இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும் மாட்டிறைச்சி அரசியல் : வி.இ.குகநாதன்

modi_rssமோடி தலமையிலான சங்கபரிவாரங்களின்(RSS) பொம்மலாட்ட அரசு இரு விடயங்களில் திறம்படச் செயற்பட்டுவருகின்றது. ஒன்று இந்தியாவின் வளங்களையும், சந்தையையும் கார்பிரேட் நிறுவனங்களிற்கு விற்றல், மற்றையது நாட்டினை இந்துமயமாக்கல் என்ற பெயரில் பார்ப்பானிய ஆதிக்கத்தினை நிலை நிறுத்தல். அதன் ஒரு நோக்கமாக அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகமே மாட்டிறைச்சி அரசியல்.

முகமது அக்லாக்
முகமது அக்லாக்

இதன்படி இந்தியாவில்மாட்டிறைச்சிக்கு எதிரான போராட்டம் என இந்துவெறிக்கும்பல்களால் ஒரு வெறியாட்டமே நடைபெற்றுவருகின்றது. இதன் உச்சக்கட்டமாக உத்திரப்பிரதேச நகரிலுள்ள தாதரி நகரில் இடம்பெற்ற முகமது அக்லாக் என்பவர் கொல்லப்பட்டு, அவரது மகள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டதனை முழு ஊரே மதத்தின் மகுடியில் கட்டுண்டு வேடிக்கைபார்த்தது. பின்னர் போலிசும் குற்றவாளிகளைத் தண்டிப்பதனைவிட்டு உண்மையில் மாட்டிறைச்சிதான் இருந்ததா? என ஆய்வுசெய்வதில் காலத்தினைச் செலுத்தியது…இத்தனைக்கும் மாட்டிறைச்சி இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை..இறுதியில் அக்லாக் வீட்டிலிருந்தது ஆட்டிறைச்சயே என ஆய்வுகூட முடிவுகள் தெரிவித்தன.

இது ஒரு சிறு உதாரணமே. இதுபோன்று பல கொடுமைகள் மாட்டிறைச்சியினை முன்வைத்து குறிப்பாக முஸ்லீம் மக்கள் மீதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும் இந்து வெறியர்களால் நிகழ்த்தப்பட்டன.

S_Shankaracharya-Lஇத்தனைக்கும் இந்து மதம் என்றுமே மாட்டிறைச்சியினை தவிர்த்துவந்துள்ளதா? என்றால் பதில் இல்லை என்பதே. யசூர் வேதத்தில் கோசவம், வாயவீயஸ் வேதபசு, ஆதித்ய வேதபசு என பலவகையான யாகங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் குறிப்பிடுவன யாதெனில் எத்தனை பசுக்களை என்ன நோக்கத்திற்காக பலியிடுவது என்பதே. உதாரணமாக அஷ்டதச பசுவிதானம் என்பது 18 பசுக்களை கொலை செய்து நடத்தும் யாகம். இதுபற்றி சங்காரச்சாரியாரிடம் கேட்டபோது அவர் கூறுவது “அவ்வாறான யாகங்களின் பின்பு பிராமணர்கள் மாட்டிறைச்சி உண்பது உண்மைதான், ஆனால் அப் பிராமணர்கள் காரம், புளி சேர்க்காது சிறிதளவே தேச நலனிற்காக உண்கிறார்கள் “. ஆக அவரது பிரச்சனை புளி காரமும், அளவுமே தவிர பசுக்கள் கொல்லப்படுவதல்ல. அந்தணர்கள் சாப்பிட்டால் தேச நலன், அக்லாக் சாப்பிட்டார் என்று சந்தேகிக்கப்பட்டால் கொலை இதுதான் பார்ப்பனிய நீதி.

beefஇன்று இந்தியாவில் வறிய மக்களின் உணவான மாட்டிறைச்சி அவர்களிற்கு மறுக்கப்படும் அதேவேளை இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கான டன்களில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாதான் முன்னனி வகிக்கின்றது. இந்த ஏற்றுமதிக்கான அனுமதிப்பத்திரம் மிகச் சிலரிடமே உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்த உயர் சாதி இந்துக்களே. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் அல் கபீர் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிட்டெட், அரேபியன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிட்டெட் என்பனவும் முக்கியமான நிறுவனங்கள். இவற்றின் பெயரினைப்பார்த்துவிட்டு இது ஏதோ இஸ்லாமியரிற்கு சொந்தமானது என நினைக்கத்தோன்றும்.

ஆனால் அவை முறையே சதீஸ், சுனில் கபூர் என்ற இந்துக்களிற்கே சொந்தமானது. அவ்வாறு பெயர் வைத்ததன் மூலம் இஸ்லாமியரே மாடுகளை கொன்று ஏற்றுமதி செய்கிறார்கள் என்ற மாயையினை இந்தியாவில் ஏற்படுத்துவதுடன் வளைகுடா நாடுகளிற்கு இலகுவாக ஏற்றுமதி செய்யலாம் என்பதேயாகும். எனவே இவ்வாறான மாட்டிறைச்சி ஏற்றுமதி பற்றி இந்துவெறியர்கள் அலட்டிக்கொள்வதில்லை, ஏனெனில் அந்த இலாபம் தனது எசமானர்களிற்கும், தரகுப்பணம் (கொமிசன்) அரசியல்வாதிகளிற்கும் செல்வதேயாகும்.

flagஇந்தியாவின் நிலை அவ்வாறிருக்க இலங்கையிலும் மாட்டிறைச்சியினைத் தடைசெய்யவேண்டும் என்று பொதுபலசேனா போன்ற பௌத்த அடிப்படைவாதிகள் கூச்சலிடத்தொடங்கினார்கள். புத்தனின் கொள்கைகளை எல்லாம் விட்டுவிட்டு அவரது பெயரினை மட்டும் இலங்கைக்கு கொண்டுவந்து மதத்தின் பெயரில் பிழைப்பு நடாத்தும் இவர்களும் மாட்டிறைச்சிக்குத் தடைவேண்டும் என கூச்சலிட்டுவந்தனர்.மகிந்தவின் ஆட்சியின்போதே இக் கோரிக்கை பலமடைந்திருந்தாலும் மகிந்த கூட வெளிப்படையாக இதனை ஆதரித்து கூறவில்லை.

ஆனால் அண்மையில் நல்லிணக்க முககமூடியினை மெதுவாக அகற்றிவரும் மைத்திரி பொதுபலசேனாவுடான மூடிய அறைச்சந்திப்பின் பின் இலங்கையில் மாடுவெட்ட maithreeதடைவிதிக்கப்போவதாகவும், வேண்டுமானால் இலங்கைக்கு வெளியிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம் எனக்கூறியயுள்ளார். மகிந்தவே நிறைவேற்றாதனை மைத்திரி நிறைவேற்றுவதாக கூறியுள்ளதால் பௌத்த அடிப்படைவாதிகள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்பினை தமிழர்சார் நிகழ்வில் அறிவித்தமைமூலம் தமிழர்-முஸ்லீம் முரண்பாட்டினை தூண்டுவதும் இதன் பின்னாலுள்ள சூட்சுமம். இதனையறியாமலோ அல்லது அறிந்து கொண்டோ யாழிலிருந்து வரும் தமிழ் பத்திரிக்கை ஒன்றும் மாட்டிறைச்சி தடையினை வலியுறுத்தி ஆசிரியர் தலையங்கம் எழுதி சங்கு ஊதுகிறது. (சும்மா சாதரண சங்கல்ல வலம்புரி சங்கு).

இதில் வேடிக்கை இந்தியாவில் மோடியின் ஆதரவு மதஅடிப்படைவாதிகள் மாட்டினை கொன்று ஏற்றுமதி செய்யலாம், ஆனால் சாதரண வறிய மக்கள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். இலங்கையில் சிறிசேனாவோ மாட்டினை வேறு எங்காவது கொன்று பின் இறக்குமதி செய்துண்ணுங்கள் என்கிறார். இதனால் இலங்கையில் உள்ளூர் மாட்டுப்பண்ணைத்தொழில் பாதிக்கப்படுவதோடு, மாட்டிறைச்சி விலையும் அதிகரிக்கும். மறுபுறத்தில் மாட்டிறைசச்சி இறக்குமதி மூலம் பெருமுதலாளிகள் கொழுத்த இலாபடைவார்கள்.

அத்துடன் இலங்கை அரசியல்வாதிகளிற்கும் இறக்குமதி அனுமதிப்பத்திரமூலமாக தரகுப்பணம் கிடைக்கும். சாதரண மக்கள் மத முரண்பாடுகளிற்கு பலியாவார்கள். பலியாகும் அப்பாவிகளை காப்பாற்ற அவர்கள் யாருக்காக சண்டையிட்டு கொள்கிறார்களோ அந்த கடவுள்களும் வரப்போவதில்லை.

இப் பிரச்சனையினை முஸ்லீம்களும் வெறும் மதஅடிப்படையில் நோக்காது இதனால் பாதிக்கப்படும் பிறஇனத்தவர்கள் , பண்ணையாளர்கள், மானிடநேயமிக்கவர்களுடன் இணைந்து போராடவேண்டும்.

ஏனெனில் ஒடுக்குபவர்கள் என்றுமே தமது நலனில் ஒற்றுமையாகவிருக்க ஒடுக்கப்பபடுபவர்களே சாதி, மத அடிப்படையில் பிரித்துவைக்கப்பட்டடுள்ளார்கள்.
முடிவாகக்கூறின் பெரு முதலாளிகள் பொருட்கள், சேவைகளை மட்டுமல்ல கடவுளையும் கூட விற்று காசாக்க வல்லவர்கள், அரசியல்வாதிகள் அந்த கடவுள் விற்பனையிலும் தரகு பெறத்தெரிந்தவர்கள். பாமரர்கள் இது எதுவுமறியாமல் தங்களிற்குள் சண்டையிட்டு பலியாகத் தெரிந்தவர்கள். தேவை விழிப்புணர்வே.

உஷ்… ! இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது : கவிதா லட்சுமி

– கருவறைக்கு வெளியே – நூலிலிருந்து-கவிதா லட்சுமி

the_mirrorஇந்த கண்ணாடி முன் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். தினமும் இப்படித்தான் பல நேரங்களில் நான் என்னைப் இப்படி நின்று நிதானமாக எந்த சலனமுமற்றுப் பார்ப்பதுண்டு. கண்ணாடியுள் விரியும் பெருவெளியின் வாடை, விறைத்த காற்று, மௌனத்தின் அலறல் என அனைத்தும் என்னால் மட்டுமே உணரக்கூடியது. வேண்டாம்! கண்ணாடியில் முகங்களை மட்டும் பார்க்கின்றவர்களுக்கான விம்பம் இல்லை இங்கு நான் காண்பது.

அறையின் சாளரக் கண்ணாடி வழியே சூரியகதிர்கள் முகக்கண்ணாடியில் தெறித்து விழுந்துடைகின்றன. இந்தக் கண்ணாடி இருக்கும் அறையில் ஒரு கட்டிலும் பக்கத்தில் ஒரு மேசையும் இருக்கின்றது. அவை தவிர இந்தக்கண்ணாடி மட்டும் தான் இந்த அறைச்சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் பொருள். இந்த அறைச்சுவரின் நிறம் பொருட்கள் எல்லாமே வெளிர் நிறத்தில் இருப்பது எனக்கு முக்கியமானது. வெள்ளை தூய்மையின் நிறமென்றும், அமைதியின் நிறமென்றும், வெளிச்சத்தின் குணம் என்றும் எல்லா இடங்களிலும் வெண்மை பூசி வைத்திருக்கிறேன். பெரிய ஜன்னல்களில் இரவு நேரங்களிலும் வெளிச்சம் பரவ மின்விளக்குகள் எரிந்தபடியே இருக்கும். இரவுகள் பயங்கரமானவை. தூக்கத்தில் இருந்து திடுக்கிடெழுந்து கண்விழித்துப் பார்த்தால் எங்கும் இருட்டு. வானம், பூமி, அறை என் கண்ணாடி அதில் என் முகம் எல்லாம் இருட்டு. சில பகல் நேரங்களும் வெளிச்சம் விழுங்கிய பயங்கர இரவை ஒத்தவையாகவே பிறக்கிறது.

