கிளாரா ஜெட்கின் : ஆர். பார்த்தசாரதி

உலக மகளிர் தினம் மார்ச் 8ஆம் நாளாகும். உலகத் தொழிலாளர் தினமான மே தினம் அமெரிக்கா சிக்காகோவில் பிறந்தது போல உலக மகளிர் தினமும் அமெரிக்காவில் தான் பிறந்தது. படுமோசமான பணி நிபந்தனைகளுக்கு ஆட்பட்டு வந்த பெண்கள், குழந்தைகளுக்கு நல்ல பராமரிப்பு தேவை ஆண்களுக்குச் சமமான வேலை உரிமையும், வாக்களிக்க உரிமையும் வேண்டும் என முழங்கிப் பல்லாயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் நியூயார்க் நகரத் தெருக்களில் 1857ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று வலம் வந்தனர். இதுவே சுரண்டலை எதிர்த்து உழைக்கும் பெண்களின் முதல் போராட்டம். ஆனால் 1910 ஆம் ஆண்டு உலக சோஷலிச பெண்கள் மாநாடு நடைபெற்ற போது உலகப் பெண்களை ஒன்று திரட்டவும், உரிமைகளுக்காகப் போராடவும், ஒரு நாள் குறிக்கப்பட வேண்டும். அது மார்ச் 8 ஆக இருத்தல் வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு உழைக்கும் மகளிர் சோஷலிச மாநாட்டு முடிவு, காலம் செல்லச் செல்ல, உலக மகளிர் தினமாக ஏற்கப்பட்டது.

அக்காலத்தில் பணியிடங்களில் உழைத்த பெண்கள் நாயினும் கேடாகச் சேற்றிலும் சகதியிலும் உழைத்தனர். குடிசைகளிலும், சதுப்பு நிலங்களிலும் சாலைகளின் ஓரங்களில் உழன்று பணி செய்தும் உறங்கியும் குடும்பம் நடத்தியும் வாழ்ந்தனர்.

இதே 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் ஜெர்மனியில் சாக்சனியில் கிளாரா ஜெட்கின் பிறந்தார். தாராள உள்ளம் கொண்ட தந்தையார் அவருக்குக் கல்வி கற்பித்தார். தொழிலாளி வர்க்க மக்களிடைக் கல்விப் பணி செய்த முதல் ஜெர்மனியப் பெண்மணி இவரே. மார்க்சியத்தால் ஈர்க்கப் பெற்ற அம்மையார், பிரடெரிக் ஏங்கெல்சின் நெருங்கிய, நம்பிக்கைக்குரிய நண்பரானார். ஆர்வம், துணிச்சல், அர்ப்பணிப்பு மனப்பான்மை மிக்கவர் என்று அனைவராலும் பாராட்டப் பெற்றவர். இவருடைய முயற்சி, பணி இவரைச் சர்வதேச சோஷலிஸ்ட் மகளிர் இயக்கத்தில் பணி செய்யத் தூண்டின. அவர் அவ்வியக்க மாநாட்டில் நியூயார்க் மகளிர் எழுச்சி நினைவாக மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். முழுமனதாக எதிர்ப்பின்றிப் பரிந்துரை ஏற்கப்பட்டது. அவர் கண்ட பெண்கள் இயக்கத்தில் 5 இலட்சம் உறுப்பினர்கள் இருந்ததாகக் கணிக்கப்பட்டது.

1848 ஆம் ஆண்டு பெர்லினில் வெடித்தெழுந்த தொழிலாளர் புரட்சியில் பலர் மடிந்தனர். மார்ச் 18 அவர்களுடைய நினைவு தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என முன் மொழிந்தவர் புரட்சிப் பெண்ணான கிளாரா ஜெட்கின். இவரே 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தொழிலாளி வர்க்க சோஷலிச இயக்கத்தின் ஈடிணையற்ற மாதர் தலைவியாக விளங்கியவர்.

முதன் முதலில் 1893 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பிறகுதான் பெண்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க உரிமையும் வழங்கப்பட்டது. பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். இவை கிளாரா ஜெட்கின் கண்ட இயக்கத்தின் பலன்கள்.

பெண், மனைவியாகவோ, தாயாகவோ பிறரைச் சார்ந்து வாழ்க்கை நடத்துபவள் என்னும் இழி நிலைமை மாறவேண்டும் என்றார் கிளாரா. ஆண்களுக்குச் சரிநிகராக வேலை செய்து கூலிபெறும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனித்து நின்று எல்லா வழிகளிலும் சிறப்பாக வாழ வேண்டும் என்பது அவருடைய பல நோக்கங்களில் ஒன்று. இது, இன்று மாதர் பொருளாதார சுதந்திரம் பெற்று எவரையும் சாராது நம்பாது தனித்து நின்று வாழ முடியும் அதற்குப் பொருளாதார நிலை உறுதியாக அமைய வேண்டும் என்னும் முழக்கத்தில் பிரதிபலிப்பது காணலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மேல் தட்டு வர்க்கப் பெண்டிருடனோ அவர் இயக்கத்துடனோ தொடர்பு கொள்ளக் கூடாது என்பது கிளாராவின் உறுதியான கருத்து. குழந்தை வளர்ப்பும், குடும்பப் பராமரிப்பும் சமுதாயக் கடமைகளாக ஆக்கப்படவேண்டும். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஆள்பட்டவையாக அவை இருத்தலாகாது என்று கருதினார். அவர் காலத்திலேயே அவரோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் பெண்கள் உழைப்பில் ஈடுபட்டால் ஆண் தொழிலாளர்கள் உரிமைகளும், ஊதியமும் பறிக்கப்படும் அல்லது பாதிக்கப்படும் என்று இவரோடு வாதாடினார்கள். இவர்களைத் தம் வாதத்திறமையால் வென்றார் ஜெட்கின்.

“லெனின் நினைவுக்குறிப்புகள்” என்னும் தம் நூலில் அம்மையார் லெனினைச் சந்தித்த போது அவர், “கலை மக்களுக்குச் சொந்தமானது. உழைக்கும் மக்களிடை ஆழ வேர் விட்டிருப்பது; அவர்களை ஈர்ப்பது; அவர்களால் நன்கு உணரப் பெற்று உவந்து வரவேற்கப்படுவது. இலக்கியம் என்பது உழைப்பாளர் உள்ளங்களிலிருந்து கிளர்ந்து பீறிட்டெழும் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பது அவர்களுடைய வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருப்பதோடு அதனை உயர்த்துவதும் ஆகும்” என்று சொல்லியதாகக் கூறுகிறார்.

ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஜெர்மனியில் பாசிசம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. உழைப்பாளி வர்க்கம் கொடிய அடக்குமுறைக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்று எச்சரித்த கிளாரா ஜெட்கின், எச்சரித்த சில நாட்களிலேயே 1933 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20 ஆம் நாளன்று மாஸ்கோவில் காலமானார்.

கிளாரா ஜெட்கின் நினைவாக உலக மகளிர் தினம் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மே தினம் தொழிலாளர்களுக்கு எவ்வாறு புனிதமானதோ அவ்வாறு மார்ச் 8 மாதர்களுக்குப் புனித நாள். வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்.

புரட்சியாளர்களா? சீர்குலைவாளர்களா?

தமிழகக் காடுகளில் மாவோயிஸ்டுகளை காவல்துறையினர் தேடிவரும் நிகழ்வுகள் செய்தி இதழ்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. மாவோயிஸ்ட் எனக்கருதப்படும் நவீன் எனும் இளைஞர் ‘என்கவுண்டரில்’ இறந்த சம்பவம் பல வாதங்களைக் கிளப்பியுள்ளது. குங்குமம் 08.05.2008 தேதியிட்ட இதழில் அருள் எழிலன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இதில் சில உண்மைகள் திரித்துக் கூறப்பட்டுள்ளன. நக்சல் சீர்குலைவு வாதத்தின் தோற்றம் 1967ல் அரசியல் அரங்கில் காங்கிரசின் ஏக போகம் தகர்ந்தபொழுது மேற்குவங்கத்தில் ஒரு ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இடம்பெற்றது மட்டுமல்ல; தோழர் ஜோதிபாசு அவர்கள் துணை முதல்வரா கவும் பொறுப்பேற்றார்.இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்புதான் 1964ல் திருத்தல்வாதத்தை எதிர்த்து பொதுவுடமை இயக்கத்தினுள் 12 ஆண்டுகளாக நடந்த நீண்டப் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமாவதற்கு காரணமாக அமைந்தது. எனினும் கட்சிக்குள் மீண்டும் ஒரு உட்கட்சி சித்தாந்தப் போராட்டம் விளைந்தது. இதனை திணித்தவர்கள் இடதுசீர்குலைவு வாதங்களை முன்வைத்தனர்.

