February, 2009

Page 1 of 1012345...10...Last »

இந்திய மத்திய அரசும் இலங்கைத் தமிழர்களும்:வெகுஜனன்

இந்திய மத்திய அரசும் இலங்கைத் தமிழர்களும்:வெகுஜனன்

இந்திய மத்திய அரசு இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தனது பிராந்திய நலனை முதன்மைப்படுத்திய கொள்கையையே எப்பொழுதும் முன்னிறுத்தி வந்திருக்கிறது. தென் ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமன்றி, முழு ஆசியாவிலும் தனது ஆதிக்கத்தை விரிவாக்கும் நோக்குடனேயே அதன் கொள்கை வகுப்பு இருந்து வருகிறது.

போர் நிறுத்தம் செய்ய சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும்:பிரணாப் முகர்ஜி.

28.02.2009. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யத் தயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்திருப்பதைப் பயன்படுத்தி, அங்கு போரை நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நடைபெற்று வரும் போரால் அங்குள்ள தமிழ் மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது இந்தியாவுக்கு மிகுந்த கவலை அளிக்கின்றது. இலங்கையில் போர் நடைபெறும் பகுதியில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் சிக்கித் தவிக்கின்றனர் என்றும்,

“பொதுமக்கள் வெளியேறாது விடுதலைப் புலிகள் தடுக்கின்றமைக்கான ஆதாரங்கள் உள்ளன”:ஜோன் ஹோல்ம்ஸ்.

28.02.2009. “இலங்கை அரசாங்கப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களால் அபாயமான சூழ்நிலை காணப்படுகிறது. பொதுமக்கள் வெளியேறாது விடுதலைப் புலிகள் தடுக்கின்றமைக்கான ஆதாரங்கள் உள்ளன” என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உறுப்பினர்களிடம் கூறினார். “அரசாங்கத்தின் தகவல்களின் படி 70,000 பேர் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் சிக்குண்டுள்ளனர். ஐ.நா. தகவல்களின் படி 200,000 பேர் அங்குள்ளனர். தமிழ் குழுக்களின் தவல்களின் படி அங்கு 300,000

இலங்கையில் அமைதியான சூழலில் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்:ஏ.ஆர். ரஹ்மான்.

28.02.2009. “இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளை பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு தமிழ் மக்கள் எவரும் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன்” என  ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் சமாதானமாகவும், சுபீட்சமாகவும் வாழ்வதற்கு தேவையான பின்னணி ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘ஸ்லம்டொக் மில்லியனர்’ என்ற திரைப்படத்திற்காக அண்மையில் நடைபெற்ற

வடக்கில் மோதல் முடிவுக்கு வருவதையிட்டு பிரான்ஸின் வெளிநாட்டமைச்சர் மகிழ்ச்சி!:வெளிவிவகார அமைச்சு அறிக்கை.

28.02.2009. இலங்கையின் வடக்குப் பகுதியில் மோதல்கள் முடிவுக்கு வருவதையிட்டு, பிரான்ஸின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்   பேர்னாட் குச்னர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார். இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோகித போகொல்லாகமவுடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே இதனைத் தெரிவித்ததாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையின் வடக்குப் பகுதியில் மோதல்கள் முடிவுக்கு வருவதையிட்டு பிரான்ஸின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேர்னாட் குச்னர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன், பிரான்ஸினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான உதவிகள்

ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் இலங்கை அரசிற்கு எதிரான ஊடக அமைப்பின் கண்டன அறிக்கை.

  Forum for Journalists Against Oppression 141,Eldams road, Vellala Teynampet,       Chennai- 6000018   வணக்கம்   இலங்கையில் எழுந்துள்ள போர்ச்சூழல் என்பது அங்கு வாழும் தமிழ் மக்களின் சிவில் சமூக வாழ்வை முற்றிலுமாக சீர்குலைத்திருப்பது நீங்கள் அறிந்ததே ! இலங்கையை ஒரு ஜனநாயக நாடாக சர்வதேச சமூகம் அங்கீகரித்திருக்கும் சூழலில் இலங்கையின் போர் வெறி மிக மோசமான அளவுக்கு பரவி வருகிறது. மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினர்

இலங்கைக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்:ஜாதிக ஹெல உறுமய.

27.02.2009. பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக இலங்கைக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் மேல்மாகாணசபை வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கைக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்கவிருப்பதாகவும், அதன் ஊடாகப் பெறும் ஆதாரங்களைக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்து பிரித்தானிய அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுக்கப் போவதாகவும் அவர் கூறினார். ஆக்கிரமிப்பாளர்கள் இலங்கையிலுள்ள வளங்களைச் சூறையாடியதுடன், சிங்கள மற்றும் இந்துக் கலாச்சாரங்களைப் பின்பற்ற விடாமல் தடுத்து கலாச்சார

காசாவில் வீசப்பட்டவை அமெரிக்க குண்டுகள்…

26.02.2009. அண்மையில் நடைபெற்ற காசா போரில் இஸ்ரேல் வீசிய வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டவை என்று சர்வதேச பொது மன்னிப்புக்கழக ஆய்வறிக்கை கூறுகிறது. இஸ்ரேலுக்கு என்ன ஆயுதங்களை அனுப்புகிறோம் என்பதைக் கண்காணிக்க அமெரிக்கா தவறி விட்டது. அமெரிக்கச் சட்டத்தை அமெரிக்க அரசே மீறியுள்ளது. ஆயுதங்களை தவறாகப் பயன்படுத்தக் கூடிய நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கக் கூடாது என்று அமெரிக்கச் சட்டம் கூறுகிறது. காசாவில் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்திய முறை போர்க் குற்றமாகும் என்று இந்த

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் ஆர்வம் கொழும்பிடம் இல்லை:அமெரிக்க செனட் உப குழுத் தலைவர் பொப்காசே குற்றச்சாட்டு.

26.02.2009. வாஷிங்டன்: இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற ஆர்வம் கொழும்பிடம் இல்லையென்று அமெரிக்க செனட்டின் வெளியுறவு உப குழுவின் தலைவரான செனட்டர் பொப்காசே நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை குற்றச்சாட்டுத் தெரிவித்திருக்கிறார். வடக்கில் புலிகளை அழித்து விட்டாலும் கூட தமிழ் மக்களின் விவகாரங்கள் தொடர்பாக அரசியல் இணக்கப்பாடொன்றை எட்டுவது தொடர்பாக கொழும்பு தீவிரமாக இல்லையென்று பொப் காசே தெரிவித்திருக்கிறார். அரசியல் ரீதியாக இந்த விடயம் விரைவில் கையாளப்படுமென்பது தொடர்பாக இதுவரை

பத்திரிகையாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டார்

இலங்கையில் அரச வன்முறைக்குப் பலியாகும் பத்திரிகையாளர்கள், கடத்தல், மிரட்டல் கொலை என்று இல்லாமலாக்கபப்டுகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்னொரு பத்திரிகையாளர் கடத்தப்பட்டார். சுடர் ஒளி பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் இன்று காலை கடத்தப்பட்டுள்ளதாக அப்பத்திரிகையின் நிர்வாகப் பணிப்பாளர் தெரிவித்தார். இக்கடத்தல் சம்பவம்குறித்து கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை கல்கிஸ்ஸை மஹிந்த மலர்ச்சாலையில் இடம்பெற்ற இறுதிக்கிரியை ஒன்றில் கலந்துகொண்ட நபர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு இன்று

Page 1 of 1012345...10...Last »