June 23rd, 2012

தமிழக மீனவர் பிரச்னையை பிரதமர் விரைவில் தீர்ப்பார் : நாராயணசாமி

தமிழக மீனவர் பிரச்னையை பிரதமர் விரைவில் தீர்ப்பார் : நாராயணசாமி

தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கையின் கடல்பரப்புக்கு வருவதாகவும் சிறிய மீன் குஞ்சுகளையும் பிடிக்க உதவும் இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீனளத்தையும் அரிய கடல்செல்வங்களையும் கொள்ளையிடுவதாகவும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச குற்றம் சுமத்தினார். பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறும் தொடர் வளர்ச்சிக்கான இயற்கை ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் புதன்கிழமை பேசுகையில் இந்தக் குற்றச்சாட்டை அவர் கூறியிருக்கிறார். இலங்கை அதிபர் ராஜபக்ச தமிழக மீனவர்களை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

சீனப் பொருளாதாரமும் வீழ்ச்சியடைகின்றது

சீனப் பொருளாதாரமும் வீழ்ச்சியடைகின்றது

ஐரோப்பாவில் நடைபெற்று வருகின்ற குழப்பத்தின் காரணத்தினாலும் அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து செல்லும் காரணத்தாலும், 2012 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீன வளர்ச்சியென்பது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 8.1 சதவீதத்திற்குச் சரிவடைந்திருந்தது. இரண்டாம் காலாண்டில் இந்த எண்ணிக்கை 7 சதவீதத்திற்கும் கீழாய் சரியக் கூடும் என சர்வதேசப் பொருளாதாரப் பரிவர்த்தனைக்கான சீன மையம் என்கிற அரசாங்கத்தின் முன்னணி சிந்தனைக் குழாம் எச்சரிக்கை செய்திருந்தது. சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மலிவு விலைப் பொருட்களுக்கான மிகப்பெரும்

தீர்வுக்காக 60 வருடங்கள் ஏமாற்றினோம் : பேரினவாத அமைச்சர்

தீர்வுக்காக 60 வருடங்கள் முயற்சித்தவர்கள் 6 மாத செயற்பாட்டில் பங்குகொள்ள முடியாதா? ௭ன்று சிங்கள பேரினவாத,மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தெரிவுக்குழுவில் இணைந்துகொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டும் தயக்கத்திற்கு சிங்கள பேரினவாத அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்களே இவை. தன்னை மறந்து இந்த பேரினவாதி இதுவரை சிங்கள பேரினவாதம் மறைத்து வந்த ஓர் உண்மையை தன் வாயாலேயே அம்பலப்படுத்தியுள்ளார்.

இனவாதிகளை வெளியேற்றாவிடின் அரசாங்கம் திடீரென கவிழும் : விக்கிரமபாகு கருணாரட்ன

இனவாதிகளை வெளியேற்றாவிடின் அரசாங்கம் திடீரென கவிழும் : விக்கிரமபாகு கருணாரட்ன

அணைந்து போகவுள்ள விளக்கு பிரகாசமாக எரிவதுபோன்றே, அரசாங்கத்திலுள்ள இனவாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் பிரகாசிக்கின்றனர். விரைவில் இந்தப் பிரகாசம் மறைந்து போய்விடும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும், தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். எனவே அவர்களை உடனடியாக வெளியேற்றாவிட்டால் மஹிந்த அரசிலிருந்து வெளியேற்றாவிட்டால், அரசு கவிழும் அபாயம் உள்ளதாகவும் இவ்வாறான இனவாதிகள் இந்த நாட்டில் தோன்றியமையானது சிங்கள, பௌத்த மக்கள் செய்த ‘பாவம்’ எனவும் கருணாரட்ண