November 13th, 2010

மியான்மர் விடுதலை இயக்கத் தலைவி ஆங் சாங் சூகி இ‌ன்று விடுதலை ?

மியான்மர் விடுதலை இயக்கத் தலைவி ஆங் சாங் சூகி இ‌ன்று விடுதலை ?

இராணுவ அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள மியான்மர் விடுதலை இயக்கத் தலைவி ஆங் சாங் சூகி இ‌ன்று விடுதலை செய்யப்படுவார் என்று தெரிகிறது. 65 வயதாகும் சூகி மியான்மரில் இருந்த 20 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார். மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய அவர் மக்களிடையே செல்வாக்கு பெற்றார். இதனையடுத்து இராணுவ அரசு அவரை தொடர்ந்து சிறை வைத்துள்ளது. இந்நிலையில் அவரது தண்டனை நீட்டிப்பு காலம் நவம்பர் 13‌ஆ‌ம் தே‌‌தியுட‌ன் (இ‌ன்று) முடிவுக்கு வருகிறது.

அல்ஜசீராவிற்கு செய்தி சேகரிக்கத் தடை

அல்ஜசீராவிற்கு செய்தி  சேகரிக்கத் தடை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் தவணை பதவிப் பிரமாண செய்தி சேகரிப்புக்காக இலங்கை வரவிருந்த, அல்ஜெசீரா தொலைக்காட்சியின் மூன்று செய்தியாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்துள்ளது. அண்மையில் இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறி பல வீடியோ படங்களை அல்ஜெசீரா தொலைக்காட்சி ஒளிப்பரப்பியது. இதனையடுத்து இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கம் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தது. இந்தநிலையிலேயே அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மூன்று செய்தியாளர்களுக்கு வீசா வழங்க இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவா – சீனாவா ? யாரை நம்புவது?? : சதீஸ் வர்மன்

இந்தியாவா –  சீனாவா ? யாரை நம்புவது?? : சதீஸ் வர்மன்

கட்டுக்கோப்பான இராணுவக் குழு ஒன்றே தமிழர்களுக்கான தனி நாட்டைப் பெற்றுக்கொள்ளப் போதுமான முன் நிபந்தனை என்று முழுமையாக நம்பிய பிரபாகரன் என்ற அப்பாவி