மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 04 : T .சௌந்தர்

பட்டுக்கோட்டையாருடனான இணைவும் , வாழ்வியல் பாடல்களும் :
===================================================

1950 களின் நடுப்பகுதியில் மெல்லிசைமன்னர்களின் இசைப்பயணத்தில் இணைந்து கொண்டு திரைப்பாடல் அமைப்பில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !

மரபில் உதித்து , புதுமையில் நாட்டம் கொண்ட மெல்லிசைமன்னர்களின் இசையுடன் மரபில் நின்று கொண்டே சொல்லும் கருத்தில் புதுமையும் காட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இணைவும் புதிய அலையைத் தொடக்கி வைத்தது.

பாரதி, பாரதிதாசன் போன்ற மகாகவிகளின் தொடர்ச்சியே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பாரதியின் அடியொற்றி பல கருத்துக்களை கூறியவர் என்ற முறையில் அதற்குப் பொருத்தமான இசை வடிவம் கொடுத்த இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களுக்கும் தனியிடம் உண்டு என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

பாட்டு என்பதை பாங்கோடு தந்த பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் சமூக நலன் , ,மக்கள் நலன் என்ற அடிப்படையில் நாட்டார் பாடலின் வேரில் முகிழ்த்தெழுந்தவையாகும்.மண்வளச் சொற்களை சினிமாப்பாடல்களில் அள்ளி,அள்ளிப் பூசியதுடன்,மண்ணின் உணர்ச்சி ததும்பும் பாமரப்புலமையை பண்டிதர்களும் வியக்கும் வண்ணம் புனைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். காவிய நடைகளிலிருந்து மாறி உயிர்த்துடிப்புள்ள பொதுஜனங்களின் மொழியில் பாடல்கள் பிறந்தன.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் பற்றி பின்வருமாறு விவரிக்கிறார் அறிஞர் நா.வானமாமலை.

“சமூக மாறுதல், சமூக உணர்ச்சிகளுக்கேற்ப பாடலைகளைத் தோற்றுவிப்பவன் நாட்டார்கவி. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல.அவர்களுடைய உணர்ச்சிகள் , மதிப்புகள் நலன்களுக்கு ஏற்றார் போல அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தகுதியானவற்றை அவர் பாடினார்.அது ஏற்றுக்கொள்ளப்பட்டு , நாட்டாரது போர் முழக்கமாயிற்று.அது நாட்டார் ரசனைக்காக மட்டுமல்ல அது சினிமா பார்க்கிற எல்லா வர்க்கங்களுடைய அனுபவத்திற்காகவும் எழுதப்பட்டதால் , நாட்டார் பண்பாட்டுக்கருவை , நாட்டார் மொழியிலும் , சிறிதளவு இலக்கிய மொழியிலும் பாடினார்.நாட்டுப்பாடல் எழுத்தறிந்தவர் அனுபவிப்பதற்காக உருமாறுகிறது.இதுவும் நாட்டுப்பாடலே .கல்யாணசுந்தரம் பாடல்கள் நாட்டு மக்கள் உணர்வு , நாட்டு மக்கள் பண்பாடு மதிப்புக்கள் , அவர்கள் ஆர்வங்கள் இவற்றை வெளியிடுகின்றன.”
[தமிழர் நாட்டுப்பாடல் – பேராசிரியர் நா. வானமாமலை ]

ப.ஜீவானந்தம்

தமிழ் திரையைப் பொறுத்தவரையில் உடுமலை நாராயணகவி, கம்பதாசன் , மருதகாசி , தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன் போன்றவர்களை நாட்டுப்புறப் பாங்கில் பாடல்கள் புனைந்தவர்களில் முக்கியமானவர்களாகக் கருதலாம்.ஆயினும் இவர்களில் புதிய சகாப்தத்தை, சாதனையை படைத்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றால் மிகையில்லை.அவரின் பாட்டுத்திறத்தை சரியான வழியில் மதிப்பிடுகிறார் கம்யூனிஸ்ட் தலைவரும் சிறந்த கலைஞருமான தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள்.

/// சராசரி மனிதனின் சாதாரண விருப்பு வெறுப்புக்களையும் மன அசைவுகள் உணர்ச்சிப் பெருக்குகளையும் எளிமையாக நேர்பாங்காக உயிர் துடிப்பாகச் சொல்லும் மரபே நாடோடி மரபு. இதில் சிக்கலான கருத்துக்களுக்கும், உருவங்களுக்கும் இடமில்லை. எளிய விவசாய நாகரிகத்தின் அடிப்படையான உணர்வுகளை வெளியிட்டு வந்திருப்பதையே இந்த மரபில் பார்க்கிறோம்.
சிக்கல் நிறைந்த நிகழ்கால வாழ்க்கைத் தோற்றத்தை மிகச் சாதாரண கண்ணோட்டத்தில் வைத்துக் கூறுவதும், கேட்பவரின் நெஞ்சை உடனடியாகக் கவரும் விதத்தில் நேரான வழி வழியான ஆற்றலோடு வெளியிடுவதும் நாடோடி மரபின் இரட்டைக் கூறுகள்.
………சிந்து, காவடிச்சிந்து, கும்மி, குறவஞ்சி, பள்ளு, ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு, கண்ணிகள் முதலிய பாடல் உருவகங்களின் தோற்றங்களும் சித்தர்கள், தாயுமானவர், இராமலிங்கனார், பாரதி, கவிமணி, பாரதிதாசன் போன்றோர் தத்துவ, சமய, லௌகிக, அரசியல், சமுதாயக் கருத்தோட்டங்களை வெளியிட மேற்படி உருவகங்களையெல்லாம் வளர்த்துப் பயன்படுத்திய முயற்சியும் நாம் கவனத்தில் கொள்ளத்தக்கவை.
…….
அவர் பாடல்களில் நான் மிகச் சிறந்த இரண்டு கூறுகளைக் காண்கிறேன். ஒன்று நாடோடிப் பரம்பரை,அதாவது வழிவழி மரபு மற்றொன்று நவீன முறையில் வெளியிடுதல்[ Modern எஸ்பிரஸின் ] வழிவழி மரபையும் நவீன உணர்வையும் இணைத்துப் பாட்டுத்திறம் காட்டுவது இன்று மிகமிக முக்கியத் தேவையாக அமைந்துவிட்டது.//
என்று விளக்குகிறார் ப.ஜீவானந்தம் .

அந்தவகையில் சிறப்பு மிக்க பட்டுக்கோட்டையின் பாட்டுத்திறம் கும்மி , பள்ளு , காவடி சிந்து , உழவர் பாட்டு , லாவணி , விடுகதை , தத்துவம் , கதைப்பாடல்,தாலாட்டு என நாட்டுப்புற மரபின் அத்தனை அம்சங்களையும் கொண்டு மண்வாசனையுடன் வெளிப்பட்டிருக்கிறது.

சினிமாப்பாடல்களில் பெரும்பான்மையானவை மெட்டுக்கு எழுதப்படும் வழமையில் ,அந்த மெட்டுக்களையும் தாண்டி, பாடல் வரிகளை வாசிக்கும் போது, பாடலின் கருத்தில் எளிமையும், சிக்கலின்றி புரிந்து கொள்ளும் தன்மையும், கருத்துத் தெளிவும் நிறைந்தவையாக இருப்பதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களில் மிக இயல்பாய் காணலாம்.

மேற்குறிப்பிடட நாட்டுப்புறப் பாடல் வகைகளை மையமாக வைத்து மெல்லிசைமன்னர்களும் பட்டுக்கோட்டையாரும் இணைந்து தந்த பாடல்கள் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத வண்ணம் மிக இயல்பாய் அமைத்திருக்கின்றன.பாடல்களின் எளிமையும், கருத்துச்செறிவும் அவை மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்கள் போலல்லாது எழுதப்பட்ட வரிகளுக்கு இசை அமைக்கப்படட பாடல்கள் போலவே திகழ்கின்றன.

மெல்லிசைமன்னர்களுடன் பட்டுக்கோட்டையாரின் அறிமுகம் பாசவலை படத்தில் ஏற்படுகிறது.

அந்தப்படத்திலேயே

குட்டி ஆடு தப்பிவந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக் கிட்டால்
கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்….

என்று தொடங்கும் பாடலில் நாட்டுப்புற பழமொழியையும் ,

பாகப்பிரிவினை படத்தில்

“புள்ளையாரு கோயிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு _ இந்தப் பிள்ளை யாரு?

என்ற பாடலில் லாவணி பாடலையும் ,

அமுதவல்லி படத்தில் [1958]

ஆடைகட்டி வந்த நிலவோ – கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ.

என்ற பாடலில் காவடி சிந்து பாடலையும்,

பதிபக்தி படத்தில்

சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ!
வண்ணத் தமிழ்ச்சோலையே! மாணிக்க மாலையே
ஆரிரோ… அன்பே ஆராரோ!

என்ற தாலாட்டையும்,

தமிழ் நாட்டின் கும்மிப்பாடலை

சின்னச் சின்ன இழைபின்னிப் பின்னிவரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி – நம்ம
தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி
தய்யத் தய்யா தத்தத்தானா தய்யத் தத்தத்தானா…

என்ற பாடலை “புதையல் ” படத்தில் தந்ததுடன் , வேறு பல இனிய பாடல்களையும் இப்படத்தில் தந்தார்கள்.

தமிழ்திரையின் ஒப்பற்ற கவிஞனாகத் திகழ வேண்டிய மாகவிஞன், பாரதி,பாரதிதாசனுக்குப் பின்வாராது வந்த மாமணியான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்வு மிக இளவயதில் ஓய்ந்தது.

நாட்டார் பாடல்களின் வண்டலை தந்த மாகவிஞனின் எதிரொலி அவருக்கு முன்னிருந்த கவிஞர்களையும் அவர் போல எழுத வைக்குமளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தியே ஓய்ந்தது.

என்னதான் சிறப்பாகப் பாடல் எழுதினாலும் இனிய இசை இல்லையென்றால் காலத்தால் அடித்துச் செல்லப்பட்டு விடும்.லாவகமும் நுடபமும் ஒன்றுகலந்த அவர்களின் பாடல்கள் காலத்தை கடந்து நிற்கின்றன. இசையும் பாடலும் ஒன்றை ஒன்று பிரியாத அற்புத ஆற்றல்களின் இணைவு அதை சாதித்திருக்கிறது.அந்த இனிய இசையை தந்த புகழ் எல்லாம் மெல்லிசைமன்னர்களுக்கே !

பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் பாடல்கள் பற்றி அதிகம் பேசப்பட்டிருக்கிறது.ஆனால் மெல்லிசைமன்னர்களுடனான அவரின் இணைவு குறித்தோ அவர்களது இணைவில் வந்த பாடல்கள் பற்றிய குறிப்புக்களை மிக அரிதாவே காண்கிறோம்.அது குறித்து மெல்லிசைமன்னர்களும் அதிகம் பேசியதில்லை.

1959 ஆம் வருட இறுதியில் காலம் மாகவிஞனுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் , தன் வசப்பட்ட காலத்தில் பலவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாடல்களை புனைந்தவர் பட்டுக்கோட்டையார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,மெல்லிசைமன்னர்கள் இணைந்து தந்த புகழபெற்ற சில பாடல்கள்.

காதல் பாடல்களையும் அற்புதமாக எழுதும் ஆற்றல்மிக்கவர் என்பதை நிரூபிக்கும் சில பாடல்கள்:

01 கலைமங்கை உருவம் கண்டு காதல் கொண்டு – மகனே கேள் [1965 ]
02 முகத்தில் முகம் பார்க்கலாம் – தங்கப்பதுமை[1959 ]
03 இன்று நமதுள்ளமே பொங்கும் – தங்கப்பதுமை[1959]
04 அன்பு மனம் கனிந்த பின்னே -படம்: ஆளுக்கொரு வீடு ஆண்டு: 1960
05 கொக்கரக்கோ சேவலே படம்: பதிபக்தி [1958 ]
06 ஆடைகட்டி வந்த நிலவோ படம்: அமுதவல்லி [ 1959 ]
07 சலசல ராகத்திலே படம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு : 19607
08 உனக்காக எல்லாம்… படம்: புதையல் [1957 ]
09 சின்னஞ்சிறு கண்… படம்: பதிபக்தி[ 1958 ] [தாலாட்டு]

தத்துவப்பாடல்களில் புகழ் பெற்ற சில பாடல்கள் :

01 தாயத்து… படம்: மகாதேவி | ஆண்டு: [1957 ]
02 குறுக்கு வழியில்… படம்: மகாதேவி :[ 1957 ]
03 உனக்கேது சொந்தம் – பாதாம் :பாசவலை
04 ஆறறிவில் ஓர் அறிவு அவுட்டு படம்: மகனே கேள் [1965 ]

பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பாடலாசிரியர்களுடன் இணைந்து சிறப்பாக நாட்டார் பண்புகளை தந்தமை மட்டுமல்ல , திரைக்கதையின் சூழ்நிலைகளுக்கு பொருத்தப்பாடான கருத்துக்களுக்கு , இயக்கப்போக்குகளுக்கு இசைந்து நாட்டார்மரபிசையையும் , மெல்லிசையையும் இசைவேட்கையுடன் தந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்!

தமிழ்நாட்டு அரசியல் தமிழ்திரையில் கடுமையாக எதிரொலித்துக்கொண்டிருந்த காலம் என்பதாலும் அதன் சூழல், போக்கு மற்றும் வீச்சுகளுக்கு ஏற்ப அதற்கீடு கொடுத்து உகந்ததொரு இனிய இசையை கொடுத்தார்கள்.

குறிப்பாக ,அக்கால திராவிட இயக்கத்தினரின் கருத்தோட்டப் போக்கின் முதன்மையான உணர்வாக வீர உணர்ச்சி வெளிப்பட்டது.அதன் இன்னுமொரு முக்கிய கூறாக தாலாட்டும் , தாய்பாசமும் அமைந்தது.தாலாட்டிலும் , வீர உணர்வு பாடலிலும் எழுச்சி ஊட்டும் வண்ணம் பாடல்கள் அமைக்கப்படடன.இதனூடே அக்கால இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சியூட்டிடலாம் என்ற திராவிட முன்னேற்றக கழகத்தினரின் கொள்கைக்கு மெல்லிசைமன்னர்களின் இசை மிக வலு சேர்த்தது என்றால் மிகையில்லை.

தமிழ்த்திரைப்படப் பாடல்கள் வாழ்நிலையின் உணர்ச்சிகளை சித்தரித்தன என்ற வகையில் நோக்கும் போது நாட்டுப்புறவியலாளர்கள் கூறும் கருத்துக்கு ஒப்ப பாடல்கள் அமைந்திருப்பதையும் காண்கிறோம்.

மரியா லீச் [Maria Leach – [ 1892 – 1977 ] என்கிற நாட்டுப்புறவியலாளர் வகைப்படுத்தும் பாடல் வகைகள் போலவே திரையிலும் பாடல்கள் அமைக்கப்படடன.

மரியா லீச் [Maria Leach] நாட்டுப்புறப்பாடல்களை பின்வருமாறு வகைப்படுத்துகிறார்

1. உணர்ச்சிப்பாடல்கள் [ Emotional ]
2. வாழ்வியல் பாட்டு [ Daily Life ]
3. வாழ்வின் முக்கிய நிகழ்ச்சி பாடல்கள் [ Crucial Movement of life ]

இதில் உட்பிரிவுகளாக

01. பிறப்பு [ birth ]
02. மணம் [ marriage]
03. பிரிவு [parting]
04. இறப்பு [death]
05. தாயக நாட்டம் [ nostalgia]
06. போர்ப்பாடல் [ war ]

போன்றவற்றை குறிப்பிடுகின்றார்.

நாட்டுப்புறப்பாடல்களை வெவ்வேறு நாட்டுப்புற ஆய்வாளர்களும் வெவ்வேறுவகையாக வகைப்படுத்துகின்றனர்.எனினும் பொதுப்படையில் மரியா லீச் [ 1892 – 1977 ] வகைப்படுத்தும் பாங்கு பொதுமையாக விளங்குகிறது.மனித உணர்வுகள் பொதுமையாக இருப்பதால் நமக்கும் அவை பொருந்திப் போகின்றன.

இவை நாட்டுப்புற இசை சார்ந்த ஆய்வுகளே ஒழிய தமிழ் திரையிசையில் மெல்லிசைமன்னர்கள் தனியே நாட்டுப்புற இசைவடிவங்களில் தான் தமது பாடல்களை இசைத்தார்கள் என்று அர்த்தமல்ல.இந்தவகைப்படுத்தலில் அமைந்த பாடல்களை மெல்லிசைவடிவங்களிலேயே அமைத்து புதுமை செய்தார்கள்.நாட்டுப்புறப்பாங்கிலும் , செவ்விசைவடிவங்களிலும் ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு , ஆர்.சுதர்சனம் கே.வி.மஹாதேவன் போன்றவர்கள் ஏலவே இசைத்திருக்கிறார்கள்.

மரியா லீச் குறிப்பிடும் “வாழ்வியல் பாடல்” வகையிலே நாட்டுப்புற இசையின் அடிநாதத்தோடு , அவற்றை மென்மையாகத் தழுவிக் கொண்டே, அவற்றில் மெல்லிசைச் சாயங்களைப் பூசி ஜாலவித்தை காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள். அதில் புதிய வாத்தியங்களை இணைத்து தந்த இசைக்கோலங்கள் எத்தனை,எத்தனை என்று ஆச்சர்யத்துடன் வியக்கிறோம்.

மெல்லிசை மெட்டில் விழும் எளிமைமிக்க இனிய சங்கதிகள் செவ்வியலிசையின் உச்சங்களைத் தொடும் வண்ணம் அமைக்கப்படத்திலிருந்து அவர்கள் ராக இசையின் ரசப்பிழிவுகளை தேவை கருதி பயன்படுத்தியதையும் காண்கிறோம்.

வாழ்வியல்பாடல்கள் என்ற பகுதியில் வரும் தாலாட்டு ,காதல் ,பிரிவு, திருமணம் , இறப்பு ,நாட்டுப்பற்று,வீர உணர்ச்சி போன்ற பலவிதமான உணர்வுகள் பாடல்களிலும் பிரதிபலித்தன.அதுமட்டுமல்ல ஒரு நிகழ்வின் பல படி நிலைகளுக்கும் பாடல்கள் பயன்படுத்தப்படடன.

தாலாட்டும் , வீரமும்

தாம் பெற்ற பிள்ளையை உறங்கவைக்க பாடும் பாடல் தாலாட்டாகும்.உலகெங்கும் தாலாட்டு என்பது நாட்டார்பாடல் வகையில் சிறப்பிடம் பெற்ற ஒன்றாகும்.தமிழிலும் அவ்விதமே! தாலாட்டைப பாடாத கவிஞர்கள் கிடையாது என்று கூறிவிடலாம். பெரும்பாலும் தாய்மார்கள் தாலாட்டை பாடுவது வழமையாக இருந்து வருகிறது.தாலாட்டுப் பாடும் தாய் தனது நிலையையும் , தன குடும்பத்து நிலைமையையும் , பெருமைகளையும் இணைத்துப் பாடுவது தமிழ்மரபு.

“தமிழ்நாட்டு பாமரர்பாடல்” என்ற நூலை எழுதிய பேராசிரியர் நா.வானமாமலை தாலாட்டுப்பாடலுடனேயே தொடங்குகிறார்.அந்நூலில் வர்க்க வேறுபாடுகளுக்கு ஏற்ப தாலாட்டு மாறுவதை கூறிச் செல்லும் ஆசிரியர் உழைப்போர் கண்ணோட்டத்தில் தாலாட்டு எவ்வாறு அமைந்தது என்பதனை உதாரணங்களோடு விளக்குகிறார்.

