2008 இல் இலங்கையின் சனத்தொகை 2 கோடி 20 இலட்சம்!

 

30 ஆண்டுகளின் பின்னர் நாடளாவிய குடித்தொகை மதிப்பீட்டை 25 நிர்வாக மாவட்டங்களிலும் மேற்கொள்ள ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

“”அடுத்த குடித்தொகை மதிப்பீடு 2011 இல் இடம்பெறும். அதற்காக இப்போது நாம் ஆயத்தமாகி விடுகிறோம்.இதற்கு எமக்கு நிதி தேவை’ என்று இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுரஞ்ஜன வித்யாரட்ண இணையத்தளமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடைசியாக 18 மாவட்டங்களில் 2001 இல் சனத்தொகை மதிப்பீட்டை மேற்கொண்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடைசியாக மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீட்டுக்கு 80 கோடி ரூபா செலவானதாகவும் 2011 இல் மேற்கொள்ளப்படவுள்ள சனத்தொகை மதிப்பீட்டுக்கு 150 கோடி ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் கூறுகிறது.

வட,கிழக்கு மாகாணங்களின் பகுதிகள் அச்சமயம் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அதனால்,வட,கிழக்கு மாவட்டங்களில் அச்சமயம் முழுமையான குடிசன மதிப்பீட்டை மேற்கொள்ளவில்லை.இப்போது யுத்தம் முடிவடைந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் முழுநாடும் கொண்டுவரப்பட்ட பின்னர் 2011 இல் குடிசன மதிப்பீட்டுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.2008 இல் இலங்கையின் சனத்தொகை 20.2 மில்லியன் (2 கோடி 20 இலட்சம்) என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.