இவர்கள் முன்வைத்த வாதங்களின் சாரம் என்ன?
இந்தியா ஒரு அரைக்காலனி நாடு; அரை நிலப்பிரபுத்துவ நாடு.
இந்தியாவில் புரட்சிக்கு காலம் கனிந்து விட்டது. மக்கள் புரட்சிக்கு தயாராக உள்ளனர்.
கட்சி உடனடியாக ஆயுதமேந்தி போராட வேண்டும்.
மக்களை கட்சி திரட்ட வேண்டியதில்லை. நமது வீரசாகசங்களைப் பார்த்து மக்கள் நம் பின் திரளுவார்கள்.
வர்க்க எதிரிகளாக உள்ள தனிநபர்களை அழித்தொழித்திட வேண்டும்.
தொழிற்சங்க, விவசாய சங்கப் பணிகள் எல்லாம் தேவையற்றது. ஆழமான விவாதங்களுக்கு பிறகு கட்சி இக்கருத்துக்களை நிராகரித்துவிட்டது. எனினும் சீர்குலைவுவாதிகள் தமது வாதங் களைக் கைவிடவில்லை. கட்சியினுள் பல்வேறு குழப்பங்களையும் கட்டுப்பாடு மீறல்களையும் அரங்கேற்றி வந்தனர்.
இதன் ஒரு கட்டத்தில் தான் நக்சல்பாரி கிராமத்தில் ஆயுதம் தாங்கிய கலகத்தை இவர்கள் தொடங்கினர்.“கட்சியின் இரண்டாம் மட்டத்தலைவராக இருந்த சாருவின் (சாருமசும்தார்) குரலை அவ ரது கட்சியே எதிர்பார்க்கவில்லை” என குங்கு மம் கட்டுரையாளர் கூறுகிறார். இது முற்றிலும் தவறான ஒன்று.சாருமசும்தார் கோஷ்டி முன்வைத்த கருத் துக்களை கட்சி ஜனநாயக முறையில் விவாதித் தது மட்டுமல்ல; அது சீர்குலைவு வாதம் எனவும் பொதுவுடைமை இயக்கத்தை தடம்புரள வைத்து விடும் எனவும் உறுதியான முடிவுக்கு வந்தது. எனவே இச்சீர்குலைவு வாதங்கள் கட்சியால் நிராகரிக்கப்பட்டன.இடிமுழக்கமா? சீர்குலைவு முழக்கமா?‘நக்சல்பாரி எழுச்சியை வசந்தத்தின் இடி முழக்கம்’ என வரலாறு பதிவு செய்ததாக குங்குமம் கட்டுரையாளர் கூறுகிறார். வசந்தத்தின் இடி முழக்கமாக அல்ல; மாறாக பொதுவுடமை இயக்கத்தின் முன்னேற்றத்திற்கு சீர்குலைவு ஏற்படுத்த முயன்ற நிகழ்வு இது என வரலாறு பதிவு செய்துள்ளது என்பதே உண்மை.ஏனெனில் இவர்கள் வைத்த ஒவ்வொரு கோட்பாடும் தவறான மதிப்பீடு என நிரூபிக்கப்பட்டுள்ளது. பல கோட்பாடுகளை அவர்களே மாற்றிக்கொண்டுள்ளனர். இந்த தவறான கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பல இளைஞர்கள் உயிர் இழந்ததும் திசைமாறிப்போனதும் வரலாற்று உண்மை.‘தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கம் எவ் வளவு வேகமாக எழுந்ததோ அதே வேகத்தில் பிளவைச் சந்தித்தது’ என குங்குமம் கட்டுரை யாளர் கூறுகிறார். இது தமிழகத்தில் மட்டுமல்ல பல பகுதிகளில் நக்சல் சீர்குலைவுவாதிகள் பிளவுபட்டுப்போயினர்.
ஒரு செல் இரண்டாகவும் அது நான்காகவும் பல்கிபெருகுவது போல நக்சல் சீர்குலைவு கோஷ்டிகள் பிளவுபடுவதும் பிறகு ஒன்றுபடுவதும் மீண்டும் பிளவுபடுவதும் என முடிவில்லா பரிணாம வளர்ச்சியைக் கண்டனர். 1979-80 காலத்தில் நக்சல் சீர்குலைவு வாதிகள் 35 கோஷ்டிகளாக பிளவுபட்டிருந்தனர்.சிபிஎம் ஊழியர்களைக் கொன்று குவித்தனர்ஒரு பொதுவுடைமை இயக்கம் செம்மை யாக செயல்பட இரு நிபந்தனைகளை தோழர் லெனின் முன்வைக்கிறார். ஒன்று சித்தாந்த ஒற்றுமை. இரண்டு அந்த ஒற்றுமையின் அடிப்படையில் ஸ்தாபன ஒற்றுமை.
இவை இரண்டும் இருந்தால் மட்டுமே இயக்கம் சிறப்பாக செயல்படும். நக்சல் சீர்குலைவுவாதிகளிடையே இவை இரண்டுமே இல்லை. எனவே அவர்கள் பல கோஷ்டிகளாகப் பிரிந்ததில் எவ்வித ஆச்சரிய மும் இல்லை. இந்த கோஷ்டிகளிடையே எவ்வளவு பிளவுகள் இருந்தாலும் ஒரு கருத்தில் மட்டும் ஒற்றுமை இருந்தது. அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதான எதிர்ப்பு என்பதாகும்.நக்சல் சீர்குலைவுவாதிகளுக்கு எதிராக சித்தாந்தக் கோணத்திலிருந்தும், நடைமுறையிலும் சமரசமற்ற எதிர்ப்பை வெளிப்படுத்துவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. எனவே இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது கொலைவெறித் தாக்குதலை ஏவிவிடவும் தயங்கியதில்லை.
இந்தியாவில் 1975ல் அவசர நிலை! ஆனால் மேற்குவங்கத்திலோ 1971லிருந்தே அறிவிக்கப் படாத அவசரநிலை! 1971-77 காலகட்டத்தில் மட்டும் 1100 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இதில் நக்சல் சீர்குலைவுவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் கணிசமானவர்கள். காங்கிரஸ் குண்டர்க ளோடு இணைந்து நக்சல் சீர்குலைவுவாதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை கொன்றனர்.
இந்தக் கூட்டணி இன்றுவரை நந்திகிராமத்தில் தொடர்கிறது. 2008ல் இது வரை 19 ஊழியர்களை மாவோயிஸ்ட் சீர் குலைவுவாதிகள் கொன்றுள்ளனர்.உழைப்பாளிகளைக் கொல்லும் மாவோயிஸ்ட்டுகள்இன்றும் நக்சல் சீர்குலைவுவாதிகள் பல கோஷ்டிகளாக உள்ளனர். அவர்களில் மாவோ யிஸ்ட்டுகள் கோஷ்டி இன்றளவும் ‘எதிரியை அழித்தொழிக்கும்’ கோட்பாட்டை கைவிட வில்லை.
எந்த உழைப்பாளி மக்களுக்காக ஆயுதம் ஏந்துவதாக மாவோயிஸ்ட்டுகள் கூறிக்கொள்கின்றனரோ அதே உழைப்பாளிகள் அதுவும் மலைவாழ் மக்கள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ளனர். ‘சல்வா சுடும்’ எனும் அமைப்பை அரசு எந்திரம் ஏற்படுத்தி மலைவாழ் மக்களுக்கு ஆயுதங்கள் தரப்படுகின்றன.
இவர்கள் மாவோயிஸ்டுகளை தாக்குவதும் மாவோயிஸ்டுகள் இவர்களை தாக்கு வதும் ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் இன்றும் நடக்கிறது. மாவோயிஸ்டுகள் திருப்பித் தாக்கும்பொழுது பெண்கள் மற்றும் குழந்தை களைக் கூட விட்டுவைப்பதில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பரம ஏழைகளான மலைவாழ் மக்கள் ஏன் தமக்கு எதிராக ஆயுதம் ஏந்துகின்றனர் என் பதை சிந்தித்திட மாவோயிஸ்டுகள் தயாராக இல்லை.நேபாள மாவோயிஸ்டுகள் இந்திய மாவோயிஸ்டுகளை ஆதரித்தவர்கள். அவர்கள் நேபாளத்தின் சூழலை கணக்கில் கொண்டு தமது கோட்பாடுகளில் மாற்றம் கண்டுள்ளனர். ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்திய மாவோயிஸ்டுகள் தமது அடிப்படை நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது அவர்களது வேண்டுகோள். இந்த நியாய மான வேண்டுகோள் இந்திய மாவோயிஸ்டுகளின் காதுகளில் இறங்குமா என்பது கேள்விக் குறியே! ஊடகங்களின் ஆதரவு ஏன்?
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் நாசகர பொருளாதார கொள்கைகள் மக்களிடையே கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனை இடதுசாரிப்பாதையில் கொண்டு சென்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயல்கிறது. மக்களின் கோபம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக திரும்புவதைவிட நக்சல்/மாவோயிஸ்ட் சீர்குலைவுவாதிகளுக்கு ஆதரவாக திருப்புவது தமக்கு நல்லது என ஆளும் வர்க்கங்கள் கணக்கு போடுகின்றன.
எனவேதான் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக பல ஊடகங்கள் பக்கம்பக்கமாக செய்திகள் வெளியிடுகின்றன. பிரம்மாண்டமாக வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டைப் பற்றி எழுதாதவர்கள் மாவோயிஸ்டுகளை சிலாகிக்கின்றனர்.
இந்தியப்புரட்சியின் முன்னேற்றத்தில் இடது சீர்குலைவுவாதத்தை எதிர்த்து போராடியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்துள்ளது. அப்போராட்டத்தில் பல இன்னுயிர்களையும் இழந்துள்ளது. இடது சீர்குலைவு வாதத்திற்கு எதிரான போராட்டத்தை இடைவிடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தும், ஏனெனில் இப்போராட்டம் இந்தியப்புரட்சியின் முன்னேற்றத்தோடு பிரிக்கமுடியாத தொடர்பு கொண்டதாகும்.
Thanks: அ.அன்வர் உசேன்

நக்சல்பாரிகளிடம் கொள்கைத் தெளிவு இல்லை: உ.ரா.வரதராஜன்

கல்லூரிக் காலத்திலேயே அரசியல் ஈடுபாடு கொண்டவர். ரிசர்வ் வங்கியில் 17 ஆண்டுகள் பணிபுரிந்தவர். 69-ல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து தொடர்ந்து 40 வருடங்களாக கட்சிப்பணி ஆற்றி வருகிறார். 23 வருடங்களாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். சி.ஐ.டி.யு.அகில இந்தியச் செயலாளராக பல வருடங்கள் பணியாற்றியவர், தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக உள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தோம். நிதானமாகவும், தெளிவாகவும் பதில் அளித்தார். அதிலிருந்து…….

நீங்கள் பிறந்த சூழல் குறித்தும், கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தது குறித்தும் கூற முடியுமா?

வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய தந்தை ரயில்வே ஊழியராக இருந்தார். வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில் தான். சென்னை விவேகானந்தா கல்லூரியில் தான் பட்டப்படிப்பு முடித்தேன். 1967-ல் ரிசரவ் வங்கியில் பணியில் சேர்ந்தேன். அடுத்த 17 ஆண்டுகள் அங்குதான் பணி. அந்தக் காலங்களில் வங்கிப் பணியை செய்தேன் என்பதை விட தொழிற்சங்கப் பணியைச் செய்தேன் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

அங்குதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களோடு அறிமுகம் ஏற்பட்டது. 1969ல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தேன். அதற்கு முன்பே கல்லூரிக் காலங்களில் தமிழரசு இயக்கம் நடத்தி வந்த ம.பொ.சி.யோடு நெருக்கமான தொடர்பு இருந்தது. எனக்கு இருந்த ஆழ்ந்த தமிழ்ப்பற்று தான் இதற்கு காரணம்.

67ல் தேர்தலில் தியாகராயர் நகர் தொகுதியில் ம.பொ.சி.போட்டியிட்டபோது அவருக்காக வேலை செய்திருக்கிறேன். தமிழரசு இயக்கத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழரசு கழகம், தமிழரசு கட்சி என்று இரண்டாகப் பிரிந்த போது நான் தமிழரசு கட்சியில் இணைந்தேன்.

