Capitalism A Love Story:ரதன்

Capitalism-A-Love-Story10முதலாளித்துவம் ஒவ்வொரு அமெரிக்கரையும் , நேரடியாகவே பாதிக்கின்றது. உலகத்தின் எசமான் என்ற வரையில் உலக மக்களையும் பாதிக்கின்றது. இவர் இப்படத்தில் குறிப்பிட்ட பல விடயங்களை அமெரிக்க ஊடகங்கள் மறுத்துள்ளன. இவரைப் பற்றிய உண்மைக்கு புறம்பாக பல பிரச்சாரங்களை பதிவு செய்துள்ளன. இதனால் இந்த ஊடகங்களே இவர் மேல் மக்களின் கவனத்தை திருப்பியுள்ளன. உலகிலியே மிகவும் அதிக கவனத்தைப் பெற்ற விவரணத்திரைப்பட படைப்பாளி இவர் என்பதை மறுக்கமுடியாது.

படத்தின் ஆரம்பத்தில் ரோம சாம்ராச்சியத்தில் முதலாளித்துவத்தின் தோற்றத்துடன் ஆரம்பமாகின்றது. முதலாளித்துவத்தின் தோற்றத்தை இங்கிருந்து ஆரம்பிக்கலாமா? அதற்கு முன்பே தோன்றி விட்டது என்பதற்கு சான்றுகள் இருந்தாலும், இங்கு ரோம சாம்ராச்சியம் ஓர் அடையாளமாகவே காட்டப்படுகின்றது.

இவரது வழமையான விவரணப்படங்களைப் போல் அல்லாமல் இப் படம் பரந்து விரிகின்றது. எங்கும் கொள்ளை, லாபம், சுயநலம் இதுவே முதலாளித்துவம் என விரிகின்றது. இப் படத்தில் இரண்டு விடயங்களை செய்துள்ளார். முதலாவது உண்மை உதாரணங்களை காட்டியுள்ளார். 41 வருடங்களாக வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேற்றப்படும் தொழிலாளி, தனது வீட்டை வங்கி பெற்றுக் கொள்ள , அதனை வங்கிக்காக துப்பரவு செய்து கொடுத்து அதற்கான கூலியையும் பெறும் குடும்பம், கதவு தொழிற்சாலையின் திடீர் கதவடையப்யடுத்து வேலை இழக்கும் தொழிலாளிகள், போராடி ஆறாயிரம் டொலர்கள் பெறும் சம்பவம் போன்ற உண்மைச் சம்பவங்களை காட்டியுள்ளார்.

இரண்டாவதாக டிற்ரொயிட்டில் உள்ள ஜெனரல் மோட்டோர்ஸ் நிறுவனத்தின் தலைமை காரியாலத்தில் செல்ல முயற்சிப்பது, வங்கிகளின் வங்குரோத்து நிலைக்காக வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட மக்கள் வரிப் பணத்தை மீள பெறும் முயற்சியாக சிற்றி வங்கி முன் “காசை கொடு” என கேட்பது போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். இவை இவரை மற்றைய படைப்பாளிகளில் இருந்து வித்தியாசப்படுத்துகின்றது. அமெரிக்க உழைக்கும் மக்களின் குரலாக இவை இவரை வெளிப்படுத்துகின்றன. இவர் படத்தில் குறிப்பிட்ட பல விடயங்கள் மக்களை முதலாளித்துவத்தின் காவலர்கள் மேலும், அரசின் மீதும் நம்பிக்கையீனத்தை தோற்றுவித்துள்ளன. அவ் வகையில் இவரது படம் தனது இலக்கை அடைந்துள்ளது.

இப் படத்தில் மூர் வெளிப்படுத்தும் முதலாளித்துவ கொடுமைகள் பின்வருமாறு…
இந்த தரவுகள் மூலம் மக்கள் உழைக்கும் பணம் முதலாளிகளை சென்றடைகின்றன. மக்களின் துயரத்திலும் இவர்கள் லாபத்தை சம்பாதிக்கின்றனர் எனக் கூறுகின்றார்.( படத்திற்கு அப்பால் ஒரு உதாரணம் குவைத்தை ஈராக்கிடமிருந்து மீள பெற்ற சண்டையின் போது பல எண்ணெய் குழாய்கள் எரிக்கப்பட்டன. இதனை செய்த அமெரிக்காவே பின்னர் இதனை திருத்தியது. இதற்காக பல லட்சம் டாலர்களை பெற்றுக்கொண்டன. )