தாலாட்டு பற்றி கூறும் தமிழண்ணல் ” இருவர் கொள்ளும் காதலை விட , உடன்பிறந்தோர் கொள்ளும் வாஞ்சையைவிட,ஏன் உலகலக்கும் அருளினைவிட, பிள்ளைப்பாசமே ஆழமானது , வலிமைமிக்கது, உணர்ச்சிமயமானது. இத்தகைய தாயும் சேயும் என்ற உறவுப்பிணைப்பிலே இயற்கைக் கலைதான் தாலாட்டு ” என்பார்.[ காதல் வாழ்வு – தமிழண்ணல் ]

பிள்ளைத் தமிழ் என்பது தமிழிலக்கியத்தில் தனி இலக்கியவகையாகக் கருதப்படுகிறது “பழந்தமிழ் பாடல்களில் பிள்ளைத்தமிழ், உலா முதலிய பிரபந்தங்கள் தெய்வங்களை குழந்தையாகவும் , வீரர்களாகவும் பாடியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.” என்பார் பேராசிரியர் க.கைலாசபதி.[ இரு மகாகவிகள் ]

தாலாட்டுப்பாடலை மிகச் சிறந்த முறையில் தமிழ் சினிமாப்பாடல்கள் வெளிக்கொண்டுவந்திருக்கின்றன.அதிலும் மெல்லிசைமன்னர்கள் உயிர்த்துடிப்பும் ,உணர்ச்சிப்பெருக்கும் , நெகிழ்சியுமிக்க சிறந்த பாடல்களை தமது தனித்துவ முத்திரையோடு அமைத்துத் தந்திருப்பது நம் கவனத்திற்குரியது.

தமிழ் திரையில் ஒலித்த தாலாட்டுப்பாடல்கள் என்றாலே அதில் எல்லோருக்கும் எடுத்த எடுப்பிலேயே நினைவுக்கு வருமளவுக்கு சில முக்கியமான பாடல்களைத் தந்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்.இசைவளப்பெருமை வாய்ந்த பல பாடல்களை புது லாகிரியுடன் தந்திருப்பதையும் அவதானிக்கலாம். பழைய ராகங்களில் நவீனத்தின் பண்புகளை இணைத்து திரையிசையைத் தம் பக்கம் இழுத்துக் கொண்டவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த தாலாட்டுப்பாடல்கள் சில :

01 சிங்காரப்புன்னகை கண்ணாரக் கண்டாலே – படம்: மகாதேவி [1957] – பாடியவர்கள்: எஸ்.ராஜேஸ்வரி + ஆர்.பாலசரஸ்வதிதேவி

அக்காலத்தில் வெளிவந்த தாலாட்டுப் பாடல்களில் புதிய பாங்கில் வந்த பாடல்.மரபாக வரும் ராகங்களில் அல்லாமல் ஆபேரி ராகத்தில் அமைத்ததுடன் அதனுடன் கைத்தட்டு , கோரஸ் , ஹம்மிங் போன்றவற்றை இணைத்து புதுநெறிகாட்டிய பாடல்.அதுமட்டுமல்ல தாலாட்டில் வீரமும் ,பாசமும் இன்றிணைத்தோடும் கருணை , இனிமை பொங்கும் பாடல்.பின்னாளில் ஆபேரியில் தாலாட்டுப் பாடல்கள் வெளிவரும் புதிய நெறியை அமைத்துக் கொடுத்த பாடல்.

இந்தப்படத்தின் வசனத்தையும் , இந்தப்பாடலையும் எழுதியவர் என்ற ரீதியில் கவிஞர் கண்ணதாசன் தனது அன்றைய தி.மு.க.அரசியல் சார்பான கருத்தியோட்டத்தையும் கதைக்கு பொருத்தமாக அமைந்துவிடும் நுடபத்தையும் காணலாம்.இப்பாடலில் காலத்திற்கேற்ற தனது அரசியல் போக்கின் தன்மையையும் காட்டுகிறார் கண்ணதாசன்.

தன்மானச் செல்வங்கள்
வாழ்கின்ற பூமியில்
வில்லேதும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்
மழலைச் சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா

02 மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வது நமது சமுதாயம் – படம்: மகாதேவி [1957] – பாடியவர்கள்: டி.எஸ்.பகவதி

– மானத்தையும் வீரத்தையும் மிகுந்த உணர்ச்சிப்பாங்குடன் கூறும் தலை சிறந்தபாடல் இது.

“அபிமன்யூ போர்க்களத்தில் சாய்ந்துவிட்டான் ” என்று தொடங்கும் வரிகளில் ஹிந்தோள ராகத்தில் பீரிட்டெழும் உணர்ச்சிக் கொந்தளிப்பை மெய்சிலிர்க்கும் வண்ணம் மெல்லிசைமன்னர்கள் காண்பிப்பார்கள்.அதைத் தொடர்ந்து வரும்
” போதும் நிறுத்து ! பாண்டவர்கள் அழுது சோகம் கொண்டாடியிருக்கலாம் , கண்ணீர் வடிக்கும் கோழைப்பாட்டு எனக்குத் தேவையில்லை. என் மகன் வீரமரணத்திற்கேற்ற தாலாட்டு பாடு ! “…. மகாபாரதத்தின் அபிமன்யுவை தனது மகனுக்கு உவமையாக்கி பாடும் இப்பாடலில் இடையிடையே வரும் வசனங்களில் உணர்ச்சி பெருக்கெடுக்கிறது.மெல்லிசைமன்னர்களின் இசையோ உயிரை வதைக்கிறது.

03 தென்றல் வந்து வீசாதோ தெம்மாங்கு பாடாதோ – படம் சிவகங்கைச் சீமை [1959 ]- பாடியவர்கள் :எஸ்.வரலட்சுமி + டி.எஸ்.பகவதி

தாலாட்டுப்பு பாடலில் தனது நாட்டின் பெருமையையும் மன்னன் பெருமையையும் சோகம் பொங்க அமைக்கப்படட பாடல்.

வெள்ளியிலே தேர் பூட்டி
மேகம் போல மாடுகட்டி
அள்ளி அள்ளி படியளக்கும்
அன்பு நிலம் வாடுவதோ….

எனத் தங்கள் குடும்பத்தின் பெருமையை உணர்த்தி விட்டு , வரப்போகும் போரின் துயரத்தையும் அதன் விபரீதத்தையும் நெகிழ்ச்சியுடன் கூறும் பாடல்.

தவளை எல்லாம் குரவையிடும்
தாமரையும் பூ மலரும்
குவளையெல்ல்லாம் கவி இசைக்கும்
வந்து வந்து கூடும் வண்ண எழில் யாவும்
அண்டி வரும் போர் புயலில்
அழிந்து பட சம்மதமோ …….

ஆத்தாள் அருகினில்
அம்மான் மடிதனிலே
காத்திருக்கும் பாலகரும்
கண்ணான மங்கையரும்
போர் மேவி புறப்படுவார்
பொன்னாட்டின் புகழ் வளர்ப்பார்

யார் வருவார் யார் மடிவார்
யார் அறிவார் கண்மணியே

என சோகத்தின் உச்சிக்கு நம்மை அழைத்து செல்லும் பாடலை மெல்லிசைமன்னர்கள் முகாரி ராகத்தில் அமைத்து உணர்ச்சியை பிரதானப்படுத்துகிறார்கள் பாடல் அமைப்பும் பாடிய பாடகிகள் [எஸ்.வரலட்சுமி + டி.எஸ்.பகவதி ] பாடிய பாங்கும் தாய்மையின் குரலை ஓங்கவைக்கிறது. பாடல் வரியும் , இசையும் ஒன்றையொன்று தழுவி உயிர் பெறுகின்ற பாடல். முகாரி ராகத்தில் அமைந்த ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.

03 சின்னஞ் சிறு கண்மலர் செம்பவள வாய் மலர் – படம்: பதிபக்தி 1959 – பாடியவர்: பி.சுசீலா

04 ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ – படம்: பாகப்பிரிவினை 1959 -பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்

05 மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் -படம் மாலையிட்ட மங்கை [1959 ]- பாடியவர் :எம்.எஸ்.ராஜேஸ்வரி

06 காலமகள் கண் திறப்பாள் கண்ணைய்யா – படம்:ஆனந்த ஜோதி [1963 ]- பாடியவர் :பி.சுசீலா

07 நீரோடும் வகையிலே நின்றாடும் மீனே – படம்:பார் மகளே பார் [1963 ]- பாடியவர் :சௌந்தரராஜன் பி.சுசீலா

08 பிள்ளைக்குத் தந்தை ஒருவன் – படம்:பார்த்தால் பசி தீரும் [1963 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்

09 மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க — படம்:பணம் படைத்தவன் [1963 ]- பாடியவர் :பி.சுசீலா டி.எம். சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி

10 கண்ணன் வருவான் கதை சொல்லுவான் – படம்:பஞ்சவர்ணக்கிளி [1963 ]- பாடியவர் :பி.சுசீலா

11 அத்தைமடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா – படம்:கற்பகம் [1964 ]- பாடியவர் :பி.சுசீலா

12 காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே – படம்:சித்தி [1967 ]- பாடியவர் :பி.சுசீலா

13 செல்லக்கிளியே மெல்லப்பேசு – படம்:பெற்றால் தான் பிள்ளையா [1966 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்

14 காதலிலே பற்று வைத்தால் அன்னையடா – படம்:இதுசத்தியம் [1963 ]- பாடியவர் :பி.சுசீலா

15 கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் – படம்:பெற்றால் தான் பிள்ளையா [1966 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன் + பி.சுசீலா

16 செல்லக்கிளிகளாம் பள்ளியிலே – படம்:எங்கமாமா [1968]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்

தாலாட்டில் பலவகைப்பட்ட உணர்வுகளை பிரதிபலித்த பேராற்றலைக் காண்பித்த மெல்லிசைமன்னர்கள் வீர உணர்வை வெளிப்படுத்தும் பாடல்களிலும் தங்கள் தனித்துவத்தைக் காண்பித்தார்கள்.

தமிழர் மரபில் தொன்றுதொட்டு வீரர்களின் பெருமை ,அவர்களுக்கு நடுகல் அமைத்துப் போற்றிய செய்திகளும் பழந்தமிழ் இலக்கியங்களில்
விரவிக்கிடக்கின்றன.வீரர்களைக் கொண்டாடியது மட்டுமல்ல அவர்களை வழிபாடும் செய்தனர்.

இனக்குழு சமுதாய அமைப்பு மாறி பின் தோன்றிய நிலமானிய காலத்து பாடல்கள் வீரயுகப்பாடல்கள் என்பார் பேராசிரியர்.க.கைலாசபதி.

” முதியோள் சிறுவன்
படைத்தழிந்து மாறின னென்று பல கூற
மண்டமர்க் குடைந்த னாயினுண்டவென்
முலை யறுத்திடு வென் “

புறநானூறு – 278

தனது மகனின் முதுகில் காயம்படவில்லை என்று தாய் பெருமைப்படும் பாடல். பெண்களும் வீரத்தில் சளைத்தவர்களில்லை ,போர்க்குணம் மிகுந்தவர்களாயிருந்தனர் எனக் காட்டுகிறது புறநானூறு பாடல்.

வீரர்கள் பற்றிய புகழாரங்களை கூறும் இம்மரபை பின்னாளில் அரசியல் இயக்கங்கள் சுவீகரித்து கொண்டன.குறிப்பாக தமிழ் தேசியத்தையும் , பிராமணீய எதிர்ப்பையும் மற்றும் சோஷலிஸக் கருத்துக்களையும் முழக்கமாகக் கொண்டு திரைப்படத்தை தங்கள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியவர்கள் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக கழகத்தினர்.தங்களை வீர தீரர்களாக காட்டிக்கொண்டிருந்த அன்றைய நிலையில் கட்சித் தொண்டர்களை உசுப்பேற்றவும் தாம் உய்யவும் வழி தேடினர்.

திரைக்கதையில் மட்டுமல்ல பாடல்களிலும் அவை கணிசமாகவே வெளிப்பட்டன. மரபாக இருந்த போக்கை திரைக்கதை , இசை போன்றவற்றின் உறவுகளின் அடிப்படையிலும், திரைப்படத்தை வெற்றிபெற வைக்கும் உத்தியாகவும் வீர உணர்வை வெளிப்படும் பாடல்களை பயன்படுத்தினர்.

1950 களின் ஆரமபத்தில் திராவிட முன்னேற்றக கழக கொள்கை பிரச்சாரப்பாடல்கள் இறந்தகாலத்தின் மீதான பிரேமையும்,ஏக்கமும் , அதோடு அதை புளங்காகிதப்படுத்தி புத்தாக்கம் செய்யும் வகையில் புனையப்பட்டதையும் காண்கிறோம்.

“தமிழன் என்றொரு இனமுண்டு ” என்று தொடங்கும் மலைக்கள்ளன் [ 1954 ] பட டைட்டில் பாடலை திராவிட முன்னேற்றக கழகத்தினரின் அன்றைய கொள்கை விளக்கப் பாடல் என்று சொல்லுமளவுக்கு அமைத்திருந்தார்கள். அது மட்டுமல்ல அதே படத்தில் “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ” என்ற பாடலும் அதி உன்னதமான கருத்துக்களை அள்ளி வீசிய பாடலாகும்.

வீர உணர்வை வெளிப்படுத்தும் பாடல்கள்

01 பறக்குது பார் பொறி பறக்குது பார் — படம்:நீதிபதி [1955 ]- பாடியவர் : கே .ஆர் . ராமசாமி

வீணரை வென்றுவந்த வீரராம்
வென்று வந்த சேரராம் – அந்த
வீராதி வீரராய் போல் சிரிக்குது பாராய்
பாண்டியன் சபையினிலே
பாய்த்தெழும் கண்ணகி போல்
பறக்குது பார் பொறி பறக்குது பார்

“பறக்குது பார் பொறி” பொறி என்று பூடகமாக தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் பாடல் இது.

02 வாழ்வது என்றும் உண்மையே — படம்:ராஜா மலையசிம்மன் [ 1959 ] – பாடியவர் :சீர்காழி கோவிந்தராஜன்

வெற்றியின் பாதை தெரியுதடா
வீணர்கள் கோட்டை சரியுதடா
எட்டுத் திசையும் கொண்டாடவே
எகிறிப் பாய்ந்து முன்னேறடா
முன்னேறடா முன்னேறடா

03 எங்கள் திராவிட பொன்னாடே — படம்:மாலையிடட மங்கை [1959 ]- பாடியவர் : டி.ஆர் . மகாலிங்கம்

விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே
வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே..
எங்கள் திராவிடப் பொன்னாடே.

தி.மு.க இயக்கத்தின் கொள்கை விளக்கப்பாடல் என்ற அளவுக்கு புகழ் பெற்ற பாடல்.படத்தின் கதைக்கும் , இந்தப்பாடலுக்கும் ஏதும் தொடர்பில்லை.மக்களைக் கவர்வதற்கென்றே சேர்க்கப்படட பாடல் இது.

04 வீரர்கள் வாழும் திராவிட நாட்டை — படம்:சிவகங்கை சீமை [1960 ]- பாடியவர் :டி.எம். சௌந்தரராஜன்

மன்றம் மலரும் முரசொலி கேட்கும்
வாழ்ந்திடும் நம் நாடு – இளந்
தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும்
திராவிடத் தீருநாடு
வேலும் வாழும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது

05 அச்சம் என்பது மடமையடா — படம்:மன்னாதிமன்னன் [1960 ]- பாடியவர் :டி.எம். சௌந்தரராஜன் விளங்கினார்.

Errol Flynn

ஆங்கிலப் படங்களில் வீரதீர நாயகனாக திகழ்ந்த ஏரோல் பிளைன் [Errol Flynn ] என்ற நடிகரைப் போல தானும் நடிக்க வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி கொண்டார்.குதிரை ஓட்டம், வாள்வீச்சு , கூட்டமாக வரும் வில்லனின் ஆட்களை அனாயாசமாக அடித்து வீழ்த்துவது , கொடியில் தாவி பாய்வது , உடையலங்காரம் என Errol Flynn பாணியை முழுதாக பின்பற்றியதென்பது தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத ஒன்றாக விளங்கியது.இவையெல்லாம் எம்.ஜி.ஆரை மிகப்பெரிய நட்ஷத்திரமாக வளர்ச்சி பெற உதவி புரிந்தன.

சாகசம் புரியும் நாயகனுக்கு [ எம்.ஜி.ஆர்] திராவிட முன்னேற்றக கழக பாணி வார்த்தை வீச்சுக்களும் கைகொடுத்தன.அதோடு மெல்லிசைமன்னர்களின் புதியபாணி இசையும் புது ரத்தம் பாய்ச்சியது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

திரைப்படத்தில் கதாநாயகன் அறிமுகம் ஆகும் காட்சிக்கு வகைமாதிரியான பாடல் எனபதற்கு முன்னுதாரணமாக அமைந்த பாடல் இது என்று துணிந்து கூறிவிடலாம்.

இந்தப்பாடலுக்கு முன்பே இது போலவே குதிரையில் அல்லது பயணம் செல்லும் போது பாடும்பாடல்கள் பல வெளிவந்த போதிலும் , அவை பயணத்தின் உல்லாசத்தில் எழும் இன்ப உணர்வை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்த நிலையில் ,1952 இல் வெளிவந்த தேவதாஸ் படத்தில் பயணத்தின் போது இயற்கையாக எழும் உற்சாகத்தை , ஊடுருவிச் செல்லும் இன்பத்தை வெளிப்படுத்துவதாக அமைந்த பாடல் ” சந்தோசம் தரும் சவாரி போகும் ” என்ற பாடலாகும்.இந்தப்பாடலையும் இசையமைத்தவர் மெல்லிசைமன்னர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ஆயினும் கதாநாயகனின் உள்ளத்து வேட்கையை ,புத்துணர்ச்சியை அவனின் சமுதாயப்பார்வையை , அவனது இலட்சிய ஆவலை வெளிப்படுத்துவதாக நீலமலைத் திருடன் [1957 ] படத்தில் கே.வி.மகாதேவன் இசையமைத்த ” சத்தியமே லடசியமாய் கொள்ளடா ” என்ற பாடல் ஒரு கொள்கை முழக்கமாக அமைந்த முக்கியமான பாடல் என்று கூறலாம்.

இதே போலவே அரசிளங்குமரி [1961 ] படத்தில் ” ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு சேர்ந்து வருகிறார் ” என்ற பாடலை டி.எம்.சௌந்தரராஜன் , சூலமங்கலம் ராஜலட்சுமி இணைந்து பாடிய பாடலை ஜி.ராமநாதன் இசையமைத்தார்.

இந்தப்பாடலின் பாதிப்பு பின்னாளில் இது போன்ற பாடல்கள் மூலம் கதாநாயகர்களை படத்தின் ஆரம்பத்திலேயே அறிமுகம் செய்யும் வழமை உருவானது.

நாடகத்தில் முன்பாட்டு [ Entrance Song ] என்று அழைக்கப்பட்ட கதாநாயகர்கள் அறிமுகமாகும் காட்சி போல , தமிழ்திரையிலும் நாயகர்கள் இது போன்ற பாடல்களுடன் அறிமுகமாவது ஒரு புதிய போக்காக அமைய மெல்லிசைமன்னர்களின் பாடல்கள் காரணாமாயிருந்தன.

வீரவுணர்ச்சி மட்டுமல்ல வெற்றிக்களிப்பில் உண்டாகும் உற்சாகத்தை ” ஏரு பூட்டுவோம் நாளை சோறு ஊட்டுவோம் ” என்ற பாடலை மகாதேவி படத்தில் மெல்லிசைமன்னர்கள் அமைத்தனர்.

