ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தளம் ஒன்றின் மீது புதனன்று பிற்பகல் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது. கோஸ்ட் மாகாணத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் முழு நேரமாகவோ, அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ சி.ஐ.ஏவுக்காக பணியாற்றிய 8 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 அமெரிக்கர்கள் இதில் காயமடைந்தனர். ஆப்கானிய இராணுவ அதிகாரியாக பணியாற்றிய தமது ஆளே அந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.
இந்திய அணு சக்தித் துறையின் முக்கிய ஆய்வகங்கள் பல உள்ள மும்பை பாபா அணு ஆய்வு நிலைய வளாகத்துக்குள் இருந்த ஒரு சோதனைச் சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ஏன் ஏற்பட்டது, அங்கே பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்த உண்மையான தகவல்களை வெளியிட இந்திய அணு ஆராய்ச்சிக் கழகம் மறுப்பதாக விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இலங்கை ஜனாதிபத்தித் தேர்தலில் முன்னைய புலிகள் ஆதரவுக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு(TNA) சரத்பொன் சேகாவிற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருப்பதாக உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரம சிங்கவுடனான பேச்சுக்கள் வெற்றியளித்திருப்பதாக ரனில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் என்றும், இச் செய்தியை அவர்கள் சில நாட்களின் பின்பே வெளியிடுவர் என்றும் ரனில் மேலும் தெரிவித்தார். வன்னிப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கை என்பது
தென்னாசிய நாடுகளில் இலங்கைப் பத்திரிகையாளர்களே 2009 ஆம் ஆண்டில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தென்னாசிய ஊடக ஆணைக்குழு தெரி வித்துள்ளது. தென்னாசிய சுதந்திர ஊடக அமைப்புடன் (“சவ்மா”) இணைந்து கடந்த செவ் வாய்க்கிழமை பாகிஸ்தானில் வெளியிட்டுள்ள தனது ஏழாவது ஊடக கண் காணிப்பு அறிக்கையிலேயே ஆணைக் குழு இதனைத் தெரிவித்துள்ளது. “இந்து’ பத்திரிகையாசிரியர் என்.ராமைத் தலைவராகக் கொண்ட தென்னாசிய ஊடக ஆணைக்குழு 2009ஆம் ஆண்டில் 12 பத்திரிகையாளர்கள் பிராந்தியத்தில் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளது. சகல விதத்திலும் நோக்கும்போது
புதுக்குடியிருப்பு சிவந்தபுரம் மற்றும் நந்திக் கடல் பிரதேசங்களில் நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நவீன ரக ஆயுதங்கள் பலவற்றை மத்திய பிரதேச புலனாய்வு மற்றும் தகவல் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர், என இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 29ஆம் திகதி இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களில் ஸ்னைப்பரில் பொருத்தும் இரு ஆயுதங்களும் மற்றும் 75 கிலோ கிராம் நிறையுடைய வெடிபொரு ட்களும் இவ்வாறு மீட்கப்பட்டதாக மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.
வாஷிங்டன்: இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்கும் அபாயம் உள்ளதாக இந்தியா செல்லும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா எச்சரித்துள்ளது.இந்தியாவில் தாக்குதல்களை நடத்த பயங்கரவாத குழுக்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கலாம் என பல்வேறு ஆதாரங்களிடம் இருந்து தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. அமெரிக்கர்கள் மற்றும் மேலை நாட்டினர் அதிக அளவில் கூடும் இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்படலாம். இந்தத் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதக் குழுக்கள் தயாராக உள்ளனர். பயங்கரவாத குழுக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஹோட்டல், ரயில் நிலையம் போன்ற
மக்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட்டு வருவதாக அரசாங்கம் செய்து வரும் பிரச்சாரங்கள் ஓர் தேர்தல் பிரச்சார நடவடிக்கையே என எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கந்தளாயில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் பூர்த்தி அடையாத நிலையில் மக்களை மீள் குடியேற்றுவது உசிதமாகதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மீள் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களில் முழுமையாக நிலக்கண்ணி
108 ஆண்டுகளுக்கு பிறகு மாட்டு பொங்கலன்று கங்கண சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சந்திர கிரகணம் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ம் தேதி அதிகாலை நிகழ்கிறது. இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் தமிழ் நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது:- நிலவு வெகு தொலைவில் இருக்கும்போது, சூரியனைவிட சந்திரன் சிறியதாக தெரியும். அப்போது, கிரகணம் நேர்ந்தால் சூரியனை சந்திரனால் முழுமை யாக மறைக்க முடியாது. இதனை கங்கண சூரிய கிரகணம் என்கிறோம்.
எரித்திரியாவில் இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 இலகு ரக ஸ்லின் 143 இசட் விமானங்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள இலங்கை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்திருப்பதாக நம்பத்தகுந்த தரப்புத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விமானத்திற்கான உரிமை மற்றும் பொறுப்பு என்பவற்றை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியாது போனதால் அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் விமானங்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். எரித்திரியாவில் 10 விமானங்கள் இருப்பதாக அரச புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு சென்ற விமானப்
ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாட்டுப் பணிகளுக்காக பசில் ராஜபக்ச அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு 400 மில்லியன் பணத்தை வழங்கியுள்ளார். எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்டத் தலைவரான அமைச்சர் சி.பீ.ரத்னாயக்கவிற்கு 50 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி சார்பில் நுவரெலியா மாவட்டத்தின் தலைமைத்துவம் அமைச்சர் தொண்டமானுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் நுவரெலியா சென்றிருந்த பசில் ராஜபக்ச 400 மில்லியன் ரூபாவையும் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கான கடிதத்தையும் அமைச்சர் தொண்டமானிடம் கையளித்துள்ளார். அதேவேளை,