வேலைகளின் இடையிடையே எனது முகத்தைப் பார்ப்பது எனக்குத் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டிருக்கும். எனது முகம் ஒன்றும் அத்தனை அழகில்லை என்பது எனக்குத் தெரியும். ஏனோ ஒரு நாட்கூட இந்த கண்ணாடியைப் பார்க்கும் போது நான் சிரித்ததில்லை. முப்பது வயதை எட்டக்கூடிய சின்னச் சின்னச் சுருக்கங்கள் சில இடங்களிற் தென்படுகின்றன. புன்னகையைச் செதுக்க மறுக்கப்பட்ட ஒரு சிதைந்த சிலையின் முகத்தைத்தான் இந்தக் கண்ணாடி பார்க்கிறது. இந்தக் கண்ணாடி உயிருள்ளது போல நான் பேசும் போது, என்னுடன் பேசுகிறது, அழும் போது என்னுடன் அழுகிறது. அதனாற்தான் இந்த முகக்கண்ணாடியில் எனக்கான விடை, இந்த உலகத்தில் நான் நடமாடுவதற்கான விடை வருமென்று நான் நினைத்துக்கொண்டிருக்கலாம்.

அது கண்ணாடிக்குத் தெரியுமா? இந்தக் கண்ணாடி முன் மட்டும்தான் நான் இப்படி ஒரு விசித்திரமானவளாய், கொஞ்சம் பைத்தியக்கராத்தனமானவளாய் எதையோ தேடுபவளாய் நிற்கிறேன். சூனியமாய், எதுமற்றதாய், வெறும் இருண்ட பிரபஞ்சமாய் தோன்றும் உலகத்தை சற்றே ஒதுக்கி வைத்தபின், மற்ற நேரங்களில் உங்களைப் போல ஒருத்தியாய் என்னை நான் காட்டிக்கொள்ளவும், நடமாடவும் கற்று வைத்திருக்கின்றேன்.

நான் அழகாய் இருப்பதாய்தான் இப்போதும் பலர் சொல்கிறார்கள். அந்த அழகை ஏனோ இந்தக்கண்ணாடி என்னிடம் இருந்து ஒளித்துவிடுகிறது. நானும் எனது புருவத்தை, கண்களிற் தீட்டப்படாத மைப்பகுதியை, காய்ந்த உதடுகளை ஈரப்படுத்தி, எனது மார்புகளின் இறுக்கத்தை, எனது பருமனில்லாத உடல் வாகுவை ஒவ்வொன்றாக கவனிக்கின்றேன். என்னால் ஒருபோதும் என்னை இரசிக்க முடிந்ததில்லை. ஏதோ பல குறைகள் எல்லா அங்கங்களிலும் தெரிகின்றது.

இப்போது சாயங்காலம்.

என்னை யாரும் விரும்புவதற்குரிய அறிகுறியை இன்றும் என் கண்ணாடியில்த் தேடுகின்றேன். என்னை யாரும் காதலிக்க மாட்டார்கள். யாராலும் காதலிக்கப்படுவதர்கோ, அன்புகாட்டப்படுவதற்கோ தகுதியற்றவளின் முகம் எப்படி இருக்கமோ அப்படித்தான் எனது முகம் இருக்கின்றது. யாரும் என்னோடு வாழச் சமத்திக்கமாட்டார்கள். அதற்குரிய தகுதியை நான் அடைந்தவளாக நான் பிறக்கவில்லை என்றும், என்னிடம் வாழ்வதற்கான தகுதி எப்போதும் இருந்ததில்லை என்று எனக்குள் யாரோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சூரியனை அடித்து விரட்டிய இருளின் நிசப்தம் பரவும் வெளிபோல எனது தனிமை என்னைச் சுற்றிப் பரந்துகிடக்கின்றது. இருளை தின்று செமிக்கும் முயற்சியில் எனது வாழ்வு அனலை மென்று முழுங்கிக் கொண்டிருந்தது.

இந்த முகக்கண்ணாடியில் என்னைத் தவிர இன்னும் சில உருவங்கள் வந்து போகின்றன. அவர்கள் என்னுடன் பேசுவதுண்டு பழகுவதுண்டு. இவர்கள் எனக்கு மிக நெருக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர். இருந்தாலும் இவர்களில் எனக்குப் பிடிப்பில்லை. இவர்கள் முர்க்கமானவர்கள். என்னுடைய இந்த முப்பது வயது முகத்தை, அனுபவத்தை எனது வளர்ச்சியை அதன் சந்தோசத்தை அவர்கள் பிடுங்கிவிட்டிருக்கின்றார்கள். இவர்கள் வரும் போதெல்லாம் இந்தக் கண்ணாடியை உடைத்துவிடும் பலம் என் உடம்பில் ஏறும். கைகள் நடுங்கும். ஆனாலும் செய்கையிழந்து நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். சிறு வயதிலிருந்தே பிரியமுடியாத ஒரு பிணைப்பு இந்தக் கண்ணாடியில்த் தோன்றும் மனிதர்களோடு இருக்கின்றது.

இங்கே பாருங்கள் இதில் பருமனாக இருப்பவள்தான் அம்மா. பக்கத்தில் உள்ள முலையில் தலை வாறுப்படதா முகத்துடனுடம், எவ்வித சலனமுமற்று துடிப்பற்று இருப்பதுதான் நான்.

வெளிச்சம் விழுங்கிய பிந்திய அந்தி நேரம். எனக்கு இப்போது ஐந்து வயது.

நீளமான தலைமுடி காற்றில் பறந்து கொண்டிருக்கின்றது. எனது தோல் அதிக மண்ணிறத்தன்மையுடையதாக மாறிக்கொண்டிருக்கிறது. முழங்கால்களில் புண்ணும், சிவப்பேறிய சோகைபடிந்த கண்களும், சோர்ந்த உடற்கட்டும் உள்ள என்னை பார்த்து அதிக நேரம் குளித்திருக்கிறாய் அதுதான் இப்படி இருக்கிறது என்கிறாள் அம்மா. பாடசாலையில் யாரும் எனக்கு என்ன ஆயிற்று என்று விசாரிக்கும் போது நான் சொல்ல வேண்டிய பதில்களை அம்மா எனக்கு இப்படித்தான் ஏதோ ஒரு விதத்தில் சொல்லித் தருவாள். ஆனால் எனக்கு அது அப்படியில்லை அது பொய் என்று தெரியும் என்றாலும் நானும் அம்மா சொல்வதையே சொல்லிப் பழகினேன். நான் பயந்து போயிருக்கிறேன். இந்தப் பயத்திற்கு ஒரு வாடை இருக்கிறது. இந்த வாடையின் நிறம் கறுப்பு, படபடவென்று கேட்கும் ஒலி நிறைந்த இடங்களில் என்னால் இந்த வாடையை உணரமுடியும். வயது முதிந்தவர்களின் முச்சுக்காற்றில் இந்த வாடை வீசத்தொடங்குகிறது. பின் அவை இந்த இடம், அறை, சனம் நிறைந்த இடம், காற்று, வெளி என்று பரவி அசிங்மாய் மணக்கிறது இந்த உலகம். முக்கியமாக எனது முகக்கண்ணாடியில் இந்த வாடை வீசிக்கொண்டிருக்கும். அதை உங்களால் அறியமுடியாது.

எப்போதும் போல எனது சிறுபிராயத்து வீடு கலைந்து கிடக்கிறது.

என் அம்மா என்னைப் பார்த்து நான் குண்டாக இருப்பதாகவும், அசிங்கமாகவும், எனது தலைமுடி மிகக்கேவலமாக இருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறாள். நான் எதற்கும் உதவாதவள் என்று எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டிருப்பதும், என்னை எதுக்குமாகாத ஒரு பிறவியாக மனதில் பதியவைத்த காலங்களும் கடந்து விட்டிருக்கின்றது. அம்மா சொல்வதெல்லாம் இப்போது எனக்குப் பழகிவிட்டது. பாதுகாப்பற்ற இந்த வீட்டின் அமுக்கமும், வாடையும், மனதை முழுதாக அடைத்துவிட்டிருக்கின்றது. என்னைப் பற்றிய அக்கறை யாருக்கும் இல்லை என்பதை நான் அப்போதே உணர்ந்திருந்தாலும் அதை பற்றி நான் பெரிதாகத் அலட்டிக்கொள்வதில்லை. எனது அம்மா தூங்கிவிட்ட பிறகு எழப்போகும் பயங்கரக் கனவின் நினைவில் அதிர்ந்து போயிருப்பதில் மற்ற விடயங்கள் பெரிதாகத் தெரியாமல் போயிருக்கும்.

அந்தக் கனவு வரும் போதெல்லாம் அழுகை பலமாக வரும். அழும் சத்தம் வராமல் ஒரு சுட்டுவிரல் என் வாயை இறுகப் பொதியிருக்கும். அது ஒரு தனியான அறையோ, கழிப்பறையோ போன்ற இடம். சுற்றிலும் இருட்டு. என்னை எழுப்பி அழைத்து வந்த உருவம் என்னை மல்லாக்கப்படுத்தியோ அல்லது சுவரோடு சாத்தியோ வைத்து தனது முழு பலத்தையும் என்மீது வீழ்த்தும். அப்போது அந்தக் கண்கள் இரவில் ஒளிரும் காட்டு மிருகத்தின் கண்களை ஒத்து அகோரமாய் தெரியும். வயிற்றில் பயத்தையும் பசியையும் உண்டுபண்ணும். அந்தரங்க உருப்புகளில் எரிவு உண்டாகி, சிறுநீர்கழிக்க வேண்டும் போன்ற உணர்வு வரும். ஒரு முனகல் சத்தம் கூட வராமல் இந்தக் கனவை கடக்க வேண்டியது எனது கடமை என எனக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, இந்தக் கனவு முடிந்து நான் எழும் போது என் உடம்பின் பல பாகங்களில் நீலம் பூத்திருக்கும். கண்டிய காயங்களும், சிவந்த ரத்தக்கன்றல்களும், தூக்கமிழந்த இரவுகளின் தாக்கமாக கண்கள் சோகையும் படிந்திக்கும். உடல் அடித்துப்போட்டாற் போல வலி எடுக்கும். பாடசாலை போகவே பிடிப்பில்லாத மனநிலை உண்டுபண்ணியிருந்த காலமது.

நான் காணும் இந்தக் கனவு பற்றி யாருக்கும் சொல்ல எனக்கு அனுமதியில்லை. சொல்லும் தைரியமும் எனக்கு இல்லை. ஆனாலும் இந்த அகோரக்கனவு பற்றி எனது அம்மாவும், அப்பாவும், பாடசாலை ஆசிரியர்களும் மற்றும் அயல்வீட்டுக்காரர்களும் அறிந்தே இருந்தனர் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் யாரும் எனது வீட்டிற்கு வருவதில்லை. அந்தக் கனவு அவர்களையும் தொத்திவிடுமோ என்று அவர்கள் அஞ்சியிருக்கலாம். என் வயதுச்சினேகிதிகள் யாரும் என் வீட்டிற்கு வந்து நான் அறிந்ததில்லை. என்னையும் எங்கேயும் வெளியே அனுப்ப வீட்டில் அனுமதியில்லை. எல்லாம் இரவில் வரும் அகோரக் கனவுகளால் வந்த வினை.

