கருணாநிதி- தி கிரேட் கோமாளி-மலரோன்

 தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் உலக வரைபடத்தை தன் கையில் வைத்துக் கொண்டு குரங்காட்டம் ஆடிக் கொண்டிப்பார் ஹிட்லர். மேதை சாப்ளினின் நடிப்பில் அது அவளவு நகைச்சுவாய இருக்கும். தமிழக முதல்வர் கருணாநிதியின் தற்கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது அவரும் தமிழக வரைபடத்தை கையில் வைத்துக் கொண்டு குரங்காட்ட குத்துக்குரணம் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பது நமக்குப் புரிகிறது. பலர் கருணாநிதியை மூத்த திராவிட இயக்கத்தலைவர் என்பதால் விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள். பலர் மௌனமாக கருணாநிதியின் அல்லக்கையாக மாறுவதற்கான தருணத்தைக் எதிர்பாத்துக் காத்திருக்கிறார்கள். கவிஞர்கள், திரைத்துறையினர், தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் என்று பலரும் கருணாநிதியை சகித்துக் கொண்டிருப்பதற்கு இதுவே காரணம். ஊழல், அராஜகம். போலீஸ் காட்டாட்சி, ஊழல், சாதி வெறி அரசியல் இதில் எந்த ஒன்றிலும் அதிமுகவிற்கு கருணாநிதி குறைந்தவரல்ல என்று அம்பலப்பட்டுக் கிட்ககும் சூழலில் இந்தியாவிலேயே தமிழகம்தான் அதிக என்கவுண்டர் நடக்கும் மாநிலமாக மாறியிருபப்தை எந்த மனித உரிமை ஆர்வலர்களும் கண்டு கொள்ளவில்லை. காரணம் கருணாநிதி மீதான திராவிடப் பாசம்.

சரி அதெல்லாம் இருக்கட்டும். காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடந்த அண்ணாதுறையின் நூற்றாண்டுவிழா மாநாட்டில், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி, தமிழை தேசீய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற மாதிரி தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார் கருணாநிதி. இதே விதமான தீர்மானங்களை திமுக தொடங்கிய காலத்தில் இருந்தே போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மத்தியில் அரசைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது திமுகாதான். ஈழ மக்கள் போரில் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களை காக்க உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதோடு அவர்களின் உயிர்களையே ‘‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’’ என்று கொச்சைப்படுத்தியது போக இறுதிப்போரின் போது மக்கள் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லபப்ட்டுக் கொண்டிருந்த போது குடும்ப சகிதமாக டில்லிக்கு சென்று பதவிக்காக டில்லியிலேயே ஐந்து நாட்களுக்கு மேல் கிடந்தவர்தான் இந்தக் கருணாநிதி. ஈழத் தமிழர்களுக்குத்தான் எதுவும் செய்யவில்லை, உள்ளூரிலாவது சுயாட்சிக்கும், தமிழுக்கும் என்ன செய்திருக்கிறார் கருணாநிதி என்று பார்த்தால் கடந்த பல வருடங்களாக தீர்மானம் போட்டிருக்கிறார் என்பதைத் தவிற எதுவுமே செய்யவில்லை.தன் மகள் கனிமொழியை எம்பியாக்கினார். அழகிரியை அமைச்சர் ஆக்கினார். சமீபத்தில் நாடாளுமன்ற அமைச்சர் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் திமுக எம்பிக்களால் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஏண்டா இத்தனை நாள் வைக்காத கோரிக்கையை திடீரென இப்பொ வைக்கிறாங்களே? என்னடா என்று கேட்டால் அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாதாம். அதனால் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பதில் சொல்ல அனுமதிக்க வேண்டுமாம். என்ன கொடுமையப்பா? இது? அழகிரிக்கு தமிழ் மட்டும் ஒழுங்கா பேசத் தெரியுமா?

ஆனால் கருணாநிதிக்கு சமீபத்தில் விருதுகள் மேல் விருதுகள் வழங்கப்படுகின்றன. எண்பது வயதைக் கடந்து விட்ட இன்னும் இளைஞராகவே இருக்கும் கருணாநிதிக்கு இத்தனை வேகமாக ஏன் இவளவு விருதுகள் வழங்குகிறார்கள் என்று தெரியவில்லை. காஞ்சிபுரம் விழாவில் அவருக்கு அண்ணா விருது வழங்கியிருக்கிறார்கள்.அண்ணா விருது திமுக கட்சியால் வழங்கப்படுகிற விருது. திமுக என்பது கருணாநிதியின் கட்சி அதன் தலைவரும் அவரே, கேள்வியும் நானே பதிலும் நானே என்று தினம் தோறும் அறிக்கை விடுகிற மாதிரி விருது கொடுப்பதும் நானே, பெற்றுக் கொள்வதும் நானே என்று அண்ணா விருது பெற்றிருக்கிறார். அடுத்த நாளே திரைப்பட விருதுகளை அறிவித்திருக்கிறார் கருணாநிதி மொத்த விருதுகளையும் தன் திரைத்துறை அல்லக்கைகளுக்கு அள்ளி வழங்கிவிட்டதோடு விடாமல் உளியின் ஓசை என்ற தனது படத்திற்கு தான் எழுதிய வசனத்திற்கு சிறந்த உரையாடல் ஆசிரியர் – மு.கருணாநிதி (உளியின் ஓசை) என்று தானே விருது கொடுத்திருக்கிறார். இந்த விருதுகளிலும் திருஷ்டிப் பொட்டு மாதிரி சா.தமிழ்செல்வனுக்கும் விருது கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் கமலஹாசனை விட சிறந்த இயக்குநர்கள் வந்து விட்டார்கள், பாலா, அமீர், சசிகுமார், மிஸ்கின், என்று தமிழ் சினிமா பல சாத்தியங்களைக்கொண்டு பலவீனங்களோடு இயங்கிக் கொண்டிருக்க ஸ்கூல் பசங்க மாறுவேடப்போட்ட்டிக்கு வேஷம் கட்டுகிற மாதிரி சிறுபிள்ளைத்தமாக படத்திற்கு படம் கமல் கட்டுகிற மாறுவேடப்போட்டிக்கு விருது கொடுக்கிறார் கருணாநிதி. ஆனால் ஒரு நல்ல கதையை உருவாக்கிய சுபரமணியபுரத்திற்கு உருப்படியான எந்த விருதுகளும்.இல்லை. விருது தொடர்பாக சிறந்த பதிவு இதில் இருக்கிறது படியுங்கள்.

 

http://truetamilans.blogspot.com/ அப்பாடா என்று கண்ணைக்கட்டி டிவியை அணைக்கலாம் என்று போனால் அடுத்த செய்தி. கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருதாம் வழங்க இருப்பவர்கள் சினிமா தொழில்நுட்பக்கலைஞர்கள். இப்போ தெரிகிறதா? ஹிட்லர் கையில் இருந்த உலக வரைபடம் கருணாநிதி கையில் என்னவாக இருக்கிறது என்று.

