75 ஈழ அகதிகளை விடுதலை செய்யக் கோரி மலேஷியாவில் ஆர்ப்பாட்டம்.

இலங்கையில் நிலவும் இன அழிப்புச் சூழலில் இருந்து தப்பி அடைக்கலம் கோரி கரை ஒதுங்கிய ஈழத் தமிழ அகதிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது எனக் கோரியும். அவர்கள் விரும்புகிற இடங்களுக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் போலி ஏஜெண்டுகள் மூலம் வந்தவர்கள் என்று அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வாபஸ் பெறவேண்டும இவர்களை இலங்கை அரசு அழைத்தாலும் அங்கே இவர்களை திருப்பி அனுப்பக்கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சந்தித்துக்கொள்ளும் வாய்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
தனியறைச்சிறையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று செயலணித்தலைவர் கலைவாணர் தலைமையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஐநா அலுவலகம் நோக்கி நாளை பேரணி நடக்கிறது.பேரணியின் முடிவில் ஐநாவின் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பிரதிநிதி ஜமால் மல்கோத்ராவிடம் நேரடியாக மனுவை கொடுத்து பேசுவது என்று முடிவெடுத்துள்ளார்கள். இந்த பேரணியில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர்.