என்னுடன் எப்போதும் இருக்கும் எனது கைப்பொம்மை என்னைப் போலவே கொஞ்சம் அழுக்காய்தான் இருக்கும். இருந்தாலும் தோட்டத்து மூலைகளிலும் கட்டிலின் அடியிலும், மேசையின் இடுக்கிலும் நாங்கள் அமர்ந்து பேசுவது அதிகம். எனது இரத்தக் காயங்களும், முக்குச்சலியும் வேர்வையும் ஒட்டிய இந்தபொம்மை எனக்கு முக்கியமானது. அதனுடன் தான் இப்போதும் நான் படுத்திருக்கிறேன். தூக்கம் என் இமையைப் பாரமாக்குகின்றது. நானும் ஒவ்வொரு இரவும் தூங்காமல் இருந்துவிடுவதென்று அசுரபலத்துடன் இமையை எதிர்த்துப் வழமைபோல போராடுகின்றேன். இந்த கனமான இருட்டும், உடற்சோர்வும் என்னை வழக்கம் போல உறக்கத்தில் ஆழ்த்தி விடுகிறது.

பல காலம் மாற்றப்படாத போர்வையின் நாற்றத்துடன் எனது கட்டிலில் நான் உறங்கிக்கொண்டிருக்கின்றேன்.

ஆழ்ந்த நித்திரையில் அந்த அகோரமான கை என்னை தட்டி உசுப்புகிறது. அரைத்தூக்கத்தில் எழுந்து அந்தக் கனவுக் கையோடு இழுபட்டுப்போகின்றேன். மனது வேகமாகத் துடிக்கத் தொடங்குகிறது. கால்களின் நடுக்கம் உடல் முழுதும் குளிரச்செய்கிறது. அதே கழிவறைக்கருகில் என்னை சுவரோடு சாத்திவைக்கும் அந்த பேயுருவத்தின் உடலில் இருந்து அருவருப்பான வாடை அடிக்கிறது. தடிமனான மீசையும், மது அருந்திய நெடியும் அருவருப்பை உண்டாக்கி வாந்தி வரும் போல வயிறெங்கும் குமட்டல் எடுக்கிறது.

“கனவா இது”

“ம்”

“எப்ப முடியும் கனவு. எனக்கு ஏலாது. ”

“கொஞ்ச நேரத்தில முடியும், சத்தம் போடகூடாது என்ன”

“ம்”

“இதெல்லாம் யாருக்கும் சொல்ல கூடாது என்ன? எல்லாரும் இப்படிதான் அவங்க வீட்டில செய்றது.. ம்”

ஒரு பெரிய விரல் எனது உதடுகளை இறுக்க மூடுகிறது. உதடுகள் வலிக்கின்றன. உடல்முழுதும் ஆயிரம் ஊசிகள் துளைத்தது போல பெருவலி கிளம்புகிறது. மயக்கம் கனவை மூடிக்கொள்கிறது. ஒரே இருட்டு. எங்கும் வெறும் கறுப்பு. அதே அசிங்க வாடை.

“விடுங்கப்பா… வலிக்குதப்பா… காணும்ப்பா”

மண்புழு வளர்ப்பின் பயன்கள்

(மீள்பதிப்பு)
ஒரு நிலம் விவசாயத்துக்கு ஏற்ற நிலம். நன்கு வளமான நிலையில் உள்ளது. அதில் என்னபயிர் செய்தாலும் நன்கு வளரும் என்று உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு நல்ல உபாயம் உள்ளது.

அது என்னவென்றால் அந்த நிலத்தில் ஈரமான ஒரு பகுதியில் மண்ணைப் பறித்துப் பார்த்தால் அங்கு மண்புழுக்கள் தென்பட வேண்டும்.

Worm and farming

ஒரு நிலத்தில் ஈரமான ஒரு நிலையில் மண்புழுக்கள் அங்கு வாழமுடியும் என்றால் அங்கு நன்கு பயிர் செய்யமுடியும் என்பது பொருள்.

அதனால்தான் மண்புழுக்களைக் குடியானவனின் நண்பன் என்று கூறுவார்கள்.

மண்புழுக்கள் வாழும் நிலங்கள் எதனால் அப்படிக் கருதப்படுகின்றன, மண்புழுக்கள் நமக்கு என்ன பயனைத் தருகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

மண்புழு வாழவேண்டுமானால் அங்கு அதற்குத் தீனி வேண்டும். அதற்குத் தீனி கிடைக்க வேண்டுமானால் நன்கு மக்கிய பொருட்கள் அந்த நிலத்தில் கலந்திருக்க வேண்டும். மக்கிய பொருட்கள் கலந்திருக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான மக்கக்கூடிய குப்பைகள் இலை தழைகள், கால்நடைகளின் கழிவுகள் போன்றவை கலந்திருக்கவேண்டும்.

அதுமட்டுமல்ல குப்பை கூழங்களை மக்கச்செய்யும் நிறைய நுண்ணுயிர்களும் அந்த நிலத்தில் வாழவேண்டும். அதற்குமேல் போதுமான ஈரம் வேண்டும்.

இவ்வளவும் சரியாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் மண்புழு!

அந்த மண்புழுக்கள் ஒரு ஈரநிலத்தில் காணப்படவில்லை என்றால் என்ன பொருள்?

அவை வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை, போதுமான உணவு இல்லை என்பது பொருள்.

அப்படியானால் அதைத்தொடர்ந்து அந்த நிலத்தில் மக்கக்கூடிய பொருட்களோ அவற்றை மக்கச்செய்யும் நுண்ணுயிர்களோ இல்லை என்றும் உணர்ந்து கொள்ளலாம்.

அது பயிர் செய்ய அதுவும் இயற்கை விவசாயம் செய்ய ஏற்ற நிலம் அல்ல என்று எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த நிலை ஏற்படுவதற்குக் காரணம் என்ன? ஏன் மண்ணில் மண்புழுக்கள் இல்லாமல் போகிறது? வரட்சிக் காலத்தில் ஈரம் இல்லாததால் மண்புழு இல்லாமல் போவது நியாயம். ஈரகாலத்திலேயே ஏன் இல்லாமல் போகின்றன?

காரணம் மிக எளிதானதுதான். ஆதாவது சின்னஞ்சிறு மண்புழுக்கள் மீது நாம் கருணையற்ற யுத்தம் நடத்தி; வருகிறோம். அதுவும் பலமுனைத் தாக்குதல்!

ஒரு பக்கம் கால்நடைப் பயன்பாட்டைக் குறைத்து அதனால் அவற்றின் கழிவுகள் நேரடியாக நிலத்தில் சேர்வதைத் தடுத்துவிட்டோம். அதனால் நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களுக்கோ மண்புழுக்களுக்கோ போதுமான உணவின்றிச் செய்து வருகிறோம்.

மறுபக்கம் நிலத்தில் பயிர்களுக்கான சத்துக்கள் குறைந்த நிலையில் நிலத்தை வளப் படுத்துவதற்குப் பதிலாக வேதி உரங்களைப் பயன்படுத்தினோம்.

நிலத்திலுள்ள நுண்ணுயிரிகள் வேதி உரங்களை உண்டு வாழ முடியாதது மட்டுமல்ல அந்த நிலையில் வாழும் சூழலை இழந்து அழிவை நோக்கிய பயணத்தைத் துவக்கின.

போதாக் குறைக்கு பூச்சிக் கொல்லிகளை வரைமுறையின்றிப் பயன்படுத்தியதாலும் நேரடியாக நஞ்சின்மூலமும் களைக்கொல்லிகளின் மூலமும் மண்;புழுக்கள் கொல்லப்பட்டன.

என்ன வேதி உரங்களைப் போட்டாலும் என்ன பூச்சி;க் கொல்லிகளைத் தெளித்தாலும் பயிர் எதிர்பார்த்தபடி வளர்வதில்லை போதுமான மகசூலைக் கொடுப்பதில்லை, நாளுக்கு நாள் பூமி களர் நிலங்களாகி வருகிறது என்று காலங் கடந்து உணரப் படுகிறது. இப்போதும் விவசாயம் நெருக்கடிக்கு உள்ளாகாமல் இருந்திருந்தால் வருமானம் கட்டுபடியாகக்கூடிய அளவில் இருந்திருந்தால் இப்போதும் இந்த இயற்கை வேளாண்மை பற்றிய சிந்தனை வந்திருக்காது.

இப்போது செய்த தவறு உணரப்படுகிறது. அதைத் திருத்திக் கொள்வது எப்படி என்பதுதான் கேள்வி!

அதற்கு வேதி உரங்களை மூட்டை மூட்டையாகக் கொட்டி விவசாயம் செய்தோமல்லவா அதுபோலவே நிறைய மண்புழு உரம் உற்பத்தி செய்து மூட்டை மூட்டையாகப் போட்டால் பயிர் அருமையாக வரும் என்று கருதப்படுகிறது. செய்யவும் படுகிறது.

ஆதாவது முன்போலக் கால்நடைகள் இல்லாத நிலையில், கால்நடைகiளின் பயன்பாடு குறைந்த நிலையில் கால்நடைகள் வைத்து பாரம்பரிய முறை விவசாய வேலைகள் செய்யமுடியாத நிலையில் இருக்கும் வேலை செய்யும் மாடுகளையும் பால்மாடுகளையும் அவற்றின் கழிவுகளையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்ததன் பயன்தான் மண்புழு உரம். ஏன் அதை நாமே உற்பத்தி செய்து நிலத்துக்கு இடக்கூடாது என்றும் நினைத்தார்கள்.

மாடுகளை நிறைய வளர்த்து அவற்றை நிலத்தில் பட்டிகளில் அடைத்து மற்றும் எருக் குழிகளில் சேகரிக்கப்படும் சாணத்தின் மூலம் நிலத்தில் மண்புழுக்கள் உற்பத்தியாவதன் மூலம் பயன் கிடைக்க நிறைய மாடுகள் வேண்டும். நிறைய வேலையாட்கள் வேண்டும். நிறைய செலவும் பிடிக்கும். அது நடைமுறை சாத்தியமும் இல்லை.

அதனால் மண்புழு உரத்தை நாமே ஓரிடத்தில் உற்பத்தி செய்வது சுலபம்தானே! அதுதான் மண்புழு மோகம்!

நாம் உற்பத்தி செய்யும் மண்புழு உரமும் நிலத்தில் வாழும் மண்புழுக்கள் உற்பத்தி செய்யும் உரமும் ஒரேமாதிரி தரமுடையவைதானா?

மண்புழுக்களுக்கு நிலத்தில் உரமிடுவது மட்டும்தான் வேலையா?

இந்த இரு கேள்விகளுக்கும் தெளிவான விடை காணவேண்டும்.