இதே போன்றே திருமணம் மற்றும் அதுதொடர்பான நிகழ்வுகளைச் சிறப்பித்து காட்டும் வண்ணம் தமிழ் திரையிசை பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.திருமண பாடல் என்றதும் என் நினைவுக்கு வரும் முதல் பாடல் “வாராய் என் தோழி வாராயோ ” என்ற பாசமலர் திரைப்படப் பாடலே !

திருமண வைபவங்களில் பாடல்களை ஒலிபரப்பரப்புபவர்களுக்கு உடனடியாக கைவரக்கூடிய பாடலாக இந்தப்பாடல் அமைந்திருந்தது அந்தளவுக்கு திருமணத்தை பாடல்களில் வடித்துக் கொடுத்த முதன்மை இசையமைப்பாளர்கள் மெல்லிசைமன்னர்கள் என்பது மிகையல்ல.

இதுமட்டுமல்ல மணமக்களை பல சந்தர்ப்பங்களிலும் வாழ்த்திப்பாடும் அற்புதமான பாடல்களையும் தந்திருக்கிறார்கள்.

சில எடுத்துக்காட்டுக்கள்.

01 வாராய் என் தோழி வாராயோ – படம்: பாசமலர் [1961 ] -[ மணப்பெண்ணை அழைத்துவரும் பாடல் ]

02 போய் வா மகளே போய் வா மகளே – படம்: கர்ணன் 1964 ] – [ பிள்ளைபெறுவதற்கு தாய் வீடு செல்லும் போது பாடும் பாடல்.]

03 வளையல் சூட்டி – – படம்: கர்ணன் 1964 ] -[1964 ] – [ வளைகாப்புப் பாடல் ]

04 குங்குமப்பொட்டு குலுங்குதடி – – படம்: இது சத்தியம் [1964 ] – [ வளைகாப்புப் பாடல் ]

05 ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – – படம்: கற்பகம் [1964 ] – [ முதலிரவு நேரம் தோழி பாடும் பாடல்]

06 கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு – படம்: படகோட்டி 1964 ] – [ வளைகாப்புப் பாடல் ]

07 கெட்டி மேளம் கட்டுற கல்யாணம் – படம்: சந்திரோதயம் 1967 ]

08 தங்கமணி பைங் கிளியும் தாயகத்து நாயகனும் – படம்:சிவந்தமண் [ 1970 ] [ மணமக்கள் வாழ்த்துப்பாடல் ] – [ இசைத்தட்டில் வெளிவராத பாடல்.]

09 புகுந்த வீடு இனிமையான மல்லிகை பந்தல் – படம்: புண்ணியபூமி [1974 ] –

நாட்டார் பண்பியலில் அமைந்த சில பாடல்களை 1950 பாதிக் கூறிலிருந்து கொடுக்க முனைந்ததைக் காண்கிறோம்.நாட்டுப்புற இசையின் ஓசைநயங்களையும் தேவை கருதி அங்கங்கே மெல்லிசையில் இழைத்து வந்ததைக் காண்கிறோம்.

வீரம் , மானம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது உணர்ச்சி கொந்தளிப்பையும் , தாலாட்டுப் பாடல்களில் தாயின் பாசத்தையும் , கண்ணீர் பெருக்கையும் , தாலாட்டின் வாய் மொழி ஓசையின்பத்தையும் அத்தோடிணைந்த மெல்லிசையின் சுகந்தத்தையும் மிக இயல்பாய் கொடுத்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்.

எழுச்சியும் , கிளர்ச்சியும் மிக்க பாடல்களுடன் தங்களுக்கேயான,தனித்துவமிக்க இசையுலகத்தை படைத்துக்காட்ட 1960 களுக்கு நகர்கிறார்கள்.

[ தொடரும் ]

முன்னையவை:

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 03- T .சௌந்தர்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 01 – T .சௌந்தர்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 02 : T .சௌந்தர்

நாவல் பழத்தினதும் விதையினதும் மருத்துவப் பலன்கள் :உணவே மருந்து, இரசாயன வில்லைகள் அல்ல!

நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை (Jamun) ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும்.
நாவல் மரத்தின் இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்த்து நிர்வாணமாக வெட்கப்பட்டு நிற்க்கும் நாவல் மரம் சந்திரமுகியின் கண்களாக கருமை நாவல் பழங்களை கொத்துகொத்தாக தாங்கி வனப்புடன் ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது.. கிராமங்களில் மரத்தில் ஏறி இதனை உதிர்த்து விற்பனைக்கு எடுத்து வருவார்கள். ஒரு மரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 50 முதல் 80 கிலோ பழங்கள் கிடைக்கும்.நாவல் பழத்தைத் தின்றால் நாவின் நிறம் கருமையாக மாறும். நா வறண்டு நீர் வேட்கை மிகும். இப்படி நாவின் தன்மையை மாற்றுவதால் ‘நா+அல்’ (நாவல்) என்றனர். துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம்.
நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.
தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையான பழம்.
நாவல் பழம் மட்டுமன்றி அதன் விதையிலும், அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் தூளிலும் இயற்கை மருத்துவ அம்சங்கள் உண்டு.
நீரிழிவு நோய்:
நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. தவிர கோப்பியின் சுவையுடன் நாவல் விதையின் தூள் காணப்படுவதால், அதனைக் கோப்பிக்கு மாற்றீடாக அருந்தலாம். நாவல் பழ விதையில் தயாரிக்கப்படும் கோப்பி, இலங்கையிலும் பிற நாடுகளிலும் காணக்கிடைக்கின்றன.
பிற பயன்கள்:
* நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.
* தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.
* நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு.
* நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.
* இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.
நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

இறப்பிற்கு பின்னரான வாழ்வு-அறிவியல் வளர்ச்சி : வி.இ.குகநாதன்

soul-falseகடந்த வெள்ளியன்று( 18-11-16) பிரித்தானிய ஊடகங்களில் அலசப்பட்ட ஒரு முக்கிய விடயமாக 14 வயது சிறுமி (புற்றுநோயால்) தனது இறப்பிற்கு பின்னரான வாழும் ஆசையினை நிறைவேற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்ததனைக் குறிப்பிடலாம். அதாவது இன்றைய நிலையில் குறித்த புற்றுநோயிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இன்னும் ஒரு நூறு வருடங்களில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும். உதாரணமாக நூறு வருடங்களிற்கு முன்னர் உயிர்க்கொல்லி நோய்களான மலேரியா, கசம் போன்றவற்றுக்கு இன்று மருந்து இருப்பது போன்றது. எனவே இறந்த சிறுமியின் உடலினை கடுங்குளிரூட்டல்..(Cryogenics)மூலம் நூறு வருடங்களிற்கோ அல்லது மருந்து கண்டுபிடிக்கப்படும்வரை சேமித்து வைப்பதற்கான அனுமதியினை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

தாய் சிறுமியின் விருப்பத்திற்கு இணங்கியபோதும் விவாகரத்து மூலம் பிரிந்துள்ள தந்தை முதலில் இதனை விரும்பவில்லை ,ஏனெனில் குறித்த வருடங்களிற்கு பின்னர் உயிர்ப்பிக்கப்படும்போது அவரது உறவினர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்பதாகும். ஆனால் தந்தையும் இறுதியில் மகளின் விரும்பத்திற்கு இணங்கினார். நீதிபதியும் மருத்துவமனைக்கே சென்று அனுமதி வழங்கினார். இச் சிறுமி ஒக்டோபர் 17 அன்று இறந்தார்.எனினும் இந்த விடயம் சில சட்ட நடைமுறைகளிற்காக இப்போதே வெளியிடப்படுகிறது. இப்போது இச் சிறுமியின் உடல் கடுங்குளிரூட்டலுடன் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு Michigan Cryonics Institute இல் பராமரிக்கப்படுகிறது.

கடுங்குளிரூட்டல் மூலம் செல்களை உயிருடன் பராமரிக்கும் முறை:

இவ்வாறான பராமரித்தல் முறையினை CRYOPRESERVATION என அழைப்பார்கள். இங்கு குளிரூட்டலிற்கு பனிக்கட்டிகளைப்பயன்படுத்த முடியாது, பனிக்கட்டிகள் உடலிலுள்ள உயிருள்ள செல்களை கொன்றுவிடும். எனவே நிட்ரோஐன் (Nitrogen) வாயுக்களை கணனி கட்டுப்பாட்டுடன் (computer control by nitrogen)வைத்து பின்பு நிட்ரோஐன் (nitrogen)திரவத்தின் உதவியுடன் உடலின் செல்களை காலவரையன்றி சேமித்துவைக்கமுடியும். இவ்வாறு இங்கு (Michigan Cryonics Institute) சேமித்து வைக்கப்படும் 143வது நபர் இச் சிறுமியாகும். இச் செயல்முறைக்கு 37000 பவுண்ஸ் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தங்களது உடல்களையும் எதிர்காலத்தில் சேமித்து வைக்குமாறு Seth Mcfaiane(Family guy creator), Larry King9talkhow host), Birtney Spears(singer) போன்ற பிரபலங்களும் முன்பதிவு செய்துவைத்துள்ளனர். பேராசிரியர் வாரி புல்லர் ( Barry Fuller, a professor in surgical science and low temperature medicine, at University College London) இந்த கடுங்குளிரூட்டல் முறை மூலமான மருத்துவமுறையானது அண்மைய எதிர்காலத்தில் பயன்தரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மூளையின் எண்ணங்கள், நினைவுகளினை பராமரித்தல்:

human-cryoஅறிவியல் துறையில் ஏற்பட்ட மற்றொரு வளர்ச்சியாக மனித மூளையில் சேமிக்கப்பட்டுள்ள எண்ணங்கள், நினைவாற்றல், ஆளுமைத்திறன் என்பவற்றினை ஒரு சிறப்புக் கணனியுடன் இணைப்பதன் மூலம் அவற்றினை மனிதனின் இறப்பிற்கு பின்னரும் செயற்படவைக்கும் இன்னொரு செயற்திட்டமாகும். எண்ணங்கள், நினைவாற்றல், ஆளுமைத்திறன் போன்றன மனித மூளையில் நியூரோன்களின் இணைப்பின் (connections between neurons) மூலமே செயற்படுகின்றன. இதனை கணனிமயப்படுத்தி இறப்பிற்கு பின்னரும் செயற்படவைக்கும் முறையாகும். இங்கு இந்த கணனிமயப்படுத்தப்பட்ட செயற்கை மூளையானது மனித இயற்கையான மூளையின் மிகவும் சிக்கலான செயற்பாட்டுக்கு ஈடாகுமா என்பதில் விஞ்ஞானிகளிற்குள் கருத்துவேறுபாடுகள் உள்ளபோதும் அடிப்படையில் மூளையின் செயற்பாட்டில் எல்லோருமே ஒன்றுபடுகிறார்கள்.

கேள்விக்குள்ளாகும் மதநம்பிக்கைகள்:

reincarnationமேற்குறித்த இரு அறிவியற் கண்டுபிடிப்புக்களும் சகல மதங்களினதும் உடல், ஆன்மா, மறுமை , சொர்க்கம், நரகம் , ஆவி போன்ற பல கருத்துகளிற்கு மரண அடி கொடுத்துள்ளன. எனவே இத்தகைய கண்டுபிடிப்புக்கள் மதப்பிழைப்புவாதிகளின் வயிற்றில் புளியினை க் கரைக்கப்போவது நிச்சயம். அதாவது நவீன அறிவியல் வளர்ச்சியில் ஒரு மனிதனின் இறப்பினை எளிமையாக விளங்கிக்கொள்வதற்கு நாம் அது ஒரு கணனி காலப்போக்கில் தனது செயற்பாட்டினை நிறுத்திக்கொள்வதுடன் ஒப்பிட்டு விளங்கிக்கொள்ளலாம்.

இங்கு கணனியிலிருந்து இறுதியில் எதுவுமே வெளிச்செல்வதில்லை, அதுபோன்றே மனிதனின் உடலிருந்தும் ஆன்மாவோ, ஆவியோ எதுவுமே வெளியேறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவ்வாறு ஆன்மா, ஆவி என்று எதுவுமேயில்லை. ஏற்கனவே டார்வினின் பரிணாமக்கோட்பாட்டினாலும்.(இப்போது பரிணாம நிகழ்வு என்றே குறிப்பிடுகிறார்கள் –Fact not a theory) பெருவெடிப்பு நிகழ்வினாலும் ( Big bang)கடவுளின் படைத்தல் தொழில் அடிவாங்கியிருந்தது. அடுத்த தொழிலான காத்தலிற்கு மதவாதிகளே இப்போது கடவுளை நம்பாமல் சிவசேனா, ஐ.எஸ் (IS) ,பொதுபலசேனா போன்ற அமைப்புக்களை உருவாக்கி கடவுள்களையே அவர்கள்தான் பாதுகாக்கிறார்கள். இங்கு மேற்கூறிய அறிவியலின் புதிய கண்டுபிடிப்புக்கள் மூலம் கடவுளின் எஞ்சியிருந்த அழித்தல் தொழிலும் பறிபோய் கடவுள் செயலற்றவராக்கப்பட்டுள்ளார்.

உடல்-உள காலவரையற்ற அறிவியல் வாழ்வின் சாத்தியம்:

மேற்குறித்த அறிவியல் கண்டுபிடிப்பாகவிருக்கப்போகும் எல்லையற்ற வாழ்வு நிச்சயமாக நிகழுமா என்பது பற்றி விஞ்ஞானிகளிடமே முற்றுமுழுதான உடன்பாடில்லை என்பது உண்மையே. இதனை இரு கோணங்களில் பார்க்கலாம். முதலாவது கோணத்தில் சில நூற்றாண்டுகளிற்கு முன்பு சாதாரண மாரடைப்புக்கே மருத்துவம் இல்லாத காலத்தில் இன்று சாத்தியமாகும் இருதய மாற்றுச்சிகிச்சையினை கற்பனையே பண்ணிருக்கவே முடியாது. அதேபோல இன்று கற்பனை போலத்தோன்றும், ஆனால் அறிவியல் அடிப்படைகளைக்கொண்டுள்ள செயற்திட்டங்கள் ஒரு சில நூறு வருடங்களில் சாத்தியமாகலாம்.. மற்றைய கோணம் எல்லையற்ற வாழ்வு என்றுமே சாத்தியமில்லை என்று தெரிந்து கொண்டே சில விஞ்ஞானிகளும், சில நிறுவனங்களும் நிதி ஒதுக்கீட்டினைப் பெறுவதற்காக இவற்றின் மீதான நம்பிக்கையினை அதிகப்படுத்திக் காட்டுகிறார்கள் என்பதாகும். இவ்விரு கோணங்களில் எது உண்மை என்பதனைக் காலம் தீர்மானிக்கும். இவற்றில் எது உண்மையானாலும் இரண்டு உண்மைகளை மறுக்கமுடியாது.

1. இக் கண்டுபிடிப்புக்கள் மூலம் மருத்துவத்துறை முன்னேற்றமடைந்து மனித வாழ்வு தரத்திலும், காலத்திலும் அதிகரிக்கும்.

2. இவ்வடிப்படைகள் மூலம் மதம், கடவுள் என்பவற்றின் மீதான நம்பிக்கைகள் தகர்த்து எறியப்படும்.

முடிவு:

karlமதரீதியான மறுவாழ்வு, ஆன்மா என்பனவெல்லாம் கற்பனைகள் என்பதனை அறிவியல் தெளிவுபடுத்தியுள்ளது. அறிவியல்ரீதியான எல்லையற்ற வாழ்வு என்பதில் சில அடிப்படைகள் கண்டுகொள்ளப்பட்டுள்ளபோதும் இன்னும் பல வினாக்கள் தொக்கிநிற்கின்றன. ஆனால் ஒரு மனிதன் தனது வாழ்வினை சக மனிதர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பதன் மூலம் எல்லையற்ற வாழ்வினை வாழலாம். அவ்வாறு வாழ்ந்துவரும் ஒரு மனிதனின் பிறந்த ஆண்டின் இருநூறாவது ஆண்டினையே அடுத்தாண்டு கொண்டாடவுள்ளோம். அவர்தான் கார்ல் மார்க்ஸ்.

இலங்கையில் சிங்கள பௌத்தத்தின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த வரலாறு : சபா நாவலன்

இந்தியா நேபாள எல்லையில் தோன்றிய பௌத்தம் பல பிரிவுகளாகி, இலங்கை வரை சென்று இன்றும் அழிவிற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. பௌத்தத்தின் தோற்றமும் வரலாறும் சிங்கள மக்களிடமிருந்து மட்டுமன்றி தமிழ் மக்களிடமிருந்தும் இலங்கை அதிகாரவர்க்கங்களால் மறைக்கப்பட்டுவருகின்றது. வரலாற்று ஆசிரியர்கள் அதிகாரவர்க்கம் சார்ந்து தமது ஆய்வுகளை முன்வைக்கும் போது அது முழுமை பெறுவதில்லை. தென்னிந்தியாவிலிருந்து தமிழ்ப் பௌத்த துறவிகளால் இலங்கையை நோக்கிப் பரவிய பௌத்தம் பல்வேறு திரிபுகள் ஊடாக இன்று சிங்கள பௌத்தமாக மாற்றமடைந்து இலங்கை என்ற நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அச்சுறுத்தி வருகிறது சிங்கள பௌத்தம் என்பது இன்று வெறுமனே ஒரு மதம் சார்ந்த கோட்பாடு அல்ல. காலனியத்திற்குப் பிந்தய காலத்தில் அது பேரினவாதக் கோட்பாடாக மாற்றமடைந்து இன்று இலங்கையை இரத்தத் துளியாக உருவாக்கியுள்ளது. சிங்கள பௌத்தத்தை எதிர்கொள்ள முன்வைக்கப்படும் தமிழ் இனவாதம் அதனை மேலும் வளர்க்கும் ஆபத்தான அரசியல் சூழலில், சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டமே சிங்கள மக்களையும் விடுதலை செய்யும் என்ற உண்மை உணர்த்தப்பட வேண்டும். இந்தியாவில் ஆரம்பித்து இலங்கை வரை விரிவாகும் பௌத்தத்தின் கோட்பாடு மேலோட்டமாக இங்கு முன்வைக்கப்படுகிறது. மேலும் இது செழுமைப்படுத்தல்களுக்கு உட்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

vedasஉபநிடதக் காலகட்டம் என்பது இந்தியாவில் இரும்பு உபயோகத்துக்கு வந்த காலகட்டமாகும். அக்காலத்திலேயே அடிமைச் சமூக அமைப்பு முறைக்கெதிரான சித்தாந்தங்களும் போராட்டங்களும் தீவிரமடைந்தன. நிலத்தோடு மனிதன் பிணைக்கப்பட்டுக் கொண்டிருந்தான். பிராமணர்களின் சமூக ஆதிக்கத்தால் சித்தாந்தங்களிலும் பலம்பெற்றிருந்த அதிகார வர்க்கம் வேத அமைப்பின் உள்ளும் புறமும் போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது.

இருக்கு வேத காலத்தின் தொடக்கநிலையில் காணப்பட்ட வேள்வி முறையானது, பின் வந்த வேத காலங்களிலும் பிராமண ஆதிக்கம் எழுந்த சூழலிலும் மிகப்பெரிய வளர்ச்சியை எய்தியது.

பெரும் பொருட்செலவில் கால்நடைகளைப் பயன்படுத்தி வேள்விகள் நடத்தப்பட்டன. விவசாயத்திற்காக அதிக அளவில் விலங்குகள் பயன்படுத்தப்படாத இந்தக் காலகட்டத்தில் பேரரசுகள் அல்லது சாம்ராஜியங்கள் தோன்றியிருக்கவில்லை.

