தோல்வி முப்பது ஆண்டுகள் தனித்து தரித்திருந்த ஆயுதங்கள் தேசம் விட்டு அகன்றபோது……. நிலங்கள் மேலும் பற்றைகளால் மூழ்கடிக்கப்படுகின்றன! மனிதரால் நிரம்பியிருந்த வீடுகள் கறையான் புற்றெடுத்து மேலும் பாழடைந்து போகின்றன! குடிசைகளின் உரிமையாளர்கள் தெருவுக்கு வெற்றிகரமாய் வந்து விட்டனர்! ஒரு தயக்கமும் யோசனையும் இன்றி புத்தபெருமானுக்கும் நமது நிலங்களில் குடியேற பிடித்துப் போயிற்று! விசுவமடு கிணற்றில் நேற்று கடைசியாய் எறியப்பட்ட குழந்தை தோல்வியின் நிஐங்களை முகத்தில் அறைகிறது! அவர்களின் தேசியம் முத்திரை வெளியிட்டு ஆர்ப்பரித்து கூச்சலிட சவீந்தர சில்வாவை
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடி வரும் போராட்டக் குழுவினர் மீது இந்து அடிப்படை வாதிகள் கோரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அமைதியாகச் சென்றவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட இந்து மத வெறியர்கள் இந்திய வன்முறையின் வியாபாரக் குறியீடு. இன்று நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற விருந்த நிலையில் அப்பேச்சுவார்த்தைக்கு போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்றனர். அவர்கள் நுழையும் நிலையில் பிஜேபி, காங்கிரச், இந்து முன்னணி போன்ற மதவாதக்
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன், அமைச்சர்ஜீ.எல்.பீரிஸை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நிலைமைகள் மற்றும் நல்லிணக்கப்பணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதமளவில் இந்த விஜயம் இடம்பெறும் எனத்தெரிவிக்கப்படுகிறது. ஹிலரி கிளின்ரனின் அழைப்பு தொடர்பான கடிதம், ஏற்கனவே அமைச்சர்பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி நல்லிணக்கநடவடிக்கைகளை ஏற்படுத்துவதில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாக கிளின்ரனின் கடிதத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு புறத்தில் இலங்கையுடன்
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்து 2010ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி மத்திய அரசும், மே 17ஆம் தேதி தமிழக அரசும் உத்தரவிட்டன. இந்த உத்தரவை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் எலிபி தர்மாராவ், கிருபாகரன் ஆகியோர் முன்பு இந்த வழக்கு நேற்று
இன்று வேடுவர்களாக அறியப்படுகின்ற சமூகங்களில் காணப்படும் தெய்வ-வணக்க முறைகள் எவை? அவற்றில் வெளிக்காட்டப்படும் அம்சங்கள் அவர்களின் வராலற்றினை அறிய உதவுகிறதா
ஐக்கிய தேசியக் கட்சியின் கிளர்ச்சிக்குழு உறுப்பினர் மைத்திரி குணரட்ன, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. ரணில் மற்றும் திஸ்ஸ ஆகியோர் எதிர்வரும் 22ம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஐக்கிய தேசியக்
திருகோணமலை கடற்கரையில் வைத்து 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஐந்து மாணவர்களை விசேட அதிரடிப்படையினரே படுகொலை செய்ததாக, தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கிற்கும், அப்போதைய ஜனாதிபதியின் ஆலோசகரான பசில் ராஜபக்ஸவிற்கும் இடையிலான சந்திப்பின் அடிப்படையில் இந்தக் குறிப்பு
தமிழர்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், பாராளுமன்றில் ஆதரவளிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டால் தமது கட்சியின் 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கத் தயார் என குறிப்பிட்டுள்ளார். ஐக்கியஇலங்கைக்குள் மாகாணங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். திட்டமிட்ட நிலப்பறிப்பு, இனச்ச்சுத்திகரிப்பு, போன்றவை இலங்கை சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நிலையில்,
அமெரிக்காவில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: இந்தியாவில் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) மின்சாரம், தொலைத் தொடர்பு, துறைமுகம், விமான நிலையம், பெட்ரோலியம், சுரங்கம் போன்ற உள்கட்டமைப்பு முதலீட்டாளர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை இந்தியா ஏற்படுத்தி தந்துள்ளது. எனவே, இத்துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்ய வேண்டும். அண்மையில், இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டினர் நேரடியாக முதலீடு செய்ய ஏதுவாக விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதை
நாம் ஒரு அறிக்கை நாடகத்தையே நடத்தியிருக்கிறோம்