மண்புழுக்கள் தங்களுக்கான உணவைத்தேடி இடைவிடாமல் தாம் வாழும் காலம் ஈர மண்ணுக்குள் இடம் பெயர்ந்துகொண்டே உள்ளன. குறைந்த பட்சம் இரண்டடி ஆழத்துக்காவது மண்ணுக்குள் மண்புழுக்களின் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

மண்ணுக்குள் மண்புழுக்களின் நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால் விவசாய நிலத்தின் மேல் மண் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்படுகிறது. அந்தத் துளைகள் உடனுக்குடன் மூடிக்கொள்வதால் நமது கண்களுக்குத் தெரியாது ஆனால் அப்படித் துளையிடப்படுவதால் மண் கெட்டிப்படாமல் மிருதுவாக ஆக்கப்படுகிறது.

அப்படி மிருதுவாக்கப்படும் மண் மற்ற நுண்ணுயிர்களின் நடமாட்டத்துக்கும் மழைநீர் எளிதில் மண்ணுக்குள் நுழைந்து தங்கவும் உதவி செய்கிறது.

ஆக மண்ணை மிருதுவாக்குகிறது. அதன் மூலம் மற்ற நுண்ணுயிர்களின் நடமாட்டத்துக்கும் பெருக்கத்துக்கும் உதவி செய்கிறது. மழைநீர் சேகரிப்புக்கும் உதவுகிறது.

மண்புழுக்களை நாம் வளர்ப்பதன் மூலம் எரு உற்பத்தி செய்தாலும் மண்புழுக்களின் இந்த வேலைகளையெல்லாம் நிலத்தில் செய்வது யாh?

அதுமட்டுமல்ல இரண்டாவதாக மண்புழுக்கள் தான் வாழும் மண்ணில் நிலத்திலேயே தனக்கான உணவையும் பெற்று தனது கழிவுகளையும் வெளியேற்றும்போது அந்தக்கழிவுகள் எருவாக உடனுக்குடன் மண்ணில் சேர்ந்து விடுகிறது. அப்படிச் சேர்க்கும்போது அதை தான் நடமாடும் இடங்களில் வெளிக் காற்றுப் படாமல் வெய்யில் படாமல் சேதாரமில்லாமல் சேர்க்கிறது.

அந்த எருவை நிலத்தில் உள்ள அதைச் சார்ந்துள்ள சில நுண்ணுயிரிகள் மேலும் பக்குவப்படுத்தி மேம்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. பல்லுயி;ர்களின் வாழ்க்கை முறை அதுதான் ஆகும்.

ஆனால் தனியாகத் தயாரிக்கப்படும் மண்புழு உரம் உடனுக்குடன் உடனுக்குடன் நிலத்தில் சேர்க்கப்படுதில்லை. அதனால் காற்றின் மூலமும் வெப்பத்தின் மூலமும் ஒரு பகுதி சத்துக்களை இழந்து சக்கையாகிப் போகும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.

மண்புழு இயற்கையாக நிலத்தில் எங்கெல்லாம் தனது கழிவாகிய உரத்தை படியச் செய்கிறதோ அந்த முறையில் நாம் தயாரிக்கும் உரத்தைப் படியச்செய்ய முடியாது.

இந்த நிலையில் நாம் தயாரிக்கும் மண்பூழு உரமும் அதன் பயன்பாடுகளும் இயற்கையில் வாழும் மண்புழுக்களுக்கு எப்படி ஈடாகும்?

அதனால் நாம் மண்புழுக்களுக்கு உணவாகும் விதத்தில் மக்கக்கூடிய குணம் உள்ள பல்வேறுபட்ட பொருட்களை விவசாய நிலங்களில் இட்டு மக்கச்செய்ய வேண்டும். கால்நடைக் கழிவுகளை அது காற்றாலும் வெய்யிலாலும் சாரமிழக்கும் முன்பே நிலத்தில் சேர்க்கவேண்டும்.

எவையெல்லாம் கொண்டு மண்புழு வளர்க்கலாம் என்று நினைக்கிறோமோ அவற்றை யெல்லாம் விவசாய மண்ணிலேயே நேரடியாகச் சேர்த்து மண்புழுக்களுக்கு உணவாக மாற்றும் வேலையை இயற்கையிடமே ஒப்படைக்கவும் வேண்டும். அதுதான் சிறந்த முறை ஆகும்.

அதைவிட்டு இயற்கையாக மண்ணில் வாழ்ந்து வளம் கொடுக்க வேண்டிய மண்புழுக்களை கோழிப் பண்ணைகளில் கோழிகள் வளர்ப்பதுபோல் வளர்க்க நினைத்தால் அந்த முறையில் மண்புழுவளர்த்து நல்ல லாபத்துக்கு மண்புழு உரம் விற்பவர்கள் வாழத்தான் பயன்படுமே தவிர நிலங்கள் வளங்குறைந்து போவதைத் தடுக்க உதவாது.

வேதி உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் கொட்டிக்கொடுத்துக் கடன்காரர்கள் ஆன விவசாயிகள் வருங்காலத்தில் மண்புழு உரத்துக்கும் பஞ்சகாவ்யத்துக்கும் செலவு செய்து கட்டுபடி ஆகவில்லை என்று சொல்லவேண்டிய நிலையும் வரலாம்.

விவசாயிகள் தற்காலத்தில் தங்கள் நிலத்தில் விளையும் நெல்லை விற்றுவிட்டு கடைகளில் விற்கும் அரிசியைத்தான் வாங்கி உண்கிறார்கள்.

அதுபோல தங்களின் கால்நடைகளின் சாணத்தை மண்புழு வளர்ப்பாளர்களுக்கு விலைக்கு விற்றுவிட்டு அவர்களிடமிருந்து மண்புழு உரத்தையும் பஞ்சகாவ்யத்தையும் வாங்கி உபயோகிக்கும் காலமும் வெகு தூரத்தில் இல்லை.

இதுபோன்ற எதிர்ப்புக் குரல் எல்லாம் கடல் அலைகளின் முன் குருவி கீச்சிடுவது போன்றதுதான்.

யார் கேட்கப் போகிறார்கள்?

நன்றி – Subash Krishnasamy
http://www.drumsoftruth.com/2012/06/blog-post_21.html

சொல்லிசை கலைஞனின் சொற்கூர்மை இடித்து உரைக்கும் முதலாளித்துவத்தின் கோரமுகம்

எமது ஈழ விடுதலை போராட்டம் தீவிரவாதமாக்கப்பட்டு, எவ்வாறு முதலாளித்துவமும், சிங்கள இனவாதத்திற்கு பின்னால் ஒளிந்திருந்து செயற்படும், குறு முதலாளித்துவமும், இணைந்து, வளக்கொள்ளையில் ஈடுபடுகிறதோ, அவ்வாறே பாலஸ்தீனத்திலும், மற்றைய ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளிலும், முதலாளித்துவம், விடுதலைப்போராட்டங்களை, தீவிரவாதம் என பெயர்சூட்டி, விடுதலை வேட்கையை அழிப்பதுடன், வளக்கொள்ளையிலும் ஈடுபடுகிறது. இதனை, சிறந்த முறையில் எடுத்து இயம்பும், ஒரு ஆங்கில மொழியில் அமைந்த‌, சொல்லிசை பாடலின் தமிழாக்கமே இக்கட்டுரையாகும். எமது தமிழ் சமூகத்திலும், “இவ்வாறான சொல்லிசை கலைஞர்கள் உருவாகவேண்டும்” என்று எதிர்பார்த்து நிற்கின்றோம். மக்களை போகங்களில் இருந்து விடுவிப்பதற்கும், மண்ணையும், மக்களையும் செழுமைப்படுத்துவதற்கும், நல்வழிப்படுத்துவதற்கும், சமூக அவலங்களில் இருந்து மீட்பதற்கும், நாம் வாழும் சமகாலங்களில், சமூகத்தில், மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிய பார்வையுடன் கூடிய படைப்புக்களை, தொடர்ந்தும் இடைவிடாது கொடுக்கவேண்டியது, கலைஞர்களின் கடமை ஆகும்.

பாடலை செவிமடுப்பதற்கு இணைக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்குங்கள். – இணைப்பு.

அந்த சொல்லிசை கலைஞனின் டுவிட்டர் முகவரி – Logic Army

பாடலின் கருத்துடன் கூடிய தமிழாக்கம் –

” மக்கள், எப்போதும், மற்றைய மனிதர்கள் வாழ்ந்து, துன்பப்பட்டு, மீண்டுவந்த, தாம் இருந்திராத, மிகவும் துன்பகரமான சூழ் நிலைகளை விளங்கி கொள்ளாது, இலகுவில், அவர்களை எடை போடுகிறார்கள். ஒரு பார்வையாளனாக, துன்பங்களை அனுபவித்தவனாக, எமது சமூகம் எவ்வாறு இருக்கிறது, எவ்வாறு புரிந்து நடந்து கொள்வதால், சமூகத்தை சிறப்பாக கட்டியெழுப்ப முடியும் என்பதனை கூற முனைகிறேன்.

காஸாவில் பிறந்து, வள‌ர்ந்து, வாழ்ந்து வருகின்ற‌ மக்கள், தமது மொழி, கலாச்சாரம், விழுமியங்கள் மற்றும் தமது இனத்தினை காப்பதற்காகவும், தமது நிலத்தினை, இஸ்ரேலியர்கள் அபகரிக்காது தடுப்பதற்காகவும், போராடிவருகின்றனர். காஸா மக்களுக்கு அந்நாடு, அவர்களின், எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கும், தாம் வாழ்வதற்கும் அவசியமானது. ஹிட்லரினால் படுகொலை செய்யப்பட்ட, இஸ்ரேலியர்களுக்கும், “ஒரு நாடு அவசியம்” என்பதனை விளங்கிகொள்கிறேன். ஆனால் அதற்காக, அப்பாவி பலஸ்தீன மக்களின் “மூன்றில் இரண்டு பங்கு நிலத்தினை அபகரித்தது” அபத்தமானது என்பதுடன் ஏற்றுகொள்ளப்படமுடியாததும் ஆகும். பலஸ்தீனியர், தற்போது அகதிகளாக்கப்பட்டு, தாம் எப்போதும் சென்றிறாத, லெபனான் போன்ற ஏனைய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். எதிர்த்து, “வெளியேறாமாட்டோம்” என்று போராடும் ஆயிரக்கான பலஸ்தீனியர்கள் கொல்லப்படுகிறார்கள். இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்தை, நான் எதிர்கொள்ளுமிடத்து, அதனையே நானும் செய்வேன். இதனை எதிர்த்து, தற்கொலை செய்யும், போராளியின் மனநிலையினை ஏற்று கொள்கிறேன். ஆனால் தற்கொலை செய்து, தாமும் இறந்து, மற்றைய அப்பாவி உயிர்களை பறிக்கும், தவறான போராட்டத்தை, என்னால் ஏற்றுகொள்ள முடியாது. தற்கொலை செய்ததன் பின் என்ன நடக்கப்போகிறது? காஸாவில் இடம்பெறும் நில அபகரிப்போ, படுகொலைகளோ நிறுத்தப்படப்போகிறதா? ஒரு போதும் இல்லை என்கிறேன். இஸ்ரேலிய நண்பன் ஒருவனுடன் அமர்ந்து, இது குறித்து வினவிய போது, அவன், அங்கு சென்றால், ” நீ உயிருடன் மீண்டும் திரும்பமாட்டாய்” என எனக்கு சொன்னான். நான் அவனிடம், நீ சொன்னது உண்மையென்றால், நீ சென்று உனக்கு மதத்தை போதிக்கும் தோராக்களை அடி என்றேன். ஏனெனில் இஸ்ரேலியர்கள், அப்படி கொலைகளை செய்வார்கள் எனில், அவர்களின் மத போதகர்கள், மதக்கருத்துக்களை, தவறாக தமது மக்களுக்கு போதித்து, அவர்களை தவறான வழியில் நடத்துகிறார்கள் என்று அர்த்தமாகும். “யூதப்படுகொலையில் இருந்து மீண்டு வந்த ஒரு தேசம், அதேபோன்ற படுகொலையினை, இன்னொரு இனத்தவர் மீது எப்படி கட்டவிழ்த்து முடிகிறது?” இந்த கேள்வியினை, இஸ்ரேலியர்கள், ஆறுதலாக இருந்து, தம்மிடம் தாமே கேட்டு கொள்ளவேண்டும். இல்லையா?