நேற்று அதிமுகவில் இருந்து வந்த ஒரு கூட்டத்தினரை வரவேற்றுப் பேசும் போது சொல்கிறார் ‘’நமது சாதனைகளைப் பார்த்து தமிழக மக்கள் பூரித்துப் போயிருக்கிறார்களாம்” ஆமாம் கருணாநிதியின் ஆட்சியில் மக்கள் பூரித்த பூரிப்பில்தான் ஆங்காங்கே வகைதொகையில்லாமல் கொலைகள் விழுகின்றன. சில அரசியல் படுகொலைகளில் கொலை செய்தவர்களும் போலீஸ் நிலையத்திலேயே இறந்து போய் விடுகிறார்கள். இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலையிழந்து பட்டினியால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழக கிராம மக்கள் பாரம்பரீய விவாசயத்துக்கு விடை கொடுத்து விட்டு நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். கிராமத்து மக்கள் பல வெளிமாநிலங்களின் கல்குவாரிகளில் கொத்தடிமைகளாக இருக்க தமிழகமே மகிச்சியில் பூரித்திருக்கிறது என்று இவரே பூரித்துக் கொள்கிறார். ஜெயலலிதாவை மேரி மாதாவோடு ஒப்பிட்டு விளம்பரத் தட்டி வைத்த போது சிறுபான்மை கிறிஸ்தவர்களை தூண்டி விட்டு அதை பெரிய கலவரமாக மாற்றத் துடித்தவர் கருணாநிதி. ஆனால் கடவுள் மறுப்புப் கொள்கையே தனது கட்சி,குடும்ப ( ஆழ்வார்பேட்டைம், கோபாலபுரம், இரு குடும்பங்களின்) கொள்கை என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் மகன் கட்அவுட் தமிழ் கடவுள் முருகனைப் போல சித்தரித்து வைக்கப்பட்டுள்ளது. வீரமணி ஒரு வேளை புது வியாக்கினாம் இதற்குக் கொடுக்கலாம். மேரி மாதாவோடு ஜேவை ஒப்பிட்டது தவறு என்றால் முருகவோடு ஸ்டாலினை ஒப்பிட்ட திமுகவை எதைக் கொண்டு வரவேற்பது எனத் தெரியவில்லை. கடவுளில் என்னடா? தமிழ் கடவுள் இங்கிலீஷ் கடவுள்?

இபப்டியான கூத்துக்கள் எவளவோ கருணாநிதியின் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. சிறுபான்மையின்ரரின் ஆதரவாளர், திராவிட இயக்கத்தின் கடைசித் தூண், தமிழகத்தில் இருக்கும் ஒரே கம்யூனிஸ்ட் இப்படி எல்லாம் கருணாநிதிக்கு முகம் உண்டு. ஆனால் முற்போக்குச் சக்திகளை ஒடுக்கியது, ஈழ ஆதரவுப் போராட்டங்களை புலி ஆதரவுப் போராட்டங்களாக சித்தரித்து அவர்களை அடக்கி ஒடுக்கியது, கடைசி நேரத்தில் ஈழ மக்களுக்கு துரோகம் செய்தது எல்லாம் போக சிறுபான்மை மக்களையும், இடதுசாரிகளையும் கூட வாய்ப்பு வரும் போதெல்லாம் கழுத்தறுத்தவர்தான் இந்த கருணாநி.இதற்கு எத்தனையோ உதாரணங்களை வரலாற்றில் இருந்து சொல்ல முடியும். ஆனால் அவருகு இருக்கும் முற்போக்கு முகங்களில் எந்த ஒன்றை வைத்தேனும் இன்றைய கருணாநிதியை அளவிட்டுப் பாருங்கள் தன் பதவிக்கும், ஆட்சிகும் ஆபத்து வரும் என்றால் எத்தகைய இழிவான செயலையும் செய்யத் தயங்காத கருணாநிதி

 

மனித நேயம் : கோவை மு.சரளாதேவி

human

மனம் ஒன்றாநிலையில்

உடல்கள் ஒன்றினைந்து

உறவாடும் போது

மரணக் குழியில்

போராடிய மணநிலைதான்

உணரப்படும்
ஆனால்

மனம் ஒன்றிய நிலையில்

தொலைதூரம் இருந்தாலும்

உடலுரவின் உச்சகட்டத்தை

உணரமுடிகிறது
மனதைமிஞ்சிய

மகத்துவம் இல்லை

உடலைக் கடந்து

உணர்வோடு

உறவாடும் போது
மண்ணிலே

மனித நேயம்

தலைதூக்கி

வளரும்

அப்பா கொண்டுவந்த ஆப்பிள்..:சேரன்கிருஷ்

apple

சிலகாலத்துக்கு முந்தி
அது.
அப்பம்மா சாக முதல்
சந்திரிக்காவின் காலத்தில்
கொழும்பில் இருந்து
அப்பாவுடன் வந்திருந்தது.

இலைகள் எல்லாம்
பழுப்பாக உதிர்ந்தனவாம்
அந்தக்காலத்தில்..
சொல்லுவார்கள்.

எல்லோருக்கும் போதவில்லை
ஒரு அப்பிள்.
சின்னக்கீலமாக ஓன்றும்
அம்மா கடித்ததில்
பாதியுமாக
என்பங்கு கிடைத்தது.

கொழும்பில் இருந்து
யாழ்ப்பாணத்திற்கு பயணித்திருந்தது
அந்த
சின்னச் சிவப்பு அப்பிள்.
வெட்டவே மனமில்லை எனக்கு.
நீண்டதூரம் பயணித்திருந்தும்
கம்பீரமாய்ப் பளபளத்தது.
கிளாலிக்கடலில்
சூட்டுச்சத்தத்துக்கு பயந்து
அப்பாவின்
கால்சட்டைக்குள் ஒளித்துக்கொண்டதாம் அது.

அப்பாவின் தடவலில்
அதன்
காம்பு மடங்கி நிமிர்ந்தது….

அந்தச்சேற்றுக்காட்டுப்பாதைகளில்
எல்லாம்
நிலவுடன் பேசிக்கொண்டு
அப்பா நடக்கும்போது தன் அழகை
நிலவுடன் ஒப்பிட்டு
பீற்றிக்கொண்டதாம்.

தன்
சி;ன்ன மகனைப்பற்றி
அப்பாவின் பேச்சைக்கேட்டு
அமைதியான
வெள்ளைப்பனி கொட்டும்
தனது நாட்டைப்பற்றி
உச்சியில் தெரிந்த பராலைட்டை
உற்றுப்பார்தவாறு
ஏக்கமாக முணுமுணுத்ததாம் அப்பிள்.

தலைக்குமேல் கீச்சிட்ட
ஷெல்லி;ன் சிதறல்களிடம் தப்ப
தலைமேல் கைவைத்ததை
அதேபோல் நடித்துச்
சேட்டை செய்ததாம் அது.

தொண்டை வறண்டு
சொண்டுவெடித்த நேரங்களில்
அரோகராச்சொல்லி
உதவிசெய்ததாம் அந்த அப்பிள்.

தட்டிவானில்
சாவச்சேரி தாண்டும்போது
வானின் துள்ளலுக்கேற்ப
லயத்துடன் வந்த
அப்பிளின் பெருமூச்சு
காற்சட்டையில்
வெப்பமாக படிந்ததாக அப்பா சொன்னார்.

