சிங்கள பௌத்த தேசியவாதம் சமரசங்களுக்கு அப்பாற்பட்டது. ஆக, இது குறித்து கேள்வியெழுப்புபவர்களாயினும் எதிர்ப்பவர்களாயினும் அரச எதிரியாகக் கருதப்படுகின்றனர்.
புலி எதிர்ப்பாளர்களும், புலி அடிப்படைவாதிகளும் தமது அரசியல் ஏற்படுத்திய அழிவுகளையும் பின்னடைவுகளையும் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்த மறுப்பதன் மறுபக்கத்தில் மகிந்த ராஜபக்சவிலிருந்து சோல்ஹெயிம் வரைக்கும் அனைத்து அதிகாரவர்க்க அழிவு சக்திகளையும் பலப்படுத்துகிறார்கள்.
ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகளுக்குக் கிடைத்த உணர்வு பூர்வமான ஆதரவு என்பது 90 களின் பின்னர் இலங்கையின் வட கிழக்கில் அவர்களுக்குக் கிடைத்ததில்லை.
நமது அரசியல் கிளர்ச்சியில் பிரிந்து போகும் உரிமையை முன்வைத்துப் ஆதரித்துப் பேசத் தவறினால், நாம் முதலாளிகளின் நோக்கத்திற்கே உதவுவோம்.
தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தனது பிரிந்துபோகும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவது தவிர்க்க முடியாது
இந்த அடையாளம் குறித்த புனிதம் ஹிட்லர் காலத்தில் பல அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. ஜேர்மனிய மக்களின் மிகப் பெரும்பான்மையினர் ஹிட்லரின் கொடி, சின்னம், வணக்கம் செலுத்தும் முறைமை ஆகிய "புனித்தை" வழிபடும் நிலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்
தனி நபர்களுக்கு ஊடாக அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்வது ஆபத்தாக முடியும்.
தேசமோ தேசியமோ இயல்பானவையோ மாறாத வையோ அல்ல என்பதைப் பற்றியும் தேசமென்பது வரலாற்றின் விளைபொருளேயன்றி மனித உயிரியல் சார்ந்த ஒன்றல்ல என்பதில் அரசியல் வரலாற்றாளர்கள் ஓரு மனதுடையோராக உள்ளனர் எனத் தெரிகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா விலைகொடுத்து வாங்கி இலங்கை அரசிற்கு விற்பனை செய்துவிட்டது. இப்போது தமிழ்த் தேசிய முன்னணி அவர்களுக்குச் சற்றும் குறைவற்ற அரசியலை முன்னெடுக்கிறது.
புலிகள் எவரையும் எதற்காகவும் கொலை செய்யலாம் என்ற நிலைமை உறுதிப்படுத்தப்படுகிறதைக் கண்டோம். அதற்கான பரந்து பட்ட எதிர்ப்புத் தளம் ஒன்று மக்களிடமிருந்தும் புத்திசீவிகளிடமிருந்தும் உருவாகவில்லை.