Worst time in our history
Worst time in our history

நான், ஒரு பார்வையாளனாக இருந்து பார்த்து புரிந்ததில், “ஏன் இந்த உலகம் இப்படியான இழி நிலையில் இருக்கிறது” என்பதற்கான சில காரணங்களை சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள். எனக்கு தெரியாததை, எனக்கு தெரியும் என்று, நான் ஒருபோதும் கூறமாட்டேன். நாம் ஏன் பிறந்தோம், எதனை நாடி செல்லவேண்டும் என்பது பற்றி எனக்கு தெரியாது? ஆனால், எனக்கும், ஒரு பொதுவான மக்கள் குறிக்கோளிற்காக, யுத்தத்தில் என்னை ஆகுதியாக்குவது பற்றி தெரியும். ஆபிரிக்காவிற்கு சென்ற போது, நன்கு வளர்ந்த, ஒரு இளவயதுடையவர், என்னால் தாங்க முடியாத, பார்க்க முடியாத அளவிற்கு, உடல் நலிந்து போய், நிலத்தில் இருந்து, யாசகம் செய்து, வறுமையில் வாழ்ந்து வர கண்டேன். ஆனால், இருந்தும் அவர், கடவுளை ஒவ்வொரு நாளும் வணங்குகிறார். அத்துடன் அவர் மனோபலத்துடன், சகல வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த வாழ்க்கையை, வாழ்ந்திருக்கவேண்டியவர் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் ஒன்று , இவ் இழிய நிலையை தோற்றிய‌, மேற்கத்திய நாடுகளில் வசிக்கும், தவறான,வளக்கொள்ளையர்களின் கைக்கு, ஒரு போதும் ஆபிரிக்கா செல்லமாட்டாது. இன்றும், இழிய இப்பிறப்புக்கள், ஆபிரிக்க நாடுகளில் உள்ள நிலங்களை கொள்வனவு செய்து, அங்குள்ள வளங்களை கொள்ளையடிப்பது மட்டும் அல்லாது, இலாபம் சம்பாதிப்பதற்காக, ஆயுதக்கலாச்சாரத்ததை, ஆபிரிக்க கண்டம் முழுவதும் பரப்பி, ஆயுத வியாபாரத்தை மேற்கொள்கின்றனர்.

“ஆபிரிக்கா, ஏன், இன்று இவ்வாறான வறுமை நிலையினை எதிர்கொள்கின்றது” என்று யாராவது எனக்கு சொல்லுங்கள்? ஆபிரிக்க மண் எங்கும், வளங்கள் காணப்படுகிறது. அத்துடன், அங்கு, அதி விலை கூடிய வைர வளமும் இருக்கின்றது. மண்ணை இரு கைகளாலும் கோதியள்ளும் போது, வைரம் கிடைக்ககூடியதான வளம் இருக்கும் போது, அச்செந்தழிப்பான கண்டம், ஏன் வறுமையின் கோரத்தில் சிக்கி தவிக்கவேண்டும்? வெள்ளையினத்தவர்கள் தான் இந்நிலைக்கு காரணம் என்று கூறுவது தவறு. ஆபிரிக்க தாயின் அழகினை அறியாத, பதவி ஆசை கொண்டவர்கள்தான், ஆபிரிக்க மண்ணின் இவ்இழியநிலைக்கு காரணம். மிருகங்களிலும் கேவலமான இழிய இப்பிறப்புக்கள், ஆபிரிக்க மண்ணை பணம் சம்பாதிப்பதிக்கும் மண்ணாகவே கண்ணுற்றனர். அத்துடன், இவ்இழிய பிணந்தின்னி கூட்டம், ஆபிரிக்க மண்ணினை, தம் வயிற்றை வளர்த்துக்கொள்வதற்கு கிடைத்த சந்தர்ப்பமாகவே, பயன்படுத்தி இலாபமடைந்தனர். இதனையே, நீங்களோ, நாமோ செய்தால், அதற்கு தீவிரவாதமென பெயர் சூட்டுவர். இச்சொற்களை, நான் சொன்ன சிறப்பான வாக்கியமாக குறித்து கொள்ளுங்கள். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்; நாம் எதனை கொண்டு வந்தோமோ, அதனை மட்டுமே, இறக்கும் போது கொண்டு செல்வோம். “இன்ஷா அல்லாஹ்” எனும் புனித வாக்கியத்தினால், வணங்கப்படும் கடவுளும், உங்களிடமும், எங்களிடமும், நிறைந்து இருக்கும், அன்பு மிக்க இதயத்தினையே குறித்து நிற்கின்றார். எந்த சமயத்திற்கும் உரிமையாளர்கள் கிடையாது. குர்ரானோ, பைபிளோ, யூதர்களின் தோரா போன்ற இறைவழியினை அடைவதற்கு என்று எழுதப்பட்ட சகல புனித புத்தகங்களும், பேனா மையினால் தான் எழுதப்பட்டது. அவற்றில் போதிக்கப்பட்ட கருத்துக்களை, திரிபுபடுத்தியே போதிக்கிறார்கள், என்று நான் நினைக்கிறேன். அனேகமான அரசியல்வாதிகள், பிறக்கும் போது, இனவாதியாக பிறந்தவர்கள் போன்றே, நடந்துகொள்கிறார்கள். அத்துடன், அவர்கள், ஒருவருக்கு ஒருவர், தொடர்புகளை கொண்டவர்களாகவும், உறவினர்களாகவும் இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளின் முன்பாக நாம் பல்வேறுபட்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டோம். “சகோதரன் ஒருவன், பலமற்றவன் என்று அறிந்தபின்பும், அவனை எப்படி உங்களால் தாக்கி கொல்லமுடிகிறது” என ஒரு கூட்டத்தில் “ரொனி பென்” எனும் சிறந்த அரசியல் போராளி ஒரு முறை பேசியதை அறிந்தேன். அப்படிகொலை செய்யும் கொலைகாரர்களின், மூதாதையர் எப்படி இருந்திருப்பார்கள், என்பதை நான் அறியேன். சகோதரர்களே, நீங்கள் என்னுடன் வாதம் புரியும் முன், உங்களிடம் இருந்து வேறுபடாத, அதிசயப்பிறவி அல்லாத, சதாரணமான பார்வையாளனாக இருந்து, நான் சொன்னவற்றை, நான் சொன்ன பார்வையில் இருந்து ஒரு முறை யோசித்து பாருங்கள். அன்புள்ள சகோதரர்களே, எனக்கு வலி தரும், எங்கள் மக்களின் இச்சோகங்களை கேளுங்கள். என் நடைமுறை வாழ்க்கையில் இருந்து கற்ற பாடங்களில் இருந்து, என்னை திருத்தி கொள்ளும் சக்தியை பெறுகின்றேன். அச்சக்தியினை சொற்களாக்கி, உங்களுக்கு தருகின்றேன். என் சொற்கள் உங்களிற்கு தருகின்ற, வடிவத்தினை உற்று நோக்குங்கள். உங்களின் பழைய பாரம்பரியங்களான, எகிப்திய தியான வழிபாட்டு முறைகளை ஆராயுங்கள். பகிரங்கமாக‌ விவாதியுங்கள். முன்னைய காலத்தில், வியாபாரிகளாக நமது நாடுகளிற்கு வந்து, எமது தாற்பரிய வழிபாட்டு முறையை, தவறான முறையில் திரிபுபடுத்தி, அழித்த இழிய பிறப்புக்கள், எம் நாடுகளில், தமது கலாச்சாரங்களின் ஊடாக, எம்மை கடவுள் சொர்க்கத்தில் இருக்கிறார்; மரணம் மக்களிற்கு பொதுவானது என கூறி, வலி மற்றும் வேதனை மிகுந்த மரணத்தினை, மக்களுக்கு இயல்பானதொன்றக்கி, மக்களினை மந்தைகளாக்கி, மக்களிடம், போலியான மத மார்க்கங்களை திணித்து, தாமே மக்களை காக்க வந்த தூதர்கள் என்று, சொல்வதன் ஊடாக, மக்களை ஏமாற்றுபவர்களை இனங்காணுங்கள். சொர்க்கத்திற்கு செல்ல ஆசைப்படும் தேவதூதர்களாகிய எமக்கு, எம் நிலங்களை சொர்க்கபுரியாக‌ மாற்றுவதாக கூறி, எம்மண்ணில் காலடி வைத்த, இந்த பண்டைய வியாபாரிகளின், உண்மை முகத்தினை, அறியுங்கள். இவ்வியாபாரிகள், தம் குறுகிய கால இலாப நலன்களுக்காக, சகல நாடுகளையும் அழித்துவிட்டார்கள். நான் உண்மையை தேடி அறிய விரும்பும் கருணையுள்ளம் கொண்ட மனிதன். இவ்வுலகில் வாழும் மற்றைய மனிதர்களும், என்னை போன்று அன்பு கொண்ட, உண்மையை தேடும் மனிதர்களே. இதுவே எனது பார்வை. என்னால், நான் கற்றவற்றை, உங்கள் கண்ணுக்கு புலப்படும் வகையில் சொல்லிசையினூடாக தர மட்டுமே முடிகிறது. “

தமிழாக்கம் – செங்கோடன்

“சகல மனிதர்களிடத்தும், உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்கள்; இறைவன் தான் உயிராக சகல உயிர்களிடத்தும் நிறைந்துள்ளார். உயிர்களை கொல்லாதீர்கள். “

ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன்

ipkfஅவனுக்கு மீசை அரும்பய்த்தொடங்கிய நாளிலிருந்தே போராட்டமும் ஆயுதங்களோடு முளைவிட ஆரம்பித்திருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்திலேயே அவனது போராட்ட வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. கல்வியன்காட்டிலிருந்து பருத்தித்துறை வரைக்கும் தனது சைக்கிளில் இயக்கக் கூட்டத்திற்குச் சென்று வந்திருக்கிறான். நெல்லியடியில் நான்கைந்து இளைஞர்களோடு ஈழப் போராட்டத்தை வெற்றிகொள்ள மற்றொரு வழியும் இருப்பதாக பலிபீடம் என்ற குழு பிரச்சாரம் செய்துவந்த போது அதனோடு இணைந்துகொண்டான்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் இயக்க வேறுபாடுகளின்றி, சோசலிசம், வர்க்கம், புரட்சி என்று அனைத்துப் போராளிகளும் உச்சரித்தனர். தீவிர வலதுசாரி இயக்கமாகக் கருதப்பட்ட விடுதலைப் புலிகள் கூட சோசலிசத் தமிழீழம் என்ற கருத்தை முன்வைத்தது.

வெளி நாட்டுக்குப் போவதைப் பற்றி யாரும் பேசிக்கொள்வதில்லை. வெறுப்பின் மொழி அன்னிய தேசத்தின் செல்வச் செழிப்ப்பைப் பற்றி வியந்துகொண்ட காலம் இன்னும் தோன்றியிருக்கவில்லை. அப்போதெல்லாம், வெற்றியின் மொழியே இளைஞர்களுக்குத் தெரிந்திருந்தது. மனிதாபிமானமும் மற்றவர்களை மதிக்கின்ற பண்பும் ஒரு புறத்தில் சமூகத்தில் துளிர்விட ஆரம்பித்திருந்த அதே வேளை வெறித்தனமும் வன்மமும் கூட மறுபுறத்தில் வேர்விட ஆரம்பித்தது.

