சிறிலங்கா காவல்துறையினரால் தமிழக் கனடியர் ஒருவர் கைது!

கனடா – ரொரன்ரோ பெரும்பாகத்தினை வதிவிடமாகக் கொண்ட 20 வயதுடைய கஜன் ஏரம்பமூர்த்தி என்பவர் சிறிலங்கா காவல்துறையனரால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலத்திரனியல் உபகரணங்கள், வெப்ப உணர்ப்படையில் இலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் யுiஅளூழவ ர்நயவளுநநமநச 3500டி என்பதும் உள்ளடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல குறுவட்டுக்கள், மற்றும் பல எந்திரங்களுக்கு தேவையான பதார்த்தங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பொட்கள் அனைத்தும் விடுதலைப்புலிகளிற்கு கொண்டுவரப்பட்டதா என்பதனை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தக் குறித்து -கனேடிய தமிழ் எகாங்கிரஸின் உறுப்பினர் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் கனடிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கைது செய்யப்படும் தமிழர்களின் மேல் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை பிரயோகிப்பது சிறிலங்கா பாதுகாப்புத்துறையினரின் வழக்கமான போக்கு என சுட்டிக்காட்டினார்.

மேலும், கொழும்பில் தமிழர்கள் காரணங்கள் எதுவும் இன்றி கைதுசெய்யப்படுவது சாதாரணமாக நிகழும் ஒரு செயலவாக தற்போது மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, 71 வயதான பற்றிக் பெனான்டஜ் என்பவரையும் சறிலங்கா காவல்துறையினர் கைது செய்திருப்பதாக கனடா ரொரன்ரோவில் வசிக்கும் அவரது மகள் கிறிஜ்ரீனா பெனான்டஸ் கனடிய ஊடகங்களிற்கு தெரிவித்திருக்கிறார்.

தனது தகப்பனாரிடமிருந்து பணத்தினை பெற்றுக்கொள்வதற்காகவே இந்தக் கைது நடந்திருப்பதாக தாம் நம்புவதாக அவா மேலும் குறிப்பிட்டார்

கல்லடி, மற்றும் ஜனகபுரவில் துப்பாக்கிப் பிரயோகம்: மூவர் பலி

மட்டக்களப்பு கல்லடிப் பகுதியினூடாக பயணம் செய்து கொண்டிருந்த காவற்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (யூன்15) மாலை 3.20 அளவில் தமது பணியை முடித்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை ஜானகபுரப் பகுதியில் சிவில் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் மீது பிற்பகல் 1 மணியவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன்

சென்னை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் எம்.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா இன்று பிறப்பித்தார்.

இப்போது ராஜேந்திரன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக இருந்து வருகிறார்.

தஞ்சை பல்கலைக்கழக துணை வேந்தராக அவர் 3 ஆண்டு காலம் பதவி வகிப்பார் என ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன

மோன்டாஜ் சஞ்சிகையின் ஆசிரியயை பெட்ரிகா ஜேன்சுக்கு 4 வது முறையாகவும் மரண அச்சுறுத்தல்; விடுக்கப்பட்டுள்ளது. அவரது கையடக்க தொலைபேசிக்கு நேற்று முற்பகல் 11.30 அளவில் பெயரை வெளியிடாத நபர் ஒருவர் அழைப்பை மேற்கொண்டு இந்த மரண அச்சுறுத்தலை விடுத்துள்ளார். ‘ நீ தொடர்ந்தும் தேவையற்ற விடயங்களை மேற்கொள்கின்றாய், அவற்றை உடனடியாக நிறுத்த வில்லை என்றால், உனக்கு மிக குறுகிய காலத்தில் என்ன நடக்கும் என்பதை பார்த்துக்கொள்’ என அந்த பெயர் குறிப்படாத நபர் தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளார். பேசுவது யார் என ஊடகவியலாளர் கேட்ட போது, நீ முதலில் நான் சொல்வதை கேள் என அந்த நபர் கூறியுள்ளர். தாம் மேற்கொள்ளும் தேவையற்ற விடயங்கள் என்ன ஊடகவியலாளர் கேட்ட போது, அதை நீ நன்கு அறிவாய் எனவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் வெளிப்படுத்திய 27 ஊடகவியலாளர்கள் பட்டியலில் பெட்ரிக்கா ஜேன்சின் பெயரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அவருக்கு ஏற்பட்டு வரும் மரண அச்சுறுத்தல் காரணமாக த நேசன் பத்திரிகைக்கு அவர் எழுதி வரும் வாராந்த கட்டுரை கடந்த இரண்டு வாரங்களாக வெளியாகவில்லை. இதற்கு முன்னர் அவரது அலுவலகத்திற்கு முன்னால் கோழி ஒன்று கொல்லப்பட்டு போடப்பட்டிருந்ததுடன், அவரை வெள்ளை வான் ஒன்று பின்தொடர்ந்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இறுதியாக அவரது வீட்டிற்கு முன்னால் ஜீப் வண்டி ஒன்று பல மணிநேரம் தரி;த்து நின்றுள்ளது. இது தொடர்பில் காவல்துறையினருக்கு முறையிட்டபோது, காவல்துறையினர் 4 மணித்தியாலங்களுக்கு பின்னரே அந்த இடத்திற்கு சென்றிருந்தனர். அப்போது அந்த ஜீப் வண்டி அங்கிருந்து சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. மகளிர் அணி மாநில மாநாடு தொடங்‌கியது!