அப்போது காங்கிரஸ் கட்சியும் சிண்டிகேட், இண்டிகேட் என்று இரண்டாக உடைந்தது. தமிழரசு கட்சி சிண்டிகேட் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தமிழரசு கட்சியில் இருந்து விலகினேன். என்னுடைய சின்ன வயதிலேயே காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை நான் எடுத்திருந்ததால் இயல்பாகவே நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தேன்.

1984-ல் வங்கிப் பணியை விட்டுவிட்டு கட்சியில் முழுநேர ஊழியராக இணைந்தேன். கட்சியில் சென்னை நகர மாவட்டக் குழு உறுப்பினராகத் தொடங்கி இன்றைக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக பணியாற்றுகிறேன்.

இனி என்னுடைய வாழ்க்கை மார்க்சியப் பாதையில் தான் செல்ல வேண்டும் என்று நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கு குறிப்பிட்ட காரணம் ஏதாவது இருக்கிறதா?

தி.மு.க. திராவிட நாடு கோரிக்கையை எழுப்பியபோது ம.பொ.சி. அதற்கு எதிரான ஒரு நிலையை எடுத்திருந்தார். அதில் எனக்கு உடன்பாடு இருந்தது. அதே நேரத்தில் சுதந்திரத்தின் கொள்கைகள் அத்தனையும் காணாமல் போனதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று உறுதியாக நம்பினேன். அகில இந்திய அளவில் பார்க்கும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிதான் தேசிய அக்கறையோடு செயல்பட்டு வந்தது. அதனால் தான் என்னை மார்க்சிஸ்ட் கட்சியோடு இணைத்துக் கொண்டேன்.

இந்தியாவில் கம்யூனிசம் பரவத் தொடங்கி ஏறக்குறைய 100 ஆண்டுகள் நெருங்கிவிட்டது. நம் தமிழ்ச் சமூகத்திற்கு கம்யூனிஸ்டுகள் எந்த மாதிரியான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே கம்யூனிஸ்டுகள் தான் மொழிவாரி மாநிலக் கோரிக்கையை முன்வைத்தார்கள். ஆனால் சில விதிவிலக்கான தருணங்களைத் தவிர பெரும்பாலும் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே கம்யூனிஸ்டு இயக்கம் இருந்து வந்தது. அது சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது. கம்யூனிஸ்டு கட்சியின் ஜனநாயகப் பூர்வமான இயக்கம் இந்திய விடுதலைக்குப் பிறகு தொடங்கியது அல்லது முன்னுக்கு வந்தது என்று தான் சொல்ல முடியும்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகாவை உள்ளடக்கிய அன்றைய சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்டு கட்சி தான் காங்கிரசுக்கு பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. 1952 ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. ஆளுநரைப் பயன்படுத்தி அவர் மூலமாக ராஜாஜியை தமிழக மேலவைக்கு உறுப்பினராக நியமித்து மாணிக்கவேல் நாயக்கர் போன்றவர்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் மந்திரி சபையை அமைத்தது.

இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று தோழர் பி.ராமமூர்த்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை. ராஜாஜி முதலமைச்சராக நீடித்தார். பிரதான எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. அதன் தலைவராக பி.ராமமூர்த்தி இருந்தார். 57-ல் தான் முதன்முதலாக தி.மு.க.தேர்தலில் போட்டியிட்டது.

கம்யூனிஸ்டு இயக்கத்துக்குள்ளேயே இருந்த விரும்பத்தகாத மோதல்கள் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் அதன் இடத்தை பிடித்தது. அண்ணா அன்று வைத்த கோஷம் “சந்தா கம்யூனிஸ்டுக்கு, ஓட்டு கழகத்துக்கு” என்பது. தொழிற்சங்க அளவிலே கம்யூனிஸ்டுகள் பெரிய அளவில் வலுப்பெற்றிருந்த போதிலும் கூட அதிலேயிருந்து பிரித்து தொழிலாளர்களின் அரசியலை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக மாற்ற அண்ணாவால் முடிந்தது. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னுக்கு வந்து, கம்யூனிஸ்டுகள் பின்னுக்குச் செல்ல காரணமாக இருந்தது.

திராவிடர் கழகம் தமிழகத்தில் தோன்றிய பிறகு அரசியல் சட்டத்தைத் திருத்தியது, இட ஒதுக்கீடு, சுயமரியாதை திருமணச் சட்டம் போன்ற பல சமூக சீர்த்திருத்தங்கள் நடைபெற்றது. இதுபோல தமிழகத்திற்கு கம்யூனிஸ்டுகள் செய்த பங்கைப் பற்றி குறிப்பிட்டுக் கூற முடியுமா?

தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களை குறிப்பாக விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டியது எங்களது முக்கிய பணி. விவசாயத் தொழிலாளர் சங்கத்திலே இன்றைக்கும் நீடிக்கிற சாதீய ஒடுக்குமுறை அன்று மிகக் கடுமையாக இருந்தது. அந்தக் காலத்தில் கீழத் தஞ்சையிலே கம்யூனிஸ்டுகளுக்கு ‘தாழ்த்தப்பட்ட மக்கள் கட்சி’ என்று முத்திரையே குத்தப்பட்டது.

சமூக ஒடுக்குமுறையோடு சேர்த்து விவசாயிகளுக்கான பொருளாதாரக் கொள்கைகளையும் சேர்த்து தொடர்ந்து இயக்கங்களை கம்யூனிஸ்டு கட்சிதான் நடத்தியது. இயல்பாகவே நிலப்புரபுக்கள் காங்கிரஸ் கட்சியோடு ஐக்கியமாகியிருந்த சூழ்நிலையிலே காங்கிரஸ் ஆட்சிக்காலம் முழுவதும் கடுமையான அடக்குமுறையை கம்யூனிஸ்டு இயக்கம் சந்தித்தது. இதில் எண்ணற்ற எங்கள் ஊழியர்களை பறிகொடுத்தோம்.

நீதிக்கட்சியின் பாரம்பரியத்தில் இருந்து துண்டித்துக் கொண்ட பிறகுதான் திராவிட இயக்கம் தமிழ்நாட்டிலே காலூன்றி வளர முடிந்தது. நீதிக்கட்சி பாரம்பரியத்திலேயே பெரியார் தொடர்ந்திருந்தால் திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டிலே இத்தகைய செல்வாக்கை பெற்றிருக்காது. திராவிட இயக்கத்துக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இருக்கக்கூடிய பொதுவான அடிப்படை என்பது பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்விடுதலை, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்.

துரதிருஷ்டவசமாக பெரியார் காங்கிரஸ் மீதான கோபத்தின் காரணமாக இந்திய சுதந்திர நாளை துக்கதினமாக அனுசரித்தார். காங்கிரசின் செயல்பாட்டால் இத்தகைய முடிவுக்கு விரட்டப்பட்டார் என்றே சொல்லலாம். அங்கே நாங்கள் பெரியாரோடு மாறுபட்டோம். சுதந்திரத்தைப் பொறுத்தவரை இது அர்த்தமுள்ள சுதந்திரம் தானா என்ற கேள்வி கம்யூனிஸ்டு இயக்கத்துக்குள்ளேயே இருந்தது. இன்றைக்கும் நக்ஸலைட்டுகள் இயக்கம் ‘நாம் வாங்கியது உண்மையான சுதந்திரம் அல்ல, மறைமுகமாக காலனி ஆதிக்க நாடாகத் தான் இன்றைக்கும் இந்தியா இருக்கிறது’ என்று சொல்கிறார்கள்.

இதே கொள்கைக்குழப்பம் கம்யூனிஸ்டு இயக்கத்துக்குள் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்திலும் இருந்தது. இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு ஜனநாயகப் பாதையில் நடைபோடத் தொடங்கியதை ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்கு என்று நாங்கள் கருதினோம். அதன் வழியில் நாங்களும் செயல்படத் தொடங்கினோம். அந்த வழியில் தான் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை, விவசாயிகளை, தொழிலாளர்களை அணி திரட்டுகிற பணியில் வேகமாக செயல்பட்டோம். இன்றைக்கும் கம்யூனிஸ்டு இயக்கத்துக்கு அதுதான் அடிப்படையாக இருக்கிறது.

பெரியார் பற்றிப் பேசுவதால் இந்தக் கேள்வி. கம்யூனிஸ்டுகளை ஆதரித்து வந்த பெரியார் சாதியா, வர்க்கமா என்ற கேள்வி வந்தபோது ‘முதலில் ஒழிக்கப்பட வேண்டியது சாதிதான்’ என்றார். ஆனால் கம்யூனிஸ்டுகள் கடந்த 2000-த்திற்கு பிறகு தான் இந்த நிலைப்பாட்டை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். அதுவரை வர்க்கம் என்றே சொல்லி வந்தார்கள். ஏன் இந்த முரண்பாடு?

முதலில் ஒழிக்கப்பட வேண்டியது சாதியா, வர்க்கமா? என்ற கேள்வி கம்யூனிஸ்டு இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் இடையே ஒரு பெரிய விவாதமாக இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இதை தமிழ்நாட்டுப் பின்னணியில் மட்டும் பார்க்க முடியாது. இன்றைக்கு கம்யூனிஸ்டுகள் பெரிய செல்வாக்கோடு இருக்கக்கூடிய கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களில் சமூக இயக்கங்களுக்கு கம்யூனிஸ்டு கட்சி தான் தலைமை தாங்கியது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை துரதிருஷ்டவசமாக கம்யூனிஸ்டு இயக்கம் சமூக சீர்த்திருத்தத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. பெரியார் அந்த இடத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சாதியா, வர்க்கமா என்று வரும்போது சாதிதான் முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதும், வர்க்கம் ஒழிந்தால் சாதி தானாகவே அழிந்து விடும் என்பதும் போன்ற எதிரும் புதிருமான வாதங்கள் திராவிட இயக்கத்திற்கும், கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே இருந்தது.

ஆனால் 2000ம் ஆண்டு வாக்கிலே கம்யூனிஸ்டுகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள் என்று நீங்கள் சொல்வதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, சமூக விடுதலை போன்றவற்றில் பெரியாரோடு ஒன்றுபட்டோம் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டேன். கம்யூனிஸ்டு இயக்கம் தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்ட காரணத்தினால் சாதி ஒழிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. இந்தக் குறைபாட்டை நீக்குவதற்கு நாங்கள் முயற்சிகள் எடுத்து வந்திருக்கிறோம். இப்போது முழுமையாக அதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்டு கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு சினிமாவில் இருந்து திராவிடக் கட்சிகளுக்கு வந்த நடிகர்களும், அதனால் ஏற்பட்ட கவர்ச்சி அரசியலும் தான் காரணம் என்று சொல்லப்படுகிறதே, அது சரியா?