• விமானிஓட்டியாக படிக்க செலவு சுமார் ஒரு லட்சம் டொலர்கள். கடன் பெற்று படித்தால், பெறும் சம்பளம் வெறும் சொட்பமே (இது ஏனைய நாடுகளில் வித்தியாசம்). கடனை அடைப்பது எப்படி? அத்துடன் இவர்கள் உணவு முத்திரையிலும் தங்கியிருக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில் உணவு முத்திரையா? ஆச்சரியமல்ல ! உண்மை. சுமார் 9 வீதமான அமெரிக்க மக்கள் இந்த உணவு முத்திரையில் தங்கியுள்ளனர். 1939ல் ஆரம்பிக்கப்பட்;ட இந்த திட்டம் அவ்வப் போது பல மாற்றங்களை பெற்றுள்ளது. சராசரியாக 24 டொலர்கள் கொண்ட உணவு முத்திரைகள் வழங்கப்படும். இதனை பல சரக்கு கடைகளில் மாற்றிக் கொள்ளலாம். எம்.ஜி.ஆர் காலத்து சத்துணவுத் திட்டம் போன்றது இது. இதனை நிர்வகிப்பது அரச விவசாயக் கூட்டுத்தாபனமாகும். சிக்காகோ பகுதியில் மாத முதல் நாளன்று இரவிரவாக வரிசையில் பல சரக்கு கடைகளின் முன் நிற்பதை காணலாம். மாதமுடிய பல நாட்களுக்கு முன்னரே உணவு பொருட்கள் முடிந்து விடுவதால் இந்த நிலை.

• அடுத்து மூர் பென்சலவேனியா மாநிலத்து குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற சட்ட விரோத செயல்களை வெளிப்படுத்துகின்றார். நீதிபதி திட்டமிட்டு சாதாரணமாக நடைபெறும் நிகழ்வுகளுக்கும் 2-6 மாதம் வரை இந்த சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். பின்னர் அவர்களது தண்டனை காலம் முடிந்த பின்னரும், விடுதலை செய்யாமல் இழுத்தடித்து 12-15 மாதங்களின் பின்னர் விடுதலை செய்கின்றனர். தனியார் அரசுக்காக நடாத்தும் நிலையமாதலால் அரசு பராமரிப்பு காலத்திற்கு பணம் வழங்குகின்றது.

• ஒருவர் தான் வேலை பார்க்கும் காலத்தில் இறந்தால், இறந்தவர் காப்புறுதி செய்திருந்தால் அவரது துணைவருக்கு காப்புறுதி பணம் கிடைக்கும். இந் நிலை பல தனியார் நிறுவனங்களில் வேறுபடுகின்றது. நிறுவனத்தில் வேலை பார்க்கும் காலங்களில் அவர் இறந்தால், அவர் வேலை பார்த்த நிறுவனம் பல லட்சத்தை காப்புறுதி பணமாக பெறுகின்றது. அவரது குடும்பம் அவரது மரணத்தில் நிலை குழைந்திருக்கும் பொழுது, அவர் வேலை பார்த்த நிறுவனம் அவரது மரணத்தை கொண்டாடுகின்றது. இது பலரது குடும்பங்களுக்கு தெரியாது. இந்த சாதனையை செய்த நிறுவனங்கள் Walt Disney , Nestle , Portland General Electric, WallMart போன்றவை.

• பல நிறுவனங்கள் குறிப்பாக ஜெனரல் மோட்டர் நிறுவனம் சுமார் 40,000 பேரை வேலை நீக்கம் செய்ய முன்னர் அவர்கள் பெற்ற லாபம் 4.86 பில்லியன் அமெரிக்க டாலர்கள். பொதுவாக மேற்கத்திய நாடுகளில் நிறுவன தலைமை அதிகாரிகள் தங்களது பிழைகளை தவிர்க்க லாபத்தை அதிகரிக்கும் ஓர் ஊடகமாக வேலை நீக்கத்தை கையாள்கின்றனர்.

• வுரி விகித மாற்றங்கள் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு சாதகமாக உள்ளது.

