ஊடகங்களுக்கான அறிக்கை. 18.10.2011 வடக்குக் கிழக்கில் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக இருந்து வந்த ஆயுதக் கலாச்சாரமும் அராஜக தாக்குதல்களும் தற்போதும் நீடித்து வருவதையே யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ் தவபாலன் (வயது 25) மீதான பட்டப்பகல் தாக்குதல் எடுத்துக் காட்டுகின்றது. கறுப்புத்துணிகளால் முகங்களை மறைத்துக் கட்டிய ஆயுததாரிகள் மோட்டார் சைக்கிள்களில் வந்து தவபாலனை வழிமறித்துத் தாக்கி படுகாயங்கள் விளைவித்துள்ளனர். இத் தாக்குதலை எவ்வகையிலும் நியாயப்படுத்தவோ மறைக்கவோ முடியாது. அரசியலில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தமைக்காக பல்கலைக்
முருகன் உள்ளிட்ட ராஜீவ் கொலைக் கைதிகள் வழக்கு தொடர்பான வழக்கை விசாரிக்க இந்திய உயர்நீதிமன்றம் இன்று மறுப்புத் தெரிவித்துள்ளது. பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை அங்கு விசாரிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதும், அதனை விசாரிக்க நியமிக்கப்பட்டிருந்த நீதிபதிகள் அமர்வு பிரஸ்தாப வழக்கை விசாரிக்க மறுத்து விட்டனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு
இறுதிப் போர் நடைபெற்றவேளை அவுஸ்திரேலிய தமிழ் பிரஜையான திருமதி மீனா கிருஷ்னமூர்த்தி தனது நேரடிச் சாட்சியத்தைப் பதிவுசெய்துள்ளார். அவருடன் டாக்டர் சாம்பவியும் இணைந்து அவுஸ்திரேலியாவில் 3 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்க முனைப்புகளைக் காட்டியுள்ளனர். இதனை அவுஸ்திரேலியாவின் முன்னணி தேசிய தொலைக்காட்சியான எ.பி.சி ஒளிபரப்பியுள்ளது. சுமார் 9 நிமிடம் ஒளிபரப்பப்பட்ட இந்தக் காணொளியால் அவுஸ்திரேலிய மக்கள் ஆடிப்போயுள்ளனர். மீனா தனது அனுபவத்தை விவரிக்கையில் தாம் முள்ளிவாய்க்கால் வரை சென்று எவ்வாறு உயிர்பிழைத்தேன் எனக் கூறியுள்ளார். வைத்தியசாலைகளை நோக்கி
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி 3-ம் கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இடிந்தகரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி செப்டம்பர் 11-ம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. 127 பேர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். பின்னர், மக்களின் அச்சத்தை தீர்க்கும்வரை அணுமின் நிலையப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை அடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காததால் போராட்டக் குழுவினர் 2-ம்
பல்வேறு இன மக்களிடையே ஐக்கியத்தை எதிர்பார்க்கும் நாடொன்று, மனித உரிமைப் பிரச்சனைகளுக்கு பிரச்சினைகளுக்கு அவர்களே தீர்வை தேடுவது, முக்கியமானது. இலங்கை இதனை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார். கொலைக்காரர்களே கொலைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்று உலகின் போர்ப்பிரபு நாடான அமரிக்காவின் பேச்சாளார் கூறியிருப்பதை இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்று தமிழ் ஊடகக் கோமாளிகள் செய்தி வெளியிட்டுள்ளனர். வொசிங்டனில் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனரிடம்,