பேரசுகள் தோன்றும் காலம் நிலப்பிரபுத்துவக் காலம் என அழைக்கப்படுகின்றது. நிலங்களை அதிகமாக உரித்தாக வைத்திருக்கும் அரசர்களே ஆதிக்கம் மிக்கவர்களாகக் கருதப்பட்டன. குறு நில மன்னர்களால் ஆளப்பட்ட குழு நிலை சமூக அமைப்பு முறை தகர்க்கப்பட்ட வேளையில் குறு நில மன்னர்களுக்கு இடையே போர் மூண்டது. போரில் வெற்றிபெற்ற மன்னர்கள் தோற்றவர்களை அடிமைகளாக்க அடிமைச் சமூகம் என்ற அமைப்பு குறுகிய காலத்திற்கு நிலவியது.
சமூக அமைப்பு முறை மாற ஆரம்பித்தபோது விலங்குகளின் தேவை விவசாயத்திற்கு அதிகமானது. இரும்பின் உபயோகம் இதனோடு இணைந்துகொள்ள புதிய உற்பத்தி சக்திகள் உருவாகின.

இந்த வேதவேள்விக் கலாச்சாரத்திற்கு எதிராக வேதத்திற்கு உள்ளிருந்தே எழுந்த முதற் போராட்டத்தின் வெளிப்பாடே உபநிடதச் சிந்தனை என்று கருதப்படுகின்றது. உபநிடதச் சிந்தனை ஞானம், தியானம், முக்தி, ஒடுக்கம் போன்ற சமுதாய நெறிகளை முதன்மைப்படுத்தின.

அடிமைச் சமூகத்திலிருந்து நிலப்பிரபுத்துவத்திற்கு சமூகத்தை நகர்த்துவதில் உபநிடதங்கள் அதிகாரவர்க்கத்திற்குத் துணை சென்றன.

இரும்பு உபயோகத்திற்கு வந்ததிலிருந்து உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட ஆரம்ப மாற்றத்திலிருந்து உருவான சமூகப் பகைப்புலமே இந்த சித்தாந்த மாற்றத்தை முன்நிறுத்திற்று.

இந்தக் காலகட்டத்தின்போதே சமணம், பௌத்தம், போன்ற வேத நிலையிலிருந்து வேறுபட்ட தத்துவங்கள் உருவாகின. கி.மு.7ம் நூற்றாண்டிலிருந்து உருவாகத்தொடங்கிய இந்தச் சமூக அமைப்பிலான மாற்றம் பல ஆண்டுகள் வரையில் தொடர்ந்தன.

கி.மு. 5ம் நூற்றாண்டளவில் உற்பத்தி உறவுகளிடையே உள் முரண்பாடுகள் அதிகரித்தன.

அதிகார சக்திகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. மரணமும் பீதியும் வறுமையும் மேலோங்கியிருந்த இந்தக் காலகட்டம் எல்லாச் சமூக மாற்றங்களினதும் ஆரம்ப கட்டத்தினைப் போலவே துன்பியல் நிறைந்திருந்ததாகக் காணப்பட்டது.

இவற்றுக்கெதிரான போராட்டங்களினதும் நிலப்பிரபுத்துவக் காலகட்ட எழுச்சியின் ஆரம்பத்தினதும் நிறுவன மயமாக்கல்தான் உபநிடதத்தின் தோற்றமும், இதே போல புத்தமதத்தின் தோற்றமுமாகும்.

பௌத்தம் போர்களை ஏற்பதில்லை
பௌத்தம் போர்களை ஏற்பதில்லை

போருக்கு எதிரான புத்தமதம் என்பது சமத்துவத்தையும் சமாதானத்தையும் போதித்தது. தம்மைச் சுற்றியிருந்த சமுதாயத்தில் போரையும் அதனால் ஏற்பட்ட மரணங்களையும் பேரழிவுகளையும் சீரழிவுகளையும் எதிர்த்தவர் புத்தர். ரோகிணி என்ற நதியின் நீருக்காக புத்தரின் உறவு சார்ந்த இனத்தவர் ஆயுதம் தாங்கிப் போராடியதைக் கண்டவர் கௌதம புத்தர்.

கி.மு.7ம் நூற்றாண்டிலிருந்து 5ம் நூற்றாண்டு வரையில் இந்தியா முழுவதும் தீவிரமான நிலப்பிரபுத்துவ மறுமலர்ச்சி ஏற்பட்டது. இக்காலப் பகுதியில்தான் இந்தியா முழுவதும் இருந்த சிறிய இனக்குழுக்களும் அதன் அரசுகளும் மோதிக்கொண்டன. நிலப்போட்டி அதிகரித்துப் பலர் அழிந்துபோயினர். சாம்ராஜ்யங்கள் உருவாகத் தொடங்கின. இதே காலப்பகுதியில் கிரேக்கத்திலும் சிறிய குழுநிலை அரசுகள் அழிந்து சாம்ராஜ்யங்கள் உருவாகின. இந்தியாவைப்போலவே இதனுடன் இணைந்து பல தத்துவங்கள் உருவாகின. அரிஸ்டோட்டில் போன்ற தத்துவாசிரியர்களை இந்தப் போர்கள்தான் உருவாக்கின.

buddhaகௌதம புத்தர் இந்தச் சமூக மாற்றம் உருவாக்கிய மிகப்பெரும் தத்துவாசிரியராவார். பல நூற்றாண்டுகள் முன்னோக்கிச் சிந்தித்தவர் இவர். இந்தியர் சிந்தனை மரபின் முற்போக்குப் பகுதியின் கதாநாயகன். புத்தர் தோற்றம் பெற்ற காலத்தில் மல்வம், மகதம், கோசலம், விரலி முதலிய இனக்குழுப் பிரதேசங்களில் சிறிய இனக்குழுக்கள் அழிக்கப்பட்டு போர்களின் முடிவில் இராசதானிகளும் சாம்ராஜ்யங்களும் உருவாகின. இவரின் காலத்தில் அஜத்சாரு என்ற மன்னன் சாம்ராஜ்யங்களை விரிவுபடுத்துவதில் முன்நின்றதாக வரலாறு கூறும்.

இதனைத் தொடர்ந்து வட இந்தியா முழுவதிலும் இருந்த சாம்ராஜ்யங்கள் தெற்குவரை பரந்து விரிந்தன. இந்த சாம்ராஜ்யங்களின் விரிவாக்கம் இனக்குழுக்களின் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று.

இனக்குழுக்கள் சுய அதிகார நிலையை இழந்து பேரரசுகளின் அங்கங்களாக மாற நேர்ந்தது. அதிகார நிலையில் நிகழ்ந்த இந்த மாற்றம் சமுதாயப் பண்பாட்டு நிலையில் மாற்றங்கள் நிகழவும் வழிகோலியது.

சமூகத்தின் மேற்கட்டுமானமாகிய இந்தச் சமூக, பண்பாட்டு நிலை என்பது மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளானது. பேரரசுகளால் வென்றெடுக்கப்பட்ட இனக்குழுப் பிரதேசங்களில் சமய நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் போன்றவை மையப் பேரரசின் பொதுவான நிலைக்கு ஏற்ற இயைபுபெறவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனூடாக பல புதிய சிந்தனைகளும் தத்துவார்த்த மோதல்களும் உருவாகின.

இந்த நிலையில் பௌத்தம், சமணம், வேதமரபு, ஆரீவகம் போன்ற சிந்தனைகளையும் தத்துவங்களையும் பேணி நின்றோருக்கு அதனைப் பெருந்திரளான மக்களுக்கு ஏற்றதாக ஜனரஞ்சகப்படுத்த வேண்டிய தேவை முன்னெழுந்தது.
அந்தந்த இனக்குழுக்களின் தொழில்முறைகள், பண்பாடு என்பன வர்ணப் பாகுபாட்டுடன் பொருத்தப்பட்டன. சிறிய தெய்வங்கள் வேத மரபின் தெய்வங்களுடனும் வழிபாட்டு முறையுடனும் பிராமண அறிஞர்களால் பொருத்தப்பட்டன. இந்துக் கடவுளான சிவன் சாம்ராஜ்ய ஒருமைப்பாட்டின் குறியீடாக்கப்பட்டார்.

லிங்க வழிபாட்டுடன் சிவ வழிபாடும் இணைக்கப்பட்டது. இந்திய இலங்கையின் பூர்வீக வழிபாடான நாக வழிபாட்டின் குறியீடாக கழுத்தில் நாகம் சுற்றப்பட்டது. புராதன மண்டை ஓட்டு வழிபாடு என்பது குறிக்கப்படுகின்றது.

வேத மரபுக் கதைகள் சிறிய தெய்வங்களை ஒருங்கிணைத்தன. சிவன்- வடக்கு, பார்வதி – வங்காளம், முருகன்- தமிழகம், என்பன பொதுவாக எல்லாத் தெய்வங்களுக்கும் ஒருங்கிணைக்கப்பட்டன.

குறுநிலக் கடவுள் வழிபாட்டு முறையும் அமைப்பு மயப்படுத்தப்பட்டது. பாலைக் கடவுளான கொற்றவை பார்வதியாகவும், குறிஞ்சிக் கடவுளான முருகன் கார்த்திகேயனாகவும் முல்லைக் கடவுளான மாயோன் விஷ்ணுவாகவும் , மருதக் கடவுளான வேந்தன் இந்திரனாகவும், நெய்தல் கடவுளான கடலோன் வருணனாகவும் சித்திரிக்கப்பட்டனர்.

shivaநிலப்பிரபுத்துவ எழுச்சிச் சூழலுக்கேற்ப வேத மரபின் அடிப்படையாகக் கொண்டெழுந்த சமுதாய மாற்றம், பெருந்திரளான மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. உபநிடதக் காலத்தில் கூறப்பட்ட பிரமம் தியானம் என்பனவும் ஆத்மா ஒழுக்கநெறிகள் போன்றவையும் இதிகாச கால தெய்வ நம்பிக்கைக்கேற்ப தெளிவுபடுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. சாம்ராஜ்யங்களின் விரிவாக்கத்தால் சீரழிந்துபோன உள்நாட்டு சமூகக் கட்டமைப்பை சீர்செய்யவும் மக்கள் மத்தியில் எழுந்த சமூக மாற்றத்தினால் எற்பட்ட சீரழிவையும் குழப்பத்தையும் சீர்செய்யவும் ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கையை வலியுறுத்தவும் ஏற்கெனவே உருவாகி வளர்ந்த வர்ணாச்சிரம ஒழுங்கு முறையை கட்டிக்காக்கவும் தெய்வ நம்பிக்கையுடன் கூடியதொரு தத்துவ விளக்கம் தேவைப்பட்டது. இந்தத் தேவையின் பொருட்டே கீதை உருவானது.

சாம்ராஜ்யங்களின் விரிவாக்கத்தின் தொடர்ச்சியாக கலிங்கப்போர் உருவானது. ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் பலிகொள்ளப்பட்டன. அசோகனது சாம்ராஜ்யத்தில் ஒழுங்கு சீர்குலைந்து மக்கள் விரக்திக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. சமாதானத்தைத் தொடர்ந்து சமரசத்தையும் பிரச்சாரம் செய்த புத்தமதக் கொள்கைகளை அசோகனது சாம்ராஜ்யம் முன்நிறுத்தியது.

வட இந்தியாவின் சமூக அமைப்பு முறையும் தென் இந்தியா, இலங்கை போன்றவற்றின் சமூக அமைப்பு முறையும் அதன் மேற்கட்டுமானத்தின் வித்தியாசங்களைக் கொண்டிருந்தன.

திருக்குறள் என்ற திருவள்ளுவர் என்பவரால் எழுதப்பட்ட இருவரிக் கவிதைகளைக் கொண்ட தத்துவநூல், கீதையின் சமகால நூலாகக் கருதப்படுவதுண்டு. தமிழர் வரரலாற்றின் ஆரம்பகாலச் சின்னமாகக் கருதப்;படும் இந்நூல் உருவான காலம் என்பதும் தென் இந்தியாவில் நிலப்பிரபுத்துவ எழுச்சிக் காலமேயாகும்.

tirukural-featஅந்நியப் படையெடுப்புக்களாலும் பெருந்தொகையான அடிமைக் காலாச்சார அமைப்பு முறைகளாலும் தொடர்ச்சியான போர்களாலும் வன்முறை ஆதிக்கம் வட இந்தியப் பகுதிகளில் அதிகரிக்க, தென் இந்தியாவில் இந்த நிலை சற்று மாறுபட்டதாக இருந்தது. அன்பிணைந்திணை என்ற தூய அறவொழுக்கம் அந்தச் சமூகத்தில் போற்றப்பட்டது. இலக்கியத் துறையில் ‘செவியறிவூறு’ என்ற ஒரு துறை ஆளும் வர்க்கத்தைத் தொடர்ச்சியாகக் கண்டித்து நெறிப்படுத்துவதைக் கடமையாகக் கொண்டிருந்ததைச் சுட்டிக்காட்டும் சமூகவியலாளர்கள் பலர் தென் இந்தியாவிலிருந்த ஜனநாயக அமைப்பினைத் தமது ஆய்வுகளின் கருத்தில் கொள்கின்றனர்.

இனக்குழு அமைப்பு முறையும் தோல்வியடைந்த இனக் குழுக்களை அடிமைகளாகப் பாவித்த அமைப்புமுறையும் தகர்ந்து நிலவுடமைச் சமூகம் உருவாகிக் கொண்டிருந்த இந்தக் காலகட்டத்தில் மதம் தொடர்பான உணர்வுகள் நிலவின என்றாலும் வடக்கின் பண்பாட்டுக் கூறுகள் தென்னிந்தியாவில் ஊடுருவியிருந்தாலும் அவை பொதுவான சமூகத்தில் முதன்மைப்பட்டிருக்கவில்லை. கீதை உருவான அதே காலகட்டத்திலேயே எந்த மதக் குழுவையும் சாராத திருக்குறள் உருவானது என்ற வரலாற்றாதாரம் தென் இந்தியாவில் இந்து மத வேதக் கலாச்சார மரபின் ஊடுருவல், சமுதாயத்தின் சகல மட்டங்களிலும் ஊடுருவி இருக்கவில்லை என்பதைக்காட்டி நிற்கின்றது. இறுக்கமான கட்டுக்கோப்புகளற்ற இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த திறந்த சமூக அமைப்பு முறையே நிலவிற்று. தமிழ்ச் சங்கங்களின் நெறிப்படுத்தலால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஜனநாயகம் ஆளுமை செய்தது.

இந்த மரபின் தொடர்ச்சியானது நிலப்பிரபுத்துவ எழுச்சிக்காலப் போர்களின் கொடுமையைத் தணிப்பதிலும் கணிசமான பங்கினை வகித்திருந்தது.
நிலப்பிரபுத்துவ எழுச்சிக் காலத்தில், கி.பி.2ம் நூற்றாண்டுக்குப் பின்னர் இனக் குழுக்களிடையே மோதல்கள் அதிகரித்தன. சாம்ராஜ்யங்களினதும் பேரரசுகளினதும் உருவாக்கத்தால் அழிவுகள் உச்ச நிலையை அடைந்தன. மருத நிலப்பகுதியை மையமாகக் கொண்ட வேந்தர்குலம் தமிழகத்தில் எழுச்சிபெற்றது. போரில் ஆண்களின் இழப்பினால் பாலியல் ரீதியில் சமூகம் சீரழிந்தது. குடும்ப அமைப்புமுறை உடைந்து சமூகச் சீரழிவு உருவாகிக்கொண்டிருந்தது.

இதனை ஒழுங்குபடுத்தவேண்டிய தேவை அதிகார வர்க்கத்திற்கு அவசியமானது.

இந்தியாவின் மற்றைய பகுதிகளைப் போல்லாது தமிழகத்தினைப் பொறுத்த வரையில் மதம் என்பது சமூகத்தை ஒழுங்குபடுத்தும் கருவியாக முன்னெப்போதுமே இருந்ததில்லை. நிலப்பிரபுத்துவ எழுச்சியின்போது ஏற்பட்ட மத அமைப்பிற்கான சமூகத்தேவையை நிறைவுசெய்யவேண்டிய நிலையில் இந்து மதமும் பௌத்த மதமும் வேர்விடத் தொடங்கின.
ஏற்கெனவே இருந்த சமூகச் சீரழிவுகள் ஒரு புறத்தில் துன்பியல் நிறைந்ததாகவும் மறுபுறத்தில் இறுக்கமான சமூகக் கட்டமைப்பைக் கோரி நிற்பதாகவும் இதில் பௌத்தமதம் என்பது வாழ்க்கையைத் துன்பியல் நிறைந்ததாகவும், அதிலிருந்து விடுதலையைத் தேடுவதற்கான தத்துவமாகவும் அமைந்ததால் ஏற்கெனவே இருந்த சமூகச் சீரழிவுகளின் தாக்கத்தாலும், மற்றைய மதங்களின் ஆதிக்கமின்மையாலும், அதனூடாக ஏற்பட்ட மதத்தின் தேவையினாலும் தென்னிந்தியாவிலும் அதன் தொடர்ச்சியாக இலங்கையிலும் பௌத்த மதமும் சமணமும் பரவத்தொடங்கின.

புத்த மதம் கி.பி.3ம் நூற்றாண்டிலேயே தமிழகத்திற்குள் அறிமுகமாகி இருந்தமையை பிராமிக் கல்வெட்டுக்களின் ஆதாரமும், அகநானூறின் பாடல்களும் கூறுகின்றன. அசோகனால் தர்மவிஜயத் தூதுக்குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டபோதே தென்னிந்தியாவிற்கும் அனுப்பப்பட்டிருந்தது.
இதே நேரத்தில், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் சமூகத்தை ஒழுங்குபடுத்தும் பிரதான அமைப்புகளாக கோவில்கள் மட்டுமல்லாது ஏனைய சடங்குகளான திருமணம், கர்ப்பம், மகப்பேறு, ஈமைச்சடங்குகள், புதுமனை புகுதல், போன்ற பல்வேறு வைபவங்களும் அமைந்திருந்தன.

பௌத்தமதம் இந்தச் சடங்குகளையும் ஏனைய ஸ்தாபன முறைகளான கோவில்கள் போன்றவற்றையும் புறக்கணித்தமையால் பௌத்தமோ சமணமோ மக்களின் வாழ்க்கைமுறையின் அடிநிலைவரை சென்று நிலைத்திருக்கவில்லை. எனினும், திருக்குறள், அகநானூறு போன்ற தத்துவங்கள் பௌத்த சமயக் கொள்கைகளை வலியுறுத்தின.

மணிமேகலை, குண்டலகேசி போன்ற தமிழ்ப் பெரும் காப்பியங்கள் பௌத்த தத்துவத்தை வலியுறுத்துபவையாக அமைந்ததுடன் பௌத்தமதத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியையும், அவற்றின் இந்துமதக் கூறுகளையும் காணக்கூடியதாகவும் அமைந்தது.

இந்திய வரலாற்றை அதன் சமூக மாற்றங்களுடன் பொருத்தி ஆராயும் இந்திய சிந்தனை மரபு என்ற நூலில் கலாநிதி நா.சுப்பிரமணியன், புறநானூற்றின் ஒரு பாடலை பௌத்த அறநூலான தம்மபதத்துடன் ஒப்பிடுகின்றார்.

‘காமே வாயாதி நின்னேவா’ என்ற பாளி மொழி வரிகள், புறநானூறின் ‘நாடா கொன்றோ காடா கொன்றோ’ என்ற பாடலின் மொழிபெயர்ப்பாகவே இருப்பதாகச் சுட்டிக் காட்டுகின்றார்.

இதே சமூகப் பகைப்பலத்தின் அடிப்படையிலிருந்துதான் இலங்கையிலிருந்த தமிழர்கள் மத்தியிலும் பௌத்தமதம் பரவத் தொடங்கியது. இது தவிர, புவியியல் சூழ்நிலை காரணமாக தென்னிந்தியாவின் அரசியல் சமூக மாற்றங்கள் இலங்கையையும் பாதித்தன.