திராவிட முன்னேற்றக் கழகமோ, அதற்குப் பின்னால் வந்த அ.தி.மு.க.வோ இந்த அளவுக்கு வளர்ச்சி பெறுவதற்கு கவர்ச்சி அரசியல் தான் காரணம் என்று கூறி அவற்றின் பாத்திரத்தை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை. தமிழ், தமிழ்க்கலாச்சாரம் ஆகியவற்றின் பின்னணியில் அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் கலை உலகத்தோடு நெருங்கிய தொடர்பு உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பின்புலமாக இருந்தது திராவிட இயக்கப் பாரம்பரியம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இதே நிலை கேரளாவிலும் ஏற்பட்டது. பிரேம் நசீர் போன்ற நடிகர்கள் அரசியல் கட்சிகளைத் தொடங்க முயற்சித்தார்கள். ஆனால் அது அங்கே எடுபடவில்லை. என்.டி.ராமாராவ் வித்தியாசமாக ஆந்திராவில் வெற்றி பெற முடிந்தது. தமிழ்நாட்டில் கலைத்துறையோடு இவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு மக்களை ஈர்ப்பதற்கு உதவியது. ஆனால் அது மட்டும் அவர்கள் வளர்ச்சிக்குக் காரணம் கிடையாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப கட்டத் தலைவர்கள் அனைவரும் பத்திரிகை நடத்தினார்கள். தங்களது எழுத்தால், பேச்சால் ஏராளமான தமிழ்மக்களை தங்கள் பால் ஈர்த்தார்கள். அதுதான் அவர்களது வளர்ச்சிக்கு, 67-ல் கிடைத்த தேர்தல் வெற்றிக்கு அடிப்படை. வெறும் சினிமா கவர்ச்சி என்றோ, வெறும் கலையுலக அரிதாரப் பூச்சு தான் வளர்ச்சிக்கு காரணம் என்றோ ஒதுக்கிவிட முடியாது.

திராவிடக் கட்சிகள் மிகக் குறுகிய காலத்தில் அடைந்த வெற்றியை ஏன் கம்யூனிஸ்டு இயக்கத்தால் சாதிக்க முடியவில்லை?

இதற்கு பல காரணங்களை சொல்ல முடியும். ஒன்று கம்யூனிஸ்டு இயக்கத்திலே இடையறாது நடந்து வந்திருக்கிற தத்துவார்த்த சண்டைகள். இதன் விளைவாக நிகழ்ந்த அடுத்தடுத்த பிளவுகள். இதில் ஏதோ ஒரு பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது அல்லது மக்களால் நிராகரிக்கப்பட்டது என்று சொன்னால் அது ஏதோ அந்த மக்களையோ குறிப்பிட்ட பிரிவின் தலைவர்களையோ மட்டும் பாதிக்கவில்லை. செங்கொடி இயக்கத்தையே முழுமையாக பாதித்தது.

உதாரணமாக மும்பையில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்டு கட்சி மிகுந்த செல்வாக்கோடு விளங்கியது. மறைந்த தோழர் எஸ்.ஏ.டாங்கே அங்கு தலைவராக இருந்தார். அவரோடு நாங்கள் வேறுபட்டோம். தத்துவார்த்த சண்டையெல்லாம் நடந்தது. இதனால் அங்கு கம்யூனிஸ்டு கட்சி பின்னடைவை சந்தித்தது. அங்கு நடைபெற்ற தவறுகள் டாங்கேவை மட்டுமல்ல செங்கொடி இயக்கத்தையே பாதித்தது.

தொடர்ந்து செங்கொடி இயக்கத்துக்குள் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக நக்சல்பாரி இயக்கங்கள் தோன்றியது. நக்சல்பாரி இயக்கத்துக்குள்ளும் பின்னால் பல பிரிவுகள் தோன்றியதன் விளைவாக ஏராளமான சிறு சிறு குழுக்களாக அவர்கள் உடைந்து போனார்கள். இந்தப் பிளவுகளின் காரணமாக கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் தங்களுக்குள்ளேயே பரிமாற்றங்களை நடத்திக் கொண்டிருந்தார்களே தவிர அதற்கு அப்பாற்பட்ட மக்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்த முடியாத ஊனம் ஏற்பட்டது.

இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சி மாநிலத்திற்கு ஒரு கொள்கையை கடைப்பிடிக்கிறதா? சேலம் ரயில்வே கோட்டமாகட்டும், முல்லைப் பெரியாறு விஷயமாகட்டும், கேரள அரசின் முடிவுகளுக்கு எதிராக தமிழக கம்யூனிஸ்டுகள் எந்தவொரு உறுதியான நிலைப்பாட்டையும் எடுப்பதில்லையே?

இப்படி குறிப்பிட்ட பிரச்சனைகளை மட்டும் எடுத்துக் கொண்டால் முரண்பாடுகள் நிலவுவது போலத் தெரியும். ஆனால் பிரச்சனையே சுதந்திரத்திற்குப் பின்னால் காங்கிரஸ் கட்சி சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கத் தவறியது தான். காங்கிரஸ் கட்சி தான் ஏற்றுக்கொண்ட மொழிவாரிப் பிரிவினையை அமுல்படுத்தியிருந்தால் ஸ்ரீராமலு ஆந்திராவிலும் சங்கரலிங்கனார் தமிழகத்திலும் உயிரிழக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

தமிழகத்திற்கும் ஆந்திராவிற்கும் இருக்கக்கூடிய எல்லைப் பிரச்சனை என்பது ‘பட்டாஷ்கர் கமிஷன்’ தீர்ப்போடு முடிந்து விட்டது. தேவிகுளம், பீர்மேடு கேரளாவிற்குப் போனது நாஞ்சில் நாடு நம்மோடு வந்தது. திருத்தணியோடு எல்லை நின்று போய் திருப்பதி ஆந்திராவிற்கு சொந்தமானது. ஆனால் கர்நாடகாவிற்கும், மகாராஷ்டிராவிற்கும் இடையேயான எல்லைப் பிரச்சனை இன்னமும் தொடர்கிறது.

சுதந்திரம் கிடைத்த பத்தாண்டுகளில் இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். தீர்வு காணப்படாததால் மாநில வாரியான உணர்வுகள் பெருக்கெடுத்து விட்டன. அகில இந்திய அளவிலே செயல்பட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி 67-ல் உடைபட்டபோது பல்வேறு வட்டாரக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் தோன்றின.

காங்கிரஸ் உட்பட தேசியக் கட்சியாக செயல்பட வேண்டிய கட்சிகள் இந்த மாநில, வட்டாரக் கட்சிகளை எதிர்கொள்வதற்காக மாநில உணர்வுகளுக்குத் தூபம் போட வேண்டியதாயிற்று. ஒரு காலகட்டம் வரைதான் கம்யூனிஸ்டுகளால் இதை எதிர்த்துப் போராட முடிந்தது. அதற்குப் பிறகு கம்யூனிஸ்டுகளும் இதை சந்திக்க வேண்டியிருந்தது.

மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு அகில இந்திய அளவில் தேசிய நோக்கோடு தீர்வு காணும் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும் பிற கட்சிகளும் இதில் குறுகிய கண்ணோட்டத்தோடு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபட்டன. இதனால் எங்களது முயற்சி பலனளிக்காமல் போனது. அதன் விளைவுதான் நாம் இன்றைக்கு சந்திக்கக் கூடிய பிரச்சனைகள்.

ஆந்திராவோடு பாலாற்றில் தடுப்பணை கட்டக்கூடிய பிரச்சனை, கர்நாடகாவோடு என்றும் தீராத காவிரிப் பிரச்சனை, கேரளாவோடு முல்லைப் பெரியாறு, சேலம் கோட்டம், நெய்யாறு போன்ற பிரச்சனைகள். இதற்கு எங்களது கட்சியின் அகில இந்தியத் தலைமை இரண்டு மாநிலக் கம்யூனிஸ்டு தலைவர்களோடு பேசி இரண்டு மாநில மக்களிடையே மோதல் வந்துவிடாமல் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறது.

சேலம் கோட்டப் பிரச்சனையை எடுத்துக்கொண்டால் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே, கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கேரள மார்க்சிஸ்ட் எம்.பி.சுரேஷ் தெளிவாகச் சொன்னார். ‘சேலம் கோட்டம் அமைவதிலே எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த முடிவை தன்னிச்சையாக எடுக்காமல் பாலக்காடு கோட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம், அவர்களது பிரச்சனை என்ன, கோட்டம் பிரிப்பதால் இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் தாக்கங்கள் என்ன என்பது பற்றி பரிசீலனை நடத்திவிட்டு இதைச் செய்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்’ என்றுதான் குறிப்பிட்டார்.

அந்தப் பரிசீலனை நடத்தப்பட்டிருந்தால் ரயில்வே அமைச்சகத்திலேயே அமைச்சர் ஒரு நிலையும், இணை அமைச்சர் இன்னொரு நிலையும் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதுபோன்ற பிரச்சனைகளில் தேசிய நலனை முன்னிறுத்தி இரண்டு மாநில மக்களிடையே இது மோதலாக மாறக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் தான் மார்க்சிஸ்ட் கட்சி செயல்பட்டு வந்திருக்கிறது. ஆனால் தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ், பி.ஜே.பி. போன்றவை இந்த நோக்கில் செயல்படவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது.

சேலம் கோட்டம் பிரச்சனை தொடர்பாக சமீபத்தில் கேரள எம்.பி.க்கள் சீதாராம் யெச்சூரி தலைமையில் பிரதமரை சந்தித்துப் பேசினார்கள். இதே பிரச்சனை தொடர்பாக தமிழக எம்.பி.க்களும் பிரதமரை சந்தித்தனர். ஆனால் இந்தக் குழுவில் தமிழக மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம்? இந்தப் பிரச்சனையில் தமிழக மார்சிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன?

தமிழக எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்தபோது எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதனால் தான் எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை.

சமீபத்தில் கேரள எம்.பி.க்கள் சீதாராம் யெச்சூரி தலைமையில் பிரதமரை சந்தித்தது சேலம் கோட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ஏற்கனவே இருக்கக்கூடிய கேரளத்தின் கோரிக்கையான, கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட தென்மேற்கு ரயில்வே மண்டலம் ஒன்று அமைய வேண்டும் என்ற கோரிக்கைக்காகத்தான்.

