சிங்கப்பூரில் கைது:இலங்கைப் பெண்ணிடம் குடிவரவு முத்திரைகள்

இலங்கையைச் சேர்ந்த 29வயது பெண்ணொருவரிடம் இருந்து குடிவரவு ரப்பர் முத்திரைகள் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் சிங்கபூர் விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடைகளை வைத்திருந்த பொதி ஒன்றில் இரண்டு காற்சட்டைகளில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சிங்கபூரில் குடியிருப்பதை உறுதிசெய்ய கூடிய குவரவு முத்திரைகள் இதில் காணப்பட்டதாக சிங்கபூர் குடிவரவு அதிகாரிகள் கூறியுள்ளனர். சிங்கபூரில் விசா அனுமதி முடிந்த நிலையில் தங்கியிருப்போருக்கு அபராதம், அல்லது 6 மாத சிறைத்தண்டனை, அல்லது மூன்று மாத சிறைத்தண்டனையுடன் மூன்று பிரம்படிகள் தண்டனைகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

விசேட திட்டம் :தலைவர்களுக்குப் பாதுகாப்பு -பொலிஸ் மா அதிபர்

புதன்கிழமை, 02 யூலை 2008, 12:26.53 PM GMT +05:30 ]
சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கென விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் புதிய பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டு உரையாற்றிய சந்தர்ப்பத்தில் அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 31 ஆவது பொலிஸ் மா அதிபர் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் நாட்டில் தலைதூக்கியுள்ளதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சேவையைக் கௌரவமான சேவையாக மாற்றுவதற்கு சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என புதிய பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் தொடரும் தமிழர்களின் கைதுகள்: ராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது.

கொழும்பின் புறநகரான ஹொரனையி;ல் வைத்து ஒரு வயது குழந்தை உட்பட்ட ஐந்து பேரடங்கிய தமிழ் குடும்பம் ஒன்றை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர் இவர்கள் கல்முனையில் இருந்து திருமணம் ஒன்றுக்காக ஹொரணைக்கு வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதி அமைச்சர் பி ராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது. பேர்த் தோட்டத்தை சேர்ந்த ராஜரட்ணம், கிரிஸ்தோப்பர் பிரிநித் பிரசாலினி, சொலமன் மற்றும் ஒரு வயதான தெசேரா ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள். இதேவேளை எழுதுவினைஞர் சேவைக்கான பரீட்சைக்காக கொழும்புக்கு நேற்று இரவு வந்த மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை சேர்ந்த 15 இளைஞர்கள் கறுவாக்காட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்

நேபாள மன்னரின் மகன்: சிங்கப்பூரில் குடியேறுகிறார்

காத்மாண்டு : பதவி பறிக்கப்பட்ட நேபாள மன்னர் ஞானேந்திராவின் மகன் பரஸ், நாட்டை விட்டு வெளியேறுகிறார். அவர் சிங்கப்பூரில் குடியேறுகிறார் என, நேபாள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அந்த பத்திரிகையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நேபாளத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மன்னராட்சி முடிவுக்கு வந்து விட்டது. அங்கு ஜனநாயக ஆட்சி உதயமாகியுள்ளது. பதவி பறிக்கப்பட்ட மன்னர் ஞானேந்திரா, நீண்ட காலமாக வசித்த நாராயண் ஹிதி அரண்மனையை விட்டு வெளியேறி, காத்மாண்டு நகரின் புறநகர் பகுதியில் உள்ள பழைய அரண்மனை ஒன்றில் தங்கியுள்ளார். மன்னர் ஞானேந்திரா, அரண்மனையை விட்டு வெளியேறியதில், அவரின் மகன் பரஸ், மிகுந்த கோபம் கொண்டுள்ளார். அதனால், நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரில் குடியேறுகிறார். முதல் கட்டமாக அவர் மட்டுமே செல்கிறார். அவரின் மனைவி ஹிமானி மற்றும் மூன்று குழந்தைகள் செல்லவில்லை. சில நாட்கள் கழித்து அவர்களும் சென்று விடுவர்.இவ்வாறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டதாலும், நாராயண்ஹிதி அரண்மனை அருங்காட்சியமாக மாற்றப்பட்டதாலும், அங்கு தங்கியிருந்த இந்து குருக்கள் ஒன்பது பேர் வேலை இழந்துள்ளனர். ஞானேந்திரா தற்போது தங்கியிருக்கும் அரண்மனையில், தாங்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், கோரியுள்ளனர்.”வேதங்களின் படி, இந்து மத சடங்குகளை மட்டுமே நாங்கள் செய்வோம். அதை தவிர வேறு எந்த வேலையும் எங்களுக்கு தெரியாது. அரசியலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அரண்மனை அருங் காட்சியகமாக மாற்றப்பட்டதால், நாங்கள் வேலை இழந்து தவிக்கிறோம்’ என, தனியார் ரேடியோ ஒன்றுக்கு பேட்டி அளித்த குருக்களில் ஒருவர் கூறியுள்ளார்.

