4,38,000 வேலைகள் பறிப்பு!

அமெரிக்க பொருளாதாரம் அடி மேல் அடி வாங்கி வருவதால் புதிதாக ஊழியர்களை சேர்ப்பதில் பன்னாட்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. எண்ணெய் விலை அதிகரித்து வருவதும், உண வுப் பொருட்கள் விலை கைக்கெட் டாத உயரத்திற்கு சென்றுள்ளதும் பிரச்சனையை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஜூன் மாதத்தில் மட்டும் 62 ஆயிரம் பணியிடங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

பணியிடங்களை காவு கொடுத்து வருவது கடந்த ஒரு ஆண்டாகவே நடைபெற்று வருகிறது. மே மாதத் தில் நீக்கப்பட்ட பணியிடங் களின் எண்ணிக்கை முதலில் கணக்கிடப்பட்டதை விட அதிகமாக இருந்துள்ளது. திருத்தப்பட்ட புள்ளிவிபரப் படி மே மாதத்திலும் 62 ஆயிரம் பணியிடங்கள் நிரப் பப்படாமல் அப்படியே நீக்கப்பட்டுவிட்டன.

தொடர்ந்து பணியிடங் கள் மறைந்து வந்தாலும் வேலையில்லா தவர்களின் எண்ணிக்கையில் மாற்ற மில்லை என்று அமெரிக்க அரசு புள்ளி விபரங்களை அள்ளி வீசு கிறது. பிரபல நிறுவனமொன்றின் உயர் அதிகாரியான கேரி தாயர் கூறு கையில், பெரிய அளவில் பணியிடக் குறைப்பை நாங்கள் எதிர்பார்க்கவில் லை. ஆனால் செலவைக் குறைப்பதற் காக நிறுவனங்கள் இந்த வேலையில் இறங்கியுள்ளன என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 4 லட்சத்து 38 ஆயிரம் வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 73 ஆயிரம் பணி யிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போகின்றன. வேலையில்லாதவர்கள் பதிவு செய்து கொள்ளும் இடங் களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக் கை 6 சதவீதமாக உயரும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச் சரிக்கின்றனர்.

ஜூன் மாதத்தில் ஏற்பட்ட வேலை இழப்புகள் பெரும்பாலும் கட்டுமானம், நிதிச்சேவை மற்றும் உற்பத்தித் துறைகளிலேயே ஏற்பட் டுள்ளன. உணவுப்பொருட்கள் மற் றும் எரிபொருள் விலை உயர்வால் நுகர்வோர்கள் தங்கள் செலவைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள் என்ற செய்தி பல்வேறு நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைத்து வரு கிறது.