October 10th, 2011

லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி! : தனபால்

லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி! : தனபால்

ஏகாதிபத்திய நாடுகளின் உளவுப்படையினர், குறிப்பாக சி.ஐ.ஏ. லிபியாவின் கிழக்குப் பகுதியில் நுழைந்து ஆயுதங்களை எகிப்தின் வழியாகக் கடத்தி வந்து கொடுத்தனர்.

இந்திய வெளியுறவுச் செயலர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தார்

இந்திய  வெளியுறவுச் செயலர்  மகிந்த  ராஜபக்சவை சந்தித்தார்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இன்று திங்கட்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது வடக்கு கிழக்கில் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. வன்னி இனப்படுகொலையின் பின்புலத்தில் இந்திய அரசு செயலாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு செயலர்களின் இலங்கைப் பயணம் இடம் பெற்றது. மாத்தாயின் முதலாவது இலங்கைக்கான பயணம் இதுவாகும். இந்திய அதிகாரவர்கத்தின் நலனை

சன் தொலைக்காட்சி அலுவலகங்கள் – வீடுகளில் சிபிஐ தேடுதல்

சன் தொலைக்காட்சி அலுவலகங்கள் –  வீடுகளில் சிபிஐ தேடுதல்

முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன, அவரது சகோதரரும் சன் டிவி அதிபருமான கலாநிதி மாறன் ஆகியோரின் சென்னை, டெல்லி, ஹைதராபாத் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக விற்க வைத்த விவகாரத்தில் தயாநிதி மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது சிபிஐ எப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்துள்ளது.

தொடரும் இராணுவ அதிகாரம் – கிழக்கில் மீண்டும் தேடுதல்

தொடரும் இராணுவ அதிகாரம் – கிழக்கில் மீண்டும் தேடுதல்

கிழக்கு மாகாணம் அம்பாறை திருக்கோவில் அக்கரைப்பற்று பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நேற்றிரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் தமிழ் இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்த இளைஞர்களின் விபரங்கள் பெறப்பட்டதுடன் தொழில்புரியும் இடங்களையும் படையினர் அறிந்து கொண்டதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றன. படையினரின் தேடுதல் நடவடிக்கைகளில் இளைஞர்கள் எவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.

இன்னமும் இந்திய எஜமானர்களிடம் முறையிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கையின் வடக்கு, கிழக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற பல்வேறு செயற்பாடுகள் குறித்து இந்தியாவிடம் முறையிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாயை நேற்று கொழும்பில் வைத்து சந்தித்த போது வடக்கில் தமிழர்கள் காணிக்கள் பதிவு செய்யப்படுவது குறித்து முறையிடப்பட்டது. அத்துடன் சிங்கள குடியேற்றங்களுக்காக எல்லை நிர்ணயம் செய்யப்படுவது குறித்தும் முறையிடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். உலகின் அத்தனை பயங்கரவாதிகளிடமும் முறையிட்டாயிற்று, என்றாவது ஒரு நாள்