October 17th, 2008

பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் , அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும்:இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

17.10.2008. பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி அவர்கள் கோரியிருந்தார். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியிலான வெற்றிகள் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தாது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூக மக்களும் சமமாக வாழக்கூடிய அரசியல் ரீதியான தீர்வே சமாதானத்தை கொண்டுவரும் எனவும் அவர் வலியுறித்தியிருந்தார். இந்திய வெளியுறவுச் செயலர் ஷிவ்ஷங்கர்

மட்டக்களப்பில் கருணா குழுவிற்கும், பிள்ளையான் குழுவிற்கும் இடையில் பகிரங்க மோதல்.

17.10.2008. மட்டக்களப்பில் கருணா குழு உறுப்பினர்களினால் பிள்ளையான் குழுவின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதாக காவற்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   குறித்த அலுவலகத்தில் கடமையாற்றிய 13 பிள்ளையான் குழு உறுப்பினர்களையும் கருணா தரப்பு உறுப்பினர்கள் கைது செய்துள்ளனர். இரண்டு வருடங்களாக மீனகம் அலுவலகம் பிள்ளையான் குழு உறுப்பினர்களினால் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.   பிள்ளையான் குழுவினால் பிரசுரிக்கப்படும் தமிழலை பத்திரிகை நிறுவனமும் முற்றுகையிடப்பட்டுள்ளது.   இன்று பிற்பகல் அளவில் ஆயுதந் தரித்த கருணா குழு உறுப்பினர்கள் பிள்ளையான் குழு

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தமிழக ஆர்ப்பாட்டத்துக்காக ஒருபோதும் நிறுத்தப்படாது.

17.10.2008. தமிழ்நாட்டில் இடம்பெறும்ஆர்ப்பாட்டங்களுக்காக விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை ஒருபோதும் இடை நிறுத்தப்படாதென உறுதியாக அறிவித்திருக்கும் அரசாங்கம், இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா ஒரு போதும் தலையிடாதெனவும் புதுடில்லி கொழும்புடன் அதிகளவுக்கு புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தேர்தலொன்று நடை பெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்த சூடான நிலைமை, தேர்தல் முடிவடைந்த பின்னர் தணிந்து விடுமென்றும் அரசாங்கம் தெரிவிக்கிறது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக வியலாளர்

இலங்கை அரசைக் கண்டித்து : நடிகர்கள் உண்ணாவிரதம்

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இலங்கைக்கான இந்தியாவின் இராணுவ உதவிகளை நிறுத்தக் கோரியும் நடிகர், நடிகைகள் எதிர்வரும் 1ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தவுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர் நடிகைகளும் பங்கேற்கவுள்ளனர் எனவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் ஆதிக்கத்தில் உள்ள கிளிநொச்சியைப்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்!

தெற்கு மெக்சிகோ மாகாணமான சியாபாஸில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சேதம் மற்றும் உயிரிழப்பு பற்றிய விவரம் இது வரை வெளியாகவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6.6 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின் படி கவுத்தமாலா எல்லைப்பகுதியில் உள்ள சுசியாதே என்ற நகருக்கு 13 மைல்கள் தொலைவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.