ஜப்பானில் கடந்த மாதம் 11ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் ராட்சத சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் கதிர்வீச்சு அபாய அளவு 5-இலிருந்து 7-ற்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 1986ஆம் ஆண்டு ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தின் அபாயத்திற்கு ஒப்பானது இது என்று ஜப்பான் அணுசக்திப் பாதுகாபு ஆணைய அதிகாரி ஒருவர் ஜப்பான் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார். 7 என்பது சர்வதேச அளவில் மிகவும் அபாயகட்டமாகும். மேலும் இது பெருத்த விபத்து மற்றும்
காப்ரட் கம்பனிகள் போட்டி போடுகின்ற தேர்தலில் காங்ரஸ் மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளுமே மக்கள் விரோத சக்திகளே. இந்த நிலையில் சமூக அக்கறையுள்ளவர்கள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழின வாதிகள் காங்கிரசைப் புறக்கணிக்கக் கோரி வருகின்றனர். இந்த நிலையில் மே 17 இயக்கம் மீது காப்ரட் கட்சிகளில் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழகமெங்கும் மே பதினேழு இயக்க தோழர்கள் காங்கிரெஸ் எதிர்ப்பு இயக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் இறுதி பகுதியாக ஏப்ரல் 11 –
கருத்தாடல் களம் ‘இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்’ இடம்: Scarborough Civic Centre காலம்: 23.04.2011, சனிக்கிழமை முற்பகல் 9.00மணி தொடக்கம் பிற்பகல் 5.00மணி வரை. ‘இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்’ என்ற தலைப்பில் கருத்தாடல் களம் ஒன்றினைக் கூட்டி அதில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சார்ந்து செயற்படக் கூடிய அனைத்துத் தரப்பாரும் பங்கெடுத்துக் கருத்துச் சொல்லும் வகையிலான நிகழ்வொன்றினை ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் ஏற்பாடு
வன்னி இனப்படுகொலை குறித்த ஐக்கிய நாடுகள் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும். பன் கீ மூனிடம் ஒப்படைக்கப்படும் இவ்வறிக்கை இரகசியமாகவே வைத்திருக்கப்படும். மக்களிடம் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது. பன் கீ மூன் நியமித்த குழுவின் அறிக்கையைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என இன்னசிட்டி பிரஸ் போன்ற பல ஊடகங்கள் கோரி வந்தமை தெரிந்ததே.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில், 10 ஆயிரம் வாக்குச் சாவடிகள் “வெப்காஸ்டிக்’ முறையில் படம் பிடிக்கப்பட்டு, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். இதைப் பார்ப்பதற்கு புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில்