October 3rd, 2008

சிங்கள மாணவர்களின் அச்ச உணர்வைப்போக்க எந்தக் குரலும் வெளிவரவில்லை. இது துரதிர்ஷ்டமானதாகும்:பேராசிரியர் காமினி சமரநாயக்கா

03.09.2008. யாழ்ப்பாணம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிபெற்ற சிங்கள மாணவர்கள் தமக்குக் கல்வியைத் தொடர அங்கு பாதுகாப்பில்லையென போராட்டம் நடாத்தும்போது எப்படி இம்மாணவர்களை அங்கு செல்லுமாறு கோருவீர்கள் என கேட்கின்றீர்கள். நாம் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை அவர்கள் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்க முடியுமென்ற உத்தரவாதம் வழங்கியபோது கிழக்கிலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. இது அவர்களுக்கு அச்சத்தை மேலும் உருவாக்கியது. ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்தோ கிழக்கில் இருந்தோ தமிழ் சமூகத்திடம் இருந்தோ இம்மாணவர்களின்

உலகஅளவில் நிலவி வரும் நிதி சிக்கலுக்கு அமெரிக்காவின் பொறுப்பற்ற போக்கே காரணம்:விலாடிமிர் புடின் .

03.09.2008. மாஸ்கோ: உலகஅளவில் நிலவி வரும் நிதி சிக்கலுக்கு அமெரிக்காவின் பொறுப்பற்ற போக்கே காரணம் என ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உலக அளவில் பெரும் நிதி சந்தை நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு சில தனிப்பட்டவர்களின் பொறுப்பற்ற போக்கே காரணம். அமெரிக்க தலைவர்கள் சிலரின் பொறுப்பற்ற போக்கும், முடிவெடுக்க முடியாமல் திணறுவதுமே இதற்கு முக்கிய காரணம். பொருத்தமான முடிவுகளை அவர்களால் எடுக்க முடியவில்லை. அமெரிக்காவால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘தொற்று நோயின்’

இலங்கை தமிழர் பிரச் சனைக்கு ஆயுதங்கள் மூலம் தீர்வு காணமுடியாது:ஆர்.நல்லகண்ணு.

03.09.2008. இலங்கை தமிழர் பிரச் சனைக்கு ஆயுதங்கள் மூலம் தீர்வு காணமுடியாது. அரசி யல் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணமுடி யும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப் பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார். இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி அமைதிப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தி மதுரை மேல-வடக்குமாசி வீதி சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடை பெற்றது. இதனை துவக்கி வைத்து ஆர்.நல்லகண்ணு