ஐ.நா கேள்வி நேரத்தில் ஒலித்த அனந்தி சசீதரனின் குரல்!

ananthiவன்னிப் படுகொலைகள் உட்பட ஐ.நா சபையின் ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த மத்தியூ லீ அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தெரிந்ததே. பெப்ரவரி மாதம் 19ம் திகதி மத்தியூ லீ வெளியேற்றப்பட்டதும் அவர் சித்தசுவாதீனமுற்றிருப்பதாக ஐ.நா இன் முக்கிய அதிகாரிகள் அவதூறுப் பிரச்சாரம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். இன்னசிற்றி பிரஸ் என்ற ஊடகத்தை நடத்திவரும் மத்தியூ லீ. எதிர்ர்புகள் ஏற்படுத்திய அழுத்தங்கள் காரணமாக  இப்போது மீண்டும் ஐ.நா இனுள் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவரது அலுவலகம் மீள ஒப்படைக்கப்ப்டவில்லை.

ஐ.நாவின் இந்தச் செயலைக் கண்டித்து யாழ்ப்பாணம் ஐ.நா அலுவலகம் முன்பாக மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசீதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. நேற்று முந்தினம் 01.03.16 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு ஊடகங்களில் பிரதான செய்தியாக வெளியிடப்பட்டது. வெள்ளைக்கொடி சரணடைவு விவகாரம் உடப்ட இனப்படுகொலையின் பல்வேறு பிரதான கூறுகளை அம்பலப்படுத்திய மத்தியூ லீ ஐ வெளியேற்றி இலங்கை அரசிற்கு ஆதரவாகச் செயற்பட்ட ஐ.நா வின் ஊழலை தெற்கின் இனவாத ஊடகங்களே அம்பலப்படுத்தியமை அனந்தி சசீதரனின் போராட்டத்தின் முதலாவது வெற்றி.
தவிர, தவிர, அனந்தி சசீதரனின் போராட்டம் தொடர்பாக ஐ.நா கேள்வி நேரத்தில் கேட்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஐ.நா அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டம் தொடர்பாகக் கேட்கப்பட்ட போது அது தனிப்பட்ட விவகாரம் என கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

ஈழப் பிரச்சனையும் ஐ.நாவின் ஊழலும் முதல் தடவையாக அனந்தி சசீதர்னின் போராட்டத்தின் ஊடாக ஐ.நாவில் மீண்டும் ஒலித்துள்ளது.
வெள்ளைகொடி விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்க மறுத்ததைப் போன்றே மறுபடி ஐ.நா மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்தத் தடவை ஐ.நா விற்கான எதிர்ப்புக் குரல் மக்கள் மத்தியிலிருந்து எழுந்துள்ளமை ஆரோக்கியமான அரசியல் சூழலைக் குறித்துக்காட்டுகிறது.