சாம்ராஜ்யங்களை விரிவுபடுத்தலுக்கான யுத்தம் என்பது தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வரை விரிந்துசென்றபோது. இலங்கை மன்னர்கள் அதற்கெதிராகப் போராடவேண்டியவர்களாகவும், மக்கள் தொடர்ச்சியான அழிவுகளைச் சந்திக்க வேண்டியவர்களாகவும் ஆயினர். மறுபுறத்தில் இலங்கையை வெற்றிகொண்ட தென்னிந்திய மன்னர்கள் புவியியல் சூழ்நிலை காரணமாகத் தமது சமராஜ்யங்களைத் தொடர்ச்சியாக நிலைப்படுத்திக்கொள்ள முடியாதிருந்தது. இதனால் இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட மன்னர்களுக்கும் தென்னிந்திய மன்னர்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான போராட்டம் மன்னராட்சிக் காலம் முழுவதும் காணப்பட்டது. இந்தப் போர்களினால் ஏற்பட்ட அநர்த்தங்களினால், மத்தியத்துவப்படுத்தப்பட்ட சாம்ராஜ்யத்தை உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் நிலப்பிரபுத்துவ மறுமலர்ச்சியும் தாமதம் அடைந்ததுடன் சமூகம் துன்பியல் நிறைந்ததாகக் காணப்பட்டது.

இலங்கையைப் போத்துகீசர் ஆக்கிரமிக்கும் வரை நிலப்பிரபுத்துவச் சமூகம் முழுமைபெற்ற ஒன்றாக உருவாகவில்லை.

இந்தியப் படையெடுப்புகளும் இந்திய மன்னர்களின் நிலையற்ற ஆட்சிகளும் இந்திய மன்னர்களுக்கு எதிரான உணர்வினை இலங்கை மக்கள் மத்தியில் தோற்றுவித்தது.

mahavamsajpgமகாவம்சக் கதைகளில் கூறப்படும் எல்லாளன்-துட்டகைமுனு போரும், இதே அடிப்படையைக் கொண்டதாகவே அமைகின்றது. இந்திய ஆதிக்கத்திற்கெதிரான உணர்வு இலங்கையில் தேரவாத பௌத்தத்தின் பரவலுக்குப் பின்னர் வலுவேற்றியது.
பௌத்தத்தின் செல்வாக்கும் வேதமரபின் தொடர்ச்சியான இந்து மதத்தின் வளர்ச்சியும் காணப்பட்ட இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், நிலவுடமைச் சமூகக் கட்டமைப்பைப் பேணுவதற்கான கலாச்சாரப் பண்பாட்டுக் கட்டமைப்பையும் கருத்தாக்கங்களையும் பௌத்த மதம் தொடர்ச்சியாக நிராகரித்தமையால், பௌத்தத்தின் வளர்ச்சி புராண, இதிகாசங்களின் பரவலுடன் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

கி.பி.3ம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட இந்தப் பிளவு மகாயான பௌத்தம் என்ற பௌத்தமதத்தின் புதிய பிரிவை உருவாக்க, இதன் பழமைவாதிகளான பௌத்தர்கள், தம்மை தேரவாத பௌத்தர்கள் என வரையறுத்துக் கொண்டனர்.

இந்த மகாயான பௌத்தம் என்பது புராண இதிகாசங்களின் தாக்கத்திற்கு உட்பட்டு இறுதியில் கௌதம புத்தர் என்ற மகா மனிதனை, தத்துவாசிரியரை, புரட்சியாளனை இதிகாச-புராண மாயக் கதைகளின் கதாபாத்திரமாக்கியது.

வேத மரபு என்பது முன்னரே குறிப்பிட்டது போன்று, நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை ஒழுங்குபடுத்தப் பயன்பட்டபோது, இனக்குழுக்களை இணைப்பதற்காக, அந்த மக்களின் சடங்குகளையும், தொழில்களையும் கடவுள்களையும்கூட உள்வாங்கிக்கொண்டு இந்து மதத்தின் அங்கங்களாக இணைத்துக்கொண்டது.

பௌத்த தத்துவம் பரவத் தொடங்கியபோது அதன் புரட்சிகரமான தத்துவார்த்தப் பகுதிகளைக் கண்டு பயந்த ஆளும் வர்க்கத்தினரும் அதன் தத்துவகர்த்தாக்களாகவும், நெறியாளர்களாகவும் திகழ்ந்த பிராமணர்களும், கௌதம புத்தரையும் ஒரு புராணக் கதாநாயகனாக உள்வாங்கிக்கொண்டு, நவீன சமூக விஞ்ஞானத்திற்கு ஈடான உபநிடதக் காலத்து பௌத்த தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டனர்.

இந்த மகாயான பௌத்தத்தின் தாக்கம் இலங்கையிலும் எதிரொலித்தது.

கி.பி. 3ம் நூற்றாண்டளவில், நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் தொடக்க காலங்களில் தமிழ்நாட்டில் உருவாகிய மகாயான பௌத்தம் என்ற பிரிவு, கி.பி. 6ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இந்து சமயப் பாதிப்பு மேலோங்கிய சமூகப் பின்னணியில், மச்ச புராணம், பாகவத புராணம் என்பவற்றின் அடிப்படையில் புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என மகாயானம் உள்வாங்கிக்கொண்டது. கி.பி. 7ம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ஒன்று இதை உறுதிப்படுத்துகின்றது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்த பௌத்த கோவில்கள் அனைத்தும் விஷ்ணு ஆலயங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

இலங்கையில், கி.பி. 5ம் நூற்றாண்டில், ஐந்து தென்னிந்திய அரசர்களின் தொடர்ச்சியான 27 ஆண்டுக்கால ஆட்சி நிலவியது. இவர்களின் ஆட்சிமுறை நேரடியான மன்னர் ஆட்சி அமைப்பாக இல்லாதிருந்தமையாலும், வரலாற்று, புவியியல் காரணங்களால், தமிழகத்துடன் வேறுபட்டு நின்றதாலும், நிலையற்றிருந்ததாலும், ஏனைய இடங்களின் சாம்ராஜ்ய விரிவாக்கங்களின்போது மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களின்போது வழங்கப்பட்ட தத்துவார்த்த ஒருமைப்படுத்தலை வழங்குவதற்கான சாத்தியப்பாடு இருந்ததில்லை. எதேச்சையான இந்த அதிகாரப் போக்கென்பது நிலப் பிரபுத்துவத்தின் சீரான வளர்ச்சிப் போக்கிற்கும், குழநிலை சமூக அமைப்பிற்கும் இடையில் ஒரு குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. நிர்வாகம் சீர்குலைந்திருந்தது. நிலப்பிரபுத்துவ காலம் முழுவதும் இந்தியாவெங்கும் இருந்த பிராமண ஆதிக்கம் இலங்கையில் இன்றுவரை இல்லாதிருந்ததும் இதன் தொடர்ச்சியேயாகும். இந்த நிலையில் பௌத்த தத்துவம் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்ற ஆரம்பித்தது.

கி.பி. 6ம் நூற்றாண்டில் உருவான இந்தச் சமூகப் பகைப்பலத்தின் பின்னணியில், இதே காலப்பகுதியில் 5ஆவது தென்னிந்திய மன்னனைத் தோற்கடித்த தாதுசேனனின் மாமாவான மகாநாம தேரவால் மகாவம்சம் எழுதப்பட்டது.

இந்து தத்துவத்தின் அமைப்புமயப்படுத்தப்பட்ட ஆதிக்கம் இல்லாத நிலையில், மக்கள் மத்தியில் பௌத்தம் பரவியிருந்த நிலையில், தென்னிந்தியப் படையெடுப்பின் ஒரு பகுதியாக, அடையாளமாக தென்னிந்தியாவில் உருவான மகாயான பௌத்தம் முன்னிறுத்தப்பட்டது.

இந்த முரண்பாட்டின் அடிப்படையிலிருந்துதான் இந்திய சாம்ராஜ்ய விரிவாக்கலில் இருந்து இலங்கை தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முற்பட்டது.

இந்நிலையில் உருவான தேரவாத, மகாயான பௌத்த பிரிவுகள் என்பன சிங்கள மொழியின் உருவாக்கத்திற்கும் காரணமாக அமைந்திருந்ததுடன், தமிழ் மொழி என்பது மகாயான பௌத்தத்தின் ஊடகமாகக் கருதப்பட வழிவகுத்ததுடன் இந்த முரண்பாட்டை பிற்காலத்தில் பிரித்தானியர்கள் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தி இலங்கை என்ற அழகிய நாட்டை இரத்தத்தால் குளிப்பாட்டவும் வழிவகுத்தது.

இவ்வாறு 6ம் நூற்றாண்டில் உருவான இரு பௌத்தப் பிரிவுகளுக்குப் பின்னர், இலங்கையில் நிலப்பிரபுத்துவ வளர்ச்சியின் காலகட்டம் பெரும்பகுதியும் இந்து மதத்தால் உள்வாங்கப்பட்ட பௌத்தத்திற்கும், பௌத்த மதத்திற்கும் எதிரான போராட்டமாகவே அமைந்தது.
6ம் நூற்றாண்டில் உருவான புராண இதிகாசங்களின் பாணியிலான மகாவம்சம், 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட அதிகாரப் போராட்டங்களை, இதிகாசங்களையும் புராணங்களையும் போலவே மக்கள்மயப்படுத்த முற்பட்டது. இதன் ஒரு வடிவமே எல்லாளச் சோழனுக்கும் துட்டகாமினிக்கும் இடையில் நடந்த போராட்டம் தொடர்பான மகாவம்சத்தின் விவரணையாகும்.

உலகத்தில் எந்த நாட்டிலும், நிலப்பிரபுத்துவ காலகட்ட முரண்பாடு என்பது மொழிகளுக்கு இடையேயான முரண்பாடாக இருந்ததில்லை. மன்னர்களுக்கும் இராசதானிகளுக்கும் இடையிலான முரண்பாடாகவே அமைந்திருந்தது. மன்னர்களும் இராசதானிகளும் சாம்ராஜ்யங்களும் மாறும்போது நாட்டின் எல்லை சுருங்கியும் விரிந்தும் வேறுபட்ட மொழிகளையும் பண்பாடு, கலாச்சாரங்களையும் கொண்ட மக்களையும் இராசதானி என்ற சங்கிலிக்குள் இணைத்தது. நிலப்பிரபுத்துவம் வலுப்பெற அதனை மேலும் நிலைநிறுத்தும் கருவியாக மதங்கள் உருவாகின. இந்த மதங்கள் மட்டுமே மக்களிடையே வேறுபாடுகளை உருவாக்கின. மன்னராட்சியின் கீழ்மட்ட அமைப்பு வடிவங்களாக மதங்கள் மாறுதலடைந்தபோது சாம்ராஜ்யங்களிடையேயான முரண்பாடு மதங்களிடையேயான முரண்பாடாகவும் உருவகப்படுத்தப்பட்டது. இதன் ஒரு வடிவமாகவே கிறிஸ்தவத்திற்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையேயான முரண்பாடு இரு வேறுபட்ட சாம்ராஜ்யங்களுக்கு இடையேயான முரண்பாடாகச் சித்திரிக்கப்பட்டது.

இருப்பினும், ஒரு மன்னன் இன்னொரு மன்னனை வெற்றிகொண்டு, தனது ராஜ்யத்தை நிலைநிறுத்திக்கொள்ளும்போது, மக்களும் அந்த ராசதானிக்குள் தம்மை இணைத்துக்கொண்டனர்.
இதே காரணங்களால், தமிழ்-சிங்கள முரண்பாடு என்பது 19ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட வரலாற்றுக்காலப் பகுதியில் எப்போதுமே பிரதான முரண்பாடாகவோ அடிப்படை முரண்பாடாகவோ இருந்ததில்லை. மாறாக மக்களிடையேயான முரண்பாடென்பது ராசதானிகளுக்கும் மன்னர்களுக்கும் இடையிலான முரண்பாடாகவும் இதன் தொடர்ச்சியாக மதங்களிடையேயான முரண்பாடாகவுமே அமைந்திருந்தது.

மூன்றாம் உலக நாடுகள் பற்றியதும் குறிப்பாக இலங்கை பற்றியதுமான நவீன வரலாறு என்பது 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே எழுதப்பட்டது.

பெரும்பாலான வரலாற்றாசிரியர்களும், சமூகவியலாளர்களும் பிரித்தானிய அல்லது ஆதிக்க நாடுகளின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாகவே இருந்தனர். பிரித்தானியர்களின் ஒரே நோக்கம் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதாகவே இருந்தது. இதனால் சமூகவியலாளர்களும் வரலாற்றாசிரியர்களும் நாடுகளின் வரலாற்றுப்போக்குத் தொடர்பான சரியான பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமல்லாது, பிரித்தானிய ஏகாதிபத்திய ஆதரவு அறிவுஜீவிகளினாலும் அதன் கல்வி மற்றும் ஆய்வுமுறையாலும் காலனி ஆதிக்க நலன்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளையும், தத்துவங்களையுமே தமது ஆய்வகளின் ஆதாரமாகக் கொண்டிருந்தனர்.

இதன் அடிப்படையிலிருந்தே 6ம் நூற்றாண்டின் சமூகப் பகைப்புலத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட மகாவம்சம், பிரித்தானிய ஆட்சியாளர்களால் பாளி மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு இந்த இரு இனங்களுக்கும் இடையேயான முரண்பாடு கூர்மைப்படுத்தப்பட்டபோது இதற்கெதிரான கருத்தாக்கங்கள் எழுந்திருக்கவில்லை.

ஆனால் இந்த மகாவம்சம் என்பது சிங்கள மக்கள் மத்தியில் அடிப்படைவாதக் கருத்தை உருவாக்குவதற்கும் பௌத்த அடிப்படைவாதப் பாணியிலான விகாரைகளை ஆதாரமாகக் கொண்டு இனவாத அரசியலை வளர்த்து நாட்டைக் குட்டிச்சுவராக்குவதற்கும் அடிப்படைக் காரணமாக அமைந்தது.

இலங்கை கறுவா விளையும் நாடாகையால், கறுவாவின் சமஸ்கிருதப் பெயரான சிங்கலெ என்பதே சிங்களமாக மருவியிருப்பதாகப் பொதுவாகப் பல நவீன வரலாற்றாசிரியர்கள் ஒத்துக்கொள்ளும்போது, சிறீ லங்கா பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்து அரச ஆய்வாளர்கள்வரை மகாவம்சத்தின் மாயாவிக் கதைகளை ஆதாரம்காட்டி, சிங்கத்தின் வம்சாவளியினரே சிங்களவர் எனக் குறிப்பிடும் அளவிற்கு இந்த அடிப்படைவாதம் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பௌத்த அடிப்படைவாதமும், அதனால் எழுந்த தமிழ்த் தேசிய வெறியும் மொத்த நாட்டையும் சீரழித்துக்கொண்டிருக்கும் இன்றைய நிலைக்கும், ஆரம்பகால பௌத்த மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.

இலங்கையில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில், தென்னிந்தியாவின் காஞ்சிபுரம் என்ற நகரமே பௌத்த பள்ளிகளின் மத்தியபீடமாக அமைந்திருந்தது. தென்னிந்தியத் தமிழ் மதகுருக்களான தர்மபால தேரர், தர்மதேவர், திக்குநாகர் போன்றோர் வட இந்தியாவில் நாலந்த பல்கலைக்கழகத்திற் கற்பித்தனர்.

இலங்கை முழுவதும் பரவியிருந்த பௌத்தம் வட இலங்கையிலும் பரவி வலுப்பெற்றிருந்ததற்;கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. கி.மு.3ம் நூற்றாண்டிற்கான வடபகுதியிலுள்ள கந்தரோடை என்னுமிடத்தில் கிடைக்கப்பெற்றுள்ள பிரமி எழுத்துச் சாசனங்களும், பௌத்த சின்னங்களும், இப்பகுதிகளில் பௌத்தமதம் நிலைகொண்டிருந்ததற்கான ஆதாரங்களாகக் காணப்படுகின்றன.

இதே காலப்பகுதியில் இலங்கையின் வடபகுதியில் உள்ள வல்லிபுரத்தில் கிடைக்கப்பெற்றிருக்கும் தொல்லியல் ஆய்வுகளும் பௌத்தத்தின் இருப்பை நிர்ணயிக்கின்றன.

DSCI0001.JPG

இதே காலப்பகுதியில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் பரந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்களாகப் பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று அனுராதபுரத்தில் உள்ள Tamil House Holders terrace inscription ஆகும்.

இதுபோன்று வேறுபட்ட ஆதாரங்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பௌத்த மதம் பரவியிருந்ததையும் அதே நேரத்தில் தமிழ் மொழி பேசப்பட்டதையும் நிரூபிக்கின்றன. தவிர, 6ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் சிங்கள மொழி பேசப்பட்டதற்;கான எந்த நம்பகரமான வரலாற்றாதாரங்களும் காணப்படவில்லை.

மேலும் இலங்கையில் இயக்கர்கள், நாகர்கள், என்ற இரு குழுக்கள் இருந்ததாகவும், இயக்கர்கள் எலு மொழியையும் நாகர்கள் தமிழையும் பேசியதாகவும் எலு மொழி பாளியுடன் கலந்து சிங்கள மொழியாக மாறியதாகவும் ஒரு கருத்து உள்ளது. ஆனால் எலு, பாளியுடன் கலந்ததற்கும் அது சிங்களமாகப் பரிணாமம் அடைந்ததற்;கும் எந்தவொரு தர்க்கரீதியான வரலாற்று ஆதாரங்களும் காணப்படவில்லை.

முன்னரே குறிப்பிட்டது போல, தென்னிந்தியாவில் 6ம் நூற்றாண்டில் எழுந்த புராண காலத்து பௌத்த இந்து முரண்பாடுகளுடாக உள்வாங்கப்பட்ட மகாயான பௌத்தம் கி.பி. 3ம் நூற்றாண்டளவிலேயே இலங்கையிலும் பிரிவினைகளை ஏற்படுத்தியிருந்த போதிலும் அதன் முரண்பாடு 6ம் நூற்றாண்டிலேயே உச்சநிலையை அடைந்திருந்ததாக மகாவம்சம் காட்டிநிற்கின்றது.

முதன்முதலில் கி.பி. 3ம் நூற்றாண்டளவில் மகாயான பௌத்தம் அரச அளவில் இலங்கையில் பரப்பப்பட்டது. தென்னிந்தியாவைச் சேர்ந்த சங்கமித்தர் என்ற தமிழ் பௌத்த துறவியொருவர் இலங்கை அரசனான மகாசேனனை 3ம் நூற்றாண்டின் இறுதியில் வட இலங்கைத் துறைமுகத்தில் சந்தித்து மகாயான பௌத்தத்திற்கு அவனை மாற்றினார்.

abayakiriபௌத்த கொள்கைகள் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டபோது, (கி.மு.221-கி.மு.207) புத்த சமயத்தைப் போதிக்கும் பீடங்களாக இருந்தவை, அனுராதபுரத்தில் இருந்த மகா விகாரையும், அபயகிரி விகாரையுமாகும். மகாவிகாரையில் பாளி மொழியிலும், அபயகிரி விகாரையில் தமிழ் மொழியிலும் பௌத்த மதம் போதிக்கப்பட்டது. சிங்கள மொழியில் பௌத்தமதம் போதிக்கப்பட்டதற்கான ஆதாரமோ, சிங்கள மொழியின் மறுபாகமாகக் கருதப்படும் எலு மொழியில் பௌத்த கொள்கைகள் பரப்பப்பட்டதற்கான ஆதாரங்களோ இல்லை.

