328 நாட்களாக கேப்பாப்புலவு மக்களின் காணிகள் தொடர்பாக ஆராய்கிறார் டி.எம்.சுவாமிநாதன்!

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு முல்லைத்தீவு நாவற்காடுப் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.சுவாமிநாதன் 327 நாட்களாகியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் காணிகள் தொடர்பாக தான் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்விற்கு வருகைதந்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கேப்பாப்புலவு மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தமதுகாணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தபோது அதனை மறுத்த டி.எம். சுவாமிநாதன்,

கண்ணை மூடிக்கொண்டா காணிகளை விடுவிக்கமுடியும் என அம்மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தாயாரொருவர் 148 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கி 138 குடும்பங்களின் காணிகளை விடுவிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளதாகவும், 38 குடும்பங்களுக்கு மாத்திரமே காணிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டி.எம்சுவாமிநாதன், யாருடைய காணி எங்கிருக்கின்றது என அரசாங்கம் அளவீடு செய்து வருகின்றது. அது தொடர்பாக நானும் ஆராயவேண்டும். அப்பணி நடைபெற்று வருகின்றது எனத் தெரிவித்தார்.

கேப்பாப்புலவு மக்கள் இன்றுடன் போராட்டத்தை ஆரம்பித்து 328 நாட்கள் நிறைவடைந்துள்ளது.. தமது காணிகளை விடுவிக்கும்படி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், காணிகள் தொடர்பாக தான் ஆராய்ந்து வருவதாக பொய் வாக்கை வழங்கியுள்ளார் அமைச்சர் டி.எம்.சுவாமிநாத