இந்த விஷயத்தை கடந்த செப்டம்பர் 4ம் தேதி சென்னை வந்த எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் தமிழக முதல்வரை சந்தித்து தெளிவுபடுத்தினார். சேலம் கோட்டம் அமைவதில் அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும், கேரளாவிலும் மார்க்சிஸ்ட்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது தான் உண்மை.

இலங்கையில் நடைபெறும் ஈழப் போராட்டம், அங்கு ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் பெரும் மௌனம் சாதிக்கிறார்கள். குறைந்தபட்சம் தமிழக மார்க்சிஸ்ட் தலைவர்களாவது தமிழ் உணர்வோடு இது குறித்துப் பேசியிருக்கலாமே?

தமிழ் உணர்வு என்பது வேறு. இலங்கைப் பிரச்சனை என்பது வேறு. இந்தியாவில் எப்படி நாங்கள் பிரிவினையை ஆதரிக்கவில்லையோ, அதே போல் இலங்கை பிளவுபடுவதையும் நாங்கள் விரும்பவில்லை. இதுதான் காலங்காலமாக எங்களின் நிலைப்பாடு.

1980-களிலே இந்தப் பிரச்சனை உச்சத்திலே இருந்தபோது தமிழக மார்க்சிஸ்ட் ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. இலங்கைத் தமிழர்களின் நலன்கள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதற்கான தீர்வு என்பது ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி அதிகாரங்களைக் கொண்ட தமிழ் மாகாணங்கள் அமைவது தான் என்பதை தெளிவாகச் சொன்னோம்.

அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தலைமையிலே தமிழக அரசியல் கட்சிகள் ஒரு குழுவாகச் சென்று பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தார்கள். இந்தியா தனது ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தமிழீழத்தை பிரித்து ஈழத்தமிழர்களிடம் கொடுத்து விட்டு இந்தியா வர வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கையாக இருந்தது.

அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்டுகளுக்கு இந்தக் கோரிக்கையில் உடன்பாடில்லை. எங்கள் இயக்கத் தலைவராக இருந்த தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் இந்திராகாந்தியை தனியாக சந்தித்து இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பினால் தெற்காசிய மண்டலத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகும். இது ஏகாத்திபத்திய தலையீட்டுக்கு வழிவகுக்கும். எனவே இந்தியா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக இதற்கு முடிவுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார். அன்றிலிருந்து இன்றுவரை அதே கொள்கையைத் தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

கையில் ஆயுதங்களோடு தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிங்கள அரசோடு சமாதானமாக வாழச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? அங்கு அரசியல் தீர்வு எப்படி சாத்தியம்?

தமிழர்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்கிறது என்பதும் சிங்கள இனவெறி உச்சத்தில் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். ஆனால் சிங்களர்கள் அனைவரும் இனவெறியர்கள், தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதிலும், தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் என்று சொல்வதிலும் உண்மையில்லை.

இலங்கையில் ஏராளமான ஈழப் பாதுகாப்பு இயக்கங்கள் இருந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் அதன் தலைவர்களுக்கு எதிராக வன்முறையைத் தொடுத்தார்கள். சிங்களர்களால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இணையாகவோ கூடுதலாகவோ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையும் இருக்கும். இதில் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் அடங்குவர்

ஆகவே பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்பதையோ, ஒன்றுபட்ட இலங்கைக்கு உட்பட்டு தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது போன்ற வாதங்களையோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏற்கவில்லை. அது தமிழர்களின் நலன்களை பாதிக்கக்கூடிய ஒரு இடத்திற்குத் தான் கொண்டு செல்லும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.

தமிழகப் பிரச்சனைக்கே வருவோம். ஏற்கனவே பேசும்போது நாத்திகம், சுயமரியாதை போன்றவற்றில் திராவிடக் கட்சிகளோடு கம்யூனிஸ்டுகள் ஒன்றுபடுவதாகக் கூறினீர்கள். திராவிடக் கட்சிகள் அளவிற்கு கம்யூனிஸ மேடைகளில் நாத்திகம் அதிகம் பேசப்படுவதில்லையே ஏன்?

நான் பகுத்தறிவு, சுயமரியாதை போன்றவற்றில் பெரியாரோடு ஒன்றுபடுவதாக குறிப்பிட்டேன். நாத்திகம் என்று குறிப்பிடவில்லை. வறட்டுத்தனமான நாத்திகம் சாதாரண மக்களின் உணர்வுகளுக்குப் புரியாத ஒன்று. பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தார். அவர் ஒரு சிலையை உடைத்ததன் விளைவாக இன்று ஒவ்வொரு தெருவிலும் பிள்ளையார் கோவிலைப் பார்க்கிறோம்.

தமிழகத்தில் முருகன் தான் தமிழ்க்கடவுள். எங்கிருந்தோ வந்த பிள்ளையாருக்கு இங்கு இத்தனை கோவில்கள் வந்தது எப்படி என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். பகுத்தறிவு என்பது தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். மக்களைத் தெளிவுபடுத்தி அறிவு பெறச் செய்து அதன்பிறகு பகுத்தறிவு கொள்கைகளை சொல்லித் தர வேண்டும்.

திராவிட இயக்கத்தில் இருந்து எங்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள், ‘கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேரலாம் என்கிறீர்களே, இது என்ன கட்சி’ என்று. கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கம்யூனிஸ்டு கட்சிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேரலாம். ஆனால் கட்சியில் சேர்ந்த பிறகு கட்சி அலுவலகத்தையோ அதன் கிளைகளையோ பஜனை மடமாக ஆக்க முடியாது. அவர்கள் படிப்படியாக தங்கள் நம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு வர முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியிருக்கிறோம்.

அவர்களிடம் போய் நீ நாத்திகனாய் இருந்தால் தான் அரசியல் இயக்கத்துக்கே வரலாம் என்று முன் நிபந்தனை விதிப்பதை கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்டுகள் தங்கள் வாழ்க்கையில், செயல்பாட்டில் பகுத்தறிவையும் கடவுள் மறுப்பையும் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது கம்யூனிஸ்டு கட்சிகளின் உறுதியான நிலைப்பாடு. அதே நேரத்தில் இந்துத்துவத்திற்கு அடிப்படையாக உள்ள இந்துமதத்தை அழிக்காமல் இந்துத்துவத்தை எதிர்ப்பது எப்படி சாத்தியம்?

இந்து மதம் என்பது வேறு. இந்து மதத்தை பயன்படுத்தி வகுப்புவாதத்தை ஊக்குவிப்பது என்பது வேறு. இஸ்லாமிய நம்பிக்கை என்பது வேறு. முஸ்லிம் பயங்கரவாத குழுக்களின் செயல்பாடு என்பது வேறு. அல்கொய்தா தான் இஸ்லாமியம் என்று நினைத்தால் இஸ்லாம் இந்த மண்ணில் இருந்தே அழிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு நாம் போய்விடுவோம்.

அதுபோல் தான் ஆர்.எஸ்.எஸ். தான் இந்துமதம் என்று நினைக்கக் கூடாது. அவர்கள் போலி இந்துத்துவா பேசுகிறார்கள். மக்களின் மத உணர்வுகளை அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள். அதை எதிர்த்து நாங்கள் உறுதியாக போராடுகிறோம். அடுத்தவர் மனதைப் புண்படுத்தாமல் தங்கள் மதத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதிலே எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை.

கம்யூனிஸ்டு கட்சிக்குள் இருப்பவர்கள் நிலைப்பாடு வேறு. ஆனால் வெளியில் உள்ள பொதுமக்களைப் பற்றி பேசும்போது அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறோம். இதில் உறுதியான நிலைப்பாடு எடுக்க முடியாததற்கு சுதந்திரத்திற்குப் பிறகு வந்த அரசியல் கட்சிகள், மதச்சார்பின்மை என்ற நிலைப்பாட்டிற்குப் பதிலாக சர்வ மத ஒற்றுமை என்ற நிலைப்பாட்டை எடுத்தது தான் காரணம்.

காந்தி ‘ரகுபதி ராகவ ராஜாராம் ஈஸ்வர அல்லா தேரேநாம்’ என்ற பாடலை சர்வமத ஒற்றுமைக்காக பயன்படுத்துவார். எல்லா வானொலி, தொலைக்காட்சியிலும் ஒரு இந்துப்பாடல், கிறிஸ்தவ பாடல், இஸ்லாமியப் பாடலோடு நிகழ்ச்சிகளைத் தொடங்குவார்கள். அப்படி அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டிய இடத்திலே மதத்தை கொண்டு வந்து நிறுத்தியது தான் ஆர்.எஸ்.எஸ்.க்கு விதைநெல்லாகப் பயன்பட்டது. அதை வைத்து அவர்கள் மதவெறியை ஊட்டி, வகுப்புவாதத்தைத் தூண்டினார்கள்.

அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளை எதிர்க்கும் நாங்கள் இந்துமத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் எழுதுவதோ, பேசுவதோ, செயல்படுவதோ இல்லை.

இந்துமதம் தன்னளவிலேயே ஏராளமான பிற்போக்குத்தனங்களையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் தானே கொண்டுள்ளது. நால்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்டது தானே இந்துமதம்?

மகாத்மா காந்தி வருணாசிரமத்தில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தார். இதில் நாங்கள் காந்தியுடன் வேறுபட்டோம். அதை நாங்கள் இன்னமும் தொடர்கிறோம். வருணாசிரமம் இருக்கும் வரை தாழ்த்தப்பட்டவர்கள் விடுதலை சாத்தியமில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை.

வருணாசிரம தர்மத்தை எதிர்ப்பது என்பது வேறு, இந்துமத நம்பிக்கைகளையே கேள்வி கேட்பது என்பது வேறு. துரதிருஷ்டவசமாக இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா கட்சிகள் அவர்களின் வர்ணாசிரம தர்மத்தை திரை போட்டு மறைத்து விட்டு இந்துக்கள் அனைவரையும் ஒரே அணியில் திரட்ட முடியும், வாக்குகளை வாங்க முடியும் என்ற நோக்கிலே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் நிலைப்பாடு மனு தர்மத்தின் அடிப்படையிலானது. மனு தர்மம், வருணாசிரம தர்மத்தை நிராகரிக்கும் நாங்கள், இந்துமதம் தான் மனுதர்மம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் என்பது பார்ப்பனீயத்திற்கு எதிரானது. ஆனால் அந்த இயக்கங்களையும் வழிநடத்தும் தலைவர்களாக பார்ப்பனர்களே இருக்கின்றனர். கம்யூனிஸ்டு இயக்கங்களிலும் அது தொடர்கிறது. எங்கே போனாலும் பார்ப்பனர்கள் தான் மேலே இருக்க வேண்டும் என்ற மனுதர்ம விதிதான் இங்கும் செயல்படுகிறதா?