அவ்வாறான ஒரு சூழலில் தான் ஜே.ஆர் ஐச் சந்திக்கிறேன். 1983 ஆம் ஆண்டின் மத்திய பகுதியாக இருக்கலாம். அது யாழ்ப்பாணத்தின் ஒரு மாலைப்பொழுது. சிறிய ஜீப் களில் அரச புலனாய்வுத் துறை சுற்றித்திரிகின்ற காலம். ஜே,ஆர் ஈழப் போராட்டத்திற்கு தமது குழுவே அரசியல் தலைமை வழங்கும் என்கிறான். ஆயுத மோகமும் இந்தியத் தலையீடும் மக்கள் போராட்டங்களால் அழிக்கப்பட்டுவிடும் எனக் கூறிய ஜே.ஆர், அவற்றிலெல்லாம் தான் சார்ந்த குழுவின் பதிவுகள் நிச்சயமாக இருக்கும் என்றான்.

கல்வியன்காட்டில் இயக்கங்கள் ஒன்றுகூடும் தேனீர் சாலை தான் அக்கா கடை. அங்கு கடை மூடும் வரையும் நாங்கள் பேசிக் கொள்கிறோம்.

அங்கிருந்து ஜே.ஆர் இன் வீடு நீண்ட தூரமில்லை. சைக்கிளில் கதைத்தபடியே சென்று ஜே.ஆர் இன் வீட்டை அடைகிறோம். அங்கு குடும்பத்தில் அத்தனை பேரும் அரசியல் உரையாடலில் பங்கு கொள்கின்றனர்.

நான் சார்ந்த டெலோ இயக்கத்தைப் பலப்படுத்துவதே எனது நோக்கம். இந்திய இராணுவப் பயிற்சியை நானும் எதிர்க்கிறேன் ஆனால் இன்று சமூகம் முழுவதும் அதன் பின்னால் அணிதிரண்டு நிற்பதால் அதானால் ஏற்படும் அழிவுகளைத் தடுக்க போராளிகளை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்கிறேன். ஜே.ஆர் ஒத்துக்கொள்ளவில்லை. அவரின் அண்ணன் அது சரி என்கிறார்.

ஜே.ஆர். இன் அண்ணன் ராசபாதையில் அமைந்துள்ள நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிந்தார். கராட்டியில் கறுப்புப் பட்டி வரை பயிற்சி பெற்றுள்ளதாகக் கூறுகிறர்.

எனக்கு இன்னும் பத்தொன்பது வயதுதான். ஜே.ஆர் இற்கு பதினேழு வயது முடிந்திருக்கவில்லை.

டெலோ இயக்கத்தில் ஜே.ஆர் இன் அண்ணைப் போன்று ஒருவர் இணைந்துகொண்டால் எமது இராணுவத்தின் தளபதிகளில் ஒருவராகிவிடலாம் என்று எண்ணிக்கொண்டேன்.

இரண்டு நாட்களின் பின்னர் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் முன்பாகப் பல மணி நேரம் காத்து நின்று அவரைச் சந்தித்தேன்.

அச்சந்திப்புக்கள் சில நாட்கள் மட்டுமே நீடிக்கின்றன. அவருடன் அரசியல் பேசுவதற்குக் என்னுடன் வந்த மிசோ ராம் என்ற ரெலோ உறுப்பினர் அவரைப் பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்பிவைத்ததைப் பின்னதாக அறிந்துகொள்கிறேன்.

ஜே.ஆர் இன் குடும்பம் வறுமையின் விழிம்பிலேயே வாழ்ந்துவந்தது. அண்ணைன் உழைப்பு வயதான தாய் தந்தையர், சகோதரிகள் என அனைவரதும் நாளாந்த வாழ்வாதாரமாக அமைந்திருந்தது. வறுமையின் அமைதிக்குள் வாழ்க்கையின் மகிழ்ச்சியை அனுபவித்திருந்த அந்தக் குடும்பத்தின் வேர் அறுக்கப்பட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

அப்போது இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த அமெரிக்க அடியாள் ஜே.ஆர்.ஜெயவர்த்தன சுருக்கமாக ஜே.ஆர் என்றே அழைக்கப்பட்டார். பார்த்தீபனின் மூக்கு ஜே.ஆர் ஐப் போன்று நீளமானது என்பதால் அவர் ஜே.ஆர் என நண்பர்களால் அழைக்கப்பட்டதால் பின்னாளில் பார்த்தீபன் மறைந்து போய் ஜே.ஆர் மட்டுமே நிரந்தரமானார்.

ஜே.ஆர் ஐச் சந்தித்து நடந்தவற்றை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சில நாட்களின் பின்னர் மங்கிய மாலைப் பொழுது ஒன்றில் அவனது வீட்டிற்குச் செல்கிறேன்.

எனது குரல் கேட்டதும் தனது வாடகை வீட்டின் சுருங்கிய படலை வரைக்கும் அமைதியாக நடந்துவந்த ஜே.ஆர் என்னை வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என்று தூரே அழைத்துச் சென்றார். அண்ணன் இயக்கப்பயிற்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக குடும்பத்தினருக்குத் தெரியும் என்றும் அனைவரும் என் மீது கோபமாக இருப்பதாகக் கூறினார்.

நிலைமைகளைத் தான் விளங்கிக் கொண்டுள்ளதாகவும், உணர்ச்சி வசப்பட்ட இளைஞர்கள் இராணுவப் பயிற்சிக்கு இந்தியாவிற்குச் செல்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் என்னுடன் ஒத்துழைப்பதாகக் கூறினார். இதனால் நாட்டிலிருந்து அரசியல் வேலை செய்பவர்களோடு தான் இணைந்துகொள்வதாகக் கூறினார்.

அதேவேளை ஜே.ஆர் இன் இயக்கத்தை ஆரம்பித்த தேவதாஸ் தென்னிந்தியா சென்ற பின் அவரது தொடர்பும் அறுந்துபோனதாகக் கூறுகிறார்.

சில நாட்களின் பின்னர் நாங்கள் மீண்டும் சந்தித்து டெலோ இயக்கத்தின் அரசியல் பிரிவில் வேலை செய்வதற்காக மனோ மாஸ்ரிடம் ஜே.ஆர் ஐக் கூட்டிச் செல்வதாக உறுதி கூறி விடைபெற்றுக்கொள்கிறேன்.

அப்போது டெலோ இயக்கத்தில் மத்திய குழு ஒன்றை உருவாக்கி அதனை ஜனநாயக மயப்படுத்த வேண்டும் என்ற மனோ மாஸ்டரின் முயற்சியோடு இணைந்திருந்தவர்களின் நானும் ஒருவன்.

அந்த முயற்சியில் தோல்வியடைந்து மனோ மாஸ்டருடன் வெளியேறிய எனது டெலோ இயக்க வாழ்கை எட்டு மாதங்கள் வரை மட்டுமே நீடித்தது.

மீண்டும் நான் ஜே.ஆர் ஐச் சந்தித்த போது, டெலோ இயக்கம் என்னைத் தண்டிப்பதற்காகத் தேடிக்கொண்டிருந்தது. மரண பயத்யத்தில் எனது தலைமறைவு வாழ்க்கை கிராமங்களுகுள்ளேயே நகர்ந்து சென்றது.

ஜே.ஆர் டெலோ இயக்கத்தின் பிரச்சாரப் பிரிவில் முழு நேரமாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
இயக்கத்தில் முற்போக்கு அணியொன்று உருவாகிக் கொண்டிருப்பதாகவும், அதனுடன் இணைந்து இயக்கத்தை மாற்றப் போவதாகவும் கூறிக்கொண்டிருந்தார்.

இயக்கங்களை இனிமேல் மாற்ற முடியாது என்றும் அதற்கு வெளியில் புதிய அரசியல் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் நான் வாதிட்டேன். கிராமங்களின் நான் செய்யும் அரசியல் வேலைகள் பற்றி ஜே.ஆர் இடம் கூறிய போது, அதற்குத் தான் உதவி செய்வதாகக் கூறினார்.

indian_military_training1985 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே டெலோ இயக்கப் போராளிகள் இந்தியாவிலிருந்து பயிற்சியை முடித்துக்கொண்டு ஆயுதங்களோடு நாடு திரும்ப ஆரம்பித்திருந்தனர்.

அண்ணைன் வரவிற்காகக் காத்திருந்த ஜே.ஆர் உம் குடும்பத்தினரும் அந்தத் துயரச் செய்தியை அறிந்துகொண்டனர். ஜே.ஆர் இன் அண்ணன் இந்தியாவில் தற்கொலை செய்து மரணித்துப் போனதாக இயக்கப் பொறுப்பாளர் ஒருவர் செய்தி கொண்டு வந்திருந்தார்.

அது தற்கொலை அல்ல உள் முரண்பாடுகளால் நடத்தப்பட்ட கொலை என்பது உறுதி செய்யப்பட நீண்டகாலம் எடுத்தது.

டெலோ இயக்கத்தின் உள் கட்டமைப்ப்க்களின் மாற்றம் ஏறடுத்த முடியாது என்ற முடிவிற்கு சில காலங்களின் முன்னதாகவே ஜே.ஆர் வந்திருந்தான். வெளியில் மற்றொரு அரசியல் இயக்கம் தோன்றினால் பல ஆயிரம் தியாக உணர்வுள்ள் போராளிகள் டெலோவை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்று ஜே.ஆர் நம்பியிருந்ததால் என்னுடன் கிராமங்களில் வேலை செய்ய ஆரம்பித்தான். தேசிய மாணவர் மன்றம் என்ற மாணவர் அமைப்பை உருவாக்கி நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் தெரு நாடகங்களை அரங்கேற்றினோம். அவற்றுடன் ஜே.ஆர் இணைந்து செயற்பட ஆரம்பித்திருந்தான்.

இதே வேளை ஜே.ஆர் இன் அண்ணன் உயிருடன் இயக்கத்தின் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அவரது வீட்டுக்கு அருகிலிருந்து இந்தியா சென்று பயிற்சியெடுத்த ஒருவர் கூறியதும், ஜே.ஆர் இன் இன்னொரு சகோதரரை இந்தியாவிற்கு அனுப்பி அவரைத் தேடுவது என குடும்பத்தினர் தீர்மானித்தனர்.

மாதகலில் இருந்து கடத்தல் செய்பவர்களின் படகு ஒன்றை ஒழுங்குசெய்து இந்தியா பயணமான அவர், இடை நடுவில் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி மரணித்துவிடுகிறார்.

இப்போது, ஜே.ஆர் இன் குடும்பம் அவரும் சகோதரியும், வயதான தாய் தந்தையருமாகச் சுருங்கிவிடுகிறது. புத்திர சோகமும் முதுமையின் வலியும் பெற்றோர்களைக் கொன்று தின்றுகொண்டிருக்க, ஜே.ஆர் வேலைக்குச் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

அச்சகம் ஒன்றில் பகுதிநேர வேலை பெற்றுக்கொண்ட ஜே.ஆர் இன் ஊதியம் மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குப் போதுமானதாக இருக்கவில்லை. அவனது வயதான தந்தை சினிமா தியட்டர் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்ற ஆரம்பிக்கிறார்.