தமிழ் நாட்டில் பௌத்தமதம் தமிழிலேயே போதிக்கப்பட்டதால், அபயகிரி விகாரை மகாயான பௌத்தத்தின் தாக்கத்துக்குட்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த மகாயான பௌத்தம் என்பது தமிழில் போதிக்கப்படும் பௌத்தம் என்ற கருத்தும் வளரத் தொடங்க, தேரவாத பௌத்தம் பாளி மொழியினூடாக விரிவடையத் தொடங்கியது.
,தென்னிந்தியாவின் தொடர்ச்சியான நிலையற்ற படையெடுப்புகளுக்கு எதிரான தத்துவார்த்த வடிவமாக தேரவாத பௌத்தம் மாறத் தொடங்கியது.

பௌத்த பிரிவுகளுக்கிடையிலான முரண்பாடுகள் விரிவடையத் தொடங்க, தேரவாத பௌத்தத்தைப் பாதுகாத்துக்கொள்ள அது இலங்கையில் உருவாகிய நிலப்பிரபுத்துவ அதிகார சக்திகளின் ஆதரவுடன் பாளி மொழியூடாக கிராமங்கள் தோறும் பரவியது. பிற்காலத்தில் பாளி மொழிக் கலப்பினூடாக தமிழ்மொழி சிங்கள மொழியாக மாறியது என்ற வாதம் இதனால்தான் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

தமிழ் மொழியில், வேத தத்துவ பரவலூடான சமஸ்கிருத கலப்பிலிருந்து, கன்னடம், துளு முதலிய மொழிகள் உருவானது போன்று பாளி மொழியின் நேரடிக் கலப்பால் உருவானதுதான் சிங்கள மொழி என்பதற்கு சிங்கள மொழியின் இலக்கண அமைப்புமுறை திராவிட மொழிகளை ஒத்திருப்பது இன்னொரு காரணம் என மொழியியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மறுபுறத்தில் தொடர்ச்சியான தென்னிந்தியப் படையெடுப்பினூடாக வடபகுதியில் தமிழும் இந்து மதமும் நிலைபெற்றுக்கொண்டது. ஒரு புறத்தில் பலம்மிக்க தென்னிந்தியப் படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கை இராசதானிகள் அனுராதபுரம், பொலந்நறுவை, தம்பதெனியா எனத் தெற்குநோக்கி நகர்ந்து தம்மை வலுப்படுத்திக்கொள்ள முடிந்தது.

கி.பி. 6ம் நூற்றாண்டுவரை சிங்களம் என்ற மொழி பேசப்பட்டதற்கான ஆதாரம் எங்கும் காணப்படவில்லை.

பிற்காலப் பகுதியில், தென்னிந்தியப் பகுதியில் இருந்தும் பொதுவாக தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்தும், மலாய் குடியேற்றங்களும், சிங்கள இனத்துடன் இணைந்தன. தவிர ஒல்லாந்தர் போர்த்துக்கேயரின் கலப்பினூடாகவும் சிங்கள தேசிய இனம் உருவானதாக வரலாறு குறிப்பிடுகின்றது.

12ம் நூற்றாண்டுக் காலப் பகுதிவரை தமிழ்-சிங்களம் என்ற மொழி ரீதியான முரண்பாடு இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்களை யாரும் குறிப்பிட்டதில்லை.

17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்ட Robert Knox என்ற ஆங்கிலேயர், அங்கிருந்து தப்பி வடக்கு நோக்கிச்சென்றபோது அனுராதபுரத்தை அடைந்தார். பின்னர் 1681இல Historical Relation of the Island of Ceylon என்ற நூலை அவர் வெளியிட்டார். இந்த நூலில், அனுராதபுரத்தை அடைந்த Robert Knox அந்த மக்களுக்குச் சிங்களம் விளங்

Robert Knox
Robert Knox

கவில்லை என்றும், அவர்கள் தலைவனிடம் தான் கூட்டிச்செல்லப்பட்டபோது, அவனுடன் உரையாடுவதற்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவி தேவைப்பட்டது என்றும் அங்கிருந்தவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் எழுதியிருந்தார்.

இலங்கையில் பௌத்த மதத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் அனுராதபுரத்திலேயே சிங்களமொழி பரந்தளவில் பேசப்படாது இருந்திருக்குமானால், இந்த மொழியின் பரந்துபட்ட வளர்ச்சி என்பது மிகவும் அண்மைக் காலத்துக்குரியது என்று புலனாகின்றது.

எது எவ்வாறாயினும், இன்று சிங்கள தேசிய இனம் பரந்து வாழும் நிலப்பரப்பு தேசிய இனத்தின் பாரம்பரிய நிலப்பரப்பேயாகும். அவ்வாறே தமிழ்த் தேசிய இனத்தின் நிலப்பரப்பு அவர்கள் பரந்து வாழும் பிரதேசங்களேயாகும். இந்தக் கட்டுரையின் நோக்கம் நிலப் பிரிப்பு அல்ல. வரலாற்று ரீதியாக தமிழ்-சிங்களம் tamil_genocideஎன்ற மொழிப்பிரச்சினையோ, தமிழ் பௌத்தர்கள்-சிங்கள பௌத்தர்கள் என்ற பகையோ இருந்திருக்கவில்லை என்பதை நிறுவுவதே. நிலப்பிரபுத்துவ சமூகத்திற்கே உரித்தான மதங்களிடையேயான முரண்பாடு என்பது பிற்காலத்தில், பிரித்தானிய காலனி ஆதிக்கவாதிகளின் சொந்த நலனுக்காக தந்திரமான முறையில் தூண்டிவிடப்பட்ட து. இன்று பெருந்தேசிய இனத்தின் அதிகாரவர்க்கம் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் அழிவின் ஊடாகவே தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் அரசியலைக் கொண்டுள்ளது. பிரித்தானியக் காலனியாதிக்க அரசால் கற்பிக்கப்பட்ட இந்த அரசியலுக்கு எதிரான போராட்டம் எனபது தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டமாகவே அமைய முடியும். வரலாறு முழுவதும் சிங்கள் அதிகாரவர்க்கத்தால் ஏமாற்றப்பட்டுவரும் சிங்கள அப்பாவி மக்களின் ஒரு பகுதியினரின் ஆதரவுடனேயே சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை வெற்றிகொள்ள முடியும்.

கறுவா இயற்கையின் இன்னொரு கொடை!

ceylon-cinnamonசமையல் அறையில் நம் முன்னோர்கள் ஒரு வைத்திய சாலையையே வைத்திருந்தார்கள். அஞ்சறைப் பெட்டி அருமருந்துகளின் பெட்டகமாகவே இருந்துள்ளது.

சீரகம், சோம்பு / பெருஞ்சீரகம், வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள்தான் நம் முன்னோர்கள்.

தற்போது உணவே மருந்து மருந்தே உணவு என்ற கோட்பாடு தலைதூக்கி பல்வேறு வகைகளில் இதை பாடங்களாகவும், ஆலோசனைகளாகவும் செய்து வருகின்றனர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப இந்த குறைவற்ற செல்வத்தைப் பெற உணவில் மேற்கூறிய பொருட்களை சேர்ப்பது நல்லது.

இலவங்கப்பட்டை செடியானது இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உரிய பயிராகும். இந்தியாவில் கேரளா பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது. இலவங்கப் பட்டை உற்பத்தியில் இலங்கையே முதன்மை வகிக்கிறது. இலங்கை, மேற்கு மலேசியாவின் சாபா, சரவா பகுதிகளிலும் தாய்லாந்தின் வடக்குப் பகுதியிலும் இது உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப் படுகின்றது. இதன் பட்டை அரக்கு நிறத்தில் காணப்படும். காரமும் இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும்.

Tamil – Lavangapattai
English – Cinnamon
Malayalam – karuvapatta
Telugu – Lavangapatta
Sanskrit – Twak
Hindi – Dalchini

BotanicalName – Cinnamomum verum Cinnamomum zeylanicum

தாதுநட்டம் பேதி சருவவிஷம் ஆகியநோய்
பூதகிர கஞ்சிலந்திப் பூச்சிவிடஞ்-சாதிவிடம்
ஆட்டுமிரைப் போடிருமல் ஆகியநோய்க் கூட்டமற
ஓட்டுமில வங்கத் துரி
சன்னலவங் கப்பட்டை தான்குளிர்ச்சியுண்டாக்கும்
இன்னுமிரத் தக்கடுப்பை யீர்க்குங்காண்-முன்னமுறும்
உந்திக் கடுப்பகற்றும் உண்மூலப் புண்போக்கும்
கந்தமிகு பூங்குழலே! காண் – அகத்தியர் குணபாடம்

இலவங்கப்பட்டையை கறிமசாலாவில் அதிகம் சேர்ப்பார்கள். இது அதிக சுவையையும், மணத்தையும் தரக்கூடியது.

நீரிழிவு நோய்க்கு
நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் இலவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.

வாய் துர்நாற்றம் நீங்க
வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

செரிமான சக்தியைத் தூண்ட
எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

இருமல், இரைப்பு
சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

விஷக்கடிக்கு
சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க
வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

பெண்களுக்கு
குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும் இது சிறந்த மருந்து.

தாது விருத்திக்கு
தாது நட்டம் உள்ளவர்கள் இன்று பகட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தைத் தொலைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.

இத்தகைய அரிய பயன்களைக் கொண்ட கருவாப்பட்டையை இனியும் ஒதுக்கலாமா… முன்னோர்களின் வழியைப் பின்பற்றி நாமும் நோயின்றி நூறாண்டு வாழ்வோம்.

ஆரோக்கியத்தில் சிறந்தது இலவங்கம்

சைவம், அசைவம் என இரண்டு வகை சமையலிலும் மணக்கும் இலவங்கப் பட்டைக்கு எப்போதும் முதலிடம் தான். பட்டையை பொடி செய்து வைத்து தாளிப்பது மற்றும் அரைப்பதில் சேர்க்கலாம். உடல் ஆரோக்கியத்திலும் இலவங்கப் பட்டையின் பங்கு முக்கியமானது என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

இலவங்கப் பட்டை 100 கிராம், மிளகு, திப்பிலி ஆகியவை தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும்.காலை வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டால், நுரையீரல் சார்ந்த கோளாறுகள், சளி மற்றும் தலைபாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குணமாகும்.

இலவங்கப் பட்டையுடன் சுக்கு, ஓமம் மூன்றும் தலா 50 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் எடுத்து காலை, மாலை உணவுக்கு பின்னர் சாப்பிட்டால் அனைத்து விதமான வாயுக் கோளாறுகளும் நீங்கும்.

இலவங்கப்பட்டை, நிலவேம்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் பூச்சிக் கடிகள் குணமாகும்.

இருமல் பிரச்னை உள்ளவர்கள் இலவங்கப்பட்டையுடன் அக்காரா மற்றும் திப்பிலி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து அரை ஸ்பூன் அளவுக்கு தேனில் கலந்து சாப்பிட்டால் இரைப்பு மற்றும் இருமல் விலகும்.

இலவங்கப்பட்டையுடன், அதிவிடயம் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக சுண்டும் வரை காய்ச்சிக் குடித்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு கட்டுப்படும்.

இலவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப் போக்கு ஏற்படுவது நிற்கும்.

இலவங்கப் பட்டையுடன், மாம்பருப்பு, கசகசா இம்மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் பொடியை 100 மிலி தயிரில் கலந்து சாப்பிட்டால் பேதி குணமாகும்.

இலவங்கப்பட்டை, சுக்கு, ஏலக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி தீரும்.

இலவங்கப் பட்டையுடன் சிறு குறிஞ்சான் சம அளவு எடுத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

-இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

5 Benefits Of Cinnamon

1. Weight Reducer
Cinnamon apparently has the effect of thinning your blood thereby increasing blood circulation. Increased blood flow generally boosts your metabolism which is why it may be helpful in weight loss. This blood thinning property of Cinnamon also helps it in acting as an anti clotting agent especially for those suffering from heart disease.

2. Massage Therapy
Cinnamon is a well known warming agent. Combined with a carrier oil it is highly effective in relaxing and relieving muscle pain. Some put a few drops in their bath to relax and to soothe tired and aching muscles.

3. Cold and Coughs
At the first sign (within 5-10 minutes) of sniffles or an itch in your throat take some Cinnamon Tea or Cinnamon stick Tea. It is said to stop an impending illness in its tracks.

4. Food Preservative
Cinnamon is effective in inhibiting bacterial growth. This may be one reason why it is widely used in food preparation in hot Asian countries. In Sri Lanka, virtually every dish has a pinch of Cinnamon in it. In addition to great flavor, Ceylon Cinnamon in combination with other spices like Turmeric and Chili may have been an indigenous solution to preserve food without a refrigerator.

5. Blood Sugar Control
Several studies have found that Cinnamon has properties that help those with insulin resistance. It is therefore very popular with Type 2 diabetics who take it to control their blood sugar variations.

-curejoy.com

கறுவா / இலவங்க பட்டை

ஆயுத பூஜை என்றால் என்ன? – சித்தர்கள் கூறிய விளக்கம் – டென்சிசன்

ஈ.வே ராமசாமி ஐயா எழுதிய கட்டுரையை வாசித்து, அதில் உள்ள தவறுகளை கண்டறிந்ததன் விளைவாகவும், அக்கட்டுரை, முற்றுமுழுதாகவே, போதிய விளக்கம் இன்மையால் தவறாக எழுதப்பட்டிருக்கிறது என்பதனை, இனியொரு வாசகர்களுக்கு சுட்டிக்காட்டிட இக்கட்டுரையை எழுதுகின்றேன். இக்கட்டுரையை எழுத்தொடங்குவதற்கு முன், எமது சமூகத்தில், அந்தணர்கள், பிராமணர்கள் எனும் பெயர்களில் உலாவும், போலி மத போதகர்களை பற்றி எனக்கு கிடைத்த சில தகவல்களை கீழே இணைத்துள்ளேன். அதனை வாசித்து அந்தணர் என்போர் யார்? பார்ப்பனர் என்போ யார்? என்பதனை பற்றிய விளக்கத்தினை பெறல், இக்கட்டுரையை மென்மேலும் விளங்கி கொள்ள உதவும் என்பது எனது கருத்து. -டென்சிசன் (இனியொரு ஆசிரியர் குழு)

” பாரப்பா பல வேத நூலும் பாரு ” என்று மெஞ்ஞான தேடலை பல நூல்களை கற்று தேட சொல்கிறார்கள் அகத்தியர் எனும் தமிழ் சித்தர் பெருமகன்.

Agaththiyar Siddharஇங்கு வேதம் என குறிப்பிடபடுவது யாதெனில், மனிதன் புற விடயங்களில் நாட்டம் செலுத்தாது, அக வணக்கம் செய்து, தன் மனதினை தூய்மைப்படுத்தி, தாமும் இறைவர்களாக முடியும் என்பதனை விளக்க, தமிழ் சித்தர் பெருமகன்களால், மக்கள் அனைவரும் பயன்பெற, எழுதி அருளச்செய்யப்பட்ட, மெஞ்ஞான வழியை சூக்குமமாக விளக்கும் நூல்களாகும். ஆக, இங்ஙனம் சித்தர்களினால் எழுதப்பட்ட வேதத்தை, “மெஞ்ஞான நூல்களை ” படித்து, அதன் நுண் பொருளை உணர்ந்து, வணக்கம் செய்பவரே அந்தணர் ஆவார்! அத்துடன் “அந்தணர் என்போர் அறவோர் ” என்று திருவள்ளுவர் பெருமகனும் கூறுகின்றார். இது, துறவி என்பவர்கள் யார் எனில், உண்மையான பொருளுடைய மெஞ்ஞானத்தினை, கற்று, உணர்ந்து, அதன் வழி ஒழுக்கம் தவறாது, அற வழி நின்று, அதாவது, “எந்த உயிர்க்கும் தீமை செய்யாது, உயிர்களிடத்து அன்பு செய்து, அவைகளின் பசி பட்டினி போக்கிட, ஈகை செய்பவரே” அந்தணர் ஆவார் என்கிறார் வள்ளுவப்பெருந்தகை. ஆக நாம் உண்மையை அறியாது, குடுமி வைத்து கொண்டு, பூணூல் போட்டவர்களை அந்தணன் என்று கருதி, அவர்கள் செய்வதை பூசை முறைகள் என்று கருதி, போலி வழிபாட்டு முறையினை பின்பற்ற கூடாது.

இதனையே சிவவாக்கியர் சித்தரும் தான் பாடி அருளிய பாடல்களின் உடாக எடுத்து காட்டமாக விளக்குகின்றார். அவர் பாடிய பாடலொன்றும் அதன் பொருளொன்றும் பின்வரும் பந்தியில் இருக்கின்றது.

“நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”

சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது, அந்த உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே, மனக்கோயிலினுள் இறைவன் இருப்பதை அறியாமல், வெறும் கல்லை நட்டு வைத்து, தெய்வமென்று பெயரிட்டு, பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது
அறியாமையேயாகும் என்கிறார் சித்தர் சிவவாக்கியர். மேலும் அவர், போலி சமய, சாதி முறைகளினை, வேரறுக்க பாடிய புரட்சி பாடல்களினை, பொருளுடன் வாசிப்பதற்கு இங்கே சொடுக்கவும்.

வேதம் ஓதி உணர்ந்த, அதாவது மெஞ்ஞான நூல்களை கற்றறிந்த அந்தணர் ‘பார்ப்பார்’ எதனை? தன் கண்மணி சிக்குண்டு இருக்கும், வினை திரைகளை, மாயைகளால் சிக்கி உழலும் மனம் எனப்படும் பிராண வாயு ( இரவு வேளைகளிலும், பகல் வேளைகளிலும், அந்தி வேளைகளிலும், நாம் சுவாசிக்கும் வாயு, இடது பக்க நாசி துவாரத்தினூடாக அதிக அளவில் செல்லும்; ஆனால் அதிகாலை சூரிய உதய நேரத்திற்கு அண்மையாக, மற்றும் இரவை அண்மிக்கும் நேரம், அதாவது சூரியன் மறைவதற்கு சற்று முன், எமது சுவாச காற்று, வலது நாசி துவாரத்தின் ஊடாக செல்லும் என்பதுடன், இவ்வேளைகளில், இயங்கும் மூளியினை நாம், எமது தியான பயிற்சியினால், மூளியின் இரத்த ஓட்டம் காரணமாக தழும்பும், சிந்தனைகளை, இரு முறை “ஓம் நமசிவாய” என உச்சரிக்க, அது கட்டுக்குள் வருவதுடன், தொடர்ந்தும் இப்பயிற்சியினை மேற்கொள்ள, மூளியானது, தேவையற்ற வெளியுலக ஆசைகளை தானே இனங்கண்டு, அகற்றும் தன்மையினையும் பெறும். இப்பயிற்சியினை மேற்கொண்டு ஞாபக சக்தியினை அதிகரித்து கொள்ளவும் முடியும். இதில் மேற்குறிப்பிடப்பட்ட நமசிவாய எனும், பஞ்சாட்சர மந்திரமானது, பஞ்ச பூதங்களாகிய முறையே, ந என்பது நீரையும், ம என்பது நிலத்தையும், சி என்பது நெருப்பினையும், வா என்பது வாயு என்பதையும், ய என்பது ஆகாய வெளியினையும் குறித்து நிற்பதுடன், இயற்கையில் உள்ளவை அனைத்தும், மனிதனின் உடலிலும் இருக்கின்றது என்பதனை, மெஞ்ஞான நூல்களை கற்று அறிந்து உணரவும் முடியும். ) எனும் வாயுவின் துணை கொண்டு, அகற்றுவதன் ஊடாக, மனதினை கட்டுக்குள் கொண்டுவந்து, மனதினை வென்ற ஞானியே, பிராமணன் ஆவான். நீங்கள் வெறுமனே, பிராமணர்களை தூற்றுவதிலும் பார்க்க‌, தற்கால கோயில்களில், போலி பூசைகள் செய்யும் போலி பிராமணர்களிடம், இது பற்றிய கேள்விகளை முன்வைப்பதன் ஊடாக, அவர்களை சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும்; என்பதுடன், இவர்கள் காரணமாக; தோற்றுவிக்கப்பட்ட சாதிக்கட்டமைப்பை அழிக்க, இதுவே, சிறந்த, மற்றும் முறையான வழியாகும் என்பதுடன் பயனையும் தரும். பார்ப்பனர்கள் என்பதுவும் மேற்கூறப்பட்ட பொருளுடையது என்பதுடன், தன்னையே அறிந்து, உயிராகிய இறைவனைய பார்ப்பவரையே பார்ப்பான் என கொள்ளுதல் வேண்டும்.