தி.மு.க. மகளிர் அணி மாநில மாநாடு தொடங்‌கியது!

சனி, 14 ஜூன் 2008( 12:01 IST )

கடலூ‌ரி‌ல் தி.மு.க. மகளிர் அணி முதல் மாநில மாநா‌டு இ‌ன்று காலை கொடியே‌ற்ற‌த்துட‌ன் தொட‌ங்‌கியது. ‌‌‌பி‌ற்பக‌ல் 2 ம‌ணி‌க்கு நடைபெறு‌ம் மக‌ளி‌ர் ஊ‌ர்வல‌த்தை முதலமைச்சர் கருணாநிதி தனி மேடையில் அமர்ந்து பார்வையிடுகிறார்.

தி.மு.க. மகளிர் அணியின் முதல் மாநில மாநாடு, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று காலை 9 ம‌ணி‌‌க்கு கொடியே‌ற்ற‌த்துட‌ன் தொடங்‌கியது. கொடியை வச‌ந்‌தி கணே‌ச‌ன் ஏ‌ற்றுவை‌த்து தொட‌ங்‌கி வை‌த்தா‌ர். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக 3 லட்சம் சதுர அடியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

முதல் நாள் மாநாடு அரசியல் மாநாடாகவும், 2-ம் நாள் மாநாடு சமுதாய சீர்திருத்த மாநாடாகவும் நடைபெறுகிறது. முதல் நாள் மாநா‌‌‌ட்டை இ‌ன்று காலை 9 மணிக்கு வசந்தி கணேசன் கொடியேற்றி தொட‌ங்‌கி வை‌த்தா‌ர். பிற்பகல் 2 மணிக்கு 3 லட்சம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலம் நடக்கிறது. இதனை நூர்ஜகான் பேகம் தொடங்கி வைக்கிறார்.

கியூபா ஆதரவு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள்:

இலங்கையில் நடைபெறும் கியூபா ஆதரவு மாநாட்டில் தமிழகத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. கியூபாவிற்கு ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கும் வகையில், 4-வது ஆசிய -பசிபிக் பிராந்திய மாநாடு கொழும்பில் எதிர்வரும் ஜூன் 14, 15 திகதிகளில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், தனி சட்டப் பேரவை உறுப்பினர் டி. ராமச்சந்திரன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எழுத்தாளர் அமரந்தா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

புலிகளின் தலைவர் அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி :திவயின

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு ஆயிரம் கோடி ரூபா லஞ்சம் வழங்க முற்பட்டதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு இந்த லஞ்சப் பணத்தை வழங்க பிரபாகரன் முயற்சித்தாக எப்.பி.ஐ. புலனாய்வுத் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த ஓருவரை கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது இந்தத் தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் 27 நாடுகளில் சுமார் 486 வங்கிக் கணக்குகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பேணி வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கனேடிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு சொந்தமான கணக்கில் 4 மில்லியன் டொலர் கொண்ட கணக்கொன்றை கனேடிய காவற்துறையினரும்;, 2 மில்லியன் டொலர் கொண்ட கணக்கொன்றை ஸ்கொட்லண்ட்யார்ட் காவற்துறையினரும்; கண்டு பிடித்துள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

புலிகளின் திறமையான பிரசாரம் – அரசாங்கதின் கீர்த்திக்கு பங்கம் ஜனாதிபதி:

தமிழீழ விடுதலைப்புலிகளின் திறமையான பிரசாரம் காரணமாக இலங்கை அரசாங்கதின் கீர்த்திக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். டைம்ஸ் செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை அரசாங்கம் பிரசார போரில் தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட இணங்கினால், சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கமுடியும் எனக் கூறியுள்ள ஜனாதிபதி, தமிழீழ விடுதலைப்புலிகள், தாம் பலவீனம் அடைந்துள்ள போதெல்லாம், பேச்சுவார்த்தைக்கு தயார் என சர்வதேசத்திற்கு கூறிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையில் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்