மிஞ்சிப்போன
அப்பிளின் காம்பை
புத்தம் ஒன்றினுள் வைத்தேன்.
நெடுங்காலம்
இந்த அப்பிளின் கதையை
மக்கள் சொல்லித்திரிவார்கள்
அப்பாவுக்கு நான்
உறுதி சொன்னேன்.

ஆதாரத்திற்கு
அந்தக் காம்பு இருந்தது என்னிடம்.
இரண்டுபக்கமும் அழுத்தப்பட்டு
சப்பையாய்ப்போய்..

ஆதாரத்திற்கு
அந்தக்காம்பு இருந்தது என்னிடம்.

எழுதுதாள் ஏந்திழை : நோர்வே நக்கீரா

dfem

எங்கோ மூலையில்

ஏனோ தானோ என்று

என்பாட்டில் கிடந்த என்னை

எட்டி எடுத்து

தட்டித் பின் தடவி

மல்லாக்காய் போட்டு

ஏறி நின்று

எழுந்து….

விழுந்து….

கிடந்து….

என்மேல் எழுதினான்

ஒருகவிஞன்
பேனாவின் அழகில்

மயங்கியதாலே

கூரியமுனையால் குத்துப்பட்டேன்.

கீறப்பட்டேன்

பின் கிழிக்கப்பட்டேன்.
என்மேல் கிறுக்கியவனை

விட்டுவிட்டு

என்னைக் கிறுக்கி என்றது

உண்மையற்ற உலகம்.
நீ எழுதி…எழுதி

எழுந்தபோது

கத்திக் கத்தியே

என் காதலைச் சொன்னேன்

வேதனை தாங்காது

அழுது அழுதே சிரித்தேன்
உலகமே உன்கவிதைகளை

வாசித்து வசியப்பட்டு

உன்வசப்படும் போது

பொறாமையில் பொருமுவேன் -நீ

எனக்கு மட்டும் உரியவன் என்று
உன்னைச் சுமப்பதால்

கண்டவன் நிண்டவன்

கைகளில் நான்

விபச்சாரியாக..

விமர்சிக்கப்பட்டேன்
நீ யோசித்ததை

யார் யாரோ வாசித்தனர்

ஆசித்தனர்….

பூசித்தனர்…..

உன்னால் வாசிக்கப்பட்ட

நான் மட்டும்….

தூசிக்கப்படுகிறேன்.

கண்டவன் நிண்டவன்

கைகளில்…..
நீ எழுதிப்போன தாள்

நான் என்பதால்

யாரும் என்மேல் இனி

எழுதப்போவதில்லை.
என் அடிமடியில்

நீ மறைத்து எழுதிய

கையெப்பம் மட்டும்

உன் முகவரி தெரியாது

வளர்கிறது என் வயிற்றில்
உன்னை வெளியுலகிற்கு

வெளிச்சம் போட்டுக் காட்டியவள்

இருளிலல்லவா கிடக்கிறேன்.

கண்ணா!!

விழி மொழியாயோ?

வாழ்வில் ஒளி தருவாயோ?
என்கருவறை சுமக்கும்

உன் கவிதைகளுக்கு

காசுக்களால் காணிக்கை

பணத்தினால் பட்டாபிசேகம்

என்கருவறைக்கு மட்டும்

கண்ணீர்தானா காணிக்கை???

இதுதான் உலகின் வாடிக்கை

பெண்ணாய் போனதால்

எல்லாமே கேளிக்கை…வேடிக்கை!!!

மார்கிஸ் டீசேட் தங்கிச் சென்ற விடுதி : யமுனா ராஜேந்திரன்

MassacreInKorea1951

 

 

 

 

 

என்றாலும் நாய்கள்தான் அங்கு வந்து சென்றிருந்தன

என்பதை மட்டும் உறுதியாகச் சொன்னார்கள். 

சற்றுமுன் வந்துபோனவர்கள்

முகத்துவாரத்தில் காணாமல் போக்கிய மனிதர்களை

நாய்கள் வனாந்தரங்களில் அல்லாமல்

மினுங்கும் நகர்களின் மூன்று நட்சத்திரவிடுதிகளில்

கோரைப் பற்களால் குதறிக் களிக்கத்

திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் 

தங்கிச்சென்ற நாய்களின் அறைகளின் படுக்கைகளில்

திட்டாய் உறைந்திருப்பது

பதின்மரினது கலவிக் கொண்டாட்டத்தின் கறைகளா அல்லது

மிஞ்சிய திராட்சைரசத்தின் கொஞ்சமா அல்லது

இரவில் வரவழைத்த பெண்கள்

வன்கலவியில் சிந்திய மாதவிடாய்க் குருதியா

என அடையாளம் காண முடியவில்லை

என்றும் சொன்னார்கள்

முன்னைநாள் அதே விடுதியில்

சித்திரவதையினால் கொல்லப்பட்ட பெண்ணின்

இரத்தக் கறையாகக் கூட அது இருக்கலாம்

டீசேட் கடைசியில் தங்கிச் சென்ற

விடுதியறையாகவும் கூட அது இருக்கலாம்

என்றும் சொன்னார்கள் 

என்றாலும் நாய்கள்தான் அங்கு வந்து சென்றிருந்தன

என்பதை மட்டும் உறுதியாகச் சொன்னார்கள். 

நிலமெங்கும் சிதறிக் கிடக்கும் பிணங்களை

தியானத்தில் கிடக்கும் உயிருள்ள மனிதர்கள் என்று

சித்தார்த்தன் சொன்னதாக அந்த நாய்கள் சொல்வதாகவும்

பெருநகரங்களுக்குப் போய்வந்தவர்கள் சொல்கிறார்கள் 

நாய்களின் விருந்து மேசையில்

பன்றியும் மாடும் ஆடும் கோழியும் திராட்சைரசமும்

சிவப்பு மக்காச் சோளரசமும்

சிவப்பு அரசியும் குவிந்திருந்த தட்டுகளில்

குழந்தைகளின் உடல் பிளந்து குடல்சரியும் காட்சிகள்

ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்ததாகவும்

முள்கம்பி வேலிகளுக்கிடையில் நிற்கும்

சிறுமியர் சிறுமியரது முகங்களின் அச்சம்

புகைப்படங்கள் பிம்பங்கள் எனும் அளவில்

உன்னதமாக இருக்கிறது என

அவைகள் சொன்னதாகவும் சொன்னார்கள் 

தலைநகரத்தின் மீது சூரியன் தோன்றியிருப்பதாகவும்

தீவு முழுக்கவும்

மஞ்சள்நிறக் கதிர்கள் பரவிக் கொண்டிருப்பதாகவும்

வேட்டையாடித் திரிந்த காட்டுப்புலிகள்

முற்றிலும் வனாந்தரங்களுடன் கரிந்து அழிந்துபோய்விட்டதால்

மான்கள் பாதுகாப்புடன் கிராமத்து வெளிகளில் வாள்களுடன்

துள்ளிவிளையாடுவதாகவும்

நாய்கள் சொன்னதாகச் சொன்னார்கள்

பீரங்கி வண்டிகள்

சமாதான அருங்காட்சியகங்களின் அழகுக்கானது போலவே

வடக்கிலும் கிழக்கிலும்

பூந்தோட்டங்களின் மத்திகளில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக

நாய்கள் சொன்னதாகவும் வந்து போனவர்கள் சொன்னார்கள் 

என்றாலும் நாய்கள்தான் அங்கு வந்து சென்றிருந்தன

என்பதை மட்டும் உறுதியாகச் சொன்னார்கள். 