பரம் பொருளாகிய இறைவன், நம் உயிராகி, ஒன்றானவனாக துலங்கி, அவரே நம் இரு கண்களிலும், கண் மணி ஒளியாக இரண்டாகவும் துலங்குகிறார், என்பதே மெஞ்ஞானம் கூறும் விளக்கமாகும். ஒன்றான ஜீவன், இரண்டான, இரு கண் ( வலது கண் சூரிய ஒளி, இடது கண் – சந்திர ஒளி ) ஒளியுடன் சேர, மூன்றும் சேர்ந்தால், அதுவே ஓங்காரம் ஆகும்! அதுவே பிரணவ மந்திரமென சைவ நெறியினால் விளக்கப்படுகிறது. அத்துடன் ஓம் எனும் சொல்லினை விரிபுபடுத்தி பார்ப்போமெனில், அ, உ, ம் எனும் எழுத்துக்கள் இணைந்து இருப்பதனை விளங்கி கொள்ள முடியும். ‘அ’ என்பது சூரிய கலையாகிய, வலதுபக்க நாசி தூவாரத்தின் ஊடாக, செல்லும் சுவாசக்காற்று அடி வயிற்றில் எழுப்பும் ஒலி என்பதுடன், ‘உ’ எனும் உகாரம் என்பதாவது, இடதுபக்க நாசி துவாரத்தின் ஊடாக வெளி செல்லும் சுவாசக்காற்று அடிவயிற்றில் எழுப்பும் ஓசை என்பதுடன், ‘ம்’ என்பதாவது, நமது உள்நாக்கின் மேற்பகுதியில் உள்ள, ஒரு பகுதியில், சுவாசங்களினால் ஏற்படும் ஒரு ஒலி என்பதுமாகும். இவற்றை நாம் ஒன்றாக உச்சரிக்கும் போது, பெறப்படும் ஓசைதான் “ஓம்” எனப்படும் பிரணவ மந்திரம் ஆகும். இதனையே பிரணவ மந்திரம் என சைவர்கள் உச்சரிப்பதுடன், புலால் உண்ணாது, நாம் பிரணவ மந்திரத்தினை உச்சரிக்கும் போது, நாம் செய்யும் பாதகச் செயல்கள், பாவங்களினால், மூளையின் நாடி, நரம்புகளினால் உடம்பில் ஏற்படுகின்ற, மும்மலங்களால் ஏற்படும் மாற்றங்கள் மாறி, மூளியின் மையப்பகுதியில் ஆரம்பித்து, இறைசக்தியினால், நம் உடம்பினை சுற்றி, மலங்களினால் கட்டுண்ட, நாடி, நரம்புகள் யாவும் ஒளி பரவி, நம் உடம்பு, ஒளியுடம்பாக மாற்றம் பெறும். இதனையே ஒளி பெற்று வாழ்வு ஆங்கு வாழ்வர் என நம்முன்னோர் கூறி, நம்மையும் சைவ நெறியினை கடைப்பிடிக்க சொல்லி கூறியுள்ளதுடன், இவ் ஒளியுடம்பினை பெற, நாம், புலால் மறுத்து, சைவ உணவினை கடைப்பிடித்து, பாவங்களினை செய்யாது, மாதம் ஒரு முறையாவது ஏழை எளியவர்களிற்கு தானம் செய்து வந்து, நம் பாவங்கள் தீர, தினமும் காலை, மாலை வேளையில் சூரியனை வணங்கி வர வேண்டும். மற்றும் நம் உடலமைப்பானது, சைவ உணவு முறைக்கு ஏற்றாற்போலவே அமைந்துள்ளது என்பதுடன், உயிர்களின் உட்சுரக்கும் அமிலங்கள் யாவும், சைவ உணவினையே, முறையான சமிபாடடைய செய்யும் வகையிலேயே தான், உயிர்களின் சமிபாட்டு தொகுதி அமைந்துள்ளதும் குறிப்பிடதக்கதும் ஆகும். ( இதனை பற்றிய சிறந்த பதிவினை வாசிக்க இங்கே சொடுக்கவும். ) இவ் உண்மை அறிந்து செயற்படும் மனிதர்கள், தாம் பிறந்த இப்பிறவியின் உண்மை பயனை அடைந்துகொள்ள முடியும் என்பது சித்தர்கள் நமக்கு சொல்லி தந்த பாடமாகும். ஆக நாம் மேற்கூறியவாறு ஒழுக்க நெறியினை கடைப்பிடித்து, ஓம் எனும் சப்தத்தினை தினமும் உச்சரித்து , தினமும் சூரியனை, உதயத்தின் போதும், அஸ்தமனத்தின போதும் வணங்கி வர, நாமும் அந்தணர் ஆகலாம்! பார்ப்பார் -பார்! – பார்! என்ற சித்தர்களின் உபதேசத்தை கேட்டு, தன்னையே, கண்மணி வாயிலாக, ஒளி வழி உற்று பார்ப்பவரே, பார்த்துகொண்டு இருப்பவரே பார்ப்பார். உள் ஒளியை சதா காலமும் பார்ப்பவரே, பார்த்துக் கொண்டிருப்பவரே பார்ப்பார் என்பதுதான் மெஞ்ஞானம் கூறும் உண்மைபொருளாகும்!

ஆக கண்களில், கண்மணியிலே உள் உள்ள, நூல் போன்ற நரம்பினை இணைத்து, தவத்தால், வணக்கத்தினால், மேற்கூறியது போன்று சூரிய, சந்திர, உயிர் ஆகிய மூன்று ஒளிக்கலைகளையும், இணைப்பவரே, அந்தணர் அல்லது பார்ப்பனர் எனப்படுபவர்கள் ஆவர். இதனை அறிந்து கொண்டு, நாம் இவ் உண்மையை, மற்றவருக்கும் விளக்கி, உண்மை வழிபாட்டினை மேற்கொண்டு, மூன்று ஒளிகளையும் இணைத்து, நம் பிறந்த இப்பிறவியை கடைத்தேற்ற, அளிக்கப்பட்ட சித்தர்களினை வழிபடாது, அவர்களை தூற்றுதல் பாவம் ஆகும்.
மேலும் கண்ணுக்குள் உள்ள நூல் போன்ற நரம்பினை இணைத்து பூன வேண்டும்! இதுவே பூணூல் எனப்படவதன் உண்மை பொருளாகும். சூரிய சந்திர, அக்னி ( உயிர் ) ஒளிக்கலைகளை இணைத்து ஒன்றாக்கி இணைத்து முடிவதனையே, சித்தர்கள் வகுத்த மெஞ்ஞானம் குடுமி என விளக்குகிறது. இவ் உண்மை அறிந்து புறத்தில் வேஷம் போடுபவர் வேடர்களை, இனங்கண்டு, புறத்திலே வேஷம் போட்டுக் கொண்டு தாம் உயர்ந்த ஜாதி எனவும், ஜாதி வேறுபாடுகளினை, தோற்றும் போலி மத வழக்கங்களையும், உண்மையை விளங்கி கொண்டு அழிக்க போராடுவது நன்மை பயக்கும்.
இனி “ஆயுத பூஜை என்பது பற்றி, சித்தர்களால் அருளிச் செய்யப்பட்ட மெஞ்ஞான நூல்கள், கூறுவது என்ன?”, என்பது பற்றிய விளக்கத்தினை, கீழே எனக்கு கிடைத்த தகவல்களை பயன்படுத்தி எழுதியிருக்கின்றேன். உங்களது சந்தேகங்களை முன் வைப்பின், சித்தர்கள் அருளினால், அவற்றை தீர்த்து வைப்பதற்கான பதிலையும் என்னால் எழுத முடியும். சந்தேகங்களை தயவு செய்து முன்வைத்து தெளிவினை பெறவேண்டுமே தவிர, போலி பிரமணர்கள் பரப்பிய, போலி வேதத்தினை நம்பி, இறைவனை அடைய வழிகாட்டும், மெஞ்ஞான நெறியினை அறியாது, சித்தர்கள் கூறிய பூசை நெறிகளை தவறென விமர்சித்தல் ஆகாது.

Menjanamஇங்கு படத்தின் மைய பகுதியில் குறிப்பிட்டிருக்கும் பகுதியானது, எமது இரத்த ஓட்டத்தினை கட்டுபடுத்தும் மூளி அமைந்துள்ள பகுதியாகும். இந்த பகுதியிலேயே மனித உடலெங்கும் பரவி இருக்கும், நாடி, நாள, நரம்புகளின் இணைப்பு அமைந்திருக்கிறது என்பது சிறப்பாகும் என்பதுடன், இங்குள்ள ஒரு பகுதியில்தான், நம் உடல் இயங்க தேவையான உயிர்சக்தி இருக்கிறது; அதுவே ஓம் எனும் பிரணவ மந்திரத்தினை உச்சரிக்கும் போது, விழிப்புணர்வு பெறும். அஃதாவது, ஒரு இஞ்சி, மயிரினை, ஆயிரம் பங்காக வெட்டுவதனால் வரும் அளவு ஒளியே, நமது உடலை இயக்குகிறது. இருந்தும், நாம் புலால் சாப்பிடுவதனால், உயிர்களுக்கு செய்யும் கொடுமைகள், மற்றும் மனிதர்கள் செய்யும் பாவ செயல்களான, காமம் ( இது வெறுமனே பாலியல் குற்றத்தை மட்டும் அல்லாது, தமிழ் அகராதியில் குறிப்பிட்டுள்ள களவு, பொய், பொறாமை ஆகியவற்றையும் குறித்து நிற்கும். ), லோபம் ( அதாவது பொருள்களினால் மீதுள்ள மயக்கத்தினால் தவறான வழியில் சம்பாதித்து அதனை அடைய முயற்சி செய்வதனை குறித்து நிற்கும். ), மூடம், ( அதாவது மூட நம்பிக்கைகள் கொண்டு செய்யும் பாவ செயல்கள் ), தாபம் ( இது மக்களினை ஏமாற்றி தவறான கருத்துக்களை திணிப்பதனால் ஏற்படும் பாவ செயல் ), குரோதம் ( இது இறைவர்களை நிந்தனை செய்வதால் ஏற்படும் பாவ செயல்களாகும் ), பாபம் ( அதிக ஆசை கொண்டு உயிர்களை துன்புறுத்தி பொருள் சம்பாதிப்பதினால் ஏற்படும் பாவ செயல் ), வாமணம் ( இது உயிர்களை காக்க வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாதிருப்பதனால் ஏற்படும் பாவ செயல் ), வராகம் ( கடன் மற்றும் வழிப்பறி கொள்ளைகள் மற்றும் ஏமாற்றி சம்பாதிப்பதால் ஏற்படும் பாவ செயல்கள் ), பரவம் ( இது மக்களை தவறான வழியில் நடத்தும் இழிய ஆட்சி செய்வதனால் ஏற்படும் பாவச்செயல் ), பகரந்தம் ( உண்மையான இறை வழிபாட்டினை மக்களிற்கு போதிக்காது, போலி வழிபாட்டின் வழி தவறாக நடத்துவதனால் ஏற்படும் பாவ செயல் ), பலந்தம் ( மிருக வதை செய்வதனால் ஏற்படும் பாவ செயல் ), பரவியம் ( உயிர்களை பலி கொண்டு உண்பதால் ஏற்படும் பாவ செயல் ), தகரம் ( இது மனிதர்கள் சூழலை, இயற்கையை அழிப்பதனால் ஏற்படும் பாவ செயல் ), ஆகியவற்றை புரிவதினால் மூளி பகுதியில் உள்ள அவ் ஒளியாகிய உயிர்ச்சக்தி, தன் தன்மையை இழந்து மறையும் தருவாயில், மரணம் ஏற்படும். இவ் ஒளிச்சக்தியினை, சித்தர்கள் வழிபாட்டின் மூலம், நாம் அடைந்து, நாமும், தேகம் முழுவதும் ஒளியினை பரப்புவதற்கான, மேற் சொன்ன வணக்க முறையின் ஊடாக, சித்தர்களாக முடியும் என்பதே, மெஞ்ஞானம் கூறும் உண்மையாகும். ஆக, இம்மூளி அமைந்துள்ள இப்பகுதியே, மூன்றாவது கண் ஆகும் என்பதுடன், இதனை செயற்படுத்தும், புற உலக இச்சைகளிற்கு, இடம் கொடுக்காது, அக வழிபாட்டின் ஊடாக, அதனை கண்டுணர்ந்து நாமும் சித்தராவோம்.

மூன்று கண்களையும், மயக்கும் ஆயுதங்களாகிய மாய சக்திகள் ( அதாவது காம, கர்ம, வினைகளாகிய மாயை எனும் புற உலகின் மயக்கத்தினால் ஏற்படும் மயக்க சக்தி ), அடங்க தேவையான சக்தியை அடைய, உண்மையான இறை வழிபாடான, சித்தர்கள் வழிபாட்டினை மேற்கொண்டவாறு, மேற்கொள்ளவதே ஆயுத பூஜையின் சிறப்பாகும். இது தொடர்ந்து பத்து நாட்கள், புலால் உணவு மறுத்து, சித்தர்களின் வழிபாடாகிய, ஒளியினை வணங்கும் வழிபாட்டினை, தங்கு தடையின்றி, காலை மற்றும் மாலை என, ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதோடு மேற்கொண்டு, நாம் மேற்சொன்ன பாவச்செயல் நீங்குவதற்கு, தமிழ் சித்தர்கள் சொல்லி தந்த, ஏழை எளியவர்களின், உயிர்களின் பசியினை போக்கும், ஜீவ காருண்யம் எனும் மிக உயர்ந்த புண்ணியத்தினை செய்து வர, நாமும், சித்தர் ஒருவரை, சூக்குமமாக குருவாக பெற்று, ஞான வாழ்வினை பெற்று இறைவர்களாக முடியும். அஃதாவது உள் மனதினை கடந்து, மனதில் தோன்றும் ஆசைகளை தவிர்த்து, மனதினை கட்டுக்குள் கொணர்ந்து, மனம் வெளி ஆசைக்கு மயங்காதிருக்கும் தன்மையை பெற்று, ஒளி உடலினை பெற்று, கடவுள் ஆக முடியும்.

இதனை மேலும் விளக்குவதென்றால், நான் மேற்சொன்ன வகையில், உயிர் சக்தியை மறைத்துக் கொண்டுள்ள, மாயை சக்தியை அடக்கியதன் பின்னர், நமக்கு குருவாக கிடைக்கும் சித்தரானவர், நம்மை, மென்மேலும் ஞான வழியின் ஊடாக அழைத்து சென்று, மேலும், நாம் இப்பிறவியில் செய்தது போன்ற, முற்பிறவியில் செய்த பாவங்களினால் சிக்கியிருக்கும், நமது ஆன்மாவாகிய “உயிர் இயங்க தேவையான சக்தியை” மறைத்திருக்கும், கன்ம திரைகளை எரித்து, அதன் பின்னர் ஆணவ மலமாகிய, “நான்” எனும் ஆணவத்தினை உணர்த்தி, அதனையும் அகற்றி, நம்மை முழுமையான ஞானியாக்கி, சித்தத்தினை தெளிவடைய செய்து, இறைவனுடன் இரண்டற கலக்க ( அதாவது சூரிய சந்திர ஒளியுடன் நம் ஆன்ம சக்தியையும், உயிரினையும் கலக்க செய்தல் ) செய்வார். ஆக ஆயுத பூஜையின் உட்கருத்து இதுவே ஆகும். இன்னும் விரிவாக இது பற்றிய இன்னொரு கட்டுரையில் குறிப்பிடுகிறேன்.

பதிவினை எழுத உதவிய, தூண்டிய‌ கருத்துக்கள்
1. https://www.facebook.com/siddhaconference/photos/a.325678334153155.73260.321473124573676/392927240761597/?type=3&theater
2. https://www.facebook.com/permalink.php?story_fbid=1507979276181263&id=1414886448823880&fref=nf&pnref=story

தற்காலத்தில் வாழ்கின்ற சித்தர் ஆறுமுக அரங்கமகாதேசிகர் பற்றியும், அவர்களினால் நடத்தப்படும் சித்தர் ஆலயம் பற்றி அறிந்துகொள்வதற்கு – www.agathiar.org

மண்புழு வளர்ப்பின் பயன்கள்

(மீள்பதிப்பு)
ஒரு நிலம் விவசாயத்துக்கு ஏற்ற நிலம். நன்கு வளமான நிலையில் உள்ளது. அதில் என்னபயிர் செய்தாலும் நன்கு வளரும் என்று உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு நல்ல உபாயம் உள்ளது.

அது என்னவென்றால் அந்த நிலத்தில் ஈரமான ஒரு பகுதியில் மண்ணைப் பறித்துப் பார்த்தால் அங்கு மண்புழுக்கள் தென்பட வேண்டும்.

Worm and farming

ஒரு நிலத்தில் ஈரமான ஒரு நிலையில் மண்புழுக்கள் அங்கு வாழமுடியும் என்றால் அங்கு நன்கு பயிர் செய்யமுடியும் என்பது பொருள்.

அதனால்தான் மண்புழுக்களைக் குடியானவனின் நண்பன் என்று கூறுவார்கள்.

மண்புழுக்கள் வாழும் நிலங்கள் எதனால் அப்படிக் கருதப்படுகின்றன, மண்புழுக்கள் நமக்கு என்ன பயனைத் தருகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

மண்புழு வாழவேண்டுமானால் அங்கு அதற்குத் தீனி வேண்டும். அதற்குத் தீனி கிடைக்க வேண்டுமானால் நன்கு மக்கிய பொருட்கள் அந்த நிலத்தில் கலந்திருக்க வேண்டும். மக்கிய பொருட்கள் கலந்திருக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான மக்கக்கூடிய குப்பைகள் இலை தழைகள், கால்நடைகளின் கழிவுகள் போன்றவை கலந்திருக்கவேண்டும்.

அதுமட்டுமல்ல குப்பை கூழங்களை மக்கச்செய்யும் நிறைய நுண்ணுயிர்களும் அந்த நிலத்தில் வாழவேண்டும். அதற்குமேல் போதுமான ஈரம் வேண்டும்.

இவ்வளவும் சரியாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் மண்புழு!

அந்த மண்புழுக்கள் ஒரு ஈரநிலத்தில் காணப்படவில்லை என்றால் என்ன பொருள்?

அவை வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை, போதுமான உணவு இல்லை என்பது பொருள்.

அப்படியானால் அதைத்தொடர்ந்து அந்த நிலத்தில் மக்கக்கூடிய பொருட்களோ அவற்றை மக்கச்செய்யும் நுண்ணுயிர்களோ இல்லை என்றும் உணர்ந்து கொள்ளலாம்.

