21ம் நூற்றாண்டின் நவீன அடிமைகளாகத் தமிழ் கைதிகள் : கூலிக்காக உணவு

கைதிகளாகச் சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பதினைந்தாயிரம் வரையிலான தமிழ்ப் பேசும் மக்களின் விபரங்களையும் தடுத்துவைக்கப்பட்ட சிறைக் கூடங்கள் குறித்த விபரங்களையும் இலங்கை அரசு வெளியிட மறுக்கிறது. இந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்ட பெண்கள் உட்பட்ட இளைஞர்கள் நெசவாலைகளிலும் கட்டுமான வேலைகளிலும் அடிமைகள் போன்று பயன்படுத்தப்படுவதான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள ஆலைகளில் அடிமைகள் போல இரண்டு வேளை உணவுடன் மட்டும் வேலை வாங்கப்படும் பெண்கள் பாலியல் வதைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர, ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவரின் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பல இளைஞர்களை உணவை மட்டும் கூலியாக வழங்கி வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

One thought on “21ம் நூற்றாண்டின் நவீன அடிமைகளாகத் தமிழ் கைதிகள் : கூலிக்காக உணவு”

  1. இதுவெல்லாம் எதிர்பார்த்ததே.தன்னலம் மட்டும் கருதிய புலம்பெயர்ந்தோரின் அரசியல் வ்றூமை இந்த நிலமையை ஏறபடுத்தியுள்ளது.தெருப் பொறூக்கி எல்லாம் அரசியல் பேசியதால் தேசம் எரிந்து சாம்பலாயிற்றூ.நேர்ந்து விட்ட கிடாய்கள் போல தமிழர் வாழ்க்கை மாறீப் போயிற்றூ. இதுவும் கடந்து போகும் எனும் நம்பிக்கையை தரப் போவது யார்?

Comments are closed.