• வீட்டு கடன் மோசடிகள். பல தடவைகளில் கடன் பெற்றவரறியாமல் வீட்டு கடன்கள் வேறு கடன் வழங்கும் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டிருக்கும். நீங்கள் 20 வருடங்களாக வீட்டு கடனை கட்டியிருந்தாலும், திடீரென ஏற்படும் பணசிக்கலால் நீங்கள் வீட்டை இழக்க வேண்டியிருக்கும். இதில் ஏற்பட்ட மோசடியை தரவுடன் உறுதிப்படுத்தியுள்;ளார் மூர்.

• பல வங்கிகள் வீட்டு கடன் கட்டி முடிக்க வேண்டிய காலத்தை 40 வருடங்கள் வரை அதிகரித்துள்ளன. 20 வயதில் வீடு வாங்கும் ஒருவர் அதனை கட்டி முடிக்க 60 வயதாகிவிடும். வீட்டு கடன் 2 லட்சம் டொலர்களாயின் கட்டி முடிக்கும் பொழுது மொத்தமாக கட்டிய தொகை 8 லட்சமாக இருக்கும். கடனை கட்ட முடியாது போகும் பொழுது, உங்களது வீட்டை வங்கி எடுத்து விடும்.

• அமெரிக்க அரசின் நிதியையும், பொருளாதார கொள்கைகளையும் தீர்மானிக்கும் தலைமை அரசு அதிகாரிகள், முன்னால் பெரிய நிறுவன தலைமை முகவர்கள். Robert Rubin முன்னால் City Group மற்றும் Goldman Sachs நிறுவன தலைமை அதிகாரி.Henry Hank Paulson ம் Goldman Sachs நிறுவன தலைமை அதிகாரி.

• இதே நிறுவனங்கள் (Citi Group, Goldman, Morgan Stanley) பல லட்சங்களை போனஸாக தலைமை அதிகாரிகளுக்கு வழங்கினர். பின்னர் வங்குரோத்து நிலையில் இருந்து தப்புவதற்கு எனக் கூறி மக்கள் வழங்கிய வரிப்பணத்தை பல லட்சங்கள் பெற்றனர். இதனை பல் வேறு நிறுவனங்களும் செய்தன. அமெரிக் அரசும் இந்த நிறுவனங்களுக்கு நிதயை வழங்கியுள்ளன.

• அபிப்பிராய வாக்கெடுப்பின் படி 37 வீதமானோர் மட்டுமே முதலாளித்துவத்தை விரும்புகின்றனர். 33 வீதமானோர் சோசலிசத்தை விரும்புகின்றனர்.

• ரூஸ்வெல்ட் ஒரு சோசலிச அமெரிக்காவை விரும்பினார். 1937 ம் ஆண்டு மிச்சிக்கன் மாநிலத்தில் ஏற்பட்ட வேலை நிறுத்தத்தில் போலிசுக்கும், தொழிலாளிகளுக்குமிடையில் கலவரம் ஏற்பட்டது. அப்போதைய கவர்னர் மேபி, ரூஸ்வெல்டடின் அனுசரனையுடன் தேசிய இராணுவத்தை தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனுப்பினார்.

• இன்றைய அமெரிக்க நிலைக்கு மூல காரணம் B கிரேட் படங்களில் நடித்த ரொனால்ட் ரீகனே. புஜ் வரை இது தொடர்ந்தது.

• Top Employers of Contributors for Obama
http://www.opensecrets.org/pres08/contrib.php?cycle=2008&cid=N00009638
University of California $1,591,395
Goldman Sachs
$994,795
Harvard University $854,747
Microsoft Corp
$833,617
Google Inc $803,436
Citigroup Inc
$701,290
JPMorgan Chase & Co
$695,132
Time Warner
$590,084
Sidley Austin LLP $588,598
Stanford University $586,557
National Amusements Inc $551,683
UBS AG $543,219

Wilmerhale Llp $542,618
Skadden, Arps et al $530,839
IBM Corp $528,822
Columbia University $528,302
Morgan Stanley
$514,881
General Electric
$499,130
US Government $494,820
Latham & Watkins $493,835

OBAMA 13ஓபாமாவை ஓர் அமெரிக்க தீர்க்கதரிசியாக மூர் காட்டுகின்றார். சற்று குழப்பமாக ஒபமாவின் தேர்தலுக்கு மேற்குறிப்பிட்ட மிகப் பெரிய நிறுவனங்கள் பணத்தை வழங்கின எனக் கூறுகின்றார். ஒபமாவின் தேர்தல் வெற்றியை கறுப்பின மக்கள் கொண்டாடுவதாக காட்டுகின்றார். வெள்ளை இன மக்களின் வாக்குகள் இல்லாவிடில் ஒபாமா வெற்றி பெற்றிருக்கு முடியாது.

