இலங்கை அரசாங்கமும் சிங்களப் பேரினவாத சக்திகளும் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடரறா ஒரு நிலப்பரப்பில் மிக நீணட காலமாக வாழ்ந்து வரும் ஒரு தேசம் என்ற உண்மையையும் அதனால் அவர்களுக்கு சுயநிர்ணயத்திற்கான உரிமை உண்டு என்பதையும் ஏற்க மறுக்கின்றமையே இன நெருக்கடிக்கு தீர்வு காண முடியாமல் இருப்பதற்கான பிரதான காரணமாகும். இந்த உரிமை ஏற்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டாலொழிய இன்றைய தமிழர் பிரச்சனைக்கு தீர்வு எதுவுமே இருக்க முடியாது.
முன்னிலை சோசலிச கட்சி பற்றி ... இவர்கள் இலங்கை, மேற்குலக நாடுகளின் "தயாரிப்பு"க்களோ என நான் சந்தேகம் கொள்கிறேன். முள்ளிவாய்காலுக்குப் பின் இலங்கையில் புதிய விடுதலைச்சிந்தனைகள் தமிழ் பிரதேசங்களிலும், தென்னிலங்கையிலும் உருவாகாமல் இருப்பதற்கு இவ்வாறான ”இடதுசாரி அமைப்பு” என்ற போர்வையோடு அமைப்பின் தோற்றம் "ஒரு சிலருக்கு" தேவைப்படுகிறது. அந்த தேவையைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையோ இது எனத் தெரியவில்லை.
சாதரணமாக இந்த ரிஷானாவுக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சர்வதேச அமைப்புகளே இறுக்கமாகப் போராடியுள்ளதைக்கூட இவர்கள் கவனிக்காது அறிக்கை எழுதுவது பெரும் மோசடியானது.
ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான தமிழ்நாடு மற்றும் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டறிக்கை. இலங்கை இஸ்லாமிய பெண்ணான ரிசானா நபீக் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்ற நிலையில் அந்த வீட்டில் இருந்த நான்கு மாத குழந்தையை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவளுக்கு ஜனவரி 9ம்தேதி மரணதண்டனை விதிக்கப்பட்டது. கொலைக்குற்றங்களுக்கு தலை வெட்டு (Behead) தண்டனை வழக்கில் இருக்கும் ஒரு நாட்டில் அதன் தண்டனை முறைகள் அதற்கான நியாயப்பாடோடு
இன்னும் எதிர்காலம் இருள் சூழந்ததாகவே உள்ளது..லெனினின் பங்களிப்பு இன்று வரைக்கும் பல அரசியல் சிக்கல்களுக்கு விடை தருகிறது....இனவாதிகள் தொடர்ச்சியாக தமது சாம்ராஜியத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் தேசிய விடுதலைக்கான போராட்டத்தை அடையாளத்திற்கான போராட்டமாக மாற்றுவதற்கும்
£370,259 பவுண்ஸ்களை கையூட்டாகக் கொடுத்து எயர் இந்தியா ரிக்கட் விற்பனையாளருக்கான பிரித்தானிய தனி உரிமத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்-இந்திய அரசு இலங்கை அரசோடு இணைந்து நடத்திய வன்னிப் படுகொலைகளின் போது £370,259 பணத்தை இந்தியக் கொலைகாரர்களிடம் கொடுத்துவைத்துவிட்டு எப்படி மக்களுக்காகப் பேச முடியும் ?
நேசனை 1983ம் ஆண்டிலிருந்து தெரியுமென நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் உமா மகேஸ்வரனுக்கு இரண்டு ‘’விசுவாச ரசிகர் மன்ற மையங்கள்’’ இருந்தன. ஒன்று சுழிபுரம் ; மற்றையது கொக்குவில். கொக்குவில் ‘விசுவாச மையத்திலிருந்து’ வந்தவர்தான்
மொத்தத்தில், சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் பண்பாட்டுரீதியாக மெல்ல மங்குகின்ற சாதி உணர்வை, சாதிய பிழைப்புவாத வாக்கு வங்கி அரசியல் புளி போட்டு விளக்கிப் புதுப்பித்திருக்கிறது. அடையாள அரசியல், சாதி மற்றும் உட்சாதி உணர்வுகளுக்குக் கௌரவமும் அந்தஸ்தும் தேடித்தந்திருக்கிறது!
2012 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் அமரிக்க செனட் சபையில் பலோச்சிஸ்தான் -Balochistan-மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் பாக்கிஸ்தான் அரசைக் கோருவதாகத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.-சிலி நாட்டின் எஸ்கடோடியா தங்கச் சுரங்கத்தில் பெறப்படும் தொகையை விட அதிகளவான தங்கத்தை பலோச்சிஸ்தானில் பெறமுடியும்
பின்பு நிஷா குடும்பத்தின் தலைவியாக ஆனதும் அவளுடைய சகோதரர்களோ அல்லது புத்திரர்களோ அடிக்கடி மாறிவரும் அவளுடைய காதல் வேட்கையை தடுப்பதற்கு சக்தியற்றவர்களாகிவிட்டனர். ஆகையால் இப்பொழுது ஜீவந்தர்களாயிருக்கும் நிஷாவினுடைய மக்கள் ஏழு பேரில், யாருக்கு யார் தகப்பன் என்று எப்படிச் சொல்ல முடியும்?--இது இற்றைக்கு 361 தலைமுறைக்கு முந்திய மனிதகுலத்தின் கதை. அந்தக் காலத்தில் ஹிந்து, ஈரான், ஐரோப்பாவினுடைய சகல சாதிகளும் ஒரே குடும்பமாயிருந்தன. மனித குலத்தின் ஆரம்ப காலம் அது.