அணு சக்தி ஒப்பந்தம்: சமாஜ்வாடி

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

புதுடெல்லியில் இன்று சமாஜ்வாடி கட்சித் தலைவர்களை தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சந்தித்து அணு சக்தி ஒப்பந்தம் குறித்து விளக்கினார்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர் சிங், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு நாடாளுமன்றத்தில் நேரடியாகவோ அல்லது ஒரு அறிக்கையின் வாயிலாகவோ பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று எம்.கே. நாராயணனிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.

அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையின் மீது ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் நாளை விவாதித்தப் பிறகுதான் சமாஜ்வாடி கட்சி இறுதி முடிவு எடுக்கும் என்று அமர் சிங் கூறினார்.

இதற்கிடையே மற்றக் கட்சிகளின் தலைவர்களை இடதுசாரி தலைவர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர். முன்னாள் பிரதமர் தேவே கவுடாவை இடதுசாரி தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேவே கவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் பொதுச் செயலர் தனிஷ் அலி, இந்தியா தனது சுதந்திரமான அயலுறவுக் கொள்கையை விட்டுத் தரக் கூடாது என்பதில் தங்கள் கட்சி உறுதியுடன் உள்ளதாகக் கூறினார்.

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக நமது நாட்டின் இறையாண்மை, சுதந்திரம், அயலுறவுக் கொள்கை, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை விட்டுத் தரவேண்டுமா என்பதை பிரதமர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பர்தனும் ஷாமிம் ஃபைசியும் கூறினர்.

ஐ.நா.வின் நடுநிலைக்கு வல்லரசுகளால் கறை

02 – July – 2008
ஐ.நா.வின் நடுநிலைத்தன்மைக்கு வல்லரசுகள் கறையை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அமைப்பின் உயரதிகாரி ஒருவர் திங்கட்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல்கள் அதிகரித்துவரும் தருணத்தில் வல்லரசுகள் ஐ.நா.வின் நடுநிலைத்தன்மை என்ற பிரதிமைக்கு வடுவை ஏற்படுத்தியிருப்பதாக முன்னாள் அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சரும் ஐ.நா.வின் சிரேஷ்ட இராஜதந்திரியுமான லக்தார் பிராகிமி சாடியுள்ளார்.
ஈராக், ஆப்கானிஸ்தானில் அரசாங்கங்களை அமைப்பதற்கு உதவியிருந்த பிராகிமி உலகிலுள்ள ஐ.நா.வின் 20 நிலையங்களின் பாதுகாப்புத் தொடர்பான மதிப்பீட்டு ஆய்வைத் தற்போது பூர்த்தி செய்திருக்கிறார்.
ஐ.நா.வை பக்கச்சார்பற்றதென நீண்டகாலத்துக்குப் பார்க்க முடியாத நிலைமை உள்ளதாக ஐ.நா. அலுவல்கள் தமது குழுவுக்குக் கூறியதாக நிருபர்களிடம் பிராகிமி கூறியுள்ளார்.
ஐ.நா. குழு எங்கு சென்றாலும் பணியாளர்கள் இது தொடர்பாக திரும்பத்திரும்ப கூறியிருப்பதாகவும் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் மட்டுமல்லாது ஜெனீவா, ரோம் , நைரோபி, இலங்கை போன்ற நாடுகளிலும் கடந்த சில வருடங்களாக இந்தத் தன்மை காணப்படுகிறது.
அதாவது ஐ.நா. பக்கச்சார்பற்றதாகவும் சுயாதீனமானதாகவும் இருக்கின்ற நிலைப்பாட்டில் அதிகளவிலானோர் இல்லை . மத்திய கிழக்கில் என்ன நடக்கின்றது . அங்கு அதிகளவில் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், பலம் வாய்ந்தவர்கள் (வல்லரசுகள்) ஐ.நா.வில் செல்வாக்குச் செலுத்த தமது பலத்தைப் பயன்படுத்துகின்றனர். அதனால், சர்வதேச அமைப்பானது தனது 192 உறுப்பினர்களுக்குப் பதிலாக பேசமுடிவதில்லை என்றும் பிராகிமி விசனம் தெரிவித்திருக்கிறார்.
பிராகிமியின் 103 பக்க அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
அல்ஜீரியாவிலுள்ள ஐ.நா.அலுவலகத்தில் டிசம்பரில் அல்ஹய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய குழுவொன்று தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே ஐ.நா. ஊழியரின் பாதுகாப்புத் தொடர்பான மதிப்பீட்டறிக்கையை தயாரிக்கும் பணி ஆரம்பமானது.
ஐ.நா.வின் பாதுகாப்பு கட்டமைப்பு கலாசாரம் , ஐ.நா.வின் மதிப்பு துரிதமாக வீழ்ச்சியடைந்து வருகின்றமை, ஐ.நா. அமைப்பிற்கான அச்சுறுத்தல்கள் தொடர்பாக உறுப்பு நாடுகள் தொடர்பாடலை மேற்கொள்ளாமை, பாதுகாப்பு வழங்காமை .
தமது நடவடிக்கைகளால் களத்திலுள்ள அலுவலரின் ஆபத்தான நிலைமை எவ்வளவுக்கு உள்ளது என்பது குறித்து ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையும் அதன் இதர அமைப்புகளும் அடையாளம் கண்டு கொள்வதிலுள்ள போதாத தன்மை என்பன பற்றி விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