அமெரிக்காவின் சில பகுதிகள் மூன்றாம் உலக நாடுகளை விட மோசமாக உள்ளது எனக் கூறும் மூர் அமெரிக்க முதலாளித்துவத்தை நகர்த்துவோர் மீது குற்றம் காண்கின்றார். அமெரிக்க அடிப்படை கொள்கைகள் தவறு என காணத் தயங்குகின்றார்.

ரொரண்ரோ ஸ்ரார் பத்திரிகைக்கு இவரது படம் ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட காலத்தில் அளித்த பேட்டி ஒக்ரோபர் 2ம் நாள் இதழில் வெளியாகியுள்ளது. அதில் கேட்கப்பட் கேள்வியும், இவர் அளித்த பதிலும் முக்கியமானது.

Q. If you’re against capitalism, what would you replace it with?
A. There’s no system that I would replace it with. I guess what I would do is take the best old capitalism, which rewarded one’s ideas; inventiveness and hard work…. I want that person to do well. And if that’s an incentive, all the better-for all of us.

Then take those things from socialism that got mucked up by Moscow and Bejing. Take those things of socialism that are actually based in democracy, where the people are treated equally and fairly,and try to behave in the moral code we say we have.

முதலாளித்துவத்துக்கான மாற்று என்பதற்கு இவரால் சரியான பதிலை கூற முடியவில்லை. ஒரு விவரணத் திரைப்பட படைப்பாளியின் நோக்கம் சமூக நலனாக இருந்தாலும், படைப்பாளியின் தெளிவின்மை, படத்தை நுகரும் நுகர்வோருக்கு தெளிவான சிந்தனை தெளிவை ஏற்படுத்தாது.இவரது தொலைக்காட்சித் தொடரான Awful Truth என்ற தொடரைப் போன்றே இப் படமும் அமைந்துள்ளது.

மைக்கல் மூர் உலகின் அதிக வருமானம் பெறும் விவரணத் திரைப்பட இயக்குனர். சுமார் 172 மில்லியன் டொலர்கள் இவரது படங்கள் பெற்றுக் கொடுத்துள்ளன. இவர் பயணம் செய்யும் நாடுகளில் ஜந்து நட்சத்திர விடுதிகளில் தங்குகின்றார்.மூர் வானொலி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் “நான் பணத்தை குறை சொல்லவில்லை. வியாபாரம் செய்வோரை குறை கூறவில்லை. சுரண்டுதலையே எதிர்க்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். ஓலிவர் ஸ்ரோன் என்ற மற்றொரு அமெரிக்க அரசியல் இயக்குனர் “அமெரிக்க மக்கள் வீட்டில் யன்னல்கள் உள்ளன. அவை மூடப்பட்டுள்ளன. வெளியே பார்க்கலாம் பேச முடியாது” என அமெரிக்க மக்கள் சிறையில் உள்ளனர் எனக் கூறினார். மூர் ஒலிவரளவிற்கு தீவிரமாக ஆராயவில்லை.

இவரது படங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தாலும், மத்திய தர வர்க்கத்தினரின் பிரச்சினைகளிலேயே அதிக கவனம் செலுத்தியுள்ளார். அவர்களது பிரச்சினையிலேயே கவனம் செலுத்தியுள்ளார். அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் வீடற்று, உணவு முத்திரையின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களை இவர் பதிவாக்கவில்லை. இவர்களில் பெரும்பாலோனோர் கறுப்பின மக்கள் என்பதே உண்மை.

ஜோர்ஜ் புஸ்சுக்கு எதிரான தேர்தலில் கெரியை ஆதரித்தார். பின்னர் கடந்த தேர்தலில் ஒபாமாவை ஆதிரித்தார். இவர்களிருவரும் அமெரிக்க திட்டத்தின் கீழ் இயங்குவர்கள், இல்லையேல் இயங்கிகள். இவர்கள் மேல் வர்க்க பிரதிநிதிகளே.