கம்யூனிஸ்டு இயக்கத்தின் மீது நீங்கள் வைக்கும் இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். ஒரு காலத்தில் சென்னையில் இது பார்ப்பான் கட்சி, மலையாளத்தான் கட்சி. கீழத் தஞ்சைக்குப் போனால் இது பள்ளன், பறையன் கட்சி. கம்யூனிஸ்டு கட்சி உருவானதின் பின்னணியிலே தான் இந்த இயக்கத்தின் தலைவர்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தை மட்டும் குற்றம் சொல்வது சரியல்ல. காங்கிரஸ் தேசிய இயக்கத்திலும் தலைவர்களாக சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற பார்ப்பனர்கள் தான் இருந்தார்கள்.

நாங்கள் எல்லாப் பிரிவுகளையும் உள்ளடக்கிச் செல்ல வேண்டும், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்குத் தலைமைப் பதவிகளைத் தரவேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம். அதை முழுமையாக செயல்படுத்த சிறிது காலம் பிடிக்கும்.

தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோர் பெரும்பாலும் கல்வி, கலாச்சார குறியீடுகளில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது சுலபத்தில் நடந்து விடுவதில்லை. ஏற்கனவே முன்னேறிய சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு நெருக்கமாக இருக்கிறது. அதனால் அவர்கள் தலைமைப் பதவிகளுக்கு சீக்கிரம் வந்துவிடுவது பொதுவாக நடக்கக் கூடிய ஒன்றுதான். இதை வைத்துக் கொண்டு கம்யூனிஸ்டு இயக்கத்தில் சனாதனிகள் தான் தலைமைப் பொறுப்பு வகிக்கிறார்கள் என்று சொல்வது சரியல்ல.

எங்கள் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையை சாதி அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால் தமிழகத்து சாதி விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தான் இங்கும் இருப்பார்கள் என்பது தெரியும்.

நீங்கள் பன்னாட்டு நிறுவனங்களைக் கடுமையாக எதிர்க்கிறீர்கள். இதை உங்கள் கட்சி உறுப்பினர்கள் அப்படியே பின்பற்றுகிறார்கள். ஆனால் ‘நாம் ஏன் எதிர்க்கிறோம்’ என்கிற தெளிவான அறிவு அவர்களிடம் இருக்கிறதா? அண்மையில் உங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் பேசியபோது ‘பி.பி.ஓ. என்றால் என்ன’ என்பதுகூடத் தெரியவில்லை. அது என்னவென்பது கூடத் தெரியாமல்…

(இடைமறித்து) இருக்கலாம். 123 ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். நடிகரும், பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவருமான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ‘இது வாஜ்பாயின் அணுகுண்டுக்கு எதிரானது’ என்று கருத்து சொல்லிவிட்டுப் போனார். எதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது.

அடிமட்டத்தில் இருப்பவர்களை அரசியல் கட்சிப் பொறுப்புக்கு உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது. அப்படி உயருகிறபோது அவர்கள் எல்லாவிதமான அறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அதீதமானது. அவர்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது வேறு. தெரிந்த பிறகு தான் சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ ஆக முடியும் என்பது வேறு.

பொதுவாகவே இந்த நாட்டில் ஒரு போக்கு தென்படுகிறது. அரசியல்கட்சிகளை, அரசியல்வாதிகளை சிறுமைப்படுத்தி ஈனப்பிறவிகளாக காட்டக்கூடிய ஒரு போக்கு ஊடகத்திலே மலிந்து கிடக்கிறது. அது தவறு. தமிழ்நாட்டில் எங்கள் கட்சி உறுப்பினர்களில் 30 சதவீதம் பேர் கல்வியறிவில்லாதவர்கள். ஐந்தாவது வகுப்பைக் கூடத் தாண்டாதவர்கள்.

அவர்களுக்கு உலக வர்த்தக மைய பாதகங்களையோ, 123 ஒப்பந்தத்தையோ விளக்குவது என்பது சிக்கலான காரியம். மற்றக் கட்சிகளோடு ஒப்பிடும்போது மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வரை அரசியல் விழிப்புணர்வில் மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பது பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை. ஆனாலும் சில குறைகள் இருக்கலாம். அதை உணர்ந்திருக்கிறோம். விரைவில் அது சரிசெய்யப்படும்.

இடஒதுக்கீடு சமகாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனை. இதில் கிரிமிலேயருக்கு இடமில்லை என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றின் தமிழ் மாநில அமைப்புகள் தெளிவாக கூறிவிட்டன. ஆனால் அகில இந்திய அளவில் மார்க்சிஸ்டுகள் இதை ஏற்றுக்கொள்வில்லை. இந்த ஒற்றுமையின்மைக்கு என்ன காரணம்?

இட ஒதுக்கீட்டில் எங்கள் கட்சியின் அகில இந்திய நிலைப்பாட்டை ஒட்டித்தான் நாங்கள் எங்கள் முடிவுகளை எடுக்கிறோம். கிரிமிலேயர் என்பது பிற்படுத்தப்பட்ட பிரிவுலேயே வசதி படைத்தவர்களை தனியாகப் பிரிக்க வேண்டும் என்பது. பீகார் முதல்வராக இருந்த கர்பூரி தாக்கூர் தான் இதை முன்மொழிந்தார். பீகாரில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எம்.ஜி.ஆர்.ஆட்சிக் காலத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஒரு கோரிக்கை வைத்தார். ‘இட ஒதுக்கீடு என்பது பொதுவாக இருக்கிறது, இதன் பயனை தலித்துகள் அனுபவித்து விட்டார்கள். பிற்படுத்தப்பட்டவர்களில் பின் தங்கியவர்களான வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு இன்னமும் கிடைக்கவில்லை’ என்று. தி.மு.க. ஆட்சியிலே வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

கிரிமிலேயர் எதிர்ப்பு என்பது எங்களால் விளங்கிக் கொள்ள இயலாத ஒன்றாக இருக்கிறது. நாங்கள் தெளிவாக ஒன்றைச் சொல்கிறோம். கிரிமிலேயர் இருந்தாலும் கூட, தலித்துகளுக்கு எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு இந்த கிரிமிலேயர் பாகுபாடு கூடாது. அதற்கு சாதி அடிப்படையில் தான் ஒதுக்கீடு தொடர வேண்டும். பிற்படுத்தப்பட்ட்வர்களுக்கு கிரிமிலேயரை அமுல்படுத்தும்போதும் அது அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுப்பதிலே போய் முடியக்கூடாது.

முதலில் பிற்படுத்தப்பட்டவர்களில் மிகவும் பின் தங்கியவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அவர்களில் இல்லையென்றால் பிற்படுத்தப்பட்டவர்களில் கிரிமிலேயர் பிரிவினருக்கு அது போய்ச் சேரட்டும். பிற்படுத்தப்பட்டோர் இடத்தில் இருந்து ஒன்று கூட கிரிமிலேயர் என்ற பெயரில் பிற்படுத்தப்பட்டோர் அல்லாத பொது பிரிவினருக்கு போகக்கூடாது என்பதிலே உறுதியாக இருக்கிறோம். இதை ஏற்றுக் கொள்வதிலே இட ஒதுக்கீடு ஆதரவாளர்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்பது விளங்காத ஒன்றாகத் தான் இருக்கிறது.

விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் தலை இருக்கிறவர்கள் எல்லாம் தலைவர்களாகி விடுகிறார்கள். விஜயகாந்த், சரத்குமாரின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமீபத்தில் விஜயகாந்த் தன்னுடைய பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்தார். அதனால் மட்டும் வறுமை ஒழிந்து விடுமா? வறுமையை ஒழிப்பதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை வைத்துத்தான் மக்கள் அவரைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம், ரிலையன்ஸ் ப்ரெஷ் கடைகள் உள்ளிட்ட பிரச்சினைகளில் மாநில அரசை பாமக கடுமையாக எதிர்க்கிறது.. ஆனால் அரசுக்கு எதிராக சிபிஎம் எந்தவொரு போராட்டமும் நடத்துவதில்லையே, ஏன்?

பா.ம.க.வைப் பற்றிய உங்களின் மதிப்பீடு அப்படி இருக்கலாம். நாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் அடிப்படையில்தான் அரசின் கொள்கைகளை நாங்கள் பார்க்கிறோம். இன்னொரு கட்சியைப் பின்பற்றி நடக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பா.ம.க.தலைவர் ஜி.கே.மணியை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தமிழோசையில், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக தொடர்ச்சியாக தலையங்கம் எழுதப்பட்டு வருகிறது.

அணுசக்தி ஒப்பந்தம் மூலம் மன்மோகன் சிங் நாட்டை வல்லரசாக்க முயற்சிக்கிறார், கட்டுமானத்தை வலுவாக்க முயற்சி செய்கிறார் என்று அதில் எழுதுகிறார்கள். அதுதான் மன்மோகன் சிங் செய்துகொண்டிருக்கும் காரியமா? 123 ஒப்பந்தத்தை தி.மு.க.கூட அவ்வளவு ஆதரிக்கவில்லையே, ராமதாஸ் செய்வது ஏன்?

மன்மோகன் சிங்கின் கொள்கைகள் எல்லாம் சிறந்தவை என்றால் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ராமதாஸ் ஏன் எதிர்க்கிறார்? மன்மோகன் ஆட்சி கொண்டு வந்தது தானே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, அதையும் ஆதரிப்பாரா மருத்துவர் ராமதாஸ்?