அது பயிர் செய்ய அதுவும் இயற்கை விவசாயம் செய்ய ஏற்ற நிலம் அல்ல என்று எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த நிலை ஏற்படுவதற்குக் காரணம் என்ன? ஏன் மண்ணில் மண்புழுக்கள் இல்லாமல் போகிறது? வரட்சிக் காலத்தில் ஈரம் இல்லாததால் மண்புழு இல்லாமல் போவது நியாயம். ஈரகாலத்திலேயே ஏன் இல்லாமல் போகின்றன?

காரணம் மிக எளிதானதுதான். ஆதாவது சின்னஞ்சிறு மண்புழுக்கள் மீது நாம் கருணையற்ற யுத்தம் நடத்தி; வருகிறோம். அதுவும் பலமுனைத் தாக்குதல்!

ஒரு பக்கம் கால்நடைப் பயன்பாட்டைக் குறைத்து அதனால் அவற்றின் கழிவுகள் நேரடியாக நிலத்தில் சேர்வதைத் தடுத்துவிட்டோம். அதனால் நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களுக்கோ மண்புழுக்களுக்கோ போதுமான உணவின்றிச் செய்து வருகிறோம்.

மறுபக்கம் நிலத்தில் பயிர்களுக்கான சத்துக்கள் குறைந்த நிலையில் நிலத்தை வளப் படுத்துவதற்குப் பதிலாக வேதி உரங்களைப் பயன்படுத்தினோம்.

நிலத்திலுள்ள நுண்ணுயிரிகள் வேதி உரங்களை உண்டு வாழ முடியாதது மட்டுமல்ல அந்த நிலையில் வாழும் சூழலை இழந்து அழிவை நோக்கிய பயணத்தைத் துவக்கின.

போதாக் குறைக்கு பூச்சிக் கொல்லிகளை வரைமுறையின்றிப் பயன்படுத்தியதாலும் நேரடியாக நஞ்சின்மூலமும் களைக்கொல்லிகளின் மூலமும் மண்;புழுக்கள் கொல்லப்பட்டன.

என்ன வேதி உரங்களைப் போட்டாலும் என்ன பூச்சி;க் கொல்லிகளைத் தெளித்தாலும் பயிர் எதிர்பார்த்தபடி வளர்வதில்லை போதுமான மகசூலைக் கொடுப்பதில்லை, நாளுக்கு நாள் பூமி களர் நிலங்களாகி வருகிறது என்று காலங் கடந்து உணரப் படுகிறது. இப்போதும் விவசாயம் நெருக்கடிக்கு உள்ளாகாமல் இருந்திருந்தால் வருமானம் கட்டுபடியாகக்கூடிய அளவில் இருந்திருந்தால் இப்போதும் இந்த இயற்கை வேளாண்மை பற்றிய சிந்தனை வந்திருக்காது.

இப்போது செய்த தவறு உணரப்படுகிறது. அதைத் திருத்திக் கொள்வது எப்படி என்பதுதான் கேள்வி!

அதற்கு வேதி உரங்களை மூட்டை மூட்டையாகக் கொட்டி விவசாயம் செய்தோமல்லவா அதுபோலவே நிறைய மண்புழு உரம் உற்பத்தி செய்து மூட்டை மூட்டையாகப் போட்டால் பயிர் அருமையாக வரும் என்று கருதப்படுகிறது. செய்யவும் படுகிறது.

ஆதாவது முன்போலக் கால்நடைகள் இல்லாத நிலையில், கால்நடைகiளின் பயன்பாடு குறைந்த நிலையில் கால்நடைகள் வைத்து பாரம்பரிய முறை விவசாய வேலைகள் செய்யமுடியாத நிலையில் இருக்கும் வேலை செய்யும் மாடுகளையும் பால்மாடுகளையும் அவற்றின் கழிவுகளையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்ததன் பயன்தான் மண்புழு உரம். ஏன் அதை நாமே உற்பத்தி செய்து நிலத்துக்கு இடக்கூடாது என்றும் நினைத்தார்கள்.

மாடுகளை நிறைய வளர்த்து அவற்றை நிலத்தில் பட்டிகளில் அடைத்து மற்றும் எருக் குழிகளில் சேகரிக்கப்படும் சாணத்தின் மூலம் நிலத்தில் மண்புழுக்கள் உற்பத்தியாவதன் மூலம் பயன் கிடைக்க நிறைய மாடுகள் வேண்டும். நிறைய வேலையாட்கள் வேண்டும். நிறைய செலவும் பிடிக்கும். அது நடைமுறை சாத்தியமும் இல்லை.

அதனால் மண்புழு உரத்தை நாமே ஓரிடத்தில் உற்பத்தி செய்வது சுலபம்தானே! அதுதான் மண்புழு மோகம்!

நாம் உற்பத்தி செய்யும் மண்புழு உரமும் நிலத்தில் வாழும் மண்புழுக்கள் உற்பத்தி செய்யும் உரமும் ஒரேமாதிரி தரமுடையவைதானா?

மண்புழுக்களுக்கு நிலத்தில் உரமிடுவது மட்டும்தான் வேலையா?

இந்த இரு கேள்விகளுக்கும் தெளிவான விடை காணவேண்டும்.

மண்புழுக்கள் தங்களுக்கான உணவைத்தேடி இடைவிடாமல் தாம் வாழும் காலம் ஈர மண்ணுக்குள் இடம் பெயர்ந்துகொண்டே உள்ளன. குறைந்த பட்சம் இரண்டடி ஆழத்துக்காவது மண்ணுக்குள் மண்புழுக்களின் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

மண்ணுக்குள் மண்புழுக்களின் நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால் விவசாய நிலத்தின் மேல் மண் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்படுகிறது. அந்தத் துளைகள் உடனுக்குடன் மூடிக்கொள்வதால் நமது கண்களுக்குத் தெரியாது ஆனால் அப்படித் துளையிடப்படுவதால் மண் கெட்டிப்படாமல் மிருதுவாக ஆக்கப்படுகிறது.

அப்படி மிருதுவாக்கப்படும் மண் மற்ற நுண்ணுயிர்களின் நடமாட்டத்துக்கும் மழைநீர் எளிதில் மண்ணுக்குள் நுழைந்து தங்கவும் உதவி செய்கிறது.

ஆக மண்ணை மிருதுவாக்குகிறது. அதன் மூலம் மற்ற நுண்ணுயிர்களின் நடமாட்டத்துக்கும் பெருக்கத்துக்கும் உதவி செய்கிறது. மழைநீர் சேகரிப்புக்கும் உதவுகிறது.

மண்புழுக்களை நாம் வளர்ப்பதன் மூலம் எரு உற்பத்தி செய்தாலும் மண்புழுக்களின் இந்த வேலைகளையெல்லாம் நிலத்தில் செய்வது யாh?

அதுமட்டுமல்ல இரண்டாவதாக மண்புழுக்கள் தான் வாழும் மண்ணில் நிலத்திலேயே தனக்கான உணவையும் பெற்று தனது கழிவுகளையும் வெளியேற்றும்போது அந்தக்கழிவுகள் எருவாக உடனுக்குடன் மண்ணில் சேர்ந்து விடுகிறது. அப்படிச் சேர்க்கும்போது அதை தான் நடமாடும் இடங்களில் வெளிக் காற்றுப் படாமல் வெய்யில் படாமல் சேதாரமில்லாமல் சேர்க்கிறது.

அந்த எருவை நிலத்தில் உள்ள அதைச் சார்ந்துள்ள சில நுண்ணுயிரிகள் மேலும் பக்குவப்படுத்தி மேம்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. பல்லுயி;ர்களின் வாழ்க்கை முறை அதுதான் ஆகும்.

ஆனால் தனியாகத் தயாரிக்கப்படும் மண்புழு உரம் உடனுக்குடன் உடனுக்குடன் நிலத்தில் சேர்க்கப்படுதில்லை. அதனால் காற்றின் மூலமும் வெப்பத்தின் மூலமும் ஒரு பகுதி சத்துக்களை இழந்து சக்கையாகிப் போகும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.

மண்புழு இயற்கையாக நிலத்தில் எங்கெல்லாம் தனது கழிவாகிய உரத்தை படியச் செய்கிறதோ அந்த முறையில் நாம் தயாரிக்கும் உரத்தைப் படியச்செய்ய முடியாது.

இந்த நிலையில் நாம் தயாரிக்கும் மண்பூழு உரமும் அதன் பயன்பாடுகளும் இயற்கையில் வாழும் மண்புழுக்களுக்கு எப்படி ஈடாகும்?

அதனால் நாம் மண்புழுக்களுக்கு உணவாகும் விதத்தில் மக்கக்கூடிய குணம் உள்ள பல்வேறுபட்ட பொருட்களை விவசாய நிலங்களில் இட்டு மக்கச்செய்ய வேண்டும். கால்நடைக் கழிவுகளை அது காற்றாலும் வெய்யிலாலும் சாரமிழக்கும் முன்பே நிலத்தில் சேர்க்கவேண்டும்.

எவையெல்லாம் கொண்டு மண்புழு வளர்க்கலாம் என்று நினைக்கிறோமோ அவற்றை யெல்லாம் விவசாய மண்ணிலேயே நேரடியாகச் சேர்த்து மண்புழுக்களுக்கு உணவாக மாற்றும் வேலையை இயற்கையிடமே ஒப்படைக்கவும் வேண்டும். அதுதான் சிறந்த முறை ஆகும்.

அதைவிட்டு இயற்கையாக மண்ணில் வாழ்ந்து வளம் கொடுக்க வேண்டிய மண்புழுக்களை கோழிப் பண்ணைகளில் கோழிகள் வளர்ப்பதுபோல் வளர்க்க நினைத்தால் அந்த முறையில் மண்புழுவளர்த்து நல்ல லாபத்துக்கு மண்புழு உரம் விற்பவர்கள் வாழத்தான் பயன்படுமே தவிர நிலங்கள் வளங்குறைந்து போவதைத் தடுக்க உதவாது.

வேதி உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் கொட்டிக்கொடுத்துக் கடன்காரர்கள் ஆன விவசாயிகள் வருங்காலத்தில் மண்புழு உரத்துக்கும் பஞ்சகாவ்யத்துக்கும் செலவு செய்து கட்டுபடி ஆகவில்லை என்று சொல்லவேண்டிய நிலையும் வரலாம்.

விவசாயிகள் தற்காலத்தில் தங்கள் நிலத்தில் விளையும் நெல்லை விற்றுவிட்டு கடைகளில் விற்கும் அரிசியைத்தான் வாங்கி உண்கிறார்கள்.

அதுபோல தங்களின் கால்நடைகளின் சாணத்தை மண்புழு வளர்ப்பாளர்களுக்கு விலைக்கு விற்றுவிட்டு அவர்களிடமிருந்து மண்புழு உரத்தையும் பஞ்சகாவ்யத்தையும் வாங்கி உபயோகிக்கும் காலமும் வெகு தூரத்தில் இல்லை.

இதுபோன்ற எதிர்ப்புக் குரல் எல்லாம் கடல் அலைகளின் முன் குருவி கீச்சிடுவது போன்றதுதான்.

யார் கேட்கப் போகிறார்கள்?

நன்றி – Subash Krishnasamy
http://www.drumsoftruth.com/2012/06/blog-post_21.html

சுன்னாகம் அழிவைத் தலைமை தாங்கியது நானே :சம்பிக்க ஒப்புதல் வாக்குமூலம்

chunnakamm2008 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டின் சுன்னாம்பு நீர்ப்படுகையில் நச்சுப் படிவுகளை ஏற்படுத்தி பேரழிவுகளைத் தோற்றுவித்துக்கொண்டிருந்த சுன்னாகம் அனல் மின்னிலையத்தின் உள்ளக உற்பத்தியை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இன்றைய இலங்கை அரசின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சம்பிக்க ரணவக்க ராஜபக்ச அரசில் எரிசக்தி மற்றும் மின்வலு அமைச்சராகவிருந்த காலத்தில் நொதேர்ன் பவர்ஸ் என்ற நிறுவனம் சுன்னாகம் அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி நடத்திக்கொண்டிருந்தது.

யாழ்ப்பாணக் குடா நாட்டில் சுன்னாகத்தை மையமாக கொண்ட நிர்ப் படுக்கைகளை நச்சாக்கிற்று. நீரை அருந்தியவர்களுக்குப் புற்று நோய் உருவானது. பயிர்ச்செய்கை அழிந்து போனது. செம்மண் சார்ந்த வளமான நிலப் பகுதியான இணுவில், உரும்ம்பிராய், ஏழாலை, தெல்லிப்பளை, ஊரழு பகுதிகள் எல்லாம் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டது.

அமைச்சராகவிருந்து ஒரு பெரும் நிலப்பரப்பையே நாசப்படுத்திய சம்பிக்க ரணவக்க இன்று நோதேர்ன் பவர்ஸ் இன் மின் உற்பத்தியை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு நச்சுக் கழிவுகளை வெளியேற்றி சூழலை மாசுபடுத்தக் காரணமாகவிருந்த இத்தாலியரான ஆன்ரியோ கியாக்கபோன் என்பவரை உலகப் போலிஸ்படையான இன்டர்போல் தேடிவருவதாகவும் அவர் தப்பியோடிவிட்டதாகவும் அறிவித்தது.

ஜாதிக ஹெல உறுமைய என்ற சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சியைச் சார்ந்த சம்பிக்க ரணவக்க நான்கு வருடங்களாக – 2010 இலிருந்து 2014 வரை – குடா நாட்டின் ஒரு பகுதியை நச்சாக்குவதற்குக் காரணமாகவிருந்துள்ளார்.

இன்று நோதேர்ன் பவர்ஸ் நிறுவனம் சூழலை நச்சாக்கியது என்று சம்பிக்க ரணவக்கவே வாக்குமூலம் கொடுத்து அந்த நிறுவனத்தை மூடக் கோரியுள்ளார். ஆக, 2010 ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடங்கள் மின்வலு அமைச்சராகவிருந்து சூழலை மாசுபடுத்திய சம்பிக்க இன்டர்போலின் பார்வைக்கு குற்றவாளியில்லையா? இன்டர்போலால் தேடப்படும் எவரும் தமது குற்றங்களைத் தாமே ஒப்புக்கொள்வதில்லை. சம்பிக்க ரணவக்க சூழலை மாசுபடுத்தியதைத் தானே ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக இந்த அழிவை மேற்கொண்ட ஒருவர் இன்றும் அதே பதவியில் தொங்கிக்கொண்டிருக்க அனுமதிக்க முடியுமா? மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சராகத் தொடர முடியுமா?

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரழந்தவர்கள், குழந்தைப் பேறு அற்றுப்பொனவர்கள், விவசாய நிலங்களையும், குடி நீர் வசதிகளையும் இழைந்து அனாதைகளாக்கப்பட்டவர்கள் போன்ற அனைவருக்கும் சம்பிக்க ரணவக்க பதில் சொல்ல வேண்டும்.

ஊழலை அழிக்கிறோம், குற்றவாளிகளைத் தண்டிக்கிறோம் என்று கூறும் சாம்பார் அரசில் அங்கம் வகிக்கும் அடிப்படைவாதியும் குற்றவாளியுமான சம்பிக்க மட்டும் தண்டிக்கப்படாமலிருப்பதன் பின்னணி என்ன?

2007 ஆம் ஆண்டில் மலேசியாவைத் தளமாகக் கொண்ட எம்.ரி.டி கப்பிடல் என்ற பல்தேசிய வர்த்தக நிறுவனம் இலங்கையில் நோர்தேர்ன் பவர் என்ற நிறுவனத்தின் 80 வீதமான பங்குகளை வாங்கிக்கொண்டது. நோர்தேர்ன் பவர் என்ற நிறுவனத்தை ஜெகான் பிரசன்ன அமரதுங்க என்ற தனி மனிதனே நடத்திவந்தார். நோர்தன் பவர் நிறுவனதினூடாக சுன்னாகம் மின்சார உற்பத்தி நிலையத்தை வாங்கிக்கொண்ட எம்.ரி.டி கப்பிடல் அங்கு மின்சார உற்பத்தியை 2008 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஆரம்பித்தது. அதுவரையில் டீசல் பாவிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 2008 இலிருந்து பேர்னாஸ் கழிவு எண்ணையைப் பயனபடுத்தி உற்பத்தி செய்யப்பட்டது.
கட்டுமானத்துறை, நிதி முதலீடு போன்ற துறைகளில் ஈடுபட்டிருந்த பன்னட்டு நிறுவனமான எம்.ரி.டி கப்பிடல் யாழ்ப்பாணத்திலேயே முதல் தடவையாக மின்சார உற்பத்தியைப் பரிசோதித்தது. போரால் விழுங்கப்பட்ட மக்களின் வாழ்கையின் மீது பரிசோதனை நடத்த ஆரம்பித்த எம்.ரி.டி கப்பிடல் தனது இலங்கைக் கிளையை எம்.ரி.டி வோக்கேர்ஸ் என அழைக்க ஆரம்பிதது.

எம்.ரி.டி வோக்கெஸ் இன் இயக்குனர்களில் ஒருவராக பிரித்தானிய ஆளும் கன்சட்வேட்டிவ் கட்சியின் பிரதான உறுப்பினரும் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான நிர்ஜ் தேவா என்பவர் செயற்படுகிறார் . ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரான இவர் பிரித்தானியாவிலேயே ஊழலுக்குப் பேர்போன பேர்வளி.

சூழலை அழிக்கும் வெவ்வேறு நிறுவனங்கள் சட்டத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நிர்ஜ் தேவாவை இயக்குனராகச் சேர்த்துக்கொண்டுள்ளன. இன்றைய இலங்கை அரசின் ஆதரவாளரான தேவா இன்டர்போலின் கண்களிலிருந்து தப்பித்தது எப்படி? தேவா தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியா இல்லையா?

ராஜபக்சவின் இனக்கொலை அரசில் அங்கம் வகித்த சிங்கள பௌத்தப் பேரினவாதி சம்பிக்க ரணவக்கவிலிருந்து நிர்ஜ் தேவா உட்படப் பலர் யாழ் குடா நாட்டை அழிப்பதில் பங்காற்றியுள்ளனர். இவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் வேறு வழிகளில் உள்ளே நுளைந்துகொண்டே இருப்பார்கள்.

சுன்னாகம் நொதேர்ன் பவர் நிறுவனத்தை சம்பிக்க மூடுமாறு வழங்கிய உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்தாலும் கண்துடைப்பிற்காவது சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். மைத்திரி அரசின் எடுபிடிகளாக மாறியுள்ள புலம்பெயர் ஊடகங்களின் ‘பிரேக்கிங் நியூஸ் ‘ அருவருப்புக்கள் இலங்கையில் சொர்க்கத்தின் வாசல் திறக்கப்பட்டிருப்பதாக பீற்றிக்கொள்கின்றன.

சுண்ணாம்பு நீர்ப் படுக்கைகளில் 2008 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இன்றுவரை படிந்திருக்கும் நச்சு இன்னும் எவ்வளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது கணிப்பிடப்படவில்லை.

அந்த நீரைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிப்பதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் சிறைப்பிடிக்கப்பட வேண்டும்.

இவை நடைபெறாவிட்டால் தமக்குத் தேவைப்படும் நேரங்களில் யார் வேண்டுமானாலும், எந்த வகையிலும் அழிவுகளை மேற்கொள்ளலாம். மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கலாம். உணவிலும் நீரிலும் நஞ்சு கலக்கலாம். சாரி சாரியாக மக்களைக் கொன்று போடலாம்.

இன்று தெரிந்தோ தெரியாமலோ சம்பிக்க ரணவக்க தானும் தான் சார்ந்தவர்களும் மேற்கொண்ட குற்றங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதனை ஆதாரமாகக் கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் பெறுவதும், நஞ்சு சுத்திகரிக்கப்படுவதும் அவசியமானது.