முதலாளித்துவம் தவறானவர்களின் கைகளில் உள்ளது என மூர் கூறுகின்றார். இப் படம் அமெரிக்காவில் நடைபெறும் ஊழல்களை, மக்களுக்கு எதிரான அநீதிகளை கூறியிருந்தாலும், இதற்கான ஆணி வேரை தேடவில்லை.

16ம் நூற்றாண்டில் முதல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1721ல் இங்கிலாந்து நிறுவனமான தெற்கு கடல் நிறுவனத்தில் பல மோசடிகள் நடந்ததாக பதிவாகியுள்ளது. நிறுவன மோசடிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மூர் இதற்கான காரணத்தை தேடவில்லை. அமெரிக்க ஜனநாயகத்தில் தான் கட்சிகளுக்கு பெரும் நிறுவனங்கள் நிதி உதவி செய்ய சட்டத்தில் இடமுண்டு. இதனால் தான் கட்சிகள் இந்த நிறுவனங்களை சார்ந்து உள்ளன. அந்த அமெரிக்க ஜனநாயகத்தை இவர் விமர்சிக்கவில்லை.

அமெரிக்காவில் ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு அரசு. இவை தான் அமெரிக்க அரசை தீர்மானிக்கின்றன.

111

மைக்கல் மூரின் கருத்தியல்

பயங்கரவாதம்

மைக்கல் மூர் பிளே போய் பத்திரைக்கு அளித்த பேட்டியில் (ஆடி 2004) இவர் தெரிவித்த கருத்துக்கள் சில..

” அமெரிக்காவில் பயங்கரவாதம் இல்லை என்று கூறவில்லை. ஆனால், அதன் பின் நடைபெறுபவையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 87 வயது பெண்மனியின் சப்பாத்தை கழற்றச் சொல்லி சோதனை செய்கிறார்கள்
எங்களது மக்களையே, நாங்கள் உளவு பார்க்கின்றோம். ஆமெரிக்காவை, முன்னரைவிட இப்பொழுது அதிக உலக மக்கள் வெறுக்கிறார்கள் “
“ அமெரிக்காவின் அதிபர்கள் பொய் கூறுகின்றார்கள். கிளின்டன் – அந்த பெண்ணுடன் உறவு கொள்ளவில்லை என்றாhர். புஷ் – ஈராக்கில அணு ஆயுதம் உண்டு என்றார். “

” பயங்கரவாதத்தை நிறுத்த பின் லாடனை கொல்ல இஸ்ரேலை அழையுங்கள். அவர்கள் கமாஸ் தலைவரை Sheik Ahmed Yassin கொன்றார்கள். FBI ன் கருத்துப்படி மொத்தம் 190 அல் கைய்டா உறுப்பினர்களே உள்ளார்கள். இதனை செய்ய இஸ்ரேலே தகுதியானது. “

அதே சமயம் 911 ன் பிண்ணயில் இஸ்ரேலின் பங்கு பற்றியும் முன்னர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் பயங்கரவாத்ததை ஆதரிக்கும் மூர், லத்தீன் அமெரிக்க சாவாதிகாரரை கொல்லும் பொழுது பாதிரிமாரையும், கிறிஸ்த சகோதரிகளையும் கொல்ல வேண்டாம் என கேட்டுக் கொல்கிறார். ஏன் மக்களை கொல்ல வேண்டாம் எனக் கேட்கவில்லை?

இவரது நூல்களில் ஒன்றான Dude, Where’s my Country என்ற புத்தகத்தில் கியுபா க்கு எதிரான ஆக்கிரப்பையும் ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

புhலஸதீனிய மக்கள் உரிமைகளை நிராகரத்து , பாலஸ்தீனயமும். இஸ்ரேலும் அமெரிக்காவை நகரத்துக்கு அனுப்பிவிட்டன என தனது நூலில் குறிப்பிடுகிறார்.

உலகமயமாதல்

இன்று இரண்டு பொருளாதார ஆக்கிரமிப்புக்கள் நடைபெறுகின்றன.
1. அமெரிக்கமயமாதல்

2. உலகமயமாதல்
Globalizationஅமெரிக்க மக்களின் தொழில் வாய்ப்புக்கள் மூன்றாம் உலக நாடுகளை நோக்கிச் செல்கின்றன என்ற கவலையை மைக்கல் மூர் தனது இரு நூல்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். உலகமயமாதல், அமெரிக்கமயமாதல் ஆகியவற்றால் மூன்றாம் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற கவலையை இவர் இது வரை வெளிப்படுத்தவில்லை.
இவர் அமெரிக்கமயமாதலை விரும்புகினறார்.

