லைக்கா தொடர்பாக புதிய தகவல்களை வெளியிட்டுவரும் பஸ்பீட் செய்தி முகவர் நிறுவனம்

நன்றி : பஸ்பீட்
நன்றி : பஸ்பீட்

ராஜபக்ச என்ற இனக்கொலையாளியுடன் தமிழர்களால் நடத்தப்படும் லைக்கா மொபைல் என்ற நிறுவனத்தின் வியாபார மற்றும் அரசியல் தொடர்புகளை இனியொரு உட்பட பல்வேறு ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டுவந்தன. இவற்றை வெளியிட்ட காரணத்தால் லங்கா நியூஸ் வெப் மற்றும் இனியொரு… ஆகிய இணைய ஊடகங்கள் பல நாட்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு முடக்கிவைக்கப்பட்டிருந்தன.

ஊடக சுதந்திரம் குறித்தும், மனித உரிமை குறித்தும் வாய் கிழியக் கூச்சலிடும் புலம்பெயர் ஊடகங்களில் பெரும்பாலானவை இத் தாக்குதலுக்குக் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் தம்மை முழுமையான வியாபாரிகள் என நிறுவிக்கொண்டன. லைக்கா மோபைல் எனச் சந்தேகிக்கப்படும் தரப்புக்களிலிருந்து பல்வேறு மரண அச்சுறுத்தல்களுக்கு இனியொரு… உள்ளாக்கப்பட்டது.

லைக்கா மொபைலின் ஒட்டு ஊடகம் ஒன்று இனியொருவிற்கு எதிரான நேரடியான அவதூறுகளை வெளியிட்டது.

கடந்த வாரம் பஸ் பீட் (http://www.buzzfeed.com/) என்ற செய்தி முகவர் சேவை நிறுவனம் ஒன்று லைக்கா மொபைல் தொடர்பான பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

குறிப்பாக லைக்கா மொபைலின் சட்டவிரோத நடவடிக்கைகள் எனச் சந்தேகிக்கப்படும் தகவல்கள் சிலவற்றை வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

இனியொருவைப் பொறுத்தவரை லைக்கா மொபைலின் வியாபார வட்டத்திற்குள்ளும் போட்டிகளுக்குள்ளும் தலையிடுவது நோக்கமல்ல. பல்தேசிய நிறுவனங்களின் சமூகவிரோத நடவடிக்கைளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் பணியை இனியொரு தொடர்ந்து மேற்கொள்ளும்.

தெற்காசியாவின் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றச் சேவையில் மையமாக மாறிவரும் இலங்கை அரசின் தயவைப் பெற்றுக்கொள்வதற்காக லைக்கா நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தது. இனக்கொலையாளி ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய வியாபார உறவுகளைப் பேணிய லைக்கா, அவர்களுடன் இணைந்து இலங்கை மக்களின் வரிப்பணத்தைச் சுருட்டிக்கொண்டது.

2009 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ராஜபக்ச அரசுடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த லைக்காவின் நடவடிக்கைகள் இன்றைய இலங்கை அரசாலும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக லைக்காவின் மாதிரிக் கிராமத்தை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க திறந்துவைத்துள்ளார்.
தமிழீழம் பிடித்துத் தருவதாகவும், தேசியத்தைக் காப்பாற்றப்போவதாகவும், ராஜபக்சவைத் தூக்கில் போடப்போவதாகவும் இதுவரை கூறிவந்த புலம்பெயர் பிழைப்புவாதக் கும்பல்கள் லைக்காவின் நடவடிக்கைகள் குறித்து மூச்சுவிடுவதில்லை.

பஸ் பீட் இன் புலனாய்வுச் செய்திகள் லைக்காவைச் சட்டச் சிக்கலுக்கு உட்படுத்துமா என்பது பிரித்தானிய அரசு சார்ந்த விடையம். புலம்பெயர் தமிழர்களால் பயன்படுத்தப்படும் லைக்கா மொபைல் இன் ஊடாக இலங்கை செல்லும் தொலைத் தொடர்பு சேவை இலங்கையிலுள்ள லைக்கா கிளையில் உடறுக்கப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதா என்பது போர்க்குற்றம் சார்ந்த விடையம்.

http://tamilnet.com/art.html?catid=13&artid=37466http://www.orupaper.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/http://www.srilankamirror.com/news/17762-3-websites-hacked-after-lyca-expos

லைக்காவும் நிழல் உலகமும் – யாமார்க்கும் குடியல்லோம் : இனியொரு
ராஜபக்ச’ லைக்காவின் திட்டத்திற்கு சந்திரிக்கா அடிக்கல் நாட்டினர்
கூலித்தமிழும் லைக்கா மொபைலும் : விஜி
அனந்த கிருஷ்ணனும் லைக்காவும் ராஜபக்சவின் காலைச் சுற்றிவருவதன் பின்புலம்!
லைக்கா விவகாரம் – தொடரும் கொலை மிரட்டல்களும் அழியும் ஊடக சுதந்திரமும்
லைக்காவும் நிழல் உலகமும் – யாமார்க்கும் குடியல்லோம் : இனியொரு
லைக்கா உரிமையளர் இலங்கையில் கைது!: ஊடகங்களின் தமிழ்த் தேசிய அசிங்கம்
லைக்காவுடன் சந்திப்பு-மக்களே விழித்தெழுங்கள்! :செங்கோடன்
லைக்கா, சந்திரசேன, இலங்கை அரசு:அருவருக்கும் பணச்சுரண்டல்
ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்

16 Things You Need To Know About Lycamobile’s Links To The Tories
Follow This Tory Donor’s Crazy Cash Trail In 20 GIFs And Pictures

3 thoughts on “லைக்கா தொடர்பாக புதிய தகவல்களை வெளியிட்டுவரும் பஸ்பீட் செய்தி முகவர் நிறுவனம்”

  1. இலங்கைத்தமிழரின் உருமைப்போராட்டத்தை பயங்கரவாதமாக மாற்றியவர்கள் புலம்பெயர் தமிழர்கள் சிலர். இவர்களின் பின்னணியில் பணச்சலவையும் பயங்கரவவாதமும் செயற்பட்டுள்ளது . இப்போ பஸ் பீட் உண்மைகளை வெளிக்கொண்டுவரும்போது அதனை தமிழ்மக்களிற்கு கொண்டு செல்லவோ அல்லது எதிர்த்து செய்தி வெளியிடவோ அல்லது அந்த ஊடகத்தை முடக்கவோ வெருட்டவோ ஒருவருமில்லை . ஒரு தமிழன்
    செய்தால் அவன் துரோகி மிரட்டல் எல்லாம் இதுவரை வந்திருக்கும்.

  2. ராசபக்சவினை தூக்கிலபோடுறம், ஒரு நாட்டிற்குள்ளே இரண்டு தேசம் பிடிக்கிறம் என்று வெளிக்கிட்டவர்கள் எல்லாம் ராசபக்ச- லைக்கா கூட்டு கொள்ளை பற்றி வாயே திறக்கவில்லை. எலும்புத்துண்டிற்கு மட்டுமே வாலை ஆட்டுவர் வாயையும் திறப்பார்கள்.

  3. யாரைத்தான் நம்புவதோ தமிழர்களின் நெஞ்சம், அரசன் அண்டறுப்பான் தெய்வம் நின்றறுக்கும், ஈழத் தமிழர்களும் பொறுத்துப் பாருங்கள், முடிவு வரும், ஏனெனில் பாவத்தின் சம்பளம் மரணம்,

Comments are closed.