மத்தியில் ஆட்சியில் பங்கு இருக்கிறது, அதனால் அனைத்து திட்டங்களையும் ஆதரிக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு இல்லை, அதனால் அரசை விமர்சித்து வருகிறார்கள். இது அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கலாம். அதே அளவுகோலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் விவகாரத்தில் ராமதாஸ் எதிர்ப்புக்குரல் எழுப்பிய போது, தமிழக முதல்வர் சொன்ன பதில் இதுதான். ‘இது நீங்களும் நானும் சேர்ந்து டெல்லியில் மத்திய அமைச்சரவையில் கேட்க வேண்டிய கேள்வி’ என்று சொன்னார். கேட்டாரா ராமதாஸ்? அது மட்டுமல்ல மத்திய அரசு எடுக்கும் எல்லா முடிவுகளும் அமைச்சரவை கூடி முடிவு செய்யும் விஷயம் தானே. இதில் எந்த முடிவுகளிலாவது மத்திய அமைச்சர் அன்புமணி தலையிட்டு, ‘வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார் என்று பத்திரிகைகளிலாவது செய்தி படித்ததுண்டா? அல்லது ஏதாவது கிசுகிசுவாவது கசிந்ததுண்டா? ஆகவே அந்த அளவுகோலை வைத்து எங்களை ஏன் மதிப்பிடுகிறீர்கள்?

உங்களை அவர்களோடு ஒப்பிடவில்லை. அரசை நீங்கள் விமர்சிப்பதில்லையே என்பது தான் கேள்வி…

கடுமையாக விமர்சித்திருக்கிறோம். சென்னை மாநகராட்சித் தேர்தலில் எங்கள் அளவுக்கு யாராவது விமர்சித்தார்களா? அதில் பாட்டாளி மக்கள் கட்சி பயனாளியாக இருந்தது, அதனால் வாய்மூடிக்கொண்டு மௌனமாக இருந்தார்கள். கூட்டுறவு தேர்தலில் பயன் கிடைக்கவில்லை. அதனால் வாய் திறந்தார்கள். நாங்கள் தான் எல்லாவற்றையும் சரியாக விமர்சித்தோம்.

கடந்த அ.தி.மு.க.தேர்தலில் பொன்னையனின் நிதிநிலை அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு 50 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக சொன்னீர்களே, அது எங்கே போயிற்று என்ற கேள்வியையும் நாங்கள் தான் கேட்டோம். வீட்டுமனைப் பட்டாவிற்கான இயக்கத்தை நடத்துவதும் நாங்கள் தான். அருந்ததியர் மக்களுக்காக நாங்கள் போராடுகிறோமே, பா.ம.க. வாய் திறந்ததா? அரசியல் ஆதாயங்கள், வாக்கு வங்கி அடிப்படையில் நாங்கள் பிரச்சனையைப் பார்ப்பதில்லை.

இந்த ஆட்சி கடந்த ஆட்சியை விட வேறுபட்ட முறையிலே செயல்படுகிறது என்பதைப் பார்க்கிறோம், பதிவு செய்கிறோம். இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தவறிழைக்கிறபோது கடுமையாகக் கண்டிக்கிறோம்.

இட ஒதுக்கீடாகட்டும், இன்னபிற சமூக விஷயங்களாகட்டும் அதற்கு எதிரான ஒரு நிலலயைத் தான் உச்சநீதிமன்றம் தொடச்சியாக எடுத்து வருகிறது. இதனால் தான் பெரியாரும் தனி நாடு கோரிக்கையை முன்வைத்தார். உச்சநீதிமன்றத்தின் இந்தப் போக்கு, தமிழ்த்தேசிய கோரிக்கை இவை இரண்டையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த பொருளாதார தாராளமய உலகில் நீதித்துறையும் அதே போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது கவலையளிக்கக் கூடிய விஷயம். நம் நாட்டில் நீதிமன்றங்களின் தலையீடு எல்லா இடத்திலும் வரம்பை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சராக, மாநில ஆளுநராக இருந்த பூட்டாசிங், அரசு வீட்டைக் காலி செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. நீதிபதி ‘தூக்கியெறியுங்கள் அவரை (throw him out)’ என்று பதில் சொல்கிறார். ஒரு நீதிபதியின் கண்ணியமான செயல்பாடா அது?

‘எய்ம்ஸ்’ மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக வழக்கு. பட்டமளிப்பு விழாவை உடனடியாக நடத்துங்கள் என்று சொல்ல நீதிபதிக்கு உரிமை உண்டு. ஆனால் ‘24 மணிநேரத்திற்குள் கையெழுத்திடுங்கள்’ என்று மத்திய அமைச்சருக்கு நீதிமன்றம் தாக்கீது பிறப்பிப்பது என்ன நியாயம்? நீதிமன்றம் தங்கள் உயரத்தை வரையறை செய்துகொண்டு செயல்பட வேண்டும். நீதிமன்றத்தை விட மேலானது மக்கள் மன்றம். அந்த மக்கள் மன்றத்துக்கு நாடாளுமன்றம் எப்படி பணிந்து நடக்க வேண்டுமோ அப்படித்தான் நீதிமன்றமும் நடக்க வேண்டும்.

அதேபோல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதன் மூலம் நீதிமன்றத்தின் தவறான தீர்ப்புகளை திருத்த முடியும். உதாரணமாக வேலை நிறுத்த உரிமை. நீதிமன்றத்தை எதிர்த்து சட்டம் இயற்ற வேண்டும் என்று 2004 முதல் வலியுறுத்தி வருகிறோம். அரசு சட்டம் இயற்ற மறுத்து வருகிறது.

இந்த தாரளமயச் சூழ்நிலையில் தமிழ்நாடு தனிநாடு ஆகிவிட்டால் மட்டும் நீதிமன்றம் சரியாக இயங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. அது ஒரு பிரமை அவ்வளவு தான். இப்படிப்பட்ட நீதிமன்ற தலையீட்டுப் பிரச்சனைகள் கியூபா, சோவியத் யூனியன் போன்ற எந்த நாட்டிலும் எழவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் முதலாளித்துவ அமைப்பு. இந்த முதலாளித்துவ அமைப்பு உலகமய பொருளாதாரத்தை தழுவுவதன் வாயிலாக ஏற்படக் கூடிய சிதைவுகள். அதன் ஒரு பகுதியாகத் தான் நீதிமன்றம் செயல்படுகிறது. இதற்கு தனிநாடு தீர்வாக முடியாது.

நக்சல்பாரி இயக்கங்களின் செயல்பாடுகள் மீது மார்க்சிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன?

நக்சல்பாரி இயக்கங்களின் செயல்பாடுகள் கம்யூனிஸ்டு இயக்கத்தை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் இந்திய மக்களின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. சீனத்தின் மகத்தான தலைவர் மாவோவின் கோஷங்களை அவர்கள் முன்வைத்தார்கள். சீன கம்யூனிசத் தலைவர்களே நக்சல்பாரி இயக்கத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, ‘மாவோவின் செயல்பாடுகள் இந்திய நாட்டிற்கு ஒத்துவராது’ என்று சொன்னதாக எங்களுக்கு தகவல் உண்டு.

நக்சல்பாரிகளிடம் கொள்கைத் தெளிவு இல்லாதது தான் அவர்கள் இப்படி தனித்தனிக் குழுவாக பிரிந்து செயல்படுவதற்குக் காரணம். நாடாளுமன்றங்கள் வெறும் பன்றித் தொழுவங்கள் என்று லெனின் சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு இந்த இயக்கங்கள் தங்கள் இருப்பை நியாயப்படுத்தி விட முடியாது.

புரட்சியின் மூலம் சோஷலிசத்தைக் கொண்டு வருவதற்கு புறச்சூழ்நிலைகள் சாதகமாக இருக்கிறதா, மக்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மதிப்பீட்டை உணர்ந்த பல நக்சலைட் இயக்கத் தோழர்கள் எங்களோடு இணைந்திருக்கிறார்கள்.

சிபிஎம்க்கு எதிராக தொடர்ச்சியான பிரச்சாரங்களை மக்கள் கலை இலக்கியக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். இடதுசாரிகள் தங்களுக்குள்ளேயே பரிமாற்றங்களை நடத்திக் கொள்கிறார்கள், அதைத் தாண்டி மக்களிடம் செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதே போன்றுதான் ம.க.இ.க. எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் கவனம் செலுத்துகிற அளவுக்கு, மார்க்சிய சித்தாந்த்தை மக்களிடம் கொண்டு செல்வதில் செலுத்தியிருக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள் செய்து கொண்டிருப்பது மிகச் சுலபமான வேலை.

உலக சமூக மாமன்றத்தை மும்பையில் நடத்தினோம். உலகமயத்தை எதிர்க்கும் பல்வேறு இயக்கங்கள் அதை நடத்தின. மாற்று உலகம் சாத்தியம் என்ற நம்பிக்கையிலே உலகமயத்தை எதிர்த்து அந்தப் போராட்டத்தை நடத்தினோம். அதை எதிர்த்து ‘ஆப்பக்கடைக்கு எதிர்க்கடை போடுவது போல’, அதிதீவிரம் பேசக்கூடிய நக்சலைட் இயக்கங்கள் எங்களுக்கு எதிராக போட்டி சமூக மாமன்றத்தை நடத்தினார்கள். அதை வேறு நாட்களிலோ, அல்லது வேறு நகரத்திலோ நடத்தியிருக்கலாம். நடத்தவில்லை, அங்கேயே நடத்தினார்கள்.

அந்த மாநாட்டிலே விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நடந்தது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த வழக்கறிஞர் ஒருவர் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அந்த வழக்கு ஒன்றுமில்லாமல் போனது என்பது வேறு விஷயம். ஆனால் அதை வைத்துக் கொண்டு அந்த மாநாட்டையும், மார்க்சிஸ்ட் கட்சியையும் எந்தளவிற்குத் தரக்குறைவாக பேசினார்கள் என்பது, நான் திருப்பிச் சொல்லும் அளவுக்கோ, உங்கள் இணையதளத்தில் வெளியிடும் அளவிற்கோ கண்ணியமானதல்ல. மார்க்சிஸ்டுகளைத் தாக்குவதற்கு மட்டும் இவர்கள் இயக்கம் நடத்துவார்களேயானால் அதனால் பாதிக்கப்படுவது இடதுசாரி கருத்தோட்டமும், மார்க்சிய சிந்தனையும் தானே தவிர நாங்கள் அல்ல.

ஆந்திராவில் நிலத்திற்குப் பட்டா கேட்டு போராடிய இடதுசாரிகள் மீது நடந்த தாக்குதலில் பலர் பலியானார்கள். அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்திலும் பலர் பலியானார்கள். ஆந்திராவில் போராட்டம் நடத்தியது கம்யூனிஸ்டுகள். மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருப்பது கம்யூனிஸ்டுகள். இதைப் புரிந்து கொள்ள முடியவில்லையே?

நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் பிரச்சனையே எழவில்லை. ரசாயனத் தொழிற்சாலை அமைப்பதற்காக அந்த இடத்தை தேர்ந்தெடுத்தது மத்திய அரசு. மத்திய அரசின் குழு நந்திகிராம் சென்று அங்குள்ள பஞ்சாயத்து தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் தான் பிரச்சனையே ஆரம்பித்தது. இந்த விஷயத்தை அப்படியே திரித்து விட்டார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைய வேண்டும் என்று மாநில அரசு விரும்புவதாகவும், அதை மக்கள் எதிர்ப்பதாகவும் சித்தரித்து விட்டார்கள்.

இந்தப் பிரச்சனைகளுக்கு இரண்டு மாதம் முன்பு மேற்கு வங்க முதல்வர் நந்திகிராமுக்கே நேரடியாகச் சென்று இது மத்திய அரசின் ரசாயனத் தொழிற்சாலைத் திட்டம், இதை மக்கள் விரும்பாவிட்டால் இங்கே அமையாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

மார்க்சிஸ்ட் அரசை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது தான் நந்திகிராம் எதிர்ப்பு இயக்கம். உலகம் முழுவதும் கம்யூனிசம் வலியுறுத்துவது விவசாயப் புரட்சிக்கு அடுத்தபடியாக தொழிற்புரட்சி என்பது தான். ஒரு முதலாளித்துவ மத்திய அரசின் கீழ் இருந்து கொண்டு ஒரு மாநில அரசால் எந்த அளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இந்தத் தலைமுறையினர் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களையும் விவசாயத்தோடு கட்டிப்போடக் கூடாது, அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற சிறு முயற்சியைக் கூட ஒரு அரசு செய்யக்கூடாதா? இதில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாமே தவிர, இதை வைத்துக் கொண்டு மார்சிஸ்ட் அரசை சிறுமைப்படுத்துவது தவறானது.

சங்கர்ராமன் கொலை வழக்கில் தொடர்புடைய விஜயேந்திரனை கர்நாடக எல்லைக்கு போய் அழைத்து வந்தவர் இந்து ராம். அவர் தொடர்ச்சியாக மார்க்சிய மேடைகளில் பங்கு பெறுவது எதனால்?

பொதுப்புத்தியும் பெரியாரும்-ஜமாலன்

பெரியாரின் 129-வது பிறந்தநாள் இன்று. இதனை பெரியார் கொண்டாடியிருப்பாரா? என்பது கேள்விக்குறியே. இருப்பினும் இதுபோன்ற நாட்கள் ஒரு வருடாந்திர கணக்கெடுப்பைப்போல பெரியாருடன் நமது உறவை கணக்கிட்டுக் கொள்வதற்கான ஒருநாள். பெரியாரியம் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளையும் அச்சிந்தனை எந்த அளவிற்கு சமூகத்திற்குள் ஊடுறவியிருக்கிறது என்பதையும் அலசுவதற்கு ஒரு நாள். நாம் அதனை எந்த அளவிற்கு உள்வாங்கியிருக்கிறோம் என்பதையும் சுயவிமர்சனமாக அலசுவதற்கும் இந்நாளை பயன்படுத்திக்கொள்வோம்.
இங்கு பெரியாரை நான் புரிந்துகொண்டவகையில் எனக்குள் மறுமுறை சொல்லிப்பார்க்கும் முயற்சியே இது.
பதிவுகளில் பெரியார் குறித்த விவாதங்கள்தான் அதிக அளவில் இடம் பெற்றதாக இருக்கிறது என்பது ஒரு மிகையான கூற்றாகாது. காரணம் பெரியாரின் சிந்தனைகள் அத்ன் ஆதரவாளர்களை விட எதிர்ப்பவர்களால்தான் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. எதிர்பப்வர்கள்தான் பெரும்பாண்மை என்பதும் கண்கூடு. பெரியார் ஒரு எதிர்மறையான சிந்தனையாளராக மட்டுமே பதிவுறுததப்பட்டிருக்கிறார். குறிப்பாக பிரமண எதிர்ப்பாளர் இநது மத எதிர்ப்பாளர் என்பதாக. இவ்விரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்துகொள்ளக்கூடிய கருத்தாக்கங்கள்தான். இந்துமதம் என்கிற அமைப்பே பிராமண மேலண்மையைக் கொண்ட ஒரு அமைப்புதான் என்பதை பெரியார்தான் வெளிப்படுத்திக்காட்டினார் வெகுசன தளத்தில்.
பெரியாரின் அடிப்படை சிந்தனை முறை என்பது தமிழக அல்லது திராவிட மக்களிடம் பதிவுறுத்தப்பட்டுள்ள பொதுபுத்தியை சுயசிந்தனை எனகிற தளத்திற்கு நகர்த்தியது. இதற்காக பகுத்தறிவு என்கிற ஒரு சுயசிந்தனைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுபுத்தி என்பது ஒரு மனிதன் உலகை புரிந்துகொள்ளவும் உலகுடன் உறவாடவும் ஆன மன அமைப்பு ஆகும். இப்பொதுபுத்தி பெரியாருக்கு முன்பே சித்தர்கள் தொடங்கி வள்ளாளர் வரை ஒரு பாரம்பரியமாக வளர்ந்தவந்தது. அவர்கள் இம்மன அமைப்புடன் தங்களையே ஒரு சோதனைக்களனாக மாற்றிக் கொண்டனர். கடவுளை மறுப்பதும், கடவுளை அடைவதும் தர்க்கரீதியாக ஒன்றுதான். கடவுள்நிலையை அல்லது மர்மமான மதச்சடங்குகள் மூலம் கடவுள் இடத்தை அடைய முடியுமெனில் கடவுளின் இருப்பு அங்கு அழிந்து வேறு ஒரு புதிய இருப்பாகிவிடுகிறது. கடவுள் என்கிற அளப்பற்ற சக்தி அடையக்கூடிய சக்தியாகிவிடுகிறது. கடவுள் என்கிற தனிச்சிறப்பான தன்மை சாதாரண தளத்திற்கு இறக்கப்படுகிறது. அதனால்தான் சித்தர்கள் ஒழுங்கமைக்கபட்ட மதச்சடங்குகளுக்கு வெளியே தங்களது இயக்கங்களை வடிவமைத்துக் கொன்றனர். வாழும் காலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் பிறகு மதங்களினால் உள்வாங்கப்பட்டு கடவள்நிலைக்கு ஆளாக்கப்பட்டனர்.
ஆக பொதுப்புத்திக்கு எதிரான இயக்கம் என்பது சமூக மாற்றத்தின் அடிப்படையாக இருக்கிறது. ஆணால் பெரியார் இப் பொதுபுத்திக்கு எதிரான தனது இயககததை மக்களின் தினவாழ்வின் எல்லாக் கூறுகளிடமும் விரவலாக்கினார். இதன்மூலம் ஒரு புதிய உலகை மக்களிடம் திறந்து காட்டினார் என்றால் மிகையாகாது. தினவாழ்வின் ஒவ்வொரு கூறிலும் பெரியாரின் பாதிப்பு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இயங்கிக் கொண்டிருப்பதுதான் பெரியாரின் தனிப்பெரும் சாதனை எனலாம். இன்று கடவள் பற்றிய அல்லது மதம் பற்றிய எந்த சிந்தனையும் பெரியாருடன் ஒரு உரையாடலை நிகழ்த்வேண்டிய ஒரு தவிர்க்கவியலா நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.
பெரியார் தனது செயல்களில் தெளிவுடன் இருந்தார். புரட்சி மற்றும் சமூக மாற்றம் என்கிற எல்லோருக்குமான விடுதலை இவ்வுலக துயரங்களிலிருந்து மீட்சி மோட்சம் போன்ற பெருங்கதையாடல்கள் குறித்த தெளிவு அவருக்கு இருந்தது. அதனால் தனது பணியை சமுக சீர்திருத்தம், சுயமரியாதை, பெண்விடுதலை, சாதீய எதிர்ப்பு, முடநம்பிக்கை எதிர்ப்பு என்கிற தளததிற்குள் சுருக்கிக்கொண்டார். அதனால் பெரியாரின் அரசியல் இயக்கம் நுண் அளவிலானது. அது எந்த மாற்றையும் முன்வைக்கவில்லை. மனிதனின் தன்னிலை மாற்றம் குறித்தே சிந்தித்தது. தமிழக அல்லது இந்திய மனிதனுக்கு ஆதிக்க ச்க்திகளால் கட்டமைக்கப்ட்டுள்ள மதம், சாதி, ஆண் என்கிற அடையாளத் தன்னிலைகளை கேள்விக்கு உட்படுத்தியது.
பெண் உடல் என்பது ஒரு வாரிசு உருவாக்க எந்திரமாக கட்டமைக்கப்ட்டதை அம்பலப்படுத்தி கிழித்துப்போட்டது. ஒரு பெண் தனது கருவை ஆளும் உரிமை உள்ளவள் என்பதை சொல்லியது. ஒரு ஆண் உடல் சாதீய மதக் கருத்தியலால் சுய மரியாதையற்றதாக கட்டமைக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்திக் காட்டியது. சாதி என்பது எப்படி ஒரு மனித தன்னிலையை ஆதிக்க வெறிமிக்கதாக ஆக்குகிறது என்பதை அம்பலப்படுத்தியது. மதம், சாதி, மொழி, இனம், பாலினம், தேசியம், சுதேசியம், நாட்டுபப்ற்று போன்ற எல்லா அதிகார மையங்களையும் கேள்விக்குட்படுத்தியது. மனிதனின் அடிப்படை உரிமை சுயமரியாதை என்பதை உத்தரவாதப்படுத்தக் கோரியது. மனித உடலின் குறைந்தபட்ச நிபந்தனையாக சுயமரியாதையை முன்வைத்ததுதான் பெரியாரியத்தின் ஆகப்பெரும் சாதனை எனலாம்.
பிராமண ஆதிக்கத்திற்கு எதிராக உயர்சாதி இந்துக்களின் ஆதிக்கத்தை பிரதிநிதத்துவப்படுத்திய ஒரு தேசிய முதலாளிய இயக்க குரலே பெரியாரியம் எனகிற மார்க்சிய வர்க்க ஆய்வை மறுக்கமுடியாது என்றாலும், ஒருகட்டத்தி்ல் அவ்வுயர்வர்கக்ம் அரசதிகாரம் கோரியபோது அதனை மறத்து தனது சுயமரியாதைக் கோட்பாட்டில் உறுதியாக நின்றது பெரியாரியத்தின் மற்றொரு வெற்றி எனலாம்