கனடாவியல்

கனடா ஈராக்கு தனது படைகைளை அனுப்பவிலலை. அப்போதைய பிரதமர் ஈராக்கில் அணுவாயுதம் இருப்பது நிரூப்பிக்கபடவிலலை, எனவே படையை அனுப்பமாட்டோம் எனக்கூறினார். இவர் கியுபெக் என்ற பிரென்ச் மாநிலத்தை சேர்ந்தவர். புpரென்ச் மொழி கனடிய பிரதமாகள் அமெரிக்க எதிர்ப்பாளர்களே. இதே பிரதமரின் காலத்தில் தான் ஆப்கானிஸ்தானுக்கு படைகைள் அனுப்பப்பட்டன. மைக்கலுக்கு கனடாமேல் ஓர் காதல். இவர் பிறந்த மிச்சிக்கன் மாநிலத்துக்கு அருகில்தான் கனடாவின் ஒன்ராரியோ உள்ளது. இவர் பல தடவைகள் கனடா பற்றி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தீயள்ளார். கனடாவும் ஓர் முதாலித்துவ நாடு. ஆதுவும் நிறத்துவேஷம் கொண்ட பழைமைவாத க் கட்சி ஆட்சி நடத்துகிறது. கனடா பற்றி இவர் பல தவறான கணீப்பீடுகளை கொண்டுள்ளார். அணுக்குண்டு வீச்சில் இருந்து பல அமெரிக்க அத்து மீறல்களுக்கு கனடா அமெரிக்காவிற்கு ஆதரவு வழங்கியுள்ளது. வட அமெரிக்க புர்விகக் குடிகளையும், அவர்களது கலாச்சார பண்புகளையும், கனடாவும், அமெரிக்காவும் திட்டமிட்டு அளித்துள்ளன.

தரகு முதாளித்துவம்

பெரும் வணிக நிறுவனங்களின் குளறுபடிகளை துணிச்சலுடன் வெளிப்படுத்தியுள்ளார். GM ன் Flint தொழிற்சாலை வேலை நீக்கத்தை தனது முதலாவது விவணச்சித்திரத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இவரது தொலைக்காடசி தொடரிலும் (Awful Truth) இந்த குளறுபடிகளை வெளிப்படுதடதியுள்ளார். தனது நூல்களிலும் பெரும் நிறுவனங்கள் குளறுபடிகளை வெளிப்படுத்தியுள்ளார். CEO க்கள் கூடுதலான போனஸ் பெறுவதற்காகவும், லாபத்தை அதிகம் காட்டுவதற்காகவும், சுலபமான வழியான வேலை நீக்கத்தை செய்கினறார்கள். இதனை தரவுகளுடன் வெனிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க தேர்தல்

கடந்த தேர்தலகளில் முதலில் மைக்கல் மூர், ஜோர்ஜ் புஸ்ஸை தோற்கடிப்பதிலேயே குறியாhக இருந்தார். இதனால் இவர் கெரியை ஆதரித்துப் பேசினார். குடியரசுக் கட்சி வேட்டபாளர் ஜோன் கெரி திட்டவட்டமாக எந்த கருத்தையும் தெரிக்கவில்லை. ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புக்களை வெளியேற்றுவது நல்லதல்ல என்ற கருத்ihயும் ஜோன் கெரி முன்வைத்துள்ளார். ஜோர்ஜ் புஸ்ஸின் Republican க் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் கொள்கையளவில் கடந்த தேர்தளவில் பெருத்த வேறுபாடுகள் காணப்படவில்லை. இதைத் தவிர தேர்தலில் போட்டியிட்ட 12 கட்சிகள் முன்வைத்த நல்ல கருத்துக்கள் பற்றி கூட இவர் கருத்து தெரிக்கவில்லை. பின்னர் ஒபாமாவை ஆதரித்தார். கிலரி கிளின்டனுக்கு எதிராகவும் கருத்துக்களை கூறினார். இன்று கிலரி ஒபாமாவின் முக்கிய மந்திரி. http://www.politics1.com/p2004.htm)

அமெரிக்க சாம்ராஜ்ஜியம் என்பது நீண்ட கால திட்டமிட்டப்பட்ட தாயாரிப்பு. இதனை ஓர் ஆட்சி மாற்றத்துடன் மாற்றலாம் என்பது ஓர் அரசியல் தெளிவின்மையே கர்ட்டுகன்pறது.
மைக்கல் மூர் ஓர் மனித உரிமை வாதியே. ஆதுவும் அமெரிக்க மனித உரிமை வாதி..