நிஜத்தில் நாய்களை, கோரைப் பற்களுடனும் வஞ்சகத்துடனும்

உலக நகரங்களில் அலைகிற நாய்களை,

நாய்கள் என்று அழைக்காமல்

நரிகள் என்று அழைப்பதே

பொருத்தமாக எனக்குப் படுகிறது. 

நாய்களைக் கௌரவமாக நடத்த வேண்டும்

தடவினால் கழுத்தை நிமிர்த்தி

வாஞ்சையுடன் கருணை கசிய நம்மைப் பார்க்கும் நாய்களை

நிஜத்தில் நாய்கள் என்ற சொல்லில் குறிக்க

எனக்கு விருப்பமில்லை.

அவைகளைக் குட்டிச் செல்லம் என்றோ

மினி என்றோதான் அழைக்க விரும்புகிறேன் 
 

————————————————————————————————————

மார்கிஸ் டீசேட், சித்திரவதையிலும் கொலைகளிலும் இன்பம் காண்பது மனித இயல்பு என்ற சொன்ன பிரெஞ்சு நாவலாசிரியர். ‘சேடிசம்’ என்ற சொல் இவர் பெயரால்தான் அகராதியில் இடம்பெறுகிறது.

“புத்துணர்ச்சியும் புதுவேகமும்”:துடைப்பான்

thதுடைப்பானின் குறிப்புக்களை வாரா வாரம் எழுதவே திட்டமிட்டிருந்தேன். இன்றைய இலங்கை -புகலிட அரசியல் நிகழ்வுகள் என்னை மிகவும் சோர்வடையச் செய்வதாக இருக்கிறது. நினைக்கின்றவற்றை எழுத நினைப்பதன் ஊடாக எந்தவித சமூக பிரதிபலன்களும் என் எழுத்தால் ஏற்படப்போதில்லை என்ற யதார்த்தமான அறைதல் என்னை பலவீனப்படுத்தகின்றது. எனினும் நான் சமீபத்தில் எழுத நினைத்தவிடயத்தை நண்பர் சிறீரங்கனின் கட்டுரை விரிவாகப்பேசியுள்ளது. என்னைவிட மிகவும் அரசியல் மயப்பட்ட கண்ணோட்டத்தில் பிரச்சனையை சிறீரங்கன் அனுகியுள்ளார். அதனை இங்கு நான் பதிவிட்டுள்ளேன்.
 
புலிகளின் தோல்விக்குப்பின் சமீப காலங்களாக புகலிடத்தில் தங்களை ‘புத்திசீவிகளாக’ அடையாளம் இட்டுக்கொள்ளும் நபர்கள் மத்தியில் “புத்துணர்ச்சியும் புதுவேகமும்” பரவியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அனைத்தும் மகிந்த ராஜபக்சாவின் ஆசீர்வாதங்களும் நன்கொடைகளும்தான். மகிந்தாவின் சிந்தனையின் பின் அணிசென்று இலங்கை தமிழ் பேசும் மக்களின் துயர்துடைக்க கிளம்பியுள்ளதாக ‘கதை சொல்லும’ இந்த முன்னைநாள் என் நண்பர்கள் இந்த அணிகட்டல்களுக்கூடாக அந்த மக்களுக்கு குறைந்தபட்ச உயிர்வாழ்வதற்கான ஜனநாயகத்தை பெற்றுக்கொடுப்பார்களானால் நான் மிகவும் சந்தோசம் கொள்வேன்.
 
இனி நண்பர் சிறீரங்கனின் கட்டுரையை படியுங்கள்.

புலம்பெயர் வாழிலங்கையர்கள் சந்திப்பு
“இலங்கையர்கள்”

   
“ஈழப்போருக்கு”பின்னான இலங்கையில்,பெரும்பகுதி உழைக்கும் மக்கள்,இன அடையாளப்படுத்தப்பட்ட அரசியலில்,சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் பிளவுபட்டுக்கிடக்கும் இன்றைய சூழலில்,இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்றும்,”நாம் அனைவரும் இலங்கையர்களே”என்றும், மகிந்தாவிடும் குரலில் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் இலங்கையை முற்றுகையிடும் அந்நியப் பொருளாதார ஆர்வங்கள் இருக்கக் காணக்கடவது.இவை, இன்றைய ஆசிய மூலதனத்தோடான உறவில் பின்னிப்பிணைந்து இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது இலக்குக்கேற்பச் சொல்லுகின்றன.
 
“புலம்பெயர்வாழிலங்கையர்கள்”சந்திப்பு:
 
அன்று, காலனித்துவக் காலக்கட்டத்தில்-இலங்கையின் சமூக வளர்ச்சிக்காலக் கட்டத்தை மறுத்து, முரண்பாடுகளை மழுங்கடித்த காலனித்துவம்,இலங்கையில் தீடீர் முதலாளித்துவத்தைத் தோற்றுவித்து அதையே அரச முதலாளியமாக விட்டுவைத்துச் சென்றது.அதன் மீள் வருகையில் நவ காலனித்துவம் தொடர்ந்து இருப்புக்குள்ளாகியது.இதுவே,இப்போதும் இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் வளர்வுறும் சமூக வளர்ச்சிப்பாதையில் இனங்கள் உதிர்ந்து”இலங்கையர்கள்”எனும் கோசம் வலுப்பெறுவதற்கு முன்பே சமூக வளர்சியை மறுத்தபடி, அதன் இயல்பான வளர்ச்சிக்குக் குறுக்கே நின்றகொண்டும், திடீர்”இலங்கையர்கள்”எனும் தேசிய இன அடையாளத்தை, முழுமொத்த இலங்கை வாழ் இனக் குழுமத்துக்கும் பொருத்திவைத்துத் தமது நிதியாதாரத்தை இலங்கையில் பெருக்கும் பெரு முயற்சியில் மகிந்தாவினது குரலாக அனைவருக்குமான இலங்கை என்கிறது.இது சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மிகச் சாதகமான குறுகிய இலாபங்களை வழங்கிக்கொள்வதால் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடித்து அவ்வினங்களைப் பெரும்பான்மைச் சிங்கள ஆதிக்கத்துள் உள்வாங்கி அழிப்பதற்கு மிக நேர்த்தியான சூழலை உருவாக்குகிறது.
 