‌பிரதம‌ர்- குடியரசு‌த் தலைவ‌ர் ச‌ந்‌தி‌ப்பு: அணுச‌க்‌தி

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌ட்டநடைமுறை‌ப்படு‌த்துவததொட‌ர்பாஅர‌சிய‌லநெரு‌க்கடி எழு‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஇ‌ன்றகுடியரசதலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீலை‌சச‌ந்‌தி‌த்து ‌விவா‌தி‌த்து‌ள்ளா‌ர்.

சுமா‌ர் 50 ‌நி‌மிட‌ங்க‌‌ள் ‌நீடி‌த்இ‌ந்த‌சச‌‌ந்‌தி‌ப்‌பி‌னபோது ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙப‌ங்கே‌ற்க‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ள, அடு‌த்வார‌மஜ‌ப்பா‌னி‌லநட‌க்கவு‌ள்ஜ‌ி-8 மாநாடப‌ற்‌றியு‌ம், உ‌ள்நா‌டம‌ற்று‌மச‌ர்வதேச ‌விவகார‌ங்க‌ளகு‌றி‌த்து‌ம் ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டதாகுடியரசு‌ததலைவ‌ரமா‌ளிகவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌‌தி‌ககு‌றி‌ப்பதெ‌ரி‌வி‌க்‌கிறது.

அணச‌க்‌தி உட‌ன்பாடப‌ற்‌றிய ‌விவாத‌மஎதுவு‌மநட‌ந்ததாஅ‌க்கு‌றி‌ப்‌பி‌லகூற‌ப்படா‌வி‌ட்டாலு‌ம், ‌விவாத‌த்‌தி‌லஅணச‌க்‌தி உட‌ன்பாடஇட‌ம்பெ‌ற்‌றிரு‌க்க‌ககூடு‌மஎ‌ன்றந‌ம்ப‌ப்படு‌கிறத

கொலைசெய்யத் திட்டம்: சந்திரிகா குமாரணதுங்க

பிரபாகரனல்ல மற்றவர்களே தன்னைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டியிருப்பதாக முன்நாள்
June 30, 2008
சிறீ லங்கா ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்தார்.
தனது பிறந்ததின நிகழ்வையொட்டி பொளத்த மத நிகழ்வொன்றில் கலந்து கொண்ட முன்நாள் ஜனாதிபதி தனக்கு மறுபடியும் அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வமில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஆறு தடவைகள் இலங்கைக்கு வந்த போதும் தன்னுடைய பாதுகாப்பு மட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தனது அலுவலகம் அரசாங்கத்தால் கையகப் படுத்தப்பட்டுள்ளதாகவும், தன்னை அவமானப்படுத்தும் வகையில் சட்டனடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுவதாகவும் மேலும் கருத்து வெளியிட்டார்.