224 ஆண்டுகளின் முன் கடலில் மூழ்கிய இந்தியக்கப்பலின் பாகங்கள் கண்டுபிடிப்பு!

21.09.2008.

பிரிட்டனின் மேற்குக் கடற்பரப்பில் 224 ஆண்டுகளுக்கு முன்னர் வீசிய சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கிய நான்சி என்ற இந்தியக் கப்பலின் பாகங்கள் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

1784ஆம் ஆண்டு வீசிய சூறாவளியில் இந்தியக் கப்பல் சிக்கி மூழ்கிப் போனது. இந்தக் கப்பலின் சிதைவுகளை ஆழ்கடல் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் லண்டனின் மேற்குப் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.

“நான்சி’ என்ற பெயருடைய இந்தக் கப்பலின் சிதைவுகளைக் கண்டுபிடிக்க கடந்த ஓராண்டுக்கும் மேலாக முயற்சிகள் மேற்கொண்டாதாக ஆழ்கடல் நிபுணர் டாட் ஸ்டீவன்ஸ் தெரிவித்தார். 214 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய நான்சி கப்பலின் சிதைவுகள்தான் என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தக் கப்பலில் ஊழியர்கள் உட்பட 49 பேர் பயணம் செய்தனர். இவர்களில் லண்டனின் பிரபல நடனக் கலைஞர் கார்கில் என்பவரும் பயணம் செய்தார். இந்தியா வந்திருந்தபோது இந்தியாவிலிருந்து முறை தவறி பிறந்த குழந்தையை அழைத்துச் சென்றார். சூறாவளியில் கப்பல் சிதறுண்டு மூழ்கியபோது குழந்தையை பிடித்தபடி இருந்த இவரது சடலம் மட்டும் கரை ஒதுங்கியது.

இதுபோன்ற அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதால், ஆழ்கடல் தேடலில் மேலும் ஆர்வம் உருவாகியுள்ளதாக ஸ்டீவன்ஸ் தெரிவித்தார்.

கார்கில் தன்னுடன் அதிக நகை உள்ளிட்ட மதிப்பு வாய்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டு கப்பலில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

1779,80 ஆம் ஆண்டுகளில் உலகிலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தவர் கார்கில் என்று “ரைம்ஸ்’ இதழ் குறிப்பிட்டுள்ளது. வாரம் 10 பவுண்ஸ் சம்பாதித்த நடிகையாகத் திகழ்ந்த கார்கில், கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய கப்பல் கேப்டன் ஜான் ஹல்தேனை காதலித்தார். அவரைப் பார்ப்பதற்காக இந்தியா வந்த பிறகு லண்டன் திரும்புகையில் அவர் பயணம் செய்த கப்பல் விபத்துக்குள்ளானது.

இந்தியாவில் மும்பை, கொல்கத்தாவில் நடன நிகழ்வில் கார்கில் பங்கேற்றார். இதன் மூலம் அவருக்கு ஏராளமான பணம், பரிசுப் பொருள்கள் கிடைத்தன. பின்னர் மூன்று மாதப் பயணமாக நான்சி கப்பலில் இவர் பயணம் செய்தபோது கப்பல் சூறாவளியில் சிக்கி விபத்துக்குள்ளானது.