February, 2009

Page 9 of 10« First...678910

பிள்ளையான் ஒரு முட்டாள் : கருணா

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரான பின்னர், கிழக்கு மாகாண அபிவிருத்தியில் தான் நேரடியாக தலையிட்டு, அபிவிருத்தியை துரிதப்படுத்தப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க தனக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அடுத்த மூன்று வாரங்களில் தமது கட்சியினருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றுக் கொடுத்து, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள ரி.எம்.வீ.பீ கட்சி அலுவலங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகங்களாக மாற்றப்

தமிழக வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் : பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி கடற்கரையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி 14 வழக்குரைஞர்கள் கள்ளத்தோணியில் புறப்பட்டனர். 14 பேரையும் தமிழக கடலோர காவல்துறையினர் கைது செய்தனர். இன்று நண்பகல் 12.30 மணியளவில் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் தலைமையில் 14 வழக்கறிஞர்கள் இந்திய தமிழக அரசின் கட்டுப்பாட்டை உடைத்துவிட்டு முல்லைத்தீவினை நோக்கி படகு பயணம் மேற்கொண்டனர். தமிழக நேரப்படி நண்பகல் 1.30 மணியளவில் 13 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தனர். வழக்குரைஞர்கள் 14

இனச்சுத்திகரிப்பு : 80 தமிழர்கள் அழிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திபுரம் பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான கொலைத் தாக்குதலில், இதுவரை 80 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதல் நடைபெற்ற பகுதி கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு பெரும் அவலம் மிகுந்ததாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரபுரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியில் இருந்து பிற்பகல் 3:00 மணிவரை சிறிலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதலை

சபா நாவலன்">மகிந்த அரசின் மரணச் சமன்பாடு : சபா நாவலன்

மகிந்த  அரசின் மரணச் சமன்பாடு :  <font color=சபா நாவலன்" title="மகிந்த அரசின் மரணச் சமன்பாடு : சபா நாவலன்" width="150" height="100" />

கொல்லப்படுவது கண்டு அஞ்சியோடிய பச்சிழம் குழந்தை தகப்பனின் தலையற்ற உடலில் விழுந்து கதறியழும் காட்சி, கோரமாய்த் தோற்றமெடுத்துள்ள இலங்கைத் தீவின் வடக்கு மூலையில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. தனது சொந்த தேசத்து மக்களையே கோரக் குண்டுகளால் துளைத்தெடுத்து மருத்துவமனைக்குள் தொங்கப்போட்டு சமாதிகட்டிவிட்டு இதையெல்லாம் குருதியறைந்து நியாயம் சொல்லும் அரசியல் வியாபாரிகளின் ஆணவம், அதிகாரம், மனிதகுலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவலக்குரலோடு அல்லோல கல்லோலப்பட்டு, பசியோடும் பட்டினியோடும் செத்துப் போவதற்காகவே வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த மக்கள் கூட்டத்தின்...

செஞ்சிலுவைச் சங்கம் : வன்னியிலிருந்த்து வெளியேற அரச உத்தரவு

வன்னியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர்கள் உடனடியாக குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டுமென கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி டொணால்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.   தமிழீழ விடுதலைப் புலிகளை 96 கிலோ மீற்றர் பரப்பிற்குள் மட்டுப்படுத்தியுள்ளதாகவும், குறித்த பிரதேசத்தில் இயங்கும் செஞ்சிலுவைச் சங்க ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க முடியாதெனவும் அவர் கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.   குறித்த பிரதேசத்தில் கடமையாற்றும் மூன்று

இலங்கை விமான நிலையத்தில் அரச கெடுபிடு!

தப்பிச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்ய விசேட பிரிவொன்று விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.   கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட புலனாய்வுப் பிரிவொன்று 24 மணி நேரமும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த சுமார் 20 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   தப்பிச் செல்ல முற்பட்டவர்களில் ஒருவர் ஊடகவியலாளர் என்ற போர்வையில் நாட்டைவிட்டு வெளியேற

வன்னியில் உணவுத் தட்டுப்பாடு!

இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள வன்னி பகுதியில் சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் தங்கியிருப்பதால்,  அங்கு  கடும் உணவுப்பற்றாக்குறை நிலவுவதாக ஐநா உணவு நிவாரண முகமை தெரிவித்துள்ளது. . இலங்கையின் வடக்குப்பகுதியில் நடந்து வரும் சண்டையால் ஏராளமான தமிழர்கள், விடுதலைப்புலிகளுடன் வன்னி பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கை ராணுவம்  அப்பகுதியை சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ள தால், அங்கு தங்கியிருக்கும் சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அண்மையில் பெய்த பெருமழை காரணமாக

மலேசியாவிலும் தமிழர் தற்கொலை

கோலாலம்பூர்: இலங்கையில் கொல்லப்பட்டு வரும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற வலியுறுத்தி மலேசியாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். தமிழகத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன் ஆகியோர் தீக்குளித்து உயிரிழந்துள்ளனர். தற்போது, மலேசியாவில் வசித்து வந்த இலங்கை தமிழரான ராஜா என்ற 27 வயது வாலிபர் தீக்குளித்து உயிரிழந்திருக்கிறார். ரஹாங்கோட்டை ஆலான்தம்பிச் சாலை முனீஸ்வரர் ஆலயத்துக்கு எதிரே கார்கள் விற்பனை செய்யும் கடைக்கு முன் தனது உடலில்

இலங்கைப் பிரச்சனையில் கருணாநிதி : ஸ்டாலின் விளக்குகிறார்

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் முதல் அமைச்சர் கருணாநிதி மற்ற தலைவர்களுக்கு எல்லாம் முதலிடத்தில் இருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவை சார்பில் இன்று நடைபெற்ற பேரணியின் முடிவில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக இலங்கை தமிழர் நல உரிமை பேரவை அமைக்கப்பட்டது. ஆனால் அரசியல் பிழைப்புக்காக சில கட்சிகளின் தலைவர்கள் தாங்களும் தலைவர்கள் என்று காட்டிக்கொள்வதற்காக சில அநாதை தலைவர்கள், சில

“தவறான புரிந்துணர்வை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கலாம். ஆனால் அச்சுறுத்தல் மூலம் தீர்க்க முடியாது”:ஜேர்மன்

02.02.2009. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதுவர் உள்ளிட்ட, வெளிநாட்டுத் தூதுவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரி கூறியிருப்பது தம்மைத் திருப்திப்படுத்தவில்லையென பேர்லின் தெரிவித்துள்ளது. “தறவான புரிந்துணர்வுகள் ஏற்பட்டால் அது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படலாம். ஆனால் அச்சுறுத்தல் மூலம் தீர்க்க முடியாது” என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. பொறுப்பற்ற வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு, அவர்களுக்கு புத்துயிரளிக்க

Page 9 of 10« First...678910