2010 இலும் முகாம்களிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்!

Menik-Farms-refugee-camp--001வன்னியில் தடுப்பு முகாம்களுக்குள் தமிழ் மக்களைத் தொடர்ந்து அடைத்து வைப்பதற்காக அனைத்துலக நிதி வழங்குநர்களிடம் இருந்து மேலும் நிதி உதவிகளைக் கோரி உள்ளது இலங்கை அரசு.

“அடுத்த வருடம் இந்த முகாம்களை நிர்வகிப்பதற்குத் தேவையான பணத்திற்காக புதிய கோரிக்கையை விடுத்துள்ளோம். இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களை மீளக்குடியமர்த்தும் பணிகளுக்காக இந்த நிதி தேவையாக இருக்கின்றது” என்று இலங்கை மனித உரிமைகள் மற்றும் பேரிடர் நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த நிறுவனங்கள், அனைத்துலக செஞ்சிலுவைக் குழு, இராஜதந்திரிகள் ஆகியோருடன் சிறிலங்காப் பிரதிநிதிகள் நடத்திய கூட்டத்திற்குச் சற்று முன்னதாக அவர் இதனை செய்தியாளர்களிடம் கூறினார்.