முதலாளித்துவம் ஓர் பாவமா? -மைக்கல் மூர் ஓர் சிறு அறிமுகம்!(Capitalism: A Love Story ):ரதன்.

http://inioru.com/?p=6871

4 thoughts on “Capitalism A Love Story:ரதன்”

 1. ரதன்,
  எந்த ஒரு சமூகப் பிரக்ஞையுடைய படைப்பும் பிரச்சனைகளுக்கான இறுதித் தீர்வைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமிருப்பதாக எனக்குப் படவில்லை. சமூகத்தின் மீதான கோபம் என்பதே இப்படைப்பின் மையப் பகுதியாக அமைந்திருக்கிறது என்பதே பிரதானமானது. படத்தின் சில பகுதிகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தை அடிப்படையாகக் கொண்டு நான் அவ்வாறு தான் கருதுகிறேன். குறிப்பாக ரீகனின் சொற்பொழிவின் போது அவரை நெறிப்படுத்தும் பில்லியனேர் போன்ற காட்சிகள் இன்றைய முதலாளித்துவ முறைமை தோற்றுப் போய்விட்டதையும் அதன் தோல்விக்கான சாராம்சத்தையும் தெளிவு படுத்துவதாக அமைகிறது.

  தனது சுக போக வாழ்வியலுக்குள்ளும் மைக்கல் மூர் இந்த எல்லை வரை சிந்தித்திருப்பதே பெரிய விடயம்.
  தவிர, முதலாளித்துவத்திற்கும் ரோமானிய சாம்ராஜ்யத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக நான் கருதவில்லை. முதலாளித்துவ உருவாக்கம் என்பதே அதற்கு நீண்ட காலத்திற்குப் பிறகுதான் நிகழ்கிறது.

 2. Pingback: pligg.com
 3. ரதனின் கட்டுரையைப்படிக்கும்பொது அமெரிக்காவின் முக்கியமான ஆண்மிக விசயஙகளை சொல்வதாக தெரிகிரது. இருப்பினும் பல முக்கிய பிரஷினைகளைந்தவிவரனப்படதில் கட்டப்படுவதாக தெரிகிரது. பொதுவக இதுபொன்ட்ர விசயயஙள் காட்ட்ப்படுவது சிறீந்தத் முயர்ஷி தான்.

 4. ஒரு படத்திற்கு இவ்வளவு நீண்ட கட்டுரையா? ஒரு கட்டுரையாளராக இல்லாமல் ஆய்வாளராக தனது கருத்துக்களை தெளிவாக கூறியுள்ளமை ஒரு சிறந்த முயற்சி. இவரிடமிருந்து தொடர்ந்து படைப்புக்களை எதிர்பார்க்கின்றேன். ஒரு படைப்பாளியை மனித உரிமைவாதி என கூறுவது அபத்தமாக இருந்தாலும் அது தான் உண.மையெனின் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மைக்கல் மூரைப்பற்றி பல கட்டுரைகளை படித்திருந்தாலும் இக் கட்டுரை வித்தியாசமான ஆய்வு.
  அமெரிக்காவில் தான் அதிபர் நிக்சன் கிளின்டன் போன்றோருக்கு எதிராக ஊடகங்கள் குரல் கொடுத்துள்ளன. நிக்சன் பதவியை ராஜினமா செய்தார். மைக்கல் மூர் இல்லாத ஒன்றை உருவாக’கவில்லை. financial crisis பற்றி விரிவாக எழுதியிருக்கலாம். ஒபாமாவின் நடவக்கைகளும் கட்டுரையில் இல்லை. .பல நிறுவனங்களைப்பற்ற கூறியருந்தாலும் விரவாக குுளறுபடிகளை எழுதியுருககலாம்.தனி நபர்களை கடவுளாக கருதுவது நிறுத்தப்பட வேண்டும்.மார்க்சின் கருததை மீள தனது 911ல் பதித்த மைக்கலும் மீள ஆய்வுச் செய்யப்டவேண்டியவரே.

Comments are closed.