86 ஆம் ஆண்டில் டெலோ இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான டெலோ போராளிகள் கண்ட இடத்திலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றனர். பலர் வீடு வீடாகச் சென்று கைது செய்யப்படுகின்றனர். சிலர் விசாரணையின் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிலர் விடுதலை செய்யப்படுகின்றனர்.

ஜே.ஆர் உம் அவரது வீட்டுக்கு அருகாமையிலிருந்து பாஸ்கரனும் கைதாகின்றனர். ஜே.ஆர் டெலோவை விட்டு விலகியிருந்ததாலும் அவரது அண்ணனின் படுகொலை தொடர்பான தகவல்களலும் அவர் ஒரு வாரத்தின் உள்ளாகவே எச்சரிக்கைகளின் பின்னர் விடுதலை செய்யப்படுகின்றான்.

பாஸ்கரனின் மரணச் செய்தி சில காலங்களின் பின்னர் அவரது வீட்டாருக்குத் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலையான ஜே.ஆர் இன்னும் தீவிரமாக அரசியல் வேலைக செய்யப்பட வேண்டும் என்றும் , மக்களை அணிதிரட்டி எழுச்சி ஒன்றை ஏற்படுத்தத் தவறினால் இலங்கை அரசாங்கம் ஆயுதப் போராட்டத்தை அழித்துவிடும் என்ற கருத்தை முன்வைக்கிறான். இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தலைமறைவு இராணுவக் குழு ஒன்றை மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக கட்டமைக்க வேண்டும் என்ற கருத்தையும் திட்டத்தையும் முன்வைக்கிறான். டெலோ ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த ஜெகன்நாதன் என்பவரது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று அங்கிருந்த கைக்குண்டுகள் சிலவற்றை எடுத்து கிராமம் ஒன்றில் புதைத்து வைக்கிறோம்.

rajeev1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவதிற்கும் இடையேயான பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது இந்திய இராணுவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் குண்டுவெடிப்புக்களையும் தயார் செய்ய வேண்டும் என ஜே.ஆர் என்னிடம் வந்து விவாதித்தான்.

பேச்சுக்கள் முறிவடைந்ததும், புலிகள் இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி தென்னிந்தியாவில் தங்கியிருந்த டெலோ இயக்க உறுப்பினர்களை இந்திய இராணுவம் தன்னோடு அழைத்து வந்து பாதுகாப்பு அரண்களிலும், முன்னரங்கங்களிலும் பயன்படுத்திக்கொண்டது.

கல்வியன்காட்டு சந்தியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரண் ஜே.ஆர் இன் வீட்டிற்கு அருகில் அமைந்திருந்தது. அங்கு காவல் வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவர் ஜே.ஆர் ஐ அடையாளம் கண்டுகொண்டு அழைத்திருக்கிறார். ஜே.ஆர் அவரோரு நீண்ட நேரம் பேசியிருக்கிறார். நாட்டுக்காகப் போராட அனைத்தையும் துறந்து சென்ற அவர் இந்திய இராணுவத்தின் மாய வலைக்குள் அகப்பட்டிடுப்பதாக ஜே.ஆர் இடம் துயர்பட்டுக்கொண்டார்.

இலங்கைக்கு வந்து தமிழீழம் பெற்றுத் தருவதாகவே இந்திய இராணுவம் தங்களைக் கூட்டிவந்ததாகவும் கூறியிருக்கிறார். ஜே.ஆர் தனது அண்ணனுக்கு என்ன நடந்தது எனக் கேட்டிருக்கிறான்.

அதன் பின்னர் அவ்வழியால் போகும் போதெல்லாம் அவர் ஜே.ஆரை இடைமறித்துப் பேச்சுக்கொடுப்பது வழக்கம். இத்தகவல் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைக்கு எட்டியிருக்க வேண்டும்.

கல்வியன்காட்டுச் சந்திக்கு அருகாமையில் ஜே.ஆர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரால் அவரது தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவல் மட்டும் எனக்குக் கிடைத்தது.

இந்திய இராணுவத்தின் உளவாளி ஒருவரைச் சுட்டுக் கொலை செய்துவிட்டதாக கொலை செய்த புலிகளின் உறுப்பினர்கள் அருகிலிருந்தவர்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.

தனது வாழ் நாள் முழுவதும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த ஜே.ஆர் தெருமுனை ஒன்றில் அனாதரவாகக் கிடந்தான்.
ஜே.ஆர் இன் குடும்பத்திலிருந்த மூன்று ஆண்பிள்ளைகளையும் போராட்டம் பலியெடுத்துக்கொண்டது.

நான் பல்கலைக் கழகத்தில் படிப்பைத் தொடர்வதாகத் தீர்மானித்து இரண்டாவது வருடத்தில் தான் கொலை நடந்தது.

அன்று… கணிதத்தில் சிறப்புப் பிரிவிற்குத் தெரிவு செய்யப்பட்டதற்காக விருந்து கொடுக்குமாறு பல்கலைக்கழக நண்பர்கள் கேட்டிருந்தார்கள் பல்கலைக் கழகத்திற்கு முன்னாலிருந்த அபிராமி என்ற உணவுக்கடையில் நண்பர்களை எதிர்பார்த்து தேனீர் ஒன்றை அருந்திக்கொண்டிருக்கிறேன்.

திடிரென ஒரு குரல் என்னைக் கடுமையான வார்த்தைகளால் விசாரித்தது.

‘எங்களது குடும்பத்தையே சிதைத்துவிட்டு எந்தக் கவலையும் இல்லாமல் தேனீர் சாப்பிடுகிறாயா’ என்று உணவகம் முழுவதும் அதிரும் வகையில் சத்தமிட்டது ஜே.ஆர் இன் அப்பா.

எனக்கு அங்கிருந்து மெதுவாக எழுந்து செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

பின்னர் விசாரித்ததில் பல்கலைக் கழகத்தில் தற்காலிக பாதுகாப்பு உத்தியோகத்தராக வேலை செய்வதற்கு ஜே.ஆர் இன் அப்பா வந்திருந்தாகத் தெரியவந்தது. அந்த தந்தையின் கூற்றில் கோபம் மட்டுமல்ல, நியாயமும் இருந்தது.

நான் வெற்றியின் மொழியைப் பேசி இயக்கத்திற்கு என்ற அழைத்துச் சென்ற நூற்றுக்கணக்கானவர்களுள் ஜே.ஆர் உம் ஒருவன்.

அவர்களில் பெரும்பாலானவர்களை நான் மீளச் சந்தித்ததில்லை. செத்துப் போனவர்கள் எத்தனை பேர் மீண்டவர்கள் எத்தனை பேர் எனக்குத் தெரியாது. என்னுடைய வாழ்கைய ஒருவகையில் செதுக்கிக் கொண்ட சுயநலவாதியாகவே நான் என்னை எண்ணுவதுண்டு. கடந்த கால அழுக்குகளைக் கழுவிக் கொள்வதற்கான மாற்று என்னிடம் இல்லை.

ஆனால் ஜே.ஆர் ஐப் பொறுத்தவரை தியாகி, மாவீரன், என்ற அனைத்து வரைமுறைகளுக்குள்ளும் அடக்கப்படக்கூடியவன்.

ஜே.ஆர் கொல்லப்பட்ட சரியான திகதி எனக்குத் தெரியாது. ஆனால் அவன் கொல்லப்பட்ட முப்பதுவருட இடைக்காலத்தில் புலிகள் சாராத அனைத்துப் போராளிகளும் துரோகிகள் என்ற விம்பத்தை அதிகாரவர்க்கம் திட்டமிட்டு உருவாக்கியது.

சமூகத்தைப் பிளந்து அதன் ஒரு பகுதியைத் துரோகிகளாக்கி ஜே.ஆர் இன் குடும்பத்தைப் பல தடவை கொன்று போட்டிருக்கிறது ஆதிக்க வர்க்கம். இவையெல்லாம் முன்னமே திட்டமிடப்பட்ட செயற்பாடுகள். பல உளவாளிகள் ஆரம்பத்திலிருந்தே இயக்கங்களில் நுளைந்துகொண்டனர். உலகின் உளவு நிறுவனங்களுக்காக வேலைபார்த்த பல்வேறு கூலிகள் இயக்கங்களின் தத்துவார்த்தத் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இன்றும் தியாக உணர்வு மிக்க புலிகளின் போராளிகள் கூட எத்தனையோ ஜே.ஆர்களை மறுபடி மறுபடி கொன்று போடுகின்றனர். அவர்கள் தெரிந்துகொண்ட வரலாறும் அவர்களின் பொதுப்புத்தியும், ஏனென்றே தெரியாமல் செத்துப்போன உணர்வு மிக்க போராளி ஜே.ஆர் ஐ இன்னும் நீண்ட காலத்திற்குத் துரோகியாகவே கருதிக்கொள்ளும். இன்றும் அரசியல் சார்ந்த அடையாளத்திற்குப் பதிலாக இயக்கங்கள் சார்ந்த குழுவாதமே முன்னணி சக்திகளை முகாம்களாகப் பிளவுபடுத்தி வைத்திருக்கிறது.

ஜே.ஆர் இற்கு அருகில் மற்றொரு பிணமாக அனாதையாக நானும் மரணித்துப் போயிருக்கலாமே என பல தடவைகள் துயருற்றிருக்கிறேன். ஒவ்வோரு தடவையும் ஜே,ஆர் கொல்லப்படும் போது நானும் செத்துப் பிழைப்பதாகவே உணர்கிறேன்.

தமது இளவயதின் ஆசாபாசங்களை தொலைத்துவிட்டு, புத்தகங்களுக்கு விடைகொடுத்துவிட்டு போராடுவதற்காக மட்டுமே சென்ற ஆயிரக்கணக்கான தியாகிகள் துரோகிகளாக்கப்பட்டனர். மரணித்தவர்களின் புதைகுழிகளிலும் சாம்பல் மேடுகளிலும் அவர்கள் மீண்டும் மீண்டும் கொலை செய்யப்பட்டனர். இக் கொலைகள் தமிழினத்தை கோரமான மனோநிலை கொண்ட மக்கள் கூட்டமாக உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.

மக்களும் போராளிகளும் அப்பாவிகள் என்றும் அதிகார வெறிகொண்ட தலைமைகளும் அவை வரித்துக்கொண்ட அரசியலின் மூலமுமே தமிழர்கள் தொடர்பான தவறான பிரதிவிம்பத்தை வழங்கிவருகிறதுஎன ஈனக் குரலில் சொன்னவர்களின் வாதம் எடுபடவில்லை.

இன்று ஐ.நாவும் ஏகபோக அரசுகளும் போராட்டத்தின் நியாயத்தை அழிப்பதற்காக அத் தவறுகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன. போராளிகளின் புதைகுழிகளிகளுக்குள் அவர்களை மீண்டும் கொன்று போடுகின்றன.

uk_maveerarஏனைய இயக்கங்களிலிருந்த சந்தர்ப்பவாதிகள் பலர் புலிகளில் இணைந்து தம்மைத் தியாகிகளாகவும், தமது முன்னை நாள் தோழர்களைத் துரோகிகளாகவும் பிரச்சாரம் செய்தனர். புலம்பெயர் புலிகள் இப் போக்கின் பிரதான கருவிகளாகினர். அவர்கள் பெரும்பாலும் தம்மை நியாயப்படுத்துவதற்காக ஏனைய இயக்கங்களிலிருந்த சற்றுப் பேசத் தெரிந்தவர்களை ஆலோசகர்களாக நியமித்துக்கொண்டனர்.

