தமிழீழ விடுதலைப் புலிகளை அமரிக்கா மீண்டும் தடைசெய்துள்ளது

பெரும்பாலான புலம்பெயர் புலி ஆதரவுக் குழுக்கள் அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் உளவுப்படைகள் போன்று செயற்பட்டு தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் நிலையிலும் அமரிக்க அரசு மீண்டும் விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் புதிய அறிக்கைகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அந்நாட்டு அரசாங்கம் நீடித்துள்ளது.

2011ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக 2009ம் ஆண் தோற்கடிக்கப்பட்ட போதிலும், புலிகளின் நிதி வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக ராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு முழுவதும் தமிழீழ விடுதலப் புலிகளின் நிதி வலையமைப்பு இயங்கி வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.