உலக ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார மற்றும் புவிகோள அரசியல் ஆதாயங்களுக்காகப் பொது அமைப்புகள் எனும் வடிவில் “அரசுசாரா”அமைப்புகளை உருவாக்கி வைத்து அவற்றை இயக்குவதுபோன்று, இன்றைய இலங்கை புலிகள் அழிப்புக்குப் பின் இலங்கைத் தேசத்தில் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடிக்க இத்தகைய “அரசுசாரா”அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கத் தக்கபடி உள்ளுர் அமைப்புகளைத் தோற்றுகிறது.இது மிகவும் ஆபத்தானவொரு மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அரசியல் வியூகத்தின் தொடர்ச்சியாக நம்முன் கொணரப்படுகிறது.இங்கே,இலங்கை அரசானது தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தபட்ட இலக்குக்கமைய முன்நகர்த்துவதற்கு இத்தகைய அமைப்புளது ஒத்துழைப்புகளுடாகப் பொதுக் கருத்தை ஏற்படுத்தி, அதையே மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இவ்வமைப்புகளுடாகச் சொல்கிறது. இன்று, புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசுக்குச் சார்பான அரசியலை முன்தள்ளும்-முன்னெடுக்கும் இக் குழுக்கள், பல்வேறு வடிவங்களில் தமது முகமூடியைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது.இதுள் தலித்துக்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி அல்லது வன்னி மக்களுக்கு உதவும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி இவையாவும் இலங்கை அரசினது இன்றை இனவழிப்பு அரசியல் வியூகத்துக்கு வலுச் சேர்ப்பதற்கான கூறுகளாகவே இனம் காணத்தக்கன.

THUUUUUUUU

 

 

 

 

 

“புலம்பெயர் வாழ் இலங்கையரின் ஒன்றுகூடல்” என்பதுகூட ஒரு கோணற்றனமான வாசகம்தாம்.புலம்பெயர் என்பது ஒரு நாடோ அல்லது தேசங்களையோ குறிப்பிட முடியுமா?அதற்குள் வாழவும் முடிகிறது?
 
தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய தலைப்புகளில் நடாத்தும் “இலங்கையர்கள்”என்ன சொல்ல வருகிறார்கள் என்பது மிக அவசியமாக இனங்காணத்தக்கது!
 
இலங்கையைவிட்டுப் புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழும் இலங்கையர்களுக்குள் பற்பல கூறுகள்,பிளவுகள் இருக்கும்போது”இலங்கையர்கள்”எனும் பொது அடையாளம் அவசியமாக இருக்கிறதென்றால் பிறகெதற்குத்”தலித்துவ அடையாளம்”,பிரதேச அடையாளம்,மதஞ்சார்ந்த குழும அடையாளம்?கலாச்சாரத் தேசியம் பேசுபவர்கள் எதற்காக”இலங்கையர்கள்” எனும் அடையாளத்துக்குள் ஒரு இனத்தின் தனித்துவத்தையும்,உரிமையையும் மறைப்பது?தமிழ்த் தேசிய இன அடையாளத்தை மறுபவர்கள் பின்பு தலித்துவ அடையாளத்தை எதற்காகத் தூக்கிப்பிடிப்பது?-மலையகத் தேசியத்தையும்,இஸ்லாமியத் தேசியத்தையும் பற்றிப் பேசுவது?ஒடுக்குமுறைகள் யாவும் ஒடுக்குமுறைகளாகவே இருக்கும்போது அதில் ஒரு கூறை முறைத்துவிட்டு மறுகூறைத் தூக்கிப்பிடித்து எந்தவுரிமையையும் பெற்றுவிட முடியாது.இத்தகைய நடாத்தையானது சிங்கள ஆளும் வர்க்கத்தினது கனவை நிறைவேற்றும் கயமைக்குப் பலியான அரசியல் வாழ்வாகும்.
 
இலங்கையர்களுக்கு இலங்கைத் தேசியம் என்ற அடையாளந்தாம் இருக்கமுடியும்.இதன் அடிப்படையில்தாம் சிங்கள இனவெறி அரசானது தமிழர்கள் என்பதற்காக அனைவரையும் இனவொடுக்குமுறைக்குள் உட்படுத்தியது.அங்கே, தலித்தோ அல்லது பிரதேசப் பிரஜைகளோ முதற்தெரிகளாகவும்-சிறப்பாகவும் பார்க்கப்படவில்லை.எனினும்,இந்தச் செயற்கையான”இலங்கையர்கள்”எனும் அடையாளத்துக்கூடாக இயங்கும் அரசியலை முன்னெடுக்கும் இந்த ஓடுகாலிக் கூட்டங்கள் இலங்கை அரசினது கைக்கூலிகளானவர்கள் என்பதை நாம் புரிந்தாகவேண்டும்.இவர்களுக்கு முகமூடி தயாரித்து,வால்கட்டி இயக்கும் இலங்கையின் இன்றைய தெரிவுக்கு உலக ஏகாதிபத்தியங்களது அதே பிழைப்புவாத அரச தந்திரமே வழிகாட்டுகிறது.உலக நாணய நிதியத்திடம் வட்டிக்குக் கடனைப்பெற்று, இத்தகைய அமைப்புகளையும் வளர்த்து இதன் பக்கத்துணையோடு இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பித் தமது அதிகாரத்தைத் தொடர்ந்து பேணும் இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கமானது மிகவும் அபாயகரமான அரசியல் சூழ்ச்சியல் சிறுபான்மை இனங்களை வீழ்த்தி வேட்டையாடுகிறது.
   
2

தினமும் வறுமையோடும் வேலைப் பளுவோடும் ஜந்திரமாக வேலைவேண்டிப் பாவிக்கப்படும் ஒரு கருவியாகவே உலகத்தில் உழைக்கும் மனிதரை இன்றைய பொருளாதார அமைப்பு-உலக ஏகாதிபத்தியத் தொழிலகங்கள் உருவாக்கி வைத்து அடிமையாக்கியுள்ளது.இது ஒருவகையில் மறைமுகமான அடிமையுடமைச் சமுதாயமாகவே இருக்கிறது.இந்தச் சமுதாயத்தில் உலக நாணய நிதியம்-உலக வங்கிகள் யாவும் இவ்வடிமைச் சமுதாயத்தைத் தொடர்ந்து இருத்தி வைக்கும் மேற்காணும் தொழிற்கழகங்களது எடுபிடிகளாகவே இருக்கின்றபோது,அரேபிய எண்ணை வயல்களைத் தமது குடும்பச் சொத்தாக்கிய அரேபிய நிலப்பிரபுக்களின் பதுக்கற் பணமோ”எண்ணை டொலர்களாக”இவ் நாணய நிதியத்திடமும்,உலக வங்கியிடம் முடங்கிக்கிடக்க, இதன் ஆதிக்கம் மேற்குலகப் பொருளாதார நலன்களைச் சுற்றிய வியூகமாக விரிகிறது.
 