தமது எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காக வெறித்தனமான புலிகள் இயக்க விசுவாசிகளாக அவர்கள் தமது போலித்தனத்தை வெளிப்படுத்திக்கொள்கின்றனர். ஏகாதிபத்தியங்களும் அவற்றின் உளவுப்படைகளும் புலிகள் இயக்கப் போராளிகளைப் போர்குற்றத்திற்காகத் தண்டிக்கும் போது முதலில் காட்டிக்கொடுப்பவர்கள் இவர்களாகத்தானிருப்பார்கள்.

புலிகளை அழித்து சொத்துக்களைக் கையகப்படுத்திக்கொண்ட புலம்பெயர் பினாமிகளில் பெரும்பகுதியினர் தாம் சார்ந்திருந்த இயக்கங்களின் தோழர்களை நினைவுகூர்வதில்லை.

இந்த வியாபாரிகளின் கூட்டிணைவில் நடத்தப்படும் புலம்பெயர் மாவிரர் நிகழ்வில் ஜே.ஆர் என்ற ‘துரோகி’ தலைகாட்டமாட்டான். புலிகளின் தலைவர் பிரபாகரனையே அனாதையாக்கிவிட்டு மாவீரர் வியாபாரம் நடத்தும் இக் கூட்டத்திற்கு ஜே.ஆர் ஒரு கேடா என்ன?

(எதுவும் கற்பனையல்ல…)

கோட்டாபயவின் கொலைப்படை ஆயுதங்களுக்குத் தடை :தொடரும் ஏனைய நிறுவனங்கள்

கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இயங்கிவந்த்த தனியார் இராணுவமான ரக்ண ஆகாஷ லங்கா என்ற நிறுவனம் தொடர்பான தொடர்ச்சியான செய்திகள் இனியொருவில் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகின. இந்த நிறுவனத்தின் ஆயுதக் கிடங்கு மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்த நிறுவனத்தின் ஆயுதங்கள் பயன்படுத்ததாகக் கிடைத்த முறைப்பாடைத் தொடர்ந்தே ஆயுதக் களஞ்சியம் மூடப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தின் ஒரு பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரக்ண லங்காவின் ஆயுதங்கள் பாவனைக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளது.

ரக்ண லங்கா நிறுவனம் மூடப்பட்டதாகத் தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாக ஆயுதங்களைச் சேமித்து வைத்தல் என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. வெள்ளை வான் கடத்தல் உட்பட பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளுக்கு இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் நிலவின.

நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று ஆயுதங்கள் பரிசோதிக்கப்படும் என போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இந்த நிறுவனம் அவன்கார் மரிரைம் -Avant Garde Maritime Services (Pvt) Ltd,- என்ற மற்றொரு இலங்கை நிறுவனத்துடன் இணைந்து சோமாலியக் கடற் பாதுகாப்பு உட்பட பல்வேறு சர்வதேச நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.

பிரித்தானியா இலங்கைக்கு அரசாங்கம் ஆயுதங்கள் வழங்கிய வேளையில் சோமாலியக் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவே ஆயுதங்களை வழங்குவதாகக் கூறியிருந்தது.

ரக்ண ஆகாஷ லங்காவின் தலைவர்ருடன் கோட்டாபய
ரக்ண ஆகாஷ லங்காவின் தலைவர்ருடன் கோட்டாபய

அவன் கார்ட் மரிரைம் உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இலங்கையில் போரின் வெற்றியைத் தொடர்ந்து கோட்டாபய தலைமையில் இராணுவ வியாபாரம் உலகமயப்படுத்தப்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று ஆயுதங்கள் பரிசோதிக்கப்படும் என போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இந்த நிறுவனம் அவன்கார் மரிரைம் என்ற மற்றொரு இலங்கை நிறுவனத்துடன் இணைந்து சோமாலியக் கடற் பாதுகாப்பு உட்பட பல்வேறு சர்வதேச நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.

பிரித்தானியா இலங்கைக்கு அரசாங்கம் ஆயுதங்கள் வழங்கிய வேளையில் சோமாலியக் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவே ஆயுதங்களை வழங்குவதாகக் கூறியிருந்தது.

சிசெல்ஸ், மொரிஷியஸ், இலங்கை, கென்யா, தென்னாபிரிக்கா, சூடான், துபாய், கென்யா, தன்சானியா ஆகிய நாடுகளில் நிறுவனங்களைக் கொண்டுள்ள அவன்கார்ட் மரிரைம் கோட்டாபயவின் மற்றுமொரு இராணுவ முதலீடு.

மைத்திரி – ரனில் அரசு ரக்ன லங்காவின் ஆயுதங்களை மட்டும் கையகப்படுத்துவது இனக்கொலை இராணுவத்தின் உலக மயமாதலைத் தடுத்து நிறுத்தாது.

உலக மயமாகிட நவ தாராளவாதப் பொருளாதரத்தின் நம்பிக்கைக்குரிய இலங்கைப் பிரதிநிதி ரனில் விக்ரமசிங்க ரக்ன லங்காவையும் அவன்கார்ட் மரிரைமையும் முற்றாக அழிக்க முற்படுவார் என்பது சந்தேகத்திற்குரியதே.

ரக்ண லங்காவின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கும் அவன்கார் மரிரைம் நிறுவனம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கும் மைத்திரிபால அரசிற்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராட்டங்களை நடத்துவதற்கு இதுவே சந்தர்ப்பம். தேர்தலில் போட்டியிடுவதற்காக திடீரெனக் குதித்த போலி இடது சாரிக் கட்சிகள் எங்கே?

கோட்டாபயவின் கொலைப்படைகள் தொடர்பான முன்னைய தகவல்கள்:

உலகமயமாகும் கோத்தாவின் கொலைப்படைகள் : நிவேதா நேசன்

சென்னை மாநில கல்லூரி மாணவர் குழுக்கள் அரிவாளுடன் மோதல்: 2 பேர் படுகாயம்

அரிவாள்சென்னை மாநில கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் அரிவாளுடன் மோதிக்கொண்டனர். இதில் 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருவது வழக்கமான செயல்தான். இந்நிலையில், 29 ஏ பேருந்தில் பயணிக்கும் கல்லூரி மாணவர்களுக்கும், 6 டி பேருந்தில் பயணிக்கும் மாணவர்களுக்கும், கல்லூரி தேர்தல் காரணமாக சில பிரச்சனைகள் இருந்துள்ளது.
இதில் 29 ஏ பேருந்தில் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தோல்வியடைந்த மாணவர்கள், 29 ஏ பேருந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் அரிவாளைப் பயன்படுத்தியாகக் கூறப்படுகிறது.
மேலும் கல்லூரி வளாகத்தில் ஆகாஷ் என்ற மாணவரும், அருண்குமார் என்ற மாணவரும் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர். உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி தகவல் தெரிந்ததும் திருவல்லிகேணி உதவி ஆணையர் பீர் முகமது தலைமையில் மாநிலக்கல்லூரி வளாகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா, தொலைக்காட்சிகள், ஊடகங்கள் போன்றன விதைக்கும் வன்முறைக் கலாச்சாரத்தின் மறுபதிப்பே இந்த வன்முறையும் வாள்வெட்டும். பொலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் முதலில் வன்முறைக் ஊடகங்கள், அரசியல் வாதிகளில் ஆரம்பிக்கலாம்.
ஆனால் மாணவர்கள் இடையே இதுபோன்ற மோதல் வருவதற்கு கல்லூரி நிர்வாகத்தினரே காரணம் என்று போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து கூறிய போலீஸ் தரப்பு, ” மாணவர்கள் கொட்டத்தை அடக்க கல்லூரி நிர்வாகம் அனுமதித்தால் நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஜூலையின் ஞாபகங்கள் : ப்ரியந்த லியனகே

ஜூலை மாதம் குறித்த எனது ஞாபகங்களில் முதலில் பதிவாகியிருப்பது 1980, ஜூலை வேலைநிறுத்தம். அப்பா வேலையை இழந்து வீட்டுக்கு வந்தார்.

‘இனி நாங்கள் வாழ்வது எப்படி?’ என அம்மா கேட்டார்.

‘நாம் எப்படியாவது வாழ்வோம். வேலை இல்லாமல் போனாலும், நான் ஒருபோதும் உங்களை பசியோடிருக்க விட மாட்டேன்.’

‘வேலை நிறுத்தத்தை வென்று விட முடியுமா?’ அம்மா கேட்டார்.
‘முடியாது. எந்தவொரு ஒழுங்குமுறையும் இல்லை. ஒருங்கமைப்பு இல்லை. அவ்வாறிருக்கையில் வேலை நிறுத்தத்தை வென்றுவிட முடியாது.’ என அப்பா சொன்னார்.

‘அவ்வாறெனில், ஏன் வேலைநிறுத்தம் செய்கிறீர்கள்?’

‘மனிதர்கள் போராடுகையில் தொழிலை மட்டும் எண்ணி போராடாமல் இருக்க முடியாது. தலைவர்கள் சர்வாதிகாரிகளாக இருந்தபோதிலும், போரிடும் மக்களை நிலத்தில் விழ விடுவது கூடாது. அதனால்தான் நான் வேலைநிறுத்தம் செய்தேன்.’

அன்று அப்பா, தான் தோற்பது பற்றி தெரிந்தே வேலை நிறுத்தம் செய்திருந்தார். அதன்பிறகு எங்களை வாழ வைப்பதற்காக அப்பா நிறைய கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டார். அத் துயரமான வாழ்வின் பங்குதாரியொருவரான அம்மாவும் ஒரு முணுமுணுப்பு கூட இல்லாது அப்பாவுக்கு ஒத்தாசையாக இருந்தார்.

இன்று அம்மாவைப் போலவே அப்பாவும் உயிரோடு இல்லை. எனினும் அந்த ஞாபகங்கள் மாத்திரம் என்னோடு உள்ளன.

ஜூலையின் இரண்டாவது ஞாபகமானது 1983 கறுப்பு ஜூலை. தமிழ் சகோதரர்களை அழித்த அம் மோசமான கறுப்பு ஜூலையின் ஞாபகங்களிடையே சிறுவயதில் எங்களுக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர் கணபதிப் பிள்ளையின் வீடு பற்றியெரிந்ததை நேரில் கண்டமை எனது இதயத்தை நொறுங்கச் செய்த சம்பவமொன்றாகும்.

எல்லாப் பிள்ளைகளுக்கும் தந்தையொருவரைப் போல ஆதரவளித்த வைத்தியர் கணபதிப் பிள்ளையை, அன்று நல்லிதயம் கொண்ட சில சிங்கள மக்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றினார்கள். எனினும் அன்று இந் நாட்டை விட்டுப் போன வைத்தியர் திரும்பவும் இலங்கைக்கு வரவே இல்லை.

கறுப்பு ஜூலை நடைபெற்று 28 வருடங்கள் ஆகின்றன. எனினும் அந்த 28 வருடங்களில் எமது நாட்டு ஆட்சியாளர்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் எதுவும் இல்லை.

நாய்களின் கழுத்துக்களை வெட்டி மக்களின் வீட்டுவேலிகளில் சொருகிச் செல்வது அதனாலேதான். எனவே மனதில் தோன்றிய கவி வரிகள் சிலவற்றோடு இப் பத்திக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்.

கற்றுத் தரும் பாடங்களோடு
பௌர்ணமி நிலவற்ற கறுப்பு ஜூலை
கற்றுக் கொண்ட எவருமற்ற
பௌர்ணமி நிலவற்ற கறுப்பு ஜூலை

– தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

Published on: Jun 28, 2012 @ 8:33