ஒடுக்குமுறையிலிருந்து விடுபட ஐ.நா அறிக்கையை தமிழ் மக்கள் வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின அறைகூவல மே தினம் என்பது சர்வதேச தொழிலாளர்கள் தமது உரிமைகளை வென்றெடுத்த நாளாகும். ஒவ்வொரு வருடமும் அதே தினம் தொழிலாளர்கள் ஒன்று கூடி தமது உரிமைகளை சுதந்திரமாக வலியுறுத்துவதே மரபாக உள்ளது. கடந்தகால மே தினங்களில், தமிழ் தொழிலாளர்கள் மட்டுமல்லாது தமிழ் தேசத்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும், விடுதலையை கோரியும் குரல்
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினைக் கொண்டு இலங்கைத் தலைவர்களை கைது செய்ய முடியும் என சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினைத் தயாரித்தவர்கள் அதிகாரங்கள் இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் அறிக்கை மிகவும் சக்திவாய்ந்த தொன்றாக இருக்கின்றது. இந்த அறிக்கையினைக் கொண்டு வெளிநாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள், உள்ளூர் நீதிமன்றங்களின் உதவியுடன் பிடியாணை பிறப்பிக்க முடியும். அவ்வாறு பிடியாணை பிறப்பித்தால் இலங்கையின் அரசியல் தலைவர்கள், மூத்த
சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை நாள் மே தினம். நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை. ஓய்வு ஒழிச்சல் அற்றுபலமணிநேரம் அந்த தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும் தான் தொடங்கியது. இருபது மணி நேரத்திற்கும் மேலாக ஆலைகளில் நசுங்கிய உழைப்பாளர்கள் எட்டுமணிநேரவேலை என்ற உரிமைக்காக போராடினார்கள். 1886ஆம் ஆண்டு மே 1ஆம் நாள் எட்டுமணிநேர வேலைக்காக அமெரிக்க தொழிலாளர்கூட்டமைப்பு அறிவித்த நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டமே மேநாள் என்ற உழைப்பாளர் உரிமை
ஜநா செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஆளுங்கூட்டணி கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி ஆகிய அனைத்து தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளும் பெரிதும் குழப்பமடைந்து கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முன்னணியின் பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரனின் ஏற்பாட்டில் பாமன்கடை பணிமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற கொழும்பு மேற்கு தொகுதியின் ஜமமு செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, எதிர்வரும் மே தினத்தை அறிக்கைக்கு
இன்றைய பொருளாதார சூழ்நிலையைப் பற்றியும் அது எங்கே புரட்சிக்கு இட்டுச் சென்று விடுமோ என்றும் எவ்வளவு தூரம் அரண்டு போயிருக்கிறார்கள் என்று தொரிகிறது.
இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் அறிக்கையின் பிரதியொன்றை இலங்கை அரசிடம் கையளித்த பிற்பாடு அது ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டது சம்பந்தமாக ஐ.நா.சபை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்ததாக நியுயோர்க்கிலுள்ள ஐ.நா.சபையின் இலங்கைக்கான பிரதிநிதி பாலித கொஹொன ப்ரஸ் ட்ரஸ்ட் ஒஃப் இந்தியா பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கை இலங்கையிடம் கையளிக்கப்பட்டதன் பிற்பாடு இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் இரண்டில் அதன் சாராம்சமானது
நடைபெறவுள்ள இளவரசர் வில்லியத்தின் திருமண விழா அழைப்பிதழை, பிரித்தானியாவில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென் சிரியாவுக்கான திருமண அழைப்பிதழை, பிரித்தானிய அரச குடும்பம் ரத்துச்செய்துள்ளது. சிரியா நாட்டில் அரச அதிபருக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் மீது சிரியா இராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், அங்கே மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே திருமண அழைப்பிதழ் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக சென் ஜேம்ஸ் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதே வேளை, தனது நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆதரவாகப் போராடிய நால்வருக்கு ராணுவநீதிமன்றத்
தடுத்து வைக்கப்படுள்ள ஆப்கானிஸ்தான் கைதிகளை சித்திரவைதைக்கு உட்படுத்தியது குறித்தும் அவர்களை மீதான வன் முறைகளுக்கு எதிராகவும் கனடா போர்க்குற்ற விசாரணைக்குள்ளாக்கப்படுமா என பரவலான எதிர்பார்பு நிலவுகிறது. சித்திரவதைகள் குறித்த விரைவில் வெளிளியிடப்படவுள்ள ஆவணப்படம் ஒன்றில் அதன் தயாரிப்பாளர் பெரி ஸ்ரீவன்ஸ் எழுப்பிய கேள்வியொன்றிற்குப் பதிலளித்த சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி லூயி ஓகம்போ, சாட்சிகள் வழங்கப்படுமாயின் அதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகத் தெரிவித்தார். முன்னதாகப் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சேபனை தெரிவித்த
இன்று பிரித்தானியாவில் நடைபெறும் அரச குடும்ப திருமண நிகழ்வு பெரும் பணச் செலவில் கொண்டாடப்படுகிறது. திருமண நிகழ்வை ஒட்டிய சம்பவங்களால் பிரித்தானிய அரசிற்கு ஐந்து பில்லியன் ஸ்ரேளிங் பவுண்ஸ் கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு பில்லியன் பவுண்ஸ்களை சேமிக்கும் நோக்கில், லண்டன் மாநகரிலிருந்து வேலையற்றோரையும், வறியவர்களையும் வெளியேற்றும் தீர்மானத்தை கடந்தமாதம் பிரித்தானிய அரசு நிறைவேற்றியிருந்தது. மருத்துவ உதவித்தொகை, சுகாதார சேவை, கல்வித்துறை, அரச ஊழியர்களுக்கான ஊதியம் ஆகிய பிரித்தானிய மக்கள் போராடிப்பெற்ற உரிமைகளை பிரித்தானிய அரசு
இலங்கைக் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எதிர்வரும் மே மாதம் 20, 21,22 ம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இடம்பெறும் கவியரங்கில் கவிதை வாசிக்க தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி மலேசியா செல்ல இருக்கின்றார். இலங்கையில் மரபுக்கவிதை எழுதிவரும் இளம் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான பொத்துவில் அஸ்மின் மாநாட்டு கவியரங்கத்துக்குச் சமர்ப்பித்த அண்ணலாரின் அழகிய குணங்களில் – ‘பொறுமை’ என்னும் தலைப்பில் அமைந்த