இலங்கையினது மக்கள்கூட்டம்,இலங்கைப் பாசிச அரச ஜந்திரத்துக்குள் தொடர்ந்து மாட்டப்பட்டிருப்பதற்காக வழங்கப்படும் கடன் நிதிகள் திட்டமிடப்பட்ட இனவழிப்புக்கும் அதுசார்ந்த முரண்பாடுகளுக்கும் பாவிக்கப்படும்போது குடிசார் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு அரசாகவே இலங்கை தொடர்ந்திருக்கும்.இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெறும் பயங்கரவாதமாகக் காட்டும் சிங்கள ஆளும் வர்க்கத்து அபாயகரமான அரசியலின் விளைவால்,அவை கொண்டுள்ள பொருளாதார ஆதிக்கமானது இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியை மட்டுப்படுத்தி இலங்கையை மேலும் உரிமைகளற்ற தேசமாகவே சிறுபான்மை இனங்களுக்கு விட்டுவைக்கும்.இதனால், தமிழ்,முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.
 
இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து ஆயுதத்தை ஏந்தும்போது அங்கே மீளவும் பிரபாகரன்கள் உருவாவது தவிர்க்க முடியாத வினையாகிறது.இதைக் குறித்தான அரசியலை மையப்படுத்துகிற சிங்கள ஆளும்வர்கத்தின் தெரிவானது இலங்கையைப் புரட்சிகரச் சக்திகள் அரசியல்ரீதியாகக் கைப்பற்றதாவொரு சூழலை நோக்கியதாகும்.
 
இலங்கைத் தேசத்தின் பாரிய பின்னடைவாக தமிழ்த் தேசிய இனத்தைக் கணித்திருக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார அறிவானது அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் தமது இழிநிலையை உதாசீனப்படுத்தப்படுகிறது.இன முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தி இனச் சுத்திகரிப்பை மெல்ல செய்த இந்த ஆளும் வர்க்கமானது, இலங்கையின் இறைமையை எப்போதோ அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது.இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி மேற்குலக நிதி ஆளுமையுடைய நாடுகளால் தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு வரும் என்பதாகவும் இன்னொரு பொய்மையை அவிழ்த்துவிட்டுத் தப்பிக்கிறது.
 
தென்கிழக்காசியாவில் பேரளவில் தன்னிறைவானவொரு அரசாக இலங்கை மிளிரக்கூடிய அரிய வாய்ப்புகளை-வளங்களை இலங்கை கொண்டுள்ளது.அதன் சனத்தொகையும் வளமும் இதை மெல்லச் சாத்தியப் படுத்தியிருக்கும்.எனினும் அடாப்பிடியான இனவொடுக்குமுறையைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆளும் வர்கத்தை உசுப்பிவிடும் இந்திய-அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் நலன்கள் இலங்கையைப் படுகுழியில் தள்ளி அதன் வலுவான வளர்ச்சியை,தேசியவொருமைப்பாட்டைத் தொடர்ந்து உடைத்தெறிந்து,இனப்படுகொலையைச் சமீபம்வரை நடாத்தியது.இந்த நிலையில்,மேலும் சர்வதேச நாணய நிதியமும் மற்றும் உலக வங்கியும் அதன் எஜமானர்களும் நமது மக்களுக்கும்,அவர்களது விடிவுக்கும் தார்மீக ரீதிய உதவுவதாகக் கருத்துக்கட்டும் சந்தர்ப்பாவதமானது இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஏமாற்றுஞ் சதி நிறைந்தது.
 
 
இவ்வண்ணமேதாம் இன்றைக்குப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் மக்களுக்குள் உருவாக்கப்படும் திடீர் அமைப்புகள்-குழுக்கள் யாவும் இத்தகைய அந்நியச் சக்திகளுக்குச் சோரம்போன இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள்.இவர்கள் சிங்கள அரசினது பாசிச அரசியலைக் கேள்விக்குட்படுத்தாமல்-இனவழிப்பை இனங் காட்டாமல்-தமிழ்தேசிய இனத்துக்கு எதிராகச் செயற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தாமல், வன்னியில் வதங்கும் மக்களுக்கு உதவுவதற்காவும்,தலித்துக்களின் விடிவுக்காகக் குரல் கொடுப்பதென்பதும் வடிகட்டிய அயோக்கியத்தனத்தின் அரசியலே.
 
 
இத்தகைய குழுக்கள் யாவும்”பொதுவமைப்புகள்-அரசுசாரத் தன்னார்வ அமைப்புகள்”எனும் போர்வையில் இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது எடுபிடி அமைப்புகள்-கட்சிகள் என்பது உண்மை.இதை, நாம் இனங்கண்டாக வேண்டும்.இலங்கையில் புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பதற்கான முட்டுகட்டைகளில் முதன்மையான தடைக்கற்கள் இத்தகைய கைக்கூலிக் குழுக்கள் என்பதை முதலில் வரையறுக்க வேண்டும்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
02.08.09
http://srisagajan.blogspot.com/2009/08/blog-post.html

நண்பர்காள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?: துடைப்பான்

 

டேவிட் ஐயா
im1

சுமார் 30 வருடகால இலங்கை தேசிய இனப்பிரச்சினையின் ஆயுதப்போராட்டம், அது சுட்டி நின்ற நியாயமான காரணங்கள், புலிகளின் அழிவோடு முடிவுக்குவந்துவிட்டதாகவும், எனவே இனிமேல் இலங்கை அரசோடு ஒட்டி உறவாடி அது தருகின்ற, அல்லது இன்னறய வாழ்வோடு இரண்டறக்கலந்து வாழ்தலே ‘சுபீட்சமானது’ எனக்கருதும் ஒரு சாரார்.

இல்லை, இல்லை தொடர்ந்து புலிகளின் பாணியில் செல்லுதல், ‘தமிழ் ஈழக்’ கனவு சுமந்து மக்களை இன்னும் மந்தைகளாக இட்டுச் செல்லுதல் என்ற இரண்டாம் நிலைச்சாரார்.

மேற்கண்ட இருநிலைச் சாரார்கள் மத்தியில் செயல்படுகின்ற, மூன்றாம் நிலைச்சாரார்கள் என குறிப்பிடப்படும் ஒரு பகுதியினரின் மனநிலையோட்டம் என்னவாக உள்ளது?.

மூன்றாம் நிலைக்ச்சாரார்கள், இரண்டு நிலைக்ச்சாரார்களின் அரசியல் சித்தாந்த நடைமுறைகளோடு முரண்கொண்டவர்கள். ஒடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் விடுதலை இன்னும் சாத்தியமாகவில்லை, எனவே வெவ்வேறு போராட்ட வடிவங்களினூடாக இவை முன்னெடுத்து வளர்க்கப்படவேண்டுமென கருதுபவர்கள்.

இவர்கள் மூன்று நிலைகொண்டவர்கள்.

1.தமிழ்ஈழம் சாத்தியமானது. புலிகளின் இராணுவ மயப்பட்ட im2அரசிலைத் தவிர்த்து ஜனநாயக வழிப்பட்ட அரசியல் அமைப்பொன்றின் ஊடாக ஆயுதப்போராட்டத்தை முன் எடுத்தல். இவர்கள் ஆயுதப்போராட்டமே இறுதிவடிவமென கருதுபவர்கள்.

2. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காணல். ஒடுக்கப்பட்ட தமிழ் , im3சிங்கள ,முஸ்லீம், மலையக மக்களோடு கைகோர்த்து ஒன்றிணைதல். ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்தல். இலங்கை அரசுக்கு எதிரான அரசியல் கிளாச்சியை ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தல்.

3. ஒனறுபட்ட இலங்கைக்குள் தீர்வு காணல். தமிழ் ,சிங்கள ,முஸ்லீம் ,மலையக மக்கள் மத்தியிலும் சர்வதேச ரீதியிலும் ஜனநாயகப்போராட்டங்களை, மக்கள் எழுச்சிகளை, தாக்கங்களை ஏற்படுத்துதல். ஆயுதப்போராட்டத்தை நிராகரித்தல்.இலங்கை தழுவிய, அரசுக்கு எதிரான வெகுஜன அமைப்புக்களை உருவாக்குதல்.

சமீப நாட்களாக மேற்கண்ட மூன்று நிலை சிந்தனை கொண்ட ,செயற்பட ஆர்வம் கொண்டிருக்கும் பல நண்பர்கள், தோழர்கள் இவை பற்றி என்னோடு உரையாடுகின்றனர். இவற்றின்பால் என் சார்பு, செயற்பாட்டு நிலையை கோருகின்றனர். நானோ???

என் அரசியல் சமூக செயற்பாட்டுவாழ்வு 13வயதில் தொடங்கியது. என் தகப்பனாரும் என் அம்மாவும் அன்றைய தமிழரசுக் கட்சியின் தீவிர அபிமானிகளாக இருந்தனர். காலமும், im4நேரமும் ,பொருளாதாரமும் தமிழரசு கட்சிக்கே தாரைவார்க்கப்ட்டது. சத்தியாக்கிரகப் போராட்டத்தில் என் தகப்பனும் அம்மாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதிலிருந்தே இதனை புரிந்துகொள்ளமுடியும். என் அரசியல் சித்தாந்த ஈடுபாடு என் குடும்பத்தோடு முரண்பாடு கொண்டதாகவே அமையப்பெற்றிருந்தது.

சோவியத் ரசிய வெளியீடுகளோடும், நாவல்ளோடும், அப்போது வெளிவந்துகொண்டிருந்த சோவியத் செய்தி பத்திரிகையோடும் என்காலம் கடந்தது. இவற்றின் தீவிர வாசகனாக நான் இருந்தேன். நானும், என் வயதொத்த நண்பர்களும் ‘இளந்தளிர் வாசகர் வட்டம்’ எனும் அமைப்பினைத் தொடங்கி பல்வேறு அரசியல் கருத்தரங்குகளையும், மாணவர் கல்வி சம்பந்தமான இலவச வகுப்புக்களையும், கிராமத்தில் சமூக செயல்பாடுகளையும் முன் எடுத்தோம். அன்றைய காலத்தில் என் கிராமத்தில் என் நண்பர்கள் குழாம் ஊரில் முன் மாதிரியாக காட்டப்பட்டோம். வார்த்தைக்கும் ,வாழ்க்கைக்கும் ,செயலுக்குமான நெருக்கமான உறவை நாம் பேணுவதில் கண்டிப்பாய் இருந்தோம். வெற்றியும் பெற்றோம்.

எமது ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான நேசிப்பும் ,விடுதலை ஆர்வமும், மாக்ஸியமே அனைத்துவிடுதலைக்குமான தீர்வு என்ற திடமான நம்பிக்கையும், எங்கள் நண்பர்கள் குழாத்தை ஜனதா விமுத்தி பேரமுன என்ற JVPயிடம் கொண்டுசென்றது. இலங்கையின் வர்க்கப்போராட்டமே தமிழ் பேசும் மக்களுக்கான ஒரே தீர்வு என்று JVP சொன்னது. அவர்கள் வார்த்தைகளை நம்பினோம். எமது நண்பர் குழாம் JVP யோடு சங்கமாயிற்று. சுமார் இரண்டு வருடங்கள் இவர்களோடு தீவிரமாக செயல்பட்டோம். பாசறைகளில் கலந்துகொண்டோம். காலம் முரண்பாட்டை தோற்றுவித்தது. அவர்களின் கோட்பாட்டிற்கும் ,செயற்பாட்டிற்கும் இடையில் பாரிய இடைவெளியை கண்டோம். உட்கட்சி போராட்டங்களை நடாத்தினோம். இறுதியில் தோல்வி நிலையோடு வெளியே வந்தோம். எனினும் அவர்களோடு உறவு கொண்டிருந்த அக் காலங்கள், ஒரு சில நல்ல நட்புக்களை, மாக்ஸிய வழிப்பட்ட கல்வியை தேடல்களை வழங்கியிருந்தன.

மீண்டும் எமது “இளம்தளீர் வாசகர்வட்டத்தை” செயல்படுத்தத் தொடங்கினோம். 1980ம் ஆண்டு காந்திய அமைப்பின் தொடர்பு எங்களுக்கு கிடைத்தது. காந்திய வழிப்பட்ட சிந்தனைகள் மீது அப்போது எங்களுக்கு அவ்வளவு மரியாதை கிடையாது. எனினும் டேவிட் ஐயாவின் வழிகாட்டலில் செயல்பட்ட காந்திய அமைப்பினரின் செயல்பாடுகளும், வேலைத் திட்டங்களும், மலையக மக்கள் மீது குறிப்பாக அவர்களின் கல்வி, im6சமூக ,பொருளாதார மேம்பாடுகளில் கொண்டிருந்த அக்கறை எம்மை அதன்பால் ஈர்த்தது. அதனோடு இணைந்து செயல்படத் தொடங்கினோம். இங்கேதான் தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகம் என்ற புளொட் அமைப்பின் தொடர்பு கிடைக்கப்பபெற்றது. அவர்களின் அரசியல் கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள், சந்திப்புக்கள் என தொடர்ந்தன. தமிழ் ஈழம், பிரிவினை என்ற அரசியல் வார்த்தைகளோடு உடன்பாடு அற்று இருந்த எம் நண்பர் குழாத்தை “தேசிய விடுதலைப் போராட்டத்தோடு வர்க்கப்போராட்டம்” என்ற புளொட்டின் போராட்ட சித்தாந்த வடிவம் எம்மை கவர்ந்து இழுத்தது.  . எம்மைத் தொடர்ந்து எமது ஏனைய நண்பர்களும் எம்வழி தொடரலானார்கள்.

இக்காலங்களில் நாங்கள் “இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்” செயல்பாடுகளில், விளையாட்டு முகாம்களில் முக்கிய செயல்பாட்டாளர்களாக இருந்தோம். நிறைய தொடர்புகளையும், நட்புக்களையும் கிழக்கிலங்கை பூராகவும் பெற்றிருந்தோம். பெருவாரியான இந்த நண்பர்கள் எம் மீது நம்பிக்கைகொண்டு புளொட்டினுள் எம்மைத் தொடர்ந்தார்கள். நாங்கள் எல்லோரும் நம்பிக்கையோடு இருந்தோம். ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் விடுதலை கிடைக்குமென நம்பினோம். எமது குடும்பம் ,எதிர்கால தனிப்பட்ட நலன்சார்ந்த வாழ்வு ,கல்வி ,அனைத்தையும் விடுதலையின் பால் கொண்ட நம்பிக்கையினால் தூக்கியெறிந்தோம். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையே எமது வாழ்வு நெறி என பயணித்தோம்.

