சுய நிர்ணைய உரிமைக்காகான போராட்டத்திற்கு முன்னுதாரணம்!

kurdcசுய நிர்ணைய உரிமை கோரிப் போராடும் குர்திஸ்தான் அமைப்புக்களும், குர்தீஸ்தான் விடுதலையை ஒடுக்கும் துருக்கிய அரசிற்கு எதிரான துருக்கிய அமைப்புக்களும் இணைந்து ஐக்கிய முன்னணி ஒன்றை அமைத்துள்ளன.

இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை சிங்கள பேரினவாத அதிகாரவர்க்கம் ஒடுக்கி வருகிறது. பேரினவாத அரசினால் மிருகத்தனமாக ஒடுக்கப்படும் சிங்கள உழைக்கும் மக்களுடன் ஐக்கிய முன்னணி ஒன்றை ஏற்படுத்த முடியாத சூழலை தமிழ்ப் போராட்ட இயக்கங்கள் ஆரம்பத்திலிருந்தே ஏற்படுத்திவந்தன.

குர்தீஸ்தான் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடிவரும் குர்தீஸ் தொழிலாளர் கட்சி தமிழ் இனவாதக் கட்சிகளைப் போலன்றி துருக்கிய ஜனநாயக முற்போக்கு இயக்கங்களுடனும் மக்கள் பிரிவினருடனும் இணைந்தே செயற்பட்டு வருகின்றன. குர்தீஸ் மக்களின் சுய நிர்ணைய உரிமைப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒடுக்கும் தேசிய இனத்தின் முற்போக்குக் கூறுகளுடனான ஐக்கிய முன்னணி பிரதான பாத்திரம் வகித்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையான ஐ.ஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை வெற்றியுடன் நடத்திவரும் குர்தீஸ் தொழிலாளர் கட்சி மேலும் பத்து அமைப்புக்களுடன் இணைந்து ஐக்கிய முன்னணி ஒன்றை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

குர்தீஸ் தொழிலாளர் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான தோழர் டூரன் கல்கான் ஐக்கிய முன்னணியில் இணைந்துள்ள அமைப்புக்களின் பெயர்களை வெளியிட்டார்.

TKP/ML, PKK, THKP-C/MLSPB, MKP, TKEP-LENINIST, TEKP, DKP, DEVRÎMCÎ KARARGAH and MLKP ஆகிய துருக்கிய அமைப்புக்களே ஐக்கிய முன்னணியில் இணைந்துள்ளன.

துருக்கி அரச பாசிசத்திற்கு எதிராகப் போராடும் அனைத்து அமைப்புக்களும் ஐக்கிய முன்னணியில் இணைந்துகொள்ளுமாறு தோழர் டூரன் கல்கான்அழைப்புவிடுத்தார்.

ஈழப் போராட்டத்தின் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள மறுக்கும் புலம்பெயர் தமிழ் இனவாதிகள் குர்தீஸ்தான் போராட்டத்தின் வெற்றியையாவது திரும்பிப்பார்க்கலாம்.