வன்னிப் பகுதியில் கடந்த இரண்டு வருடமாக சிறையில் இருக்கும் பட்டதாரி தமிழ் இளைஞர்களை எந்தவிதமான நீதிமன்ற விசாரணைகளோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளவில்லை. இவ்வாறான பல சித்திரவதைகளால் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர் இன்னும் மீதம் இருப்பது 150 படித்த பட்டதாரி தமிழ இளைஞர்களே போர் நடைபெற்ற காலத்திலேயும் போருக்கு முந்தைய காலகட்டத்திலும் எந்தவித ஆயுதங்களையும் கையில் எடுக்காமல் வன்முறைக்கு உட்படாத புலிகளின் அரசியல் பிரிவுகளிலும், அரசியல் தொடர்பான செயல்பாடுகளிலும் ஈடுபட்டுவந்த படித்த பட்டதாரி தமிழ் இளைஞர்களை போர்க்காலத்தில் சிங்கள ராணுவம் கைதுசெய்தது.
பௌத்த மத ஆதிக்கத்தையும் சிங்கள பௌத்த திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்வதையும் மட்டுமே பிரதான நடவடிக்கையாக முன்னெடுக்கும் இலங்கை அரசு மனித உரிமை ஆணைக்குழுவில் பின்வருமாறு தெரிவித்துள்ளது. ஒரு புறத்தில் இலங்கை அரசு இவ்வாறு தெரிவிக்க அதன் புலம் பெயர் தமிழ் ஆதரவாளர்கள் தாமும் இலங்கை அரசுடன் இணந்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உரையாற்றிய போதே மகிந்த சமரசிங்க போர் முடிவுற்ற பின்னர் அரசாங்கம் சுமார் 290,000 இடம்பயர்ந்த
மகிந்த ராஜபக்ச அரசின் ஆணையின் கீழ் நடைபெற்றதாக கூறப்படும் போர்க்கும் தொடர்பான காணொளி உண்மையே என அதனை ஆய்வு செய்த நிபுணர்கள் இன்று தெரிவித்தனர். இந்த வீடியோ ஆதாரத்தை போலியானது என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, அந்த வீடியோவை ஐ.நா.வின் தன்னிச்சையான புலனாய்வாளரும், தென்னா பிரிக்க சட்ட பேராசிரியருமான கிறிஸ்டோஃப் ஹெயின்ஸ் ஆய்வு செய்தார். தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றம் புரிந்தது உண்மையே
கரம் பிடித்த கனவனுக்கு உண்மையான மனைவியாக வாழ கறுத்தம்மா எவ்வளவோ முயன்றுப் பார்த்தாள். இறுதியாக தோல்வியையே தழுவுகின்றாள். நாவலில் இந்த மனப் போராட்டத்தை சித்திரிக்கும் பகுதிகள் உள்ளத்தை உருக்குவனவாய் அமைந்துள்ளன.
நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிற்பாடும் சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் எட்டுப் பேர், யாழ்ப்பாண சிறைச்சாலையில் வைத்து கடந்த 23ம் திகதி முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் ஒரு சிங்களவரும், ஏழு தமிழர்களும் உள்ளடங்கியிருக்கிறார்கள். இவர்களை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோது, பொலிஸாரினால் வழங்கப்பட்ட சாட்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் நீதிமன்றத்தால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனினும் இவர்கள் இன்னும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, இவர்களுக்கு மேலதிகமாக இன்னும் 30 பேர்
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கில் புதிதாக பௌத்த விகாரைகளை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே வட பகுதியில் புதிய பல விகாரைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியிலும் மற்றொரு பாரிய பௌத்த விகாரையை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விகாரைக்கான தூபியை அமைப்பதற்கு மண் குவிக்கப்பட்டு வருவதுடன் அப்பகுதி முள்ளுக்கம்பி வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. அதேவேளை பெரியகுளம் அரசினர் பாடசாலை வீதியை, கசால பெரேரா மாவத்தை என்று சிங்களத்தில் பெயர்
மன்னார் மாவட்டத்தின் தென்எல்லையோரப்பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் சிங்கள மக்களை குடியேற்றும் அரசின் நடவடிக்கைகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.இல்லையேல் இது பாதகமான விளைவுகளையே எதிர்காலத்தில் உருவாக்கும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரமாகவுள்ள சில பகுதிகளில் அரசாங்கம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை மேற்கொண்டு வருகிறது. முள்ளிக்குளம், கொண்டச்சியிலுள்ள தம்பப்பள்ளி மற்றும் மடு வீதியிலுள்ள பல பகுதிகள்
13 வது திருத்தச்சட்டம் என்ற இந்திய அரசால் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மீது திணிக்கப்பட்ட அரசியல் சட்டமானது இலங்கையில் எல்லைக்குள் எவ்வித குறிப்பான மாற்றங்களையும் எடுத்துவரப் போவதில்லை. இப்பொதுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு, பௌத்த சிங்கள மயமாக்கல், திட்டமிட்ட வலிந்த குடியேற்றங்கள் என்பன நிறுத்தப்படுவதற்கான எவ்வித உறுதியான உத்தரவாதமும் இல்லை. வடக்குக் கிழக்கு இணைந்த பொதுவான நிலப்பரப்பு என்பது அதற்கான அங்க்கீகாரம் பெறப்படாத நிலையில் செல்லுபடியற்றது. இந்த நிலையில் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கூட வழங்குவதற்கு இலங்கையின் எந்தப் பேரினவாதக்
விளையாட்டு அமைச்சினால் இலங்கையில் 9 மாகாணங்களிலும் அமைக்கப்படுவதற்கு உத்தேசித்திருக்கும் 9 விளையாட்டு மைதானங்களில், வடக்கு கிளிநொச்சியில் அமைக்கப்படும் மைதானத்திற்காக, மீள் குடியேற்றப்படாத மக்களின் இடங்களை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி நகரில் சிறியதொரு மைதானமாக இருந்த ரொட்ரிகோ விளையாட்டு மைதானமானமே இவ்வாறு விசாலமாக அடுத்த மாதம் முதல் மாற்றியமைக்கப் பட உள்ளதோடு மைதானத்தின் இருபுறத்திலிருக்கும் பெறுமதி வாய்ந்த, யாரும் குடியமர்த்தப்படாத நிலத்தில் 8 ஏக்கர்கள் இம் மைதானத்துக்காக எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பாராளுமன்ற
பிராஞ்சு மக்களே விழித்தெழுங்கள் என்ற பதைகைகளுடன் பாரீசின் மத்திய பகுதியான பஸ்தியில் சுமார் 2000 பிரஞ்சு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே 15 இல் ஸ்பெயினில் உருவாகி இன்று வரை நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் அடிப்படையில் பிரஞ்சு மக்களையும் போராடக் கோரும் சுலோகங்களை ஆர்ப்பாட்டக் காரர்கள் சுமந்திருந்தனர். ஸ்பெயினைப் போன்றே “உண்மையான ஜனநாயகம் வேண்டும்” என்ற சுலோகங்களுடனும் போராட்டம் நடைபெற்றது. பலத்த போலிஸ் காவல்களின் மத்தியிலேயே போராட்டம் நடைபெற்றது.