January 20th, 2009

அரசுக்குச் சான்றிதழ் வழங்கும் ஆனந்தசங்கரி

ஒரு சிலர் பலியாகும் சந்தர்பங்களை கருத்தில்  கொண்டு இன அழிப்பு இடம்பெறுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்வது தவறானது என்று ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.   ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.   இந்திய அரசமைப்பிற்கு இணையான ஒரு தீர்வு திட்டத்தை  இலங்கையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் நாட்டில் இருந்து எழும் தமிழீழ ஆதரவுக் குரல்களை இல்லாதொழிக்க முடியும் என்றும் தமிழ் நாட்டு மக்கள் அனுபவிக்காத உரிமைகள் எதனையும் இலங்கையில் வாழுத் தமிழர்கள்

சாதித்துக்காட்டிய நாடு அமெரிக்கா : பராக் ஒபாமா

அமெரிக்க நாட்டின் 44-வது அதிபராக பதவியேற்றுக்கொண்ட பிறகு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பராக் ஒபாமா அமெரிக்கர்களுக்கு முன்புள்ள சவால்களை வெற்றி கொள்ள வேண்டிய அவசியத்தையும்  விவரித்தார். “நமது பொருளாதாரத்தை மீண்டும் செயல்பட வைக்க விரைவான, துணிச்சலான நடவடிக்கைகளே இப்போதைய தேவை. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க மட்டும் அல்ல, புதிய அடித்தளத்தை அமைக்கவும் கடினமாக உழைப்போம். சாலைகளையும், பாலங்களையும், மின்விநியோக கட்டமைப்புகளையும் தகவல் தொழில்நுட்ப தடங்களையும் உருவாக்குவோம். அறிவியலுக்கு உரிய இடத்தை அளிப்போம், மக்களுக்குத் தரமான சுகாதார

தப்பிச் செல்ல முயன்றபோது புலிகளின் படகுகள் அழிக்கப்பட்டன.

இலங்கை ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது புலிகளின் 4 படகுகள் அழிக்கப்பட்டன. இத் தகவலை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் நிர்வாக தலைமையகமாக திகழ்ந்த கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் மூத்த தலைவர்கள் அனைவரும் தங்களது முகாமை முல்லைத்தீவுக்கு மாற்றிவிட்டனர் என்று கூறப்பட்டது. தற்போது ராணுவம் முல்லைத்தீவில் நுழைந்துள்ளது. முல்லைத்தீவில் ராணுவம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் பிரபாகரன் அல்லது விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் யாராவது

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு !

21.01.2009. அன்பார்ந்த நண்பர்களே, அமெரிக்காவின் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவாலான பிறகு உலகமெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த வீழ்ச்சியிலிருந்து உலக முதலாளிகளை காப்பாற்றுவதற்கு எல்லா அரசுகளும் முனைப்புடன் செயல்படுகின்றன. மக்களின் வரிப்பணத்திலிருந்து இந்த நிறுவனங்களை தூக்கி நிறுத்துவதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அள்ளி வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த மோசடி முதலாளித்துவம் கொண்டு வந்த பொருளாதாரச் சரிவில் வாழ்விழந்து, வேலையிழந்து தவிக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு எந்த அரசும் தயாராக இல்லை.  

புலிகள் தடியைக் கொடுத்து அடி வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.: ரவூப் ஹக்கீம்

21.01.2009. நாம் இப்போது மிகவும் ஆபத்தான காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். வித்தியாசமானதொரு காலத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு தரப்பினரும் வகுத்துக் கொண்ட வியூகங்கள் எல்லாம் பிழைத்துள்ளன. விடுதலைப்புலிகள் தான் இன்றைய ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவரக் காரணமாக இருந்தார்கள். புலிகள் தடியைக் கொடுத்து அடி வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா எழுதிய ‘சறந்தீபில் பா×தி’ எனும் நூல் வெளியீட்டு விழா சாய்ந்த மருதில் நடைபெற்ற போது

6 கோடி தெற்காசியர்கள் (உலக சனத்தொகையில் 1 சதவீதம்) இதயநோயால் பாதிப்பு .

21.01.2009. மரபணு உருப்பெருக்கம் என்ற ஒரேயொரு காரணத்தால் 6 கோடி தெற்காசியர்கள் (உலக சனத்தொகையில் 1 சதவீதம்) இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விஞ்ஞான ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. பரம்பரைப் பாதிப்பு இந்திய உபகண்டத்தில் 150 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள், மருத்துவர்களை உள்ளடக்கிய குழுவொன்று “நேற்சர் ஜெனற்றிக்ஸ் அக்கடமிக் ஜேர்னல்’ சஞ்சிகையில் எழுதியுள்ளனர். தெற்காசியர்களில் 4 சதவீதமானோரை பரம்பரை ரீதியான இதயநோய் தாக்குவதாக பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்