முடிவில், ஏமாற்றத்தின் விளிம்புநிலையில் கொண்டு விடப்பட்டோம்.

மீண்டும் புகலிடத்தில் நண்பர்களோடு அதேவகைப்பட்ட உரையாடல்கள்…. ! உரையாடல்கள்!! உரையாடல்கள்!!!

என்வாசக நண்பர்காள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்

ஜனநாயகமும் நண்பர்களும்! : துடைப்பான்

p11 இன்றைய நாளில் பலராலும் பேசப்படுகின்ற மலினப்பட்ட சொல்லாடல்கள் எவையென நாம் நோக்கின் அவை ஜனநாயகம்,  மனித உரிமை ,மாற்றுக்கருத்து போன்ற வகைப்பட்டதாகவே அமைந்துள்ளது. குறிப்பாக எமது நண்பர்கள் குழாம் எனப்பட்டடோர் எழுதுகின்ற பேசுகின்ற ஜனநாயகம் மனித உரிமைகள் மாற்றுக்கருத்துக்கள் புதுப்புது வியாக்கியானங்களோடு எம்மை புல்லரிக்க வைத்துவிடுகின்றது.
 
 
புலிகளிலிருந்து கருணா என்ற முரளிதரன் பிரிந்த பின்னாலான காலத்திலிருந்தும் இன்று இலங்கை அரசினால் புலிகள் அழித்தொழிக்கப்பட்ட பின்னாலான காலத்திலும் புகலிடச் சூழலில் எமது ஜனநாயக  நண்பர்களிடம் ஏற்பட்ட ‘அதிகார ஆசை’  மேலான அதிக பட்ச காதலை,  மோகம் பற்றிய எம் அவதானிப்பை பெரியதொரு ஆய்வாகவே செய்ய முடியும்.  வேண்டாம் அதனை விட்டுத்தள்வோம்.
 
புலிகளிலிருந்து கருணா பிரிந்தவுடன் கருணா “இலங்கை ஜனநாயகக் குடியரசின்” தலைசிறந்த ஜனநாயக சக்தியாக, தமிழ்பேசும் மக்களின் அரசியல் காவலானாக, மனித உரிமைகாப்பாளனாக கிழக்கின் விடிவெள்ளியாக புகலிட ஜனநாயக நண்பர்களால் அடையாளம் காட்டப்பட்டார்.       அதுவரை காலமும் புலிகளின் அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்திருந்து, பிரபாகரனின் செல்லக் குழந்தையாய் இருந்து தமிழ் பிரதேசங்களில் கருணாவால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் அனைத்துவகை ஜனநாயக அழிப்புக்கள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு ஜனநாயக காவலனாக நண்பர்களால் முடிசூடப்பட்டார்.
 
அதிகார ஆசைகளை உள்ளொடுக்கி பதுக்கி வைத்திருந்த நண்பர்களின் ‘அதிகார ஆசை’ கருணாவின் பின்னால் சென்றடைய கருணாவின் பிரிவுக்கு தத்துவார்த்த காரணங்களை மெழுகிட வேண்டிய சூழ்நிலை நண்பர்களுக்கு  உருவாகிற்று. கிழக்கு அபிவிருத்தியோடு இரண்டறக்கலந்த கிழக்குவாதம் இவர்களுக்கு அருமையான அதி மருந்தாக அமைந்துவிட்டது. அதுவரை கிழக்கில் பாதிக்கப்பட்ட நலிவுற்ற மக்களின் பக்கம் எந்தப்பார்வையையும் கரிசனையையும் அற்றிருந்த இந்தக் கூட்டம் மக்கள் நலம் பற்றி புலம்பத் தொடங்கிற்று.
 
இக் காலங்களில் இப் புலம்பல்களின் பின்னால் நானும் சேர்ந்து ஓலமிடவேண்டுமென எமது p21நண்பாகள் குழாம் விரும்பிற்று.  கருணாவின் ஆதரவு நிலை நண்பர்கள் குழாத்தை தீவிர அரச ஆதரவு நிலைப்பாட்டை நோக்கி தள்ளியது. இவை அனைத்தையும் அங்கீகரிப்பாளனாக நான் மாறவேண்டுமென அப்பாவித்தனமாக நண்பர் குழாம் விரும்பியது .கூட்டத்தோடு கோவிந்தா போடுவதில் எந்தவித உடன்பாடற்றவனாக நான் இருந்தேன்.
 
இக் காலங்களில் கலை இலக்கிய அரசியல் தளங்களில் மிகுந்த செயல்பாட்டாளாகளாக நாமிருந்தோம்.  இலக்கிய சந்திப்பென்றும், நண்பர்கள் வட்டமென்றும் ,சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் என்றும் பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருந்தோம். 
 
பிரான்சின் நண்பர்கள் வட்டத்தின் சார்பில் வருடத்தில் சாராசரி எட்டு கருத்தரங்குகளை நடாத்தினோம். இதுவரை சுமார் தொண்ணூறு கலந்துரையாடல்கள் கருத்தரங்குகளை பிரான்சில் நடாத்தியுள்ளோம்.  இவ் அனைத்து உரையாடல்களிலும் பிரதான தொனியாக ஒலித்தவை, அதிகாரத்திற்கும் மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிரானவையாகவே அமைந்தவை. 
 
 இன்று எங்களால் பேசப்பட்ட, எழுதப்பட்ட ,நடாத்தப்பட்ட இவை அனைத்தும் p41கேலிக்குரியதாக்கப்பட்டு அதிகார மோகத்திற்காக அனைத்து ஒடுக்குமறையாளர்களினதும் தொங்கு தசைகளாக மாறிவிட்டது.
 
சமூகத்தில் நாம் பேசுகின்ற எழுதுகின்ற அக்கறைகளுக்கு ஏற்றவாறு வாழவேண்டுமென்ற கருத்தின் மீது மிகுந்த அக்கறைகொண்டவனாக நான் இருக்கிறேன். இந்த ஐரோப்பிய முதலாளித்துவ சூழலில் இவை மிகுந்த நெருக்கடி நிறைந்த சவாலான சூழல் எனினும் குறைந்த பட்சமாவது நம் அக்கறைக்குரிய சமூக விடயங்களில் நேர்மையும் உண்மையும் கொண்டு வாழ முயலுதல் வேண்டுமென்பதே என் அவாவாகின்றது. p3இவைகளின் முரண்பாடுகளே நண்பர்களைவிட ‘அ’  நண்பர்களை நான் கூடுதலாக உருவாக்கி கொள்கிறேன். நண்பர்கள் எதிரியாகும் இத் தருணங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையே கொடுக்கிறது. நாம் கோட்பாடு சார்ந்த வாழ்வியலில் உண்மையோடும் நேர்மையோடும் வாழ ஆயிரக்கணக்கான எதிரிகளோடு முரண்பாடு கொண்டு வாழ்வில் போராடுவதில் உள்ள மகிழ்ச்சி அளப்பெரியது என்பேன் நான்.