌ந்‌தியந‌ம்பு‌கிறது” எ‌ன்றஇ‌ந்‌‌திஉயர‌திகா‌ரி ஒருவ‌ரகூ‌றியதாக ‌ி.ி.ஐ. ‌நிறுவன‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

சி‌றில‌ங்கசெ‌ன்தே‌சிய‌பபாதுகா‌ப்பஆலோசக‌ரஎ‌ம்.ே.நாராயண‌னதலைமை‌யிலாஅயலுறவு‌சசெயல‌ர் ‌சிவச‌ங்க‌ரமேன‌ன், பாதுகா‌ப்பு‌சசெயல‌‌ர் ‌விஜ‌ய் ‌சி‌ஙஆ‌கியோ‌‌ரகொ‌ண்உய‌ர்ம‌ட்ட‌ககுழு‌வின‌ரஇ‌ன்று ‌சி‌றில‌ங்அ‌திப‌ரம‌கி‌ந்ராஜப‌‌க்சவை‌சச‌ந்‌தி‌த்தஒரம‌ணிநேர‌மபே‌சின‌ர்.

இ‌ச்ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் ‌விவர‌ங்க‌ளஎதையு‌மஇருதர‌ப்‌பினரு‌மவெ‌ளி‌யிட‌வி‌ல்லை. இரு‌ந்தாலு‌மசுரு‌க்கமாப‌த்‌‌தி‌‌ரிகை‌ககு‌‌றி‌ப்பஒ‌ன்றஇ‌ந்‌திப‌த்‌தி‌ரிகையாள‌ர்களு‌க்கபடி‌த்து‌ககா‌ட்ட‌ப்ப‌ட்டது.

அ‌தி‌ல், ம‌ற்ற ‌விவகார‌ங்களுட‌னசா‌ர்‌க் ‌உ‌ச்‌சி மாநா‌ட்டி‌லஇ‌ந்‌திய‌ப் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙப‌ங்கே‌ற்பதமு‌ன்‌னி‌பபாதுகா‌ப்பஏ‌ற்பாடுக‌ளதொ‌ட‌ர்பாஆராய‌ப்ப‌ட்டதாக‌ககூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌திஉய‌ர்ம‌ட்ட‌ககுழு‌வின‌ரஇ‌ந்‌தியா ‌திரு‌ம்புவத‌ற்கமு‌ன்பு ‌சி‌றில‌ங்அ‌திப‌ரம‌கி‌ந்ராஜப‌க்சவஅவ‌ரதஇ‌ல்ல‌த்‌தி‌லச‌ந்‌தி‌த்து‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாக, நே‌ற்றஅவ‌ர்க‌ளகொழு‌ம்பசெ‌‌ன்ற‌தி‌லஇரு‌ந்து ‌சி‌றில‌ங்க‌பபாதுகா‌ப்பு‌சசெயல‌ரகோ‌த்தபராஜப‌க்ச, அ‌திப‌ரி‌னமூ‌த்ஆலோசக‌ரப‌சி‌லராஜப‌க்ம‌ற்று‌மத‌மிழ‌ரதலைவ‌ர்க‌ள் ‌சிலரை‌சச‌ந்‌தி‌த்ததாஅரசவ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

அணு சக்தி ஒப்பந்த நிறைவேற்றம் தாமதம் கவலையளிக்கிறது: அமெரிக்கா

இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுவரும் தாமதம் கவலையளிக்கிறது என்று கூறியுள்ள அமெரிக்கா, தாமதமாகும் ஒவ்வொரு நாளும் நிலைமையை சிக்கலாக்கிவிடும் என்று கூறியுள்ளது.வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவுத் துறையின் பேச்சாளர் ஷான் மெக்கார்மாக், அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுதல் தொடர்பாக இந்திய அரசு மேற்கொண்டுவரும் ஒவ்வொரு முயற்சி குறித்தும் தங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

 

அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுடைப்படுத்திட வேண்டும் என்பதில் புதுடெல்லியுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் கூறியுள்ள மெக்கார்மாக், அமெரிக்காவில் புதிதாக பதிவியேற்கப்போகும் அரசுதான் இதனை ஆராயப் போகிறது என்றாலும், அதற்கு முன்பு சர்வதேச அணு சக்தி முகமை மற்றும் அணு தொழில்நுட்ப விற்பனைக் குழு (என்.எஸ்.ஜி.) ஆகியன விவாதிக்க வேண்டியுள்ளது என்று கூறினார்.

இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடமிருந்து ஒப்புதல் பெற்றுவிட்ட காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்துவரும் இடதுசாரிகளின் ஆதரவு கிடைக்காததால் சிக்கலில் உள்ளது.

தங்களுடைய எதிர்ப்பையும் மீறி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முற்பட்டால் ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று இடது கூட்டணி வெளிப்படையாக அறிவித்திருக்கும் நிலையில், வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி – இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்து ஒப்பந்தம் நிறைவேறுமா அல்லது ஆட்சிக்காக ஒப்பந்தம் கிடப்பில் போடப்படுமா என்பது தெரிந்துவிடும்.

இந்திய அதிகாரிகள்-மகிந்த சந்திப்பு: இனப்பிரச்சனை?

இந்திய உயர்மட்ட அரச பிரதினிதிகள் குழுவொன்று கொழும்பிற்கு திடீர் விஜமொன்றை மேற்கொண்டுள்ளது. முன் கூட்டியே திட்டமிடப்படாத இத் திடீர் விஜயம் இந்திய தேசிய பாதுகாப்புச் சபையின் ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்பமைச்சர் விஜய் சிங், வெளிவிவகார அமைச்சர் ஷிவ் சக்கர் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.
மாத இறுதியில் நடை பெறும் சார்க் மாநாடு தொடர்பாகவே இவ் விஜயம் அமைந்த்தது என இந்தியத் தூதரகம் அறிவித்தாலும் இலங்கை அதிகாரிகள் பலதரப்பு பேச்சுக்கள்நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
சனி (21/06/2008) காலை இக்க்குழுவினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கும் என உறுதியாகியுள்ளது.
புது டெல்லியிலிருந்து விஷேட விமானத்தில் இலங்கை நேரப்படி 11:30 இற்கு வந்திறங்கிய இம் மூவரும் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளை ஏற்கனவே சந்தித்துப் பேச்சுக்கள்நடாத்தியுள்ளனர்.

மறுபடி நோர்வே களத்தில்: இலங்கை விவகாரம்

நோர்வேயின் உதவி வெளிநாட்டமைச்சர் ரேமொண்ட் ஜோன்சன் இலங்கையின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கும் சிறீ லங்கா அரசிற்குமிடையிலான ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் நடுவர்களாகச் செயற்பட்ட நோர்வே அமைச்சரது இவ்வறிக்கை பசில் ராஜபக்ஷ பேச்சுவார்ததைக்குப் பச்சைக் கொடி காட்டியிருக்கும் நேரத்தில் வெளியானதென்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மீண்டும் பேச்சுவார்த்தை: பசில் ராஜபக்ஷ

விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இலங்கை அரசு தயாராக உள்ளது என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் சகோதரரும் அவரது ஆலோசகருமான பாசில் ராஜபக்ஷ கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். ஆனால் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிடும்வரை மீண்டும் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிபர் ராஜபக்ஷ நிபந்தனை விதித்துள்ளது குறித்து கேட்டபோது, என்னென்ன நிபந்தனைகள் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார் பாசில்.

ஆனால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அதிபர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள்தான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் மட்டுமே தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் என்பதை ஏற்க முடியாது. இது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழர்களிடம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவே இல்லை. விடுதலைப் புலிகளுக்கு செல்வாக்கே இல்லை என்று நான் சொல்லவில்லை. அவர்களுக்கென்று குறிப்பிட்ட செல்வாக்கு உள்ளது என்றார் அவர். ஆனால் விடுதலைப் புலிகள் போக்கு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே அரசு எப்போதும் விரும்புகிறது. இருப்பினும் தற்போதைய நிலையில் மீண்டும் போர் நிறுத்தம் அறிவிக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். வெள்ளிக்கிழமையிலிருந்து போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். அரசு தரப்பில் இது ஏற்றுக்கொள்ளப்படுமா என்று கேட்டபோது, இது குறித்து முடிவு செய்ய காலஅவகாசம் தேவை என்றார் பாசில்.

ஒரு நாளில் இதை முடிவு செய்துவிட முடியாது. எல்லாவற்றையும் யோசித்து முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கும் அதேவேளையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதோடு பயங்கரவாதமும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
-தினமணி நாளிதள் சென்னை